காதல் – 9

முகிலனும், மித்ராவும் நீதிமன்றம் என்றும் பாராமல், முட்டி மோதிக் கொண்டிருக்க, “ஹலோ பாஸ், மேடம்” என்று இவர்கள் இருவருக்கும் இடையில் சமாதானாப் புறாவாய், வேந்தன் களமிறங்கினான்.

ஆனால் அவர்கள் இருவரும், இவனை கண்டுக் கொள்ளாது, அவர்கள் போக்குக்கு சண்டையை தொடர்ந்தனர்.

அதில், “பாஸ், இங்க இருக்கிற எல்லாப் பத்திரைக்காரங்களும், நம்மளத்தான் போகஸ் பண்ணிட்டு இருப்பாங்க. நம்ம இப்ப சின்னதா, ஏதாச்சும் பண்ணாக்கூட, அவங்க பெருசா எழுதிருவாங்க பாஸ்” என்று ஏறக்குறைய முகிலனிடம் கெஞ்சலாய் கூறினான்.

அதற்கெல்லாம் அசருபவனா, அவன்? 

அப்போதும் அதை பொருட்படுத்தாது, “நீ அங்கிட்டு போ. இன்னிக்கு இவள” என்று முகிலன் மித்ராவை நெருங்கினான்.

அதில் இப்போது வேறு வழியின்றி, மித்ராவின் பக்கம் திரும்பி “மேடம். பிளீஸ் நீங்களாச்சும் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. இது கோர்ட் மேடம். இங்க இப்படி பிகேவ் பண்ணா, இவருக்கு மட்டும் இல்ல மேடம், உங்களுக்கும் பிரச்சனைத்தான். சாரி மேடம். அவருக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று வேந்தன் மன்னிப்பு கேட்டான்.

அப்போதே அவளுக்கும் சுற்றுப்புறம் புரிய, சற்று தணிந்து, “இந்த மரியாதைய கொஞ்சம் உங்க பாஸ்-க்கு சொல்லி கொடுங்க. இப்போ விடுறேன். ஆனா அவருக்காக இல்ல, உங்களுக்காக” என்று மித்ரா வேந்தனிடம்  சொல்லிக் கொண்டிருக்கும் போதே. இவர்கள் கேஸ் ஆரம்பிக்க போவதற்கான அறிவிப்பு வந்தது. 

அதில் மித்ராவும் அங்கிருந்து செல்ல, வேந்தனோ நிம்மதியாய் நெஞ்சில் கை வைத்தான்.

அதற்குள் அவன் தலையில் தட்டிய முகிலனோ, “நீ பெரிய இவன். உனக்காக, அவ, அந்த கேஸ் எடுக்கிறாளா” என்று சீறினான்.

“இல்ல பாஸ். அப்படி இல்ல” என்று வேந்தன் தடுமாற, “கேஸ் மட்டும் சொதப்பட்டும். அப்புறம் இருக்குடா உனக்கு” என்று வேந்தனை முறைத்துக் கொண்டு மித்ராவின் பின்னால் சென்றான் முகிலன். 

அதே நேரம் அங்கே இஷாந்தோ “ஏய், என்னாச்சி? ஏன் இப்படி காலையில இருந்து மெளன விரதம் இருக்கிற?” என்று நூறாவது முறையாக மதியிடம் கேட்டு விட்டான். 

ஆனால் அவள் தான் எந்த பதிலும் சொல்லவில்லை. 

அதில் எக்கசக்க கடுப்பானவன், “மதி. இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு?” என்றான்.

அப்போதும், குரலில் தெளிவு இல்லாமல், “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்” என்று சோகமாக பதிலளித்தாள்.

“ச். இப்ப சொல்லப் போறீயா, இல்லையா?” என்று இஷாந்த் சற்று அதட்டலாய் கேட்டான்.

ஏனெனில், இப்படி எல்லாம் அவள் அமைதியாய் இருக்கும் ரகமே கிடையாதே.

அதில் இப்போது அவனைப் பார்த்த மதியோ ஒரு நொடி தயங்கி பின், “சொல்லுவேன். ஆனா நீங்க திட்டக்கூடாது” என்றாள்.

“ஓ. மேடம் எனக்கு பயப்படலாம் செய்வீங்களா? பாரேன் எனக்கு தெரியவே இல்ல” என்று நக்கலாய் கேட்டான் இஷாந்த்.

