ஸ்ரீயிடம் வந்த தியா, “என்னாச்சி மேம்? எனிதிங் சீரியஸ்?” என்று கேட்டாள். “நத்திங் தியா, நம்ம ஸ்டார்ட் பண்ணலாம்” என்று ஸ்ரீ கூலாக புன்னகைத்தாள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆதியைப் பார்த்த தியா, “உங்களுக்கு என்னாச்சு சார்?” என்று கேட்டாள்.
“நத்திங்” என்று சொல்லிவிட்டு ஆதியும் கோவமாக அங்கிருந்து சென்றான். தியாவுமே அதற்கு மேல் ஸ்ரீயிடம் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
“என்னாச்சு நரேன் சார்? உங்க ஹீரோ வருவாரா இல்ல மாட்டாரா?” என்று தியா பொறுமையிழந்து கேட்டாள்.
“என்னாச்சு வாசு? அவர் லைன் கிடைச்சதா?” என்று நரேனும் பாவமாக கேட்டார். “இல்ல சார்” என்று வாசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதி குறுக்கிட்டான்.
“அப்புறம் என்ன சார்? இன்னொரு நாள் நம்ம இதப் பத்தி பேசிக்கலாம்” என்று ஆதி சொல்ல, “என்ன ஆதி? இன்னிக்கு பட பூஜை போடனும்” என்றார் நரேன்.
“அப்போ ஹீரோ இல்லாமையே போட்டுருவீங்களா?” என்று ஆதி எரிச்சலாக கேட்டான். “அதெப்டி முடியும்? தீரா சார் வராம இந்த பூஜைய முடிச்சா அப்புறம் அவர் நடிக்கவே மாட்டாரு” என்றார் நரேன்.
“அதுக்காக எங்க வேலைய போட்டுட்டு இப்படி நிக்க முடியாதே” என்று ஆதி கடுப்புடன் கூறினான். இதையெல்லாம் ஸ்ரீ அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனதினுள், “ச்சே, ஒருத்தனால எப்படி இவ்வளவு இர்ரெஸ்பான்சிபிளா இருக்க முடியும்? அப்படி இருக்கிற ஒருத்தர் எப்படி நம்பர் ஒன் ஸ்டாரா இருக்காரு? இன்னிக்கு அந்த ஜீவன்ன பார்த்தே ஆகனும்” என்று ஸ்ரீநிதி முடிவெடுத்தாள்.
“இன்னிக்கு அவன் கண்ணுல ஸ்ரீ படவே கூடாது, அதுக்கு என்ன பண்ணலாம்?” என்று ஆதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
வாசுவும் தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்த நரேன், “முதல் நாளுக்கே இப்படி இருக்கே? இவங்க எல்லாத்தையும் ஒன்னா வச்சி படம் பண்ணி நான் ஹிட் கொடுத்துடுவேனா?” என்று பாவமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இவர்களின் சிந்தனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அந்த தீரேந்திரனோ இவர்கள் யாரும் அறியா வண்ணம் அமைதியாக வந்து நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அதை அறியாத ஆதியோ, "நித்தி, கிளம்பலாம்" என்று சொல்ல, ஆனால் ஸ்ரீ அதை சற்றும் காதில் வாங்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அதைப் பார்த்து கடுப்பான ஆதி, "தியா, நீயாச்சும் உன் மேடமுக்கு சொல்லு! உங்களுக்கு இன்னிக்கு வேற எந்த கமிட்மென்டும் இல்லையா?" என்று கேட்டான்.
"கமிட்மென்ட் இருக்கு இல்ல! அது என் பிரச்சனை. ஆனா கொடுத்த கமிட்மென்ட்ட முடிக்காம நான் இங்க இருந்து வரமாட்டேன்" என்று ஸ்ரீ தெளிவாக கூறினாள்.
அதைப்பார்த்த தீரன், "ம், நாட் பேட். பட் இப்படி கொஞ்சம் கூட ஆட்டிடியூட் இல்லாத ஒரு பொண்ணு எப்படி பெஸ்ட் ஆக்ட்ரஸா இருக்க முடியும்? இம்பாஸிபிள். ஒரு வேள அழகா இருப்பாளோ?" என்று முதன் முதலாக ஒரு கதாநாயகியை பார்க்க ஆசைப் பட்டான்.
