அடுத்த நாள் காலை கண் முழித்த அஞ்சலியோ, அத்தனை பெரிய மருத்துவமனையில் தன்னை அனுமதித்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்தாள்.
அதிலும், இவ்வுலகில், அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு இடமென்றால், அது மருத்துவமனை தான்.
சட்டென்று, அம்மா அப்பாவின் நினைவு வர, அவள் கண்ணெல்லாம் கலங்கியது. உடலில் இருந்த காயங்கள் எல்லாம் பின்னுக்கு சென்றது.
“இப்போ பெயின் பரவாயில்லையா?” என்று மருத்துவர் கேட்டார். “நான் உடனே போகனும்” என்றாள் அஞ்சலி.
“இல்ல, இன்னும் ரெண்டு நாளைக்கு” என்று மருத்துவர் ஏதோ சொல்ல வந்தார். “இல்ல. நான் போறேன்” என்றாள்.
அவளிடம், அந்த மருத்துவமனைக்கு பில் கட்ட கூட காசு கிடையாது. அதனால், அவள் கழுத்தில் இருந்த அந்த மெல்லிய செயின்னை, கழட்டி மருத்துவரிடம் கொடுத்தாள்.
அவளுடைய அன்னையின் நினைவாய், அவளிடம் இருந்தது அது மட்டும் தான். அவள் வாழ்க்கையில் எத்தனையோ நடந்தும், அதை அவள் கழட்டியிருக்கவில்லை.
ஆனால் இப்போது அதை கழட்டி கொடுத்தாள்.
“இல்ல, உங்க பில்ல ஏற்கனவே” என்று செவிலியர் ஏதோ சொல்ல வந்தார்.
“இல்ல. எனக்கு ஹெல்ப் பண்ணவங்களுக்கு தேங்க்ஸ். இத அவங்ககிட்ட கொடுத்துடுங்க” என்று சொல்லியப்படி கிளம்பி சென்றுவிட்டாள்.
ஏனெனில். அத்விக் சொல்லிய, “காசுக்காகதான, இவ்ளோ Drama” என்ற வார்த்தை அவளை அத்தனை பாதித்திருந்தது.
பல இடத்தில் காசு இல்லாமல், அவமானப்பட்டிருக்கிறாள் தான். ஆனால் ஏனோ, அத்விக் சொல்லியதை ஏற்க முடியவில்லை.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவளுக்கு, மீண்டும் தன் நிலையை நினைத்து அழுகைதான் வந்தது.
அவளுக்கு ஏதாவது ஆனால் கூட, அநாதை பிணமாக தூக்கி போட்டுவிடுவார்கள் என்பது, நேற்று தான் அவளுக்கு புரிந்தது.
அதனாலையே சாக கூடாது என்ற வீம்பு உருவானது. அதில் கண்ணீரை அழுந்த துடைத்தவள், நடந்தே அவளுடைய ஹாஸ்டலுக்கு சென்றாள்.
கை தலையில், பெரிய கட்டுடன் வந்த அஞ்சலியை பார்த்த, Hostel வார்டனுக்கே பதட்டமானது.
“ஹேய் அஞ்சலி. என்னாச்சு உனக்கு?” என்று கேட்டார். ஏனோ அது அவளுக்கு அந்த நிலையிலும் சிறு ஆறுதலை கொடுத்தது.
ஏதோ தன்னை பார்த்து இப்படி கேட்கவாவது ஒருவர் இருக்கிறாரே என்று.
“இல்லக்கா. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்” என்று அஞ்சலி சொல்ல, “அப்போ இத காரணமா சொல்லி, இன்னும் ஒரு மாசம், இங்க தங்கிடலாம்னு இருக்க” என்று சிறு கோவத்துடன் கேட்டார்.
அதில், கிடைத்த ஆறுதல், அப்படியே மறைந்து போயிருக்க, “இல்லக்கா. நான் சொன்ன மாதிரி ஒரு வாரத்துல கெளம்பிடுவேன்” என்று அழுகையை அடக்கி சொல்லிவிட்டு அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.
அது ஒன்றும் பெரிய அறை எல்லாம் கிடையாது. அதுவும் தனி அறையும் கூட கிடையாது. அந்த அறையில், இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள் தான்.
ஆனால் அஞ்சலியின் அழகோ? இல்லை அவளின் பொறுமையோ? ஏதோ ஒன்று, அவர்கள் இவளுடன் பேச கூட மாட்டார்கள்.
