ஜாலம் – 14

தீப்தியை அங்கு பார்த்த ஆசிரம நிர்வாகி, “தீப்தி, நீ எப்படி இங்க வந்த?” என்று அதட்டலாக கேட்டார். ஆனால் அதற்குள் அங்கு வந்த தீரன், “பாப்பா தனியா வந்துகிட்டு இருந்தா, நான் தான் கூப்டு வந்தேன்” என்று விளக்கம் அளித்தான். 

அதை எதையும் காதில் வாங்காத தீப்தியோ, “என் இரத்தத்தை எடுத்துக்கோங்க டாக்டர்” என்று அழுது தீர்த்தாள். அதைப்பார்த்த மருத்துவரும், “இங்க பாரு பாப்பா. யார் வேணும்னாலும் யாருக்குனாலும் இரத்தம் கொடுக்க முடியாது, அதுலையும் நீ ரொம்ப சின்ன பொண்ணு” என்று புரிய வைக்க முயற்சித்தார். 

“என் பிரண்டும் சின்ன பொண்ணு தான?” என்று தீப்தி எதிர்கேள்வி கேட்டாள். அதைக்கேட்டு குழம்பிய டாக்டர், “ஆமாடா. ஆனா உன் பிளட் குரூப்பும் உன் பிரண்ட் பிளட் குரூப்பும் சேம்மா இருக்கனும், அப்பத்தான் குடுக்க முடியும்” என்று விளக்க முயற்சித்தார். 

“அப்போ செக் பண்ணி பாருங்க டாக்டர்” என்று தீப்தி கையை நீட்டினாள்.

அதைப்பார்த்து பதறிய தீரன் வேறு வழியில்லாமல் அந்த சிறுமியின் உடல் நிலையை பற்றி கேட்டான். 

கடைசியில் அந்த சிறுமியின் இரத்த வகையும் இவனின் இரத்த வகையும் ஒன்றாக இருந்தது. தீப்திக்காக தீரனும், “எனக்கும் அந்த பிளட் குரூப் தான், நான் பிளட் கொடுக்கிறேன்” என்று வேகமாக கூறினான். 

அதற்குள் வேகமாக வந்த வாசு, “சார், தெரிஞ்சி தான் பேசுறீங்களா? இரத்தம் கொடுக்கிறதுக்குன்னு சில வரை முறைகள் எல்லாம் இருக்கு” என்று கூறினான். 

“என்ன உளறிக்கிட்டு இருக்க வாசு? நான் ஏன் இரத்தம் கொடுக்க கூடாது?” என்று தீரன் சற்று கோவமாக கேட்டான். 

“இல்ல சார், அது, நீங்க டிரிங் பண்ணிருப்பீங்க” என்று வாசு தயங்கி கூறினான். அப்போதே நேற்று இரவு நன்கு குடித்து விட்டு படுத்தது எல்லாம் நினைவில் வந்தது.

மருத்துவர் இவர்கள் இருவரின் தயக்கத்தை புரிந்துக் கொண்டது போல் தீரனை தனியாக அழைத்துச்சென்று, “என்ன சார்? எனிதிங் பிராபளம்?” என்று கேட்டார். 

“அதில்ல சார், நேற்று பார்டில கொஞ்சம் டிரிங் பண்ணிட்டேன்” என்று தீரா கூறினான். “ம், ஐ அன்டர்ஸ்டான்ட் சார்! நான் செக் பண்ணிட்டு இன்பார்ம் பண்றேன் சார். முடிஞ்ச அளவுக்கு வேற டோனர் கிடைக்கிதான்னு பார்ப்போம்” என்று டாக்டர் கூறினார். அதன் பின் தான் ஆதி அங்கு வந்தது, ஸ்ரீ கோவப்பட்டது எல்லாம் நடந்தது.

அதையெல்லாம் பார்த்த டாக்டர் தீரனின் ரத்தத்தை சோதனை செய்தார். நல்ல வேளையாக அவன் குடித்து முடித்து இருபத்தி நான்கு மணி நேரம் ஆகியிருந்தது. 

