ஜாலம் – 11

“யார்ரா இது? காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு! சிட், நிம்மதியா தூங்க விடு” என்று தீரன் புலம்ப, ராத்திரி அடித்த சரக்கு காலையிலேயும் அழகாக வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் மெதுவாக எந்திரித்து தலைக்கு அருகில் கிடந்த மொபைலின் அலாரத்தை ஆப் செய்யும் போதே மணியைப் பார்த்தான். 

“யாரு மிட் நைட் பண்ணிரெண்டு மணிக்கு இத்தன தடவ கால் பண்ணிருக்காங்க?” என்று திரும்பி அந்த நம்பருக்கு கால் செய்தான்.

“சார், எங்க சார் இருக்கீங்க? உங்களுக்காகத்தான் இங்க காலையில இருந்து எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்ற வாசுவின் குரலில், “என்னாச்சு வாசு, என்கிட்ட நைட் சூட் இருக்குன்னு சொல்லவே இல்ல?” என்றான் தீரன்.

“என்னது நைட்டா? சார், இப்ப மதியம் 12 மணி” என்று வாசு சொல்ல, “ஓ, மதியமும் 12 மணி வருமோ?” என்று அதிதீவிரமாக அவன் யோசித்தான். 

“ஐயோ சார்” என்று வாசு சொல்ல, “சரி, நான் நைட் 12 மணிக்கு ஷார்ப்பா வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அவன் மொபைலை வைத்து விட்டான்.

“அச்சச்சோ? சார் இன்னும் நைட் அடிச்சதுல இருந்தே வெளிய வரலப் போலையே? சுத்தம்! இப்ப இவங்களுக்கு என்ன பதில் சொல்றது? இப்ப நம்மளும் அந்த வீட்டுக்கு போயி கூப்பிட முடியாது, என்னப் பண்றது?” என்று வாசு புரியாமல் நின்றுக்கொண்டிருக்க, அப்போதே அங்கு வந்து சேர்ந்தான் ஆதித்யா.

“என்ன அனுமன்? இங்க நிக்கிறீங்க? அந்த தீரா உன்னையும் கழட்டி விட்டுட்டானா?” என்று நக்கலாக ஆதி கேட்க, “ஏன் சார்? என் வேலைக்கு ஆப்பு அடிக்கிறதுல உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்?” என்று கேட்டான் வாசு.

“இல்ல, உனக்கு அப்படியாச்சும் விடுதலை கிடைக்குமான்னு பார்த்தேன்” என்று ஆதி கிண்டலாக சொல்ல, “எனக்கு விடுதலையா? இந்த படத்துல உங்களுக்கு விடுதலை கிடைக்குதான்னு முதல்ல பாருங்க” என்றான் வாசு.

“என்ன சொல்ற வாசு?” என்று ஆதி கேட்க, “நீங்களும் எங்க சாரும் சேர்ந்து படம் பண்ணப்போறீங்க? அப்புறம் நீங்களும் எங்க ஹீரோகிட்ட லாக் ஆகித்தான ஆகனும்” என்று வாசு சொல்ல, “என்னது?” என்று ஆதி புரியாமல் பார்த்தான். 

“என்ன சார், புரோடியூசர் உங்ககிட்ட சொல்லலையா? இந்தப்படத்தோட ஹீரோவே தீரன் சார் தான்” என்று வாசு சொல்ல, “வாட்?” என்று மூவரின் உதடுகளும் ஒரே நேரத்தில் சத்தமிட்டது.

அப்போதே ஆதி திரும்பி பார்க்க, அங்கே தியாவும் ஸ்ரீயும் நின்றுக்கொண்டிருந்தனர். 

“நித்தி, நீயா? வாட் ஏ சர்பிரைஸ்! நீ இங்க என்னப் பண்ற?” என்று ஆதி கேட்க, அவளோ அவன் கூறியதை கவனிக்காமல், “மிஸ்டர், இந்த படத்துக்கு யார் ஹீரோ?” என்று மறுபடியும் சிறு அதிர்ச்சியுடன் கேட்டாள்.

 “நம்ம தீரா தான் ஸ்ரீநிதி” என்று புரோடியூசர் சொல்லிக் கொண்டே அங்கு வந்தார்.

