“ஏய்” என்ற அபியின் குரல், ருத்ரா-விற்கு கேட்கவே இல்லை.
ஆனால் “இளவரசி” என்ற அசரீதியின் குரல் ருத்ராவின் செவியில் தெளிவாக விழுந்தது. அதில் அவள் வேகமாக விழித்தாள்.
அபி வேகமாக, அங்கிருந்த ஒரு தீவு போன்ற பகுதியில் கரை சேர்ந்தான்.
“சிட். எப்படி மிஸ் பண்ணேன்” என்று கோவமாக அபி அங்கும், இங்கும் நடந்தான்.
“ருத்ரா” என்று அந்த கடல் மொத்தமும் குலுங்கும் அளவுக்கு சத்தமிட்டான்.
அவனுக்கு தானா ஒரு பெண்ணிற்காக இப்படி துடிக்கிறேன்? என்று கூட உணர முடியவில்லை.
சற்று நேரத்திற்கு முன், சாதாரணமாக கடலலைகளின் மீது பார்வையை பதிந்திருந்தவனின் விழிகளில் விழுந்தாள் ருத்ரா.
“ஏய் இவ தான்-ன அந்தப் பொண்ணு?” என்று அவள் விளையாடுவதை பார்த்தான்.
“அன்னிக்கு நான் பார்த்ததுக்கும், இன்னிக்கு பார்க்கிறதுக்கு நிறையா வித்தியாசம் இருக்கே” என்று அவளை யே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு ஒரு கால் வர, முதலில் அட்டண்ட் செய்யாதவன், பின் திரும்ப திரும்ப வரவும், அட்டன்ட் செய்து பேச ஆரம்பித்தான்.
அவன் பேசி முடித்து மீண்டும் அங்கு வந்து பார்த்த போது, ருத்ரா அங்கு இல்லை.
“சரி கிளம்பியிருப்பா” என்று யோசித்துக்கொண்டே அவன் அங்கிருந்து செல்ல முயற்சித்தான்.
அந்நேரம் “தென்றல்” என்று ஒரு குரல் வந்தது. வேகமாக திரும்பி பார்த்தான். அவன் கண்களுக்கு சரியாக தெரியவில்லை.
பின் “ஹெல்ப் மீ” என்ற சத்தத்தில் சற்று ஆழமாக இருட்டியிருந்த இடத்தைப் பார்த்தான். பார்த்ததுமே அது ருத்ரா என்று தெரிந்திருந்தது. அதன் பின் எவ்வளவு சீக்கிரம் அவளை நெருங்கினான், என்பது அவனுக்கே வெளிச்சம்.
ஆனால், இவ்வளவு தூரம் முயற்சித்தும் அவளை இழந்துவிட்டேன் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
வேகமாக, கடலில் மீண்டும் குதித்து, அவளை தேட சென்றான். ஆனால் அதற்குள் அவன் கையைப் பிடித்து யாரோ தடுத்தார்.
வேகமாக அபி திரும்பிப் பார்க்க, அங்கே ருத்ரா நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு சார்? கடல்ல குதிக்க போறீங்க? எதுவும் லவ் பெயிலியரா?” என்று விளையாட்டாக கேட்டாள் ருத்ரா.
அவள் கூறிய எதையும் காதில் வாங்காத அபி, அவளை சட்டென்று இழுத்து அணைத்திருந்தான். திடீரென்று நடந்த இந்நிகழ்வால் ருத்ரா-வால் விலக கூட முடியவில்லை.
ஏற்கனவே இருவரும் நனைந்திருக்க, இதில் அந்த கடலின் குளுமை ஒரு பக்கம், காற்றின் இனிமை மறுபக்கம் என, பஞ்சுக்கும், நெருப்புக்கும் இடையில் பத்தவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது இயற்கை.
அவனின் அணைப்பின் இறுக்கமே, அவனின் தவிப்பை அவளுக்கு உணர்த்தியது. ஆனால் இதென்ன ஒன்று அல்லது இரண்டு முறை பார்த்த ஒரு பெண்ணின் மீது இத்தனை பாசம்? என்று அவளாலும் யோசிக்க முடியவில்லை.
