"வாசு, நீ கார ஓட்டு" என்று சொல்லிய தீரன் காரின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான்.
"சார், இப்ப நம்ம ஸ்டார் ஹோட்டலுக்கு தான போகனும்?" என்று வாசு கேட்க, "இல்ல, ஹோட்டல் போக மூட் இல்ல. நீ பேசாம நம்ம பீச் ஹவுஸ்கு வண்டிய விடு" என்றான்.
உடனே வாசுவும் ஈசிஆரில் மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தான். அந்நேரம் எதிர்பாராமல் வந்த ஒரு கார் இவர்கள் கார் மீது போக, வாசு சட்டென்று வண்டியை திருப்பியதில் தீரன் கையில் கட்டியிருந்த வாட்ச் கண்ணாடியில் இடித்து ரோட்டில் விழுந்திருந்தது.
அதை இருவருமே கவனிக்கவில்லை. "என்னாச்சு வாசு?" என்று அவன் கேட்க, "இல்ல சார், யாரோ தெரியாம ராங் வேய்ல வந்துட்டாங்க" என்றான்.
"ஓ, ஒகே, லெட்ஸ் கோ" என்று சொல்லிவிட்டு. சீட்டில் சாய்ந்து கண் மூடினான். பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்த தீரனை, கார் கண்ணாடியின் வழியாக வித்தியாசமாக பார்த்தான் வாசு.
"வாசு, நீ என்னோட பேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக இப்படி கார் ஓட்டுறப்பக்கூட ரோட்ட பார்க்காம என்னப் பார்த்தா எப்புடி? போ" என்று அவன் கண்ணைத் திறக்காமல் சொல்ல, "இல்ல இல்ல சார்" என்று வேகமாக அந்த வீட்டில் அவனை இறக்கி விட்டவன் காரை எடுத்துக்கொண்டு திரும்பி சென்றான்.
ஏனெனில் அந்த வீட்டில் வாசுவுக்கு கூட அனுமதி கிடையாது. அது அவனின் தனிப்பட்ட நினைவுகள் நிரம்பிய வீடு என்பதைத் தாண்டி நினைவு களஞ்சியம்.
அங்கு என்ன இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? அப்படி எதுவுமே தீரனை தாண்டி யாருக்கும் தெரியாது. உண்மையில் தீரனுக்கு கூட தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.
மறு நாள் பொழுது யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை எல்லாம் அறியாமல் ஆதி, ஸ்ரீ மற்றும் நம் தீரன் அனைவரும் இந்த நாளைக் கடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்.
உண்மையில் ஆதி சந்தோசத்தின் உச்சியில் இருந்திருக்க வேண்டும். அவனின் பல வருட காதல் இன்று கைக்கூடப் போகிறது. ஆனால் அவனுக்கோ சந்தோசத்திற்கு பதில் குழப்பமே மிஞ்சியிருந்தது.
காரணம் அப்பாவை மீறி இதை செய்ய முடியாது. அவரை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு, பாவம் ஸ்ரீ திருமணத்திற்கு சம்மதித்தது நினைவில்லாமல் போனதோ என்னவோ அவளுக்கு அதன் பின் ஒரு போன் கூட பண்ணவில்லை.
ஆனால் அவன் போன் செய்யவில்லை என்பது ஸ்ரீக்கு எந்த வருத்தத்தையும் தரவில்லை, ஆனால் நம் தியாக்குத்தான் பற்றிக் கொண்டு வந்தது.
"என்ன மனுசன் இவரு? அவன் அவன் ஒரு பொண்ணு சம்மதிச்சிட்டா எப்படில்லாம் அவளை இம்ப்ரெஸ் பண்றதுன்னு யோசிப்பான், ஆனா இவரு நம்ம மேடமே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க ஆனா ஒரு கால் பண்ணி மேடம் கிட்ட பேசல? இவரெல்லாம் எப்படித்தான் லவ் மூவி சக்ஸஸ் பண்றாரு?" என்று யோசனையில் இருந்தவளை, "என்னாச்சி தியா? காலையில இருந்து ஏதோ யோசனையாவே இருக்க" என்ற ஸ்ரீயின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.
"இல்ல மேடம், அது அந்த ஆதி சார பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்று தியா சொல்ல, "என்ன தியா? என்கிட்ட அஸிஸ்டன்டா ஜாயின் பண்றதுக்கு முன்னாடி அவர்கிட்ட அஸிஸ்டென்டா இருந்தியா என்ன? எப்ப பார்த்தாலும் அவரப் பத்தியே யோசிச்சிட்டு இருக்க" என்று ஸ்ரீ கிண்டலாய் கெட்டாள்.