அது போக அதில் பிரச்சனை இல்லை என்பதை நன்கு உறுதி செய்தப் பின்னே மருத்துவர் ஸ்ரீயிடம் வந்து கூறினார்.

இதை ஏதும் அறியாத ஆதியும் தியாவும் கேன்டீனில் நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 

“இப்ப எதுக்கு என்னை இழுத்திட்டு வந்த?” என்று ஆதி எரிச்சலாக கேட்டான். “ஹலோ, ஹலோ சார், நான் உங்களை எங்க மேடம் கிட்ட இருந்து காப்பாத்தி கூப்டு வந்திருக்கேன். நியாயமா நீங்க எனக்கு தேங்க்ஸ் தான் சொல்லனும்” என்றாள் அவள். 

“அவ என் மேல கோவமா இருக்கா! அவளை நான் சமாதானப்படுத்திருக்கனும்” என்று அவன் சொல்ல, “ம், நீங்க சமாதானப்படுத்துன லட்சணத்தை தான் நான் பார்த்தேனே?” என்று தியா நக்கலாய் கூறினாள். 

“யூ! எனக்கு தெரியும் என் நித்திய எப்படி சமாதானப்படுத்தனும்னு” என்றான் ஆதி.

“சார், நீங்க எங்க மேடம்ம அளவுக்கு அதிகமா விரும்புறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது! ஆனா அதுக்கு முன்னாடி அவங்களைப் பத்தி நீங்க இன்னும் அதிகமா தெரிஞ்சிக்கனும். பிகாஸ் எங்க மேடம் கோவமா இருக்கிறப்ப அவங்க கோவத்துக்கு காரணமானவங்க முன்னாடி நின்னா அவங்களுக்கு கோவம் போகாது, அந்த பர்ஷன் மேல வெறுப்பு தான் அதிகமா வரும்” என்று தியா பொறுமையாக கூறினாள். 

“சரி, இப்ப என்னத்தான் பண்றது?” என்று ஆதி குழப்பமாக கேட்டான். “வெரி சிம்பிள் சார். இப்ப இந்த ஜூஸை குடிச்சிட்டு, இன்னொரு ஜூஸை வாங்கிட்டு அவங்கள் முன்னாடி போயி நில்லுங்க” என்று தியா சில ஐடியாவை வாரி வழங்கினாள். 

“ம், ஒகே” என்று ஆதியும் தன் கையில் இருந்த ஜூஸை குடிக்க ஆரம்பித்தான். “ஸ்ப்பா! இவங்க ரெண்டு பேரை சேர்த்து வைக்கிறதுக்கே எனக்கு தனி தெம்பு வேணும் போலேயே? அதுக்காகவாச்சும் நீ இந்த ஜூஸை குடிச்சே ஆகனும்” என்று தியாவும் தன் கையில் இருந்த ஜூஸை குடிக்க ஆரம்பித்தாள்.

அதே நேரம் வாசு தீராவிடம் ஜூஸை நீட்டினான். அதை வாங்கி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் கொட்டினான். 

“சார், என்ன சார் பண்றீங்க?” என்று வாசு குழப்பமாக கேட்டான். “என்ன கொண்டு வந்து கொடுக்கிற வாசு? இந்த டைம்ல நான் குடிக்கிற ட்ரிங்கா இது?” என்று தீரா சற்று எரிச்சலாக கேட்டான். 

“இல்ல சார், பிளட்லாம் கொடுத்திருக்கீங்க, சோ அதான்” என்று வாசு ஏதோ சொல்ல வந்தான். “ஓ மை காட்! அதையே திரும்ப திரும்ப சொல்லாத, எனக்கே ஒரு மாதிரி இருக்கு! நம்ம கிளம்பலாம்” என்று தீரா சொல்லும் போது தான் ஸ்ரீயும் அந்த அறை வாசலுக்கு வந்தாள்.

