ஒட்டு மொத்த சிட்டியும், ஸ்டேடியத்திலும், டிவியிலும்தான் குடியிருந்தனர். அத்தனைப் பேரும் இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று அத்தனை ஆர்வமாய் கிரிக்கெட் மேட்சை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்படித்தான், ஆர்ப்பாட்டமே இல்லாத அந்த தெருவின் ஓரத்தில், ஓரளவுக்கு நடுத்தர மக்கள் வாழும் இடத்துக்கு மத்தியில், அந்த வீடு இருந்தது. வீடு என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு குட்டி பங்களாதான்.
ஆனால் வீட்டினுள் பெரிதாய் எந்த வித வெட்டி ஆடம்பரம் எல்லாம் கிடையாது. அங்கே இருந்த டிவியிலும், அந்த கிரிக்கெட் மேட்சின் நேரலை ஓடிக் கொண்டிருந்தது. “நாளைக்கு உனக்கு ஸ்கூல் இருக்குத்தான? இன்னும் தூங்காம என்னப் பண்ணிட்டிருக்க” என்று குரல் கொடுத்தார் சாரதா.
“ம்மா, இன்னும் ஒரு பத்து நிமிஷம்மா. ப்ளீஸ்” என்று அவன் நகத்தை கடித்தப்படி டிவியை பார்த்தான்.
“ஸ்கூல் விட்டு வந்ததுல இருந்து டிவிதான். ஹோம் வொர்க் எல்லாம் நீ செய்ற மாதிரியே தெரியல” என்று திட்டினார்.
“ம்மா அக்கா வந்தாத்தான. அவகிட்ட கேட்டு பண்ண முடியும்” என்று அவினாஷ் சொல்ல, “அதான? எத சொன்னாலும், நீ அவெள்ள சொல்லு” என்று திட்டியப்படி, அவரும் வீட்டுக்கு வெளியில் வந்து எட்டிப் பார்த்தார்.
அவருடைய கணவர் வெங்கடேஷ், தோட்டத்தில் நின்று யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தார்.
“அதான? இன்னும் பொண்ணு வீட்டுக்கு வரலையே. என்ன? ஏதுன்னு கொஞ்சம் போயி பாப்போம்னு, யோசிக்கிறதே கிடையாது. இவரு இப்படி இருந்தா. அப்புறம் இவர் பொண்ணு மட்டும் எப்படி இருப்பா?” என்று அவருக்கு கேட்கும்படி சத்தமாகவேத்தான் திட்டினார்.
ஆனால் அவரோ வழக்கம் போல், பிஸ்னஸ் விஷயமாய் போனில் மூழ்கியிருக்க, இப்போது அவரோ, “ஏங்க? இன்னும் தியா வரலைங்க. கொஞ்சம் என்னென்னு பாருங்களேன்” என்றார்.
அதைக் கேட்டதும், “அதெல்லாம் வந்துடுவாம்மா. நீ உள்ள போ. முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்” என்றார் வெங்கடேஷ்.
“நம்ம பொண்ண விட, அந்த போன் கால் முக்கியமா போச்சா? நில்லுங்க காலையில பட்னி போடுறேன்” என்று கோவமாய் சொல்லியவர், இப்போது மீண்டும் வாசலை எட்டிப் பார்த்தார்.
“காலம் வேற கெட்டு கெடக்கு, இவ என்னென்னா, நேரம் காலம் தெரியாம ஆபிஸே கதின்னு இருக்கா” என்று புலம்பியப்படி, “டேய் அவி, அந்த போன்ன எடுத்து அக்காக்கு கால் பண்ணி, எப்போ வறான்னு கேளு” என்றார்.
அவனோ டிவியில் மூழ்கியிருக்க, அவரின் சத்தம் கூட அவன் காதில் விழவில்லை. “இவன்கிட்ட ஒன்னு சொல்றதுக்கு நம்மளே பண்ணிடலாம்” என்று அவர் உள்ளே செல்லும் நேரம் தியாவுடைய ஸ்கூட்டி சத்தம் கேட்டது.
