தாபம் – 13

கடந்த கால நிகழ்வில் இருந்தவர்களை, கடலலை, நிகழ் காலத்திற்கு அழைத்து வந்திருந்தது. அப்போதே இரு இதழ்களும், நூலிடை இடைவெளியில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, சட்டென்று விலக முயற்சித்தனர்.

அதற்குள், அவர்களை நோக்கி ஒரு ராட்சச அலை வீச, அபி அதிர்ந்து விழித்தான். அவன் விழியில் அந்த அலையைப் பார்த்த ருத்ராவும் அதிர்ந்து வேகமாக திரும்ப, அதற்குள் அந்த ஆழிப் பேரலை அவர்களை சுற்றி வலைத்திருந்தது.

அந்த சுழலில் இருவரும் சிக்கிக் கொள்ள, அபி ருத்ரா-வின் கரத்தை இறுக்கமாக பற்றினான். ஆனால் எவ்வளவு முயன்றும் இருவரும் ஒரு கட்டத்தில் மயங்கி, அந்த கடலலையுடன் கடலில் விழப் போக, சரியாக அன்னேரம் எங்கிருந்தோ வந்த ஒளி பிம்பம், அவர்களுக்கு கவசமாய் நின்று அவர்களை கடலில் மூழ்க விடாமல் தடுத்தது. ஆனால் அதையெல்லாம் உணரும் நிலையில் இருவரும் இல்லை. 

“தவறு இழைக்கிறாய். என் வழியில் இருந்து விலகி செல். இல்லை என்றால், நடக்கும் எதற்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்” என்று கடலலைகளின் வழியே, அந்த சிவந்த விழியோனின் உருவம் உக்ரமாய் கத்தியது.

“இல்லை.. தாங்கள் தான் தவறிழைக்க பார்க்கிறீர்கள். அதை தடுக்கவே நான் முயற்சிக்கிறேன்” என்று அந்த ஒளி பிம்பம் பெண் வடிவில் கெஞ்சலாய் கூறியது.

“உன்னால் என் சக்தியை தாங்க இயலாது. வீணாக, உன் உயிரை மாய்த்துக் கொள்ளாதே, விலகு” என்று சிவந்த விழியோன் கோவமாக உறுமினான்.

“தங்கள் கரத்தால் தான் என் உயிர் போகும் என்று விதி இருந்தால், அது அவ்வாறே நடக்கட்டும். ஆனால் என் உயிர் உள்ள வரை, என் இளவரசியாரின் உயிரை நான் காப்பேன்” என்று அந்த குரல் உறுதியாக கூறியது.

“வேண்டாம். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. காவலனாக இருக்க வேண்டிய என்னை, உனக்கு காலனாக மாத்தாதே” என்று முடிந்த அளவுக்கு தன் உக்கிரத்தை குறைத்தப்படி கூறியது அந்த உருவம்.

“எனக்கு மட்டும் தான் தாங்கள் காவலா? என் இளவரசிக்கு இல்லையா?” என்று அந்த குரல் ஆதங்கமாய் கேட்டது.

அதில் ஒரு நொடி, சிவப்பு நிறத்தில் சூழ்ந்திருந்த அந்த ஆழிப் பேரலலை, நீல நிறத்திற்கு மாறியது.

“கூறுங்கள். ஏன் இந்த அமைதி? காவலனாய் நிற்க வேண்டியது எமக்கு மட்டும்தானா? உம் இளவரசிக்கு இல்லையா?” என்று அந்த ஒளிப் பிம்பம் அழுத்திக் கேட்டது.

உம் இளவரசி என்ற வார்த்தையில், நீல நிறத்தில் இருந்து மீண்டும் சிவப்பு நிறத்திற்கு மாறிய அந்த சுழல், “எம் இளவரசியா? அந்த சொல்லிற்கு தகுதியானவளா உம் இளவரசி?” என்று ஆக்ரோசமாக கேட்டது.

“வேண்டாம். இந்த கோவம் உங்களை மட்டும் இன்றி, உங்களை சார்ந்தோரையும் சாம்பலாக்கிவிடும்” என்று அந்த ஒளிப் பிம்பம் கூறியது.

”எல்லாம் சாம்பலாகட்டும். நான் ஒன்றும் புதிதாக எதையும் அழிக்கப் போவதில்லை. ஏற்கனவே எரிந்து சாம்பலாய் போனதைத் தான் அழிக்கப் போகிறேன்” என்று கோவமாக கூறினான் சிவந்த விழியோன்.

