இருபக்கமும் வளர்ந்து நெடிந்த மரங்களின் நிழலை கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில், சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது அந்த பி.எம்.டபுள்யூ கார்.
சிக்னல் விழுந்ததின், அடையாளமாய் மின்னிய, சிவப்பு நிற விளக்கை கூட மதியாது, ‘அந்த கார்’ சிக்னலைக் கடக்க, தடுக்க வந்த காவலர், அந்த வண்டியின் நம்பரை பார்த்து சல்யூட் அடித்து பின் வாங்கி நின்றார்.
இப்படி ஒருவர் முன் வந்து, தடுக்க வந்ததை கூட அறியாது, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனின் கவனம், சாலையிலும் இல்லாது, வண்டியிலும் இல்லாது, பின் சீட்டில் கம்பீரமாய், ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவனின் மீது இருந்தது.
முகத்தில் வழிந்த வேர்வைத்துளியைக் கூட, துடைக்க துணிவில்லாமல், கண்கள் அங்கும், இங்கும் அலை மோதியது, அவனின் இதயம் துடிக்கும் சத்தம், அந்த சாலை இரைச்சலையும் தாண்டி, அவனுக்கே கேட்டது.
பின்னால் அமர்ந்திருந்தவனின் முகமோ? அதற்கு நேர்மாறாய் இருந்தது.
எப்போதும் அவன் உதட்டில் பதிந்திருக்கும், அந்த ஏளன சிரிப்போடும், எதிராளி, சற்றும் கணிக்க முடியாத முகபாவனையோடும், “உன்னால் முடிந்தால் செய்” என்ற துணிச்சலோடும், அந்த ஏசி காரிலும், கண்ணில் மின்னிய கூலரை ஸ்டைலாக கழட்டி, அதை சர்ட்டில் மாட்டிக் கொண்டே, “மிஸ்டர் ஜெய்’ டூ வாட் ஐ சேய், காட் இட்?” என்றான்.
அந்த வார்த்தைகளில் இருந்த அந்த அதிகார சாயலே கூறியது. ‘இதை நீ செய்து தான் ஆக வேண்டும்’ என்று.
“சார். அது” என்று ஏதோ கூற வந்தவனின் வார்த்தைகள் நாவை விட்டு எழவில்லை. அதற்கு பதிலாய், எப்போதும் அவன் உதிர்க்கும் வார்த்தைகளான “எஸ் சார்” என்ற பதிலைத்தான் கூறினான்.
அந்தப் பதிலில் “தட்ஸ் குட்” என்றவனின் முகத்தில் பூத்த அந்த வெற்றிப் புன்னகை, அவன் கண்களிலும் மின்னியது.
இவன் மட்டுமல்ல, அவனின் எதிரில் நிற்பவரைக் கூட, அவன் நினைத்ததை தான் பேச வைப்பான், என்று, பல பேர் சொல்லி கேட்டுள்ளான். அதை இப்போதே நேரில் பார்க்கிறான்.
அந்த வியப்பு, மாறுவதற்கு முன்னே, இவர்கள் கார், முன்னே சென்று கொண்டிருந்த, அந்த ரோட்மாஸ்டர் எலைட் ஸ்போர்ட்ஸ் பைக்-கின் மீது மோதியது.
இவர்கள் கார் மோதிய வேகத்தில், அந்த பைக்கில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்களும், காற்றில் பறந்து, பைக் பள்ளத்திலும், அதில் ஒருவன் மரத்தில் மோதியும், இன்னொருவன் பைக்கை தாண்டி சாலையில் சரிந்து விழுந்தான்.
“ஓ சிட்” என்ற பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவனின் குரலில் கண்ணைத் திறந்து பார்த்தான், அந்த ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த ‘ஜெய்’
“என்ன பண்ணிட்ட?” என்று அவன் தெரியாதது போல் கேட்க “சார். நீங்கத்தான” என்று ஜெய் பதட்டமாய் பதில் கூறினான்.
ஆனால் அவனோ அப்போதும் அசராமல், “வண்டியை விட்டு கீழே இறங்கு” என்ற அவனின் பார்வையில் தானாக காரை விட்டு வெளியேறினான் ஜெய்
அதன் பின் கார் கதவை திறந்து, கருப்பு நிற பேண்டும், அதற்கு ஏற்றார் போல கோர்ட் சூட்-டில் ஸ்டைலாக அந்த காரில் இருந்து கீழே இறங்கினான், ‘முகிலன் என்ற இளமுகிலன்’.
இவர்கள் கார் பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு காரில், இருந்து இறங்கி வேகமாக ஓடி வந்த இன்னொருவன், “பாஸ்” என்று அழைத்தான்.
