மொத்த சிட்டியும், நேற்று நடந்த மேட்சைப் பற்றித்தான் பேசியது. மேன் ஆப் தி மேட்ச் அவர்டும், தீரஜ் வர்மனுக்குத்தான் வழங்கப்பட்டது. ஆனால் அதை வாங்குவதற்காக கூட அவன் காத்திருக்கவில்லை.
மேட்ச் முடிந்த அடுத்த நொடி, அவன் அங்கிருந்து கிளம்பி, அவனுடைய ஹெஸ்டவுஸிற்குள் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்த மருத்துவரோ, “என்ன சார்? நான் தான் அவ்வளவு தூரம் சொன்னேன்னே. இந்த மேட்ச் விளையாட வேண்டாம்னு” என்றவர், இப்போது அவனுடைய டிஷர்ட் கையின் ஒரு பக்கத்தை மெல்ல தூக்கி, அவனின் காயத்தைப் பார்த்தார்.
விளையாட்டு நியதிப்படி, அவன் இன்று விளையாடியிருக்கவே கூடாது. ஆனால் அவன் என்று நிபந்தனையை எல்லாம் பாலோ செய்திருக்கிறான்?
இப்போது கூட, “உன்னோட வேல எதுவோ. அத மட்டும் பாரு” என்று அவனிடம் சொல்லியவன், இப்போது அங்கிருந்த சோபாவில் சென்றமர்ந்தான்.
அவனுக்கு தேவையான உணவை வேலையாள் கொண்டு வந்து வைக்க, அவனோ, “ஜித்தேஷ் இன்னும் வரலையா?” என்று கேட்டான்.
“இல்ல சார்” என்று அவர்கள் சொல்லிவிட்டு சென்றுவிட, இப்போது கடிகாரத்தை திருப்பி பார்த்தவனோ, “இடியட். கொஞ்சம் கூட டைம் மேனேஜ்மெண்டே கிடையாது” என்று கடுப்பாய் அங்கிருந்த ஸ்ட்ரஸ் பந்தை அழுத்திப் பிடித்தான்.
அதற்குள் டாக்டர், அவனுடைய காயத்துக்கு மருந்திட்டு, அவன் கேட்க மாட்டான் என்பது தெரிந்தும், “லெப்ட் ஹேண்ட்க்கு ப்ரஷர் கொடுக்காதீங்க” என்று சொல்லிவிட்டு, அவனிடம் முறைப்பை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
வெளியில் வந்த பின் தான் அவனுக்கு மூச்சே வந்தது. “ஸப்பா, இப்படி ஒரு இரும்பு மனுஷன நான் பார்த்ததே இல்ல” என்று புலம்பியப்படி வந்தவரின் மீதே வேகமாய் ஓடி வந்து மோதினான் ஜித்தேஷ்.
அதில் அவர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, “ஐயோ சாரி டாக்டர். தீரஜ் ஒகேதான. எந்த ப்ராபளமும் இல்லதான” என்றான் ஜித்தேஷ்.
அவனைப் பார்த்ததும். “முன்னாடியே சொன்னதுதான். இதுக்கப்புறமாச்சும், கொஞ்சம் அந்த கைக்கு ரெஸ்ட் கொடுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
செல்பவரைப் பார்த்தவனோ, “எதே? ரெஸ்டா? அவன் லைப்ல ரெஸ்ட்ன்ற வார்த்தைக்கே இடம் கிடையாதே” என்று புலம்பியப்படி அவனைத் தேடி சென்றார்.
உள்ளே நுழைந்தவனிடம், “இதுதான் நீ வர்றேன்னு சொன்ன டைம்மா?” என்று கோவமாய் கையில் இருந்த பந்தை அவனின் மீது தூக்கி எறிந்தான்.
கடைசி நொடியில், அதை கேட்ச் பிடித்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டவன், “இல்லடா. வர்ற வழியில புல் ட்ராபிக். ஸ்டேடியத்துல உன் காரை என்னால பாலோ கூட பண்ண முடியல” என்றான்.
“இப்படி எக்ஸ்கியூஸ் சொல்லாதன்னு, உனக்கு எத்தன தடவ சொல்றது?” என்று அவன் கோவமாய் கேட்க, “சரி சரி, உன் டைம்ம வேஸ்ட் பண்ணாம வந்த மேட்டர சொல்லிடுறேன்” என்றான்.
அதில் இப்போது நெற்றியை சுருக்கியவனோ, “என்ன? அது யாருன்னு விசாரிச்சீயா?” என்று கேட்டான்.
