தாபம் – 14

“ஹே.. இப்போ நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க? முதல்ல, அவங்க ரெண்டு பேருக்கு என்னாச்சுன்னு பார்க்கலாம்” என்றாள் அகல்யா.

உடனே, கவின், “ஒகே. நான் போய் போட் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு செல்ல, தென்றலும் அவனுடன் செல்ல முயற்சிக்க, அர்ஜூன் அவள் கரத்தை இறுக்கமாக பிடித்து தடுத்தான்.

அதில் கவின் அர்ஜூனை முறைக்க, “நானும் வரேன் வெங்கட்” என்று அகல்யா அவனுடன் செல்ல, அர்ஜூன் “அகல்” என்று அழைத்தான்.

அதற்குள், “பிளீஸ். ருத்ரா-வ பர்ஸ்ட் காப்பாத்தனும்” என்றாள் தென்றல்.

அதில் சற்று அமைதியடைந்தவன், “சரி நீ ரிலாக்ஸா இரு. எப்படியும் ருத்ரா-வுக்கு எதுவும் ஆகாது. இப்படி நடந்த உடனே எங்களுக்கு கால் பண்ணிருக்கலாம் தான?” என்று கேட்டான் அர்ஜூன்.

”அது அந்த டைம் எனக்கு என்னப் பண்ணன்னே தெரியல.” என்றாள் தென்றல்.

“ஒகே. ஒகே கூல். இந்த ருத்ரா-க்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவே புரியாது” என்று அர்ஜூன் தனக்குள் திட்டிக் கொண்டான்.

”என்னவாயிற்று தேவி? உம் இளவரசியைக் காக்க, உன் முழு சக்தியையும் இப்போதே உபயோகித்து விட்டாயே. பின் உம் காதலை எப்படி காக்கப் போகிறாய்?” என்று ஒரு குரல் தென்றலில் காதில் கேட்க, அதில் அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.

அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தில், “என்னாச்சு தென்றல்?” என்றான் அர்ஜூன்.

“ஆ.ங் அது. ஒன்னும் இல்ல” என்று அர்ஜூனின் கரத்தை இறுக்கமாக பற்றினாள். ஏனோ அவளின் அந்த இறுக்கம், அர்ஜூனுக்குள் புது வித மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.

“கவலைக் கொள்ளாதே தேவி, நம் காதலை விட, நம் இளவரசியின் ஜீவன் தான் நமக்கு முக்கியம். நான் செய்த பாவத்தை நீயும் செய்து விடாதே” என்று ஒரு மெல்லிய குரல் அவள் செவியில் கேட்க, சட்டென்று அர்ஜூனின் கரத்தை விலக்கினாள்.

அதில் அர்ஜூன் புரியாமல் குழம்பி நிற்க, அதற்குள் அகல்யா-வும், கவினும் ஒரு பெரிய போட்டில் அங்கு வந்து சேர்ந்தனர்.

”அகல்யா, உன் அண்ணனுக்கு கொஞ்சமாச்சும் அவங்க மேல அக்கறை இருந்தா வர சொல்லு. இல்லன்னாலும் பரவாயில்ல. நானே அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தி கூப்டு வரேன்” என்றான் கவின்.

அதில் தென்றல் வேகமாக அந்த போட்டில் ஏறப் போக, அவளைத் தடுத்தவன், “இல்ல தென்றல் நீயும், அகல்யா-வும் இங்க இருங்க. நான் போய் தேடிட்டு வரேன்” என்றான் அர்ஜூன்.

“உங்க அண்ணாக்கு அறிவு இல்லன்னு எப்படி நொடிக்கு நொடி நிரூபிக்கிறான்?” என்று கவின் அகல்யா-விடம் கேட்க, “ஹேய்” என்று அர்ஜூன் கோவமாக கத்த, “ஐயோ நீங்க இப்படி சண்டைப் போட்டுக்கிட்டே இருந்தா, அவங்களை காப்பாத்த முடியாது. வாங்க” என்று கத்தினாள் அகல்யா.

