அதே நேரம் அங்கே யாஷிகாவோ, “இன்னும் அந்த அக்கா எங்க போனாங்கன்னு கண்டுப்பிடிக்கலையா?” என்று கவலையாய் கேட்டாள்.
“ஹேய், இப்போ நீ அவங்கள கண்டுப்பிடிச்சு என்ன பண்ணப் போற?” என்று கேட்டான் ஆர்யன்.
“பாவம்! அவங்களுக்கு எவ்ளோ அடிப்பட்டிருந்திச்சு. இப்போ அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டாள்.
“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?” என்று ஆர்யன் விடாது கேட்க, இப்போது அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கினாள்.ஜ்
“ஹேய் விடு யாஷி. Final stageல இருக்கேன்” என்று ஆர்யன் அவளிடம் கெஞ்சினான்.
அதற்குள் ஆத்ரேயன் தான், “இல்லடா. நான் அவங்கள அட்மிட் பண்ணிட்டு, அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லலாம்னுதான், அவங்க bag check பண்ணே. ஆனா அவங்கக்கிட்ட மொபைல் கூட இல்ல. என்னாலையும் நைட் ஸ்டே பண்ண முடியல. காலையில போயி பாக்குறப்ப, அவங்க கெளம்பி போயிட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. அப்படியே அவங்களோட இந்த chainஐயும் கொடுத்துட்டு போயிருக்காங்க. அவங்கள பத்துன எந்த தகவலும், ஹாஸ்பிடல்ல இல்ல” என்றான்.
இப்போதும் யாஷிகா, அந்த chainஐத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அந்த அக்காக்கு self respect ரொம்ப அதிகம்” என்று கூறினாள்.
“ஆமா அதுக்குன்னு, எல்லாரும் அந்த இஷிதா மாதிரி இருக்க முடியுமா?” என்று வெறுப்பாய் உதட்டை சுழித்தான் ஆத்ரேயன்.
அவன் படிக்கும் கல்லூரியில் தான், அவளும் முதலாம் வருடம் டாக்டருக்கு படிக்கிறாள். அத்விக்கின் பின்னால், பைத்தியக்காரத்தனமாய் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
இதில் நேற்று வந்து, “உன் அண்ணா கூட, எனக்கு டின்னர் arrange பண்ணி கொடு” என்றாள்.
“உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது?” என்று சிறு கோவத்துடன் கேட்டான் ஆத்ரேயன்.
“ஒரு ப்ரண்டாதான கேக்குறேன். ஏன் ப்ரண்டுக்காக இத கூட செய்ய மாட்டீயா” என்று கேட்டாள்.
“இங்கப்பாரு. மொதல்ல உனக்கு ப்ரண்ட்ஷிப்க்கு அர்த்தமாச்சும் தெரியுமா? என் அண்ணனுக்காகதான், நீயே எங்க கூட வந்து சுத்திட்டு இருக்க. அது தெரிஞ்சும், உன்ன எங்க கூட சேத்துக்கிட்டது, உனக்காக இல்ல. சாந்தனு uncleக்காக மட்டும்தான்” என்றான் ஆத்ரேயன்.
“போடா. நீ இல்லன்னா எனக்கு ஹெல்ப் பண்ண ஆளு இல்லன்னு நினைக்கிறீயா?” என்று நக்கலாய் கேட்டாள் இஷிதா.
“இங்கப்பாரு மறுபடியும் சொல்றேன். என் அண்ணாகிட்ட இருந்து தள்ளியே இரு. அப்புறம் உனக்குதான் ப்ரச்சன” என்று சொல்லிவிட்டு வந்திருந்தான்.
இப்போது அந்த விஷயம் நினைவுக்கு வந்திருக்க, அந்த கடுப்பில்தான் கூறினான்.
“உனக்கு அவ உன் பின்னாடி வரலன்னு பொறாம” என்று ஆர்யன் விளையாட்டாய் சொல்ல, “ச்சீ, அவெள்ள மாதிரி எல்லாம் ஒருத்தி எனக்கு வேண்டவே வேண்டா” என்றான் ஆத்ரேயன்.
கோவிலைப் பார்த்தப்படியே கடந்து செல்ல முயன்ற, அஞ்சலியின் கையை பிடித்து ஒரு பெண் நிறுத்தினாள்.
