அசுரன் – 11

அத்விக் அதிரூபனுக்கு இடைஞ்சல் கொடுக்கும், ஒரு ஆள் என்றால் அஜய் தான். அதற்கு முக்கிய காரணம், அத்விக் இந்த construction தொழிலுக்குள் வருவதற்கு முன்பு வரை, அந்த அஜயுடைய ஆதிக்கம்தான் அதிகமாய் இருந்தது.

எப்போது அத்விக் இதற்குள் நுழைந்தானோ, அதில் இருந்தே அஜயின் construction தொழில், சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது.

அதனால், இப்போது அஜயுடைய ஒரே எண்ணம், அத்விக்கை எப்படியாவது, இந்த fieldஐ விட்டு வெளியில் அனுப்புவது மட்டுமே.

“அவனுக்கு, இன்னும், இந்த அத்விக் யாருன்னு முழுசா தெரியல. அது தெரியிறப்ப, அவன் இருந்த தடமே இல்லாம ஆக்கிடுவேன்” என்று கரத்தை இறுக்கி மூடினான் அத்விக்.

அதே நேரம் அங்கே, அந்த அஜயோ, அந்த தோட்டத்து வீட்டில், பல பெண்களுக்கு மத்தியில் படுத்திருந்தான்.

இரண்டு பெண்கள், அவன் கையை பிடித்து விட்டுக் கொண்டிருக்க, மற்றும் இருவர் அவன் காலை பிடித்துக் கொண்டிருக்க, இன்னும் இருவர் அவன் தேகத்தை, தன் பிஞ்சு கரங்களால் நீவி விட்டப்படி இருந்தனர்.

ஒரு பெண் மட்டும், கண்ணில் கண்ணீரோடு, அவன் விரல்களுக்கு சொடக்கிட்டு கொண்டிருந்தாள்.

அந்த அஜயோ, இப்போது அந்த பெண்ணின், இடையை சற்று அழுத்தம் கொடுத்து பிடிக்க, அப்பெண்ணோ, அறுவறுப்பாய் முகத்தை சுளித்தாள்.

அதில், இப்போது அந்தப் பெண்ணை தன் மேல் மொத்தமாய் இழுத்துக் கொண்டவன், “இன்னிக்கு நைட். இவளே, எனக்கு எல்லாத்தையும் பாத்துப்பா. சோ நீங்க எல்லாம் போங்க” என்று சொடக்கிட்டான்.

அதில், நிச்சயம் அந்த பெண் மிரண்டிருக்க வேண்டும். அவள் முகத்திலேயே அப்பட்டமாய், அது தெரிய, இங்கே அஜயோ, அவளை சட்டென்று தனக்கு கீழ் கொண்டு வந்தான்.

அவனுக்கு எப்போதுமே, ஒரு விஷயத்தை ரசித்து அனுபவிக்க சுத்தமாய் பிடிக்காது. யார் அவனை வேண்டாம் என்கிறார்களோ? அவர்களை ருசித்து அனுபவித்து மகிழ்பவன். பெண்களின் தேகம் கொடுக்காத சுகத்தை, அவர்களின் அந்த பயமும், கதறலும் அவனுக்கு கொடுக்கும்.

இப்போதும், அப்படித்தான், இந்தப் பெண், அந்த அஜயிடம் சிக்கியிருந்தாள்.

“என்ன உனக்கு, சுத்தமா பிடிக்கலல்ல, இந்த முகத்த பாக்க கொடூரமா இருக்குல்ல” என்று கேட்டப்படியே, அவள் கன்னத்தோடு, தன் கன்னம் வைத்து தேய்த்தான்.

அதில் அந்தப் பெண்ணோ அறுவறுப்பில், முகத்தை சுழிக்க, அதை ரசித்தவன், இப்போது, அவளை மொத்தமாய், கதற வைக்க ஆரம்பித்தான்.

அந்தப் பெண்ணின் கதறல் சத்தம் அந்த அறையைத் தாண்டி, வெளியில் கேட்டது.