அதில் அவர் சென்று ஹேட்டை திறந்து விட, உள்ளே நுழைந்தவளோ, “இப்படி வாசல்லையே நின்னுட்டு இருக்காதீங்கன்னு, உங்களுக்கு எத்தன தடவ சொல்றது” என்று சொல்லியப்படி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தன்னுடைய கருப்பு கோர்டையும். கேஸ் பைலையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
“ஏண்டி? வயசு புள்ள, நைட் இவ்ளோ நேரமாகியும் வரலன்னா, பயப்பட மாட்டாங்களா?” என்று அவர் சொல்ல, “என்னிக்காச்சு லேட்டாச்சின்னா நீ கவலப்படலாம். நான் எப்பவுமே இந்த நேரத்துக்குத்தான வரேன். அப்புறம் எதுக்கு, உனக்கு கவல” என்று சொல்லியவள், இப்போது நேரே சென்று டிவியை ஆப் செய்தாள்.
“ஐயோ அக்கா. எவ்ளோ சூப்பரான மேட்ச் தெரியுமா? இப்பத்தான் எங்க தல களத்துல இறங்கிருக்காரு. இப்போ போயி ஆப் பண்னிட்ட” என்று கத்தினான்.
“போயி நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து உட்காரு. நான் ரிபிரஸ் ஆகிட்டு வரேன்” என்று அவனை திட்டிவிட்டு அறைக்குள் சென்றாள்.
அவள் சென்றதும், இப்போது மீண்டும் அவன் டிவியைப் போடப் போக, “உன் அக்காவ பத்தி தெரிஞ்சும் டிவிய போடாதடா. அப்புறம் அவ அடிச்சா, கிள்ளுனான்னு என்கிட்ட சொல்ல கூடாது” என்று கூறினார் சாரதா.
“ம்மா. இன்னும் ரெண்டு ஓவர் தான்மா இருக்கு” என்று அவன் கெஞ்சலாய் கேட்க, “சரி சத்தத்த கம்மியா வெச்சி பாரு. ஆனா அவ வந்ததும், ஆப் பண்னிடனும்” என்று சொல்லியவர், அவளுக்கான சாப்பாட்டை டைனிங் டேபிளில் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
அப்போது போன் பேசி விட்டு உள்ளே வந்த வெங்கடேஷோ, “தியா வந்துட்டா போல” என்றார்.
அதில் கணவரை முறைத்தவர், “வீணா என்கிட்ட திட்டு வாங்காதீங்க” என்று சாரதா சொல்ல, “ஆமா ஜான்விய எங்க?” என்று கேட்டார் வெங்கடேஷ்.
“ச் சத்தமா கூப்டாதீங்க. அவ தூங்கிட்டு இருக்கா. இந்த வீட்டுலையே எனக்கு தொல்ல கொடுக்காத ஒரே ஆளு அவ மட்டும் தான். காலையில பத்து மணிக்கு வேலைக்கு கெளம்பி போனோம்மா? ஈவ்னிங் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தோமா? சாப்டோமா, தூங்குனோமான்னு இருக்கா” என்றார் சாரதா.
“லைப்ல அடுத்து என்னப் பண்ணப் போறோம்ன்ற சின்ன தாட் கூட இல்லாம அவ இருக்கா. அவளுக்கு நீங்க ஜால்றா போடுங்க” என்று தங்கையை திட்டியப்படி அங்கு வந்தாள் தியா.
“பொம்பள புள்ளன்னா அப்படிதாண்டி இருக்கனும்” என்று சாரதா சொல்ல, “மொத ஆம்பள புள்ள, பொம்பள புள்ளன்னு பிரிச்சு பேசுறத நிறுத்துங்க. அடுத்து இந்த உலகத்துல என்னெல்லாம் நடக்குதுன்னு, எதுவுமே தெரியாம இருந்தா, வாழ்க்க ரொம்ப கஷ்டமாகிடும்” என்றாள்.