அதில் இருவரும் அமைதியாகிவிட, தென்றலும், அர்ஜூனும் அந்த போட்டில் ஏறினர். அது ஒரு சொகுசு படகு தான். அதனால் அவர்கள் பாதுகாப்புக்கு பிரச்சனை இல்லை. ஆனால், இதெல்லாம் அந்த சிவந்த விழியோளனின் முன்னால் செல்லாது என்று பாவம் இவர்கள் நால்வரும் அறியவில்லை.

அங்கே… இவர்கள் தேடலுக்கு சொந்த மான இருவரும், மெதுவாக கண் திறக்க, ஏதோ காட்டுக்குள் இருந்தனர். அதில் ஏதோ கனவு உலகில் இருப்பது போல், “கனவுலத்தான் இவ்வளவு அழகான பிளேஸ் எல்லாம் வருது. ச்சே எனக்கு மட்டும் பவர் இருந்தா, கனவுல வர்ற எல்லா இடத்துக்கும் போயி, அதையெல்லாத்தையும் என் கேமரா-ல சூட் பண்ணிடுவேன்” என்று உறக்கத்தில் கூறினாள்.

“சூட் பண்ணு. அப்படியே ஒரு பெரிய துப்பாக்கி இருந்தா என்கிட்ட எடுத்துக் கொடு. அதை எடுத்து உன்னை சூட் பண்ணிடுறேன்” என்று கடுப்பாக பதிலளித்தான் அபிமன்யு.

சட்டென்று ஆடவனின் குரல் காதில் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள். எழுந்தவளின் முன்னால் அபி அமர்ந்திருக்க, “ஹேய் நீ எப்படி என் ஹாஸ்டலுக்குள்ள வந்த? இது லேடிஸ் ஹாஸ்டல். ஜெண்ட்ஸ் நாட் அலோவ்ட்” என்று பதட்டமாக கூறினாள் ருத்ரா.

“எதே? ஹாஸ்டலா? அதுவும் இந்த நடு காட்டுக்குள்ள உங்கப்பா ஹாஸ்டல் கட்டி விட்டுருக்காரா? அப்படின்னா, கொஞ்சம் உங்க அப்பாக்கிட்டையே, இங்க இருந்து வெளிய போறதுக்கு வழி என்னென்னு கேட்டு சொல்லு” என்று கூறினான் அபி.

அப்போதே சுற்றுப்புறம் அவளுக்கு விளங்க, சுழலில் சிக்கியதெல்லாம், அரையும் குறையுமாக நினைவுக்கு வந்தது. அதில் அவள் நடந்த விஷயங்களை தெளிவாக நினைவுப்படுத்த முயற்சிக்க, “என்ன? உங்கப்பா யாருன்னே மறந்துட்டீயா? நான் வேணும்னா கண்டுப்பிடிச்சுக் கொடுக்கட்டுமா?” என்று கிண்டலாக கூறினான் அபி.

அதில், அவளுடைய கண்கள் கலங்க ஆரம்பிக்க, “ஆமா ருத்ரா எங்கம்மா சொன்னாங்க. உனக்கு அப்பா பேரு தெரியாதாம்மே. ஏன் உங்கம்மாக்கும் தெரியாதுன்னு எங்க பாட்டி சொன்னாங்க” என்று பள்ளித் தோழிகள் அவளைக் கிண்டலடித்த நினைவுகள் எல்லாம் சர சரவென்று அவளுக்குள் ஓடியது.

அவள் திடீரென அழ ஆரம்பிக்கவும், “ஏய் இப்போ எதுக்கு நீ அழுகுற? தண்ணியில விழுந்ததுல, எங்கேயும் அடி பட்டிருச்சா?” என்று புரியாமல் கேட்டான் அபி.

அப்போதும் அவள் தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்க, “ச். மண்டையில அடிப்பட்டு பழசை எல்லாம் மறந்துட்டேன்னு நினைக்கிறேண். எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு, அழுகிறதுன்னா என்னென்னே தெரியாது” என்று அபி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சித்தான்.