காற்று கூட புக முடியா அளவுக்கு, அவன் அவளை அணைத்திருக்க, பெண்ணவளோ, அவனின் தீண்டலில் தன்னிலை மறந்து அவனுள் புதைந்தாள். அவனின் தீண்டலும், நெருக்கமும் அவளுக்கு ஏதோ நீண்ட காலம் பழகிய ஒன்று போல் தான் தோன்றியது. அதற்கும் மேல், அந்த அணைப்பினுள் அவள் ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள்.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேல், ஒரு பெண்ணாக, ஆடவனின் பரிஷத்தில் நாணம் கொண்டாள். அவளின் விரல்கள் அன்னிட்சையாக அவன் முதுகில் கோலம் போட்டது. அப்போதே தன்னிலைப் பெற்ற அபி வேகமாக அவளை விடுவித்தான்.
அவனுக்கே ஒரு நொடி நானா? இப்படி ஒரு பெண்ணை கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றேன்? என்று கேள்வி ஓடியது.
“அ..து.. ஆர் யூ மேட்” என்று அவன் செய்கையின் காரணம் புரியாமல், அவள் மீது கோவத்தை காட்டினான்.
ஆனால் ருத்ரா-வோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.
அவனின் அணைப்பு, அவளுள் சொல்ல முடியாத பல விதமான தாக்கத்தை கொடுத்திருந்தது.
“ஸ்டுபிட். நைட் நேரத்துல கடலுக்குள்ள போக கூடாதுன்னு உனக்கு தெரியாது? உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? இல்ல பயம் தான் இருக்கா? கொஞ்சம் கூட உன்னைப் பத்தி யோசிக்கவே மாட்டியா? பையத்தியமா உனக்கு? உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்னப் பண்றது? இப்படி தனியாதான், எப்ப பார்த்தாலும் சுத்திட்டு இருப்பியா?” என்று அபி கோவமாக கேட்க,
அப்போதே தன்னிலைப் பெற்ற ருத்ரா “அய்யோ தென்றல். போச்சு சும்மா-வே பயப்புடுவா. இப்ப என்ன பண்றாலோ?” என்று வாய்விட்டே புலம்பினாள்.
“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன? சொல்லிட்டு இருக்க?” என்று அபி கோவமாக கேட்க.
“இல்ல. என் பிரண்ட் கூட தான் வந்தேன். பாவம் இப்ப என்னை காணும்னு தேடுவா. உடனே நம்ம இங்க இருந்து கிளம்பனும்” என்று வேகமாக கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ருத்ரா.
சுற்றிலும் கடல், இவர்கள் இருந்ததோ, சிறிய தீவு போன்ற ஒரு இடத்தில், அதிலும் வெளிச்சம் என்பது சற்று மங்கலாக மட்டுமே தெரிந்தது. அதிலும் எங்கோ தூரத்தில் எறிந்துக் கொண்டிருந்த கலங்கரை விளக்கின் வெளிச்சம் அது. இதில் இவள் கடலுக்குள் காலடி எடுத்து வைக்கப்போக, அதைப்பார்த்து பதறிய அபி வேகமாக அவளைப் பிடித்து இழுத்தான்.
அதில் மீண்டும் ருத்ரா அவன் மீது வந்து விழ, அவன் கால் தடுமாறி அங்கிருந்த மண்ணில் விழுந்தான்.
“ஏய் உனக்கு அறிவே இல்லையா?” என்று அபி கோவமாக கேட்க வாயைத் திறக்க, அதற்குள் அவள் மீது மீசை போல் ஒட்டியிருந்த மண் துகளை பார்த்து வாய் விட்டு சிரித்தான்.
அதைப்பார்த்து எதுவும் புரியாமல் “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று ருத்ரா அவன் மீதிருந்து எழாமல் கேட்டாள்.
ஒரு கையை தன் தலைக்கு கொடுத்து நன்றாக படுத்தவனின், இன்னொரு கரம், அவளை எழ விடாமல் அவள் இடையை பிடித்திருந்தது.
அவனோ காரணமே சொல்லாமல், அவளைப்பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அவன் சிரிக்கும் அழகை, கண்கொட்டாமல் பார்த்தாள் ருத்ரா. ஏனோ அவன் மீசை முடியை பிடித்து விளையாட வேண்டும் என்று தோன்றியது. நினைத்ததை உடனே செய்து முடிப்பது தானே ருத்ரா-வின் வழக்கம்.