அதில் புதிதாய் வந்தவன் தோளில் கை போட்ட முகிலன், கண்களால் அந்த இருவரை காமித்தான்.
அதன் அர்த்தம் புரிந்தது போல், தன் கையில் இருந்த மொபைலை எடுத்து, “ஹலோ ஏசிபி. நான் முகிலன் க்ரூப் ஆப் கம்பெனி எம்.டி யோட பி.ஏ பேசுறேன். ஈசிஆர் எவர்கிரீன் ரெசிடன்ஸி க்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு பல பத்திரிக்கைகளும், போலிஸுகளும் குவிந்தனர். அதற்குள் அவனின் பாடி கார்ட்ஸ் அத்தனை பேரும் அவனை சுற்றி நின்றனர்.
வேகமாகவும், பதட்டமாகவும், வந்த ஏசிபி. “பாய் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?” என்று அக்கறையாய் விசாரித்தார்,
அதற்கு “ஒன்றுமில்லை” என்று சிரித்தானா? இல்லையா? என்று கொஞ்சமும் கணிக்க முடியாத ஒரு நொடி சிரிப்பை தந்திருந்தான்.
அதை அவர் புரிந்துக்கொள்ளூம் முன்னவே, அடுத்த நொடி கண்கள் அனல் கக்க, அந்த மூவரையும் பார்த்தான்.
அதை புரிந்துக் கொண்ட ஏசிபியும், உடனே ஜெய்யின் சட்டை காலரை பிடித்து இழுத்து, “கான்ஸ்டபிள்ஸ், அந்த ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க” என்றார்.
அதில் ஜெய்யோ அதிர்ந்து, ஏசிபியையும், முகிலனையும் மாறி மாறி பார்த்தான்.
ஆனால், அதை கண்டுக்கொள்ளாமல் பத்திரிக்கையாளர் முன்னால் வந்த ஏசிபி, “இங்க நடந்த எல்லாத்துக்கும் காரணம் இந்த ஜெய் தான். மிஸ்டர்.முகிலன கொலை பண்ண நடந்த முயற்சி தான் இது. மேற்கொண்டு அக்யூஸ்ட கோர்ட்-ல ஒப்படைச்சதுக்கப்புறம். மீதி டீடயல்ஸ நாங்களே சொல்றோம். இப்ப நாங்க ஏதாச்சும் சொன்னா, இதுல சம்பந்தபட்டிருக்க மற்ற குற்றவாளிகள் தப்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு” என்றான்.
அதைக் கேட்டு அவர்கள் எல்லாம் முகிலனைப் பார்க்க, உடனே ஏசிபி வேகமாய், மற்ற காவலர்களை அழைத்து கூட்டத்தை கலைக்க கூறினான்.
ஆனால் பத்திரிக்கையாளர்களோ? முகிலனை நெருங்குவதிலேயே குறியாய் நின்றனர்.
அவர்கள் தடுக்கும் முன்பே, “சார். அப்போ இது மர்டர் பிளான்-னா? இத யார் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று அந்த காவல் தடுப்பையும் மீறி முகிலனிடம், மைக்கை நீட்டினர்.
அதைப் பார்த்து பதறிய பிஏவோ, ஏசிபியிடம் “வாட்ஸ் கோயிங் ஆன்? பிளீஸ் பி ஸ்டாப் திஸ் ஆல்” என்றான்.
ஆனால் அதற்குள் முகிலன் கண்களால், அவர்களிடம், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றப்படி, பத்திரிக்கையாளர்கள் பக்கம் திரும்பினான்.
“பை தி வேய். நான் யாரு?” என்று முகிலன் கூலரை மாட்டிக்கொண்டே அந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்டான்.
“சார். நீங்க” என்று அந்த பத்திரிக்கைப்பெண் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.
“ம். சொல்லுங்க. நான் யாரு? உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியுமோ அதை சொல்லுங்க” என்று முகிலன் ஸ்டைலாக அவன் காரின் மேல் சாய்ந்தப்படி கேட்டான்.
அதில் ஒரு நொடி அவன் ஆளுமையிலும், அழகிலும், தன்னை மறந்து சைட் அடித்துக் கொண்டிருந்தாள் அந்த பத்திரிக்கை பெண்.
அதைப்பார்த்து கடுப்பானவன், “நீங்க என்னை சைட் அடிச்சி முடிச்சிட்டீங்கன்னா? நான் கேட்ட கேள்விக்கு ஆன்சர் பண்ணலாம்” என்றான்.
அந்த வார்த்தையில் நக்கலோ? கிண்டலோ? எதுவுமில்லை. ஆனால் அவனுடைய பார்வை, அந்தப் பெண்ணை அழுத்தமாய் பார்த்தது.