“சார், அந்த பாப்பாக்கு” என்று வாசு ஏதோ சொல்ல வந்தான். “ஸ்டாப் இட் வாசு! ஐ நோ நான் இரத்தம் கொடுத்திருக்கேன், சோ கண்டிப்பா அந்த குழந்தைக்கு எதுவும் ஆகாது பிகாஸ்” என்று தீரன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போது, “மேடம்” என்ற ஒரு செவிலியரின் குரலில் அங்கிருந்து ஸ்ரீ தீரனை பார்க்காமல் சென்றாள். 

“பிகாஸ் பிளட் கொடுத்தது நான், இந்த தீரா! எமன் தர்மனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கப்புறம் எனக்கு இந்த ஹாஸ்பிடல் செட்டப் எல்லாம் சுத்தமா பிடிக்கல, இப்ப நம்ம உடனே கிளம்புவோம்” என்று தீரன் கூறினான். 

“என்னமோ பிளட் கொடுக்க வாங்கன்னு நான் அவரை கூப்டு வந்த மாதிரி சொல்றாரு” என்று முனுமுனுத்தான்.

அதற்குள் அங்கு வந்த தீப்தி, “தாங்கியூ தீரன்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அதில் அவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் சற்று மட்டு பட்டது போல் தீரனுக்கு தோன்றியது.

“சொல்லுங்க சிஸ்டர்” என்று ஸ்ரீநிதி தன்னை அழைத்த செவிலியரிடம் கேட்டாள். 

“மேம், இந்தாங்க” என்று ஸ்ரீயின் கிரிடிட் கார்டை திருப்பிக் கொடுத்தாள். “என்னாச்சு சிஸ்டர்? கார்ட் ஒர்க் ஆகலையா?” என்று குழப்பமாய் கேட்டாள். 

“இல்ல மேம், ஹாஸ்பிடல் பில் எல்லாத்தையும் தீரா சார் கிளியர் பண்ணிட்டாரு. அது போக ஹாஸ்பிடல்க்கு எக்ஸ்ட்ரா டொனேஷனும் கொடுத்திருக்காரு” என்று அந்த சிஸ்டர் கூறினார்.

அதைக்கேட்ட ஸ்ரீநிதி, “தீரா சாரா?” என்று ஆச்சர்யமாக கேட்டாள். “ஆமா மேம்” என்று அந்த செவிலியர் ஸ்ரீயிடம் கார்டை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

“ம், நம்ம நினைச்ச மாதிரி தீரன் ஒன்னும் அவ்வளவு கெட்டவர் இல்லையோ? இல்லை வெளியுலகத்துக்காக இப்படி நடிக்கிறாரா?” என்று ஸ்ரீநிதி மனதினுள் யோசித்தாள். 

அப்போது சற்று முன், “இந்த பிளட் கொடுத்த விசயத்தை மறுபடியும் சொல்லாத” என்று தீரன் வாசுவிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. “ரோட்ல கிடக்கிற முள்ள எடுத்து ஓரமா போட்டாலே அதை போட்டோ எடுத்து போட்டு பில்டப் பண்றாங்க. அப்படியிருக்கிறப்ப ஒரு உயிரையே காப்பாத்திட்டு எப்படி அதைப் பத்தி யார்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு ஒருத்தரால இருக்க முடியும்? அப்படி இருக்கிற ஒருத்தர் எப்படி வெளி உலகத்துக்காக நல்லவரா நடிக்க முடியும்?” என்று ஸ்ரீயின் உள்மனம் கேள்வி கேட்டது. 

அதெல்லாவற்றிற்கும் மேல் தீரனை சந்தித்து இப்போது நன்றி சொல்ல வேண்டும் என்று மூளை நியாபகப் படுத்தியது.

உடனே தீரன் இருந்த அறைக்கு சென்று கதவைத் திறந்தாள். அதே நேரம், “நித்தி” என்று ஆதி கையில் ஜூஸுடன் ஸ்ரீயை கூப்பிட்டான். 