"ஐயோ, ச்சி ச்சி தப்பு தப்பு, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க? நான் அவருக்காக லாம் இல்ல மேம், உங்களுக்காகத்தான்" என்று தியா பதறிப் போய் சொல்ல, "ஏய், எதுக்கு இவ்வளவு பதட்டம்? அப்புறம் எனக்காக நீ எதுக்கு அவரை நினைக்கனும்?" என்று கேட்டாள்.
"இல்ல மேடம், நைட் இவ்வளவு நேரம் ஆயிருச்சி ஒரு கால் பண்ணி நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்கனும்னு கூட தோணலையா அவருக்கு? அதான்" என்று தியா சொல்ல, "அவரு எதுக்கு அதை கால் பண்ணி என் கிட்ட கேட்கனும்? அதுக்கும் மேல நான் என்னப் பண்றேன்னு தெரிஞ்சி அவரு என்னப் பண்ணப்போறாரு?" என்று கேட்டாள்.
அதைக் கேட்ட தியாக்கு தான் எங்குப் போயி முட்டிக்கொள்வது என்று தோன்றியது. "மேம், என்ன மேம்? அவரு உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறாரு மேம், அப்ப இதெல்லாம் அவரு தெரிஞ்சிக்கனும்" என்றாள்.
"இங்கப்பாரு தியா, கல்யாணம் பண்ணிக்கப் போனா, எனக்குன்னு பிரைவசி இருக்காதா? எனக்குன்னு சில லிமிட்ஸ் இருக்கு, அதுக்குள்ள யார் வந்தாலும் எனக்கு பிடிக்காது" என்று ஸ்ரீ சொல்ல, "இல்ல மேடம், அது" என்று தியா ஏதோ சொல்ல வந்தாள்.
அதற்குள், "உனக்கு இன்னிக்கு தூக்கம் வரலன்னு நினைக்கிறேன், ஆனா எனக்கு நல்லா தூக்கம் வருது. நாளைக்கு நரேன் சார் கூட மீட்டிங் இருக்கு" என்று ஸ்ரீ சொல்ல, "என்ன மேம்? நரேன் சார் கூடையா?" என்று தியா வேகமாக கேட்டாள்.
"ஏய், என்ன மறந்துட்டியா? ஆல்ரெடி அவர் படத்துக்கு ஒகே சொல்லிருக்கேன். நினைப்பு இருக்கா இல்லையா?" என்று ஸ்ரீ கோவமாக கேட்க,
"அட ஆமா மேம். நானும் இங்க நடந்த குழப்பத்துல நான் சுத்தமா மறந்துட்டேன்" என்று தலையில் தட்டிக் கொண்டாள்.
"அஸிஸ்டன்ட மாத்தனும் போலயே?" என்று ஸ்ரீ கிண்டலாக சொல்ல, "ஐயோ மேம்! சரி மேம், வெறும் கதைய மட்டும் கேட்டு ஒகே சொல்லிட்டீங்களே, ஹீரோ யாரு?" என்று தியா கேட்டாள்.
"யாரா இருந்தா என்ன? எப்படியும் பாப்புலரா இருக்கிற ஹீரோ தான் செலக்ட் பண்ணுவாரு. அதுவும் போக இத ஆதி தான் டைரக்ட் பண்றாராம். அதெல்லாத்துக்கும் மேல இந்த கத எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கண்டிப்பா யார் நடிச்சாலும் சக்ஸஸ் தான்" என்று ஸ்ரீ சொல்ல, "என்னது ஆதி சார் டைரக்க்ஷனா?" என்று அதிர்ச்சியாய் கேட்டாள் தியா.
அங்கே ஆதியோ "அப்பா பிளீஸ் பா, ஒரு செகன்ட் நான் சொல்றதைக் கேளுங்க" என்று ஏறக்குறைய கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால் அவரோ அசைவேனா என்பது போல் அமர்ந்திருந்தார்.
"அப்பா ஒரு வேள இப்ப நான் இந்தப் பொண்ன கல்யாணம் பண்ணிக்கல அப்படின்னாலும் உங்களுக்கு கெட்டப் பேரு தான்" என்று ஆதி சொல்ல, அவனை ஒரு நொடி அமர்நாத் நிமிர்ந்து பார்த்தார்.
அந்த சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் அக்சயா மற்றும் சுபத்ரா மூவரும், "ஆமப்பா, அண்ணன் சொல்றதுதான் சரி. நியூஸ் இப்பவே இப்படி போடுறாங்க, இப்ப மட்டும் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா அண்ணாவ பத்தி ரொம்ப தப்பு தப்பா எழுதுவாங்க. அதுக்கும் மேல அந்தப் பொண்ணு கேஸ் கொடுத்தா போலீஸ் கூட பிடிச்சிட்டு போயிருவாங்க" என்றாள்.