அதில் அவள் நிமிர்ந்துப் பார்க்க, “சாரி” என்று அவள் சொல்ல, அஞ்சலியோ புரியாது பார்த்தாள்.
“இல்ல, உன்னோட ட்ரஸ் எல்லாம் இப்படி சேறானதுக்கு நாதான் காரணம்” என்று தன்னுடைய காரை கண் காட்டினாள்.
“பரவாயில்லங்க. நாதான் கவனிச்சிருக்கனும்” என்று சொல்லிவிட்டு அஞ்சலி நகர சென்றாள்.
அதற்குள் அவளை நகர விடாது, “இல்ல. மிஸ்டேக் என்னோடது” என்றப்படி, வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து wash செய்ய நீட்டினாள்.
“இல்லங்க. இத வெச்சிலாம் wash பண்ண முடியாது. இங்க பக்கத்துலதான் என் ஹாஸ்டல். அங்க போய் மாத்திக்கிறேன்” என்றாள் அஞ்சலி.
“அப்போ, ஒரு நிமிஷம்” என்று சொல்லிய, அந்த பெண்ணோ, வேகமாய் தன் காரில் இருந்த ஒரு பார்சலை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்.
அதைப் பார்த்த அஞ்சலியோ அப்போதுதான் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். பார்க்கவே பெரிய வீட்டு பெண் போல் இருந்தாள்.
ஆனால், முகத்தில் எந்தவொரு திமிரும் தெரியவில்லை.
“பணக்காரங்கள்ல, நல்லவங்களும் இருப்பாங்க போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அவள் வாங்காமல் நிற்கவும், “இந்தா. இத வெச்சிக்கோ” என்று கொடுத்தாள் நிரூஷா.
“என்னது?” என்று அஞ்சலி கேட்க, “இல்ல. உன் ட்ரஸ் கிழிஞ்சிருக்கு. அதா…” என்றாள் நிரூஷா.
அப்போதே அதைப் பார்த்த அஞ்சலியோ, ஷாலால் அதை மறைத்துக் கொண்டே, “இல்ல. வேண்டா” என்றாள்.
“பரவாயில்ல, இத வாங்கிக்கோ” என்று நிரூ அவள் கையில் திணித்தாள்.
“ரோட்டுல உக்கார்ந்திருந்ததால, என்ன பிச்சக்காரின்னு நெனச்சிட்டீங்க போல. நா பிச்சக்காரில்லா இல்ல. வரேன்” என்று சொல்லிவிட்டு, அதை வாங்காது சென்றாள்.
பொதுவாக அப்படி எல்லாம், பேச மாட்டாள். ஆனால் அத்விக்கின் வார்த்தைகள் அவள் மனதை அத்தனை பாதித்திருந்தது.
அவன் கூறினானே, “இத என் தங்கச்சி பொறந்த நாளுக்கு, ஒருத்திக்கு பிச்ச போட்டதா நெனச்சிக்கிறேன்” என்று.
அதில் செல்பவளையே பார்த்தப்படி நின்றிருந்த நிரூக்கு, ஒரு காலத்தில் தானும், இப்படி ஒரு நிலையில் நின்றது நினைவுக்கு வந்தது. அவளை கட்டாயப்படுத்தி, கொடுக்க மனம் வரவில்லை. அதனால், அங்கிருந்து கிளம்பினாள் நிரூ.
ஹாஸ்டலுக்கு வந்த அஞ்சலியின் மனமோ, “நீ பிச்சக்காரிதான. அவங்க கொடுத்தத வாங்குறதுல, அப்படி என்ன நீ கொறஞ்சி போயிடப் போற? ஏன் இதுக்கு முன்னாடி, நீ யார்கிட்டையும் கையேந்தி நின்னதே இல்லையா?” என்று மனசாட்சி அவளை அவமானப்படுத்தியது.
அதில், அழுகை மட்டும் தான் மிஞ்சியது. அவளிடம் போட்டுக்க கூட நல்ல உடை இல்லை. இப்படி சென்று வேலை கேட்டால், யார்தான் வேலை கொடுப்பார்கள்? அது அவளுக்கும் தெரிகிறது தான்.
ஆனாலும், அவளையும் மீறி, அவ்வப்போது அவளின் தன்மானம் எட்டிப் பார்க்கிறது. அதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.
குளித்து முடித்து வேறு உடையை மாற்றிவிட்டு வந்த அஞ்சலியிடம், “warden உன்ன கூப்பிடுறாங்க” என்று ஒரு பெண் வந்து கூறினாள்.
