மித்ராவின் செயல்களை எல்லாம் தூரத்தில் நின்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். மதியரசி.
“ப்பா. எவ்ளோ அழகு?” என்று தன்னை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருக்க,
“ஏய். அவ போயி அரை மணி நேரம் ஆகுது. இன்னும் என்னத்த, ஆ ன்னு பார்த்துக்கிட்டு இருக்க?” என்று அவளின் சீனியர் வக்கில் இஷாந்த் கடுப்பாய் கேட்டான்.
“இல்ல சார். அ. து. இல்ல அவ ங்க” என்று இவள் ஏதேதோ உளறப் போக, “உன்னலாம் எனக்கு அசிஸ்டெண்டா வச்சிருக்கேன் பாரு. என்ன சொல்லனும். அதான் என்னை விட ஜூனியர் பொண்ணுலாம். இங்க ராஜாங்கம் பண்ணுது. எல்லாம் என் நேரம்” என்று இஷாந்த் தலையில் அடித்துக் கொண்டான்.
உடனே இவளோ “ஆமா. நான் இவரு கூட இருக்கிறதால தான், இவரு இப்படி இருக்காரு. இல்லன்னா? அப்படியே அந்த ஜட்ஜ் க்கு பக்கத்துல போயி உட்கார்ந்திருப்பாரு” என்று நக்கலாக தனக்குள் முனுமுனுத்தாள்
அதில் சீண்டப்பட்டவன், “என்ன சொன்ன?” என்று அவன் அவளை முறைத்தான்.
“இல்ல சார். மேடம் கேஸ் முடிஞ்சதும் நம்ம கேஸ் தான. அதான். ஜட்ஜ் க்கு பக்கத்துல இருக்கிற பைல் நம்ம கேஸ் பைல் தான? அத சொன்னேன்” என்று மதி வேகமாய் சமாளிக்க முயன்றாள்.
“ம். இங்கல்லாம் நல்லா பேசு. ஏதாச்சும் பாய்ன்ட் எடுத்துக் கேட்டா மட்டும் வாயே திறக்காத” என்று இஷாந்த் அவளை திட்டினான்.
“எல்லா பாயிண்டையும், நானே சொல்லிட்டா, அப்புறம் இவர் என்னதான் சொல்லுவாரு” என்று அதற்குள் அவள் முனுமுனுக்கத்தான் செய்தாள்.
அதற்குள் இஷாந்தோ “சரி சரி. இவ கேஸ் முடியிற வரைக்கும், வக்கில்னு நம்ம கூட உள்ள போக முடியாது. வா. நம்ம பிளேஸ்ல வெயிட் பண்ணுவோம்” என்று அவளை அழைத்தான்.
“சார். நீங்க போங்க. நான் நம்ம கேஸ் வந்ததும் உங்கள கூப்பிடுறேன்” என்று அவள் சொல்ல, அதில் அவளை முறைத்தவனோ, “எக்கேடோ கெட்டு போ” என்று சொல்லிவிட்டு இஷாந்த் சென்றான்.
ஆனால் அவன் சென்றதை கூட கவனிக்காது, வாசலில் நின்று மித்ரா-வின் வாதத்திறமையை பிரமித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மதியரசி.
அங்கே, ஈ.பி.கோ செக்க்ஷன்களை எல்லாம் அச்சுபிசுங்காமல் சொல்லிய மித்ராவோ, முடிவில், “இவர் தான் கொல செஞ்சாருன்னு எதிர்கட்சி வக்கில், இத்தனை பேரை சாட்சி சொல்ல சொல்லிருக்காரு. ஆனா எனக்கு எந்த சாட்சியும், தேவையில்ல” என்றாள்.
“அப்ஜக்சன் யுவர் ஆனர். எதிர்தரப்பு லாயர் மித்ரா-க்கு வேனும்னா, சாட்சிகள் தேவையில்லாம இருக்கலாம். ஆனா கோர்ட்டுக்கு சாட்சியும், ஆதாரமும் தான் தேவை” என்று எதிர்கட்சி வக்கில் சற்று நக்கலாய் கூறினார்.
