தீரஜ் முறைத்த முறைப்பில் வாசு வேகமாய் அந்த கவரை வாங்கிப் பார்க்க, அதன் உள்ளே இன்னும் ஒரு குட்டி ப்ராக் இருந்தது. அப்போதே பிரைஸ் டேக்கில் “ஹோம்போ ஆபர்” என்று இருந்ததை கவனித்தான்.
“சரி, இது எனக்கு. அப்போ இத நான் என்ன பண்றது?” என்று தீப்தி கேட்க, “இது தீப்தி குட்டிக்கு என்னோட கிப்ட். அது தீப்தி குட்டிக்கு யார பிடிக்குமோ அவங்களுக்கு நீங்க கிப்டா கொடுத்திருங்க” என்று தீரன் சொல்ல, அந்தக்குழந்தையும் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
இவனும் செல்லும் அந்தக் குழந்தையைப் பார்த்து அழகாய் புன்னகைக்க, அதை அங்கிருந்த புகைப்படக் கருவிகள் அழகாய் படமெடுத்தது.
அதன் பின் அங்கே ஆதித்யா வீட்டில், “என்ன அண்ணா? ஏன் இப்படி தலைய தொங்கப் போட்டுட்டு வந்திருக்க? என்ன லவ்வு புட்டுகிச்சா?” என்று அக்சயா கேட்க, “உன்னை” என்று ஆதி தீயாய் முறைத்தான்.
“டேய், விடுடா அண்ணா. இம்ப்ரஸ் பண்றது எப்படினு எங்க தலைவன் தீராகிட்ட இருந்து கத்துக்கோ. ப்பா, அவர் லாம் பொண்ணை பார்த்தாலே போதும், அம்புட்டு பொண்ணுங்களும் லைன்ல வந்து விழுவாங்க” என்று அவள் சொல்ல, “ஆமா, ஆமா, முதல்ல லைன்ல வந்து விழுவாங்க. அப்புறம் அடுத்த நாள் செய்தியில தலைப்பு செய்தியா வந்து விழுவாங்க” என்று கோபத்தில் அவன் கத்தினான்.
அவளோ அப்போதும் அதைக் கண்டுக்கொள்ளாமல், “ஏய், அதுக்குக்கூட அந்தப் பொண்ணுங்களுக்கு லக் வேணும்” என்று அக்சயா சொல்ல, “ஸ்டாப் இட், அக்சயா! திஸ் இஸ் யுவர் லிமிட்” என்றான்.
அவன் சத்தத்தில் அங்கு வந்த அவனின் அம்மா, “ஏன்டி, வந்ததும் வராததுமா என் பிள்ளக்கிட்ட வம்பு வளர்த்துட்டு இருக்க?” என்று அவர் கேட்க, “யாரு, நான் உன் பிள்ளைகிட்ட வம்பு பண்றேனா? அட போம்மா. உன் பிள்ளைக்கு கோவமே வராதுப் பாரு. எப்ப பாரு உர்னு சுத்துனா எந்த பொண்ணுக்குத்தான் பிடிக்கும்? இங்கப்பாரு” என்று தன் மொபைலில் வைத்திருந்த தீரனின் புகைப்படத்தை எடுத்து காட்டியவள், “பாருமா, சிரிக்கிறது எப்படினு உன் புள்ளையே எங்க ஹீரோகிட்ட கத்துக்க சொல்லு” என்றாள் அக்சயா.
“அடி வாங்கப்போற! என் பிள்ளைய எதுக்குடி அடுத்தவன் கூட கம்பேர் பண்ற? என் பிள்ளையோட குணத்துக்கு முன்னாடி அந்த இந்திரன் கூட நிக்க முடியாது” என்று சுபத்தரா சொல்ல, “ம், காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சுன்னு ஒரு பழமொழி இருக்கே, உனக்குத்தெரியுமா?” என்று கேட்டாள்.
அதில் நறுக்கென்று அவள் தலையில் கொட்டியவர் ஆதியிடம் திரும்பி, “என்னப்பா, என்னாச்சு?” என்று கேட்க, “மூஞ்ச பார்த்தா தெரியல? கண்டிப்பா அந்த ஸ்ரீநிதி நோ தான் சொல்லிருப்பா” என்றாள்.
