விடாமல் அழைப்பு வரவும், இப்போது ஜான்வியோ, மெல்ல போர்வையை விலக்கி, மொபைலை தேடினாள். அப்போதும் கூட கண்களை திறக்கும் எண்ணமே அவளுக்கு இல்லை போலும். அவள் கைக்கு அந்த மொபைல் சிக்காமல் போக, அதில் சிறு சலிப்புடன் மெல்ல கண்ணைப் பிரித்தாள்.
அவளின் தரிசனத்திற்காகவே காத்திருந்த அந்த கதிரவன், இப்போது அவள் முகத்தில் அடிக்க, இப்போது, ஐவிரலால் தன் முகத்தை மறைத்து, அந்த சூரியனை செல்லமாய் முறைத்தாள்.
பின், போர்வையை விலக்கிவிட்டு, அடித்துக் கொண்டிருந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
அவளுடைய அலுவலக நண்பன் கைலாஷ் தான் அழைத்திருந்தான்.
அதில், அதை அட்டண்ட் செய்து, “எதுக்குடா காலையிலையே கால் பண்ணி, என் தூக்கத்த கெடுக்குற” என்று சலிப்பாய் கேட்டாள்.
“அடிப்பாவி. என்னமோ காலையில ஆறு மணிக்கு எழுப்புன மாதிரி சலிச்சுக்குற. மணி என்ன தெரியுமா? ஒன்பதாக போகுது” என்றாள்.
“ச் அதனால என்ன? அத சொல்லத்தான் கால் பண்ணீயா நீ” என்று அசராது கேட்டாள் அவள்.
“நீ சீக்கிரமா கிளம்பி ஆபிஸுக்கு வா. இங்க பெரிய பிரச்சனையாகிருச்சி” என்று அவன் அத்தனைப் பதட்டமாய் சொல்ல, “என்ன பிரச்சன?” என்றவளின் குரலில் அப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
“ஹே, நீ நேத்து எனக்கு அனுப்புன டிசைன்ஸ் எல்லாம் எரேஸ் ஆகிருச்சி” என்று அவன் சொல்ல, “வாட்?” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ஆமா,ஜானு. ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரமா வாயேன். இல்லன்னா, அந்த மேனஜர், என்ன வேலைய விட்டே அனுப்பிடுவான். ப்ளீஸ் ஜானு” என்று அழாத குறையாய் கெஞ்சினான்.
“சரி சரி டென்சன் ஆகாத, எப்படியும் என் சிஸ்டம்ல ஒரு காப்பி இருக்கும்னுதான் நினைக்கிறேன். நான் வரேன்” என்று சொல்லியவளும், இப்போது அவசரமாய் அலுவலகத்துக்கு செல்ல கிளம்பினாள்.
அவள் கிளம்பி வெளியில் வரும் போது மணி ஒன்பதரையாகியிருக்க, அதைப் பார்த்த சாரதாவோ, “என்னடா இது? அதிசயத்துலையும், அதிசயமா இவ்ளோ சீக்கிரமா கெளம்பியிருக்க” என்று கேட்டார்.
“அது ஆபிஸ்ல கொஞ்சம் வேலம்மா. சாப்பாடு ரெடியா?” என்று கேட்டப்படி அவள் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவள் அப்படித்தான் தலை போகும் விஷயமாக இருந்தால் கூட சாப்பிடாமல் கிளம்பும் பழக்கம் எல்லாம் அவளுக்கு சுத்தமாய் கிடையாது.
“அதெல்லாம் எப்பவோ ரெடி. ஆனா இந்த வீட்டுல சாப்டத்தான் யாருக்கும் நேரம் கிடைக்கல” என்று அவர் சொல்லவும், “நீ கவலப்படாதம்மா. நான் இருக்கேன் தான. நான் பாத்துக்கிறேன்” என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அதற்குள் கைலாஷிடம் இருந்து பத்து தடவைக்கு மேல் கால் வந்திருக்கும். சாப்பிடும் போது அந்த மொபைலை எடுத்துப் பார்க்கும் பழக்கம் எல்லாம் அவளுக்கு சுத்தமாய் கிடையாது.
இப்போது சாரதாவே, “அந்த கைலாஷ் பையன் தான கால் பண்றான். எடுத்து சாப்டுக்கிட்டு இருக்கேண்னு சொல்லிட்டு வைக்க வேண்டியதுதான?” என்றார் அவர்.
“சாப்பிடுறப்ப, மொபைல் யூஸ் பண்ணக் கூடாது மாம். சாப்டு முடிச்சிட்டு பேசிக்கலாம்” என்று சொல்லியவள், பொறுமையாய் சாப்பிட்டு முடித்துதான் அங்கிருந்து வெளியில் வந்தாள்.
தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள், “கடவுளே! இன்னிக்கு எந்த ட்ராபிக்லையும் சிக்கிட கூடாது” என்று வேண்டிக் கொண்டாள்.
ஆனால் அதே நேரம் காலையில், சாப்பிட கூட நேரமின்றி, அத்தனை பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் தீரஜ் வர்மன். அவன் வழக்கமாய் குடிக்கும் ப்ரோட்டின் ட்ரிங்கை மட்டும் எடுத்துக் கொண்டவன், அதை குடிக்கும் போது கூட, யாரிடமோ போனில் தான் பேசிக் கொண்டிருந்தான்.
“அப்படி எல்லாம் அவங்க சொல்ற இடத்துல வந்து, என்னால ட்ரெய்னிங் எடுத்துக்க முடியாது” என்று யாரிடமோ காரசாரமாய் சொல்ல, அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, “எனக்கு அதப் பத்தி எந்த கவலையும் கிடையாது” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அப்போது அங்கு வந்த ஜித்தேஷோ, “இப்போ நீ அந்த ஸ்போர்ட்ஸ் கம்பெனி ஓபனிங்கு போய்தான் ஆகனுமா?” என்று கேட்டான்.
“அதுத்தான நம்ம அக்ரீமெண்ட்?” என்று அவன் நக்கலாய் சொல்ல, “பட் அது நம்ம ப்ரண்டோட ஆப்போனண்ட் பார்டி கம்பெனி” என்று கூறினான் ஜித்தேஷ்.
அதைக் கேட்டவனோ, “அது தெரிஞ்சுதான. அவங்க என்னை இன்வைட் பண்ணிருக்காங்க” என்று அவன் சொல்ல, “இது அவங்களோட ரிவர்ஸ் பார்முலா ஸ்டாடஜி தீரஜ்” என்று கூறினான்.
“அப்போ அந்த பார்முலாவ நம்மளும் அவங்களுக்கு கொஞ்சம் காட்டிட்டு வரலாம்” என்று நக்கலாய் சொல்லியவனுக்கு, எல்லாவற்றிலுமே விளையாட்டுதான்.
ஆனால் என்ன பிரச்சனை என்றால், அந்த விளையாட்டுக்கு பின் நிச்சயம் விபரீதம் மட்டுமே மிச்சமிருக்கும்.
இப்போது அவன் அங்கு செல்வது கூட, அந்த கம்பெனிக்கு நஷ்டத்தை உருவாக்க மட்டுமாகத்தான் இருக்கும்.
அதனால் தான் ஜித்தேஷ், தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்று தடுக்க வந்தான்.
ஆனால் அவனை தடுப்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம் என்று அவனுக்கும் தெரியும். அதனால் வேறுவழியின்றி அவனோடு கிளம்பினான்.
இங்கே ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தவளோ, சரியான ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டாள்.
“என்னது இது? இந்த ரூட்ல ட்ராபிக் இருக்காதுன்னு நினைச்சித்தான, இந்தப் பக்கம் வந்தேன். இப்போ என்ன இங்கேயே இவ்ளோ ட்ராபிக்கா இருக்கு?” என்று சுற்றி முற்றி பார்த்தாள்.
அதற்குள் அருகில் பைக்கில் வந்த இருவரோ, “நெஜமாவா சொல்ற. தீரஜா வர்றாரு?” என்று ஆச்சர்யமாய் கேட்டான்.
“ஆமா அப்படித்தான் சொல்றாங்க” என்று இன்னொருவன் சொல்ல, “அப்போ வாடா மச்சான் நம்ம அங்க போகலாம்” என்று சொல்ல, “டேய் விஐபிஸுக்கே அங்க என்ட்ரி கிடையாதாம். இதுல நம்ம எல்லாம் நினைச்சி கூட பாக்க முடியாது. ஒழுங்கா ஆபிஸுக்கு போற வழிய பாப்போம்” என்று கூறினான்.
இதை கேட்ட ஜான்விக்கோ, தீரஜ் ஒரு கிரிக்கெட் ப்ளேயர் என்பது கூட தெரியாது. இவர்கள் பேசியதை வைத்து, அவன் என்னவோ சினிமா நடிகன் என்று நினைத்துக் கொண்டாள்.
அதற்குள் கைலாஷிடம் இருந்து அழைப்பு வர, “டேய் அஙக்தாண்டா வந்துட்டு இருக்கேன். வழியில புல் ட்ராபிக். கொஞ்சம் வெயிட் பண்ணு. வந்துடுவேன்” என்றாள்.
