கோட்டையில் இருந்து வந்த ருத்ரா-விற்கு மனம் ஏனோ அங்கேயேத்தான் இருந்தது.
“ஏய். என்ன ருத்ரா? உன்னோட கேமரா-ல தான் நம்ம எல்லா போட்டோஸூம் இருந்துச்சு. இப்ப நாளைக்கு அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும். என்ன பண்றது?” என்று அவளின் வகுப்பு தோழிகள் அவளை சுற்றி அமர்ந்து கேட்டனர்.
“ஏன்டி. கேமரா மிஸ் ஆகி இருபது நாளாச்சி. இன்னும் அதையே சொல்லிட்டு சும்மா உட்கார்ந்திருந்தா? அசைன்ட்மென்ட் தானா ரெடியாகுமா?” என்று தென்றல் மற்ற தோழிகளைப் பார்த்து கடுப்பாக கேட்டாள்.
வழக்கமாக தென்றல் இதெற்கெல்லாம் கோவப்படும் ஆள் கிடையாது. ஆனால், அந்த கோட்டையை விட்டு வந்த நாளில் இருந்து, ருத்ரா-விடம் அவர்கள் இதையேதான் தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது போக தென்றலுக்கோ, தெரியாமல் கூட ருத்ரா அங்கு செல்லக் கூடாது என்ற எண்ணம். அந்த பயம் தான் இப்போது தென்றல் கோவமாக பேசியதற்கு காரணம்.
“வர வர தென்றல் புயலா மாறிகிட்டு இருக்க. இதெல்லாம் நல்லா இல்ல” என்று அவளின் வகுப்பு தோழி கிண்டலாக சொல்ல.
“ஏய். அடங்கு. இப்ப அவ ஒன்னும் தப்பா சொல்லலையே. எப்படியும் போன கேமரா திரும்பி வர போறது இல்ல. சோ உங்களோட அசைன்ட்மென்ட் வேலையை ஆரம்பிங்க. அப்பத்தான், இந்த வீக் குள்ளையாச்சி அசைன்ட்மென்ட் சப்மிட் பண்ண முடியும்” என்று ருத்ரா சொல்ல.
“ஆமா உன் பிரண்டை விட்டுக் கொடுப்பியா நீ? சரி நாங்களும் எங்க அசைன்ட்மென்ட் ஒர்க்கை பார்க்கிறோம்” என்று அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்ற பின் ருத்ரா-வின் அருகில் வந்த தென்றல் “இங்கப்பாரு ருத்ரா. எனக்கு தெரியும் உனக்கு அந்த கேமரா ரொம்ப முக்கியம்-னு. ஆனா அது போயிருச்சி. நம்ம வேற கேமரா கூட வாங்கிக்கலாம். நீ அதை மறந்திடு. உன்னோட அசைன்ட்மென்ட் ஏற்கனவே நான் முடிச்சிட்டேன். அதனால பிரீயா விடு” என்று பொறுமையாக கூறினாள்.
“அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே. நீ முடிச்சிடுவன்னு. சரி அதான் உனக்கு பிராமிஸ் பண்ணி கொடுத்திருக்கேன்-ல, இனிமேல் நான் அங்க போகமாட்டேன். சரியா? காலையிலேயே ஆரம்பிக்காத” என்று ருத்ரா கூலாக கூறினாள்.
“அப்படி இல்ல ருத்ரா.. அ..து” என்று ஏதோ சொல்லும் போது, ருத்ரா-வின் மொபைல் சினுங்கியது.
ருத்ரா-வின் அம்மா தான் கால் செய்திருந்தார்.
“ம் இப்பத்தான் ஒரு அம்மா-வை சமாளிச்சேன். இப்ப இவங்களையும் சமாளிக்கனும்” என்று தன் மொபைலை தூக்கி காமித்தாள் ருத்ரா.
அதைப்பார்த்து சிரித்த தென்றல் “நீ இருக்கியே... சரி. முதல்ல அட்டன்ட் பண்ணு” என்று தென்றல் கூறினாள்.
“சரிங்க மகாராணி” என்று தென்றலிடம் சொல்லிவிட்டு, போனை அட்டன்ட் செய்தாள்.
“என்ன ருத்ரா? எப்படி இருக்க? காலேஜ்-ல ஓவரா சேட்டை பண்ற-ன்னு அர்ஜூன் சொல்றான்” என்று ருத்ரா-வின் அம்மா சுலக்சனா கேட்டார்.
