ஜாலம் – 4

“அது இல்ல சார்! அங்க இருக்கிற சின்ன பிள்ளைங்க எல்லாம் நீங்க வருவீங்கன்னு ரொம்ப ஆசையில இருப்பாங்க” என்று வாசு மெல்லமாக சொல்ல, “ஓ எம் ஜி, அங்கப்பாரு என் வீட்டுக்கு வெளிய நான் எப்ப வருவேன்னு ஒரு கூட்டமே எனக்காக காத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அதுக்கு நான் என்ன பண்றது? ஐயம் செலிபிரட்டி” என்றான்.

“இல்ல சார் அது” என்று அவன் அப்போதும் தயங்க, “வாசு, எனக்கு நீ மேனஜரா, இல்ல நான் உனக்கு மேனஜரா? டூ வாட் ஐ சேய்” என்று தீரா சொல்ல, “எஸ் சார்” என்று சொல்லியவன், அவன் உடன் காரில் ஏறினான்.

இவர்கள் கார் மின்னல் வேகத்தில் சென்றுக்கொண்டிருக்க, இடையில் ஒரு சிறுமி ஓடி வர, இவன் வேகமாய் காரை திருப்பி நிறுத்தினான். 

“ஓ சிட், ஹூ தி ஹெல்” என்று அவன் இறங்கும் முன், அவன் எதிரில் வந்த காரில் இருந்து இறங்கி அந்த சிறுமியை தூக்கினாள் ஸ்ரீநிதி. 

“மேனஜர், போயி யாரு என்னன்னு பார்த்து, அந்தப் பிள்ளைக்கு ஏதாச்சும் அடிபட்டிருந்தா காசு கொடுத்து ஹாஸ்பிடல்ல சேர்க்க சொல்லுங்க” என்று கடுப்பாய் கூறினான் தீரா.

இங்கே வாசு காரில் இருந்து இறங்கி செல்வதற்கு முன், ஸ்ரீ அந்த குழந்தையை எழுப்பி தன் காரில் ஏற்றிக் கொண்டாள். 

ஆனால் அவள் யார் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஸ்ரீநிதி சொந்த வேலையாக வெளியில் வந்தால் முகத்தை மறைத்தப்படி எப்போதுமே ஸ்கார்ப் இருக்கும். இல்லையெனில் அவளை சுற்றி ஒரு கூட்டம் போட்டோ மேம், ஆட்டோகிராப் என்று கேட்டுக்கொண்டே வரும். அதனாலையே இந்த மாறு வேஷம். 

அவள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு தன் காரில், அந்த ஆசிரமத்திற்குள் சென்றிருந்தாள்.

அதைப் பார்த்த வாசுவோ “சார்” என்று சொல்ல வர, “ம், எனக்கும் கண்ணு நல்லா தெரியும். எப்படியோ வேல மிச்சம், வா, இன்னும் பிளைட்டுக்கு ஒன் ஹவர் தான் இருக்கு” என்று தீரா காரை ஸ்டார்ட் செய்ய முயன்றான்.

ஆனால் அதற்குள், வேகமாக அந்த காரின் அருகில் வந்த பெரியவர், “வாங்க வாங்க சார், உங்களுக்காகத்தான் குழந்தைங்க எல்லாம் ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க” என்றார்.

அதில் தீராவோ செம்ம கடுப்பில் வாசுவை பார்க்க, “சார், இவர் தான் அந்த ஆர்பனேஜோட கேர் டேகர்” என்றான்.

“இப்ப எனக்கு இந்த இன்ட்ரோ ரொம்ப முக்கியம் பாரு, போ, போயி அவர்ட என்ன சொல்லி அனுப்ப்புவியோ தெரியாது, அஞ்சு நிமிசம் டைம் தரேன்” என்று தீரா சொல்ல, அதற்குள் அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் அவன் காரை சுற்றி வளைத்து அவர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்த, இவனுக்கோ ஏகக்கடுப்பு.

அதே நேரம் அங்கே, “என்னாச்சு மேடம்? ஏன் இங்க வந்தாலே இப்படி டல்லாயிடுறீங்க?” என்று தியா கேட்க, “ஹா, ஹா, இந்த உலகம் ரொம்ப வித்தியாசமானது தியா! ஒருத்தன் ரொம்ப கஷ்டத்துல இருப்பான், அவன்கிட்ட போயி உனக்கென்னப்பா நீ சந்தோசமா இருப்பேன்னு கேட்க வேண்டியது. ஒருத்தன் இந்த உலகத்துலையே சந்தோசமா இருப்பான், அவன்கிட்ட வந்து உனக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வேண்டியது. அப்படித்தான் இருக்கு, இப்ப நீ கேட்டதும்” என்றாள் ஸ்ரீ. 