“சார்” என்று பாவமாய் அவனை அவள் பாக்க, “இல்ல. நான் திட்டுறதுக்குலாம் அசருற ஆளா நீங்க?” என்று இன்னும் நக்கலாய் கேட்டான்.

அதில் இவளுமே வேகமாய், “அப்படில்லாம் சொல்லிட முடியாது. இருந்தாலும், நீங்க என் சீனியர் வக்கிலாச்சே.அதான். கொஞ்சம் மரியாத” என்றாள்.

“பரவாயில்லையே. என் மேல உனக்கு மரியாதையெல்லாம் இருக்கா. சரி சொல்லு என்ன விசயம்?” என்றான் இஷாந்த்,

“இல்ல சார். அந்த சிகப்பு சட்டைக்கு ஒன்னும் ஆயிருக்காதுல?” என்று ஆயிரமாவது முறை, இஷாந்திடம் கேட்டாள் மதி. 

அதில் அவனுக்கோ ஐயோ என்றிருந்தது. ஏனெனில், இதைத்தான் அவள் பல தடவை கேட்டுவிட்டாள். உண்மையில் அந்த சிகப்பு சட்டை இன்னேரம் வீட்டுக்கே போய் சாப்பிட்டு உறங்கியிருப்பான்.

ஆனால் மதி விடுவதாய் இல்லை. அதில் சிறு கடுப்புடன், “ஏய் நீ இன்னும் அத விடலயா? அவனே நீ கீழ விழுந்தத கூட கண்டுக்காம போயிட்டான். அதுக்கும் மேல. நீ அவன் உயிரையே காப்பாத்தியிருக்க. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல” என்றான்.

“இல்ல சார். அவரும் விழுந்த டென்சன்ல இருந்திருப்பாருல” என்று மதி அவனுக்கு சப்போர்ட் செய்தாள். 

அதில் இன்னும் எரிச்சலானவன், “உன் உயிர கூட ரிஸ்க்ல வெச்சி அவன காப்பாத்தியிருக்க. அப்படி என்ன! அவன் மேல உனக்கு அக்கறை?” என்று சற்று கடுப்பாய் கேட்டான்

“அவன் மேல ஒன்னும் அக்கறையில்ல. அந்த சிகப்பு சட்ட மேலதான்” என்று மதி பட்டென்று கூறினாள்.

“என்ன சட்ட மேலையா?” என்று புரியாமல் இஷாந்த் கேட்டான்.

“ஆமா சார். அந்த வீணாப்போனவன காப்பாத்த போறேன்-னு அநியாயமா, என் கம்மல அவன் சட்டையில விட்டுட்டேன். வீட்ல அம்மா எப்படி திட்டுனாங்க தெரியுமா? அது மட்டுமில்ல. அந்த கம்மல் எனக்கு எங்கப்பா, நான் டுவல்த்ல நல்ல மார்க் எடுத்ததுக்கு வாங்கி கொடுத்தது” என்று அழுகாத குறையாய் கூறினாள்.

“அதுக்கப்புறம் உனக்கு உங்கப்பா, கம்மலே வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்களே?” என்று இஷாந்த் கேட்க, “ஆமா. சார். எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று மதி ஆர்வமாக சிறு ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“ம். உன்னோட. ஈபி.கோ செக்க்ஷன் லட்சனத்த தான், தினமும் பார்க்கிறேனே. அப்புறம் எங்குட்டு நீ காலேஜ்ல நல்ல மார்க் வாங்கிருக்க போற” என்று அவளை வாரினான்.

அதில் மதியோ அவனை முறைக்க, அதற்குள் இஷாந்தோ, “சரி சரி. நீ சந்தோசப்படுற மாதிரி ஒரு விசயம் சொல்லவா?” என்றான் இஷாந்த்.

“என்ன சார்?” என்று மதி புருவம் உயர்த்தி அவனைப் பார்க்க, “ம். உங்க மேடம். கோர்ட் ல வாதாட போறாங்க. நீ என்னன்னா, இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க?” என்றான்.

“இல்லையே. அந்த பெரியவர் கேஸ், நாளைக்கு தான் ஹியரிங். புல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன்” என்று மதி பெருமையாய் கூறினாள்.

“ஆமா. நம்மளோட கேஸ் எப்ப ஹியரிங் வருது” என்று இஷாந்த் அவளை முறைத்தப்படி கேட்டான்.

