மூர்த்தி வரிசையாய் முகிலனின் மீது குற்றம்சாட்டிக் கொண்டிருக்க, மித்ராவோ அமைதியாய் அவர் சொல்வதை கேட்டப்படி நின்றிருந்தாள்.
அதில் முகிலனோ, சற்று எரிச்சலாய், “இவ பேசுவாளா? இல்லையா” என்று வேந்தனின் பக்கம் திரும்பினான்.
அங்கே மூர்த்தி பேசி முடிக்கவும், “யுவர் ஆனர். இவர் சொல்ற மாதிரி. ஒரு லீகல் அட்வைஸர, காரணம் இல்லாமலோ, இல்ல அவரை அவமானப்படுத்தியோ, அந்த வேலையில இருந்து அனுப்புனா சட்டப்படி, அந்த லீகல் அட்வைஸர் அந்த கம்பெனி மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். அது சரி தான். ஆனா. இங்க அப்படி எதுவுமே நடக்கலையே?” என்றாள் மித்ரா.
அதைக் கேட்டு, அந்த வக்கில் வேகமாய் ஏதோ சொல்ல வந்தார்.
அதற்கு முன்பே, “எங்க, இவர அவமானப்படுத்திட்டாங்கன்னு சொல்லுறதுக்கு ஏதாச்சும் சாட்சி இருக்கா?” என்று அவரைப் பார்த்தப்படியே கேட்டாள் மித்ரா.
“நாலு பேருக்கு முன்னாடி அவமானப்படுத்துனாத்தான் அவமானமா? இதுக்கு எப்படி சாட்சிய கூட்டிட்டு வர முடியும்? இதுல என்ன நியாயம் இருக்கு?” என்று மூர்த்தி கோவமாய் கேட்டார்.
“நியாயம் இருக்கு, இல்லன்னு நான் சொல்ல வரல. ஆனா சட்டத்துக்கு சாட்சியங்கள் தேவையே. உங்ககிட்ட ஏதாச்சும் இருக்கா, இல்ல. அங்க வேலை பார்க்கிறவுங்க யாராச்சும் பார்த்தாங்களா? அதுக்கும் மேல. அவ்வளவு பெரிய கம்பெனியில ஒரு சிசிடிவி புட்டேஜ் கூடையா இல்ல?” என்று மித்ரா நக்கலாக கேட்டாள்.
அதில் சீண்டப்பட்டவரோ “யுவர் ஆனர். அவமானப்படுத்திட்டாங்கன்னு நான் சொல்லிருக்கிறது என்னைய சட்டையப்பிடுச்சி இழுத்து வெளிய விட்டாங்கன்னு நான் சொல்லல. ஒரு பொறுப்பான பதவியில இருக்கிற என்ன இப்படி சட்டுன்னு வேலையை விட்டு போக சொல்றதே என் தொழிலுக்கு உண்டான அவமானம் தான” என்று கோவமாய் பதிலளித்தார்.
“யுவர் ஆனர். பொறுப்பான பதவியில இருந்து ஒருத்தவுங்கள தூக்குறாங்கன்னா, அவங்க அங்க பொறுப்பா நடந்துக்கிடலன்னு அர்த்தம். அதுக்கும் மேல. அது லாயர் சார் சொன்ன மாதிரி அது அவரோட தொழிலுக்கு உண்டான அவமானம் தான். ஆனா அது என் கட்சிக்காரரால இல்ல, அவர். அவருக்கே பண்ணிக்கிட்டது. இந்த கோர்ட்ல வேணும்னா அவர் வக்கிலா இருக்கலாம். அவர் கம்பெனியில இவரும் ஒரு சாதாரண எம்பிளாயி தான். இவருக்கு எப்படி, வேலைய விட்டு அனுப்புனதுக்கு, எம்.டி மேல வழக்கு பதிவு பண்ண உரிமை இருக்கோ, அதே மாதிரி, சரியா வேலை செய்யாத ஒரு எம்பிளாயிய வேலைய விட்டு அனுப்புறதுக்கு அவங்களுக்கும் உரிமை இருக்கு” என்றாள் மித்ரா.
