⚠️ காப்புரிமை எச்சரிக்கை
என்னுடைய இந்தக் கதை மற்றும் இதில் இடம்பெறும் அனைத்து அத்தியாயங்கள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி முழுமையாக பாதுகாக்கப்பட்டவை.
இந்தக் கதையை முழுமையாகவோ, பகுதியாகவோ நகலெடுக்கவும், காப்பி செய்யவும், மறுபதிப்பு செய்யவும், மாற்றி வெளியிடவும் அல்லது எந்த வடிவிலும் அனுமதியின்றி பயன்படுத்தவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறுபவர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சூரியன் தன் வேலையை முடித்து விட்டு, மேற்கு நோக்கி மறைந்துக் கொண்டிருக்க, தங்களுக்கு வேற வேலையே இல்லை என்பது போல், கூட்டம் கூட்டமாய் மக்கள், பைக்கிலும், காரிலும் அந்த சாலையில் குவிந்துக் கொண்டிருந்தனர்.
பாதி பேருக்கு அந்த ட்ராபிக்கில் காத்திருப்பதற்கு கூட பொறுமையின்றி, வந்திருந்த வாகனத்தை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்.
“இன்னிக்கு நம்ம தான் தட்டி தூக்குறோம்” என்று ஒருவருக்கொருவர் உற்சாகமாய் சொல்லியப்படி சிலர் இப்போதே, தங்களுக்குள் போட்டி போட ஆரம்பித்தனர்.
“ஹே சீக்கிரமா வாங்க. அப்புறம் இடம் கிடைக்காம போயிட போகுது” என்று சிலர் அவசரப்படுத்திக் கொண்டிருக்க, அந்த மொத்த சிட்டியுமே, அந்த ஸ்டேடியத்திற்குள் தான் சென்று கொண்டிருந்தனர்.
இதில் அந்த கூட்டங்களுக்கு இடையே, ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மக்களுக்கு இடையூறு வேறு செய்துக் கொண்டிருந்தனர்.
ஸ்டேடியத்துக்கு வெளியே, திருவிழா கடைகள் போல், அத்தனை கடைகளும் போடப்பட்டிருந்தது. அன்றைய தின டீம்களுடைய ஜெர்சிகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில், அந்த கிரிக்கெட் ஸ்டேடியம், பல விளையாட்டு வீரர்களை வரவேற்க காத்துக் கொண்டிருந்தனர். அந்த ஸ்டேடியத்திற்குள் இருந்த ரசிகர்களும், தங்களுக்கு பிடித்த அணிக்கு, தங்கள் ஆதரவை தெரிவிக்க குவிந்திருந்தனர்.
“இன்னிக்கு பாரு என் தல சதம் அடிக்கிறாரு” என்று ஒருவள் சொல்ல, “ஹே, ஹே, அதுக்கு உன் ஆளு முதல்ல ஓபனிங் இறங்கனும்டா” என்றான் இன்னொருவன்.
“எதுக்கு? பர்ஸ்டே இறங்கிட்டா, அப்புறம் மிச்சம் இருக்கிறவங்களாம் விளையாட வேண்டாமா?” என்று நக்கலாய் கூறினாள் அவள்.
“அது சரி” என்று அவன் சொல்ல, அதற்குள், “ஹே, இன்னிக்கு நம்ம கிங்குதான் ஓபனிங் இறங்குறாரு. அடுத்தடுத்து அடிக்கப் போற அடியில. ஆப்போனண்ட் டீம் கதற போகுது” என்ற இன்னொரு கூட்டம் குரல் கொடுத்தது.
ஒரு வழியாய் இரண்டு அணியின் கேப்டன்களும், டாஸை போடுவதற்காக கிரவுண்ட்க்கு வந்திருந்தனர். சுற்றி இருந்த ரசிகர்களுக்கு கை காட்டியப்படி இருவரும் ஒருவருக்கொருவர் கைக் கொடுத்துக் கொண்டனர்.
