“மேடம், நீங்க ஒன்னு நோட் பண்ணீங்களா? இப்பலாம் இந்த ஆதி சாரு அடிக்கடி நம்ம சூட்டிங்கு வராரு” என்று தியா சொல்ல, “அதான் ஏற்கனவே சொன்னாங்களே, அவரும் நம்ம புரோடியூசர் சாரும் ரொம்ப குளோஸ்னு. பின்ன என்ன?” என்று கேட்டாள் ஸ்ரீ.
“அட நீங்க வேற மேடம். இங்க அப்படி யாரும் பேசல. நீங்களும் அந்த சாரும் தான் குளோஸ்னு சொல்றாங்க. அதுக்கும் மேல அவர் உங்கள பார்க்கிறதுக்காகத்தான் வர்றாரோன்னு எனக்கு கூட கொஞ்சம் சந்தேகம் இருக்கு” என்றாள் தியா.
“இப்ப நீ அடி வாங்கப்போற. அப்படியெல்லாம் எனக்கும் ஆதிக்கும் நடுவுல எதுவும் இல்ல. அவரு டைரக்சன்ல நான் ஒரு நாலு படம் நடிச்சிருப்பேன். அதுக்கும் மேல அவரு எனக்கு அந்தப் படத்துல வந்த சில பிரச்சனைய சால்வ் பண்ணிக் கொடுத்திருக்காரு, அவ்வளவுத்தான். அதுக்கும் மேல எதுவும் கிடையாது” என்று ஸ்ரீநிதி தெளிவாய் கூறினாள்.
“மேடம், அது உங்களுக்கு. ஆனா நான் சொன்னது அவருக்கு. கண்டிப்பா அவருக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் மேடம்” என்று தியா அடித்து சொல்ல, “நீ ஒருத்தி போதும். போன வாரம் நாலு வரில வந்த நியூஸூ, நாளைக்கே நாலு பக்கத்துக்கு வந்துரும்” என்று ஸ்ரீநிதி கடுப்பாக கூறினாள்.
“இல்ல மேடம், நீங்கதான் கிசு கிசுக்கு இவ்வளவு பயப்புடுறீங்களே? பேசாம ஆதி சார் மாதிரி ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டா உங்களுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும். அதுக்கும் மேல இந்த நியூஸ் காரங்க எல்லாம் அமைதியா போயிடுவாங்க” என்று தியா சொல்ல, “ஆகுற கதைய பேசு. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாலாம் இல்ல. நீ இப்படி லூசு மாதிரி பேசிட்டு இருந்தன்னு வச்சிக்க, நான் அஸிஸ்டென்ட்ட மாத்திட்டு போயிட்டே இருப்பேன்” என்றாள் ஸ்ரீ.
அதற்குள் “ஷாட் ரெடி” என்று ஒருவர் வந்து சொல்ல, ஸ்ரீயும் அங்கிருந்து சென்றாள்.
“என்ன? அப்போ உண்மையாவே மேடம் மனசுல, அந்த ஆதி சார் மேல எந்த இண்ட்ரஸ்டும் இல்லையா” என்று தனக்குள்ளே கேட்டாள் தியா.
அதே நேரம் இங்கே நம் ஆதியோ தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் அவளைப் பார்க்க சென்று கொண்டிருந்தான்.
ஆனால் தீரனோ கோவா செல்ல முடியாத கடுப்பில் பாண்டிசேரி சென்றவன், இரவு பகல் ஏதும் தெரியாமல் காரையே பாராக்கி, நம் வாசுவை ஊறுகாயாய் மாற்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் தீரனின் மொபைலுக்கு விடாமல் அழைப்பு வந்து கொண்டிருந்தது.
“டேய் வாசு, உன்கிட்ட எவ்வளவு டைம் சொல்லிருக்கேன், என் பர்மிஷன் இல்லாம என் நம்பர யாருக்கும் கொடுக்காதன்னு. இந்த சனாக்கு எதுக்குடா கொடுத்த?” என்று தீரன் கடுப்பாய் கேட்க, “என்னது நான் கொடுத்தேனா?” என்று ஒரு நொடி பதறியவன், “சாரி சார், நான் பண்ணது தப்புத்தான். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்” என்று செய்யாத தவறுக்கு வாசு மன்னிப்பை வேண்டினான்.
