ஜாலம் – 13

"அக்கா! உண்மையாவே நான் உயிரோட இருக்க மாட்டேனா?" என்று அந்த சிறுமி தன் மழலை மொழியில் கேட்டாள்

அதைக்கேட்டதும் ஸ்ரீயின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வடிந்தது.

வேகமாக அந்த குழந்தையை அணைத்து, "இல்ல இல்ல, உனக்கு எதுவும் ஆகாது. அக்கா மேல உனக்கு நம்பிக்கை இருக்குதான?" என்று கேட்டாள்.

"ம்" என்று அந்த சிறுமி தலையாட்டினாள்.

அதன் பின் அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த அந்த ஆசிரம் நிறுவனரிடம் சென்ற ஸ்ரீநிதி, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல மேடம், அந்த பாப்பா குணமாகனும்" என்றாள்.

"கர்த்தரோட புண்ணியத்துல பணத்துக்கு ஒன்னும் குறை இல்ல நித்தி! ஆனா" என்று அந்த அவர் இழுத்தார்.

"என்ன ஆனா மேடம்?" என்று ஸ்ரீநிதி பதட்டமாக கேட்டாள்.

"அது குழந்தையோட பிளட் குரூப் ரொம்ப ரேர். அந்த குரூப் நம்மகிட்ட இல்ல, எல்லா பிளட் பேங்க்லையும் சொல்லிருக்கு" என்று அந்த நிர்வாகி கூறினார்.

"ம், மேம், நானும் எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டையும் விசாரிக்க சொல்றேன்" என்று ஸ்ரீ சொல்லிவிட்டு தன் மொபைல் மூலம் தியாவிற்கு கால் செய்தாள்.

"என்னாச்சு மேடம்? எங்க போனீங்க? நான் வரவா?" என்று தியா கேட்டாள்.

"இல்ல தியா, நான் உனக்கு வாட்ஸப்ல பேஷன்ட் டீடெய்ல் எல்லாம் அனுப்பியிருக்கேன். நம்ம இன்டஸ்ட்ரில இருக்கிறவுங்கள்ல யாருக்காச்சும் இந்த பிளட் குரூப் இருக்கான்னு சீக்கிரம் சொல்லு" என்று ஸ்ரீநிதி கூறினாள்.

"ம், ஒகே மேடம்" என்று தியாவும் தனக்கு தெரிந்த அத்தனை பேரிடமும் விசாரிக்க ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் ஆதி அழைத்து, "என்னாச்சு நித்தி?" என்று கேட்க, ஸ்ரீ விவரத்தை ஆதிக்கும் தெரிவித்திருந்தாள்.

"ஓ, அந்த பிளட் குருப்பா? அது எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு இருக்கு! நான் உடனே அவரை கூப்டு வரேன்" என்று ஆதி கூறினான்.

"ஓ, ரியலி? தேங் காட்! பிளீஸ் பி குயிக் ஆதி" என்று ஸ்ரீ கூறினாள்.

அதற்குள் அங்கு வந்த மருத்துவர், "நானும் எங்களுக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டையும் சொல்லிருக்கோம்! ஆனா எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிதோ அவ்வளவு சீக்கிரம் நம்ம பண்ணிடலாம்" என்று கூறினார்.

"ம், நோ பிராபளம் டாக்டர். நீங்க ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கூப்டு வரேன்னு சொல்லிருக்காரு" என்று ஸ்ரீ கூறினாள்.

"ஓ குட், அப்போ நான் ஆப்ரேஷனுக்கு ஸ்டார்ட் பண்ண சொல்றேன்" என்று மருத்துவர் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதன் பின் தியாவும் ஸ்ரீநிதியை தேடி ஹாஸ்பிடலுக்கு வந்தாள்.

"மேம், நானும் முடிஞ்ச அளவுக்கு எல்லார்கிட்டையும் சொல்லிருக்கேன்" என்று தியா கூறினாள்.