“வாட்?” என்று ஸ்ரீ அதிர்ச்சியாகி நின்றாள். ஆனால் தியாவிற்கோ மயக்கம் வராதக் குறைத்தான். 

அதைப்பார்த்து, “நீங்க எதுக்கு இவ்வளவு ஷாக்காகனும்?” என்று புரியாமல் ஆதி தன் சந்தேகத்தை கேட்டான். 

“என்ன நரேன் சார்? ஏன் இவ்வளவு கன்பியூசன்? யார்கிட்டையும் நீங்க சொல்லலையா?” என்று வாசு கேட்க, “என்ன ஆதி? நீங்க கதைய சொல்றப்பையே நான் இதை தீரா தான் பண்ணனும்னு சொன்னேன்னே மறந்துட்டீங்களா? அப்புறம் நீங்க சொன்ன ஹீரோயினுக்கு இப்ப கரண்ட்ல நம்ம ஸ்ரீநிதிய விட்டா வேற யாரு இருக்கா? அதான் அவங்கள பைனல் பண்ணிட்டேன்” என்று நரேன் மிக சாதரணமாக கூறினார். 

“என்ன? நோ நோ வேய்!” என்று ஆதி கத்த, அதைப் பார்த்து நம் ஸ்ரீக்கும் தியாக்கும் கூட கொஞ்சம் அதிர்ச்சிதான்.

“என்னாச்சு ஆதி? எனி பிராபளம்?” என்று நரேன் கேட்க, “நத்திங் சார். நான் கொஞ்சம் நித்திக்கிட்ட பேசிட்டு சொல்றேன். நித்தி, கொஞ்சம் என் கூட வா” என்று அவளை அங்கிருந்து ஏறக்குறைய இழுத்துச் சென்றான்.

“ஆமா, ஏன் ஆதி சாரு இம்புட்டு அவசரமா ஹீரோயினை இழுத்திட்டு போறாரு?” என்று வாசு அருகில் நின்றுக் கொண்டிருந்த தியாவிடம் கேட்டான். 

“ம், இல்லன்னா உங்க தீரா சாரு பட்டுன்னு தூக்கிட்டு போயிருவாரே அதான்” என்று தியா சொல்ல, “வாட்? எங்க சாரைப் பத்தி உனக்கு என்னத் தெரியும்?” என்று வாசு கோவமாக கேட்டான். 

“அப்போ ஆதி சார பத்தி மட்டும் எனக்கென்ன தெரியும்? நீங்கத்தான அவங்க ரெண்டு பேரோட என்சைகிளோபீடியா” என்று தியா வாசுவை கலாய்த்தாள். 

“இங்கப்பாரு, வந்ததும் ஆரம்பிக்காத. நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்று வாசு கோவப்பட்டான். 

“ஆமா, நீயும் உன் சாரும் எப்ப மனுசனா இருந்திருக்கீங்க?” என்று தியா அவனை வாரினாள். 

“சும்மா எங்க சார பத்தி பேசுறதை நிறுத்து” என்று கோவமாக வாசு சொல்ல. “ஆமா, ஆமா, நான் ஏன் பேசப்போறேன்? முதல்ல உங்க சாருக்கு கால் பண்ணி நைட் அடிச்ச மப்பு குறைஞ்சிருச்சா, இல்லை இன்னும் வேணுமான்னு போயி ஊத்தி குடுத்திட்டு வா” என்று தியாவும் விடாமல் வாரினாள். 

“ம், நான் எங்க சாருக்கு ஊத்திக் கொடுக்கிறதெல்லாம் இருக்கட்டும். போ போயி முதல்ல உங்க மேடமுக்கும், உங்க சாருக்கும் என்ன பஞ்சாயத்துன்னு தீர்த்து வை” என்று வாசுவும் தன் பங்கிற்கு அவளை சீண்டினான்.

“ஹலோ ஹலோ, ஒன் மினிட். வாசு, தியா, உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா?” என்று புரோடியூசர் பாவமாக கேட்டார். 

“ச்சே சே, தெரியவே தெரியாது” என்று ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வேகமாக கூறினர்.

“இல்ல, ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கிட்டீங்களே அதான் கேட்டேன்” என்று நரேன் கேட்க, “ம், எனக்கெல்லாம் தெரியாது. நான் தெரிஞ்சு வச்சிக்கிற அளவுக்கு சார் ஒன்னும் பெரிய சூப்பர் ஸ்டார் இல்லையே” என்று தியா கேலியாய் கூறினாள். 