திரும்பி பார்த்த ஸ்ரீக்கு ஆதியின் முகம் சற்றும் கவனத்திற்கு வரவில்லை. தீரனிடம் பேசும் முனைப்போடு ஸ்ரீ அந்த அறைப் பக்கம் தன் கவனத்தை செலுத்தினாள். 

ஆதியுமே ஸ்ரீ எங்கு பார்க்கிறாள் என்று அவனும் அந்த அறையை எட்டிப் பார்த்தான். அங்கே அந்த அறையில் தீரனும் இல்லை வாசுவும் இல்லை, அந்த அறையே காலியாக இருந்தது.

“என்னாச்சு ஸ்ரீ? இங்க வந்து ஏன் நிக்கிற? வா, நீயும் காலையில இருந்து சாப்பிட்டிருக்க மாட்டத்தான?” என்று ஆதி அக்கறையாக கூப்பிட்டான். ஆனால் ஸ்ரீயின் நினைவு முழுவதும் தீரனை சுற்றி இருந்தது. “இங்கத்தான இருந்தாரு? எங்கப் போனாரு?” என்று ஸ்ரீ யோசித்தாள்.

அந்நேரம் அங்கு வந்த தியா, “என்ன? இன்னும் ஆதி சார் மேடம்ம சமாதானப்படுத்தலையா? இவருலாம் எப்படித்தான் டைரக்டர் ஆனாரோ, கடவுளுக்கு தான் வெளிச்சம்” என்று சற்று வாய்விட்டே கூறினாள். 

தியா கூறியது ஸ்ரீக்கு கொஞ்சமும் கேட்கவில்லை, ஆனால் ஆதியின் காதில் தெளிவாக விழுந்தது. ஆதி தியாவை முறைக்க, அதைப் பார்த்த தியா, “சார், என்னை எப்ப வேணும்னாலும் முறைச்சிக்கலாம்! ஆனா முதல்ல மேடம்ம சமாதானப்படுத்துங்க” என்று மெதுவாக ஆதியின் காதில் கூறினாள்.

“ஸ்ரீ, ஐயம் ரியலி சாரி. நான் எதுவும் வேணும்னு பண்ணல! உன்னை டென்சன் ஆக்க கூடாதுன்னு தான் நான் ட்ரைப் பண்ணேன், ஆனா அதுவே இவ்வளவு பெரிய பிரச்சனையாகும்னு நினைக்கவே இல்ல” என்று ஆதி தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

“பிளீஸ் ஆதி! இதுக்கப்புறம் நான் இதைப்பத்தி பேச விரும்பல. இட்ஸ் பெட்டர் நம்ம இந்த டாபிக்க இப்படியே விட்ருலாம்” என்று ஸ்ரீநிதி பொறுமையாக கூறினாள். 

ஆனால் ஸ்ரீயின் வார்த்தை என்னவோ ஆதிக்கு என்றாலும் கண்கள் தீராவை சுற்றி தேடிக்கொண்டிருந்தது.

அதன் பின் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் கூறிய பின்னே ஸ்ரீ அங்கிருந்து கிளம்பினாள். 

அதன் பின் வீட்டிற்கு வந்த ஆதி நிச்சயத்தை பற்றி உடனடியாக வீட்டில் பேச வேண்டும் என்று தன் அன்னையிடம் பேச சென்றான். அக்சயாவும் சுபத்ராவும் சோபாவில் அமர்ந்து பழைய ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆதியை பார்த்த அக்சயா, “ம்மா, எனக்கென்னமோ உன் கல்யாணத்துக்கு தான் ஆல்பம் எல்லாம், அப்புறம் ஸ்ட்ரைட்டா எனக்கு தான் நினைக்கிறேன்” என்று கிண்டலாக கூறினாள்.

