தாபம் – 11

மானை நோக்கி அம்பு பாய்ந்திருக்க “தவறு இழைத்துவிட்டீர்கள்” என்று கோவமாக கூறினாள், அவ் இளவரசி.

அவள் கரங்கள், அவன் கரத்தோடு பின்னியிருக்க, தடுக்க வந்ததாக நினைத்து, அவனோடு ஒன்றி நின்றிருந்தாள் அந்தப் பாவை.

அவனோ. அப்போதே அவள் மருண்ட மான்விழிகளை மிக அருகில் கண்டான், அவளின் தேன் சிந்தும் அதரங்கள், அவன் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பத்து பேர் சேர்ந்து வந்து பிடித்தாலும், ஒரு நொடியில் அவர்களை உதறி விட்டு தள்ளுபவன், இவளின் சிறு பிடிக்கு கட்டுப்பட்டு நின்றான்.

“வார்த்தையை விடாதே மான்விழி” என்று மிக மெதுவாக, அவள் காதோரம் குனிந்து மெல்லமாக கூறினான்.

“நான் வார்த்தையை விடவில்லை. தாங்கள் தான், அம்பை தவறவிட்டு விட்டீர்கள்” என்று மூஞ்சை தூக்கி வைத்துக் கூறினாள் பெண்ணவள்.

“என்ன? நான் இலக்கை தவறவிட்டேனா? அது என் சரித்திரத்திலேயே கிடையாது” என்று மிக சாதாரணமாக கூறினான் அவன்.

“ஆம். இலக்கை தவறவிடவில்லை. ஆனால் உங்கள் இரக்கத்தை கடன் கொடுத்து விட்டீர்கள் போலும்” என்று கோவமாக கூறினாள் அவள்.

“நான் எம் இரக்கத்தை விடவில்லை. தாம் தான், எதன் மீதோ உங்கள் இதயத்தை தொலைத்து விட்டீர்கள் போலும்” என்று அசால்டாக கூறினான் அவன்.

“என்ன மொழிகிறீர்கள் தாங்கள்? நான் பேசிக் கொண்டிருப்பது. அம்மானிற்காக” என்று வேகமாக அந்தப்பக்கம் திரும்பி கையை நீட்டினாள்.

“ம். ஆனால் நான், அம்மானிற்காக இல்லை, இந்த மான்விழிக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று அவனும் விடாமல் பேசினான் அவன்.

“மான்விழியா? அது ஒன்றும் என் நாமம் அல்ல” என்று கோவமாக கூறினாள்.

“அப்படியா? அப்படி என்றால், தங்களின் திருநாமம் என்னவென்று நான் அறிந்துக் கொள்ளலாமா?” என்று அவனும் கேலியாக கேட்டான்.

“மன்னிக்கவும் மன்னா. நான் மனிதாபிமானம் இருக்கும், மனிதர்களிடம் மட்டுமே என் பெயரை உரைப்பேன். நீங்கள் முழு காட்டு மிராண்டி” என்று அவள் கோவமாக கூறினாள்.

“காட்டு மிராண்டியா? நானா? நானா, சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த, மானை மிரண்டு ஓடவைத்தது?” என்று எதிர் கேள்வி கேட்டான் அவன்.

“நான் அதனுடன் ஒடி பிடித்து தான் விளையாண்டேன். நீங்கள் தான் அதன் உயிரோடு விளையாண்டுவிட்டீர்கள்” என்று கோவமாக கூறினாள் அவள்.

“அப்படியா? அதை நீங்கள் அந்தப்புறம் திரும்பி பார்த்து விட்டு, உரைக்க மாட்டீரோ?” என்று கேலியாக கேட்டான் அவன்.

“இல்லை சற்று முன், துள்ளி குடித்து ஓடிய அந்த மானை, இரத்த வெள்ளத்தில் பார்க்கும் சக்தி என் மனதில் இல்லை” என்று வருத்தக் குரலில் கூறினாள் அவள்.