“என்ன மேடம், இந்த இடத்துக்கு வந்தாலே நீங்க புரியாத மாதிரியே பேசுறீங்க” என்று குழப்பமாய் அவளை தியா பார்க்க, “இல்ல தியா, நான் இங்க வர்றப்ப மட்டும் தான் உண்மையாவே சந்தோசமா பீல் பண்றேன். நானும் இதே மாதிரி ஒரு ஆசரமத்துலத்தான் இருந்தேன். இங்க வர்றப்ப எல்லாம் எனக்கு ஏதோ சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரி தோணும். அதெல்லாத்துக்கும் மேல இந்த சினிமா உலகத்துல ஆன் ஸ்கிரீன்ல மட்டுமில்ல ஆப்ஸ்கிரீன்லயும் நம்ம கொஞ்சம் நடிச்சிச்தான் ஆகனும். அதனாலத்தான் இந்த குழந்தைங்ககிட்ட கூட நான் யாருன்னு சொல்றது இல்ல” என்று விளக்கம்ளித்தாள். 

“சாரி மேடம், நான் தான் வீணா ஏதோதோ பேசி உங்களை சங்கடப் படுத்திட்டேன்” என்று தியா சொல்ல, “ஏய், அப்படில்லாம் இல்ல. நீ இப்படில்லாம் பேசுறதாலத்தான் நான் உன்னை என்கூடையே வச்சிருக்கேன். இல்லன்னா எப்பவோ வேலைய விட்டு தூக்கிருப்பேன்” என்றாள் ஸ்ரீ. 

“ஐயோ மேம்” என்று தியா பதற, “அப்புறம் என்ன! உன்கிட்ட எவ்வளவு டைம் சொல்லிருப்பேன், சூட்டிங் ஸ்பாட்ல மட்டும் மேடம்னு கூப்டு, வெளிய வந்தா என் பேர சொல்லியே கூப்புடுன்னு. ஆனா நீ என் பேச்ச கேக்கிறதே இல்ல” என்றாள்.

“இல்ல மேடம், அதெல்லாம் நல்லா இருக்காது. பேர் சொல்லி கூப்டு பழகிட்டா, அது மத்த இடத்துலையும் வந்துடும். அது மட்டுமில்ல எனக்கு இன்னமும் அந்த ஹீரோ உங்களை ஸ்ரீன்னு கூப்டு அடி வாங்குனது என் கண்ணு முன்னாடியே இருக்கு” என்று தியா சொல்ல, ஸ்ரீ என்ற பெயரைக் கேட்டதும் அவள் முகம் வாடியது. 

அதைப் புரிந்துக் கொண்டவள் பேச்சை மாற்றும் விதமாக, “மேடம், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா! நம்ம படத்தோட ஹீரோ உங்ககிட்ட அடி வாங்குனதுக்கு அப்புறம் பத்து நாள் செட் பக்கமே வர மாட்டேன், வேணும்னா டூப்பு போட்டு எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாராம்” என்று தியா சொல்ல, அதைக் கேட்டு அவளுடன் சேர்ந்து ஸ்ரீயும் சிரிக்க ஆரம்பித்தாள். 

(அடியாத்தி, நம்ம வேற அந்தப் புள்ளையே ஸ்ரீனு சொல்லிட்டோமே, அடிச்சிடுவாளா? ம், இந்த ஸ்ரீ மேட்டர் நமக்குள்ளேயே இருக்கட்டும், அவகிட்ட யாரும் சொல்லிராதீங்க, ரைட்டர் பாவம்)

அங்கே “என்ன வாசு இதெல்லாம்!” என்று தீரா கோவமாக கேட்க, “சார், பேருக்கு தலைய காட்டிட்டு வந்துடுறலாம். பிரஸ் வேற நிக்கிறாங்க, இப்ப நீங்க போகலன்னா நல்லா இருக்காது சார்” என்றான் வாசு.