உடனே அவனும் “சரி, இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். ஆனா இதுக்கு தண்டனை இருக்கு. இந்த போன நீயே அட்டன்ட் பண்ணி என்ன வேணும்னாலும் பேசு, ஆனா அவ திருப்பி எனக்கு கூப்ட கூடாது” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் வோட்காவை கையில் எடுத்தான்.
அங்கே அந்த மாடல் அழகியோ மொபைலை எடுத்தது யார் என்று கூட கேட்காமல் தன் முத்த மழையை பறக்க விட்டாள்.
அதில் வாசுவோ மனதினுள், “ஆஞ்சிநேயா” என்று புலம்பியவன், “ஹலோ, ஹலோ மேம், நான் சாரோட மேனஜர் பேசுறேன் மேம்” என்று தன்மையாக சொல்ல, “ஓ சிட், உன்னை யாரு மேன் போன்ன எடுக்க சொன்னா? போ போயி என் தீராகிட்ட போன்ன குடு” என்று திட்டினாள் சனா.
“இல்ல மேம், சார் கொஞ்சம் வேலையா இருக்காரு” என்று வாசு சொல்ல, “யூ நோ ஹூஸ் மீ?” என்று அவள் கோவமாக கேட்டாள்.
“இதுகிட்ட ஷாப்டா பேசுனா வேலைையே ஆகாது” என்று தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தவன், “ஏன் உனக்குத் தெரியாதா நீ யாருன்னு என்கிட்ட கேட்கிற?” என்று வாசு நக்கலாக கேட்டான்.
“யூ பிளடி” என்று அவள் கத்த, “ஏய் என்ன? ஒரு மனுசனுக்கு போன் பண்ணா யாரு பேசுறா என்னன்னு கூட பார்க்காம நீ வாட்டுக்கு இச்சு கொடுக்கிற. இதெல்லாம் பார்த்தா என் ஆஞ்சிநேயா என்ன நினைப்பாரு?” என்று இவன் போதையில் கத்த ஆரம்பித்தான்.
அதில் அவள் புரியாமல், “வாட் ஆர் யூ டாக்கிங்? இப் ஐ கம்பிளைன்ட் திஸ் டூ தீரா மீன்ஸ்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“அடச்சீ, நீங்களாம் தமிழ் படத்துலத்தான நடிக்கீறீங்க, அப்புறம் என்னடி இங்கிலீஸூ? சரளமா நாலு தமிழ் வார்த்தை தெரிஞ்சாத்தான் நடிக்க முடியும்னு சொன்னா நீயும் நடு ரோட்டுக்குதான்டி வரணும். அப்ப வந்து பேசு உன் இங்கிலீஸ. இன்னும் ஒரு தடவ எங்க சாருக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணன்னு வை, அப்புறம் நீயும் உன் பிரண்ட் சாராவும் குடிச்சிட்டு ஆட்டம் போட்ட வீடியோவ நியூஸ் காரனுக்கு தூக்கி கொடுத்திருவேன்” என்றிருந்தான்.
அவ்வளவுத்தான். அதன் பின் அந்தப் பக்கத்தில் இருந்து மூச்சு சத்தம் கூட கேட்கவில்லை.
இப்போது தெரிகிறதா வாசுவை ஏன் அவன் கூடவே வைத்திருக்கிறான் என்று? வாசுவை பற்றி இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசையில் சொந்த ஊரை விட்டு இங்கு வந்தான்.
கிடைத்த வேலையை பார்த்த அவனுக்கு, மீடியாவில் முதலில் நட்பானது நம் இயக்குநர் ஆதி. அவன் இயக்கத்தில் தீரன் நடித்த படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்புத்தான் இந்த மேனஜர் வேலை.
இதெல்லாத்துக்கும் மேல் சார் ஏன் ஹீரோ ஆகலன்னு தெரியுமா? சாருக்கு பொண்ணுங்கனா சுத்தமா ஆகாது, ஐ மீன் பயங்கரமானா ஆஞ்சிநேய பக்தன்.