அதில், அவன் இவளை அடிக்க கை ஓங்க, சரியாக அந்நேரம் ஸ்ரீயிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதில் அவன் முகம் புன்னகையில் மலர, அதைப்பார்த்த அக்சயா, “ம்மா, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. கடைசி காலத்துல நான் தான் உன்னைப் பார்த்துக்கனும் போல. எப்படியும் பியூசர்ல மாமியார், மருமகள் சண்டை வர்றதுக்கான எல்லா வாய்ப்பும் இருக்கு” என்று சொல்லிவிட்டு அவள் சென்றாள்.
இங்கே இவன் வேகமாய் அதை அட்டண்ட் செய்து “சொல்லி நித்தி” என்று சொல்ல, அங்கே சில நொடிகள் வெறும் மெளனம் மட்டுமே நிலவியது.
“நித்தி, ஆர் யூ ஒகே?” இவன் திரும்ப திரும்ப கேட்க, “ஆதி, இப்ப உங்களால அந்த கிரீன் ரெஸிடென்சிக்கு வரமுடியுமா?” என்று அவள் சிறு தயக்கத்தோடு கேட்டாள்.
இவனும் உடனே வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அங்கே தியாவோ “என்னாச்சு மேடம்? ஆதி சார் என்ன சொன்னாரு?” என்று கேட்க, “ம், வரேன்னு சொன்னாரு தியா” என்று ஸ்ரீ கொஞ்சம் பதட்டத்துடன் கூறினாள்.
“ஏன் மேடம், அந்த புரோடியூசர் நைட் மீட்டிங்னு சொன்னப்பையே வர முடியாதுன்னு சொல்லிருக்கலாமே? இதெல்லாம் நமக்குத் தேவையா?” என்று தியா கேட்க, “இல்ல தியா, எனக்கு மீட்டிங் ஹோட்டல்ல நடக்கும்னு தெரியாது. அதுக்கும் மேல வரேன்னு சொல்லிட்டு போகலன்னா அது தப்பா இருக்கும். ஏற்கனவே இந்த படத்துல ஏகப்பட்ட பிரச்சன இதுல நம்ம வேற எதுவும் புதுசா ஆரம்பிக்கக்கூடாது” என்றாள்.
அதற்குள் புரோடியூசர் மற்றும் அந்தப்படத்தின் ஹீரோ இருவரும், அங்கு வந்தனர்.
“என்ன ஹீரோயின் மேடம், இங்கையும் ஸ்டார்ட் ஆக்சன்னு சொன்னாதான் உள்ள வருவீங்களா?” என்று அந்த ஹீரோ நக்கலாக கேட்க, இருவரும் வேறு வழியின்றி உள்ளே சென்றனர்.
“சொல்லுங்க சார், என்ன பேசனும்?” என்று ஸ்ரீ கேட்க, அதற்கு அந்த புரோடியூசரோ, “என்ன ஸ்ரீநிதி மேடம், ஏதாச்சும் ஆர்டர் பண்ணிட்டே பேசலாமே!” என்று சொல்ல, “இல்ல சார், நான் வெளிய நைட் டைம்ல எதுவும் சாப்பிடுறது கிடையாது” என்றாள் ஸ்ரீ.
“ஓ, டயட் கன்ட்ரோலா? அதான் இப்படி ஜீரோ சைஸ்ல இருக்கீங்களா?” என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துக்கொண்டிருந்த அந்த ஹீரோ விசமமாக சொல்ல, அவளுக்கோ முன்னாடி இருக்கும் கிளாஸை எடுத்து அவன் தலையில் உடைக்கும் அளவுக்கு கோவம் தலைக்கேறியது.
“சரி ஸ்ரீநிதி, அப்போ ஏதாச்சும் ட்ரிங் சொல்லலாமே?” என்று வெயிட்டரை அழைத்து, “திரீ ஸ்காட்ச் அண்ட் ஒன் லெமன் மிக்ஸ், நெக்ஸ்ட் ஒன் மினி பியர் வித் லார்ஜ்” என்று புரோடியூசரும் ஹீரோவும் ஆர்டர் செய்தனர்.
இங்கே தியாவோ, “என்ன மேடம் இதெல்லாம்? உங்களுக்கு தான் இந்தப் பழக்கமே கிடையாதே!” என்று மெல்லமாக அவள் காதில் சொல்ல, “இப்ப நம்ம வேணாம்னு சொன்னாலும் இவங்க விடப்போறது கிடையாது. பேசாம அத வாங்கி கையில மட்டும் வச்சிக்கோ. ஆனா தெரியாம கூட வாயில வச்சிறாத” என்றாள் ஸ்ரீ.
