ஆதியின் கேள்விக்கு “நான் அதப்பத்திலாம் யோசிக்கிறது இல்ல ஆதி. என்ன நடக்கும்னு இருக்கோ அதுதான் நடக்கும்” என்று ஸ்ரீ சொல்ல, “யோசிக்கிறது இல்லையா? இல்ல அதெல்லாம் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறீயா?” என்று கேட்டான்.
அதில் ஒரு நொடி அவன் கேள்வியில் அதிர்ந்து பின் மிக சாதாரணமாக, “நான் அப்படி நினைச்சிருந்தா நீங்க கேட்டதுக்கு என்னோட பதிலே அதுவாத்தான் இருந்திருக்கும்” என்றாள்.
“ம், எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சதே இந்த ஸ்ட்ரைட் பார்வேட் பிகேவியர் தான்” என்று அவன் சொல்ல, அவளோ, “இத கேட்கிறதுக்காகத்தான் என்னை இங்க வர சொன்னீங்கன்னு நீங்க சொன்னா, நானும் இன்னும் ஸ்ட்ரைட் பார்வார்டா என்னோட டைம்ம வேஸ்ட் பண்றீங்கன்னு சொல்லுவேன்” என்றாள்.
“ஓ எம் ஜி, எந்த பால்ல போட்டாலும் திருப்பி அடிக்கிறாளே. ஐயோ ஆதி, இவள நீ ஒகே சொல்ல வச்சி, இத உங்கப்பாகிட்ட சொல்லி, அவர் சம்மதிச்சி, அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்று மனதினuள் புலம்பி முடித்து நிமிர்ந்து பார்க்க, தியா ஸ்ரீயின் அருகில் அமர்ந்திருந்தாள்.
“என்ன டைரக்டர் சார், பேசி முடிச்சிட்டீங்களா? இல்ல நான் வந்தாதான் பேசுவேன்னு ஏதும் வேண்டுதல் வச்சிருக்கீங்களா?” என்று தியா நக்கலாக கேட்க, அதற்குள் ஸ்ரீயின் மொபைல் அடிக்க ஆரம்பித்தது.
“ஒரு நிமிஷம்” என்று ஆதியிடம் சொல்லியவள் சற்று தள்ளி சென்று பேச சென்றாள்.
அவள் சென்றதும் “என்ன சார்? எங்க மேடம் ஒகே சொல்லிட்டாங்களா? இல்ல இன்னும் நீங்க இதயம் முரளி மாதிரித்தான் சுத்திட்டு இருக்கீங்களா?” என்று தியா கேட்க, “உன்னை” என்று அவன் அவளை முறைத்தான்.
“என்ன சார்? இப்ப எதுக்கு முறைக்கிறீங்க? உண்மைய சொல்லனும்னா நீங்க எனக்கு தேங்க்ஸ் தான் சொல்லனும். நான் மட்டும் வராம இருந்திருந்தா இந்நேரம் மேடம் கோவிச்சிட்டு கிளம்பிருப்பாங்க. முன்னபின்ன யார்டையும் லவ் சொன்னது இல்லையா? என்ன டைரக்டர் நீங்க! படத்துல மட்டும் தான் ரொமான்டிக் சீன் எடுக்க தெரியுமா? ரியல் லைப்ல ஜீரோ போல? சுமாரான பொண்ணுக்கு புரோபோஸ் பண்ணவே அவ்வளவு பிளான் பண்ணனும், இதுல எங்க ஹீரோயின கரெக்ட் பண்ண இப்படி ஒரு காப்பி போதுமா என்ன? நல்லா வித்தியாசமா யோசிங்க சார். பார்த்த உடனே மேடம் இம்பிரஸ் ஆகுற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க, அப்புறம் வந்து லவ்வ சொல்லலாம். சும்மா எப்ப பார்த்தாலும் படத்தோட கதைக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறத விட்டுட்டு உங்க லவ் ஸ்டோரிக்கு என்ன பண்ணலாம்னு கிரியேட்டிவா யோசிங்க. இல்லன்னா ஹீரோ மாதிரி ஒருத்தர் வந்து எங்க ஹீரோயின தூக்கிட்டு போயிருவாங்க, பார்த்துக்கோங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் அங்கு வந்த ஸ்ரீ, “சாரி ஆதி, நாங்க இப்ப உடனே கிளம்பனும்” என்று தியாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
“எனக்கு வர்றது எல்லாமே ஏன் எனக்கு சாபம் கொடுத்திட்டு போகுதுக? யார் வந்தாலும் சரி, நித்தி எனக்குத்தான், எனக்கு மட்டும்தான்” என்று ஆதி சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம்,
“எனக்குதான் சொந்தம்” என்று ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் நின்று கத்திக் கொண்டிருந்தான் நம் தீரன்.
