அசுரன் – 10

“என்ன சொன்னாலும், பெண் பாவம் பொல்லாதது. அந்தப் பொண்ணுக்கு நான் ஏதாச்சும் பண்ணீயே ஆகனும்” என்று யோசித்தார்.

அங்கே நிரூ, அஞ்சலியை ஆசிரமத்தில் இறக்கிவிட, அஞ்சலியோ, எதையோ யோசித்தப்படி, அப்படியே இருந்தாள்.

“அஞ்சலி” என்று நிரூ அழைக்க, அப்போதே சுயம் பெற்றவள், “ஐயோ சாரி” என்று வேகமாய் இறங்கினாள்.

“நா இன்னொரு நாள் வரேன்” என்று சொல்லியப்படி நிரூ கிளம்ப போக, “மேடம் ஒரு நிமிஷம்” என்றாள் அஞ்சலி.

“என்னாச்சு அஞ்சலி” என்று நிரூ கேட்க, “இல்ல. இத அவருக்கு வெச்சி விடுங்க. அவருக்கு எதுவும் ஆகாது” என்று கையில் மடித்து வைத்திருந்த திருநீறு குங்குமத்தை, நிரூவிடம் கொடுத்தாள்.

நிரூவும் அதை வாங்கிக்கொண்டு, கிளம்பி விட்டாள். அஞ்சலியோ மனதினுள், “அவருக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு ஏதாச்சும்னா பாவம், அவங்க மொத்த குடும்பமும் கவலப்படுவாங்க” என்று அத்விக் யாரென்று அறியாமல், அவனுக்காக வேண்டிக் கொண்டாள்.

அதன் பின், மருத்துவமனைக்கு சென்ற நிரூவோ, அத்விக்கிற்கு, அஞ்சலி கொடுத்த குங்குமத்தை வைத்துவிட்டாள்.

அவன் அன்னேரம் உறக்கத்தில் இருந்தான். இல்லை என்றால், அதை அப்போதே துடைத்திருப்பான்.

அவனுக்கு, இந்த கடவுள் நம்பிக்கை எல்லாம் சுத்தமாய் கிடையாது.

அப்படியே இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. அதற்கு மேல், அத்விக்கிற்கு, அந்த மருத்துவமனையில் இருக்க பிடிக்கவில்லை.

“நான்தா சொல்றேன்ல, எனக்கு சரியாகிடுச்சி. நான் கெளம்பனும்” என்றான் அத்விக்.

“எங்க கெளம்ப போற நீ” என்று கேட்டப்படி அங்கு வந்தாள் நிரூ.

“எனக்குதான் சரியாகிருச்சிதான. இன்னமும், நா எதுக்கு இங்க இருக்கனும்” என்று கடுப்பாய் கேட்டான் அத்விக்.

“அத டாக்டர்ஸ் பாத்து சொல்லுவாங்க” என்று நிரூ சொல்ல, அவனோ, “ச், எனக்கு இங்க இருக்க பிடிக்கல, நிரூ. நான் கெளம்புறேன்” என்றான்.

“சரி. அப்போ, நீ என் கூட நம்ம வீட்டுக்குதான் வரனும். அதுக்கு நீ சரி சொன்னா, இப்பவே உன்ன discharge பண்ண சொல்றேன்” என்றாள்.

“what? எனக்கு அதெல்லாம் செட்டாகாது” என்று சிறு எரிச்சலுடன் அத்விக் கூறினான்.

“அப்போ, நீ இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருக்கனும். அதுவும் போக, உனக்குனு ஒரு home nurse arrange பண்ண சொல்றேன். அவங்க உன்கூட இருந்து உன்ன பாத்துப்பாங்க” என்று கூறினாள் நிரு.

“No way” என்று அத்விக் வேகமாய் மறுத்தான். “இல்ல அத்விக், இந்த டைம் உன் பேச்ச நா கேக்குறதா இல்ல. உன் இஷ்டத்துக்கு விட்டுதா, இப்போ இப்படி accidentல வந்து முடிஞ்சிருக்கு” என்றாள் நிரூ.

“இனிமே இப்படி நடக்காது” என்று அத்விக் சொல்ல, ஆனால் நிரூவோ கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில், அத்விக்கோ, “இங்கப்பாரு. வேனும்னா, இன்னும் ஒரு ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கேன். அவ்வளவுதான் என்னால பண்ண முடியும்” என்று முடித்துவிட்டான்.

அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்பது புரிய, நிரூவும் அப்போதைக்கு, அவனை விட்டு விட்டு வந்திருந்தாள்.

அங்கே அத்விக்கின் பாட்டி, அத்விக்கின் ஜாதகத்தை காட்டி, ஜோசியரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஜாதகத்தைப் பார்த்தவரோ, “இந்தப் பையனுக்கு ரொம்பபெரிய கண்டம் ஒன்னு இருக்கு. அதுல இருந்து தப்பிக்குறது, ரொம்ப பெரிய கஷ்டம்” என்று பெரிய குண்டை தூக்கி தலையில் போட்டார்.

“என்ன சொல்றீங்க?” என்று பாட்டி பதட்டமாய் கேட்க, “ஆமம்மா, இந்த பையன் ஜாதகத்துல, ஒரு பொண்ணோட சாபம் இருக்கு. அதுப் போகனும்னா, இந்தப் பையனுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. வரப் போற பொண்ணோட, மாங்கல்ய பலம் அவர காப்பாத்தும்” என்றிருந்தார்.

சட்டென்று பாட்டிக்கு, அஞ்சலியின் முகம்தான் நினைவுக்கு வந்தது. அதே நேரம் அத்விக்கைப் பற்றியும் தெரியும்.

“எப்படியும், அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான். அப்போ என்னப் பண்றது?” என்று யோசித்தவருக்கு, இப்போது ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் தோன்றியது.

அவர் சுயநலமாகத்தான் முடிவெடுத்தார். அஞ்சலியைப் பற்றியோ, அவள் மனதை பற்றியோ யோசிக்காது, அவருடைய பேரன் செய்த பாவத்தை சரி செய்கிறேன் என்று அவர், இன்னும் பெரிய பாவத்தை செய்ய நினைத்தார்.

அதற்கு முதல் புள்ளியாய், பாட்டி நேசமணியை அழைத்துப் பேசினார். அவன் சொல்லியதை வைத்து, “அப்போ அத்துக்கு, அந்தப் பொண்ணு முகம் தெரியாது அப்படித்தான” என்று கேட்டார்.

“ஆமா மேடம். பட் அந்த பொண்ணோட வாய்ஸ் அவருக்கு நல்லா தெரியும். அன்னிக்கு apartmentல வச்சும், அந்த voice வச்சிதான் யோசிச்சாரு” என்றான்.

அதில், எதையோ கணக்கிட்டவர், “சரி, நீ அத்விக் கூட இரு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

அந்த வாரமும் சரசரவென்று ஓடியது. அத்விக்கோ, மருத்துவமனையில் இருந்து அவனுடைய வீட்டுக்கு சென்றிருந்தான். நிரூ அத்தனை சொல்லியும் அவன் கேட்கவில்லை.

அதன் விளைவு, அடுத்த இரண்டு நாளில், மீண்டும் மருத்துவர் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்தார்.

“என்ன சார். நான்தா சொன்னேன் இல்லையா? நீங்க உங்க ஷோல்டருக்கு ரொம்ப ஸ்டெயின் கொடுக்க கூடாது. இன்னும் ஜாயிண்ட் சேரவே இல்ல. one monthக்கு நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க” என்றார் மருத்துவர்.

அவனுக்கோ அத்தனை எரிச்சல். அந்த கடுப்பில், “உங்களோட, அட்வைஸ கேக்க, வர சொல்லல. உங்க treatment முடிஞ்சா நீங்க கெளம்பலாம்” என்று பல்லைக் கடித்தான்.

அவனிடம் பேசுவது வீண் என்று புரிந்துக் கொண்ட மருத்துவரும், ட்ரீட்மெண்டை முடித்துவிட்டு சென்றுவிட்டார்.

அதே நேரம், அங்கே சாந்தினி சொல்லியதைக் கேட்ட நிரூவோ, அத்தனை கோவமாய், “என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? உங்க பேரனுக்காக, அந்தப்பொண்ணு வாழ்க்கைய நா பலிக் கொடுக்கனுமா?” என்று கேட்டாள்.