இப்போது இப்படி அடிப்பட்டு வந்தவளைப் பார்த்து ஒரு வார்த்தை கூட கேட்காமல், அவர்கள் வேலையை பார்த்திருந்தனர்.
இதெல்லாம் அவளுக்கு பழகிய ஒன்று தான். அதனால் அங்கிருந்த படுக்கையில் சென்று அமர்ந்துவிட்டாள்.
காயத்தின் வலி ஒரு பக்கம். நடந்தே வந்த அசதி. ஏதோ, ட்ரிப் போட்டிருந்ததால், சற்று தெம்பாக இருந்தாள். ஆனாலும், அவள் சாப்பிட்டு முழுதாய் ஒரு நாள் ஆகியிருந்தது.
“சாப்டீயா?” என்று கேட்க கூட அவளுக்கென்று யாரும் இல்லை.
நினைக்க நினைக்க அழுகை முட்டியது.
தன்னுடைய அம்மா அப்பா புகைப்படத்தை கட்டிக் கொண்டு, அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.
அதன் பின் மாலை போல் தான் கண் திறந்தாள். கண் திறந்து பார்த்தவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.
தட்டு தடுமாறி எழுந்து வந்து தண்ணீரை கடகடவென்று குடித்தாள். அதன் பின் தான், சற்று தெளிந்தாள்.
மணியை பார்க்க, மாலை, ஐந்து என்று காட்டியது. பசிப்பது போல் இருந்தது. தன்னுடைய பர்ஸை எடுத்துப் பார்த்தாள்.
எப்போதோ பாதுகாத்து வைத்த, இருபது ரூபாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
“வாழ்க்க இப்படியே போயிடுமா சார்” என்று டீக்கடையில் இருந்த TVயில் ஒரு காட்சி ஓடி கொண்டிருந்தது.
ஏனோ இப்போதெல்லாம் அவளை சுற்றி என்ன நடந்தாலும். அவளுக்கே சொல்வது போல் இருந்தது.
கையில் இருந்த காசை, அங்கே இட்லி சுட்டு கொண்டிருந்த பாட்டியிடம் நீட்டினாள்.
அவளைப் பார்த்ததும், “அச்சோ என்னாச்சுமா? எப்படிமா அடிப்பட்டிச்சு. மொத இப்படி வந்து உக்காரு தாயி” என்று அவள் கையை பிடித்துக் கொண்டார் பாட்டி.
அந்த பாட்டியை, அவளுக்கு ஒரு மாதமாகதான் தெரியும். பெரிதாய் இவள் பேசியது கூட கிடையாது.
இப்போது அந்த பாட்டியின் கண்ணில் தெரிந்த அக்கறை, என்னமோ சிறு தைரியத்தை கொடுத்தது.
“ஒன்னும் இல்ல பாட்டி. ஒரு ரெண்டு இட்லி கொடுக்குறீங்களா?” என்று கேட்டாள். ஏனெனில், பசியில் அவளால் பேச கூட முடியவில்லை.
அதை உணர்ந்த பாட்டியும். வேகமாய் நான்கு இட்லியை தட்டில் வைத்து, அவளிடம் நீட்டினார்.
வலது கையில் அடிப்பட்டிருக்க, கொஞ்சம் கஷ்டப்பட்டுதான், அதை சாப்பிட்டாள்.
“நா வேண்ணா ஊட்டி விடட்டா தாயீ” என்று அக்கறையாய் கேட்டார் பாட்டி.
ஏனோ மீண்டும் கண்னெல்லாம் கலங்கியது. “பரவாயில்ல பாட்டி. நீங்க வியாபாரத்த பாருங்க. நான் சாப்டுக்கிறேன்” என்றாள்.
“என்னமோம்மா. பாத்து சூதானமா இருந்துக்கோமா. தனியா இருக்கோம்னுலாம் யோசிக்காத. இந்த உலகத்துல பொறந்த அத்தன பேருமே. என்னிக்கோ ஒரு நாள். தனியா நின்னுதான் ஆகனும். தைரியத்த மட்டும் விட்டுடாத கண்ணு” என்று அவள் கன்னம் வருடி சொல்லிவிட்டு சென்றார்.