“ச் இப்போ உனக்கு எல்லாம் தெரிஞ்சு நீ என்னத்த பண்ணிட்டு இருக்க? எத்தன வரன் வந்திச்சு? அதுல ஏதாச்சும் ஒன்னுக்கு நீ செரி சொல்லிருந்தா, உனக்கு முடிச்சிட்டு, இன்னேரம் ஜான்விக்குமே கல்யாணத்துக்கு வரன் பாக்க ஆரம்பிச்சிருக்கலாம்” என்றார்.
“ச் இப்போ என்ன? அவளுக்கு கல்யாணம் பண்னனும்னா தாராளமா பண்ணுங்க. அதுக்கு எதுக்கு என்னை போட்டு தொல்ல பண்றீங்க? எனக்கு இந்த கல்யாணம், கமிட்மெண்ட் இதுல எல்லாம் சுத்தமா எந்த இண்ட்ரஸ்ட்ம் கிடையாது” என்று கூறினாள் தியா.
“ஏண்டி? அதுக்குன்னு காலத்துக்கும், இப்படியே இருந்துட முடியுமா?” என்று அவர் கோவப்பட, “அது என் விருப்பம். எனக்கு எப்படி தோணுதோ? அப்படித்தான் இருப்பேன். இதுல தலையிடுறதுக்கான ரைட்ஸ் யாருக்கும் கிடையாது” என்று சொல்லியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
(என்னடா இது? இந்தப்புள்ள இவ்ளோ சூப்பரா பேசுதே. இவதான் நம்ம ஹீரோயினான்னு நீங்க கேட்டா. அதுதான் கிடையாது. இவங்க நம்ம ஹீரோயினோட அக்கா. ஆனா, இவங்களாலத்தான் நம்ம கதையிலையே ஒரு மிகப்பெரிய திருப்பம் வரப் போகுது. அதனாலத்தான் இவங்களுக்கு இவ்வளவு டீடெய்லான இண்ட்ரோ கொடுத்திருக்கேன்)
“உன்னை உங்கப்பா இதுக்குத்தான் சட்டம் படிக்க வெச்சாரா? வீட்ல உட்கார்ந்து லா பேசிட்டு இருக்க, ஏங்க? உங்க பொண்னு பேசுனத கேக்குறீங்களா? இல்லையா?” என்று கேட்டார்.
அதில் அவரோ, மகளுக்கும், மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொள்ள விருப்பமின்றி, அமைதியாய் மகனுடன் சேர்ந்து அந்த கிரிக்கெட் மேட்சை பார்க்க ஆரம்பித்தார்.
அங்கே தீரஜின் வருகையில் மொத்த ஸ்டேடியமும், “தீரஜ் தீரஜ்” என்று கூக்குரலிட்டனர்.
அந்த அமோக வரவேற்புக்கு மத்தியில் நடந்து வந்தவன், இப்போது கேப்டனிடம் சென்று, “உனக்கு இன்னும் எத்தன பால் வேணும்?” என்று நக்கலாய் கேட்டான்.
அதில் பல்லைக் கடித்தவனோ, “கொஞ்சம் கவனமா” என்று ஏதோ சொல்ல வந்தான். அதில் அவனோ, “இவ்வளவு நேரம் அதத்தான நீ பண்னிட்டு இருந்த” என்று அசராது சொல்லிவிட்டு அவனுக்கான இடத்தில் சென்று நின்றான்.
அவன் சாதாரணமாகத்தான் நின்றான். ஆனால் இப்போது பந்து போட வந்த பவுளருக்குததன் அத்தனைப் பதட்டம். கொஞ்சம் விட்டால், பால்லை நழுவவே விட்டிருப்பான்.