“மாம், என்ன நெனச்சு நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க? உங்க பேரனுக்காக, இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நா பழிகொடுக்கனுமா?” என்று கோவமாய் கேட்டாள் நிரூ.

“இப்போ நீ எதுக்கு அப்படி எல்லாம் யோசிக்கிற? ஏன், அத்து அவ்ளோ மோசமானவனு சொல்றீயா?” என்று கோவமாய் கேட்டார் சாந்தினி.

“ச், நான் அப்படி சொல்ல வரல. ஆனா, நீங்க சொல்றது கொஞ்சமும் சரி கிடையாது. அஞ்சலிய, உங்களுக்கு தத்தெடுக்க விருப்பம் இல்லன்னா, அத அதோட விடுங்க. அத விட்டுட்டு, இதெல்லாம் தேவையில்லாத வேல. அதுவும் போக, அவ சின்ன பொண்ணும்மா” என்று தன் விருப்பமின்மையை, ஆதங்கமாய் கொட்டினாள்.

“நானும் அதுக்குத்தான் நிரூ சொல்றேன். அவ ரொம்ப சின்ன பொண்ணு. கண்டிப்பா, இந்த வயசுல, அவ தனியா இருக்குறது, அவளுக்கு பெரிய ஆபத்தெல்லாம் கொண்டு வரும்” என்றார் சாந்தினி.

“அதுக்குதான். அவள நீங்க தத்தெடுத்துக்கோங்க. நம்ம வீட்லையே அவ இருக்கட்டும்” என்றாள் நிரூ.

“மொதல்ல, இப்படி எமோஷனலா யோசிக்கிறத நிறுத்து. கொஞ்சம் ப்ராக்டிகலா. எது சரியா வரும்னு யோசி” என்றார்.

“நீங்க சொன்னது மட்டும், சரியா” என்று நிரூ கோவமாய் கேட்டாள். “நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன். அந்தப் பொண்ண பாத்து, பரிதாபப்பட்டு, நீ அவள, உன் தங்கச்சியா ஏத்துக்கலாம்னு நெனச்சா. நானும், அதே மாதிரி யோசிச்சுதான். அத்துக்கு, அவள கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொன்னே” என்றார்.

“அவளுக்கு இப்பத்தா பத்தொன்பது வயசு நடக்குது. அவ இப்போ படிக்க வேண்டிய வயசுல இருக்கா. நீங்க என்னென்னா, அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு சொல்றீங்க” என்று சிறு கோவத்துடன் கேட்டாள்.

“இங்கப்பாரு நிரூ. உனக்கு கல்யாணத்து மேல நல்ல opinion இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுக்குன்னு, கல்யாணம்னாலே தப்பாதா இருக்கனும்னு அவசியம் கிடையாது. ஏன், உன் ரெண்டு அண்ணனுங்க, கல்யாணம் பண்ணிட்டு, சந்தோஷமா வாழலையா? இல்ல உன் அண்ணிங்க சந்தோஷமா இல்லன்னு நெனைக்கிறீயா?” என்று கேட்டார்.

“மாம். இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம, அவங்கள இழுக்குறீங்க. அதுவும் போக, அத்துக்கு எப்படி அஞ்சலிய கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? மொதல்ல அதுக்கு அவன் சம்மதிப்பானா? இல்ல அஞ்சலிதான் சம்மதிப்பாளா?” என்று எரிச்சலாய் கேட்டாள் நிரூ.

“அத நான் பாத்துக்கிறேன். ஆனா, அஞ்சலிக்கு உண்மையாவே நீ பாதுகாப்பா இருக்கனும்னு யோசிச்சா, அதுக்கு இது மட்டும்தான் ஒரே வழி” என்று முடித்தார்.

இப்போது எதையோ யோசித்தவள், “சரிமா. நீங்க சொல்ற மாதிரியே வெச்சிக்கலாம். ஆனா, இதெல்லாம் எப்படி நடக்கும்?” என்று கேட்டாள் நிரூ.

“நடக்கும். அதுக்கு நீ அஞ்சலிய, அத்துவோட வீட்டுக்கு அனுப்பி வெச்சா மட்டும் போதும்” என்றார்.

அவரின் வார்த்தையில், இப்போது நிரூவுக்கோ அத்தனைக் கோவம் வந்தது.