"நத்திங் டூ வொரி தியா. ஆதி பிளட் டோனர கூப்டு வரேன்னு சொல்லிட்டாரு" என்று ஸ்ரீநிதி மகிழ்ச்சியாக கூறினாள்.

"ஆதி சார் கிரேட் மேடம்" என்று தியாவும் ஆதரவு கரம் நீட்டினாள்.

ஆனால் என்ன ஆனதோ? ஆதியிடம் இருந்து அதன் பின் அழைப்பும் இல்லை, பதிலும் இல்லை.

ஸ்ரீயும் தியாவும் மாறி மாறி ஆதிக்கு கால் செய்தனர். ஆனால் அவன் அழைப்பை ஏற்க வில்லை.

"என்னாச்சு? டோனர் வந்தாச்சா?" என்று மருத்துவர் கேட்டார்.

"ஆங், வந்துட்டு இருக்காங்க டாக்டர். இப்ப வந்திருவாங்க" என்று ஸ்ரீநிதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரியாக அந்நேரம் ஆதி அங்கு வந்து சேர்ந்தான்.

ஆதியைப் பார்த்ததும் ஸ்ரீ ஓடிச்சென்று, "நல்ல வேளை ஆதி! நீங்க வந்துட்டீங்க? எங்க அவரு?" என்று கேட்டாள்.

"அ, த், அது வந்து நித்தி!" என்று ஆதி தடுமாறினான்.

"ஐயோ சார், பேசுறதுக்குலாம் நேரம் இல்ல! பின்னாடி வறாரா?" என்று தியா எட்டிப் பார்த்தாள்.

"இல்ல தியா, அவரு வரல" என்று ஆதி தயக்கமாக கூறினான்.

"வரலன்னா என்ன அர்த்தம் ஆதி?" என்று ஸ்ரீ கோவமாக கேட்டாள்.

"இல்ல நித்தி, நான் அவர்கிட்ட போன்ல எல்லாம் பேசுனேன், வரேன்னு தான் சொன்னாரு. ஆனா சடனா அவருக்கு ஏதோ பர்ஷனல் ரீசன், என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டாரு" என்று ஆதி கூறினான்.

"வாட்? அப்போ அதை நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே ஆதி?" என்று ஸ்ரீ கேட்டாள்.

"இல்ல நித்தி, சொன்னா நீ கவலைப் படுவ, அதுக்குள்ள வேற யாரையாச்சும் கண்டுபிடிச்சு கூப்டு வந்திடுறலாம்னு தான் நான் சொல்லல" என்று ஆதி தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

அதைக்கேட்ட ஸ்ரீக்கு சுள்ளென்று கோவம் தலைக்கேறியது.

"ஆர் யூ மேட் ஆதி! எதுல பொய் சொல்லனும்னு தெரியாதா? இல்ல, இது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது ஆதி. உங்களால முடியாதுன்னா நாங்க எங்க சைட் இன்னும் ட்ரை பண்ணி பார்த்திருப்போமே ஆதி? உங்க பேச்சை கேட்டு இப்ப நானும் பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்று ஸ்ரீநிதி மருத்துவமனை என்றும் பாராமல் கோவமாக கத்தினாள்.

"இல்ல நித்தி, நான் பொய் சொல்லனும்னு அப்படி பண்ணல" என்று ஆதி ஏதோ சொல்ல வந்தான்.

ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல், "போதும் ஆதி. இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம். ஆனா அந்த குழந்தைக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சுன்னா நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன் ஆதி" என்று ஸ்ரீ எச்சரிக்கும் தோணியில் கூறினாள்.

அதைப்பார்த்து தியா வந்து அவர்களை சமாதானப் படுத்த முயற்சித்தாள்.

"எக்ஸ் கியூஸ் மி, இது ஹாஸ்பிடல், கொஞ்சம் அமைதியா இருங்க" என்று ஒரு சிஸ்டர் கூறினார்.

அதற்குள் அங்கு வந்த மருத்துவர், "டோன்ட் வொரி, பிளட் கிடைச்சிருச்சி" என்று கூறினார்.