அது அந்த நொடி, அவளுக்கு யானை பலத்தை கொடுத்தது. அதே நேரம் மனதில், “காசுக்காகதான இவ்ளோ Drama” என்று சொல்லிய அத்விக்குடைய குரலும் கேட்டது.
“ஆமா. காசுக்காகதான் இங்க எல்லாமே. காசு இல்லாதவங்களுக்குத்தான் அதோட அரும தெரியும்” என்று யோசித்த அஞ்சலியோ, கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
அதே நேரம் அங்கே அலுவலகத்தில் இருந்த அத்விக்கோ, “What the Hell? இதெப்டி நடந்திச்சு?” என்று அத்தனை கோவமாய் கத்தினான்.
அவனின் கோவத்தில். அவனை சுற்றி இருந்த அத்தனைப் பேரும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.
அன்னேரம், “டார்லு” என்று சொல்லியப்படி ஓடி வந்து அவனை கட்டிப் பிடித்தாள் இஷிதா.
அத்விக், அத்தனைக் கோவமாய் பேசிக் கொண்டிருக்க, அப்போது உள்ளே நுழைந்த இஷிதாவோ அவனை பின் பக்கம் இருந்து கட்டிக் கொண்டாள்.
அதில் அத்தனைப் பேரும் அவர்களைப் பார்க்க, அத்விக்கோ சற்றும் யோசிக்காமல், அவளை தன்னில் இருந்து பிரித்து, அவள் கன்னத்திலேயே பளாரென்று அடித்திருந்தான்.
வாங்கிய அடியில், கன்னத்தில் கை வைத்தப்படி அவள் நின்றிருக்க, “Get lost” என்று கத்தினான் அத்விக்.
அவனின் கத்தலில், அங்கிருந்தவர்கள், அவளை பாவமாய் பார்த்தனர். அது அவளுக்கு அவமானமாக இருந்தது.
அதனால் யாரையும் பார்க்காமல், வந்த வேகத்தில் அங்கிருந்து சென்றிருந்தாள்.
இப்போது அவள் சென்ற திசையை பார்த்தப்படி மற்றவர்கள் நிற்க, இவனுடைய கோவம் கடகடவென்று கூடியது.
“நா கேட்ட கேள்விக்கு, இன்னும் எந்த பதிலும் வரல” என்று கையில் இருந்த பைலை தூக்கி அடித்தான்.
பொதுவாக இத்தனை கோவத்தை எல்லாம், அவன் வெளியில் கொட்ட மாட்டான். அமைதியாகத்தான் எல்லாவற்றையும் handle செய்வான்.
ஆனால், இப்போது இஷிதா நடந்துக் கொண்ட விதம் அவனுடைய பொறுமையை காற்றில் பறக்க வைத்தது.
“இல்ல சார், உடனே solve பண்ணிடுறோம்” என்று வேகமாய் அந்த Designer கூறினார்.
“Go and find the solution immediately” என்று அத்விக் கத்த, அத்தனைப் பேரும் அங்கிருந்து சென்றிருந்தனர்.
அவர்கள் செல்லவும், அப்படியே, “எப்படியாச்சும் தப்பிச்சிடு மணி” என்று தனக்குள் சொல்லியப்படி, செல்ல முயன்றான் நேசமணி.
அதற்குள், அவன் பின் சட்டைக்காலரை, எட்டிப் பிடித்திருந்தான் அத்விக்.
“இன்னிக்கு நா செத்தேன்” என்று மனதிற்குள் புலம்பியப்படி, திரும்பி அத்விக்கைப் பார்த்தான்.
அவன் கண்களில் அப்பட்டமான கோவம் தெரிந்தது.
“இல்ல சார்” என்று முடிக்கும் முன்னே, அவனின் கன்னத்தில், ஓங்கி அடித்திருந்தான்.
வாங்கிய அடியில், போட்டிருந்த கண்ணாடி, கீழே விழுந்து உடைந்தது.
“அவள ஆபிஸுக்குள்ள விட கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா? அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என்ன டச் பண்ணிருப்பா?” என்று கோவமாய் கேட்டவன், அவன் சட்டை காலரை முறுக்கினான்.
“சாரி சார். இனிமே இப்படி நடக்காம நா பாத்துக்குறேன் சார்” என்று அத்தனை கெஞ்சினான் நேசமணி.