அதில் நக்கலாய் உதட்டை சுழித்தவன், இப்போது வேண்டுமென்றே முதல் இரண்டு பால்லை விளையாடாமல், கேப்டனையும், கோச்சையும் கடுப்பேத்தினான்.
“என்னடா? பவர் ஹிட்டர். அது இதுன்னு சொன்னீங்க. இவர் என்னென்னா டொக் வெச்சிட்டு இருக்காரு” என்று கிண்டலாய் கூறினாள் ஒருவள்.
“ஹே, அவர் விளையாண்ட மேட்ச எல்லாம் நீ பாத்தது இல்ல. அதான் இப்படி சொல்ற. இன்னும் எத்தன பால் இருக்கு?” என்று கேட்டான் ஒருவன்.
“இன்னும் பத்து பால் இருக்கு” என்று அவள் சொல்ல, “இன்னும் எத்தன ரன் வேணும்?” என்று கேட்க, “ச் 51 வேணும்” என்றாள்.
“இப்போ பாரு. ஒரு பால் மீதி இருக்கிறப்பையே, இந்த மேட்ச முடிச்சிடுவாரு” என்று அவன் சொல்ல, “அதெப்டிடா?” என்று கேட்டு முடிக்கும் முன்னே, அவன் அடித்த பால் சிக்ஸர் சென்றிருந்தது.
அதில். அத்தனைப் பேரும் கை தட்ட ஆரம்பிக்க, அடுத்தடுத்து அவன் சொல்லியது போல், அத்தனை பந்தும் சிக்ஸ்ர் தான் சென்றது.
அதில் இத்தனை நேரம் கேலியாய் பேசியவள், வாயைத் திறந்திருக்க, அத்தனைப் பேருக்கும் பந்து எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை.
வொய்ட் யாக்கர் போட்டாவது, சில ரன்களை குறைக்கலாம் என்று பவுளரும் என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால், அவன் எந்தப் பக்கம் போட்டாலும், பந்து பறந்து சிக்சஸருக்குத்தான் சென்றது.
அசாத்திய ஸ்கோர் தான். 15 பந்து 51 ரன் என்று இருந்த இடத்தில் இப்போது இரண்டு பால் மூன்று ரன்கள் என்று வந்திருந்தது.
இப்போது பவுளரின் பக்கம் அத்தனை ப்ரஷரும் சென்றிருந்தது. அவனுக்கு வியர்த்து வடிய, சமீரும் கூட, இந்த பந்துடன் விளையாட்டு முடிந்து விடும் என்றுதான் அசால்டாக நின்று கொண்டிருந்தான்.
அவனின் முகத்தில் தெரிந்த அந்த நம்பிக்கை, இப்போது தீரஜை உசுப்பேத்தியிருக்க, “நீ இவ்ளோ கூலா இருக்க கூடாதே” என்று தனக்குள் யோசித்தவன், இப்போது வேண்டுமென்றே, அந்த பந்தை அடிக்காது தட்டிவிட்டான்.
பந்து நேராக பீல்டரை நோக்கி சென்றிருக்க, “யூ சிட்” என்று சமீர் கத்தும் போதே, அவன் ரன் எடுக்க முயற்சிக்க, அதில் அதிர்ந்து அவன் அதன் பின் விழுந்தடித்து ஓட, ஒரு ரன்னுடன் நிறுத்தாது, அவனோ இரண்டு ரன் ஓடி முடித்து, கூலாக நின்றிருந்தான்.
அங்கே கேட்சை தவற விட்டிருக்க, அந்தப் பந்து இப்போது போருக்கு சென்றிருந்தது.
என்ன நடந்தது என்று யூகிக்கும் முன்பே, அவனுடைய டீம் வெற்றி பெற்றதாய் அறிவித்திருக்க, தீரஜோ அத்தனை நக்கலாய், சமீரைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
“சரியான சேடிஸ்ட்” என்று சொல்லிய சமீருக்கு, கீழே விழுந்ததில் கையில் சின்ன காயம் ஏற்பட்டிருந்தது, அங்கே தீரஜிடம் கைக் கொடுக்க, எதிரணி பிளேயர் வர. அவனோ அவர்களை வழக்கம் போல் அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சென்றான்.