ஆனால், அதெல்லாம், அங்கு வேலைப்பார்ப்பவர்கள் காதில் விழவே இல்லைப் போலும்.

அவர்கள், அவர்களுக்கு கொடுத்த வேலையை அத்தனை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே இருக்கும் பெண்களில், பாதி பேர், பணத்துக்காக வந்திருந்தாலும், மீதி பேர், இவனால் மிரட்டி வர வைக்கப்பட்டிருப்பார்கள்.

அப்படித்தான், இப்போது அவனிடம் சிக்கியிருந்த பென்ணும். அவளுடைய, பத்து வயது தம்பியை கடத்தி வைத்து, அவளை தனக்கு விருந்தாக்கிக் கொண்டான்.

மானத்தை காக்க முடியாது என்று அப்பெண்ணுக்கு தெரிந்தப்பின்னும் கூட, அந்த மிருகம், அப்பெண்ணை, கெஞ்சவே வைத்தான்.

அந்தப்பெண்ணை, மொத்தமாய் தன் பசிக்கு வேட்டையாடிவிட்டு, இப்போது அந்த பெண்ணின் உடலில் இருந்த காயத்தை, ரசித்துப் பார்த்தான்.

ஆனால் அப்பெண்ணோ, பாதி உயிராய், அவனின் முன் நிலைகுலைந்து கிடந்தாள்.

அழுது அழுது, கண்ணீர் நிச்சயம் வற்றிப் போயிருக்கும்.

இப்போது, அவளை இன்னும் கதற வைப்பது போல், அவள் முன்னே குனிந்து, “இதெல்லாம் உன் தம்பிக்காகதான பண்ண. ஆனா பாரேன். உன்ன இப்படில்லாம் கஷ்டப்பட வைக்க கூடாதுன்னு, உன் தம்பி நேத்தே செத்துப் போயிட்டான்” என்று அசராது அப்பெண்ணின் தலையில் இடியை இறக்கினான் அஜய்.

“என்ன சொல்ற” என்றவளுக்கு, உதட்டில் இருந்த காயத்தால் பேசக்கூட முடியவில்லை.

அதில், நக்கலாய் அவளைப் பார்த்தவன், “நா சொன்ன மாதிரி, உன் தம்பி உடம்ப உன் வீட்டுக்கே அனுப்பி வெச்சிட்டேன். நீ சீக்கிரமா போகலன்னா, அவன, அநாத பொணம்னு சொல்லி எரிச்சாலும் எரிச்சிடுவாங்க” என்று சொல்லி சத்தமாய் சிரித்தான் அஜய்.

அவனை அப்படியே கழுத்தை பிடித்து கொல்லும் வேகம் இருந்தாலும், அப்பெண்ணால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. அப்பெண்ணால் மட்டும் அல்ல, இதுவரை, அவனுடைய இந்த ஆட்டத்தை, எவனும் முடித்து வைக்கவில்லை.

அவனுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு மட்டுமே. அவனுடைய முக்கியமான தொழில் வேறு ஒன்று இருந்தது. அது வெளியில் தெரியாமல் இருக்கவே, இந்த construction தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறான்.

அதற்குத்தான் இப்போது அத்விக் இடைஞ்சலாய் வந்திருக்கிறான். அவனுக்கு பயம் காமித்துப் பார்த்தான். அத்விக் ஒதுங்குவது போல் தெரியவில்லை.

அதனால்தான், இப்போது ஆக்ஸிடெண்ட் செய்து, விரட்டியடிக்க நினைக்கிறான். ஆனால் பாவம் அஜய் அப்போது அறியவில்லை.

எந்த ஜித்தனாக இருந்தாலும், அவனுக்கு ஒரு வல்லவன் பிறந்துதான் இருப்பான். 

அப்படி, அஜயின் இந்த ஆட்டத்தை, அத்விக் அதிரூபன் முடித்து வைப்பானா?

அடுத்த ஒரு வாரம் கழித்து, அஞ்சலியை பார்க்க நிரூ, ஆசிரமத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அன்னேரம் அங்கு வந்த சாந்தினியோ, “நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குத்தான” என்று கேட்டார்.