"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்று ஸ்ரீ ஆச்சர்யமாய் கேட்டாள்.

"ஆமா மேம், அவரே வாலன்டியரா வந்து பிளட் டொனேட் பண்றேன்னு சொன்னாரு" என்று மருத்துவர் கூறினார்.

"தேங்காட்! யார் டாக்டர் அவரு? நான் அவரை பார்க்கலாமா?" என்று ஸ்ரீ கேட்டாள்.

"ம், இப்ப பிளட் கொடுத்துட்டு இருக்காரு. அவர் வந்ததும் பார்க்கலாம்" என்று மருத்துவர் சொல்லிவிட்டு சென்றார்.

ஆதிக்குமே அப்போது தான் மூச்சே வந்தது.

"சரி மேடம். அதான் பிளட் கிடச்சிருச்சே? ரிலாக்ஸா இருங்க மேம். எல்லாம் நல்லதா நடக்கும்" என்றாள் தியா

ஆனால் ஸ்ரீ அப்போதும் ஆதியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கவனித்த தியா, "ம்ஹூம், இது சரிபட்டு வராது" என்று யோசித்துக் கொண்டே, "சரி சரி, இப்ப கொஞ்சம் நம்மளும் ஏதாச்சும் குடிக்கலாம்! இல்லன்னா பக்கத்துல பெட்ல நம்மளையும் அட்மிட் பண்ணிடுவாங்க" என்று நிலைமையை சரி செய்ய முயற்சித்தாள்.

"இல்ல தியா, நான் வரல. நீ வேணும்னா போயிட்டு வா, அப்படியே உங்க ஆதி சாரையும் கூப்டு போ. பாவம் ரொம்ப டயர்டா இருப்பாரு" என்று ஸ்ரீநிதி கடுப்பாக கூறினாள்.

"நித்தி" என்று ஆதி ஏதோ கூற வந்தான்.

ஆனால் அதற்குள் தியா, "சார், ஒரு நிமிஷம் என் கூட வாங்க" என்று இழுத்து சென்றாள்.

ஸ்ரீ அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்தாள். அந்நேரம் அவர்கள் முன் வந்த இரண்டு செவிலியப் பெண்கள், "இல்ல இல்ல, ஹீரோக்கு நான் தான் ஜூஸ் கொண்டு போயி கொடுப்பேன்" என்று மாத்தி மாத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அதை ஸ்ரீ புரியாமல் பார்த்தாள்.

"ஹலோ சிஸ்டர்ஸ், நீங்க ரெண்டு பேருமே போக வேண்டாம். தீரா சார்க்கு நானே இந்த ஜூஸ கொண்டு போயி கொடுக்கிறேன்" என்று வாசு அந்த ஜூஸை கையில் எடுத்தான்.

"தீராவா? அவர் இங்க என்ன பண்றாரு?" என்று புரியாமல் ஸ்ரீ யோசித்துக் கொண்டிருந்த நேரம், அவளருகில் வந்த மருத்துவர், "மேடம், தீரா சார் உங்களுக்கு தெரிஞ்சவரா? அவர் தான் அந்த குழந்தைக்கு ரத்தம் கொடுத்தாரு" என்று கூறினார்.

அதைக்கேட்ட ஸ்ரீநிதிக்கு பல கேள்விகளும் குழப்பங்களும் மனதில் சூழ்ந்துக் கொண்டது.

சற்று நிமிடங்களுக்கு முன், வாசுவும் தீரனும் தங்கள் காரில் பட பூஜையை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து கொண்டிருந்தனர். 

“என்னாச்சு சார்? ஏன் இவ்வளவு அப்சட்டா இருக்கீங்க?” என்று வாசு கேட்க, “அப்சட்டா? இந்த தீரனுக்கா? அப்படில்லாம் எதுவும் இல்ல! இந்த தீராவை யாராலையும் அப்சட்டாக்க முடியாது” என்றான் தீரன். 