“ஐயோ சிடுமூஞ்சி கோர்த்து விட்டுருக்கு போலையே. சரி சமாளிப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, “என்ன மம்மி? அர்ஜூன் என்ன என்கூடவா படிக்கிறான்? அவனுக்கு எப்படி தெரியும். உங்களுக்கு தெரியாதா? நான் உங்க பொண்ணு. நான் போயி தப்பு பண்ணுவேன்னா?” என்று நல்ல பிள்ளை போல் பேசினாள் ருத்ரா.
“போதும் ருத்ரா. எனக்கு அர்ஜூனை பத்தியும் தெரியும். என் பிள்ளையை பத்தியும் தெரியும். அவன் சொன்னதுலையும் பொய் இருக்காது. அதே மாதிரி, நீயும் என்கிட்ட பொய் சொல்ல மாட்ட. ஆனா நீ என்கிட்ட இருந்து இப்பல்லாம் நிறையா விசயம் மறைக்கிற” என்று நேரடியாகவே கேட்டார் அவர்.
“வாட் மாம்? நான் போயி உங்ககிட்ட எதையாச்சும் மறைச்சிருக்கேனா?” என்று ருத்ரா அப்பாவி பிள்ளையாய் கேட்டாள்.
“எனக்கு தெரியும் ருத்ரா. நான் உன்னோட அம்மா. உன்னை விட எனக்கு அனுபவமும் ஜாஸ்தி. அதே மாதிரி. உன் வயசுல எனக்கு குறும்பும் ஜாஸ்தி. ஆனா என்னோட குறும்புத்தனத்தால, நான் இழந்த மாதிரி நீ எதுவும் இழக்கக் கூடாது-ன்னு நினைக்கிறேன் ருத்ரா” என்று கூறினார் அவளின் அம்மா.
“மம்மி. வாட்ஸ் திஸ்? ஏன் இப்ப அதையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? ஐ நோ மம்மி. ஐ பிராமிஸ் யூ. என்னால நம்ம பேமிலுக்கு எப்பவுமே, எந்த ஆபத்தும் வராது” என்று ருத்ரா சமாதானமாக கூறினாள்.
“நம்ம குடும்பத்துக்கு மட்டுமில்ல ருத்ரா, உனக்கும் எதுவும் ஆகக் கூடாது” என்று ஒரு தாயாய் கண்டித்தார்.
“அதுக்குத்தான், என் கூடவே இங்க ஒருத்தி இருக்காளே. கொஞ்சம் விட்டா அவ உயிரைக் கொடுத்து என்னை காப்பாத்திடுவா” என்று கிண்டலாக கூறினாள் ருத்ரா.
“அடி.. இப்ப உன்னை ஹாஸ்டல்-ல விட்டுருக்கேன் அப்படின்றதுக்கு காரணமே தென்றல் தான். அவளை நம்பி தான் நான் இங்கே நிம்மதியா இருக்கேன்” என்று கூறினார் அவளின் தாய்.
“ஸ்ப்பா. வர வர எனக்கே டவுட்டா இருக்கு? தென்றல் உங்களுக்கு பொண்ணா பிறக்க வேண்டியது. நான் மாத்தி பிறந்துட்டேன்-னு நினைக்கிறேன்” என்று ருத்ரா கிண்டலடித்தாள்.
“ஏன்டி” என்று தென்றல் சொல்ல,
“ஏய் அவ என் வயித்துல பிறக்கலன்னாக்கூட, அவளும் என் பொண்ணு தான்” என்று சுலக்சனா சொல்லும் நேரம் ருத்ரா மொபைலை ஸ்பீக்கரில் போட்டிருந்தாள்.
அதைக்கேட்டு தென்றலுக்கு கண்ணில் கண்ணீர் சுரந்தது.
அதைப்பார்த்த ருத்ரா “ஸ்ப்பா அகைன் ஒரு சென்டிமென்ட் படமா?” என்று சலிப்பாக கூறினாள்.
“ஏய். உனக்கு எப்ப பார்த்தாலும் அவளை கிண்டல் பண்றதே வேலையா போச்சு. தென்றல் கிட்ட போனை குடு” என்று அவளின் அம்மா கூறினார்.
“ஸ்ப்பா. உங்களுக்குலாம் அவ தான் செட் ஆவா. அவ கூடவே பேசுங்க” என்று ருத்ரா தன் போனை தூக்கி, தென்றலிடம் கொடுத்தாள்.