“அப்படியா? ஆனால் நான் கேள்வி பட்ட வரையில், அயல் நாட்டு இளவரசி, வேட்டையாடுவதில் வல்லவர். எதிரிகளின் முன் நிராயுதபானியாக நின்றால் கூட வென்றுவிட்டே வீடு திரும்புவார். இளவரசர் இல்லாத குறையை தீர்க்க பிறந்த பெண் மகாராணி என்றல்லவா கூறினார்கள். அப்படியானால், அந்த அயல் நாட்டு இளவரசி தாங்கள் இல்லையோ?” என்று கேட்டவனின் குரல் எள்ளல் விளையாடியது.

“அப்படியானால், நான் யாரென்று நீங்கள் அறிவீர்கள்?” என்று அவன் கண்ணோடு கண் நோக்கி, அவள் கேட்டாள்.

“ஆம் அறிவேன். எம் கோட்டையில் சிறு இலை அசைந்தாலும், என் செவிக்கு வந்து விடும். அப்படி இருக்க, என் செல்ல தங்கையின் தோழியை அறியாமல் இருப்பேனா நான்?” என்று தன் தோழி, படைத் தளபதியின் அரவணைப்பில் பத்திரமாக இருப்பதை அறிந்துக் கொண்டே கூறினான் அவன்.

ஆம், அவன் அம்பு எய்யும் போது, அவனின் அன்பு தங்கையும் நடுவில் ஓடி வந்தாள். அவள் மீது அம்பு படாமல், தன்னை நோக்கி இழுத்தான், அவனின் நண்பன் மற்றும் அவன் தங்கையின் அன்பு காதலன்.

இதைப் பற்றி எதையும் தெரியாத, இளவரசியோ “அதான் இவ்வளவு அறிந்த தங்களுக்கு என் நாமம் அறியாதது ஆச்சர்யமாக உள்ளது” என்று நக்கலாக கூறினாள் அவள்.

“ஆம் நான் என் செய்வேன், என் தோழி உரைக்கும் போதெல்லாம், என் தோழி, என் உயிர், என் சகோதரிக்கும் மேல், என்று தான் கூறுகிறாள். சரி எம் தங்கை தான் இப்படி உரைக்கிறாள். தங்கள் நாட்டு மக்களாவது, உங்கள் பெயரை உரைப்பார்கள் என்று பார்த்தால்? அவர்கள் என்னவோ? தங்களை ரட்சிக்க வந்த தேவதை, சக்தியின் மறுஅவதாரம். எங்கள் நாட்டின் கெளரவம் . குலம் தளிர்க்க வந்த மகராசி. என்றல்லவா புகழ் பாடுகிறார்கள். நான் என்ன செய்யட்டும்?” என்று சலிப்பாக கூறினாலும், அவள் புகழை அவன் வாயால் சொல்லிக் கொண்டிருந்தான்.

“தாங்கள் எதுவும் செய்ய வேண்டாம். இதுவரை தாங்கள் செய்ததே போதும். உம்மை கூட எங்கள் நாட்டு பெண்கள், கந்தர்வ கள்ளன், கண்ணனின் சிம்மம், தானே தலைவன், நீல விழியான். உம்மின் கடைக்கண் பட காத்துக் கொண்டிருக்கும் கண்ணிமார்கள் பல” என்று வாய்வோயாமல் பேசிக்கொண்டனர். அதிலும் எம் தோழி, அதான் உம் தங்கை. அவள். என் தமையனைப் போல் இவ்வுலகில் ஒருவன் உண்டா? என்று எண்ணும் அளவுக்கு பேசினாள். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்மொழி என்று இன்று தானே கண்டுக் கொண்டேன்” என்று அவள் பாணியிலேயே அவனை வறுத்தெடுத்தாள்.

“ம் பராவாயில்லை. மான்விழிக்கு, பகுத்தாயும் திறன் இல்லாவிட்டாலும், பேச்சுத்திறனுக்கு எந்தக் குறையும் இல்லை.” என்று அவளை மேலும் சீண்டினான் அவன்.

“யாருக்கு? எனக்கு பகுத்தாயும் திறன் இல்லையா?” என்று கோவமாக கேட்டாள் அவள்.