“மேம், இவ்வளவு ரிஸ்க் லாம் தேவையா?” என்று தியா கேட்க, “நாய் வேஷம் போட்டா குலைச்சித்தான் ஆகனும். இப்ப உன்ன குலைக்க சொல்லல, ஜஸ்ட் கொலைக்கிற மாதிரி நடி, அது போதும்” என்றாள்.
ஏனெனில், திரையுலகத்திற்கு வந்தாயிற்று. விரும்பியோ, விரும்பாமலோ சில விஷயத்தை சகித்துக்கொண்டுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் சகிப்பதை போலாவது, ஒதுங்கி கொள்ள வேண்டும். அது அவள் கற்றுக்கொண்ட பாடம்.
“சரிங்க சார், இப்பயாச்சும் சொல்றீங்களா?” என்று ஸ்ரீநிதி கேட்க, “அட அது வேற ஒன்னும் இல்ல ஸ்ரீநிதி. இந்தப்படம் ஆல்மோஸ்ட் முடிய போகுது. அடுத்தப்படமும் நானே உனக்கு புரோடியூஸ் பண்ணலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?” என்று கேட்டார் ப்ரோடியூசர்.
“ஆமா சார், நீங்க எப்ப புரோடியூசர்ல இருந்து ரைட்டர் ஆனீங்க?” என்று தியா கேட்க, “வாட்?” என்று அவர் கேட்டார்.
அதற்குள் இவர்கள் ஆர்டர் செய்த டிரிங்க்ஸும் வர, “இல்ல சார், ஸ்டோரி என்னன்னு கேட்டேன்” என்று தியா சமாளிக்க, “அதெல்லாம் எதுக்கு? உங்க ஹீரோயின் அழகுக்காகவே ஒன்னு இல்ல. ஒன்பது படம் பிரியாவே நடிச்சுக் கொடுக்கலாம்” என்று அந்த ஹீரோ கையில் வைத்திருந்த ட்ரிங்ஸை குடித்துக் கொண்டே கூறினான்.
“நீ பிரீயா நடிப்படா, ஆனா அத எவன் காசுக் கொடுத்து பார்க்கிறது?” என்று அவள் முனுமுனுத்தது, ஸ்ரீக்கு கேட்டுவிட, அவளுக்கு அந்த சூழ்நிலையில் கூட புன்னகை எட்டிப் பார்த்தது.
அதற்குள், “ஏய் ஸ்ரீ, வாட் இஸ் திஸ்? இன்னும் குடிக்காம என்ன பண்ற? ஹேவ் இட்” என்று அந்த ஹீரோவும் புரோடியூசரும் சொல்ல, “டோன்ட் கால் தட் நேம்!” என்று கோவமாக ஸ்ரீநிதி சொல்ல, பாவம் ஏறிய போதை இருவருக்கும் தாறுமாறாக இறங்கியது.
“ஹேய், ஹேய், கூல். ஏதோ டங் சிலிப் ஆகி” என்று அந்த ஹீரோ வேகமாய் சொல்ல, “இட்ஸ் எனாப். நவ் ஐயம் லீவ்விங்” என்று கோவமாக ஸ்ரீநிதி அங்கிருந்து எழ முயற்சிக்க, அந்த ஹீரோவோ வேகமாய் தன் கிளாஸில் இருந்த முழுவதையும் குடித்துவிட்டு அவள் கையைப் பிடித்தான்.
அதில் அவள் கையை உறுவிக்கொள்ள பார்க்க, “ஏய் என்ன? நானும் பார்த்திட்டே இருக்கேன், ரொம்ப ஓவராத்தான் பேசிட்டுப் போற. ஸ்ரீன்னு தான கூப்டேன்? ஏதோ உன்ன என் ரூமுக்கு கூப்ட மாதிரி பிகேவ் பண்ற” என்று அவன் கோவமாய் சொல்ல, அவளோ, “நீ ரெண்டாவது சொன்னதுக்கு உன் கன்னம் தான் பழுத்திருக்கும். ஆனா நீ அந்த பேர சொன்னா உன் உயிருக்கு கூட நான் பொறுப்பு இல்ல” என்றாள்.
அதைப் பார்த்த தியாவுக்கும் அந்த புரோடியூசருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தியா ஸ்ரீயை பிடித்திழுக்க முயற்சிக்க, புரோடியூசர் ஹீரோவை அமைதியாக்க முயற்சிக்க, நம் ஆதியோ ஓவர் ஸ்பீடில் வந்ததால் ட்ராபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டான்.