“ஆங் தீரஜ் விசாரிச்சிட்டேன். ஒரு லேடி லாயர் தான், இந்த கேஸ அகைன் ரிஓபன் பண்ணிருக்காங்க. மேக்ஸிமம், இது ஒன்னும் அவ்ளோ பெரிய இஸ்யூ எல்லாம் இல்ல. நம்ம சைட் லாயரே எல்லாம் பாத்துப்பாங்க” என்றான் ஜித்தேஷ்.
“அந்த லாயருக்கு, என்ன வேணும்னு கேட்டு செட்டில் பண்ணிடு. எனக்கு, இந்த கேஸ் கோர்ட் வரைக்கும் போக கூடாது” என்று சிறு கோவத்துடன் கூறினான்.
அதில் தயங்கிய ஜித்தேஷோ, “இல்ல தீரஜ். அந்த லாயர் கொஞ்சம் நேர்மையான” என்று சொல்ல வந்தான். “என்ன?” என்று அவன் அழுத்திக் கேட்டதில், இப்போது ஜித்தேஷிற்கோ பேச்சு வர மறுத்தது.
“இந்த உலகத்துல எல்லாரோட நேர்மைக்குமே ஒரு வில இருக்கும். அந்த வில என்னென்னு கேட்டு, அத முடிக்கிற வழிய பாரு” என்றான்.
அவனிடம் மறுப்பு சொல்ல முடியாதே. அதனால், “சரி. நான் பாத்துக்கிறேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று சொல்ல வந்தான்.
அதற்குள்ளாக, “அந்த ப்ராடக்ட் அண்ட் கம்பெனி பத்தி உன்னை விசாரிக்க சொன்னேன்னே. என்னாச்சு?” என்று கேட்டான்.
“இதுக்குத்தான், உனக்குன்னு ஒரு அஸிஸ்டெண்ட் வெச்சிக்கோன்னு சொல்றேன்” என்று அவன் முணுமுணுக்க, “உன்னால இத பண்ண முடியும்னா பண்ணு. இல்லையா? போயிட்டே இரு. எனக்கு இத எப்படி பண்ணனும்னு தெரியும்” என்றான்.
“சரி சரி டென்சன் ஆகாத. நீ சொன்ன மாதிரி அந்த ப்ராடக்ட், மார்க்கெட்ல பெருசா ரீச் ஆகல” என்று கூறினான்.
“அது எனக்கு விஷயம் இல்ல. அதுல என்னோட லாபம் என்ன? அத மட்டும் சொல்லு. அதுவும் போக, ப்ராண்ட் அம்பாசிடரா நான் இருந்தாலே, அந்த ப்ராடக்ட்க்கு, ஆட்டோமேட்டிக்கா ரீச் வந்துடும். அதனால, என்னோட கண்டிஷன்ல சின்ன சேஞ்சஸ் கூட இருக்க கூடாது” என்று அழுத்திக் கூறினான்.
அதில் அவனுமே, “ஒகேடா. நான் என்னென்னு பாக்குறேன்” என்றான். “அப்புறம்” என்ற தீரஜ் ஏதோ சொல்ல வந்து பின், “சரி நீ போ. நான் இத பாத்துக்கிறேன். ஆனா, அந்த கேஸ் விஷயத்துல மட்டும் கொஞ்சம் கவனமா இரு” என்று அழுத்திக் கூறினான்.
“சரிடா. நான் வரேன். நீ பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு ஜித்தேஷும் அங்கிருந்து கிளம்பினான். கிளம்பும் போதே, அவனுடைய பாடிகாட்ஸுக்கு, சில உத்தரவுகளை சொல்லிவிட்டுதான் சென்றான்.
இங்கே, அவனுக்காக கொண்டு வரப்பட்ட, அந்த டயட் புட்டை, சரியான அளவுக்கு சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்தான். பின் வழக்கமாய் அவன் செய்யும் உடற்பயிற்சியில் மூழ்கியவன், அடுத்து அவன் விளையாடப் போகும் அணியின் பிளேயர்ஸ் விளையாட்டை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான்.
அவன் உறங்குவானா? அவனுக்கெல்லாம் பசிக்குமா? இப்படி இரண்டு கேள்விக்குமே பதிலே கிடையாது. அவன் எப்போது உறங்குவான்? என்று ஜித்தேஷ் கூட அறிந்ததில்லை.
அங்கே அவனுக்கு அப்படியே எதிர்பதமாய். அந்த வீட்டில், ஏசியையும் பேனையும் ஒரே நேரத்தில் போட்டுவிட்டு, அந்த குளிர் அவளை தாக்காமல் இருக்க முழு பெட்ஷீட்டையும், இழுத்து மூடி படுத்திருந்தாள் ஜான்வி.