அதில் அவரை ஒரு நொடி நக்கலாய் பார்த்தவள், பின் “அதுக்குள்ள என்ன அவசரம் லாயர் சார்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, அப்படியே ஜட்ஜின் பக்கம் திரும்பி “யுவர் ஆனர். நான் சொல்ல வந்ததை முழுசா கேட்டுட்டு, அதுக்கப்புறம் அவரை பேச சொல்லுங்க” என்றாள்.
அவள் சொல்லிய விதமே, அவளின் பக்கம் ஏதோ முக்கியமான கருத்து இருப்பதை, அவருக்கு உணர்த்தியது. ஏனெனில், அவரும் மித்ராவின் வாதத்திறமையை பல தடவை பார்த்திருக்கிறாரே.
அதனால், “அப்ஜக்சன் ஓவர் ரூல்” என்று ஜட்ஜ் சொல்ல. எதிர் கட்சி வக்கில் அமைதியாக அமர்ந்தார்.
“தாங்கியூ யுவர் ஆனர். கோர்ட்டுக்கு சாட்சியும், ஆதாரமும் தான் முக்கியம், நான் இல்லன்னு சொல்லல. ஆனா அதே சட்டத்துல தான். நூறு குற்றவாளி தப்பிச்சாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சொல்லிருக்கு. இங்க நிக்கிற மூனு பேரும் இவர்தான் கொலை செஞ்சாரு. நாங்களாம் பார்த்தோம்னு சொல்லிருக்காங்க அப்படித்தான” என்று கேட்டாள் மித்ரா.
அதில், “பாருங்க யுவர் ஆனர். போலீஸ் தரப்புல சொன்ன தகவல் எதையுமே, இவங்க பாக்காம வந்து பேசிட்டு இருக்காங்க. இவங்க மூனு பேரும் தான், இத போன தடவையே க்ளீயரா சொல்லிட்டாங்களே” என்றார் எதிர்தரப்பு லாயர் ராஜேந்திரன்.
“சரி யுவர் ஆனர். இவங்க சொல்ற மாதிரி. என் கட்சிக்காரர் கொலை பண்றதுக்காகவே அங்க போனாருன்னு வச்சிப்போம். ஆனா இவங்க மூனு பேரும் எதுக்கு சம்பந்தமே இல்லாம அங்க போனாங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று மித்ரா அசராது கேட்டாள்.
“அப்ஜக்சன் யுவர் ஆனர். இவங்க சம்பந்தமே இல்லாம, என் சாட்சிய கலைக்கிறதுக்காக, இப்படியெல்லாம் கேட்கிறாங்க. நாங்க ஏற்கனவே. இவங்க எதுக்காக அங்க போனாங்க அப்படின்ற முழு விவரத்தை சொல்லிட்டோம். இது அனாவசியமான கேள்வி” என்று அவர் வேகமாய் கூறினார்.
அதில் இப்போது மித்ராவோ, அவரின் பக்கம் திரும்பாமல், ஜட்ஜின் பக்கமே திரும்பி, “யுவர் ஆனர். அவர் என் கட்சிக்காரர்கிட்ட பேசுறப்ப, நான் அவருக்கான நேரத்தை கொடுத்தேன் இல்லையா. அப்படின்னா இப்போ நான் என்ன சொல்ல வரேன்-னு முழுசா கேட்கனுமில்லையா? அதற்கும் மேல் இப்போது நான் கேட்ட கேள்விக்கு காரணம் உள்ளது யுவர் ஆனர்” என்றாள் மித்ரா.
உடனே “அப்ஜெக்சன் ஓவர் ரூல்டு” என்று ஜட்ஜ் சொல்ல, மித்ராவை முறைத்துக் கொண்டே அந்த வக்கில் உட்கார்ந்தார்.
“யோவ் அந்த ஜட்ஜ்-க்கு அப்ஜெக்சன் சஸ்டெயின்ட் வார்த்தையெல்லாம் நீ வாதாடுறப்பத்தான் வருமா. அந்தப்பொண்ணு பேசுறப்ப வராதா? உன்னலாம் நம்பி என்னோட வக்கிலா வச்சிருக்கேன் பாரு” என்று அவரருகில் அமர்ந்திருந்த அந்த தொழிலதிபர் கடுப்பாய் கேட்டார்.