“அம்மா. எப்படி-ம்மா இருக்கீங்க?” என்று தென்றல் கேட்க
“எனக்கென்னடா நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? ருத்ரா உன்னை ரொம்ப கொடுமை படுத்துறாளா?” என்று அவளின் அம்மா கேட்க
“ஏய் உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? ஏதோ தென்றலுக்கு நான் மாமியார் மாதிரி பேசுறீங்க. அவளை நான் அப்படி என்ன கொடுமை படுத்துறேன்” என்று ருத்ரா வேகமாக கேட்டாள்.
“ம். உன்னோட அசைன்ட்மென்டையும் சேர்த்து தென்றல் தான பண்றா?” என்று அவள் அம்மா கேட்க
“என்னடா இது? இப்படி கரென்ட் அப்டேட் வரைக்கும் உன்கிட்ட போட்டுக் கொடுத்த அந்த துரோகி யாரு?” என்று ருத்ரா சொல்ல.
“ஏய் தென்றல் ட போனை குடு” என்று அவரின் அம்மா கண்டிப்பாக சொல்ல
ருத்ராவும் மீண்டும் மொபைலை தென்றல் கையில் கொடுத்தாள்.
“சாரிடாமா. சின்ன வயசுல இருந்தே ருத்ரா-க்கு எல்லாரும் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டாங்க” என்று அவளின் அம்மா சொல்ல
“என்னமா? நீங்க போயி சாரி-லாம் சொல்லிட்டு. ருத்ரா என் பிரண்ட்-மா. எனக்காக ஒரு குடும்பத்தை உருவாக்கி கொடுத்தவம்மா அவ. அவளுக்கு இதை கூட செய்ய மாட்டேன்னா?” என்று தென்றல் சொல்ல
“எனக்கு தெரியும்-மா. உண்மையிலேயே நீ இருக்கிற தைரியத்துல தான், நான் இங்க நிம்மதியா இருக்கேன். வீட்டுக்கு அடுத்து எப்ப மா வறீங்க?” என்று அவர் அக்கறையாக கேட்டார்.
“அடுத்த செமஸ்டர் லீவ்-க்கு தான் மா” என்று தென்றல் சொல்ல
“சரிம்மா கண்டிப்பா. நீயும் அவ கூட வரணும்” என்று அவர் கூறினார்.
அதற்குள் மொபைலை வாங்கிய ருத்ரா “சரி சரி. நீங்க அவ மொபைல்-ல கால் பண்ணி கன்டினியூ பண்ணுங்க, எனக்கு கொஞ்சம் எடிட்டிங் ஒர்க் இருக்கு” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
அதன் பின், வழக்கமான பேச்சுவார்த்தைகளோடு, இருவரும் கல்லூரிக்கு சென்றனர்.
“ஆமா தென்றல். நானும் கேட்கனும்-னு இருந்தேன். மறந்தே போயிட்டேன்” என்று ருத்ரா முன்னாடி, ஆசிரியர் கிளாஸ் எடுத்துக் கொண்டிருப்பதை சற்றும் கண்டுக்கொள்ளாமல், திடீரென தென்றலை பார்த்து கேட்டாள்.
“ஏய். கம்முன்னு இருடி. மேம் பார்த்தா கிளாஸை விட்டு அனுப்பிருவாங்க” என்று தென்றல் பவ்வியமாக கூறினாள்.
அதற்குள் வேகமாக எழுந்து “மேம் உங்ககிட்ட தென்றல் ஏதோ டவுட் கேட்கனுமாம்” என்று ருத்ரா கூறினாள்.
“யா கேளு தென்றல்?” என்று அந்த ஆசிரியர் உண்மை என்று நினைத்து கூறினார்.
“ஐ. அ..து இ.. “ என்று தென்றல் திணறினாள்.
“மேம் அவ உங்ககிட்ட கேட்க வெட்கப்படுறான்னு நினைக்கிறேன் நானே கேட்டுடுறேன். காலையில உங்களை ட்ராப் பண்ணிட்டு போனது, உங்க லவ்வரா? இல்ல உங்க அண்ணனா மேம்?” என்று ருத்ரா கேட்க,
அருகில் நின்றுக்கொண்டிருந்த தென்றலுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“வாட்ஸ் திஸ் தென்றல்?” என்று அந்த ஆசிரியர் கோவமாக கேட்க
“மேம். கூல் ஆன்சர் தெரிஞ்சா, எங்க எல்லாருக்குமே யூஸ்புல்லா இருக்கும்” என்று ருத்ரா வழக்கமான கிண்டலுடன் கேட்டாள்.