“இன்னிக்கு டாஸ் ஜெயிச்சாலே, பாதி மேட்ச் ஜெயிச்ச மாதிரி. எப்படியாச்சும் நம்ம ஜெயிச்சிடனும்” என்று சிலர் கண்ணை மூடி, கை கூப்பி கடவுளை வேண்டினர்.
“ஹோம் கிரவுண்ட்ல மேட்ச் வெச்சாலே நமக்கு ராசி இருக்காது. இன்னிக்கு எப்படியாச்சும், அந்த நேம்ம நம்ம, இல்லன்னு ஆக்கனும்” என்று இன்னும் சிலர் சபதம் எடுத்துக் கொண்டனர்.
டாஸ் வென்ற அணி, பேட்டிங்கை சூஸ் செய்திருந்தனர். அதைக் கேட்டவுடனே, எதிரணிக்கு புன்னகை ததும்பியது.
“ஹே இவருக்கு என்னாச்சு? இப்ப எதுக்கு பேட்டிங் சூஸ் பண்ணாரு” என்று ஒருத்தி கேட்க, “இது ஒன்னும் பவுளிங் பிட்ச் கிடையாதே. அப்புறம் எதுக்கு நீ கவலப்படுற?” என்று கேட்டாள்.
“ஹே மறந்துட்டீயா? அந்த டீம்கிட்ட ஹிட் பேட்ஸ்மேன் இருக்காரு” என்று கூறினான் அவன்.
“சோ வாட்? அது எல்லா டீம்லையும் இருக்கத்தான் செய்வாங்க. நம்ம டீம்ல கூடதான் இருக்காங்க” என்றாள்.
“ச் இதுக்குத்தான் மேட்ச் பாக்காதவள எல்லாம் ஸ்டேடியத்துக்கு கூட்டிட்டு வர கூடாதுன்னு சொல்றது” என்றான் இன்னொருவன். “ஹே ஹே, நானும் மேட்ச்லாம் பாத்திருக்கேன்” என்றாள் அவள்.
“என்ன மேட்ச் பார்த்த நீ? தீரஜ் பாய் பத்தி கேள்வி பட்டிருக்கீயா? ஒரு ஓவர்ல மேட்ச முடிச்சிட்டு போயிட்டே இருப்பாரு” என்றான்.
“பட் அவர் இஞ்சூரில இருக்குறதாதான சொன்னாங்க” என்று இன்னொருவள் கேட்டாள்.
“அவருக்கு இஞ்சூரி ஆகுறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. அவர் விளையாடனும்னு முடிவு பண்ணிட்டா, என்ன நடந்தாலும் அவர் விளையாடுவாரு. அவர் விளையாண்டா. இன்னிக்கு நம்ம அவுட்” என்றான் அவன்.
அவன் மட்டும் அல்ல, அங்கிருந்த அத்தனைப் பேருக்குமே அது தெரியும். இதுவரை பெரிய ஸ்கோர் என்று அவன் அடித்து வைத்திருக்கவில்லை. ஆனால் அவன் விளையாடிய பந்துகளில் எம்பது பர்ஷண்டேஜ் சிக்ஸ் மட்டுமே அடித்திருக்கிறான். அவன் பெயர் தீரஜ் வர்மன்.
நாட்டின் வணிகத்தில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும், பிரபல வர்மன் க்ரூப் ஆப் கம்பெனியின் மூத்த வாரிசு. அவனின் குடும்பத்துக்கென்று பல தொழிகள் இருக்க, அவனோ, விளையாட்டை தன்னுடைய அடையாளமாய் ஆக்கிக் கொண்டவன். ஆம் பிரபல கிரிக்கெட் வீரன். ஆனால் திமிர் பிடித்தவன். விளையாட்டை கூட விளையாட்டாய் பார்க்காத வீம்புக்காரன். நினைத்ததை சாதித்துக் காட்டுபவனுக்கு, பிடித்தது கிடைக்காவிட்டால், அவனின் அசுர உருவத்தை அத்தனைப் பேரும் பார்த்தாக வேண்டும். அவனே இந்த கதையின் நாயகன்.
