சூரியனின் முழுக் கதிர்வீச்சை தாங்க இயலாது தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், எங்கோ சென்ற பச்சைக்கிளியின் கூட்டம் தந்த நிழல் போல். அந்தக்கூட்டத்தின் நெரிசலை தகர்த்துக் கொண்டு, அவனருகில் வந்து நின்று, “யார் சொன்னா? அவருக்கு சப்போர்ட்டா, எந்த வக்கிலும் வாதாட மாட்டாங்கன்னு?” என்று அக்கினிக்குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தாள், மித்ரா என்ற மித்ரயாழினி.
அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்காத பத்திரிக்கை கூட்டம், தங்கள் கேமராவையும், மைக்கையும் சட்டென்று அவள் பக்கம் திருப்பினார்கள்.
“ம். மைக் இருந்தா, அத யார்கிட்ட கேட்கனுமோ, அவங்ககிட்ட கேட்கனும். உங்ககிட்ட வந்து இன்னிக்கு தேதிக்கு ஸ்டாக் மார்க்கெட் ரேட்டிங் என்ன? எதுல இன்வஸ்ட் பண்ணா சரியா இருக்கும்? அப்படின்னோ, இந்த பேஷன்ட்-க்கு சர்ஜரி பண்ணனுமா? இல்ல டேப்ளேட் கொடுக்கனுமான்னு கேட்டா, நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று கோவமாய் கேட்டாள் மித்ரா.
அவளின் கோவத்தில், அங்கிருப்பவர்கள் யாருக்கும் சட்டென்று வார்த்தையே வரவில்லை.
“ஒரு வேள அப்படி நீங்க பதில் சொல்லாம அமைதியா இப்போ நீங்க நிக்கிற மாதிரி இருந்தா, உங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு அர்த்தமா? இல்ல, உங்ககிட்ட கேள்வி கேட்டவுங்க ஜெயிச்சிட்டாங்கன்னு அர்த்தமாயிடுமா? சொல்லுங்க” என்று அழுத்திக் கேட்டாள்.
அவள் பார்வையில் இருந்த கூர்மையும், அவள் வார்த்தையில் தெரிந்த அழுத்தமும், மற்றவர்கள் வாயை பசை போட்டு அடைத்தார் போல் மூடியது.
சில பல நிமிட அமைதிக்குப் பின், “சரி. இவ்வளோ சொல்றீங்களே. சரி உங்ககிட்டையே கேட்கிறோம். நீங்க சொல்லுங்க. இந்த கேஸ்ல யார் ஆஜராக போறா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
“இதென்ன கேள்வி? இவ்வளவு தூரம், நான் வந்து பேசுனதுலையே தெரிஞ்சிருக்குமே. அந்த கேஸ்ல நான் தான் ஆஜராக போறேன்” என்று அசராது கூறினாள் மித்ரா.
ஒரு கேஸ் அவள் எடுத்து விட்டால், அதற்கிடையில் எந்த கேஸையும் அவள் எடுக்க மாட்டாள். அப்படி இருக்க, திடீரென முகிலனின் கேஸை அவள் எடுத்து வாதாடப் போகிறேன் என்று சொன்னால், நிச்சயம் அவர்களுக்கு குழப்பம் வரத்தானே செய்யும்.
“என்ன நீங்களா?” என்று அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாய் கேட்க, “ஆமா. நான் தான். ஏன் நான் ஆஜராகுறதுல உங்களுக்கு எதுவும் பிராபளமா?” என்று மித்ரா அந்த பத்திரிக்கை பெண்மணியை பார்த்து கேட்டு புருவம் உயர்த்தினாள்.
அதில் அவர் சட்டென்று அமைதியாகிவிட, அவளோ சுற்றி இருந்த அனைவரையுமே ஒரு பார்வை பார்த்தாள்.
பின், “சோ . இப்ப உங்க கேள்வி எல்லாம் முடிஞ்சிருச்சின்னா, நாங்க கிளம்பலாமா? இன்னும் உங்ககிட்ட ஏதாச்சும் கேள்வி இருந்தா, நான் என் கேஸ முடிச்சிட்டு வந்து உங்களுக்கு ஆன்சர் பண்றேன்” என்றாள்.
அதில் அவர்கள் வழியை விட்டு நகர, இப்போது மித்ராவோ, ஏதோ ஒரு வேகத்தில், “வாங்க இளா. என்று சொல்ல வந்தாள்.
ஆனால் கடைசி நொடியில் தன்னை மீட்டு, “வாங்க மிஸ்டர் முகிலன்” என்று அதை திருத்தியிருந்தாள்.
அத்தனை நேரம் ஏதோ கனவு உலகில் இருப்பது போல், அசையாது அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கண் முன் என்ன நடந்தது என்று கூட அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை.
அதனால் அவள் அழைப்பதைக் கூட உணராது, அப்படியே நின்றிருக்க, அவள் திரும்ப திரும்ப அழைக்க. சட்டென்று தன்னிலை பெற்று அவளுடன் நடந்தான்.