“நான் ஒன்னும் அழுகல” என்று ருத்ரா வேகமாக கண்ணைத் துடைக்க, “அழுகலையா? அப்போ கண்ணுல இருந்து தண்ணி வரலையா? மழையா பெஞ்சிச்சு?” என்று கிண்டலாக கேட்டான் அபி.

அதில் அவனை முறைத்தவள், “ஆமா நம்ம எப்படி இங்க வந்தோம்? இது என்ன இடம்?” என்றாள் ருத்ரா.

“ம் நான் தான் உன்னைக் கடத்திட்டு இங்க வந்தேன். இது என்னோட அந்தப்புறம்” என்று நக்கலாக கூறினான் அபி.

அதில், “ஓஹோ.. தங்களுக்கு கூட அந்தப்புறம் எல்லாம் கொடுப்பார்களா?” என்று ருத்ரா நக்கலாக கேட்க, “ஏன் அந்தப்புறம் என்பது இளவரசிக்கு என்று யாரும் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?” என்று அபியும் நக்கலாக கேட்டான்.

“எழுதிக் கொடுக்கவில்லை. இனிமேல் எழுதிவிடுவோம்” என்று சொல்லியப்படி அவன் கரத்தைப் பிடித்து, அந்த மணலில், அபி, ருத்ரா என்று எழுதினாள்.

அதில் இருவரும் புன்னகைக்க, அங்கிருந்த மரங்களில் இருந்து பூக்கள் அவர்கள் மீது கொட்டியது. அதில் இருவரும் மேலே பார்க்க, அவர்கள் எழுதிய அபி, ருத்ரா என்ற பெயர் மறைந்து, வேற ஒரு பெயர் அதில் இதய வடிவத்தில் மின்னி மறைந்தது.

“இந்த இடம் அழகா இருக்குள்ள?” என்று ருத்ரா கேட்க, “இங்க உட்கார்ந்துட்டே எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்டீயா?” என்று நக்கலாக கேட்டான் அபி.

அதில் அவனை முறைத்தவள், வேகமாக எழ முயற்சிக்க, அவன் கரங்கள் அவள் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தது.

அதில் அவள் அவனைப் பார்க்க, அவன் அவளைப் பார்க்க இருவரின் விழிகளிலும் கடந்த கால காட்சிகள் ஓட ஆரம்பித்தது.

“என்னை துரத்தி வராதீர்கள், வந்தால், மன்னரிடம் புகார் தெரிவிப்பேன்” என்று சொல்லியப்படி அந்த தோட்டத்தில், துள்ளித் திரியும் புள்ளி மானாய், பெண்ணவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

“மன்னரிடம் தானே தாராளமாக கூறுங்கள். வருங்கால மருமகனின் பேச்சைக் கொஞ்சமாவது கேட்க சொல்லி, அவராவது, அவருடைய செல்ல மகளுக்கு அறிவுரை வழங்கட்டும்” என்று சொல்லியவாறு துரத்தினான் இளவரசன்.

”அப்படியெல்லாம் அவர் அறிவுரை வழங்கமாட்டார். வேண்டுமென்றால், அயல் நாட்டு இளவரசருக்கு, இந்நாட்டு இளவரசிக்கு எப்படி மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று போதிப்பார்” என்று கூறினாள் இளவரசி.

“அப்படியா? இதற்கெதுக்கு மன்னர் வரவேண்டும், இளவரசி தாங்களே, தங்களுக்கு எந்த மாதிரி மரியாதை வேண்டுமென்று கொஞ்சம் கற்றுக்  கொடுக்கலாம்மே” என்று சொல்லியப்படி அவள் இடையில் இருந்த உடையைப் பிடித்து இழுத்தான் இளவரசன்.

அதில் அவள் உடை அவனுடன் செல்லப் பார்க்க, அவன் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, “மகதீரனுக்கு தெரிந்தால், உங்கள் நிலை அவ்வளவுத்தான்” என்று கூறினாள் இளவரசி.