அவன் கத்திய கத்தலில் அந்த ஷாப் ஓனரே ஓடிவந்து, “சார்” என்று பணிவுடன் அவனிடம் கேட்க, “எனக்கு இது வேணும்” என்று ஒரு பொம்மைக்கு போட்டிருந்த பிராக்கைக் கைநீட்டினான்.
அந்த சேல்ஸ் மேனோ அதை ஏற்கனவே ஒரு தம்பதியர் அவர்களின் குழந்தைக்காக செலக்ட் செய்து விட்டனர் என்று விளக்கமளித்தார்.
அதற்கு அந்த கடை ஓனரோ, “ஏய் அவர் யார் தெரியுமா? அவர்கிட்டப் போயி என்ன பேசிட்டு இருக்க, ஒழுங்கா அவர் கேட்டது பேக் பண்ணிக் கொடு” என்றார்.
உடனே அவனும் “சரி சார்” என்று பேக் செய்ய, இங்கே வாசுவுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
“இவரு எதுக்கு இந்த ட்ரஸ வாங்குறாரு” என்று தனக்குள்ளே கேட்டான். ஏனெனில், இதுவரை அவன் யாருக்குமே ஒரு பொருள் வாங்கிக் கொடுத்ததே கிடையாது. அவன் பின்னால் சுற்றும் பெண்களுக்கும் சரி, அவன் கீழே வேலைப்பார்க்கும் வேலையாட்களுக்கும் சரி, பணம் வேண்டுமென்றால் தூக்கிக் கொடுப்பான் அவ்வளவுத்தான். ஆனால் இது? என்று புரியாமல் அப்படியே நின்றான்.
அதற்குள் அந்த சேல்ஸ் மேன் பில் போட்டு அவனிடம் நீட்ட, பே செய்துவிட்டு அவன் கொடுத்த கவரை வாங்கிக் கொண்டு தீரனின் பின்னால் சென்றான் வாசு.
நேராக காரில் ஏறியவனுக்கு இப்போதும் கோவம் சற்றும் குறையவில்லை.
“அது எப்படி நான் ஒரு பொருள கேட்டும், அவன் கொடுக்க முடியாதுன்னு சொல்லுவான்?” என்று கொலை வெறியில் காரை ஸ்டார்ட் செய்ய, வாசு வேகமாக தன் சீட் பெல்டை மாட்டிக் கொண்டான்.
“சார், இது யாருக்கு?” என்று வாசு கேட்க, “ஏன், சொன்னாதான் அத நீ கையில வச்சிருப்பியா?” என்று அவன் முறைக்க, அதன் பின் மறு பேச்சு அவன் பேசவே இல்லை.
நேராக இருவரும், அவர்களுடைய சூட்டிங்கிற்கு சென்றான். அது ஒரு அழகிய பூங்கா. அமைதிக்கு பேர் போன அந்த இடம் இவன் வரவால் ஒரு சிறு பூகம்பத்தையே தாங்கிக் கொண்டிருந்தது.
அந்த அளவுக்கு ரசிகர்களின் கூட்டம் அந்த இடத்தை சூழ்ந்திருந்தனர். அதற்கு மேல் பல தடுப்புகள் போடப்பட்டு, அது பூங்கா மாதிரி அல்ல, ஏதோ சர்க்கஸ் கூடாரம் போல் இருந்தது. அதற்கும் மேல் அங்கிருந்தவர்கள், “தீரா, தலைவா” என்று போட்ட சத்தத்தில் அந்த டைரக்டர்க்கு காதில் ரத்தம் வராத குறைத்தான்.
பொதுவாக இந்தக் காரணத்தினால் தான் அவனின் பெரும்பாலான சூட்டிங் வெளி நாடுகளில் வைத்தே எடுக்கப்படும். ஆனால் இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்த பூங்காவில் தான் எடுக்க வேண்டும் என்பது தான் கதையே. அதனால் தான் இவ்வளவு சிரமங்களுக்கு நடுவே அதற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது.