“இல்லை அதை நான் நடக்க விட மாட்டேன்” என்று அந்த ஒளி பிம்பம் தன்னால் முடிந்த அளவுக்கு தடுக்க முயற்சித்தது.

“அப்படியானால், நீயும் உம் இளவரசியுடனே செல்” என்று கோவமாக அந்த ராட்சச அலை இன்னும் பெரிதாக உருவெடுத்தது.

தன் முழு சக்தியையும், அந்த ஒளி பிம்பம் உபயோகிக்க, சிவந்த விழியோனோ, மிக சத்தமாக சிரித்தான். “என் சினத்தின் முன், சர்வ சக்தி படைத்த உம் இளவரசியே, சாந்தமாகித்தான் நிற்பாள். நீயோ அவள் சக்தியின் சிறு உருவம். உமக்கு என்னுடன் மோத வேண்டுமா?” என்று நக்கலாக சொல்லியப்படி, தன் சக்தியை, அந்த ஒளி பிம்பத்தின் மீது விட்டான் அவன். அதில் அந்த ஒளி பிம்பம் தூள் தூளாக சிதற, மீண்டும் இருவரும் அந்த சுழலுக்குள் சிக்கிக் கொண்டனர்.

“இனி எம்மை தடுக்க அந்த சிவனால் கூட முடியாது” என்று சொல்லியப்படி, ருத்ரா-வை நோக்கி அவன் தன் முழு சக்தியையும் நெருப்பாய் கக்க முயற்சிக்க, சரியாக அன்னேரம், அபி வலது கரத்தில் இருந்த ருத்ர சூலாயுத மச்சமும், ருத்ரா-வின் இடது கையில் இருந்த உடுக்கை மச்சமும், பின்னி பிணைந்து இணைந்தது. 

அந்த நொடி, ருத்ரா-வை நோக்கி பாய்ந்த அந்த அக்னி நெருப்பு, அவர்கள் இருவரை சுற்றி தடுப்பாய் மாறியது. அதில் சிவந்த விழியோளனின் கண்கள் இன்னும் ரத்த நிறத்திற்கு மாற, “என்னவாயிற்று மனுவேந்தா? அழிப்பதாய் நீ அனுப்பிய சக்தி, எம் இளவரசிக்கு அரணாக மாறியது என்ன விந்தையோ?” என்று நக்கலாக அவனது காதில் அசரிரீ கூறியது.

அதில் சினம் இன்னும் அதிகரிக்க, மீண்டும் ஒரு முறை தன் முழு சக்தியையும் திரட்டி, ருத்ரா-வை தாக்க அக்னி பேரலையை உருவாக்கி அனுப்பினான். ஏனோ அதுவும், அவர்கள் இருவரை அழிக்காமல், அவர்களை தாய் மடி போல் தாங்கியது.

அதைப் பார்த்து அசரீரி சிரிக்க, “போதும் உன் நகைப்பை நிறுத்து” என்று சிவந்த விழியோன் கத்திய கத்தலில், அந்த கடலே ஆர்ப்பரித்தது. அதில் அந்த தீவு மொத்தமும் கடலில் மூழ்க, அதனுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் மூழ்கினர். இரவு முழுதாக மங்கி, வெளிச்சம் உலகெங்கும் பரவியது.

அங்கே கடற்கரையில் மயக்கத்தில் இருந்து எழுந்த தென்றலோ, “ருத்ரா” என்று கத்தியப்படி எழுந்தாள். அவளை சுற்றி, காவலர்கள் மற்றும் மீன் பிடிப்பவர்கள் கொஞ்ச பேர் நின்றுக் கொண்டிருந்தனர்.

“என்னாச்சு ருத்ரா-வை கண்டுப்பிடிச்சிட்டீங்களா?” என்று தென்றல் கேட்க, “இல்ல. அவங்களை இன்னும் எங்களால கண்டுப்பிடிக்க முடியல. அவங்களை தேடி போன எங்க டிபார்ட்மெண்ட் ஆட்களும் இன்னும் வரல” என்று காவலர் சொல்ல, தென்றலுக்கு உயிரே போனது. ஏனோ அவள் அங்கு சென்றால் தான், ருத்ரா-வை காக்க முடியும் என்று மனம் அடித்துக் கூறியது.

“நான் தேடிப் போறேன்” என்று தென்றல் வேகமாக எழ, “நீ போய் என்னப் பண்ணப் போற?” என்று ஒரு கரம் அவள் கரத்தை இறுக்கமாக பிடித்து தடுத்தது.

அப்போதே அவள் திரும்பி பார்க்க, அதற்குள், இன்னொரு கரம் அவள் கரத்தை அவன் கரத்தில் இருந்து பிரித்து இழுத்தது.