இருவரும், நீதிமன்ற வளாகத்துக்குள் செல்லப்போக, சட்டென்று “ஒரு நிமிஷம்” என்ற முகிலனின் அழைப்பில் மித்ரா திரும்பி அவனைப் பார்த்தாள்.
அங்கே அவனோ கோபச்சுடராய் எரிந்துக் கொண்டிருந்தான். அப்போதுதான், அவனின் இயல்பு மீண்டிருக்குமோ என்னமோ?
“யார கேட்டு என் கேஸ்ல நீ ஆஜராக போறேன்னு சொன்ன? பஸ்ட் அப் ஆல், யாரு நீ?” என்று அவளை மேலிருந்து கீழாய் பார்த்தப்படி கேட்டான் முகிலன்.
“யார் நீ?” என்ற அவன் வார்த்தை நிச்சயம் அவளை காயப்படுத்தியது. ஆனாலும் அதை வளர விடாது, மறு நொடி அவனுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல், நிமிர்ந்து அவனை தீப்பார்வை பார்த்தாள்.
அவளின் அந்த பார்வையே சொன்னது, உனக்கு நான் குறைந்தவள் கிடையாது என்று.
அதற்குள் அவளே, “உள்ள வந்து பாருங்க, நான் யாருன்னு தெரியும். அடுத்து நீங்க பர்ஸ்ட் கேட்ட கேள்விய. அங்க பத்திரிக்கை காரங்க முன்னாடி கேட்டுருக்கனும், இப்ப கேட்டு நோ யூஸ். பிகாஸ் எனக்கு ஒரு விசயத்த சொல்லிட்டு அதை செய்யாம இருக்கிறது பிடிக்காது” என்று தோளைக் குலுக்கினாள்.
“ஓ. அப்போ உனக்கு எந்த கேஸும் கிடைக்கலன்னு, டைம் பார்த்து என் கேஸ வச்சி நீ லைப்ல செட்டில் ஆகிடலாம்-னு பிளான் பண்ணிட்ட. அப்படித்தான?” என்று நக்கலாய் கேட்டான் முகிலன்.
அதில் அவளின் தன்மானம் சீண்டப்பட்டிருக்க, அவளுடைய கோவமும் கடகடவென்று கூடியது.
“இங்க பாருங்க மிஸ்டர் முகிலன், அவங்களுக்கு சொன்னது தான், உங்களுக்கும். வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும், பேசலாம்-னு நீங்க பேசுனீங்கன்னா, எனக்கும் வாய் இருக்கு? அப்புறம்” என்று மித்ராவும் விரலை நீட்டி மிரட்டினாள்.
அதில், இப்போது இவனின் ஈகோ டச் ஆகிவிட, வேகமாய், “அப்புறம் என்ன பண்ணுவ?” என்று சண்டைக்கு சென்றான். இப்படி அவர்கள் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் முறைத்தப்படி முன்னேற முயன்றனர்.
சரியாக அன்னேரம் அங்கு வந்த வேந்தன் வேகமாக, “பாஸ். பாஸ். நான் சொன்னேன்-ல அந்த லாயர் மித்ரா இவங்கத்தான்” என்றான்.
“வாட்?” என்ற முகிலன், மீண்டும் மித்ராவைத்தான் மேலிருந்து கீழாய் பார்த்தான். அவளைப் பார்த்தால் அவனுக்கு என்னவோ சிறு பிள்ளை போல் தான் தெரிந்தாள்.
அப்படி இருக்க, அவளுக்கு என்ன அனுபவம் இருக்கப் போகிறது என்ற அலட்சியம் அவனுக்கு. அதெல்லாவற்றையும் விட சில நொடிகளுக்கு முன் அவனிடம் சரிக்கு சமமாய் பேசியது வேறு அவனுடைய ஈகோவை தூண்டியிருந்தது.
அதனால் “சிட். உனக்கு வேற எந்த லாயரும் கிடைக்கலையா? இப்படி எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத ஒருத்தவுங்ககிட்ட என் கேஸ் கொடுத்திருக்க” என்று கடுப்பாய் வேந்தனின் கத்தினான் முகிலன்.
அவன் அப்படி சொல்லவும், இப்போது வேந்தனோ சற்று குழம்பி, “பாஸ். இவங்கள உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்றான்.
ஏனெனில் வேந்தன் விசாரித்த வரை, இங்கிருக்கும் லாயர்களிலேயே மித்ராவை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது என்று தான் கூறியிருந்தனர். அதுவும் போக, முகிலன் எல்லாம் எடுத்த உடனே ஒருவரைப் பற்றி அறியாமல் பேசவும் மாட்டான். அப்படி இருக்க, இவளைப் பார்த்தவுடன் அவன் அப்படி பொங்கினால், அவனுக்கு அப்படி தோன்றத்தானே செய்யும்.