“ஓ எம் ஜி, நான் என்ன அரசியல்வாதியா, மக்கள் கிட்ட நல்ல பேரு வாங்குறதுக்காக இப்படி ட்ராமா பண்றதுக்கு? ஐயம் தி ஆக்டர்” என்று தீரா கடுப்பாக சொல்ல, அதற்குள் சிறுமிகள் அழைக்க, வேறு வழியின்றி வண்டியை விட்டு கீழிறங்கினான். 

அனைவரும் தங்கள் கையில் இருந்த பூக்களை அவன் பக்கமாய் நீட்ட, அவனும் சிரித்துக்கொண்டே பெற்றுக்கொண்டான். ஆனால் மனதினுள் வாசுவை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான். 

அந்நேரம் ஒரு சிறுமி அவன் கையைப் பிடித்து இழுக்க, கடுப்பாய் பார்த்தவனின் முகம் அந்த பிஞ்சு குழந்தையைப் பார்த்ததும் அப்படியே மாறிப்போனது. 

“ஹலோ லிட்டில் கேர்ள், உங்க பேரு என்ன?” என்று அந்த சிறுமியின் உயரத்துக்கு மண்டியிட்டு அவன் கேட்க, “தீப்தி” என்று புன்னகை அரும்ப அந்த சிறுமி கூறினாள்.

“வாவ், சோ கியூட் நேம்” என்று தீரா சொல்ல, அதைப் பார்த்த வாசுவிற்கு அத்தனை ஆச்சர்யம்.

“நம்ம சாரா இது?” என்று அவன் அசையாமல் பார்க்க, அவனோ அந்தக் குழந்தையுடன் மிக பாசமாக பேசிக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பின்னே அவனுக்கு தாமதமாகிவிட்டதையே உணர்ந்தான். இருப்பினும் ஏனோ அந்த சிறுமியின் மீது கோவத்தை காமிக்க முடியவில்லை. 

“சரிங்க தீப்தி குட்டி, அங்கிள்கு லேட் ஆயிருச்சி, கிளம்பனும்” என்று தீரா சொல்ல, “அதுக்குள்ளேயா? அப்போ எங்க கூட உட்கார்ந்து சாப்ட மாட்டீங்களா?” என்று உதட்டை பிதுக்கி அந்த குழந்தை அழகாய் கேட்க, ஏனோ அந்த குழந்தையிடம் மறுக்க மனமின்றி சம்மதித்தான்.

அதே நேரம் அங்கே, “தேங்கியூ சோ மச் பெலானா!” என்று ஆதி சொல்ல, “தட்ஸ் நாட் ஏ பிக் டீல். பட் டூ யூ புரோபோஸ் தட் கேர்ள் ஸ்ரீ, ஸ், யா, ஸ்ரீநிதி?” என்று பெலானா கேட்டாள்.

அதில் அவனோ “ம், நோ, நாட் யெட்” என்று சொல்ல, “கியூ ஆதி? சீக்கிரம் புரோபோஸ் பண்ணுங்க. அப்புறம் லடுக்கி வில் சான்ஸ் டூ கமிட் வித் அதர் ஹீரோ” என்றாள்.

அதில் ஆதியின் முகம் சட்டென்று வாடி விட, “ஐயம் ஜஸ்ட் கிட்டிங் ஆதி. பட் டோண்ட் டூ பி சோ லேட்” என்று சொல்லிவிட்டே அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும், ஆதியோ, “எப்படியும் நாளைக்கு நித்திக்கிட்ட சொல்லியே ஆகனும்” என்று நினைத்தப்படி வீட்டுக்கு சென்றான்.

ஏனோ பெலானா சொல்லிய விஷயமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்றவன் நேராக தன் அன்னையின் மடியில் படுத்தான். 

“என்னாச்சு ஆதி? ரொம்ப வேலையா?” என்று சுபத்ரா கேட்க, “இல்லம்மா, கொஞ்சம் யோசனையாவே இருக்கு” என்றான். 

“என்னடா அந்த நித்தி பொண்ண பத்தி யோசிக்கிறீயா?” என்று அவன் தலையை தடவிக் கொடுத்து அவர் கேட்க, “ம், ஆமம்மா, நாளைக்கு அவகிட்ட என் மனசுல இருக்கிறத சொல்லிடலாம்னு இருக்கேன் மா” என்றான். 