“இல்ல சார். கண்டிப்பா நம்ம இந்த கேஸ் ல வின் பண்ணிடுவோம்?” என்று இவர் பவ்வியமாக கூறினார்.
“என்னமோ? என் பையன் பேர் இதுல வரக்கூறாது அவ்வளவுத்தான்” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்.
“நான் இப்ப மிஸ்டர் சுரேஷ் மூர்த்தி யோட பையன் நவீன்-ன விசாரிக்கனும்” என்றாள் மித்ரா.
“சோலி முடிஞ்சிப் போச்சி” என்று மதியரசி மனதினுள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
மித்ரா சொல்லியதைக் கேட்டு, வக்கிலும், அந்த தொழிலதிபரும், மிரண்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அவர்களை கண்டு கொள்ளாது, கையில் வைத்திருந்த சில ஆதாரங்களை, ஜட்ஜிடம் மித்ரா காமிக்க, அவரும் அனுமதி தந்தார்.
அதற்குள், “நவீன் ஊர்லயே இல்ல” என்று எதிர்கட்சி வக்கில் எழுந்து சொல்வதற்குள், இரண்டு பேர் நவீனை அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
அதில், வக்கில் மிரள, மித்ராவோ பார்வையாலையே தன் இரு நண்பர்களுக்கும் நன்றியை கூறினாள்.
பின், அந்த நவீனைப் பார்த்து “வெல்கம் மிஸ்டர் நவீன். இந்தப் பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?” என்று ஒரு போட்டோவை காட்டி கேட்டாள்.
அதில் அவன் திணற, “என்ன பார்கலன்னு சொல்லப் போறீங்களா? அப்போ இந்த போட்டோவையும் பார்த்திட்டு சொல்லுங்க” என்று அவள் அடுத்த போட்டோவை காமிக்க. நவீனுக்கு உள்ளே உதறல் எடுக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் அவள் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க. அவன் பயந்து போய் “நான் கொலைப் பண்ணல” என்று வேகமாய் கூறினாள்.
“நான் உங்ககிட்ட நீங்க கொலை பண்ணீங்கன்னு சொல்லவே இல்லையே?” என்று மித்ரா நக்கலாக கேட்டாள்.
“இல்ல. அது” என்று நவீன் தடுமாறியப்படி தன் தந்தையைப் பார்த்தான். அவரோ அவரின் லாயரிடம் தான், “ஏதாச்சும் பண்ணுயா” என்றார்.
ஆனால் அதற்குள், “இதப்பாருங்க யுவர் ஆனர்” என்று சில வீடியோ பதிவுகளை அவரிடம் காட்டினாள்.
அதில் நவீனே அந்தப்பெண்ணை கொலை செய்ததை அவனின் நண்பர்களிடம் சொல்லிய வீடியோ இருந்தது.
“அவ்வளவுத்தான் கேஸ் பினிஸ்” என்று மதியரசி சொல்ல. அதையே தான் ஜட்ஜ்-ம் சொல்லியிருந்தார். அதில் அந்த நவீனோ, “இல்ல அது நான். ப்ளீஸ். ப்பா. ஏதாச்சும் பண்ணுங்கப்பா” என்று கதறினான்.
எதிர்கட்சி லாயரோ மித்ராவை முறைத்துப் பார்த்தார். பின்னே அவரின் மகள் வயதிருக்கும் பென்ணிடம் அல்லவா தோற்றிருக்கிறார்.
அந்த தொழிலதிபர் வேறு, அவரை கண்டமேனிக்கு திட்ட, “எப்படியும் நம்ம சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் சார்” என்று உளறினார் அந்த வக்கில்.
இங்கே மித்ரா கேஸ் முடிந்து வெளியில் வர, பத்திரிக்கை காரர்கள் அவளை சுற்றி சூழ்ந்திருந்தனர்.
