அசுரன் – 12

அஞ்சலி சிறு ஆச்சர்யத்துடன், “நெஜமாவா?” என்று கேட்க, நிரூவோ அவளையே சில நொடிகள் பார்த்தாள்.

பின், “அஞ்சலி, உனக்கு எங்க வீட்ல வந்து வேல பாக்க சம்மதமா?” என்று கேட்டாள் நிரூ.

“சம்மதம்” என்று அஞ்சலி வேகமாய் சொல்லிவிட, “எங்க வீடுதான். ஆனா நீ வேல செய்யப் போறது, என்கிட்ட இல்ல” என்றாள் நிரூ.

அவளின் வார்த்தையில் புரியாது, அஞ்சலி நிரூவைப் பார்க்க, “அன்னிக்கு, என் அண்ணா பையனுக்கு ஆக்ஸிடெண்ட்னு, நம்ம ஹாஸ்பிடலுக்கு போனோம்ல. உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் நிரூ.

“ம். ஆமா, இப்போ அவரு எப்படி இருக்காரு” என்று அஞ்சலி சட்டென்று கேட்டுவிட, “ம் பரவாயில்ல. பட் அவன நீ கவனிச்சிக்கனும்” என்றாள் நிரூ.

“ஏன்? அவருக்கு என்னாச்சு?” என்று அஞ்சலி குழப்பமாய் கேட்க, “அவனுக்கு ஒன்னும் இல்ல. பட், அவன் எப்பவுமே தனியாதா இருப்பான். வேல வேலன்னு சுத்திட்டே இருக்கிறதால, அவன பத்தி யோசிக்க கூட அவனுக்கு நேரம் இல்ல. அதுக்காகதான், உன்ன கூப்பிடுறேன்” என்றாள் நிரூ.

இதில் அவள் செய்ய என்ன இருக்கிறது? என்று சுத்தமாய் அஞ்சலிக்கு புரியவில்லை. அது அவள் முகத்திலேயே தெரிந்தது.

அதை புரிந்துக்கொண்ட நிரூவும், “இல்ல, அவன்கூட இருந்து. அவன நீதான் பாத்துக்கனும்” என்றாள்.

அவன் என்ன சிறு பையனா? இவள் சென்று அவனைப் பார்த்துக்கொள்ள? அதுவும் போக, ஆறடி ஆண்மகனை, கூட இருந்து ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இப்படி அத்தனை கேள்விகள் அஞ்சலிக்குள் ஓடியது.

நிரூவுக்கோ, உண்மையில், அதை எப்படி அவளிடம் சொல்ல என்று தெரியவில்லை. அதனால் தான். எங்கோ சுற்றி, எங்கோ பேசிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் இந்த அம்மாவால வந்திச்சு. அவங்க சொன்னாங்கன்னு, இவகிட்ட பேச வந்தேன்ல. என்ன சொல்லனும்” என்று தனக்குத் தானே புலம்பினாள் நிரூ.

அதற்குள் அஞ்சலியே, “நா எப்படி அவர பாத்துக்க முடியும்? அவங்க வீட்லதான், நீங்க எல்லாரும் இருப்பீங்கத்தான” என்று குழப்பமாய் கேட்டாள்.

“இல்ல அஞ்சலி. அங்க அவன்கூட, என் அம்மா மட்டும்தா இருக்காங்க. அவங்களால, தனியா எல்லா வேலையும் செஞ்சு பாத்துக்க முடியாது. அதுக்காகத்தான் உன்ன கூப்பிடுறேன்” என்றாள் நிரூ.

அப்போதுதான், அஞ்சலிக்கு சற்று மூச்சே வந்தது. “ஓ. அப்போ உங்க அம்மாக்கு, நான் ஹெல்ப் பண்ணா போதும்தான. நீங்க கவலப்படாதீங்க. நான் நல்லாவே வீட்டு வேல எல்லாம் பாப்பேன்” என்றாள் அஞ்சலி.