“சந்தோசம் பா, சீக்கிரம் லவ்வ சொல்லி மருமகள வீட்டுக்கு கூப்டு வாப்பா. அன்னிக்கு அந்த கோவில்ல சூட்டிங் நடந்தப்ப பார்த்தேன், பார்க்கவே ரொம்ப அமைதியான பொண்ணா இருந்தா” என்றார் சுபத்ரா.

“ஆனா அப்பா இதுக்கு சம்மதிப்பாராமா?” என்று ஆதி கேட்க, “ஏன்டா, இதெல்லாம் லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிக்கனும். அதுமட்டுமில்லாம நீ என்ன டீனேஜ் பையனா அப்பா சம்மதிப்பாரா மாட்டாரான்னு யோசிக்கிறதுக்கு? நீலாம் எப்படிடா இவ்வளவு பெரிய டைரக்டர் ஆன?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ஆதியின் அன்பு தங்கை அக்சயா.

அதில் அவன் தங்கையை முறைக்க, அவளோ, “என்னம்மா, அவன் என்ன பச்சபிள்ளையா மடியில போட்டு தூங்க வைக்கிறதுக்கு? எந்திரிடா” என்றாள். 

“உனக்கு ஏன்டி பொறாமை, என் பிள்ளை என்னிக்கா இருந்தாலும் எனக்கு பச்சபிள்ளதான்டி.” என்றார் அவர்.

 “ம், உங்களை சொல்லனும், அதான் இவன் இப்பவும் லவ் பண்றத லவ் பண்ற பொண்ணுக்கிட்ட சொல்லாம உங்ககிட்ட அப்பாக்கிட்டன்னு காமெடி பண்ணிட்டு இருக்கான். நீ இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வச்சிக்கோ, அப்புறம் உன் ஆள எங்க ஹீரோ மாதிரி யாராச்சும் தூக்கிட்டு போயிருவாங்க” என்றாள் அக்சயா. 

அதைக் கேட்டதும், அவனுடைய கோவம் கூட, “உன்னை” என்று அவளை நறுக்கென்று கொட்டினான். 

“போடா, என்னையவே அடிச்சிட்டல்ல, இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! உனக்கு போட்டியா என் ஹீரோ தீரா மாதிரி ஒருத்தர் வரல, என்ன மாதிரி, என் தலைவன் தீரா செல்லக்குட்டியே உனக்கு போட்டியா வர்றதுக்கு நான் சாபம் கொடுக்கிறேன்” என்று விளையாட்டாக அவள் சொல்ல, இவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தே விட்டான். 

“ஆதி” என்று கோவமாய் அவன் அப்பா அமர்நாத் கத்த, அப்போதே மூவரும் திரும்பிப்பார்க்க அக்சயா ஓடிப்போய் தன் தந்தையை கட்டிக்கொண்டாள். 

“அப்பா” என்று ஆதி சொல்ல வரும் முன், “என்ன பழக்கம் இது? பொம்பள பிள்ளைய கை நீட்டி அடிக்கிறது? சாரி சொல்லுடா” என்று அவர் சொல்ல, அவனோ “இல்லப்பா அவ” என்று ஏதோ சொல்ல வந்தான். 

“எனக்கு எந்த காரணமும் தேவையில்ல, அவகிட்ட மன்னிப்பு கேளு” என்று அவர் கோவமாக சொல்ல, “ஏங்க, அதுக ஏதோ விளையாண்டுகிட்டு இருந்திச்சி, நீங்க ஏன் அதை பெருசு படுத்திறீங்க?” என்றார் சுபத்ரா. 

அதற்குள் அக்சயாவும், “விடுங்கப்பா, நம்ம அண்ணன் தான” என்று சொல்ல, ஆதியும் “சாரி” என்றான்.

“விடுடா, விடுடா, ஆனா இதுக்காகவே எனக்கு நீ என் தலைவன் படத்தோட பர்ஸ்ட் ஷோ டிக்கட் வாங்கிக்கொடுக்கனும்” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல, இவனுக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

(என்னடா இது இன்னும் சார் லவ் சொல்லவே இல்ல.. அதுக்குள்ள இம்புட்டு பிரச்சனை? இதுல அந்தப்பிள்ள வேற சாபம் கொடுத்திட்டு போது? என்னவா இருக்கும்? யார் ஹீரோ? யார் வில்லன்? ஒன்னுமே புரியலையே. சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ…

Author:    1 Sarmi SS
Comments   1

*** ஜாலம் – 4 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com