“அப்ஜக்சன் யுவர் ஆனர். இவங்க இப்படி ஆதாரமே இல்லாம. ஒரு பொறுப்பான வழக்கறிஞர் மேல அபாண்டமா நான் வேலையே பார்க்கிறது இல்லன்னு சொல்றத என்னால நிச்சயம் ஏத்துக்கொள்ள முடியாது” என்றார் மூர்த்தி.
“நான் ஆதாரம் இல்லாம, எதுவும் பேச மாட்டேன் யுவர் ஆனர்” என்று ஒரு பைலை எடுத்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தாள்.
அதில் முகிலனுமே, வேந்தனை கேள்வியாய் பார்க்க, ஆனால் அவனோ, இவனின் பக்கமே திரும்பாமல் அமர்ந்திருந்தான்.
அங்கே மித்ராவோ, “யுவர் ஆனர். இவர் அங்க லீகல் அட்வைஸரா, சேர்ந்த நாள்ல இருந்து இப்பவரைக்கும் முழுசா 502 கோடி கம்பெனிக்கு லாஸ். ஆனா. நம்ம வக்கில் மட்டும் புதுசா 2 கோடிக்கு கார், 22 கோடிக்கு புது வீடு, 15கோடிக்கு ஈசிஆர் ல ஒரு ரெஸ்டாரண்ட், அப்புறம் அவங்க மூத்த பொண்ணுக்கு அறுபது பவுன் நக லலிதா ஜீவல்லர்ஸ்ல ஆர்டர் பண்ணிருக்காங்க. இது போக இன்னிக்கு காலையிலக்கூட, 10 ஏக்கர் இடத்த ரிஜிஸ்டர் பண்ணிட்டு தான் வந்திருக்காரு” என்று மித்ரா சொல்ல சொல்ல இங்கே மூர்த்தியின் முகம் மாறிக்கொண்டே வந்தது.
“அப்ஜக்சன் யுவர் ஆனர். இதெல்லாம் என்னோட சம்பளத்துல நான் வாங்கினது, அதுமட்டுமில்ல, இதுக்கான இன்கம் டேக்ஸ் டீடைல்ஸ் எல்லாம் நான் சப்மிட் பண்ணிருக்கேன். அப்படி இருக்கிறப்ப, இவங்க என்னை வீணா வம்புல மாட்டிவிட முயற்சி பண்றாங்க” என்று மூர்த்தி அரக்கப்பறக்க எழுந்து கூறினார்.
“யுவர் ஆனர். இதெல்லாம் நம்ம வக்கீல், நியாயமான முறையில சம்பாதிச்சது தான். நான் இல்லன்னு சொல்லலையே. எதிர்கட்சி வக்கில், நீதிமன்றத்துல சப்மிட் பண்ணிருக்கிற டாக்குமென்ட்ஸ்ல பாதி, அவர் வருமானம் முழுக்க முழுக்க, மிஸ்டர் முகிலன் கம்பெனில இருந்து தான் போயிருக்கு. அது இல்லன்னு என் கட்சிக்காரர் முகிலன் சொன்னாலோ, இல்ல எதிர்கட்சிக்கார வக்கில் சொன்னாலோ, அவர் சப்மிட் பண்ணிருக்க டாக்குமெண்ட்ஸ் பொய்யின்னு ஆகிடும். அப்படித்தான” என்று அவரைப் பார்த்து கேட்டாள்.
அதில் மூர்த்திக்கோ ஒரு வித குழப்பம். மித்ரா என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்று அவரால் கணிக்க முடியவில்லை.
அதில் அவரைப் பார்த்தபப்டியே “சோ, இவர் கொடுத்த டாக்குமெண்ட்ஸ் படியே நம்ம இப்போ பேசலாம். இவரை அந்த கம்பெனியில எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து வச்சிருந்தா, கம்பெனி லாஸ்ல போறப்பக்கூட இவருக்கு தேவைக்கு அதிகமா கொடுத்திருப்பாங்க. அப்படில்லாம் இருந்தும், இவரு, அந்த கம்பெனி மேலையே தப்பு சொல்லிருக்காரு. பொதுவா ஒரு கம்பெனி மேல வர்ற பெரிய கம்ப்ளைண்டே அவங்க சம்பளம் சரியா கொடுக்கிறதுல்லன்றதாத்தான் இருக்கும். ஆனா, மிஸ்டர் முகிலன், அப்படி எதுவும் பண்ணல. இவர அவமானப்படுத்தனும்னு நினைச்சிருந்தா, அவரு, இவருக்கு இப்படி வாரி வாரி கொடுத்திருக்க வேண்டாமே. இவ்ளோ சம்பளம் கொடுத்து, யாராச்சும் அவமானப்படுத்துவாங்களா? நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர்” என்று மித்ரா அசராது நீதிபதியை பார்த்து கேட்டாள்.