இவன் காரை விட்டு இறங்கியதுமே ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் தீரனின் கவனம் முழுவதும், அந்த ஷாப்பிங் மாலிலேயே இருக்க, “இன்னிக்கு இவன் கோவத்துக்கு எத்தன பேர் பலியாக போறாங்களோ!” என்று மனதிற்குள் நினைத்தான் வாசு.
அதற்கு ஏற்றார் போலே முதலில் அந்த காஸ்டியூம் டிசைனர் சிக்கினார். அவரோ கேரவனுக்கு கூப்பிட, அவனோ வேண்டுமென்றே அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் சென்றமர்ந்தான். அவரும் வேறு வழியின்றி உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவனிடம் காமிக்க, அவனோ இது எதுவுமே சரியில்லை என்று வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.
சரியாக அந்நேரம் அங்கு வந்த அந்தப்படத்தின் கதாநாயகி, “ஹாய் ஹான்ட்சம், டுடே யூ லுக்கிங் சோ ஹாட்” என்று அவன் மூட் என்னவென்று தெரியாமல் கடலைப்போட, இதுதான் சாக்கென்று அந்த டிசைனர் அங்கிருந்து செல்ல, ஹீரோயின் க்ளோஸ்.
இப்படியாக படபடப்பாய் சென்றுக் கொண்டிருந்த அந்த படபிடிப்புத் தளத்தில் ஏதேர்ச்சையாக அவன் திரும்ப, அங்கே பச்சை நிற பட்டுப்பாவடையில் அங்கிருந்த அத்தனை மலர்களுக்கும் போட்டியாய் நின்றுக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி.
ஆனால் அவளின் புன்னகை சற்று வாடியது போல் தோன்ற, அப்போதே கவனித்தான். இது அவர்கள் வழக்கமாய் விளையாட வரும் பூங்கா என்றும், “உள்ளே விடுங்க” என்று அந்த சிறுமியும் அவள் தோழியும் அந்த வாட்ச்மேனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
ஏனோ அந்த சிறுமியைப்பார்த்ததும் அவன் முகம் புன்னகையை சூடிக்கொள்ள, “ஹேய் தீப்திக்குட்டி” என்று அவன் கூப்பிட, அப்போதே அவள் இவனைப் பார்த்தாள்.
இவனைப்பார்த்ததும் அந்தக்குழந்தை இவனை நோக்கி ஓடிவர, அவளை துரத்திக்கொண்டு வாட்ச்மேன் வர, அதற்குள் வாசு வந்து அந்த வாட்ச்மேனை தடுத்தான்.
இவ்வளவு நேரம் மிளகாயை தின்றது போல் பேசிக் கொண்டிருந்தவனின் குரலில் தான் இத்தனை இனிமையா என்று அனைவரும் அதிசயமாய் அவனைப் பார்த்தனர்.
சில நிமிடங்களுக்கு பின்னே, தன்னை எல்லாரும் பார்ப்பதை உணர்ந்தவன், வாசுவை அழைத்து, “நம்ம செட்ல எல்லாரும் என்னோட பேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக இப்படி என்னையவே பார்த்துக்கிட்டு இருந்தா வேலைய எப்ப முடிக்கிறது? இல்லன்னா எல்லாரும் இன்னிக்கு பிரீ ஆப் காஸ்ட்ல ஒர்க் பண்றாங்களா?” என்று கொஞ்சம் சத்தமாக கேட்டான்.
அடுத்த நொடி அத்தனைப் பேரும், அடித்துப் பிடித்து, அவரவர் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
அதைப் பார்த்த தீப்தியோ, “ஹீரோ, நீங்கத்தான் இவங்களுக்கு எல்லாம் முதலாளியா?” என்று தன் உதட்டின் மேல் கை வைத்து கேட்டாள்.
அதில் அவனும் அதைப் போல் தன் தாடையில் கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவன், “இல்லையே” என்றான் தீரன்.
“அப்புறம் எதுக்கு எல்லாரும் நீங்க சொன்ன உடனே கேட்டுகிட்டாங்க?” என்று தீப்தி கேட்க, அவளைப் பார்த்து சிரித்தவன், “சரி, இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டான்.
அதற்கு தீப்தியோ, “மிஸ்டர் தீரன், நீங்கதான் நாங்க விளையாடுற இடத்துக்கு வந்திருக்கீங்க” என்றாள்.
“ஓ, தீரன்! ம், நாட் பேட். லிட்டில் கேர்ள்க்கு என் பேர்லாம் தெரியுமா?” என்று அவளை தூக்கி அந்த ஸ்டோன் பெஞ்சில் அமரவைத்தவன் அவளருகில் அமர்ந்தான்.