அவர்கள் யார் என்று பார்க்கும் முன், “என்னாச்சு தென்றல்? ருத்ரா எங்க?” என்று கேட்டப்படி ஓடி வந்தாள் அகல்யா.

“வெங்கட்?” என்று அகல்யா கேட்க, அப்போதே தென்றல் கவினைப் பார்த்தாள். 

ஏனோ அவனால் தான் இப்போது தனக்கு உதவி செய்ய முடியும் என்று அவளுடைய ஆழ்மனது கூறியது. அதற்குள், “தென்றல்” என்று கோவமாக அர்ஜூன் அவளை தன் பக்கம் இழுத்தான். அதில் தென்றல் அர்ஜூனின் மீது மோதி நின்றாள்.

அதில் கவினுக்கு காரணமே இல்லாமல் அர்ஜூனின் மீது கோவம் காட்டுத் தீயாய் ஏறியது. ஏனோ தென்றலுடன் அவன் நிற்பது கவினுக்கு பிடிக்கவே இல்லை.

“நீங்க எல்லாரும் அந்த காணாம போன பொண்ணுக்கு சொந்தமா?” என்று அந்த காவலாளி கேட்க, “என்ன காணாம போன பொண்ணா? யாரு காணாம போனா? தென்றல் இங்க என்ன நடக்குது?” என்று கேட்டாள் அகல்யா.

“அது.. வந்து.. ருத்ரா..” என்று தென்றல் அழுதுக் கொண்டே தடுமாற, ருத்ரா என்ற பெயரில் அர்ஜூன், கவினின் மீதிருந்த பார்வையை தென்றலின் பக்கம் திருப்பினான்.

“என்ன சொல்ற தென்றல்? ருத்ரா-வா? அவளுக்கு என்னாச்சு?” என்று கேட்டான் அர்ஜூன்.

ஏனோ அர்ஜூன் அதட்டிக் கேட்கவும், தென்றலுக்கு இன்னும் பயம் அதிகமானது. அதில் அவள் இன்னும் தயங்க, “ஹலோ மிஸ்டர். ஏற்கனவே அவங்க பயந்து போய் தான் நிக்கிறாங்க. நீங்க இன்னும் அவங்களை பயமுறுத்துறீங்க?” என்று கேட்டான் கவின்.

அதில் எரிச்சலான அர்ஜூன், “இது எங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நீங்க தலையிட வேண்டாம்” என்று கோவமாக கூறினான் அர்ஜூன்.

“எது தனிப்பட்ட விஷயம்? உங்க வீட்டு பொண்ணு மட்டும் இல்ல, என்னோட பிரண்டும் இதுல சம்பந்தப்பட்டிருக்கான்” என்று கூறினான் கவின்.

“என்ன? அச்சோ வெங்கட். நீங்களாச்சும் என்னாச்சுன்னு சொல்றீங்களா?” என்று அகல்யா கேட்க, ”அந்த கடவுள், உனக்கு கொடுத்த மூளைய கொஞ்சம் உங்க அண்ணாக்கும் கொடுத்திருக்கலாம்” என்று கூறினான் கவின்.

அதில் இன்னும் அர்ஜூன் முறைக்க, “இப்போ நம்ம சண்டைப் போடுறதுக்கு நேரம் இல்ல. ருத்ரா-வை காப்பாத்தனும். கவின் அது உங்களாலத்தான் முடியும்” என்றாள் தென்றல்.

ஏனோ அவள் கூறியதைக் கேட்ட அர்ஜூனுக்கு சுள்ளென்று கோவம் ஏறியது. “அவன் எதுக்கு ருத்ரா-வ காப்பாத்தனும்? அவளுக்கு என்ன?” என்று கேட்டான் அர்ஜூன்.

“அது..” என்று அவளும், ருத்ரா-வும் இங்கு வந்ததில் இருந்து அத்தனையையும் கூறினாள். 

அதைக் கேட்ட அகல்யா-வும், அர்ஜூனும் அதிர்ந்து நிற்க, “கவலைப்படாதீங்க. என் பிரண்ட் நிச்சயமா உங்க பிரண்ட சேவ் பண்ணிருப்பான்” என்று கூறினான் கவின்.

”உங்க பிரண்டா?” என்று அகல்யா கேட்க, “ஆமா, அவன், அவங்களை காப்பாத்த தான், கடலுக்குள்ள குதிச்சான்” என்று வெங்கட் கூறினான்.