“வீட்டு வேலைக்கு உன்ன கூப்டல அஞ்சலி. அதுப்போக, அங்க இருக்குறவங்களும், உன்ன அப்படி நடத்த மாட்டாங்க” என்று மனதிற்குள் நிரூ சொல்லிக் கொண்டாள்.

ஏனெனில், இப்போது அவளிடம், இதை சொன்னால், அவள் இன்னும் குழம்பி போவாள் என்று நிரு ஒன்றும் சொல்லவில்லை.

“சரிங்க மேடம். எப்போ இருந்து நா அங்க வேலைக்கு வரனும்?” என்று கேட்டாள் அஞ்சலி.

ம் சொல்றே. அதுக்கு முன்னாடி, உன்னோட ப்ளஸ் டூ சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்கீயா?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும், இப்போது அஞ்சலியோ முழித்தாள். அதைக் கவனித்த நிரூவோ, “என்னாச்சு அஞ்சலி? அதெல்லாம் உன்கிட்ட இருக்கா? இல்ல நீ படிச்ச ஸ்கூல்லையே இருக்கா?” என்று கேட்டாள்.

“அது வந்து. அதெல்லாம்” என்றவளுக்கு சட்டென்று கடந்த கால நினைவில், வார்த்தை வர மறுத்தது.

“ப்ளீஸ் அந்த சர்டிபிகேட் எல்லாம் கொடுத்திடுங்க” என்று அவள் மண்டியிட்டு கெஞ்சிய தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

“அந்த சர்டிபிகேட் வேணும்னா, இப்போ, நீ என்கூட வந்து படுக்கனும்” என்று பச்சையாய், அவளை சாடிய அந்த மனித மிருகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அதில் அவளுடைய உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

அவள் உடல் நடுங்கவும், “அஞ்சலி. என்னாச்சு? இங்கப்பாரு” என்று மெல்ல அவள் தோளை தொட்டாள் நிரூ.

அதில் சட்டென்று இவ்வுலகம் வந்தவள், “இல்ல, அதெல்லாம் தொலஞ்சு போயிருச்சி” என்றாள்.

“சரி அவ்ளோதான. இதுக்கு எதுக்கு, இவ்ளோ tension ஆகுற. நீ எங்க படிச்சன்னு மட்டும் சொல்லு. அந்த சர்டிபிகேட் எல்லாம் நான் ரெகவர் பண்ணிக்கிறேன்” என்றாள் நிரூ.

அதில் சட்டென்று நிரூவை கட்டிக் கொண்ட அஞ்சலி, “ரொம்ப thanks மேடம்” என்றாள்.

“நா பண்ணி வெச்சிருக்குறதுக்கு, நாந்தா, உன்கிட்ட மன்னிப்பு கேக்கனும்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் நிரூ.

இப்படியாக இங்கு செல்ல, அங்கே அத்விக்கோ, “இப்போ உங்கள யாரு இங்க வர சொன்னா?” என்று சற்று எரிச்சலாகத்தான் கேட்டான்.

ஏனெனில், அவனுக்கும், பாட்டிக்கும் பெரிதாக ஒத்துப் போகவே போகாது. அதற்காக பாசமே இல்லையா? என்று கேட்டால், அதெல்லாம் பாசம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அவரை விட்டு தள்ளியேதான் இருப்பான்.

“என் பேரன பாக்க நா வருவேன்” என்றார் சாந்தினி.

“சரி பாத்தாச்சுதான. கெளம்புங்க” என்று சொல்லிய அத்விக்கோ, அவரை கடந்து செல்ல முயன்றான்.

“இனிமே நா இங்கதான் இருக்கப் போறேன்” என்றார் அவர்.

அதைக் கேட்ட அத்விக்கோ, சிறு அதிர்ச்சியுடன் “what?” என்று அவர் பக்கம் திரும்பினான்.

ஆனால் பாட்டியோ, அவனைக் கண்டுக்கொள்ளாது, அவனின் பின்னே நின்றிருந்த நேசமணியிடம், “மணி, என்னோட திங்க்ஸ எல்லாம், இங்க கீழ இருக்கிற ரூம்ல வச்சிடு. அப்புறம், என் ரூம் பக்கத்துல இருக்கிற, இன்னொரு கெஸ்ட் ரூம்ம க்ளீன் பண்ண சொல்லு” என்றார்.