ஆனாலும், அவனுடைய கோவம் அடங்க மறுக்க, “இன்னொரு தடவ, அவ என் cabinகுள்ள வந்தா, இந்த வேல மட்டும் இல்ல. நீயே இருக்கமாட்ட” என்று சொல்லியப்படி அவனை அங்கிருந்து வெளியில் தள்ளினான்.
கோவமாய், அங்கும் இங்கும் நடந்தான்.
அதென்னவோ அவனுக்கு, அவன் அனுமதியின்றி யார் தொட்டாலும் பிடிக்காது. இது அப்படியே அவனுடைய அப்பா அதிரூபனுடைய குணம்.
அணிந்திருந்த கோட்டை கழட்டி தூர வீசியவன், அங்கிருந்த அவனுடைய தனிப்பட்ட அறைக்கு சென்று குளிக்க ஆரம்பித்தான்.
அந்த வாரம், கடகடவென்று சென்றிருக்க, அஞ்சலிக்கும் காயம் சற்று ஆறியிருந்தது.
நாளை இந்த ஹாஸ்டலை காலி செய்ய வேண்டும்.
அடுத்து எங்கு செல்ல என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
சிறு பிள்ளையாக இருந்தால் கூட, ஏதாவது ஆசிரமத்தில் சென்று சேரலாம். இத்தனை வயதுக்கு பின், அங்கு செல்ல முடியுமா என்ன?
“சரி. ஆனது ஆயிடுச்சி. இன்னிக்காச்சும் வேல கிடைக்குதான்னு போயி பாக்கலாம்” என்றப்படி, தன் பழைய பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
செல்லும் போதே, அந்த இட்லிக்கடை பாட்டி, “இன்னிக்கு உனக்கு கண்டிப்பா வேல கெடச்சிடும்.” என்றார்.
அதில் சிறு புன்னகையை கொடுத்தவள், “அப்படி நடந்தா சந்தோஷம் தான் பாட்டி” என்று சொல்லிவிட்டு, ரோட்டோரம் நடக்க ஆரம்பித்தாள்.
அவளும் வரிசையாய், ‘ஆட்கள் தேவை’ என்று போடப்பட்டிருக்கும், அத்தனை கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டாள்.
அனைவருமே, “இப்பதா ஆள் எடுத்தோம். தேவப்பட்டா சொல்றோம்” என்று அனுப்பி வைத்தனர்.
அப்படியே ரோட்டோரம் இருந்த சிறு நிழலில், அமர்ந்து விட்டாள். பசிப்பது போல் இருந்தது.
காலையும் இரவும், அந்த பாட்டி கடையில் தான் சாப்பிடுவாள்.
அவள் முதலில் தயங்கதான் செய்தாள். ஆனால் அவர் தான், “உனக்கு வேல கெடச்சதும், மொத்தமா கொடு கண்ணு” என்றிருந்தார்.
இப்போது அலைந்ததில், மீண்டும் பசிக்க ஆரம்பித்தது. அதில் சோர்வாய் நிமிர, கோவில் மணி அடித்தது.
“அன்னதானம் போடப் போகிறார்கள்”, என்று வெளியில் வந்து ஒருவர் குரல் கொடுத்தார். ஏனோ தனக்காக கடவுளே வந்து அழைத்தது போல் இருந்தது.
உடனே எழுந்துவிட்டாள். அவள் எழுந்த நேரம் அந்தப் பக்கமாய் வந்த கார் அவள் மேலே சகதியை வாரி இறைத்தது.
சட்டென்று, அவளுக்கு, அன்று காரில் வந்திறங்கிய அத்விக்தான் நினைவுக்கு வந்தான்.
“காருல போறவங்களுக்கு, ரோட்டுல நிக்குறவங்களோட வலி எங்க தெரிய போகுது?” என்று மனதிற்குள் யோசித்தாள்.
இப்படியே, இப்போது கோவிலுக்குள் செல்ல முடியாது என்பது புரிய, பசியை அடக்கி கொண்டு, அங்கிருந்து கிளம்பினாள்.
(அஞ்சலியின் நிலமை மாறுமா? அத்விக்கை மீண்டும் சந்திப்பாளா அஞ்சலி? அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் பத்தி உங்களோட கருத்த மறக்காம சொல்லிட்டு போங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு, உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேவதை வருவாள்…
Keerthi S
paavam anju chlm
Ramya Iyer
kutty ak poga poga teriyum inan kutty ak va illa avanaiyum tooki sapda porananu 🤔