(அவ எந்திரிச்சதுக்கப்புறம் தான் அவ அழக பத்தி சொல்லனும்னா, அது நடக்காது போல. அதனால இப்பவே நம்ம. அவ அழக பத்தி கொஞ்சம் பேசிடலாம். அதுவும் அவ தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணாம சொல்லி முடிச்சிடுறேன்)
பன்னீர் பூ நிறத்திற்கும், அவள் தேகத்திற்கும் சிறு வித்தியாசம் கூட இருக்காது. அப்படி ஒரு பளீச்சென்ற வெள்ளை நிறம். அந்த வெள்ளை நிறத்துக்கு மத்தியில், ஆளை கொள்ளைக் கொள்ளும், நீல விழிகள். அவள் முகத்தில் மொத்த கருப்பையும், அவளின் கண் இமைகள் எடுத்துக் கொண்டது போல். அவளுக்கு கண் மை கூட தேவை கிடையாது. அவளின் கூர்விழிகளில், நிச்சயம் யாராய் இருந்தாலும் சொக்கித்தான் போக வேண்டும்.
பார்த்தவுடன், அத்தனை பேருக்கும் பிடித்துவிடும் தோற்றம். செயற்கையாய் அவளுக்கு எதுவுமே தேவையில்லை என்பது போல் இயற்கையிலையே அவள் பேரழகு. என்னதான் சாப்பாடு விஷயத்தில் விருப்பம் போல் சாப்பிட்டாலும், அவளை டாப் மாடல்களுக்கு போட்டியாய் நிற்க வைக்கலாம்.
இடையை இஞ்ச் டேப்பால் அளந்து பார்த்தால் கூட, இஞ்ச் சைஸ் அதிகம் இருக்காது. கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட, அவள் அழகைப் பார்த்து, இப்படி ஒரு பேரழகியை, கடவுளை தவிர வேறு யாரும் படைத்திட முடியாது என்று சொல்லிவிடலாம். இப்படி அவள் அழகைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் அவள் அழகி என்பது மட்டும் அவள் மூளையில் எங்கேயுமே பதிந்தது கிடையாது. அதனால் அவள் அலங்காரம் என்ற ஒன்றை பெயருக்கு கூட செய்தது கிடையாது.
எதையும் சொன்ன நேரத்தில் செய்யும் பழக்கம் சுத்தமாய் கிடையாது. கடைசி நேரத்தில் வேலைக்கு கிளம்பி செல்பவளுக்கு, பல நேரத்தில் ஹேர்ஸ்டைல் போனிடெயிலாகத்தான் இருக்கும்.
சில சமயம் அதை கூட மறந்துவிட்டு ப்ரீ ஹேரில் கிளம்பி விடுவாள். கைக்கு கிடைக்கும் பொருட்களை எடுத்து போட்டுக் கொள்வாள். ஹேர்பேண்டை, ஹேண்ட் பேண்டாக மாற்றுவதில் இருந்து ஷாலை, கர்ஷீப்பாக்குவது வரை அவள் செய்துவிடுவாள்.
அழகை கூட வெளிக்காட்ட தெரியாத பேரழகி அவள். அதிலும் அதி முக்கியமாய் அவளின் நீல நயனங்களில் தொலையாதவர்களை அத்தனை எளிதில் பார்த்திட முடியாது.
பல இடங்களில், அந்த நீல நயணம் அவளை ஆபத்திலும் சிக்க வைத்து விடும். மற்றவர்களை விட, அவளை அது வித்தியாசப்படுத்தி காட்டிவிடும்.
அதனாலையே பெரும்பாலும், வேலை நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் மாட்டிக் கொள்வாள். அவளுக்கு எப்போதுமே, எதிலும் தனித்துவம் காட்டும் எண்னமே கிடையாது. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று அவள் செய்ய வேண்டியதை செய்துவிட்டு போகும் ரகம். அவள் செய்த விஷயத்துக்கு பாராட்டைக் கூட எதிர்பார்க்க மாட்டாள்.
அவளுக்கு அப்படியே நேரெதிர் தான் தீரஜ் வர்மன். விளையாட்டு வீரன் என்பதால், உடலை மட்டும் அல்லாது உணவு பழக்கத்தில் இருந்து அத்தனையையும் அவன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பான்.
பல விளம்பரங்களில் அவன் தான் முன்னனி நடிகர்களுக்கே டப் கொடுப்பான். அதனால், அவனின் அழகை பராமரிப்பதற்கென்று ஒரு டீம்மே இருக்கிறது. எல்லாவற்றிலும் தனியாக தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பான். இத்தனை ஏன். நேற்று நடந்த மேட்சில் கூட, விழுந்து விழுந்து அடித்த விக்ராந்தின் பெயருக்கு பதிலாக, தீரஜ்ஜை பற்றிதான் அத்தனைப் பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அவனுக்கு புகழ் பிடிக்கும். ஆனால் அதை கூட அவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜீவன் அவன். இரவு எப்போது உறங்கினானோ? ஆனால் காலையில் நான்கு மணிக்கே எழுந்து ஜாக்கிங் செல்ல ஆரம்பித்திருந்தான் தீரஜ் வர்மன்.