“நீ வர்றதுக்குள்ள, என்ன, போஸ்ட்மார்டம் பண்ணி அனுப்பிடுவாங்க போல” என்று அவன் பதறினான்.
“ச் பதட்டப்படாதடா. வந்துடுறேன். நம்ம டீம் லீடர்கிட்ட பேசிக்கலாம்” என்று அவள் சொல்ல, “அவென் பொண்ணுங்ககிட்டதான் பேசுவான். என்ன மாதிரி பசங்கள பாத்தாலே அவனுக்கு ஆகாது. அதுலையும் என்ன சுத்தமா ஆகாது. இந்த தடவ என்ன வீட்டுக்கு அனுப்பாம விட மாட்டான்” என்று புலம்பினான்.
“டேய், நான் தான் சொல்றேன் தான. வந்துடுரேன்” என்று சொல்லிவிட்டு கட் செய்தவள், இப்போது ஸ்கூட்டியை திருப்பி வேறு வழியாய் ஆபிஸுக்கு கிளம்பினாள்.
சரியாக அன்னேரம் தான் தீரஜூடைய கார், அவள் ஸ்கூட்டியை கிட்டதட்ட உரசும் தூரத்தில் கடந்தது. எதார்த்தமாய் தீரஜ், வெளிப்பக்கம் பார்க்க, அவளின் துப்பட்டா மட்டுமே அவன் கண்களில் விழுந்தது.
“இந்த காலத்துல கூட, துப்பட்டாலாம் போடுறாங்க போல” என்று நக்கலாய் சொல்லியவனின் பார்வை இப்போது அந்த ட்ராபிக்கைப் பார்த்தது.
அதில் இவனோ, “இப்போ எதுக்கு இந்த வேய் ல வந்த?” என்று கோவமாய் கேட்க, “இல்லடா, ஷார்ட் கட்னு யோசிச்சு வந்துட்டேன். கொஞ்சம் இரு. நம்ம ரிவர்ஸ் எடுத்து போயிடலாம்” என்றப்படி அவன் ரிவர்ஸ் எடுக்க, இப்போது அவர்கள் காரின் பின்னே, நின்றிருந்த ஸ்கூட்டியை இடித்திருந்தான்.
அதில் ஜான்வி, ஸ்கூட்டியில் இருந்து தவறி விழுந்திருக்க, “ஐய்யய்யோ!” என்று வேகமாய் காரை நிறுத்தினான் ஜித்தேஷ்.
“என்ன?” என்று தீரஜ் கேட்க, “யாரையோ தெரியாம இடிச்சிட்டேண்டா” என்று பதட்டமாய் அவன் சொல்ல, “எத்தன வயசுல இருந்து கார் ஓட்டுற நீ? இன்னும் ஒழுங்கா உனக்கு ரிவர்ஸ் கூட எடுக்க தெரியாதா?” என்று கத்தினான்.
“இல்லடா. தெரியாம” என்று சொல்லும் முன்னே, அந்த காரை மற்றவர்கள் சுற்றி வளைத்திருந்தனர்.
இங்கே கீழே விழுந்து, தானாக எழ முயற்சிக்க, கையில் நன்றாக அடிப்பட்டிருந்தது. ஓடி வந்து ஒருவர் அவளுக்கு குடிக்க தண்ணீரை கொடுத்து ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தினார்.
“காருல போனா ரோடே உங்களுக்கு சொந்தம்னு அர்த்தமா?” என்று பெரியவர் ஒருவர், கோவமாய் கூறினார்.
ஜித்தேஷுக்கோ மெல்லிய பதட்டம் எட்டிப் பார்க்க, “இப்போ என்னடா பண்ண?” என்று கேட்டான்.
“என்ன கேட்டேன்னா? நீதான இடிச்ச. போ! போயி எவ்ளோ செட்டில் பண்றதுன்னு கேட்டுட்டு வா” என்றப்படி சீட்டில் சாய்ந்தமர்ந்தான்.
“அதான இவன்கிட்ட போய் ஹெல்ப் கேட்டேன் பாரு. என்ன சொல்லனும்” என்று புலம்பியவன், இப்போது காரை விட்டு இறங்க, மற்றவர்களோ அவனை பேசவே விடாது, அவனை தாறுமாறாய் திட்டினர்.
“இல்லங்க. அது தெரியாமத்தான். நான் ஹாஸ்பிடலுக்கும், ஸ்கூட்டிக்கும் பே பண்னிடுறேன்” என்று தன்மையாய் அவன் சொல்ல, “காசு பணம் கொடுத்தா ஆச்சா? பொட்ட புள்ள கீழ விழுந்ததுல, ஏதாச்சும் ஆனா என்ன பண்னுவீங்க?” என்று அதற்கும் அவனை திட்டினர்.