காரணம் தீரன் வந்ததே பின் வாசல் வழியாக தான். மற்றவர்கள் அனைவரும் வாசலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் ஸ்ரீயின் பேச்சை மட்டுமே தீராவால் கேட்க முடிந்தது.
"இப்படி சைல்டீஸ் மாதிரி பிகேவ் பண்ணாத நித்தி" என்று ஆதி இம்முறை சற்று கடுமையாகவே பேசினான்.
தியாவிற்கு எப்படி ஆதியை சமாளிப்பது, ஸ்ரீக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
"ஹேய், ஹேய், காய்ஸ் வாட் ஹாப்பனிங்! யாருக்காக இவ்வளவு வெயிட்டிங்?" என்று ஒன்றுமே தெரியாதது போல் கூலாக தன் சட்டையில் மாட்டியிருந்த கூலரை மாட்டிக்கொண்டே தீரன் அங்கு வந்தான்.
"தேங் காட்" என்று நரேன் கூறினார்.
அப்போதே அனைவரும் தீரனை திரும்பி பார்த்தார்கள். தீரனும் ஸ்ரீயை பார்க்க முயற்சித்தான், ஸ்ரீயுமே தீரனை பார்க்க முயற்சித்தாள். ஆனால் இருவருக்கும் இடையில் ஆதி திரையாக வந்து நின்றான்.
அதற்குள் நரேனும் தீரனிடம் வந்து, "உங்களுக்காக தான் சார் வெயிட்டிங்! எங்க நீங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சி பயந்துட்டேன்" என்று கூறினார்.
"ம், டோன்ட் வொரி சார். இந்த தீரனுக்கு எப்பவும் கொடுத்த வாக்க மீறி பழக்கம் கிடையாது! அப்படின்னு படத்துல வர்ற பஞ்ச் டயலாக் எல்லாம் பேசமாட்டேன். என்ன நம்புற ஜீவன்கள நான் பெருசா ஏமாத்துறது இல்ல" என்று தீரன் ஸ்ரீயை பார்க்க முயற்சித்துக் கொண்டே பேசினான்.
"சரி, வாங்க தீரா! மீதிய உள்ள போயி பேசுவோம்" என்று நரேன் உள்ளே அழைத்தார்..
"நரேன் சார்! கொஞ்சம் சீக்கிரம் முடிச்சீங்கன்னா நாங்க கிளம்பிடுவோம்" என்று ஆதி சிறு கடுப்புடன் கூறினான்.
"ம், நாட்பேட் டைரக்டர்! உங்களுக்கு பேச எல்லாம் தெரியுமா?" என்று தீரன் கிண்டலாக கேட்டான்.
"உங்க லெவலுக்குலாம் பேச வராது ஹீரோ சார்" என்று ஆதியும் கூறினான்.
அதையெல்லாம் பார்த்த தியா மனதினுள், "என்ன? ஆரம்பமே நம்ம ஆதி சார்க்கும், தீரா சாருக்கும் முட்டிக்கும் போலேயே? இதுல நம்ம ஸ்ரீநிதி மேடம் வேற என்னப் பண்ணப் போறாங்கன்னு தெரியலையே?" என்று யோசித்தாள்.
அதன் பின் ஆதி, தீரா மற்றும் நரேன் மூவரும் உள்ளே சென்றனர். ஸ்ரீ தீரனின் வார்த்தைகளை கேட்டு அப்படியே நின்றிருந்தாள்.
"சரி நரேன் சார்! ஹீரோ இருக்கேன், டேரக்டர் சார் இருக்காரு. அப்போ ஹீரோயின் எங்க?" என்று தீரன் ஸ்ரீயை பார்க்கும் நோக்கத்தில் கேட்டான்.
உண்மையில் தீரன் இதுவரை எந்த கதாநாயகியை பற்றியும் இப்படியெல்லாம் விசாரித்ததே கிடையாது. தீரனைப் பற்றி தான் அந்த கதாநாயகிகள் விசாரிப்பார்கள். அதைப் பார்த்த வாசுவிற்கு சற்று பிரமிப்பாக இருந்தது.
ஆனால் ஆதிக்கோ ஏக கடுப்பாக இருந்தது.
"ஓ, சாரி தீரா. நான் இன்னும் உங்களுக்கு ஸ்ரீநிதிய அறிமுகப் படுத்தி வைக்கலத்தான?" என்று நரேன் கேட்டுக் கொண்டே திரும்பி ஸ்ரீயை பார்த்தார்.