“டூ ஆப் யூ கெட் அவுட்” என்று கோவமாக அந்த ஆசிரியர் சொல்ல, ருத்ரா-வும், தென்றலும் தங்கள் பேக்கை தூக்கி கொண்டு வெளியில் சென்றனர்.
செல்லும் போது ருத்ரா மட்டும் அந்த ஆசிரியரின் அருகில் வந்து “மேம் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். காலையில உங்களை இறக்கி விட்டுட்டு போறப்பையே, நம்ம கிளாஸ்ல இருக்கிற பாதி பொண்ணுங்க அவரை தான் சைட் அடிச்சாங்க. இப்பவே நீங்க யாருன்னு சொல்லிட்டா, உங்க வாழ்க்கைக்கு நல்லது. அதுலையும் பிரண்ட் பெஞ்ச்ல இருக்கிற இந்த மூனு பொண்ணுங்களை மட்டும் நம்பிடாதீங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியில் சென்றாள்.
“ஏன்டி இப்படி பண்ண? சரி இப்போ அந்த மேம்-கிட்ட என்ன சொல்லிட்டு வந்த?” என்று தென்றல் கேட்டாள்.
“ம் நம்ம வெளிய வந்ததும், நம்மளை பார்த்து, அந்த பர்ஸ்ட் பெஞ் சிரிச்சாங்கள்-ல இன்னும் ஒரு செகன்ட் வெயிட் பண்ணு. அவங்களும் வெளிய வருவாங்க பாரு” என்று ருத்ரா சொல்லி முடிக்கும் முன், அவர்கள் மூவரும் பேக்கை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர்.
அதைப்பார்த்து ஆச்சர்யமாகி “எப்படி ருத்ரா?” என்று கேட்டாள் தென்றல்.
“அது திணை விதைத்தவன் திணை விதைப்பான். வினை விதைத்தவன் வினை விதைப்பான்-னு ஒரு பழமொழி இருக்கு தான. அது தான் இப்ப நடக்குது. சரி. இப்ப நீ அவங்களை பார்த்து சத்தமா சிரி பாப்போம்” என்று தென்றலை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள் ருத்ரா.
“சரிடி எங்க இழுத்திட்டுப் போற?” என்று தென்றல் கேட்க.
“கேன்டீனுக்கு தான். வா” என்று ருத்ரா இழுத்து சென்று வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தாள்.
“சரிடி சொல்லு. என்ன கேட்கனும்?” என்று தென்றல் கேட்டாள்.
“அது வேற ஒன்னும் இல்ல. அன்னிக்கு நம்ம கோட்டைக்கு போனோம்-ல” என்று ருத்ரா சொல்ல
அந்த கோட்டை என்ற பெயரை கேட்டதுமே, தென்றலுக்கு சற்று பயம் ஆரம்பித்தது.
“ஐயோ ஏன்டி. அது சாதாரண கோட்டை தான். நீ ஏன் எப்ப பார்த்தாலும், அதை ஒரு அருந்ததி அரண்மனை மாதிரியே யோசிக்கிற” என்று ருத்ரா குறைப்பட்டாள்.
“இப்ப எதுக்குடி அதைப் பத்தி பேசுற?” என்று தென்றல் உண்மையான பயத்துடன் கேட்டாள்.
“இல்லடி. அங்க நம்ம ஒருத்தரை மீட் பண்ணோம்-ல? அவரை இதுக்கு முன்னாடி நீ பார்த்திருக்கியா?” என்று ருத்ரா நேரடியாக கேள்வியை கேட்க, அதைக்கேட்ட தென்றலுக்கு முகம் வேர்க்க ஆரம்பித்தது. நாவில் இருந்து வார்த்தை வராமல் அப்படியே நின்றது.
(தென்றலின் இந்த அதிர்ச்சிக்கு என்ன காரணம்? ருத்ரா ஏன் அபிமன்யூவை பற்றி விசாரிக்கிறாள்? போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் பதிலைக் காண்போம். அதற்கு முன், இந்த கதையைப் பற்றிய உங்களுடைய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும் நன்றி பிரண்ட்ஸ்...)
சாபம் தீருமா?..
Keerthi S
seriyana aarvakolaru case pola🤣🤭 antha kekura la sollu thendral
Ramya Iyer
yemma rudra unake edu adukuma