“ம், தெரியுமே. எங்க ஆசரமத்துல எல்லாருக்குமே உங்கள ரொம்ப பிடிக்கும். நீங்க ஹீரோ வாச்சே” என்று தீப்தி சொல்ல, “ஆனா எனக்கு உங்க ஆசரமத்துலையே உங்களதான் ரொம்ப பிடிக்கும். ஏன்னா நீங்க என்னோட ஸ்வீட் லிட்டில் கேர்ள் ஆச்சே. ஆமா உங்க ஆசரமத்துல எல்லாருமே என்னைதீரன்னு தான் சொல்லுவாங்களா?” என்று கேட்டான்.
“இல்ல, எல்லாருமே உங்கள தீரா சாரு, தீரா, ஹீரோன்னு தான் கூப்பிடுவாங்க” என்றாள்.
அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்காதவன், “சரி, என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க, அதற்கு அவளோ, “எனக்கு மட்டும்னா எதுவும் வேணாம். ஏன்னா என் பிரண்ட்ஸ் விட்டுட்டு சாப்பிட மாட்டேன்” என்றாள்.
“ஓ, இசிட்? சரி, நீ இப்ப சாப்பிடு. உன் பிரண்ட்ஸ்க்கு போறப்ப கொண்டுப்போ” என்று தீரன் சொல்ல, “இல்ல, வேணாம்” என்று அவள் மறுத்தாள்.
உடனே வாசுவை கூப்பிட்டு மற்ற சிறுமிகளையும் உள்ளே அழைத்து வர சொல்ல, அவனும் அழைத்து வந்தான். ஆனால் ஏனோ இவளிடம் காட்டிய அந்த இணக்கம் மற்ற சிறுமிகளின் மேல் வரவில்லை.
சிறிது நேரத்திற்கு பின், “சரிங்க ஹீரோ, நேரம் ஆயிருச்சி, நான் கிளம்புறேன்” என்று தீப்தி சொல்ல, “நில்லு, நானே உன்னை கொண்டு வந்து ட்ராப் பண்றேன்” என்றான் தீரன்.
“இல்ல ஹீரோ, உங்களுக்கு இங்க நிறையா வேல இருக்கும். நீங்க இங்க இருந்தாதான் இவங்களாம் வேல பார்ப்பாங்க. நாங்க அப்படியே பேசிட்டே போவோம்” என்று தீப்தி சொல்ல, அவள் மழலை மொழியை தன்னை மறந்து ரசித்தவன், “சரிங்க லிட்டில் கேர்ள். ஆனா நீங்க என்ன தீரன்னே கூப்பிடுங்க. எனக்கு அதான் பிடிச்சிருக்கு” என்றான்.
“அப்படியா? அப்போ நீங்க இந்த பேர வச்ச அவங்ககிட்ட” என்று ஏதோ அந்த சிறுமி சொல்ல வருவதற்குள், “சார், ஷாட் ரெடி” என்று பம்மிக்கொண்டே அந்த அஸிஸ்டன்ட் டைரக்டர் இவனை அழைத்தான்.
அப்போதே தான் வாங்கிய ட்ரஸ்ஸை பற்றிய நினைவு வர, வாசுவை அழைத்து அந்த கவரை எடுத்து வரச் சொன்னான்.
அதை வாங்கி தீப்தியிடம் நீட்டியவன், “இது உங்களுக்காக” என்று சொல்ல, அதற்கு அவள் ஏதோ சொல்ல வரும் முன், “இப்ப இத நீங்க வாங்கிக்கோங்க. உங்க பிரண்ட்ஸ்கு நாளைக்கு வாங்கிட்டு வரேன்” என்றிருந்தான்.
அவளும் சரியென அதை வாங்கி வேகமாக பிரிக்க, அதில் பேபி பிங்க் நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு ப்ராக் இருந்தது. ஆனால் அது மிகப் பெரியதாக இருந்தது.
அதைப் பார்த்தவளோ, “மிஸ்டர் தீரன்! இவ்வளவு பெருச நான் எப்படி போடுறது?” என்று கேட்க, அப்போதே அந்த ட்ரஸை கவனித்தவன் வாசுவை தீயாய் முறைத்தான்.
(ஐயோ பாவம் வாசுக்கு நேரம் சரியில்ல. சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
nee perushana odane pottuko chlm
Bhoom Pappu
nice deepthi kutty 😍
Bhoom Pappu
nice deepthi kutty 😍