“ஆம் உமக்குத்தான். இதில் என்ன சந்தேகம்?” என்று வெகு சாதாரணமாக கேட்டான் அவன்.

“வேண்டாம், எம் சினத்திற்கு ஆளாகாதீர்கள்” என்று கோவமாக சொல்ல.

“நீங்கள் இந்த கடலலைக்குள் சிக்காதீர்கள்” என்ற குரலில் சட்டென்று அந்த மாய உலகில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள் ருத்ரா.

அவள் ஏறக்குறைய கடல் சுழலில் சிக்கியிருந்தாள். அப்போதே தன்னிலை உரைத்து அங்கிருந்து விடுபட முயற்சித்தாள். அந்நேரம் ஒரு வலிய கரம் அவளை அந்த சுழலில் இருந்து தன்பக்கம் இழுத்தது.

இழுத்த வேகத்தில் அவன் தின்னிய மார்பின் மீது மீண்டும் ஒரு முறை விழுந்தாள். இம்முறை. அந்த “ஆ” என்ற எழுத்து அந்த கடல் தண்ணீர் பட்டு, பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மின்னியது.

மீண்டும், அந்த எழுத்தின் ஆராய்சிக்குள் சென்றாள் ருத்ரா.

“இது என்ன மாதிரியான டாட்டூ? அப்போ பச்சையா இருந்திச்சு. இப்போ சிவப்பா இருக்கு, அப்போ நான் தொட்டுப்பார்த்தா என்ன கலர்ல இருக்கும்?” என்று அதி முக்கிய யோசனைக்கு சென்றாள் அவள்.

அந்நேரம் பலமாக சூரைக் காற்று வீசியது. அதில் தென்றல் கட்டி வைத்திருந்த, அந்த மணல் கோட்டை சர சரவென்று உடைய ஆரம்பித்தது. அப்போதே தன்னிலைப்பெற்ற தென்றலின் காதில் “இது தான் நீ உம் இளவரசியை காக்கும் லட்சணமா?” என்று ஒரு எள்ளல் குரல் கேட்டது.

அந்த குரலில் வேகமாக, கடலோரம் பார்த்தாள். ருத்ரா இருந்ததற்கான தடம் கூட இல்லை.

“ஐயோ என்ன பண்ணிட்டேன். எப்படி அவளை மறந்தேன்? ருத்ரா” என்று தென்றல் கத்தினாள்.

“மிகவும் நன்றாக இருக்கிறது தேவி” என்ற சத்தம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது.

அவள் அங்கிருந்து ஓடி “ருத்ரா” என்று கடலைப் பார்த்து கத்தினாள்.

அந்நேரம் அந்த மணல் கோட்டையின் துகள்கள் எல்லாம் தானாக ஒன்று சேர்ந்து “மன்னவன் வருகிறான்” என்று எழுத்துகளாக மாறி பின், அந்த கடலலைகளோடு கரைந்துப் போனது.

அங்கே சுழல் பெரிதாக மாறிக்கொண்டே இருந்தது. அந்நேரம் ருத்ரா-வின் விரல்கள், அந்த “ஆ” என்ற எழுத்தின் மீது மெதுவாக பதிந்தது. அவள் கைப் பட்டதும் ஒரு நொடி நீல நிறமாக மாறி பின் பச்சை நிறத்திற்கே மீண்டும் மாறியது.

அவள் விரல் அவன் மேனியில் பதிந்த நேரம், அந்த சுழல் மாயமாக மறைந்தது. 

“என்னடா இது? மேஜிக் மாதிரி இருக்கு” என்று ருத்ரா விரலை எடுக்க, அது மீண்டும் சிவப்பு நிறமாக மாறியது. சுழலும் மீண்டும் பலமாக மாறியது.  இதையேதும் உணரும் நிலையில் ருத்ரா-வும் இல்லை. அபியும் இல்லை.

அபி அந்த சுழலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்த்துக் கொண்டிருந்தான். ருத்ரா, அந்த எழுத்தை வைத்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், தென்றலோ, உயிரைக் கையில் பிடித்து ருத்ராவை தேடினாள்.