இங்கே நீண்ட நேரமாகியும், ஜித்தேஷ் வராமல் இருக்கவும். “ச் ஒரு வேலைக்கும் லாய்க்கே கிடையாது. இவென்ன” என்றப்படி கார் கதவை திறந்து இறங்க சென்றான்.
அதற்குள், கையை துடைத்தப்படி வந்த ஜான்வியோ, “ஐயோ விடுங்க. தப்பு என் மேலதான். நான் தான், சடன் ப்ரேக் பிடிச்சேன். அதனாலத்தான் அவங்க கார் என் ஸ்கூட்டிய இடிச்சிருச்சி. அவர் மேல தப்பு இல்ல” என்றாள்.
அதில் ஜித்தேஷ் அப்போதுதான் அவளைப் பார்த்தான். அவள் கை முட்டியில் அடிப்பட்டு இரத்தம் வருவதைப் பார்த்தவனோ, “ஐயோ சிஸ்டர். உங்க கையில இரத்தம் வருது. வாங்க நான் உங்கள ஹாஸ்பிடல்ல விட்டுறேன்” என்றான்.
“இல்லங்க பரவாயில்ல. எனக்கு ஒன்னும் இல்ல. உங்க காருக்கு எதுவும் ஆகலத்தான?” என்று கேட்டாள். ஜித்தேஷுக்கு சற்று ஆச்சர்யமாய் இருந்தது. அதே நேரம் இதை எல்லாம் முன்னே இருந்த கண்ணாடி வழியாய் பார்த்தவனுக்கோ, “சரியான ஸ்டுபிட்டா இருப்பா போல. கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்காம, வேஸ்ட் பண்னிட்டு இருக்கா” என்று தான் தோன்றியது.
“அதெல்லாம் ஒன்னும் ஆகலங்க. ரியலி சாரி. நானுமே மிரர் பார்த்து ரிவர்ஸ் எடுத்திருக்கனும்” என்று ஜித்தேஷ் மன்னிப்பு கேட்க, “இட்ஸ் ஒகேங்க” என்று அவள் சொல்லும் போதே காரின் ஹார்னை விடாது அடித்தான் தீரஜ் வர்மன்.
அதில் இப்போது ஜான்வி காரைப் பார்த்தாள். அவளின் முகம் இப்போதுதான் தீரஜுக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் அவனின் முகத்தை அவள் சரியாக கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும், அவளுக்கு யார் என்று தெரியப் போவதில்லை என்பது வேறு கதை.
“சரிங்க நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு ஜான்வி, தன் ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு நகர்ந்தாள்.
அதற்குள், “ஜித்தேஷ்” என்று தீரஜ் சத்தமிட்டு அழைக்க, அவனும் அவனிடம் சென்றான். இப்போது தீரஜோ, டேஷ்போர்டில் இருந்த இரண்டு விஜபி டிக்கெட்டை, எடுத்து அவனிடம் நீட்டினான்.
“என்னடா இது?” என்று ஜித்தேஷ் கேட்க, “இத போயி அந்த பொண்னுகிட்ட கொடு” என்றான்.
அதில் ஜித்தேஷ் புரியாது பார்க்க, “எனக்கு, எங்கையும் கணக்கு வெச்சி பழக்கம் கிடையாது. சோ இத கொடுத்து செட்டில் பன்ணிட்டு வந்து காரை எடு” என்று சொல்லியவன் இப்போது ஏசியை கூட்டி வைத்துவிட்டு, ஸ்போர்ட் நியூஸை கேட்க ஆரம்பித்தான்.
உடனே ஜித்தேஷும் அவளிடம் சென்று, அந்த டிக்கெட்டை நீட்ட, அவளோ குழப்பமாய் அவனைப் பார்த்தாள். “இந்தாங்க இத வெச்சிக்கோங்க. தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு அவனும் சென்றிருந்தான்.
இப்போது கையில் இருந்த அந்த டிக்கெட்டைப் பார்த்தவளுக்கோ, அந்த டிக்கெட்டின் மதிப்பு சுத்தமாய் தெரியவில்லை.
(ஐயோ பாவம். இந்த டிக்கெட் அவகிட்ட என்ன பாடு பட போகுதோ? இல்ல தீரஜ் மறுபடியும் அவள மீட் பண்றதுக்கான சாண்ஸா அமைய போகுதோ? எதுனாலும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமா?..
Ramya Iyer
appa oru vaxhiya namma heroin kan muzhuchutanganu partha hero nu teriyama mutikitangale
Sam Novel reader
achoo jaanu😘 சாந்த சொரூபினி aa irukale