“உங்க மனசுல என்ன இருக்குன்னு சத்தியமா எனக்கு புரியல. ஆனாலும், அஞ்சலிக்கு நல்லது நடக்கும்ன்றதால பண்றேன். பட் எனக்கு தெரியல. இதுக்கு அவ ஒத்துப்பாளான்னு. இருந்தாலும் ட்ரை பண்றேன்” என்றாள்.

“அதெல்லாம், அவ சரி சொல்லுவா” என்று சாந்தினி அழுத்தி சொல்ல, “ஒருத்தவங்க இயலாமைய யூஸ் பண்ணிக்கனும்னு நெனைக்கிறீங்க. என்னமோ பண்ணுங்க” என்றப்படி, நிரூ அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

இப்போது அவரோ, அடுத்ததாக, நேசமணிக்கு கால் செய்தார். அந்தப் பக்கம் அவனோ, அப்போதுதான், அத்விக்கிடம் அத்தனை திட்டு வாங்கிக்கொண்டு வெளியில் வந்திருந்தான்.

“டாக்டர் சொன்னதுக்கு, அத்து என்ன சொன்னா?” என்று கேட்டார் சாந்தினி.

“டாக்டர அடிவாங்காம தப்பிச்சிட்டாரு. ஆனா அவர கூட்டிட்டு வந்ததுக்கு, என் கன்னம்தான், பன்னு மாதிரி வீங்கி போயிடுச்சி” என்றான் மணி.

“எனக்கு தெரியாது. அத்து இதுக்கு சம்மதிச்சே ஆகனும். அதுக்கு நீ என்னப் பண்ணனுமோ பண்ணு” என்றார்.

“மேடம். நா சொல்லி அவர் எப்படி மேடம்” என்று முடிக்கும் முன்னே சாந்தினி அழைப்பை கட் செய்திருந்தார்.

“போச்சு! இப்போ நான் என்னதான் பண்றது? இவர்கிட்ட போயி பேச முடியுமா என்ன?” என்று தனக்குள்ளே யோசித்தான் நேசமணி.

அதே நேரம், அங்கே நிரூவை பார்த்த அஞ்சலியோ, “வாங்க மேடம். குடிக்க ஏதாச்சும் கொண்டு வர சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“இல்ல இல்ல. நா உன்ன பாக்கதா வந்தேன். நீ ப்ரீயா இருக்கீயா?” என்று கேட்டாள்.

“என்னையவா? என்ன விஷயம் மேடம்?” என்ற அஞ்சலிக்கோ, எங்கே இங்கிருந்து கெளம்ப சொல்லிவிடுவார்களோ என்ற பதட்டம்.

ஏனெனில், இங்கு வந்த பின் தான், அவள் சற்று நிம்மதியாய் தூங்கி எழுகிறாள். 

அதைப் பார்த்த நிரூவுக்கோ சற்று கவலையாக இருந்தது.

ஆனாலும், “அப்படி உக்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்க, அஞ்சலியும் தலையாட்டினாள்.

அப்படியே அங்கிருந்த தோட்டத்து பக்கம் செல்ல, அஞ்சலியோ நிரூ பேசும் முன்னே, “என்ன இங்க இருந்து போகனும்னு சொல்லப் போறீங்களா மேடம்” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.

“ஆமா” என்று நிரூவும் சொல்லிவிட, அஞ்சலிக்கோ ஒரு நொடி என்ன சொல்ல என்று தெரியவில்லை.

இனி எங்கு செல்வது? என்ற கேள்வி எட்டிப் பார்க்க, அஞ்சலியின் முகமே வாடிப் போனது.

அதில், அஞ்சலியின் கையை பிடித்த நிரூவோ, “இப்படி, இங்கேயே இன்னும் எத்தன நாளைக்கு இருக்க முடியும்னு நினைக்கிற?” என்று கேட்டாள்.