அதில் “இல்ல சார். நீங்க இந்தியா வோட நம்பர் ஒன் பிசினஸ் மேன்” என்று அந்தப்பெண் பயந்து கூறினாள்
“ம். யா. நான் பிஸ்னஸ் மேன் தான். ஐயம் நாட் ஏ போலீஸ். ஐயம் நாட் ஏ சிஐடி. தென் ஐயம் நாட் ஏ ஜர்னலிஸ்ட். ஆர் யூ கெட் இட். சோ ஆஸ்க் யுவர் சில்லி கொஸ்டீன்ஸ் டூ ஏசிபி ஆர் எனி ஒன். தட்ஸ் நன் ஆப் மை பிஸ்னஸ். சோ நவ், ஆர் யூ லீவ் மீ” என்று அவன் சொல்லிவிட்டு தன் காரில் ஏற. அவனைத் தொடர்ந்து அவன் பி.ஏ வும், வண்டியில் ஏறினான்.
அதே நேரம் நீதிமன்ற வாசலில் ஒரு வயதான பெரியவரும், ஒரு சிறு பெண்ணும் கதறி அழுதுக் கொண்டிருந்தனர். அதை நின்று கவனிக்க கூட யாருக்கும் நேரமில்லை.
அவர்களை கடந்து சென்ற அத்தனை பேரும் ஏதோ ஒரு பரபரப்பில் அலைந்துக் கொண்டிருந்தனர்.
“உண்மையாவா? அந்த மேடம் இன்னிக்கு கோர்ட்டுக்கு வறாங்களா?” என்று கையில் வக்கில் கோர்ட்டை வைத்துக் கொண்டு, சிறு பதட்டத்துடன், தன் அருகில் நின்றுக் கொண்டிருந்த தன் சீனியர் வக்கிலைப் பார்த்து ஆவலாக அந்த ஜூனியர் பெண் கேட்டாள்.
அதற்கு அந்த சீனியர் வக்கிலோ “ஏய். நீ என்கிட்ட தான் அசிஸ்டன்டா ஒர்க் பண்ற, அவகிட்ட இல்லை. சரியா?” என்று கோவமாக கூறினான்.
“ம். அவங்ககிட்ட அசிஸ்டன்டா ஜாயின் பண்ண முடிஞ்சிருந்தா? நான் ஏன் உன்கிட்டலாம் ஜூனியரா சேர போறேன்? என்னவோ? என் கெட்ட நேரம்? ஜட்ஜ பார்த்த உடனே மனப்பாடம் பண்ணி வச்ச அத்தனை செக்க்ஷனும் மறந்து போயிடுது. அதுலையும், ஜட்ஜ விட அந்த மேடம் முன்னாடி பேசப்போனா, என் பேர் என்னன்னே மறந்து போயிடுறேன். அப்புறம் எங்கிட்டு போயி அவங்ககிட்ட அசிஸ்டன்டா ஜாயின் பண்றது” என்று மனதிற்க்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள் மதியரசி.
திடீரென அங்கிருந்த அத்தனைப் பேரின் மத்தியிலுமே சலசலப்பு ஏற்பட்டது.
சரியாக அந்நேரம், கருப்பு நிற இனவா கார் வாயிலைக் கடந்து உள்ளே நுழைவதற்கும், அந்த பெரியவர் மயங்கி வண்டியின் முன்னால் விழுவதற்கும் சரியாக இருந்தது.
அந்தக்காரை நோக்கி பல பத்திரிக்கையாளர்களும், பார்வையாளர்களும், வேகமாக ஓடினர். ஆனால் ஒருவர்கூட அந்தப் பெரியவரை தூக்க முயற்சிக்கவில்லை.
அத்தனைப் பேரும் அவள் காரை நெருங்க, அதற்குள் காற்றினை கிழித்துக் கொண்டு, அதனிடையில் ஒளிவீசும் மின்னல் கீற்றைப் போல், கார் கதவை வேகமாக திறந்து வெளியில் வந்தாள் மித்ரா என்று அழைக்கப்படும் மித்ர யாழினி.
அதில், அனைவரும் அவளைப் பார்க்க, ஆனால் அவளோ யாரையும் கண்டுக்கொள்ளாது, விழுந்து கிடந்த அந்தப்பெரியவரை நெருங்கினாள்.
“ட்ரைவர் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்ற மித்ராவின் குரலில், ட்ரைவர் வேகமாய் வாட்டர் பாட்டிலை எடுத்து வந்துக் கொடுத்தார்.
அதை வாங்கி, அந்த பெரியவரின் முகத்தில் தெளித்து அவரை எழுப்பினாள்.