“எப்படி மேடம்? யாருமே எடுக்க மாட்டேன்-னு சொன்ன கேஸ்-ச நீங்க எடுத்து ஜெயிச்சீங்க?” என்று ஒருவர் கேட்டார்.
“அதுவும் நீங்க ஏன் மேம் , இத்தன மாசமா வேற எந்த கேசை-யும் எடுக்கல?” என்று மற்றொருவர் கேட்டார்.
அதற்குள் “இவ்ளோ பேர் தடுத்தும், இந்த கேஸ நீங்க எடுத்ததுக்கு காரணம், உங்களுக்கும் அந்த விஷ்வா-க்கும் ஏதோ பழக்கம்-னு சொல்றாங்களே அது உண்மையா?” என்று ஒரு பெண் நிரூபர் சட்டென்று கேட்டிருந்தாள்.
அந்த கேள்வியில், அவ்வளவு நேரம் அமைதியாக நின்ற மித்ரா, சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவள் கண்கள் ரத்தமாய் சிவந்திருந்தது.
அவள் கோப அக்னியைக் கண்டு, கையில் வைத்திருந்த மைக்கை இன்னும் அழுத்தமாக பிடித்தாள்.
“Say again” என்று மித்ரா அழுத்திக் கேட்க, “இல்ல மேடம். அந்த பையனுக்கும் உங்களுக்கும் ஏதோ பழக்கம். அதனாலத்தான், நீங்க இந்த கேஸ எடுத்ததா சொல்றாங்க. அதான்” என்றாள் அந்த பெண் நிரூபர்.
“ஆமா. பழக்கம் தான்” என்று மித்ரா அழுத்தி சொல்ல, சுற்றி இருந்த அத்தனைப் பேரும் அவளை அதிர்ச்சியாய் பார்த்தனர்.
அதற்குள் “நான் அந்தப் பையனோட அம்மாவ. அம்மா-ன்னு கூப்பிடுறேன்னா. அந்தப் பையனுக்கும், எனக்கும் எந்தமாதிரி பழக்கம் இருக்குமோ அந்த மாதிரி பழக்கம்” என்று அழுத்த திருத்தமாக கூறினாள்.
அதில் யாருக்கும் அடுத்து என்ன கேட்க என்றே தெரியவில்லை. அதில் அனைவரும் அவளையே சற்று பதட்டத்துடன் பார்த்தனர்.
“அப்புறம். கேள்வி கேட்கனும்-னு கேட்க கூடாது. நீங்க கேட்கிற கேள்வி நாலு பேருக்கு உபயோகமா இல்லன்னாக் கூட, உபத்தரமா இருக்கக் கூடாது. நெக்ஸ்ட். ஆபத்துல ஒருத்தவுங்க இருந்தா, அவங்கள காப்பாத்தலன்னாகூட, காப்பாத்துறவுங்களை காயபடுத்தக்கூடாது. இதெல்லாம் ஒரு கேள்வி ஒருத்தவுங்கள பார்த்து கேட்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும், கழுத்துல ஐடி இருக்கு. கைல மைக் இருக்குன்னு உங்க இஷ்டத்துக்கு நீங்க கேட்டா, எனக்கும் கைல பவர் இருக்கு. வாய்ல வார்த்தை இருக்கு. அந்த ஸ்டைல்ல பதில் சொல்லுவேன்“ என்று மித்ரா கோவமாக சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
அதே நேரம் அங்கே அந்த மிகப்பெரிய நவீன் அன்ட் கோ சோரூமில் இருந்த டிவியில், ஒரு பக்கம் முகிலன் கொடுத்த இன்டர்வியூவும், மறுபக்கம் மித்ரா கொடுத்த இன்டர்வியூவும் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது.
இந்த இரு பரபரப்பு பட்டாசுகளின் சந்திப்பு, படபடப்பை கூட்டுமா? இல்லை பட்டாம்பூச்சியை பறக்கவிடுமா என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி, இந்த பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க
தொடரும்…
Nityaa Devi
super
Ramya Iyer
aarambam amarkalam semma lawyer n court scene 💖
Keerthi S
semma 🔥🔥🔥🔥🔥 ippadi than irrukanum
ppushpa94781
super