அதைக் கேட்ட காவலர், “அப்போ ரெண்டு பேர் கடலுக்குள்ள சிக்கிக்கிட்டாங்களா?” என்று கேட்டார்.

“போச்சு. அதையே நீங்க இப்பத்தான் கண்டுப்பிடிக்கிறீங்களா?” என்று அகல்யா சற்று எரிச்சலாக கேட்டாள். 

உடனே அது அவருடைய கோவத்தை அதிகப்படுத்த, “ராத்திரி நேரத்துல, ஆழம் அதிகமா இருக்கிற இடத்துக்கு போகாதீங்கன்னு எத்தனை போர்டு எழுதி வச்சிருக்கோம். அதையும் மீறி நீங்க இப்படி பண்ணா, நாங்க என்ன பண்ண முடியும்?” என்று கோவமாக கேட்டார்.

“அதுக்குன்னு இப்படித்தான் இர்ரெஸ்பான்சிபிலா பதில் சொல்லுவீங்களா? நைட்-ல இருந்து காணும், இப்ப வரைக்கும் உங்க கிட்ட இருந்த் எந்த பிராபர் ஆன்சரும் வரல” என்று அகல்யா கோவமாக கத்தினாள்.

அதில், “நாங்க ட்ரைப் பண்ணிட்டுத்தான் இருக்கோம். அதுக்கு மேல அவசரம்னா, நீங்களே தேடிக்கோங்க” என்று அந்த காவலாளி சொல்ல, “அதை நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாம்மே, இப்போ எங்க அப்பாக்கு கால் பண்ணா, இங்க என்ன நடக்கும் தெரியுமா?” என்று கோவமாக அகல்யா கத்தினாள்.

அகல்யா-வுக்கும், ருத்ரா-வுக்கும் ஏறக்குறைய ஒரே குணம் தான். “என்ன நடக்கும்?” என்று அவரும் எகிற, “அகல்..” என்று அர்ஜூன் அவளைப் பிடித்து தடுத்தான்.

“சாரி. சார். கொஞ்சம் என்னென்னு பாருங்க. உங்களால முடியலன்னா, என்ன போர்ஸ் கொண்டு வரனும்னு சொல்லுங்க எங்க அப்பா, சி.எம் கிட்ட சொல்லி உங்களுக்கு அரேஞ் பண்ணிக் கொடுப்பாரு” என்று கூறினான் அர்ஜூன்.

“க்கும் உங்க அப்பா இனிமேல் சி.எம் கிட்ட பேசி, அவங்க மீட்பு படைக்கிட்ட பேசி. அவங்க கிளம்பி, இங்க வந்து.. அது வரைக்கும், கடலுக்குள்ள போனவங்களுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்குமா?” என்று நக்கலாக கேட்டான் கவின்.

அதில் அர்ஜூன் கோவமாக எதையோ சொல்லப் போக, சட்டென்று அர்ஜூனின் கரத்தைப் பிடித்து தடுத்த தென்றல், “பிளீஸ் அர்ஜூன். இப்போ நமக்கு ருத்ராத்தான் முக்கியம். அவர் என்னதான் சொல்றாருன்னு கேட்கலாம்” என்று கண்ணில் நீருடன் கூறினாள் தென்றல்.

ஏனோ தென்றலுடைய கோவம் அர்ஜூனை மட்டும் அல்லாமல், கவினையும் வெகுவாக பாதித்தது. அதில் தன்னுடைய நக்கல் பேச்சை நிறுத்தி விட்டு, “கவலைப்படாதீங்க. உங்க பிரண்ட்க்கு எதுவும் ஆகாது. நான் போட் எடுத்துட்டு வரேன். அதுல போயி நம்ம தேடிப் பார்க்கலாம்” என்று கூறினான் கவின்.

அது அர்ஜூனுக்கு எரிச்சலாக இருக்க, “அதை இவ்வளவு நேரம் செய்யாம என்னப் பண்ண?” என்று கேட்டான்.

“ம் உங்க வீட்டு பொண்ணு காணாம போனது கூட தெரியாம நிக்கிற நீயெல்லாம், அதை பத்தி பேசக் கூடாது” என்று கூறினான் கவின்.

(கவினுக்கும், அர்ஜூனுக்கும் அப்படி என்ன பகை? தென்றலின் கண்ணீர் இவர்களை பாதிப்பதன் அர்த்தம் என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது? ருத்ராவை இவர்கள் கண்டுபிடிப்பார்களா? இப்படின்னு எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

சாபம் தீருமா?…

Author:    1 Sarmi SS
Comments   2

*** தாபம் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com