அவள் கரங்கள், அவனின் மீசை முடியை மெதுவாக வருடியது.
“ஏய் என்னடி பண்ற?” என்று அவன் வேகமாக கேட்க
அவளோ சற்றும் அசராமல் “இல்ல ஒரிஜினல் மீசையா? இல்ல டூப்ளிகேட்டான்னு பார்த்தேன்” என்று கூறினாள்.
“அடிங்க..” என்று அவளை அடிக்க கை ஓங்க, அவளோ பயப்படுவது போல், அவன் சட்டையினுள்ளே புதைந்தாள்.
அதில் அவன் விரல்கள் கூட, அவள் இடையில் அழுத்தத்தைக் கூட்டியது.
உண்மையில் இருவருக்குமே நடப்பது கனவா? இல்லை நினைவா? என்று எதுவுமே புரியவில்லை. காரணம் இருவருமே இயல்புக்கு மீறிய ஒரு நிலையில் இருந்தனர்.
பெண்களை ஒரு பார்வையிலேயே தன்னை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிறுத்துபவன், இன்று அவன் அனுமதியின்றியே ஒரு பெண்ணின் இடையில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
ஆண்களின் காதல் பார்வைக்கு கூட, கனல் பார்வை பார்ப்பவள், இன்று அவனின் ஒவ்வொரு அசைவுக்கும், அவனுள் மயங்கி போகிறாள்.
“ஏய். உண்மைய சொல்லவா? இதுக்கு முன்னாடி, நான் எந்தப் பொண்ணுங்க கூடையும் இவ்வளவு குளோசா இருந்ததே கிடையாது” என்று அவன் உதடுகள் அவனையும் மீறி உரைத்தது.
அதில் சட்டென்று அவனை விட்டு விலகிப் படுத்த ருத்ரா “நானும் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு கிடையாது. எனக்கும் ஏன்-னு தெரியல. மத்த பசங்க கிட்ட பேச கூட மாட்டேன். ஆனா உங்க கிட்ட நான் ஏன் இவ்வளவு உரிமை எடுத்துக்கிறேன்-னு எனக்கும் தெரியல” என்று ருத்ரா-வும் அவளை மீறி கூறினாள்.
ஏனோ அவள் விலகி சென்று படுத்தது, அபிக்கு சுள்ளென்று வலித்தது.
வேகமாக அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்ட அபி “நானும், உன்னை அந்த மாதிரி பொண்ணு-ன்னு சொல்ல வரல. நான் என் மனசுல தோணுனதை தான் சொன்னேன்” என்று சற்று கோவமாக கூறினான்.
ஏனோ அவனின் இந்த செய்கையும், அவனின் கோவமும் ருத்ரா-விற்கு மிகவும் பிடித்திருந்தது.
“சாரி. நான் ஏதாச்சும் தப்பா சொல்லியிருந்தா” என்று அபி அவளைப் பார்க்காமல் வேறு பக்கமாக பார்த்து கூறினான்.
ஏனோ அவன் சாரி கேட்பது அவளுக்கு பிடிக்கவில்லை, வேகமாக தன் முகம் நோக்கி திருப்பி “சாரி-லாம் ஒன்னும் வேணாம். அதுக்கு பதிலா கொஞ்சம் சிரிக்கலாமே” என்று அவன் விழியோடு விழி பார்த்து ருத்ரா கூறினாள்.
இருவரின் விழிகளும் ஒரு நொடி, துடிக்க மறந்து, பார்த்தது. அதில் இருவரும் தன்னிலை மறந்து, ஒருவரின் இதழ் மற்றவரின் இதழை நோக்கி பாய்ந்தது. நூலிடை இடைவெளியில் இருவரின் இதழ்களும் இருக்க, யார் முதலில் தயக்கத்தை விடுத்து, தன் யுத்தத்தை தொடங்குவது? என்ற ஒரு புள்ளியில் நின்றுக் கொண்டிருந்தனர்.
அந்நேரம், அவன் விழிகளில் சில காட்சிகள் தோன்றியது. அப்படியே.. கடந்த ஜென்ம நிகழ்வுகளில் இருவரும் தங்களை தொலைக்க ஆரம்பித்தனர்.