அவளுக்கும் தெரியும். அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று.
அதில் மீண்டும் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அடக்கிக்கொண்டு, அவரைப் பார்க்க சென்றாள்.
அவர் பேசும் முன்னே, “நாளைக்கு நா ரூம்ம காலி பண்ணிடுறேன்” என்றாள் அஞ்சலி.
அதில் அவளை அழுத்தமாய் பார்த்தவரோ, “இப்போ உன்ன நா அதுக்கு கூப்பிடல” என்றார்.
உடனே இவள் நிமிர்ந்து, அவரை குழப்பமாய் பார்த்தாள்.
அவளின் உள் மனமோ, “ஒரு வேள, உடனே கெளம்ப சொல்லப் போறாங்களோ?” என்று பதறியது.
அதற்குள்ளாக, “எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேக்குறாங்க. உனக்கு சம்மதம்னா சொல்லு. நா அவங்க-கிட்ட பேசுறே. சம்பளம் தங்குற இடம் பத்தி எல்லாம் ப்ரச்சன இருக்காது. அவங்க வீட்லையே கூட நீ தங்கிக்கலாம்” என்றார்.
அதை கேட்டவளுக்கோ, அவள் காதில் விழுந்ததை சுத்தமாய் நம்ப முடியவில்லை.
அவள் அப்படியே இருக்கவும், “ஹேய் என்ன? உன்கிட்டதான கேக்குறேன். போய் பாக்குறீயா? இல்ல வேண்டாமா?” என்று அதட்டினார்.
அதில் தெளிந்த அஞ்சலியோ, “இல்ல இல்ல. நா போறேன்” என்று வேகமாய் தலையாட்டினாள்.
“சரி அப்போ அவங்க-கிட்ட சொல்லிடுறேன். இதுதான் அந்த வீட்டு அட்ரஸ். நீ நாளைக்கு போயி பாரு” என்று ஒரு கார்டை நீட்டினார்.
ஏனோ அதை வாங்கியதும், கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
“ரொம்ப thanksக்கா. இந்த உதவிய எப்பவுமே நா மறக்க மாட்டே” என்றாள்.
“உன் thanks எல்லாம் வேண்டா. இங்க இருந்து நீ கெளம்புனாலே போதும். உன்னால டெய்லியும், எனக்குதான் ப்ரச்சன. அங்க போறப்ப. ஒரு நல்ல ட்ரஸா பாத்து போட்டுட்டு போ” என்று கூறினார்.
அவர் எத்தனை கடுமையாய் பேசினாலும், இப்போது ஏனோ அவளுக்கு அவர் மீது கோவமே வரவில்லை. தெய்வமாகத்தான் தெரிந்தார்.
ஆபத்தில் இருக்கும் போது, எதிரில் இருப்பவர் செய்யும் சிறு உதவி கூட, பாதிக்கப்பட்டவனுக்கு, பெரிய உதவியாய் தான் தெரியும். அப்படித்தான், இப்போது அஞ்சலிக்கு அந்த வேலை தெரிந்தது.
அடுத்த நாளே, அவர் கொடுத்த அட்ரஸுக்கு சென்று பார்த்தாள். அது ஒரு apartment. ஒரு வயதான பாட்டியை பார்த்துக்கொள்ள வேண்டிய வேலை தான். அங்கேயே தங்கிக்கொள்ளவும் கூறினர்.
உடனே ஹாஸ்டலை காலி செய்துவிட்டு, அங்கு வந்து விட்டாள். நீண்ட நாட்களுக்கு பின், மனம் சற்று நிம்மதியடைந்தது.
அப்படியே ஒரு வாரம் சென்றிருக்கும். அவளுடைய நிம்மதி மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் பறிப்போக ஆரம்பித்தது.
அந்த வீட்டினர் எல்லாம் நல்ல விதம் தான். என்ன, திடீர் திடீர் என்று அந்த பாட்டிக்கு கோவம் வந்துவிடும். இவள் மேல் எதையாவது தூக்கி எறிந்துவிடுவார்,
அதனால், கை கால், தலை இப்படி அடிக்கடி ரத்த காயம் வாங்கியிருப்பாள். ஆனால் அவளுக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்லை.