அதுவும் போக அவனின் ஆசையெல்லாம் நடிப்பின் மீதல்ல, அந்த மீடியா உலகத்தின் மீதிருந்த மோகம் மட்டுமே என்று தெரிந்து, இப்போது இருக்கும் வேலையை ஏதோ ராமனின் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத அனுமனைப் போல் பாவித்து செய்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் மாட்டியது ராமனிடமும் அல்ல, ராவணனிடமும் அல்ல, தீரேந்திரன் எனும் கலியுக கிருஷ்ணனிடம்.
அங்கே ஆதியோ “ஹாய் நித்தி, எங்க இருக்க?” என்று ஹலோ என்ற வார்த்தையை க்கூட சொல்லாமல் கொஞ்சம் பதட்டமாய் கேட்டான்.
“நான் சூட்டிங்ல தான் இருக்கேன். ஏன் என்னாச்சி?” என்று ஸ்ரீநிதி கேட்க, “இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான் ஆதி.
“இப்பக்கூட அவங்ககிட்ட பேசிட்டுத் தான இருக்கீங்க” என்ற தியாவின் குரலில் சற்று கடுப்பானவன், “அடுத்தவுங்க பேசுறப்ப இப்படித்தான் கேட்பியா?” என்று கேட்டான்.
“ஹேய் ஆதி கூல், கையில மெஹந்தி போட்டுட்டு இருக்கேன். சோ நான் தான் அவள ஸ்பீக்கர்ல போட சொன்னேன்” என்று ஸ்ரீநிதி சொல்ல, “ஓ சிட், உனக்குன்னு பிரைவேட் ஸ்பேஸே இல்லையா? அஸிஸ்டெண்டுக்கு இவ்ளோ இடம் கொடுப்பீயா நீ” என்று கடுப்பாக கேட்க, இங்கு தியாவுக்கு ஒரு மாதிரி ஆனது.
உடனே, “சாரி சார், சாரி மேம், நான் வெளிய இருக்கேன்” என்று தியா கிளம்ப போக “ஏய் தியா நில்லு” என்றாள் ஸ்ரீ.
அதில் அவளோ, “இல்ல மேம்” என்று சொல்லப் போக, அதற்குள் ஸ்ரீயோ “எனக்கு பிரைவேட் ஸ்பேஸ், பர்ஷனல் ஸ்பேஷ் எப்ப கொடுக்கனும்னு தியாக்கு நல்லாவே தெரியும். அதுக்கும் மேல உங்களுக்கும் எனக்கும் பர்ஷனலா பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்று கோவமாக அவனிடம் கேட்டாள்.
அப்போதே தான் பேச வந்த காரியம் என்ன, இப்போது என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று தலையில் அடித்தவன், “ஏய், ஏய், சாரி, நான் ரொம்ப நார்மலாத்தான் கேட்டேன்” என்றான்.
அவள் அப்போதும் கோவம் குறையாமல், “சரிங்க சார், நீங்க எதுக்கு எனக்கு கால் பண்ணீங்கன்னு சொல்றீங்களா?” என்று கேட்க,
“ஏய் சாரிப்பா. அதுக்கு எதுக்கு இவ்வளவு பார்மலா பேசுற? இப்ப என்ன தியா கிட்ட சாரி கேட்கனுமா? கேட்டுட்டா போச்சு. தியா மேடம், எங்க நித்தியோட பாசமான அஸிஸ்டன்டு, அறியாப் பிள்ள தெரியாம ஏதோ சொல்லிட்டேன். தயவு செஞ்சு இந்த பாவப்பட்ட டைரக்டர மன்னிச்சிடுமா. அப்படியே உங்க மேடத்தோட கோவத்தை சால்வ் பண்ணிடுமா” என்று ஆதி சொன்ன விதத்தில் ஸ்ரீக்குமே சிரிப்பு வந்தது.
அதற்குள் தியாவோ, “ஹெலோ டைரக்டர் சார், அவ்வளவு ஈஸியாலாம் மன்னிக்க முடியாது. வேணும்னா உங்க அடுத்த படம் என்ன ஹீரோயினா வச்சி எடுக்கிறேன்னு சொல்லுங்க! நான் வேணா உங்கள மன்னிக்கிறத பத்தி யோசிக்கிறேன்” என்று ஆதியுடன் வெகு சாதாரணமாக பேசினாள்.