ஆனால் ஸ்ரீ யாருடனோ மும்முரமாக போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
"தியா, மேடம்ம வர சொல்லுமா" என்று நரேன் கூறினான்.
ஆதி செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தான். தியா ஸ்ரீயை நெருங்கி சென்றாள்.
அதற்குள் ஸ்ரீ தியாவைப் பார்த்து, "தியா, நான் இப்ப உடனே கிளம்பனும். நீ இங்க இருந்து பார்த்துக்கோ, நான் வரேன்" என்று பதட்டத்துடன் கூறினாள்.
"என்னாச்சு மேடம்?" என்று தியாவும் அதே பதட்டத்துடன் கேட்டாள்.
"அது இப்பத்தான் ஆசரமத்துல இருந்து கால் பண்ணாங்க! நான் உடனே போகனும்" என்று ஸ்ரீ சொல்லிவிட்டு தியாவின் பதிலை எதிர்பார்க்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
தீரனுக்கு ஸ்ரீயின் அந்த செயல் இதுவரை அவனுள் மறைந்திருந்த அவன் கர்வத்தை சீண்டிப் பார்த்தது.
ஆதிக்கு முகம் எல்லாம் புன்னகை பூத்தது.
"வாட் இஸ் திஸ் நரேன்? இதுதான் ஹீரோக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா?" என்று கோவமாக தீரன் கேட்டான்.
"நித்திக்கு யாருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கனும்னு நல்லாவே தெரியும்" என்று ஆதி நக்கலாக கூறினான்.
அதைக்கேட்டதும் தீரனுக்கும் ஏகக் கடுப்பானது.
அதற்குள் அங்கு வந்த தியா, "எல்லாரும் முதல்ல மன்னிச்சிடுங்க. அர்ஜன்டா மேடம் கிளம்ப வேண்டியதா போச்சு" என்று கூறினாள்.
"சரி விடு தியா. நித்திக்கு ஏதாச்சும் முக்கியமான வேலை வந்திருக்கும். அவ ஏற்கனவே சில பேரால ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டா. சோ போகட்டும் நோ பிராபளம்" என்று ஆதி கூறினான்.
"வாட் யூ மீன் ஆதி? அவங்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் அப்படின்னா எனக்கென்ன வேல இல்லன்னு சொல்ல வறீங்களா?" என்று தீரன் கோவமாக கேட்டான்.
"ரைட்டு, இவங்க மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று வாசு தலையில் அடித்துக் கொண்டான்.
அதற்குள் நரேன் அங்கு வந்து, "இல்ல இல்ல தீரா, நீங்க எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். உங்களோட ஒரு நாள் கால் ஷீட்காக எத்தனை பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு நல்லாவே தெரியும்" என்று கூறினான்.
"ம், அதை கொஞ்சம் உங்க டைரக்டர் சாருக்கும் சொல்லுங்க" என்று தீரன் அழுத்தமாக கூறினான்.
"ஆமா ஆமா, கொடுத்த கால் ஷீட்டுக்கே கரெக்ட் டைமுக்கு வர முடியல" என்று ஆதி தனக்குள் முனுமுனுத்தான்.
"கரெக்ட் ஆதி. நான் ஏன் கரெக்ட் டைமுக்கு வரனும்? நான் வர்ற டைம்தான் அவங்களுக்கு கரெக்ட் டைம்" என்று தீரன் தெனாவட்டாக கூறினான்.
"அப்படின்னா உங்களோட கரெக்ட் டைம்க்கு ஏத்த மாதிரி ஒரு ஹீரோயினையும் டைரக்டரையும் பார்த்துக்கோங்க. நாங்க கிளம்புறோம்" என்று ஆதி கோவமாக கூறினான்.
"பிளீஸ் பிளீஸ் ஆதி, காம் டவுன். கொஞ்சம் எனக்காக" என்று நரேன் கெஞ்சினான்.
"ம், தாராளமா! எனக்கு ஏத்த மாதிரி தான் நான் ஹீரோயின் செலக்ட் பண்ணுவேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று தீரன் கேட்டான்.
"ஐயோ என்ன! தீரா சார் இப்படியெல்லாம் பேசுறாரு. அப்போ உண்மையாவே நம்ம பத்திரிக்கையில எல்லாம் படிச்ச மாதிரி இவரு மோசமானவரா தான் இருப்பாரோ?" என்று தியா தீவிரமாக யோசித்தாள்.