அதில் இவளோ, “ம். நமக்கு கேஸ் இருக்கா, என்ன?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

“விளங்கும். உன்னைப் போயி அசிஸ்டன்டா வச்சிருக்கேன் பாரு. அப்புறம் எப்படி எனக்கு கேஸ் வரும்” என்று இஷாந்த் கடுப்பாய் கூறினான்.

“இல்லன்னா மட்டும், பில்கேட்ஸ் டைவர்ஸ் கேஸ எடுத்து நடத்திருப்பாரு”. என்று மதி மனதிற்குள் முனுமுனுத்தாள்.

அதில் அவளை முறைத்தவன், “உன்னை” என்று திட்ட வந்து, பின் அவள் மனதை மாற்ற நினைத்து “இல்ல உங்க மேடம் புது கேஸ் ஒன்னு எடுத்துருக்காங்களாம். வேனும்னா நீயே போயி பாரு” என்றான்.

அதற்கு அவளிடம் இருந்து பதில் வராமல் போக, அதன் பின்னே அவன் திரும்பி பார்த்தான். அங்கே அவள் இல்லை. அவளோ. அவன் புது கேஸ் என்று சொன்ன உடனேயே, நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருந்தாள்.

“அப்படி இவளுக்கு, அவ மேல என்னதான் கிரேஸோ?” என்று தலையில் அடித்துக் கொண்டான் இஷாந்த்.

அங்கே நீதிமன்றத்தில், “ஏற்கனவே கூறியது தான் யுவர் ஆனர். நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுக்காமல், சொன்ன நேரத்திற்கு கூட வர முடியாத ஒருவருக்காக, நீதிமன்ற நேரத்தை நான் வீணடிக்கவில்லை” என்று மூர்த்தி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, புயலென உள்ளே நுழைந்த மித்ராவை, அந்த வக்கில் மூர்த்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது அவர் முகத்திலேயே தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. 

அவர் மட்டுமல்ல, அங்கே இருந்த யாருக்குமே முதலில் புரியவில்லை. ஏனெனில். மித்ரா அப்படி எல்லாம் இந்த மாதிரியான கேஸை எடுக்க மாட்டாள். அதனால் அனைவரும் அவளைப் பார்த்தப்படிதான் இருந்தனர்.

ஆனால் மித்ராவோ வழக்கம் போல் யாரையும் கண்டுக்கொள்ளாமல், “தாமதத்திற்கு மன்னிக்கவும் யுவர் ஆனர். மிஸ்டர் முகிலன் சார்பா வாதாட போற வக்கில் நான் தான்” என்று தன்னை அறிமுகப்படுத்தினாள்.

அதைக்  கேட்டதும் வேகமாய், “யுவர் ஆனர். இப்படி ஒரு கேஸ்-ல வாதாடனும்னா, லீகல்லா, எல்லா டாக்குமெண்ட் அண்ட் சப்மிசனும் முன்னாடியே சப்மிட் பண்ணிருக்கனும், இப்படி யார் வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் வந்து வாதாட முடியாதுன்ற சட்டம் கூட தெரியாமலா வந்திருக்காங்க” என்று நக்கலாய் கேட்டார் மூர்த்தி.

அதில் முகிலன் வேந்தனை முறைக்க, அவனோ, “ஐயோ அந்த மூர்த்தி பேசுறதுக்கு இவர் எதுக்கு என்னை முறைக்கிறாரு” என்று தனக்குள்ளே முனுமுனுத்தான் வேந்தன்.

அங்கே மித்ராவோ “யுவர் ஆனர். நான் இப்ப லீகல் பார்மாலிட்டீஸ் கிளியர் பண்ணலன்னு, எதிர்கட்சி வக்கிலுக்கு யார் சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா ஈ.பி.கோ சட்டம் 22வது பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு, விசாரனையில், போதுமான வாய்ப்பளிக்கவும், தனக்கு விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும் முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் மேல், சில முக்கிய வழக்குகளில், வழக்கறிஞர்கள் இல்லாமலே,, வென்ற வழக்குகளைக்கூட நாம் சந்தித்திருக்கிறோம். அப்படி இருக்கையில், ஒரு குற்றவாளியே தனக்காக வாதாட சட்டம் சொல்லும் போது, ஒரு வழக்கறிஞரான நான் அவருக்காக வாதாட முடியாதா என்ன? இந்த சாதாரண விசயம் கூட தெரியாத அளவுக்கு, சட்டம் தெரியாதவரா, இந்த தலை சிறந்த வழக்கறிஞர்?” என்று அவர் போட்ட பந்தை அவருக்கே திருப்பி அடித்தாள் மித்ரா. 