கோச்சிற்கோ, எப்படியோ அவன் இந்த மேட்சை ஜெயித்துக் கொடுத்தானே? அதுவே போதும் என்ற மன நிலைதான்.
“வாவ் நம்ம ஜெயிச்சிட்டோம்” என்று அவினாஷ் கத்திய கத்தலில், அங்கே உறங்கி கொண்டிருந்த ஜான்வியோ, “எவென் ஜெயிச்சா எனக்கு என்னடா? என் தூக்கத்த ஏண்டா கெடுக்குறீங்க?” என்று பாதி உறக்கத்தில் எழுந்து, சொல்லிவிட்டு மீண்டும் பெட்ஷீட்டை இழுத்து மூடி தூங்க ஆரம்பித்தாள்.
அவ தான் நம்ம ஹீரோயின். இந்த உலகத்துல அவளுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். அது ஒன்னு தூக்கம், இன்னொன்னு சாப்பாடு. இதத்தாண்டி அவளுக்கு ஒரு விஷயம் தெரியும் அப்படின்னா, அது அவ பாக்குற வேலை. ஒரு கார்பரேட் கம்பெனியில, கிராபிக் டிசைனரா ஒர்க் பண்ணிட்டு இருக்கா. இன்னும் இவள பத்தி சொல்லனும்னா? அவ யாருன்னு அவளுக்கே தெரியாது. ரொம்ப அராத்தும் கிடையாது. ரொம்ப அமைதியும் கிடையாது. இவ சேட்டைப் பண்ணுவாளா? அப்படின்னா அதுவும் கிடையாது. ஆனா பிரச்சன நடக்குற இடத்துல அவ இருப்பா. சில சமயம் மத்தவங்க பிரச்சனையில இவ மாட்டிப்பா. அதுக்காக அவ கவலைப்படவும் மாட்டா. அதே நேரம் அவளுக்கு அத சமாளிச்சு வெளிய வரவும் தெரியாது. சிம்பிளா சொல்லனும்னா, அவ ஒரு ரேர் பீஸ். பிரச்சன என்னென்னா, இந்த ரேர் பீஸ் எப்பவுமே ரொம்ப ரேரான விஷயத்த மட்டும் தான் செய்யும்.
(ஆக்சிவலி என் ரைட்டிங் ஹிஸ்டரில கூட, இவ்ளோ ரேரான ஹீரோயின் எண்ட்ரிய, இதுவரைக்கும் நான் கொடுத்ததே இல்லன்னா பாருங்களேன். தூங்குறதுதான் நம்ம ஹீரோயினோட எண்ட்ரியே. அப்போ, மேடமோட மத்த ஆக்டிவிட்டீஸ்லாம் எப்படி இருக்கும்னு நீங்களே யோசிச்சிக்கோங்க. சரி இந்த ஸ்லீப்பிங் பியூட்டி, அந்த டீமேன்ன எப்படி மீட் பண்ணப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, நம்ம ஹீரோயின பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமா?..
Arockia Ammu
actually unga kadhaiyoda ella Heroine um unic piece than athum vera level impressive charector ah than iruppanga so ivangalum epdi irupanganu pakkalm 👍
Ayesha Shahul
அந்த டிமேன்க்கு ஜோடி இந்த லாயர் மேடம்னு நான் கூட ஒரு நிமிஷம் நம்பிட்டேன் 🙂
உங்கள ஸ்டோரி வரலாற்றில் நீங்க இப்படி ஒரு ஹீரோயின் என்றி கொடுத்தது இல்ல சிஸ்🤭
சூப்பர் 😍😍😍
Deepa K
she is very interesting and i love her character