ஒரு வழியாய் விளையாட்டு ஆரம்பித்திருக்க, “என்னடா? ரொம்ப ஓவரா பில்டப் கொடுத்தீங்க. ஆனா உங்க ஆளு, இன்னிக்கு விளையாடல போல” என்று நக்கலாய் கூறினான் அவன்.
“ஹேய் இம்பேக்ட் ப்ளேயர் ஆப்சன் இருக்குன்றத மறந்துடாதீங்க. இன்னிக்கு நீங்க ஜெயிக்கனும்னா, எங்க ஆளு இறங்க கூடாதுன்னு வேண்டிக்கோங்க” என்று நக்கலாய் கூறினான் இன்னொருவன்.
விளையாட்டு விறுவிறுப்பாய் ஆரம்பித்திருக்க, பேட்டிங் எடுத்த டீம் நன்றாகவே விளையாடியது. பவுளிங் டீமும் தங்களால் முடிந்த மட்டும் அவர்களை தடுக்க முயற்சித்தனர். ஆனால் என்ன முயன்றும் ஸ்கோர், 300 ஐ தொட்டிருந்தது.
அசாத்தியமான ஸ்கோர் தான். ஆனாலும், தளராது அவர்கள் இரண்டாவது பேட்டிங் விளையாட ஆரம்பித்தனர்.
அங்கே அந்த அணியின் கோச்சோ, “புரிஞ்சிக்கோ தீரஜ். இந்த டைம் ஆச்சும், நீ மூணாவதா இறங்கு. நம்ம டீம் ஜெயிக்கனும்னா அதுக்கு இருக்கிற ஒரே ஆப்சன் இதுதான்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவனோ, அதை சற்றும் காதில் வாங்காது, கால் மேல் கால் போட்டு அமர்ந்தப்படி எனர்ஜி ட்ரிங்கை குடித்துக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் தெரிந்த அந்த அலட்சியமே, நீ சொல்லி அதை நான் செய்யப் போவதில்லை என்பதை சொல்லியது.
அப்படி எல்லாம் அவனிடம் பேசி, ஜெயிக்க முடியாது. இருந்தும் அவர், “இந்த மேட்ச நம்ம மிஸ் பண்ணிட்டா, அப்புறம் நம்மளால குவாலிபை கூட ஆக முடியாது” என்று கூறினான்.
“அது என் ப்ரச்சன கிடையாது” என்று அதே அலட்சியமான குரல் தான் அவனிடம் இருந்து வந்தது. அதற்கு மேல் அங்கு நிற்பது வீண் என்பது புரிந்து, அவரும் அங்கிருந்து வெளியில் வந்தார்.
அவர் வெளியில் வருவதற்கும், அவர்களுடைய அணியில் ஒரு விக்கெட் விழுவதற்கும் சரியாக இருந்தது. அதில் இப்போது அந்த அணியின் நம்பிக்கை வீரரான, விக்ராந்த் பேட்டை எடுத்துக் கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தான்.
அவனைப் பார்த்ததும், அவனின் ரசிகர்கள் எல்லாம் கை தட்டி ஆர்ப்பாட்டம் செய்ய, அவனோ, அவர்களுக்கு சிறு கையசைப்பு காட்டிவிட்டு, அவனுக்கான இடத்தில் சென்று நின்றான்.
முதல் பந்தே, போர் அடித்திருந்தான். வழக்கமாய் அவனுடைய முதல் பந்து சிக்ஸாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அணியை காக்க வேண்டிய பொறுப்பு அவனின் தலை மீது இருக்க, சற்று பார்த்து ஆடினான். அவன் எவ்வளவு தூரம் நிக்கிறானோ, அந்தளவுக்கு அவர்கள் ஜெயிக்க முடியும். அதனால், அடுத்தடுத்துமே மிகவும் கவனமாகத்தான் விளையாடினான்.