மித்ரா கேட்ட கேள்வியில், மூர்த்திக்கு மட்டுமில்லை, முகிலனுக்கு கூட வார்த்தை வரவில்லை.
முகிலனின் மனமோ, அவன் அனுமதியின்றியே, “வாவ் பிரில்லியண்ட் கேர்ள்” என்று அவளுக்கு பாராட்டுக்கடிதம் எழுதிக்கொண்டிருந்தது.
அங்கே மித்ராவோ, “அதுக்கும் மேல, இவர உடனே வேலையவிட்டு போக சொன்னது தப்புன்னு, இவர் சொன்னா, அப்போ தப்பு மிஸ்டர் முகிலன் மேல கிடையாது, இவர் மேல. ஏன்னா கம்பெனி ரூல்ஸ் படி, அவங்களா, அந்த வேலையை விட்டுப் போனா, மூனு மாசத்துக்கு முன்னாடி லெட்டர் போட்டுருக்கனும், அதுவே, கம்பெனிக்கு அவங்களால நஷ்டம்னோ, இல்ல சரியா வேல பார்க்கல அப்படினாலோ, எந்த ஒரு அவகாசமும் கொடுக்காம, அவங்கள வேலைய விட்டு தூக்கிடுவோம் அப்டின்றது, முகிலன் க்ரூப் ஆப் கம்பெனிஸ், டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ்லயே தெளிவா இருக்கு. அப்படியிருக்கிறப்ப, இந்த சிட்டியிலேயே நம்பர் ஒன் வக்கில் சார், அத படிச்சு பார்க்காமலா, சைன் பண்ணி கொடுத்தாரு?” என்று மூர்த்தி சப்மிட் செய்த அதே நகலை, காமித்து கேட்டாள் மித்ரா.
அதில் மூர்த்திக்கெல்லாம் அடுத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் முகத்தில் ஈயாடவில்லை.
அதற்குள், “அவ்வளவுத்தான் கேஸ் பினிஷ். நான் தான் சொன்னேன்-ல. இந்த கேஸ் மித்ரா மேடம தவிர வேற யார் எடுத்திருந்தாலும், இன்னும் நாலு ஹியரிங் ஆச்சு போயிருக்கும். அப்படியே போயிருந்தாலும், மூர்த்தி சார்-க்கு எதிரா யாராலையும் நிக்கக்கூட முடியாது” என்று முகிலன் காதுபட, இரு வக்கில்கள் பேசினர்.
அவனுக்காகத்தான் அவள் பேசிக் கொண்டிருந்தாள். ஆனாலும் ஏனோ அவளை அத்தனைப் பேரும் பாராட்டுவது, முகிலனுக்கு ஈகோவை சீண்டியது. அதனால் சற்று கடுப்போடு அமர்ந்திருந்தான்.
அதே நேரம் இங்கே “ஓய். என்ன, வாசல்ல நின்னு கனா கண்டுகிட்டு இருக்க?” என்ற இஷாந்தின் குரலில் நினைவு கலைந்த மதி, திரும்பி பார்த்தாள்.
சரியாக அன்னேரம் தான் நீதிபதி தன்னுடைய தீர்ப்பை சொல்ல ஆரம்பித்தார்.
“இப்படி தவறான வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நீதிமன்றத்தை வீணடித்தற்கும், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவரின் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இப்படி ஒரு குற்றத்தை சுமத்தியதற்காகவும், மிஸ்டர்.முகிலன் தரப்பு வக்கில், லாயர் மித்ரா கேட்டுக் கொண்டதற்கினங்க, ஐம்பது கோடி நஷ்டேடு கொடுக்கவேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.