"என்னடி சொல்ற?" என்று சுபத்ரா அதிர்ச்சியாகி கேட்க, "ஆமம்மா, உன் பிள்ளைய இப்பவே நல்லா பார்த்துக்கோ. அப்புறம் ஏழு கம்பிக்கு நடுவுல தான் பார்க்கனும். அங்க உன் பிள்ளைக்கு சோறுலாம் போட மாட்டாங்க, வெறும் கலி தான்" என்று சுபத்ரா வயிற்றில் புளியைக் கரைத்தாள்.
"என்னங்க, கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருசத்துல நான் உங்ககிட்ட எதுவுமே கேட்டது இல்ல. முதல் தடவையா கேட்கிறேன், என் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. உங்க வறட்டு கெளரவுத்துக்காக என் பிள்ளைய என்கிட்ட பிரிச்சிராதீங்க" என்று ஒரே சோக கீதம் வாசிக்க, ஒரு கட்டத்தில், "சரி, நான் சம்மதிக்கிறேன். ஆனா ஒரு கன்டிஷன்" என்றார் அவர்.
"என்னது?" என்று மூவரும் ஒரே நேரத்தில் கேட்க, "அந்தப் பொண்ணு இனி படத்துல எல்லாம் நடிக்கக்கூடாது" என்றார் அவர்.
அதே நேரம் இங்கே "என்னாச்சு தியா? ஏன் இவ்வளவு ஷாக்?" என்று ஸ்ரீ கேட்க, "இல்ல, ஆதி சார் டைரக்க்ஷன்ல நீங்க நடிச்சா சரியா வருமா?" என்று தியா இழுத்தாள்.
"ஏன்? ஏற்கனவே அவர் டைரக்க்ஷன்ல படம் நடிச்சிருக்கேனே" என்று அசால்டாக சொல்ல, "அது அப்ப மேம், இப்ப அவரு உங்கள கட்டிக்க போறவரு. அவர் முன்னாடி நீங்க எப்படி வேற ஹீரோ கூட நடிக்க முடியும்?" என்று சங்கடமாய் கேட்டாள்.
"ஏய், ஹீரோ கூட நடிக்க முடியுமா இல்லையான்னு நான் தான் முடிவு பண்ணனும். என்னோட ப்ரோபசனல் விசயத்துல தலையிடுற உரிமைய யாரு அவருக்கு கொடுத்தது? அப்புறம் இதுல என்ன இருக்கு? ஏன் இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படத்த எல்லாம் அவர் பார்த்ததே இல்லையா?" என்று அசால்டாக கேட்டாள் ஸ்ரீ.
"அப்படியில்ல மேடம்” என்ற தியாவோ மனதினுள், “ஐயோ, இவங்களுக்கு எப்படித்தான் சொல்லி புரிய வைக்கிறது? காதல் கல்யாணம் அப்படின்றது படத்துல வர்ற சீன் இல்ல, வாழ்க்கையில நடக்க வேண்டிய முக்கியமான ஒரு உறவுன்னு எப்ப நம்ம ஹீரோயினுக்கு புரியப் போகுதோ? யோவ் ஆதி, உன்னலாம் நம்பி எங்க மேடம் கிட்ட உனக்கு அம்புட்டு சப்போர்ட் பண்ணிருக்கேன். ஏதாச்சும் பண்ணி எங்க மேடம்ம கரெக்ட் பண்ணல, நானே உன்னை கொன்றுருவேன்" என்று புலம்பினாள்.
ஆனால் இவள் புலம்பலுக்கு சொந்தக்காரனோ தன் தந்தையை சமாளிப்பதற்கு வழி தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
"என்னடா இப்படி நிக்கிற? உங்க அப்பா அதான் இவ்வளவு தூரம் இறங்கி வந்துட்டாரே. நம்மகிட்ட இல்லாத சொத்தா? வேணும்னா அந்த நித்திப் பொண்ணுக்கிட்ட நானே பேசுறேன்" என்று சுபத்ரா சொல்ல, "அம்மா, நீ என்னம்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்க? அவங்க எவ்வளவு பெரிய ஹீரோயின் தெரியுமா? நீங்க அசால்டா நடிக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்க, நீங்க இப்படில்லாம் சொன்னா அவங்க நடிக்கிறத வேணாம்னு விட மாட்டாங்க. உன் பிள்ளையும் வேணாம் உன் குடும்பமும் வேணாம்னு போயிருவாங்க" என்றாள் அக்சயா.
"என்ன ஆதி, அதான் உன் தங்கச்சியே சொல்லிட்டாலே அந்தப் பொண்ணுக்கு குடும்பத்தை விட, ஏன் உன்னை விட அந்த நடிகைன்ற பட்டம் தான் பெருசுன்னு. அப்புறம் என்ன?" என்று அமர்நாத் கேட்டார்.