“என்ன பேசுறீங்க நீங்க? அவள எப்படி, அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவும் போக, இப்படி உங்க பொண்ண, யாரோ ஒரு பையன் வீட்டுக்கு அனுப்பி வைப்பீங்களா? அடுத்த வீட்டு பொண்ணுன்னா, என்ன வேனும்னாலும் பேசுவீங்களா நீங்க” என்று கோவமாய் கேட்டாள்.

“நீ எல்லாத்தையும் தப்பாவே யோசிக்கிற நிரூ. அத்து உன் கூட வளர்ந்தவன். அவன பத்தி உனக்கு தெரியாதா? அவன் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கிடுற ஆளா?” என்று கேட்டார்.

அதில் உண்மையிலேயே நிரூவுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவன் கோவப்படுவான்தான். ஆனால் பெண்கள் விஷயத்தில் எல்லாம், அவன் பார்வைக்கூட தவறாய் செல்லாது. அதனால், அமைதியானாள்.

“இத நான் அஞ்சலியோட நல்லதுக்கு மட்டும் இல்ல. அத்விக்கோட நல்லதுக்கும் சேத்துதான் சொல்றேன். அத்துவோட ஜாதகத்துல, அவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்லிருக்காங்க. ஆனா, கண்டிப்பா அவன் அதுக்கு ஒத்துக்க மாட்டான். இதுவே அஞ்சலிய பாத்து, அவனுக்கு பிடிச்சா நல்லதுதான?” என்றார்.

“மாம். உண்மையாவே இது தப்பா தெரியலையா உங்களுக்கு” என்று சிறு ஆதங்கமாய் கேட்டாள்.

“இதுல என்ன தப்பு இருக்கு? அஞ்சலி நம்ம பாத்த பொண்ணு. ஜஸ்ட், அத்து கூட பழகுறதுக்கான ஒரு வாய்ப்ப create பண்ணி கொடுக்கலாம்னு சொல்றேன். அவ்வளவுதான்” என்றார் சாந்தினி.

“ம்மா. மறுபடியும் சொல்றேன். அஞ்சலி ரொம்ப பாவம். அவள கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் பண்ணாதீங்க” என்றாள் நிரூ.

“அதெல்லாம், அப்படி எதுவும் நடக்காது. நானும் அத்து கூடதான் போய் இருக்கப் போறே. அங்க அஞ்சலிக்கு எந்த ப்ரச்சனையும் வராம நா பாத்துக்கிறேன்” என்றார்.

ஏனோ அவர் அத்தனை தூரம் சொல்லவும், நிரூவும் சம்மதித்தாள். ஆனால் அதற்கு அஞ்சலி சம்மதிப்பாளா? என்று அவளுக்கும் தெரியவில்லை.

ஆனாலும், தனக்கு பிடித்த இருவர், வாழ்க்கையில் ஒன்றாக இருந்தால், நல்லது தானே. அதனால் நிரூவும் சம்மதித்தாள்.

ஆனால் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் இந்த செயலால், அஞ்சலி இன்னுமே அதிகமாய் தான் பாதிக்கப் போகிறாள் என்று.

அதே நேரம் அங்கே அத்விக்கோ, அத்தனை எரிச்சலாய் நேசமணியிடம் கத்திக் கொண்டிருந்தான்.

“இன்னும் அத கூட கண்டுப்பிடிக்காம, நீ என்னப் பன்ணிட்டு இருக்க” என்று எரிச்சலாய் அத்விக் கேட்டான்.

“இல்ல சார். எப்படியும் இன்னிக்கு ஈவ்னிங்குள்ள தெரிஞ்சிடும்” என்று சற்று பயத்துடன் கூறினான்.

“இதுல இன்னும் தெரிஞ்சிக்க என்ன இருக்கு? இதெல்லாம் அந்த அஜயோட வேலையாதா இருக்கும்” என்று அத்தனை அழுத்திக் கூறினான் அத்விக்.

அதை சொல்லும் போதே, அவனுடைய கண்ணில், அத்தனை கோவம் தெரிந்தது.

(யார் இந்த அஜய்? அவனுக்கும் அத்விக்கிற்கும் என்ன பிரச்சனை? சரி அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   1

*** அசுரன் – 10 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com