“என்னடா இது? இப்படி டொக் வெச்சிட்டு இருக்காங்க” என்று ஒருத்தி சொல்ல, “ஹேய், ஏற்கனவே ஒரு விக்கெட் போயிருச்சி. இப்போ போயி, ரிஸ்க் எடுக்க முடியுமா? அதான் விக்ராந்த் இருக்காருல” என்றான் இன்னொருவன்.
இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாய், விக்ராந்த அடிக்க ஆரம்பிக்கும் போது, இன்னொரு விக்கெட் விழுந்திருந்தது. அதில், இப்போது அவன் மீண்டும் கவனமாக ஆட ஆரம்பித்தான்.
அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் ஓரளவுக்கு தங்களால் முடிந்த அளவு ரன்ஸை எடுத்துக் கொண்டிருக்க, 200ஐ தொடும் போதே, நான்கு விக்கெட் விழுந்திருந்தது.
விக்ராந்த் மட்டும் தான் முடிந்த மட்டும், தாக்குப் பிடித்தான். அடுத்ததாக அந்த அணியின் கேப்டன் சமீர் களத்தில் இறங்கினான். வந்தவன் நேரே சென்று விக்ராந்திடம், ஏதோ சொல்ல உடனே அவனும், அடுத்தடுத்த பால்களை எல்லாம் இறங்கி ஆட ஆரம்பித்தான்.
அவனின் அதிரடியான ஆட்டத்தில், அடுத்த இரண்டு ஓவர்களில், 230 ஐ தொட்டிருந்தனர்.
இன்னும் மீதம் நான்கு ஓவர் இருந்தது. அவன் எப்படியாவது தன்னுடைய சதத்தை தொட்டு விட நினைக்க, 97-ல் விக்ராந்த்-ம் அவுட்டாகியிருந்தான்.
அதில் ஒட்டு மொத்த கிரவுண்டும் அவனுக்காக வருத்தம் தெரிவிக்க, இப்போது கோச்சோ, மீண்டும் தீரஜிடம் வந்து நின்றார்.
“அட்லீஸ்ட், இப்பவாச்சும் நீ இறங்கு” என்று கூறினார். அவனோ, இப்போது மணியைப் பார்த்துவிட்டு, “இன்னும் டிவண்டி மினிட்ஸ் தான் நான் இங்க இருப்பேன்” என்றான்.
அவனின் வார்த்தையில் இவருக்கோ பிபி தாறுமாறாய் கூடியது. ஐந்து விக்கெட் விழுந்திருக்க, இவனோ, எட்டாவது தான் இறங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.
இப்போது ஆறாவது ப்ளேயரும், தன்னால் முடிந்த மட்டும் அடிக்க முயற்சிக்க, லாஸ்ட் மினிட் ப்ரஷரை ஹேண்டில் செய்ய முடியாது, பந்தை எல்லாம் அடிக்காமல் விட்டுக் கொண்டிருந்தான்.
பந்துகளின் என்ணிக்கை ஒரு பக்கம் குறைந்துக் கொண்டிருக்க, தீரஜ் கொடுத்த டைமும் குறைந்திருக்க, அந்த அணியின் கோச்சோ, நெஞ்சை பிடித்தப்படி சில நொடிகள் இருக்கையில் அமர்ந்து விட்டார்.
ஸ்கோர் போர்டில் ஸ்கோர் மட்டும் கூடவே இல்லை. எப்படியோ போராடி, 250 க்கு வந்திருந்தனர். இன்னும் 51 ரன் எடுத்தாக வேண்டும். மீதமிருந்த பந்தின் எண்ணிக்கையோ, 15. அடுத்த விக்கெட்டும் விழுந்திருந்தது. ஏழாவது ப்ளேயர் தன் பேட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப, கோச் அவனை தடுத்து நிறுத்தினார்.