“என்னடி உளறிக்கிட்டு இருக்க?” என்று சுபத்ரா புரியாமல் கேட்டார். “ம், அத உன் அருமை பையன் சொல்லுவான்! நீயே கேளு” என்று அக்சயா தன் முன் நின்ற ஆதியை கை காட்டினாள். அப்போதே சுபத்ராவும் ஆதியைப் பார்த்தார். 

“வாப்பா ஆதி, என்னாச்சு இன்னிக்கு இவ்வளவு லேட்டா வந்திருக்க? ரொம்ப வேலையா?” என்று சுபத்ரா அக்கறையாக கேட்டார். 

“அம்மா, உனக்கே இது அநியாயமா தெரியல? அவன் என்னிக்குமா சீக்கிரம் வந்திருக்கான்! அப்புறம் ஸ்டார்ட், ஆக்சன், கட்னு சொல்றதெல்லாம் ஒரு வேலைையா?” என்று அக்சயா வழக்கம் போல் தன் தமையனை சீண்டினாள். 

ஆனால் அதை எதையும் கண்டுக்கொள்ளாத ஆதி சுபத்ராவின் அருகில் சென்று அவர் கையைப் பிடித்து, “அம்மா, நீ தான்மா எப்படியாச்சும் அப்பாகிட்ட பேசி நிச்சயத்தை இந்த மாசத்துலையே வைக்க சொல்லனும்” என்று கவலையாக கூறினான்.

அதே நேரம் ஸ்ரீயின் வீட்டில், தியா ஸ்ரீயைப் பார்த்து, “என்ன மேம் கேட்டீங்க? தீரா சார் நம்பர் வேணுமா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள். 

“ஏய், இப்ப எதுக்கு நீ இவ்வளவு ஷாக் ஆகுற? நம்பர் வேணும். உன்னால வாங்கி கொடுக்க முடியுமா இல்லை நானே நரேன் சாருக்கு கால் பண்ணி வாங்கிக்கடட்டுமா?” என்று ஸ்ரீ சாதாரணமாக கேட்டாள். 

“இல்ல, இல்ல மேம், இல்ல, திடீர்னு அவரு நம்பர் கேட்டீங்களா, அதான்!” என்று தியா குழப்பமாக கூறினாள். அதுவா என்று ஸ்ரீ தீரன் மருத்துவமனைக்கு வந்து பிளட் கொடுத்ததையும், அவருக்கு நன்றி சொல்வதற்கு முன் அவர் அங்கிருந்து சென்று விட்டதையும் கூறினாள். 

“என்ன, தீரா சாரா?” என்று தியாவுமே சற்று ஆச்சர்யமாகத்தான் கேட்டாள். “ஆமா, சரி, நம்பர் கிடைக்குமா இல்லையா?” என்று ஸ்ரீ கேட்டாள். 

“மேடம், நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க? ஏற்கனவே இப்பத்தான் மீடியா எல்லாம் அமைதியா இருக்கு. இந்நேரம் போயி நீங்க தீரா சாருக்கு பர்ஷனல்ல கால் பண்ணி பேசுனா நல்லா இருக்காது. எப்படியும் அவர் கூடத்தான படம் பண்ணப் போறோம், நேர்ல பார்க்கிறப்ப சொல்லிக்கலாம்” என்று தியா பொறுமையாக கூறினாள். ஸ்ரீக்கும் அதுவே சரியென்று பட, “சரி, நாளைக்கு பாப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அதே நேரம் ஆதி தன் அன்னையின் உதவியுடன் ஒரு வாரத்தில் நிச்சயம் வைத்துக்கொள்ள அவன் அப்பாவிடம் சம்மதத்தை வாங்கியிருந்தான். நம் தீரனோ காலையில் நடந்த அத்தனையையும் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாளை என்ன நடக்கும் என்பதை? இவர்கள் மூவர் மட்டுமல்ல, நாமும் கணிக்க முடியாது!.. அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ?..

Author:    1 Sarmi SS
Comments   1

*** ஜாலம் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com