"இல்லப்பா, நித்தி நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணுலாம் கிடையாது. அது மட்டுமில்ல அவ நடிகைன்னு வெளியில யார்கிட்டையும் பெருசா சொல்லிக்கிட்டது கூட கிடையாது. ஏதோ ஒரு சூழ்நிலையில, இந்த பீல்டுக்கு வந்துட்டா அவ்வளவுத்தான். அதுக்கும் மேல அவளுக்கு அம்மா அப்பா கிடையாதுப்பா. அதனால அவ நம்ம குடும்பத்த அவ குடும்பம் மாதிரி பார்த்துப்பா" என்று ஆதி அந்த சூழ்நிலையை சமாளிக்க அப்படி சொன்னானா இல்லை உண்மையிலேயே நம் ஸ்ரீயின் மனநிலையும் அதுவா என்று கடவுளுக்குத்தான் தெரியும்.
"சரிப்பா, அதான் அந்தப்பொண்ணுக்காக இவ்வளவு பேசுறீயே, அப்ப அவ இனி நடிக்க மாட்டான்னு நேரா சொல்லு" என்று அமர்நாத் கேட்க, "இல்லப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி உடனே விடுற வேலை கிடையாது. ஏன்னா எப்படியும் குறைஞ்சது ஒரு ரெண்டு மூணு படத்துக்காச்சும் கால்ஷீட் கொடுத்திருப்பா, அட்வான்ஸ் வாங்கிருப்பா, பாதி படம் சூட்டிங்ல இருக்கும். அவ நடிக்க மாட்டேன்னு உடனே சொன்னா லீகலா நிறையா பிராபளம் வரும் பா. வேணும்னா அவ கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க மாட்டா, அதுக்கு நான் கியாரண்டி" என்று ஆதி வாக்கு கொடுத்தான்.
அதில் அவரும் அரை மனதோடு, "சரி, நான் மீதி வேலைய பார்க்கிறேன்" என்று அங்கிருந்து சென்றார்.
அதைக் கேட்டு சுபத்ரா சந்தோசப்பட, அக்சயா மட்டும் "இல்ல அண்ணா, நீ அவங்ககிட்ட கேட்காம இப்படி சொல்லிருக்கக்கூடாது. பைதி வே அப்பா சம்மதிச்சிட்டாரு, சோ என் பிரண்ட்ஸ்கு லாம் ட்ரீட் கொடுக்கனும்" என்றாள்.
"என்னடி அவசரம்?" என்று சுபத்ரா கேட்க, "ம், கல்யாணம் நடக்குமோ நடக்காதோ? நம்ம அப்பா கன்டிஷனுக்கும் கோபத்துக்கும் நீயும் உன் பிள்ளையும் வேணும்னா தலைய ஆட்டுவீங்க. ஆனா அவங்க இதுக்கு சம்மதிப்பாங்கன்னு எனக்கு தோணல" என்றாள் அக்சயா.
"என்ன ஆதி இவ இப்படி சொல்றா?" என்று சுபத்ரா கொஞ்சம் கவலையாக கேட்டார்.
"அட, இவள விடுங்க மா. எனக்கு என் நித்திய பத்தி நல்லாத் தெரியும். அவளுக்கு நடிக்கிறதுலாம் பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது" என்று இவன் இங்கு சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், "ஆமா தியா, நீ சொல்றது சரி தான். இந்த பீல்டுக்கு நான் ஆசைப்பட்டு வராம இருந்திருக்கலாம். ஆனா இத சூஸ் பண்ணது நான் தான். சோ இதுல டிஸிசன் எடுக்கிறதும் நான் மட்டும் தான்” என்றாள் ஸ்ரீ.
அதில் தியா அவளை பார்க்க, “வாழ்க்கையில, அடுத்து என்ன பண்றதுன்னு புரியாம நின்னுட்டு இருந்தப்ப எனக்கு கிடைச்ச முதல் வாய்ப்பு இந்த பீல்டு. சோ அதுக்கு என்னால எந்த அளவுக்கு நியாயமா இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நியாயமா இருப்பேன்" என்று முடித்திருந்தாள்.
அதே நேரம் அங்கே தீரனோ, "மை டியர் டாட் & மம்மி, நீங்க இருக்கிறப்பையும் நீங்க என்கூட இல்ல. நீங்க போனதுக்கப்புறமும் என் கூட இருக்கிற மாதிரி எனக்கு தோணல. ஆனா இந்த வீடு, தீரான்ற பேரு, தலைவான்ற என் பட்டம் இதுதான் எனக்கு எல்லாமே. சோ அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஐ ஹேட் யூ டேட் & யூ" என்று அவனின் பெற்றோரின் புகைப்படத்தை பார்த்து போதையில் புலம்பிக்கொண்டிருந்தான்.
(யார் மனதில் யாரோ? இல்லை என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
ada ennada aathi iniyan oda friend appadi hey avana maari nee appa pillai pola…. ava life decision eduka nee yaaru?