இப்போது, புதிதாய் ஒரு பிரச்சனை அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பம் ஆகியிருந்தது.
அந்த வீட்டில் அந்த பாட்டியின் பேரன் என்று முப்பது வயது மதிப்புமிக்க ஒருவன் வந்தான்.
அவன் அஞ்சலியை பார்க்கும் பார்வையே சற்று மோசமாகதான் இருக்கும்.
இவள் கையை பிடித்து பேசுவது, தொடுவது என்று அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
அஞ்சலிக்கோ, யாரிடம் சொல்ல என்று கூட தெரியவில்லை. தனக்கென்று யாராவது இருந்தால் சொல்லியிருப்பாளோ என்னவோ?
ஆனால் அவளுக்குத்தான் யாருமே இல்லையே.
அதனால் முடிந்தளவுக்கு அவன் வந்துவிட்டால், அவள் வெளியிலோ, இல்லை மொட்டை மாடிக்கோ சென்று மறைந்துவிடுவாள்.
இதோ அப்படியே ஒரு ஆறு மாதம் ஓடியிருந்தது. ஆனால் அதற்கு மேல் அவளால் சுத்தமாய் முடியவில்லை. முன்பெல்லாம் எப்போதாவது வருவான். இவள் எப்படியோ சமாளித்துவிடுவாள்.
ஆனால் கடந்த சில நாட்களாக, தினமும் வருகிறான். அதிலும் வீட்டில், அந்த பாட்டியின் மகளும், மருமகனும் இல்லாத போது வருகிறான்.
அதிலும் இன்று அவன் செய்த விஷயத்தை, நினைக்க நினைக்க, அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
“என்னடி? ஏதோ பத்னிக்கணக்கா வேஷம் போட்டுட்டு இருக்க. என் சித்தப்பா கூட, அப்படி இப்படி இருக்கத்தான செய்ற. அதே மாதிரி என் கூடையும் இரு. நானும் என் பங்குக்கு ஏதாச்சும் தரேன்” என்றப்படி அவளை பிடித்து அறைக்கு இழுத்துவிட்டான்.
அதற்குள், பாட்டி சத்தம் கொடுக்க, “உன்ன, அப்புறம் பாத்துக்கிறேன்” என்று ஓடி விட்டான்.
அவன் சென்ற பின்னும் கூட, அவன் பேசியது தான் அவள் காதில் ஓடியது.
அந்த பாட்டியின் மருமகனுக்கு, இவள் அப்பா வயது இருக்கும். அவர் ஒரு பார்வை கூட, இவளை தவறாக பார்த்தது கிடையாது. அப்படி இருப்பவரை, தன்னோடு சேர்த்து வைத்து பேசியதை கேட்க கேட்க, இவளுக்கு ஐயோ என்றிருந்தது.
வாழ்க்கையே வெறுப்பது போல் இருக்க, கோவிலுக்கு வந்தாள்.
“கடவுளே எனக்கு நீதா ஒரு வழிய காட்டனும்” என்று நினைத்தப்படி அவள் எழ, இப்போது அவளின் முன்னே வந்து நின்றான் அத்விக் அதிரூபன்.
அவள், அவனை யார் என்று நினைவுப்படுத்தும் முன்பே, அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான்.
வாங்கிய அடியில், அவள் தடுமாறி கீழே விழ, “I will kill you” என்று கர்ஜித்தான்.
அத்விக் எதற்கு அஞ்சலியை அடித்தான்? கடவுள் இன்னும் எத்தனை சோதனைகளைதான் அவளுக்கு கொடுப்பார்? அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் பத்தி உங்களோட கருத்த மறக்காம சொல்லிட்டு போங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு, உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேவதை வருவாள்…
vidhyabharathik0
ithu ena elam heros un heroine eh takunu kai neeti adikiranga ! ponnungala adikirathu thapu! for whatever reasons it may be its totally wrong! hero bad guy ! anjali pavam!
Keerthi S
aththu ippadi la panna kudathu cha cha unnoda appan nalla keduthu vechi irrukaran… appana maari mun kovam sir ku
Priya Vivek
Anjali ma nee vika ke tough kudupa polaye
Ramya Iyer
yempa un koovam da enna? avale paavam nondhu noodles aagita idula nee vera ippudi chenja enna artham? adikaradu dan adikara kaaram sollitu aducha edukunafhu puriyum. paavam enga porumaiyin sigaram