இதுதாங்க நம்ம தியா. இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் யார் மேலையும் கோவம் வராது. அதுக்கும் மேல எதுக்காகவும் வருத்தப்பட மாட்டாங்க. அப்படியே அதெல்லாம் நடந்தாலும் வெறும் ஒரு நிமிஷம் தான். சரியான வாயாடி. பிள்ளைக்கு விஜே வாகனும் அப்படின்றது தான் ஆசை. ஆனா இதுக்குள் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிச்சி, வாய் பேசுனா மட்டும் விஜே ஆக முடியாதுன்னு. அதனால அந்த ஆசைய எல்லாம் குழி தோண்டி புதைச்சிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்ன்ற முடிவுல இருக்கிறப்பத்தான், ஒரு போட்டோ ஷூட்டுக்காக அங்க வந்த ஸ்ரீக்கு இவள பார்த்ததும் பிடிச்சுப்போக, அஸிஸ்டன்டா வறீயான்னு கேட்க, உடனே சரின்னு சொல்லி நம்ம ஸ்ரீ கூட செட்டில் ஆகிட்டாங்க. இதுதாங்க நம்ம தியாவோட ப்ளாஸ்பேக்.
ஆனா இப்படில்லாம் நம்ம ஹீரோயின் கேரக்டர் இதுதான்னு நம்மளால சொல்லிட முடியாது. ஏன்னா, அவங்க எத சீரியஸா எடுத்துப்பாங்க, எத காமெடியா எடுத்துப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது. அதோட சின்ன சாம்பிள் தான் இது. அப்புறம் நம்ம ஹீரோயினுக்கு இத விட வேற ஒரு பெரிய ஒரு ஹாபிட் இருக்கு, அத நீங்களே போக போக தெரிஞ்சிப்பீங்க.
அதன் பின் ஒரு வழியாக காதல்காக ஆதியும் யார் யாரிடமோ மன்னிப்பு கேட்டு ஸ்ரீயின் கோவத்தை குறைத்து விட்டான்.
அதன் விளைவு தான் இந்த காபி ஷாப் மீட்டிங்.
“சொல்லுங்க ஆதி! அப்படி என்ன விசயம்? நேர்லதான் பேசனும்னு வர சொல்லிருக்கீங்க” என்று ஸ்ரீநிதி தன் முன்னால் இருந்த காபியைக் கூட குடிக்காமல் அவனிடம் கேட்டாள்.
“என்ன அவசரம்? சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த காபிய கொஞ்சம் குடிக்கலாமே? பாவம் அது என்ன தப்பு பண்ணிச்சு?” என்று ஆதி, அவளருகில் நிழல் போல் அமர்ந்திருந்த தியாவை முறைத்துக் கொண்டே கூறினான்.
அதைப் புரிந்துக்கொண்ட தியாவோ, “இங்க பாருங்க என்ன பகைச்சிகிட்டீங்கன்னு வச்சிக்கோங்க, உங்க காதலுக்கு சங்கு தான்” என்று அவளும் உதட்டசைவில் சொல்ல, காபி குடித்துக் கொண்டிருந்த அவனுக்கு புறை ஏறியது தான் மிச்சம்.
அதைப் பார்த்து சிரித்தவள், “மேடம், அங்க நிக்கிறது என் ஸ்கூல் பிரண்ட் மாதிரியே இருக்கு. நான் போயி பேசிட்டு வரேன்” என்று தியா அங்கிருந்து சென்றாள்.
“நல்ல வேள தொல்லை விட்டுச்சி” என்று நினைத்தவன், “ஆமா நித்தி? இதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்டான் ஆதி.
“இதுக்கப்புறம்னா வீட்டுக்கு போவேன்” என்று புரியாமல் ஸ்ரீநிதி சொல்ல, “அது இல்ல நித்தி, லைப்ல” என்று அவன் இழுத்தான்.
(க்கும், ஆதி, ஸ்ரீக்கிட்ட லவ்வ சொல்லுவாரா? அப்படி சொன்னா, அதுக்கு நம்ம ஸ்ரீயோட பதில் என்னவா இருக்கும்? சரி அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
ennaku hero & heroin characters vida… vaasu & deeyaa character impressive ah irruku maybe future couple aagalam… story supera irruku ❤