“ம், அதுவும் சரிதான்” என்று வாசு நினைத்துக் கொண்டு காரை ஓட்டினான். அந்நேரம் கார் கண்ணாடி வழியே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீரன், திடீரென, “வாசு, ஸ்டாப் தி கார்!” என்று கத்தினான். 

தீரனின் சத்தத்தில் வாசு சடன் பிரேக் அடித்து காரை நிறுத்தினான். கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. 

“என்னாச்சு சார்?” என்று வாசு கேட்கும் முன், தீரன் வண்டியை விட்டு இறங்கி அந்த பார்க் பக்கமாக ஓடியிருந்தான். 

“எங்கப் போறாரு?” என்று வாசுவும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தீரனின் பின்னால் சென்றான்.

அங்கே ஒரு சிறுமி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ரோட்டை கிராஸ் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள். பைக், லாரி என அந்த சிறுமி மேல் மோதுவது போல் வந்தது. பதட்டத்தில் அந்த சிறுமி தன் கண்களை இறுக்க மூடினாள். 

அதற்குள் அங்கு வந்த தீரன், “ஏய், தீப்தி!” என்று வேகமாக அவளை தூக்கி தள்ளி நின்றான்.

அதன் பின் மெதுவாக தன் கண்களை திறந்த தீப்தி, “தீரன்? நீயா?” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

 அதை சற்றும் காதில் வாங்காமல், “என்ன தீப்தி இது? இங்க என்ன பண்ற? யார் கூட வந்த?” என்று சற்று அதட்டலாக கேட்டான். 

“இல்ல, அது, என் பிரண்டு ஹாஸ்பிடல்ல இருக்கா! அவளை பார்க்க போறேன்” என்று தீப்தி அழுதுக் கொண்டே சொல்ல. “என்ன? அதுக்குன்னு இப்படி தனியா வருவியா? முதல்ல அழுகைய நிறுத்து” என்று தீரன் தீப்தியிடம் சொல்லிவிட்டு, வாசுவிடம் தண்ணீர் கொண்டு வரும் படி கூறினான். 

“இல்ல, பாவம், அவ திடீர்னு விளையாண்டுகிட்டு இருக்கிறப்ப மயங்கி விழுந்துட்டா” என்று தீப்தி அழுதுக் கொண்டே சொல்ல, “சரி, சரி, அழாத. நான் உன்னை உன் பிரண்ட் கிட்ட கூப்டு போறேன். எந்த ஹாஸ்பிடல்?” என்று தீரன் கேட்டான். 

“அது, சிஸ்டர் ஏதோ ஹோம் சிட்டி ஹாஸ்பிடல்னு சொன்னாங்க” என்றாள். 

“ம், சரி. நீ சாப்டியா?” என்று தீரன் அக்கறையாக கேட்க, “இல்ல, நான் என் பிரண்ட் கூட தான் சாப்டுவேன்” என்றாள். 

“ம், நானும் உன் பிரண்ட் தான? என் கூடலாம் சாப்பிட மாட்டியா?” என்று தீரன் கேட்டான். “நம்ம சாரா இது?” என்று வாசு தீரனை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன் பின் தீப்திக்கு குடிக்க ஜூஸ் வாங்கி கொடுத்துவிட்டு அவளுடன் ஹாஸ்பிடல்க்கு வந்தான். 

சரியாக அந்நேரம் டாக்டர் அந்த ஆசிரம நிர்வாகியிடம், “பிளட் கிடைச்சா தான் காப்பாத்த முடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டான். ஆனால் அப்போதுமே அவனுக்கு இரத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சற்றும் இல்லை.

ஆனால் அதைக் கேட்டு தீப்தி அந்த மருத்துவரிடம் ஓடிச்சென்று, “நான் என் பிரண்டுக்கு இரத்தம் கொடுக்கிறேன்” என்று கூறினாள். 

(ரைட்டு அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ?..

Author:    1 Sarmi SS
Comments   3

*** ஜாலம் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com