“என்னாச்சு கோச்?” என்று அவன் கேட்க, “பர்ஸ்ட் பால்லையே அவுட்டாகிட்டு வந்துடு” என்றார். அதைக் கேட்டு அவனுக்கோ அதிர்ச்சி, “இல்ல கோச். என்னால முடியும்” என்று அவன் சொல்ல, “நீ என்ன ட்ரை பண்ணாலும், உன்னால பதினஞ்சு பால்ல பிப்டி அடிக்க முடியாது. இப்போதைக்கு தீரஜ் விளையாடியே ஆகனும்” என்றார்.
அவர் இதை சொல்லக் கூடாதுதான். ஆனால், இப்போது இவர்களுடைய டீம் குவாலிபை ஆக, அவருக்கு வேர வழி தெரியவில்லை.
அவன் ஒரு கிறுக்கன். சொன்ன நேரத்தை தாண்டிவிட்டால், விளையாடாமல் அப்படியே சென்றுவிடுவான். சில சமயம் பாதி மேட்சில் கூட வேண்டுமென்றே அவுட்டாகிவிட்டு வெளியேறிவிடுவான்.
“சரி கோச்” என்று சொல்லி சென்ற ப்ளேயரும், அவர் சொல்லியது போலவே முதல் பாலில் விக்கெட்டை கொடுத்து விட்டு வெளியில் வந்திருந்தான். அதில் சமீருக்கு சிறு எரிச்சல் உருவானது. ஏனெனில் அவன் தான் கேப்டன். ஆனால், அந்த டீமில். அவன் விஷயத்தில், அவனால் எதையுமே செய்திட முடியாது.
இப்போது ஒட்டு மொத்த அரங்கமுமே, அத்தனை அமைதியாய் இருந்தது. ஆம் களத்தில் இறங்கப் போறது தீரஜ் வர்மன் என்ற செய்திதான் அங்கிருந்த போர்டில் ஒளிபரப்பாகியது.
இம்பேக்ட் ப்ளேயேர் என்பதற்கான சிக்னலை, அம்பயர் கை தூக்கி காமிக்க, அனைவருடைய கண்களும், இப்போது தீரஜ் வரும் வழியைப் பார்த்தது.
அணிய கொடுத்த ஹெல்மெட்டை, வேண்டுமென்றே வாங்க மறுத்துவிட்டு, கையில் பேட்டை சுழற்றியப்படி, கிரவுண்டிற்குள் அடி எடுத்து வைத்தான். அவன் அடி எடுத்து வைக்கும் வரையிலும் கூட, அந்த ஸ்டேடியத்தில் அப்படி ஒரு அமைதி.
அதில் சட்டென்று அடுத்த அடி எடுத்து வைக்காது, கிரவுடை திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவுத்தான், இப்போது ஒட்டு மொத்த ஸ்டேடியமும், “தீரஜ். தீரஜ். தீரஜ்” என்று ஆர்பரிக்க ஆரம்பித்திருந்தனர்.
அதே நேரம், அங்கே நம் நாயகியோ, யார் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நான் ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கிவிடுவேன் என்பது போல், நன்றாக சாப்பிட்டு விட்டு, குப்புற அடித்து படுத்திருந்தாள்.
(ரைட்டு, இந்த ஹாட் டீமேனுக்கும், நம்ம ஸ்லீப்பிங் ப்ரின்சஸுக்கும், நடுவுல என்னெல்லாம் நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த கதையோட பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. நாளைக்கு நம்ம ஹீரோயின் இண்ட்ரோவ பார்த்திடலாம். அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)
தீருமோ…
Ayesha Shahul
nice interesting
Saranya Dillibabu
different story ah erukum polayae..ennovo erundhalum kandipa unga story ah lead panna poradhu heroine dhana..super
Deepa K
nice part
dheeran character is interesting