“ஐ சூப்பர்” என்று வாசலில் நின்ற மதி விசிலடிக்க போக, அதைத்தடுத்து “ஏய் மதி. இந்த கோர்ட்ல நீயும் ஒரு வக்கில்-னு மறந்துராத” என்று இஷாந்த் கண்டிப்புடன் அவளைப் பார்த்தான்.
“அட போங்க சார். நீங்களும் உங்க சட்டமும், மனுசன முழுசா சந்தோசம் கூட படவிடமாட்றீங்க” என்று மதி சலித்துக் கொண்டாள்.
அதில் அவளையே குறுகுறிவென்று பார்த்தவன், “ஏய் உண்மைய சொல்லு. அவ ஜெயிச்சா, உனக்கு எதுவும் கமிஷன் தருவாளா என்ன? ஏதோ நீயே ஜெயிச்ச மாதிரி இந்த குதி குதிக்கிற” என்று தன் சந்தேகத்தை கேட்டான் இஷாந்த்.
“ஆமா. உங்ககிட்டலாம் ஜூனியரா இருந்தா, நான் எப்படி கேஸ் எடுத்து வின் பண்றது?” என்று மதி நக்கலாய் கேட்டாள்.
“அவ்ளோ கஷ்டப்பட்டுலாம், நீ என் கூட இருக்க வேண்டாம். இப்பவே கூட, கெளம்பி போயி அவகிட்டையே சேர்ந்துக்கோ” என்று அங்கிருந்து நகர முயன்றான்.
“ச் அட என்ன சார்? இதுக்கு போயி டென்சன் ஆகிட்டு. உங்ககிட்ட அஸிஸ்டெண்டா இருக்கிறதுக்கு, நான் எவ்ளோ குடுத்து வெச்சிருக்கனும் தெரியுமா” என்றாள்.
“ம் பார்த்தாலே தெரியுது” என்று அவன் சொல்ல, அவளோ, “ஆனாலும் கொஞ்சம் யோசனையாதான் சார் இருக்கு” என்றப்படி, மீண்டும் மித்ராவைப் பார்த்தாள்.
“ம் அதான் உங்க மேடம் கேஸ்ல ஜெயிச்சிட்டாங்களே. அப்புறமும் என்ன யோசிக்கிற?” என்று இஷாந்த் கேட்க, “இல்ல சார். மேடம், ஒரு கேஸ் எடுத்து முடிக்கிற வரைக்கும் அடுத்த கேஸ் எடுக்கவே மாட்டாங்க. அப்படி இருக்கிறப்ப இந்த கேஸ மட்டும் எப்படி எடுத்தாங்க?” என்று மதி கேட்டாள்.
இதே கேள்விதான் வேந்தனுக்கும் ஓடியது.
“நம்ம அவ்வளோ தூரம் அந்த மேடம்கிட்ட பேசுனப்பக்கூட அவங்க ஒத்துக்கவே இல்லையே. அப்புறம் எப்படி, இப்ப மட்டும் ஒத்துகிட்டாங்க” என்று தனக்குள்ளே கேட்டான் வேந்தன்.
இங்கே மித்ராவும், முகிலனும், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தனர்.
தன் மீது சுமத்திய குற்றம் தவறு என்று நிரூபிக்கப்பட்ட சந்தோஷம் அவன் முகத்திலும் இல்லை, தான் வாதாடி ஒரு வழக்கை வென்றுவிட்டோம் என்ற நிம்மதியும் அவள் மனதில் இல்லை. மாறாக பல கேள்விகளும், குழப்பங்களும், வெறுப்புகளும் காரணமே இல்லாமல் கண் முன் வந்து ஓடின.
(இந்த வெறுப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் பாசத்தின் ஆழத்தையும், அவள் மறுப்பிற்குள் ஒளிந்திருக்கும் காதலின் காரணத்தையும் வரும் அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)
தொடரும்…
Keerthi S
fantastic argument mithu🔥
Nityaa Devi
super
R Dharani
super
R Dharani
super singer
Anitha Satheesh
super 💕