"எனக்கு என்ன பிரச்சனையா?" என்று ஆதி கோவமாக ஏதோ கூற வந்தான்.
அதற்குள் இருவருக்கும் நடுவில் வந்த நரேன், "போதும் ஆதி, பிளீஸ் பி ஸ்டாப். தீரா சார் யாருன்னு நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். அதே மாதிரி உங்க திறமை என்னன்னு எனக்கு மட்டும் இல்ல நம்ம இன்டஸ்ட்ரில இருக்கிற எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கிறப்ப நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கிறது நல்லா இல்ல" என்று கூறினார்.
அப்போதே ஆதியும் தீரனும் தாங்கள் நிற்கும் இடம் என்ன என்பதை பற்றியே சிந்தித்தனர்.
"சாரி நரேன், பட் இப்போதைக்கு எனக்கு மயின்ட் சரியில்ல, நான் கிளம்புறேன்" என்று ஆதி கூறினான்.
"ம், தாராளமா போங்க ஆதி சார்! ஹீரோ இல்லாமத்தான் பட பூஜை பண்ண முடியாது. சோ நீங்க போங்க" என்று தீரன் கிண்டலாக கூறினான்.
"அடக்கடவுளே! இவங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிராங்களே?" என்று வாசு மனதினுள் புலம்பினான்.
"அப்புறம் என்ன நரேன்? அதான் உங்க ஹீரோவே சொல்லிட்டாரே, நான் கிளம்புறேன்" என்று ஆதி கோவமாக கூறினான்.
"ஏய், என்ன ஆதி? தீரன் சாரை பத்தி தான் தெரியுமே, அவர் காமெடிக்கு சொல்றதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க" என்று நரேன் ஆதியை சமாதானப்படுத்த முயற்சித்தான்.
"ஆமா ஆமா" என்று தீரன் ஏதோ சொல்ல வந்தான்.
அதற்குள் இடைமறித்த வாசு, "சரி சரி, நம்ம பூஜைய ஸ்டார்ட் பண்ணலாம்! அப்புறம் பத்திரிக்ககாரங்களுக்கு லைட்டா நியூஸ் கசிஞ்சாலும் கும்பலா வந்து நிப்பாங்க" என்று நிலைமையை புரிய வைத்தான்.
"ஆமா தீரா அன்ட் ஆதி, போட்டோ சூட் எல்லாம் முடிச்சிட்டு பிராபரா அனோன்ஸ் பண்ணனும்! ஏற்கனவே லாஸ்டா நான் புரோடியூஸ் பண்ண நாலு பிளிம் பிளாப் ஆயிருச்சி" என்று நரேன் சற்று கவலையாக கூறினான்.
அதன் பின் ஆதியும் தீரனும் ஒருத்தர்கொருத்தர் எந்த வம்பும் செய்யாமல் அமைதியாக பட பூஜையில் கலந்து கொண்டனர்.
"ச்சே, இந்த ஆதியால அந்த ஹீரோயின் முகத்தை கூட பார்க்க முடியாம போச்சே?" என்று தீரன் தீவிரமாக யோசித்தான்.
அதே நேரம், "நல்ல வேளை நித்திய இவன் மீட் பண்ணல. ஆனா இதே மாதிரி ஒவ்வொரு நாளும் என்னால தடுக்க முடியாதே? அதுக்கும் மேல இந்த தீரனோட கண்ணு என் நித்தி மேல படவே கூடாது. அதுக்கு நான் முதல்ல வீட்டுல நிச்சயத்தை பத்தி பேசனும்! பொறுமையா நித்திகிட்ட இந்த படம் நடிக்க வேணாம்னு சொல்லனும்" என்று ஆதி தனக்குள் யோசித்தான்.
இவர்கள் இருவரின் சிந்தனையில் இருந்த அந்த ஸ்ரீநிதியோ தான் இருவரை இப்படி பாதித்து வைத்திருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் ஒரு சிறு குழந்தையின் முன் மண்டியிட்டு பேசிக் கொண்டிருந்தாள்.
(ஆதி ஏன் ஸ்ரீயை தீரன் பார்க்க கூடாது என்று நினைக்கிறான்? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
y means ஆதி ku poramai