அதில் நேசமணியோ, “ஐயோ இந்த மேடம், இன்னிக்கு, என்ன சார்கிட்ட அடிவாங்க வைக்காம விட மாட்டாங்க போலையே” என்று பாவமாய் அத்விக்கை பார்த்தான்.

அதற்குள் அத்விக்கோ, “என்ன சொல்லிட்டு இருக்கீங்க? உங்கள, இங்க தங்குறதுக்கு நா பர்மிஷனே கொடுக்கல. அப்படி இருக்கிறப்ப, எதுக்கு இன்னொரு ரூம்ம ரெடி பண்ண சொல்றீங்க” என்று கேட்டான்.

ஏனெனில், அவனுக்கு குடும்பத்தின் மீதெல்லாம் அக்கறை, பாசம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், அவனுக்கு தனியாக இருக்கத்தான் பிடிக்கும். அதனால்தான், அவன் இங்கே தனி வீட்டில் இருக்கிறான்.

இவனுக்கு, அவர்களை எல்லாம் பார்க்க தோன்றினால், நேரடியாக சென்று பார்த்து வருவான். ஆனால் யாரையும், இங்கு வரவோ, தங்கவோ அனுமதிக்கவே மாட்டான்.

அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. அவனுக்கு தொழில் சம்பந்தப்பட்ட எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனாலையே, அவன், குடும்பத்தை விட்டு சற்று தள்ளி இருக்கிறான்.

இப்போது பாட்டியோ, வெகு சாதாரணமாய், “நீ எங்ககூட வந்து இருக்கமாட்டன்னு சொல்லிட்ட. உன்ன இனிமே தனியா விடக்கூடாதுன்னு நிரூ சொல்லிட்டா. அதனால, இனிமே நா இங்கதான் இருக்கப் போறேன்” என்று முடிவாய் சொல்லிவிட்டார்.

“ச் உங்ககிட்ட பேச முடியாது. நா நிரூக்கிட்டையே பேசிக்கிறேன்” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டான் அத்விக்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இன்னும் கூட, காயம் முழுதாய் ஆறியிருக்கவில்லை. ஆனால் அவனை எல்லாம், ஒரு நாள் ஓய்வு எடுக்க சொன்னாலே நடக்காது. அப்படி இருக்க, ஒரு மாதம் எல்லாம் நடக்கும் காரியமா? 

அவன் சென்றதும், இப்போது பாட்டியோ அவருடைய அறைக்கு சென்றார்.

அங்கே வெளியில் வந்த அத்விக்கோ, “அவங்களுக்கு தேவையானத கூட இருந்து பாத்துக்கோ” என்று நேசமணியிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

இப்போது, வேகமாய் பாட்டியிடம் வந்த நேசமணியோ, “மேடம். நீங்க சொன்ன மாதிரி, சார்கிட்ட அந்தப் பொண்ணு போட்டோவ காமிச்சு check பண்ணிட்டேன். அவருக்கு, அந்தப்பொண்ணு முகம் ஞாபகம் இல்ல” என்றான்.

“நல்லா பாத்துட்டதான” என்று மீண்டும் ஒரு முறை அழுத்திக் கேட்டார்.

“ஆமா மேடம். இன்னிக்கு இண்டர்வியூக்கு வந்திருக்கிற கேண்டிடேட்ஸ் டேட்டான்னு, சொல்லிதான் காமிச்சேன்” என்றான் நேசமணி.

“சரி, பக்கத்து ரூம்ம ரெடி பண்ணி வைக்க சொல்லு. அப்புறம், வேலபாக்குறவங்க எல்லாரையும் வர சொல்லு. அவங்ககிட்ட கொஞ்சம் நா பேச வேண்டியிருக்கு” என்றார்.

இப்படியாக அன்றைய தினம் சென்றுவிட, நிரூவுடைய அலுவலகத்தில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“சரி நா வந்து பாக்குறேன்” என்று சொல்லிய நிரூவும், உடனே அவளுடைய அலுவலகத்துக்கு கிளம்பினாள்.