அதில் மூர்த்தியோ, ஒரு நொடி என்ன சொல்ல என்று தெரியாது தடுமாற, “மித்ரா மேடம்கிட்ட பேசி ஜெயிச்சிட முடியுமா?” என்று அங்கிருப்பவர்கள் பேசிக் கொண்டனர்.

அதற்குள், “யுவர் ஆனர். அதுக்கும் மேல. நான் காலையிலேயே. இந்த வழக்குக்கான அத்தனை தகவல்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டேன். இதோ அதற்கான நகல்” என்று மித்ரா மீண்டும் மூர்த்தியை வாரினாள்.

அதைப் பார்த்த நீதிபதியும், “ஒகே யூவார் ப்ரோசீட்” என்று சொல்ல, “தாங்கியூ யுவர் ஆனர்” என்று நீதிபதியை பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி முகிலனை பார்த்தாள். 

அவனோ பேயறைந்தார் போல், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்படி அவன் நிற்பதை சிறு புன்னகையோடு ரசித்தவளின் முகம் சட்டென்று தீவிரமாக மாறி, அவனை முறைத்தது. 

அதில் தெளிந்தவன், அவளை முறைத்துக்கொண்டே அவனுக்கான சீட்டில் அமர்ந்தான். 

அதன் பின்னே மீண்டும், “யுவர் ஆனர். முகிலன் குரூப் ஆப் கம்பெனிஸ் பத்தி நான் சொல்லி எல்லாருக்கும் தெரியனும்-னு எந்த அவசியமும் கிடையாது. ஏன்னா? இப்ப இங்க நிக்கிற நம்ம கிரேட் மூர்த்தி பிரசாத் சார்-ரே பல தடவ அந்த கம்பெனிக்காக வாதாடி நாம கேட்டிருப்போம். அப்படியிருக்கிறப்ப” என்று மித்ரா ஏதோ சொல்ல வந்தாள்.

அதற்குள், “அப்ஜக்சன் யுவர் ஆனர். எதிர்கட்சி வக்கில், என்னுடைய முந்தைய வழக்குகளை பத்தி, இந்த வழக்குகளோட சம்பந்த படுத்துறத, நான் வன்மையா கண்டிக்கிறேன். இப்படி தேவையில்லாதத பேசி கோர்ட் நேரத்தை வீணாக்குறாங்க. இந்த வழக்க பத்தி மட்டும் பேச சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மூர்த்தி.

“யுவர் ஆனர். எனக்கு எப்பவுமே நீதிமன்றத்தோட நேரத்த மட்டுமில்ல, என் நேரத்தையும் வீணடிக்கிறது பிடிக்காது. அப்புறம் ஒரு வழக்க இன்னொரு வழக்கோட காரணம் இல்லாம நான் இணைக்க மாட்டேன். ஈவன், ஒரு வழக்குல கொடுக்கிற, ஜட்ஜ்மெண்ட வெச்சே, இன்னொரு வழக்குக்கான ஜட்ஜ்மெண்டையே வாங்க முடியும். அப்படி இருக்கிறப்ப, நான் என்னோட காரணத்த கூட சொல்லவிடாம இப்படி தடுக்கிறது என்ன நியாயம் யுவர் ஆனர்” என்றாள் மித்ரா.

அதற்கு நீதிபதி பதில் சொல்லும் முன்னே “இப்ப பாறேன். நம்ம ஜட்ஜ் அப்ஜக்சன் ஓவர்ரூல்டு னு சொல்லுவாரு” என்று முகிலனின் அருகில் அமர்ந்திருந்த வக்கில் மற்றுமொரு வக்கிலிடம் கூறினார். 

“இது வழக்கமா நடக்கிறது தான. நம்ம மித்ரா மேடம், என்னிக்கு ஆப்போஸிட் வக்கிலை ஜெயிக்க விட்டுருக்காங்க? அதுக்கும் மேல, ஆப்போசிட்ல நிக்கிறவர, பேச வச்சே அவங்க காரியத்த சாதிச்சிருவாங்க” என்றார் இன்னொரு வக்கில். 

இப்படி முகிலனின் அருகிலிருந்து அவர்கள் மித்ராவின் புகழ் பாட பாட. அதைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் பிரமிப்பு, கொஞ்சம் ஆச்சர்யம், நிறைய கோவத்தோடு மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

(சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   3

*** காதல் – 9 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com