“உம்மிடம் பேசுவது வீண்” என்று அவன் கையில் இருந்து தப்பிக்க முயற்சித்தாள் மான்விழி.
“அப்படியென்றால், இந்த மான்விழி யாருடன் பேசுவார்கள்? அம்மானிடமா?” என்று அவன் ஒரு பக்கம் கையை நீட்டினான்.
“ஆம். அம்மானிடம் தான் பேசுவேன். ஆனால் தாங்கள் தான், அதன் உயிரை நீக்கிவிட்டீர்களே” என்று சற்று வருந்த குரலில் கூறினாள் அவள்.
“எம் மான்விழிக்கு பிடிக்காத ஒன்றை, இம்மன்னவன் செய்வேனா?” என்று அவள் முகத்தை அந்தப் பக்கமா திருப்பி காமிக்க, அங்கே அந்த மான்குட்டி, ஒரு முயல் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அதைப்பார்த்து அவள் கயல்விழிகள், ஆச்சர்யப்பட்டு கண்களை நன்கு விரித்து பார்த்தாள்.
“அப்படியானால், தாங்கள் அம்மானை கொல்லவில்லையா?” என்று சந்தோஷமாக கேட்டாள் அவள்.
“நான் எங்கு அம்மானை கொல்ல முயற்சித்தேன்?” என்று அவன் அப்பாவியாக கேட்டான்.
“பின் அம்பை எதற்கு குறி வைத்தீர்கள்?” என்று சந்தேகமாக கேட்டாள் அவள்.
“சற்று மானின் எதிர்பக்கம் திரும்பி பார்” என்று அவன் சொல்ல, அங்கே அந்த மானை வேட்டையாட வந்த புலி ஒன்று மறித்துக் கிடந்தது.
அதைப்பார்த்ததும் தான், நடந்த உண்மை அவளுக்கு புரிய “ஓ. அப்போது தாங்கள் குறி வைத்தது அந்த புலிக்கா?” என்று ராகம் இழுத்தாள் அவள்.
“ஆம் புலிக்கு தான் வைத்தேன். ஆனால் எம் மான் எனக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று தன் அணைப்புக்குள் இருந்த பெண்ணவளை மேலும் இறுக்கி கூறினான்.
அப்போது தான், ஒரு ஆடவனின் அணைப்பில் இவ்வளவு நேரம் நின்றுக் கொண்டிருப்பதே அவளுக்கு புரிந்தது. வேகமாக அவனை விட்டு விலகி நின்றாள்.
அதற்குள் “இளவரசி உமக்கு எதுவும் ஆகலையே” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள், அவனின் தமக்கை.
“யான் இருக்கும் இடத்தில், உம் தோழிக்கு என்னாகப் போகிறது தங்கையே?” என்று கூறியவனின் வார்த்தை தங்கைக்கென்றாலும், பார்வை என்னவோ, அம் மான்விழியின் மீது தான் இருந்தது.
“என்னை எனக்கு பார்த்துக் கொள்ளத் தெரியும். எமக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் அவள்.
“சற்று நில் இளவரசி. நானும் உம்முடன், அந்தப்பாதை வரை வருகிறேன்” என்று தோழி கூறியதைக் கூட கேட்காமல், தன் குதிரையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
அந்நேரம் சரியாக, கடலலைகள், அவர்களின் முகத்தில் தெளித்து தன்னிலைக்கு கொண்டு வந்தது.
இரு உதடுகளும் இருந்த இடைவெளியைப் பார்த்து, இருவரும் வேகமாக ஒருவரை விட்டு ஒருவர் விலக முயற்சித்தனர். சரியாக அந்நேரம், ஆழிப் பேரலைப் போல் ஒரு ராட்சச அலை, அவர்களை நோக்கி வந்தது.
அதைப்பார்த்து இருவரும் அதிர்ச்சியாகி அப்படியே இருந்தனர்.
(என்னாகப் போகிறது? இவர்களின் பிறப்பின் ரகசியம் தான் என்ன?) போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கான பதிலை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். இப்போதைக்கு இந்த கதையைப் பற்றிய உங்களுடைய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும். நன்றி பிரண்ட்ஸ்)
சாபம் தீருமா?..
Deepa K
nice
Keerthi S
really this story very interesting sarmi ma
Ramya Iyer
semma