இந்தியாவின் முன்னனி நிறுவனமான Vika Fragrance industryஐ, இப்போது நிரூதான் பார்த்துக்கொள்கிறாள். AK விகா குழுமத்தின் ஒரு பகுதிதான் இதுவும். ஆனால், இது முழுக்க முழுக்க, நிரூ உருவாக்கியது.

அவளுடைய தற்போதைய ஒரே ஒரு குறிக்கோள், இந்திய அளவில் இருப்பதை, எப்படியாவது உலகளாவிய, முன்னனி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான், அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறாள்.

கிட்டதட்ட இருபது மாடியை கொண்ட, அந்த கண்ணாடி கட்டிடத்திற்குள், விறுவிறுவென உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பார்த்ததும், அங்கு வேலைப் பார்ப்பவர்கள், அத்தனைப் பேரும், எழுந்து நிற்க, அவளோ அத்தனை பேருக்கும் அழகான புன்னகையை கொடுத்துவிட்டு கடந்தாள்.

அதற்குள்ளாக, “குட் மார்னிங் மேடம்” என்று ஒரு பொக்கேவுடன் அவள் முன்னே வந்து நின்றான் அபூர்வன்.

அவனைப் பார்த்ததும், அதுவரை அவள் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று கடுமைக்கு மாறியது.

அவள் கோவம் காட்டும் ஒருவன் என்றால், அது இவன் தான். அவளிடம் PAவாக வேலைப் பார்க்கிறான்.

“சாரி மேடம். கொஞ்சம் ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்” என்று அவன் சொல்ல, அவளோ அவனை முறைத்தாலே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

நேராக லிப்டிற்குள் நுழைய, அவனுமே அவள் பின்னே அவளுடன் சென்றான். உள்ளே நுழைந்ததும், இவள் floor நம்பரை click செய்யப் போக, அதற்குள் அவனே அதை செய்தான்.

அதற்கும் நிரூ அவனை முறைக்கத்தான் செய்தாள். “You லுக் so beautiful” என்றான் அபூர்வன்.

“I will kill you idiot” என்று நிரூ சொல்ல, “i am always yours” என்று அதற்கும் சிரித்தப்படிதான் பதில் கூறினான்.

“உன்ன ஒன் வீக் suspand பண்ணியும், நீ திருந்தல” என்று நிரூ சொல்ல, “அப்போ அது, என்னோட அயராத உழைப்ப பாத்து, நீங்க எனக்கு கொடுத்த லீவ் இல்லையா?” என்று கேட்டான் அபூர்வன்.

அதற்கு அவள் ஏதோ சொல்லப் போக, அதற்குள் லிப்ட் கதவு திறக்கப்பட்டது. அதில் அபூர்வனோ, இப்போது பக்கா PAவாக மாறியிருந்தான்.

அங்கே அவளுக்காக, அந்த குறிப்பிட்ட department manager காத்திருக்க, அபூர்வனோ, “நா நேத்தே எல்லா டீடெய்ல்ஸும் தரோவா செக் பண்ணிட்டே மேடம். இவங்க departmentல தான், mistake start ஆகியிருக்கு” என்றான்.

அவ்வளவுத்தான், அதற்கு மேல், நிரூ பெரிதாயெல்லாம் யோசிக்கவில்லை. அவரிடம் சென்றவள், “mistake உங்க சைட்ல இருந்துதான் start ஆகியிருக்கு. சோ இப்போ இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு நா கேக்கப் போறது இல்ல. ஆனா, எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னுதா” என்றாள்.

அதில் அவரோ, அவளை குழப்பமாய் பார்க்க, நிரூவோ அபூர்வனை, ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து அவளுடைய கேபினுக்கு சென்றுவிட்டாள்.

(அபூர்வனின் காதலை நிரூ புரிந்துக் கொள்வாளா? அங்கே அஞ்சலி என்ன செய்கிறாள்? அடுத்து அவள் என்ன சிக்கலில் மாற்ற போகிறாள்? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   1

*** அசுரன் – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com