“ஆமா, அப்படியே இவங்க பின்னாடியே ஒரு கூட்டம் மைக்க தூக்கி அலைஞ்சிக்கிட்டு இருக்கு பாரு! எனக்கும் இவள, சாரி இவங்கள சுத்தமா தெரியாது” என்று வாசுவும் அதே கேலியோடு கூறினான். 

“ஏய் இங்கப்பாரு, என்னை கிண்டல் பண்ற வேலையெல்லாம் வேணாம்” என்று தியா அவனைப் மிரட்ட, “அதே தான், என் முன்னாடி இப்படி கை நீட்டி பேசுற வேலையெல்லாம் வேணாம்” என்று வாசுவும் கோவமாய் கூறினான்.

“ஏய், ஸ்டாப் ஹாய்ஸ். என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? போங்க, போயி உங்க சாரும் மேமும் என்ன ஆனாங்கன்னு பாருங்க. அவங்க வந்தா தான் நம்ம வேலைய ஸ்டார்ட் பண்ண முடியும்” என்று நரேன் அவர்கள் இருவரையும் தடுத்தார்.

இங்கே ஆதி ஸ்ரீயை இழுத்துக் கொண்டு செல்ல, “என்னாச்சி ஆதி? நீங்க என்ன பண்றீங்க? முதல்ல கையை விடுங்க” என்றாள் ஸ்ரீ. 

அப்போதே அவள் கையை தான் பிடித்திருப்பதை உணர்ந்தவன் வேகமாக அவள் கையை விட்டு, “சாரி” என்று ஆதி சொல்ல, “ம், இட்ஸ் ஒகே. என்ன விஷயம்?” என்று கேட்டாள். 

“நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று ஆதி கேட்க, “என்ன சொல்லல?” என்று புரியாமல் ஸ்ரீ கேட்க, “இல்ல, இங்க வறேன், நீ இந்த படம் கமிட் ஆகியிருக்கேன்னு” என்று ஆதி கேட்க, “எனக்கு புரியல ஆதி. இதை நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்? அது போக நீங்களும் இங்க வர்றதை என்கிட்ட சொல்லலையே” என்று ஸ்ரீ சற்று கடுமையாகவே கூறினாள்.

“இல்ல ஸ்ரீ, நான் அப்படி மீன் பண்ணி சொல்லல. இல்ல, தீரா கூட சேர்ந்து படம் பண்றேன்னு சொல்லவே இல்லையே? அது போக உனக்குத்தான் அவன சுத்தமா பிடிக்காதே, அதான் கேட்டேன்” என்று ஆதி பொறுமையாகவே கூறினான். 

“இல்ல, எனக்குமே இப்பத்தான் இந்த படத்தோட ஹீரோ அவருன்னே தெரியும்” என்று ஸ்ரீயும் அதே பொறுமையுடனே கூறினாள். 

“அப்போ உனக்கு முன்னாடி தெரியாதா? அப்போ நீ இந்த படம் பண்ண தேவையில்லத்தான? நான் புரோடியூசர் கிட்ட பேசிக்கிறேன். நீ ஏன் உனக்கு பிடிக்காதவுங்க கூட படம் பண்ணனும்? வீணா அதுனால உனக்கு பிராபளம் தான். நீ தியாவ கூப்டு கிளம்பு, நான் மீதிய பார்த்துக்கிறேன்” என்று ஸ்ரீயின் பதிலை எதிர்பாராமல் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு சென்றான்.

“ஆதி, ஒன் செகன்ட், வெயிட். நான் இந்த படம் பண்ணணுமா இல்ல வேணாமான்னு நான் தான் முடிவு பண்ணனும். ஐ நோ நான் உங்கள மேரேஜ் பண்ணிக்க சம்மதம் சொல்லிருக்கேன், பட் அதுக்காக நான் என்ன டிசைட் பண்ணனும்னு நீங்க சொல்லாதீங்க” என்று நேரடியாகவே கூறினாள்.

உண்மையில் அதுதான் ஸ்ரீநிதியின் குணம். மனதில் ஒன்றை வைத்து பேசுவது அவளுக்கு பிடிக்காது. எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவள் இப்படித்தான் பேசுவாள். 