”மகதீரனா?” என்று அவள் உடையை விட்டு விட்டு இளவரசர் யோசிக்க, பின் ”மக தீரனா? என்னவளை நான் தீண்ட, அவனிடம் அனுமதி வாங்க வேண்டுமா?” என்று இளவரசன், இளவரசியின் கரத்தைப் பிடித்தப்படி கேட்டான்.

சரியாக அன்னேரம், அவன் கரத்தை உரசியப்படி, ஈட்டி ஒன்று பாய்ந்து வந்து இருவருக்கும் இடையில் நின்ற மரத்தில் குத்தி நின்றது. அதில் இளவரசியும், இளவரசனும் ஈட்டி வந்த திசைப் பார்க்க, கருப்பு நிற புரவியில் போர் உடையுடன், ஒருவன் அவர்களை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவள், வேகமாக இளவரசரின் கரத்தில் இருந்து தன் கரத்தை உறுவ முயன்றாள். அவனோ, வேண்டுமென்றே அவள் கரத்தை விடாமல் வம்பு வளர்க்க, “வேண்டாம் இளவரசே. என் கரத்தை விடுங்கள். வீண் பிரச்சனையில் என்னை மாட்டிவிடாதீர்” என்று கெஞ்சலாக கூறினாள் இளவரசி.

ஏனோ அவள் கெஞ்சலை பொறுக்க முடியாதவன், அவள் கரத்தை விடுவித்தான். அதற்குள் அவர்களை நெருங்கியிருந்தவன், “இளவரசியாரே, அயல் நாட்டு இளவரசருக்கு இங்கு என்ன வேலை?” என்று தன் கரத்தில் சொருகியிருந்த வாளை எடுத்தப்படி கேட்டான் மகதீரன்.

சட்டென்று இளவரசனின் முன் வந்து நின்றவள், “தேவி-யை அழைத்து செல்ல வந்தார். அவளோ, காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் முயலின் பின்னால் ஓடி விட்டாள். அதனால் நாங்கள் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று வேகமாக பதிலளித்தாள்.

தேவி என்ற பெயரில், வாளினை ஏந்தியவனின் விழிகள் காதலைத் தாங்கியது. அதில் உடை வாளை மீண்டும் இடையில் சொருகியவன், “வணக்கம் இளவரசரே” என்றான் மகதீரன்.

“இவர் தான் எங்கள் நாட்டு படைத் தளபதி” என்று இளவரசி அறிமுகப்படுத்த, நெற்றியை சுருக்கியவன், ”படைத் தளபதியா?” என்று இளவரசர், அவனை கேள்வியாக பார்த்தார்.

“ஏன் இளவரசே, தாங்கள் ஒரு நாட்டுக்கு இளவரசராக இருக்கும் போது, தான் ஒரு நாட்டின் படைத் தளபதியாக இருக்க முடியாதா?” என்று கேட்டான் மகதீரன்.

“தாராளமாக இருக்கலாம். ஆனால் நல்ல வேளை எம் நாடும், உம் நாடும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லையேல், எப்போதோ தாங்கள், இந்த பதவியை இழந்திருப்பீர்கள்” என்று கூறினான் இளவரசன்.

அதில் அவனுடைய தன்மானம் சீண்டப்பட, “தான் பதவியை இழக்கும் நிலை வந்தாலும்,  எதிரி நாட்டின் படையை அழித்துவிட்டே தன் உயிர் துறப்பேன்” என்றான் மகதீரன்.

(யார் அந்த போர் வீரன்? அங்கே இவர்கள் இருவரை காக்க வந்த அந்த நால்வரின் நிலை என்ன? இவர்கள் கடந்த கால கதை என்ன? என்பதை அடுத்தடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் இக்கதையைப் பற்றிய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும். தாமதத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலையில் மாட்டிக் கொண்ட காரணத்தால் தாமதாமாகிவிட்ட்து. இனிமேல் சரியாக வந்து விடும். லைக் மற்றும் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து விடுங்கள்)

சாபம் தீருமா?

Author:    1 Sarmi SS
Comments   5

*** தாபம் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com