ஒரு கட்டத்தில் ருத்ரா தன்னை மீறி போவது போல் தோன்ற, அபி அவள் கரத்தை எடுத்து தன் கழுத்தை சுற்றி மாலையாக போட்டு, “நல்லா பிடிச்சிக்கோ. விட்டுறாத” என்று அவள் காதோரம் குனிந்து கூறினான்.

அதில் அவன் இதயம், இவள் இதயத்தோடு கதை பேசியது. அவன் உதடுகள், இவள் செவியோடு ராகம் பாடியது. ஆனால் இவள் இதழ்களோ. வழக்கம் போல் அவன் மார்பில் கோலம் போட்டது. இவர்களின் நெருக்கம், அங்கிருந்த வானிலையை கூட மாற்றியது.

சுழலின் வேகம் குறைந்தது. நன்கு இருட்டியிருந்த மேகம் சற்று வெளிச்சத்தை கொடுத்தது. அவன் அவளை சுமந்துக் கொண்டே, அந்த சுழலில் இருந்து தப்பித்து கரைப் பக்கமாக சென்றான். ஆனால் அந்த சுழல் அவனின் பாதையை மாற்றி விட்டது. 

அதனால், இவர்கள் இருவரும் பாவம் தென்றலின் கண்ணில் படவே இல்லை. அவள் அங்கிருந்த காவலர்களிடம் உதவி கேட்க ஆரம்பித்திருந்தாள்.

அபியும் அவளை இழுத்துக்கொண்டு, கடலின் உள்பக்கமாக சென்றான். இருள் வேற ஆரம்பித்திருந்தது. அலையின் வேகம் வேறு அதிகமாக இருந்தது. அந்த சுழல் இவர்களை கரையை சேரவிடவில்லை. அவன் பாதை தடுமாற ஆரம்பித்தான். இவளாலும் ஒரு கட்டத்துக்கு மேல், அவனை பிடிக்க  முடியவில்லை கை நழுவுவது போல் இருந்தது. அதனால் வேறு வழியின்றி, அவளை உப்புமூட்டை போல் முதுகு பக்கமாக சேர்த்து அணைத்துக் கொண்டு, ஒரு இடத்தில் சிறு வெளிச்சம் இருப்பது போல் தோண்ற, அந்தப்பக்கம் நீந்திச் சென்றான்.

ஒரு கட்டத்தில் அவனாலும், இவளை சுமந்துக் கொண்டு நீந்த முடியாமல் போக, அவள் அவன் மீதிருந்து நழுவி கடலுக்குள் மூழ்க சென்றாள்.

அதே நேரம் தென்றல் காவலர்களின் உதவியுடன், சில படகுகளை எடுத்துக் கொண்டு கடலுக்குள் செல்ல வந்தாள். ஆனால் காவலர்கள் தான். “இங்கேயே இருங்க. நாங்க பார்த்துட்டு சொல்றோம்” என்று வாக்கு கொடுத்தனர். 

“கடவுளே. பாவம் ருத்ரா. அவ யாருக்கு என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு மட்டும் ஏன் பிரச்சனைக்கு மேல பிரச்சனை வருதுன்னே தெரியல. அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று மனதார வேண்டினாள்.

“அவள் செய்தது பாவம் அல்ல. துரோகம், அவள் பரிகாரம் செய்யவேண்டியது பாவத்திற்கு அல்ல. தீர்க்க வேண்டிய பகையை” என்று ஒரு குரல், அந்த கடலலைகளோடு சேர்ந்து ஒலித்தது.

அங்கே “என்னைப் பிடி. விடாத” என்று அபியின் குரல் அவள் செவியில் விழுவதற்கு முன்னே, அவள் கடலில் விழுந்திருந்தாள்.

(ருத்ராவிற்கு என்னவாயிற்று? இனி அவளை காப்பது யார்? அந்த முன் ஜென்மத்தில் என்ன தான் நடந்தது? என்ற சுவாரசியமான கேள்விகளுக்கான பதிலை வரும் அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும். நன்றி பிரண்ட்ஸ்.)

சாபம் தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   2

*** தாபம் – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com