அதற்குள் முகிலனோ, “வாட் ஏ ஸ்டுபிட் கொஸ்டீன். இப்படி ஒரு சாதாரண லாயர தெரிஞ்சி வச்சிருக்கனும்-னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. அதுக்கும் மேல, அப்படி இவங்கள தெரிஞ்சி வச்சிக்கிற லெவலுக்கு அப்படி இவங்க என்ன பண்ணிருக்காங்க” என்று வெறுப்பும் ஏளனமும் கலந்து கேட்டான்.
அதற்கு வேந்தன் பதில் சொல்லும் முன்னே “நான் என்ன பண்ணிருக்கேன்? என்ன பண்ணப்போறேன்? அப்படின்றது உங்களுக்கு தேவையில்லாத விசயம். இப்ப நான் உங்களோட கேஸ எடுத்திருக்கேன். அவ்வளவுத்தான், உங்களுக்கும், எனக்கும் தெரிஞ்சிக்க வேண்டிய விசயம். அத ஆல்ரெடி சொல்லிட்டேன்-னு நினைக்கிறேன். இதுக்கு மேல உங்களோட சில்லி கொஸ்டீன்ஸ் எல்லாத்தையும், உங்க பி ஏ கிட்டையோ, இல்ல அந்த பத்திரிக்கை காரங்ககிட்டையோ கேட்டுக்கோங்க. இப்ப எனக்கு டைம் ஆயிடுச்சி. நான் உள்ள போறேன். நீங்க பொறுமையா இங்க நின்னு பேசிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றாள் மித்ரா.
ஆனால் அவன் அதற்கு அனுமதிக்க வேண்டுமே. கிளம்ப முயன்றவளிடம் சண்டைக்கு மீண்டும் சென்றான் முகிலன்.
“ஓய். என்ன சொன்ன. உனக்கு டைம் ஆயிடுச்சி மீன்ஸ், நான் வெட்டியா இருக்கேன்-னு சொல்ல வறீயா. என்னோட ஒரு செகன்ட் வேல்யூ என்னன்னு உனக்கு தெரியுமா?” என்று கோவமாய் கேட்டான்.
“சாரி. தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ். எனக்கு அடுத்தவுங்க வேலையில இன்வால்வ் ஆகுறது பிடிக்காது” என்று அசராது தோளைக் குலுக்கினாள் மித்ரா.
அதை கேட்ட வேந்தனோ, “என்னது நம்ம பாஸ் டயலாக்க இந்த மேடம் சொல்றாங்க. போச்சி. இப்ப நம்ம பாஸ் நம்மள வச்சி செய்வாறே. சரி சமாளிப்போம்” என்று தனக்குள் கூறினான்.
பின், “பாஸ். நான் சொல்றத கொஞ்சம்” என்று வேந்தன் இருவருக்கும் நடுவில் வந்து சொல்ல முயற்சித்தான்.
அதற்குள் அவனை ஓரமாய் தள்ளிவிட்டு, “விலகு. நான் பேசிட்டு இருக்கேன்ல” என்று முகி முறைத்த முறைப்பில் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டான் வேந்தன்.
பின் மீண்டும் மித்ராவைப் பார்த்து, “வாட். அப்போ நான் உன் வேலையில தலையிடுறேன்னு சொல்ல வறீயா?” என்று கேட்டான்.
“ஹலோ. இந்த நீ. வா. போன்னு இப்படி மரியாத இல்லாம பேசுற வேலையெல்லாம், என்கிட்ட வேணாம்” என்று மித்ரா மிரட்டலாய் கூறினாள்.
அதில், இப்போது முகிலனோ வேண்டுமென்றே “ஓகோ, மரியாத வேணுமா? அப்படியெல்லாம் உனக்கு மரியாதை கொடுக்க முடியாதுடி. என்னடி பண்ணுவ? என்று முகிலன் வார்த்தையில் டியை வேண்டுமென்றே சேர்த்தான்.
அதில் மித்ராவின் பிபி தாறுமாறாய் கூட, உடனே இவளும் வேகமாய், “அப்போ எனக்கும் என் மரியாதைய எப்படி வாங்கனும்னு தெரியும்டா” என்றாள்.
“ஹேய் யார டான்னு சொல்ற” என்று முகிலன் மீண்டும் அவளிடம் சண்டைக்கு செல்ல, “மரியாத தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடா மரியாத?” என்று அவனுக்கு சமமாக மித்ராவும் சீறினாள்.
தான் ஒரு தொழிலதிபர் என்ற எண்ணம், சிறிதும் இல்லாமல், பொது இடத்தில் அவன் தான் மல்லுக்கட்டுகிறான் என்று பார்த்தால், தான் ஒரு பொறுப்பான வழக்கறிஞர், என்ற நினைப்பை மறந்து அவனுக்கு சரிசமமாக இவளும் சீறிப்பாய்ந்தாள்.
இவர்களின் இந்த மோதலுக்குள் ஒழிந்திருக்கும் காதலை இருவரும் உணர்வார்களா?
(இந்த கேள்விக்கான பதிலை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தொடரும்…
Keerthi S
semma conversation 🤣🤣 ❤