அதில் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்த பெரியவரோ, “ரொம்ப நன்றி-ம்மா” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
உடனே வேகமாய் அவர் கையை பிடித்து தடுத்தவள், “உங்க பேத்தி வயசுதான் எனக்கு இருக்கும். நீங்கப்போயி என்கிட்ட. சரி நீங்க தனியாவா வந்தீங்க?” என்று கேட்டாள்.
அதற்குள் “தாத்தா. தாத்தா” என்ற சிறுமியின் குரல் மித்ராவை எட்டியது.
அவள் திரும்பிப் பார்க்க. அங்கே இவளை சுற்றி நின்ற கூட்டத்தினால், பாவம் அந்த சிறுமியால், உள்ளே வர முடியவில்லை.
அதில் அத்தனை நேரம் அவள் கண்களில் இருந்த கனிவு, சட்டென அனலாய் மாற, சுற்றி இருந்தோரைப் பார்த்தாள்.
அவ்வளவுத்தான் சுற்றி இருந்த அத்தனை பேரும் பத்து அடி தள்ளி நின்றனர்.
சிறுமியை கைநீட்டி அழைத்தவள் ட்ரைவரிடம், “அவங்களுக்கு மொதல்ல ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி கொடுங்க. அப்புறம் என்னோட ஆபிஸுக்கு கூட்டிட்டு போங்க. நான் வந்து பாக்கிறேன்” என்றாள்.
அவர்கள் வாய் விட்டு அவளிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவளால் அவர்களுடைய மனதை பறிக்க முயன்றது.
அதில் அந்த பெரியவர் முகத்தில் அத்தனை நன்றியுணர்வு இருந்தது.
“நீங்க அவர் கூட போங்க” என்று அவரிடம் சொல்லிவிட்டு, காரினுள் இருந்த பைலை-யும், கருப்பு கோர்ட்டையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்த காட்டன் புடவையில், காதில் சின்ன கம்மலும், அதற்கு ஏற்றார் போல் கழுத்தில் சின்ன செயினும் அணிந்திருந்தாள்.
நெற்றியில் சிறிதாக ஒரு கருப்பு பொட்டும், மனதில் ஏதோ ஒரு மூலையில் கடவுள் நம்பிக்கை-யும் இருக்கிறது என்பதற்கு சான்றாய். நெற்றியில் சிறு கீறல் போல் குங்கும் வைத்திருந்தாள்.
ஒரு கையில் சிறிதாய், அளவாய் ஒரு கடிகாரமும், மறு கையில் ஒரு வளையலும் அணிந்திருந்தாள்.
இது மட்டும் தான் அவளின் அலங்காரம். இல்லை இல்லை அவளின் அடையாளம்.
அவள் கம்பீரத்தை எடுத்துக்காட்டுவது போல், வேகமான அவள் நடையும்,
கையில் ஸ்டைலாய் தொங்கிக் கொண்டிருந்த அந்த வழக்கறிஞர் அங்கி சொல்லும் அவள் திறமையையும், வெற்றியையும்.
அவள் பின்னால் வந்தக் கூட்டத்தை சற்றும் கண்டுக்கொள்ளாமல், அவள் கோர்ட்க்குள் நுழைய போக, சட்டென்று நின்றாள்.
அதில் அனைவரும் அவளை கேள்வியாய் பார்க்க, மித்ராவோ ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் சென்று “கவலைப்படாதீங்கமா. இன்னிக்கு கண்டிப்பா உங்க பையன் வெளிய வந்துருவான். நீங்க அவங்ககூட தான் வீட்டுக்கு போவீங்க” என்றாள்.
அவள் கூறியது ஆறுதலா? இல்லை அவள் திறமையின் மேல் அவளுக்கிருக்கும் நம்பிக்கையா? என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுயநலத்தின் மறு உருவமாய் இருக்கும் முகிலனுக்கும், பொதுநலமே தன் நலமாய் வாழும் மித்ராவுக்கும் இடையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது? இந்த முகிலனும், மித்ராவும் உங்கள் மனதில் இடம்பிடிப்பார்களா? இப்படி எல்லாத்துக்குமான பதில, அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க
தொடரும்…
Nityaa Devi
super semma 👌👍
Keerthi S
enna sarmi unnoda heroes kolaru pidichavanga la irrukaranganunga 🤭🤭🤭🤭… ivan deeraj vida dangerous person 😤😤…
unnoda story la nethi ku aprm mithara than strong heroin 🔥🔥🔥….
i like this combo… first epi super
Alima Jasmine
sema vera level
Sujatha G
ithuvum nalla irukkey… nalla saravediya ❤
Syed Vahi
ஆரம்பமே அதிரடியா இருக்கு சூப்பர் 👍
Dhana Lakshmi
waiting for next epi your all was rocking sis
Deepa K
interesting
Ramya Iyer
ஆரம்பமே அதிரடி செம்ம intro adi dhool 😍💖