“இல்ல. எனக்கு ஒரு வாரம் மட்டும், டைம் கொடுக்கிறீங்களா?” என்று அத்தனைப் பாவமாய் கேட்டாள்.

அவளைப் பார்க்க, நிரூவுக்கே அத்தனை கவலையாய் இருந்தது.

அதில் நிரூ எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா மேடம்? அதான் போக சொல்றீங்களா?” என்று கேட்கும் போதே அவளுடைய கண்கள் எல்லாம் கலங்கியிருந்தது.

“அஞ்சலி” என்று நிரூ சொல்லும் முன்னே, “ஒரு வாரம் முடியலன்னா, ஒரு ரெண்டு நாளாச்சும் டைம் கொடுக்கிறீங்களா” என்று கேட்டாள்.

ஏனெனில் கிட்டதட்ட மூன்று மாதத்துக்கு மேல் அங்குதான் இருக்கிறாள். அந்த ஆசிரமத்தை பொறுத்தவரை, பதினெட்டு வயது கீழ் இருப்பவர்களுக்கும், அறுபது வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கும் மட்டும்தான் அனுமதி. 

அதையும் மீறிதான், அஞ்சலியை நிரூ தங்க வைத்திருந்தாள். 

“ரெண்டு நாள்ல, நீ என்னப் பண்ணிடுவ” என்று நிரூ கேட்க, “அது… வேற, ஏதாச்சும் வேல” என்று தயக்கத்துடன் கூறினாள்.

“சரி, அப்போ அப்படி ஒரு வேலைய நா வாங்கி கொடுத்தா, அத பண்ணுவீயா” என்று கேட்டாள்.

“மேடம்” என்று புரியாது அஞ்சலி நிரூவைப் பார்க்க, “உனக்கே தெரியும் அஞ்சலி. இங்கேயே உன்னால லைப் லாங் இருக்க முடியாது. அது உனக்கும் தெரியும். நா உன்ன படிக்க வைக்கிறேன்னு சொன்னாலும், நீ அத கேப்பீயான்னு எனக்கு தெரியல” என்றாள் நிரூ.

அதில், அஞ்சலிக்கோ, என்ன சொல்ல என்று தெரியவில்லை.

“அடுத்தவங்களுக்கு பாரமா மட்டும் நம்ம இருக்க கூடாது அஞ்சலி” என்று அன்னை சொல்லிய வார்த்தை சட்டென்று நினைவுக்கு வந்தது.

“இல்ல, உங்களுக்கு எதுக்கு கஷ்டம். நானே ஏதாச்சும்” என்று முடிக்கும் முன்னே, “சரி. அப்போ நான் சொல்ற வேலைய நீ பாப்பீயா?” என்று கேட்டாள்.

“என்ன?” என்று அஞ்சலி புரியாது பார்க்க, “உனக்கு படிக்கனும்னு ஆசதான அஞ்சலி?” என்று கேட்டாள்.

இல்லை என்று அவளால் சொல்ல முடியாதே. அவளும் படிக்கதான் ஆசைப்படுகிறாள். ஆனால், அவளின் நிலை என்னவென்று அவளுக்கே தெரியுமே. அதனால் அதை தனக்குள் மூடி வைத்திருந்தாள்.

இப்போது நிரூ கேட்கவும், அவள் அமைதியாய் இருந்தாள்.

“எங்க வீட்டுக்கு வந்து வேல பாரு. அங்க வேல பாத்துட்டே, நீ படிக்கிறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்” என்றாள் நிரூ.

அதைக் கேட்டதும், வேகமாய், “நெஜமாவா?” என்று அத்தனை ஆச்சர்யமாய் கேட்டாள் அஞ்சலி.

ஆனால், அங்கேதான் அவளின் தலை விதி மொத்தமாய் மாறப் போவதை அவள் அறியவில்லை.

(அஞ்சலியை அத்விக் சந்தித்தால் என்ன நடக்கும்? அவனுக்கு இவள் நினைவில் இருப்பாளா? இருந்தால், அஞ்சலியின் நிலை என்ன? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   1

*** அசுரன் – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com