ஆனால் இங்கே காலை மணி எட்டை நெருங்கியிருக்க, கொஞ்சமும் உறக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்தாள் ஜான்வி. அவளுக்கு அலாரம் வைக்கும் பழக்கம் கூட கிடையாது. ஏனெனில் அவள் வாழ்க்கையில், அவள் தூக்கத்துக்கும், சாப்பாட்டுக்கும் இடையூறு வரும் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டாள்.
அவளுடைய நாளின் ஆரம்பம். அவளாக கண் விழிக்கும் போதுதான் நடக்கும். இப்போது கூட அவளைத் தவிர மற்ற அனைவரும், அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
கிச்சனில் நின்று தன் மூத்த மகளை திட்டு திட்டு என்று திட்டிக் கொண்டிருந்தார் சாரதா.
“படிச்சு முடிச்சதும், கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா, இவ இப்போ இப்படி தினமும் ஒரு பிரச்சனைய இழுத்துட்டு வருவாளா? எல்லாம் அவர சொல்லனும், மூத்தப் பொண்ணு, மூத்தப் பொண்ணுன்னு செல்லம் கொடுத்து, அவ எது பண்ணாலும் சப்போர்ட் பண்ணி, இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு” என்று அவர் கத்திய கத்தல். வெளியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் காதிலும் விழுந்தது.
அவர் காதில் மட்டும் அல்ல, அறையில் இருந்த தியாவின் காதிலும் விழதான் செய்தது. ஆனால் அதை சற்றும் கண்டுக் கொள்ளாது, தன்னுடைய கருப்பு கோர்டை கையில் எடுத்துக் கொண்டு, அன்றைய நாளுக்கான கேஸ் புத்தகத்தை புரட்டியப்படி வெளியில் வந்தாள்.
“ம்மா பிரேக்பாஸ்ட் ரெடியா?” என்றப்படி அவள் டைனிங் டேபிளில் சென்று அமர, அதில் அவருடைய கோவமோ, இன்னும் கூடியது.
“ஹே உன்னதாண்டி திட்டிட்டு இருக்கேன்” என்று அவர் சொல்ல, “ஓ அப்படியா? சரி நான் அங்க கேண்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து எழுந்தவள், தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளின் செய்கையில், “ஐயோ இவள எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலையே” என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அவளின் கணவரோ, “என்னம்மா? இன்னிக்கு இட்லியா? பூரியா?” என்றப்படி வந்தமர்ந்தார்.
இப்போது மகளின் மீது காட்ட முடியாத கோவம் மொத்தத்தையும் அவரின் மீது கொட்ட, அவரோ, “சரி நான் ஆபிஸ் போயி பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரும் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதில் அவினேஷும் கூட, அம்மாவின் கோவத்தில், பள்ளி பேக்கை எடுத்துக் கொண்டு நைஸாக நழுவி விட்டான்.
இப்படி ஒட்டு மொத்த குடும்பமும், அவருடைய கத்தலில் தலை தெறித்து ஓடியிருக்க, நம் கதையின் நாயகியோ அப்போதும் அமைதியாய் தூங்கி கொண்டுதான் இருந்தாள்.
இப்போது அவளுடைய உறக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கென்றே, அவளுடைய மொபைலுக்கு விடாமல் அழைப்பு வந்தது.
(அப்பாடா? யாரு கால் பண்ணிருந்தாலும், அவங்க நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கனும்ப்பா. இப்படி மூனு எபிசோடா அவ தூங்கிட்டு இருக்கா. அடுத்த எபிசோட்ல கூட அவ எந்திரிக்கலன்னா அப்புறம் எல்லாரும் என்ன திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. நல்ல வேள நீயாச்சும் எனக்காக அவள எழுப்பி விடு. என்ன இவ? ரைட்டர் என்னையவே இவ்ளோ புலம்ப வைக்கிறா? அப்போ நம்ம டீமேனோட நிலம என்னவாக போதோ? இல்ல நம்ம டீமேன்கிட்ட மாட்டிக்கிட்டு இவ தூக்கம் என்னவாக போதோ? சரி அதெல்லாம் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமோ?..
Deepa K
super
Ramya Iyer
emma nayagi tookam poodhuma konjam engalukum darisanam taarungal vazhi neefhu vizhi vaithu kaathirukirom