இந்த குலைந்து பேசுவது, பட வாய்ப்புக்காக அப்படி இப்படி பேசுவது என்ற வேலைக்கெல்லாம் அவள் அகராதியில் இடமே இல்லை. 

அவள் ஒரு படத்திற்கு சம்மதிக்கிறாள் என்றால் அதற்கு அந்த கதையும் அவள் கதாப்பாத்திரம் மட்டுமே காரணமாக இருக்கும். 

யார் விஷயத்துலையும் தலையிடவே மாட்டாள். அதுபோக யாரையும் தன் விஷயத்துக்குள் தலையிட அனுமதிக்கவும் மாட்டாள். 

அந்த ஒரே ஒரு காரணத்தால் தான் இப்போது வரை அவள் எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. அதே நேரம் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற பெயரை அவளால் எடுக்க முடியவில்லை.

உண்மையில் இது அவள் குணம் என்பது ஆதிக்கு நன்றாகவே தெரியும். இதற்கு முன் கூட பல முறை ஸ்ரீ ஆதியிடம் இப்படி பேசியிருக்கிறாள். ஆனால் அவள் சம்மதத்திற்கு பின் வந்த முதல் மறுப்பான பதில் அவன் மனதை மிகவும் காயப்படுத்தியது. 

ஆனால் ஸ்ரீக்கு உண்மையில் அவனின் காயம் புரிந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதிலே வரும். 

“இல்ல நித்தி, நான் அப்படி மீன் பண்ணி சொல்லல” என்று ஆதி தன்னிலை விளக்கம் கொடுக்க நினைத்தான். “ம், இட்ஸ் ஒகே ஆதி. பை தி வேய், எனக்கு அந்த தீரனை பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்?” என்ற தன் சந்தேகத்தை கேட்டாள். 

“வாட்?” என்று அதிர்ச்சியில் ஆதி உறைந்தான்.

“ஆமா, அவர் ஒரு பிரபல ஹீரோ, அவர் கூட சேர்ந்து நான் படம் பண்ணதே கிடையாது. அப்படியிருக்கிறப்ப அவர எனக்கு பிடிக்கும்னு சொல்றதுக்கோ இல்ல பிடிக்காதுன்னு சொல்றதுக்கோ என்ன ரீசன் இருக்கு? யா அப்கோர்ஸ், நானும் அவர பத்தி நிறையா நியூஸ் படிச்சிருக்கேன், ஆனா என்ன மீறி என்ன பிரச்சனை வரப்போகுது? அது போக எனக்கு என்னை பத்தி தெரியும், நான் ஹீரோக்காகலாம் படம் பண்ண முடியாது. கதையில என்னோட கேரக்டர் என்னன்றதை வச்சித்தான் நான் முடிவு பண்ணுவேன்” என்று ஸ்ரீநிதி மிக தெளிவாக கூறினாள்.

சரியாக அந்நேரம் தான் வாசு தீராவிற்கு மீண்டும் அழைத்திருந்தான். ஆனால் அந்நேரம் பார்த்து புறா அவன் கையில் எச்சமிட, அவன் வாஷ் செய்வதற்காக, மொபைலை ஸ்ரீக்கு பின்னால் இருந்த டேபிளில் வைத்து விட்டு வாசு சென்றிருந்தான். 

அதனால் சரியாக, “நான் ஹீரோக்காகலாம் படம் பண்ண முடியாது. கதையில என்னோட கேரக்டர் என்னன்றதை வச்சித்தான் நான் முடிவு பண்ணுவேன், நான் இந்தப்படம் கண்டிப்பா நடிப்பேன்” என்ற ஸ்ரீநிதியின் வார்த்தைகள் தீரனின் செவிக்கு தெளிவாக கேட்டது.

ஏதோ ஒரு இடத்தில் அவள் எண்ணமும் தன்னுடைய எண்ணமும் ஒத்துப்போவது போல் தீரனுக்கு தோன்றியது. 

அது போக அந்த நொடி அவனின் போதையெல்லாம் எங்கு சென்றது என்றே அவனுக்கு தெரியவில்லை. வேகமாக எந்திரித்து குளியலறைக்குள் சென்றான். 

(ஸ்ரீ, ஆதியின் இந்த மோதல் தீரனுக்கு சாதகமாய் அமையுமா? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ?..

Author:    1 Sarmi SS
Comments   2

*** ஜாலம் – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com