ஆரம்பத்தில் யார் என்று தெரியாமல் அவனை பிடித்த அந்த போலீஸ்கார், பின் அவன் தான் பிரபல இயக்குநர் ஆதி என்று தெரிந்தவுடன், “என் மனைவிக்கு உங்க படம்னா ரொம்ப பிடிக்கும். பிளீஸ் எனக்காக அவங்ககூட பேசுறீங்களா? பசங்களுக்கும் உங்கள பிடிக்கும்” என்று அவனை செல்ல விடாமல் அன்பு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இங்கே ஸ்ரீயோ கோவத்தில் கிளாஸை எடுத்து அவன் மேல் எறியப்போக, அவனும் அவள் கையை இன்னும் அழுத்தமாக பிடித்து, “அடித்தான் கூப்பிடுவேன் ஸ்ரீநிதி!” என்பதில் ஸ்ரீ என்பதை அழுத்தம் கொடுத்து சொல்ல, வேகமாய் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
“என்னையவே அடிச்சிட்டியா? உன்னை” என்று வேகமாய் அவளை இழுத்துக்கொண்டு ஒரு அறைக்கு செல்ல முயற்சிக்க, இங்கே தியாவுக்கோ குப்பென்று வேர்த்தது. ஆனால் ஸ்ரீயோ அப்போதும் கோவம் குறையாமல் கத்திக் கொண்டிருந்தாள்.
அது விஜபி அறை என்பதால் அங்கு இவர்களைத் தவிர வேறு யாரும் வர வாய்ப்பில்லை. தியா வேகமாய் ஆதிக்கு கால் செய்து, “சார், இங்க ஒரு பிரச்சனை” என்றாள்.
“கிட்டத்தான் இருக்கேன், நான் உடனே வரேன்” என்று சொல்லியவன் வேகமாய் தன் காரை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தான்.
இந்த கலாட்டாவில் புரோடியூசர்க்கு பிபி ஏறியது தான் மிச்சம். “ஏன்மா, நீ என்ன இப்படி நின்னுட்டு இருக்க? போ, போயி உங்க மேடம்ம ஹீரோகிட்ட இருந்து காப்பாத்து. ஏதாச்சும் பிரச்சன ஆச்சுன்னா படமே ஸ்டாப் ஆகிடும்” என்றாள்.
அதில் தியாவோ அவருக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து, “சார், இனிமேல் நான் இல்ல, நீங்களே நினைச்சாலும் அந்த ஹீரோவ காப்பாத்த முடியாது” என்று நக்கலாய் கூறினாள்.
அவளின் நக்கலில், அவர் புரியாமல் அந்தப் பக்கம் பார்க்க, இவர்கள் கலாட்டாவில் முழு போதையில் கையில் கிளாஸுடன் தன் அறைக்கு சென்றுக்கொண்டிருந்த தீரனின் கிளாஸை அந்த ஹீரோ தட்டிவிட்டு விட்டான்.
ஆனால் ஸ்ரீயோ அதையும் கவனிக்கவில்லை, அவனையும் கவனிக்கவில்லை.
“என்னது இவனா?” என்று புரோடியூசர் அதிர்ச்சியாக, “என்னாச்சி சார்? உங்க பாவரேட் ஹீரோ தான அது” என்று தியா கூலாக கேட்டாள்.
அதில் அவருக்கு கடந்த காலம் கண் முன்னே வந்து நின்றது. இதற்கு முன் பார்டியில் தெரியாமல் அவன் கையில் இருந்த கிளாஸை இவர் தட்டிவிட்டுருக்க, பார்டி என்றும் பாராது இவரை ஓங்கி அடித்திருந்தான்.
அதில் மயங்கியவர் அடுத்த நாள் தான் கண் விழித்தார். அதை நினைத்துப் பார்த்தவருக்கு இப்போதும் வேர்த்துக் கொட்டியது.
“ஓ சிட்” என்று தீரன் வேகமாய் அந்த ஹீரோவின் கன்னத்தில் ஓங்கி அறைய, போதையிலும் தீடீர் தாக்குதலிலும் நிலை தடுமாறி அவன் கீழே விழுந்தான்.
ஸ்ரீ அது யார் என்று பார்க்கும் முன்னே, தியா ஸ்ரீயின் கையைப் பிடித்து இழுத்தாள். ஆனால் ஸ்ரீயோ தீரனைத்தான் பார்த்தாள்.
(ஸ்ரீயும், தீரனும் சந்திப்பார்களா? அப்படி சந்தித்தான், அந்த சந்திப்பு எப்படி இருக்கும்? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
semma 🔥🔥🔥