தாபம் – 8

நால்வரும் வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்க, உள்ளிருந்து பலத்த சத்தம் கேட்டது. அதைக்கேட்டதும் நால்வரும் வேகமாக உள்ளே சென்றனர்.

“ஏன்டி? இப்போ இப்படி கத்துற?” என்று அபிமன்யூ தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.

“எருமை மாடு. கொஞ்சம் கீழ குனிஞ்சு பாரு. என் கால் மேலதான் நீ நிக்கிற” என்று ருத்ரா கோவமாக கூறினாள்.

“ஓ.. நான் கூட சேர் காலோன்னு நினைச்சேன்” என்று அபிமன்யூ கூலாக சொல்ல, அதைக்கேட்டு கடுப்பான ருத்ரா வேகமாக அவனை அடிக்க கை ஓங்கினாள்.

அதற்குள் அவள் கையைப் பிடித்து தடுத்த அபிமன்யூ “ஐயோ பாவம் பொண்ணாச்சேன்னு இவ்வளவு நேரம் அமைதியா இருந்தேன். இதுக்கு மேல ஏதாச்சும் எக்கு தப்பா பண்ண, நான் இவ்வளவு பொறுமையாலாம் பேசிட்டு இருக்க மாட்டேன். என்னை விட்டு எப்பவும் தள்ளியே இரு” என்று கோவமாக கூறினான்.

“ஆமா நான் தான உன் கையை பிடிச்சிட்டு இருக்கேன்” என்று ருத்ரா குத்தலாக பதிலளித்தாள்.

வேகமாக அவள் கையை உதறி தள்ளிவிட்டு, வழி எந்தப்பக்கம் உள்ளது என்று அவன் அந்த அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தான்.

அப்போது தான், ருத்ரா அவன் முதுகிலும், கைகளிலும் இருந்த காயத்தை கவனித்தாள்.

அதைப்பார்த்ததும், அவன் கூறிய வார்த்தைகள் அத்தனையையும், மறந்தவள் வேகமாக அவனருகில் சென்று கையைப் பிடித்தாள்.

“ஏய் என்னப் பண்ற?” என்று அபிமன்யூ தன் கையை அவளிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்தான்.

“ஐயோ எவ்வளவு அடிப்பட்டிருக்கு? ரத்தம் வேற வருது. எல்லாம் என்னாலத்தான?” என்று சற்று கவலையாக கேட்டாள் ருத்ரா.

அவளின் பதட்டத்தை பார்த்த அபிமன்யூ-விற்கு உள்ளுக்குள் சில்லென்று தென்றல் காற்று வீசியது. 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று அவன் சாதாரணமாக கூறினான்.

“என்ன இல்ல? பாருங்க எப்படி வீங்கிருக்கு-ன்னு, என்னை காப்பாத்த போயி தான் இப்படி ஆயிருச்சு” என்று ருத்ரா மீண்டும் கூறினாள்.

அதைக்கேட்டு அபிமன்யூ சற்று சத்தமாகவே சிரித்தான்.

“இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று ருத்ரா குழப்பமாக கேட்டாள்.

“இல்ல. இப்பயாச்சும் நான் தான் உன்னை காப்பாத்துனேன் அப்படின்றது நியாபகம் வந்திச்சே” என்று கிண்டலாக கூறினான் அபிமன்யூ.

அப்போதே இவ்வளவு நேரம் யாரோ ஒருவனுக்காக, இப்படி பதறி துடித்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கு புரிந்தது.

வேகமாக அவன் கையை விட்ட ருத்ரா “உங்களை யாரு என்னை காப்பாத்த வர சொன்னா? நானே என்னை காப்பாத்திருப்பேன். எனக்கு என்னைய பார்த்துக்க தெரியும்.” என்று கோவமாக கூறினாள்.

“ஆமா அதைத்தான் நானே பார்த்தேனே. எது எப்படியோ? இனிமேல் நீதான் உன்னை பார்த்துக்கனும். ஏன்னா? இதுக்கப்புறம் நீ ஆபத்துலையே இருந்தாக்கூட, நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன். அது போக, இதுக்கப்புறம் உன் முகத்தை கூட நான் பார்க்க கூடாது-ன்னு நினைக்கிறேன்” என்று அபிமன்யூ மிக சாதாரணமாக கூறினான்.

ஏனோ அவன் கூறிய வார்த்தைகளை கேட்ட ருத்ரா-விற்கு மனம் சற்று பாரமாகிப் போனது. 

அவள் கலங்கிய முகத்தைப் பார்த்த அபிமன்யூ-விற்கும் கூட, மனம் ஏனோ சஞ்சலமடைந்தது.

அதே நேரம், மேலே வந்த தென்றல் “ருத்ரா” என்று கத்தினாள்.

“ஏய் தென்றல் உனக்கு நல்லா தெரியுமா? ருத்ரா இங்கத்தான் வந்தாளா?” என்று அகல்யா கேட்டாள்.

“ம் தெரியும். அவ இங்கத்தான் இருக்கா.” என்று தென்றல் அடித்துக் கூறினாள்.

“சரி வா தேடி பார்க்கலாம்” என்று தென்றலும், அகல்யா-வும் ஒரு பக்கம் தேடி சென்றனர்.

“அபி எங்க போனான்? என்னை இங்க தான வர சொன்னான்?” என்ற சிந்தனையில், கவின் நின்றான்.

அர்ஜூன், கவினை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன மிஸ்டர்? இங்க நின்னு என்னைப் பார்க்கிறதுக்கா? வந்தீங்க? போங்க. உங்களை நம்பி வந்திருக்க பொண்ணுங்களை பத்திரமா வீட்டுக்கு கூப்டு போற வழியை பாருங்க” என்று கவின் கூறினான்.

“அது எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு அர்ஜூன் அங்கிருந்து சென்றான்.

செல்லும் மூவரில் தென்றலைப் மட்டும் சில நொடிகள் பார்த்துவிட்டு பின் திரும்பி தன் மொபைலை பார்த்தான்.

“ச்சே இந்த இடத்துல டவர் கூட இல்ல” என்று கவின் சொல்லிவிட்டு வேறு பக்கம் சென்றான்.

“என்னவாயிற்று மனுவேந்தா? எம் இளவரசி இப்பிறவியில் பிறந்தால் என்றால், அவளின் சரிபாதியும் பிறந்து தானே ஆவான்? அவனிடம் இருந்து உம்மாள் மட்டுமல்ல, எம் இளவரசியால் கூட, அவனை பிரிக்க முடியாது. இதை நான் சொல்லி உமக்கு புரியும் நிலை வரும் என்று, என் சிந்தையிலும் நான் நினையேன்” என்ற குரல் சத்தமாக கேட்டது.

“போதும் நிறுத்து. உமக்கு சாபம் மறந்துவிட்டதென்று நினைக்கிறேன். அச்சாபத்தை வழங்கியதும், நானல்ல, உம் இளவரசி என்பதையும் மறந்துவிடாதே. ஆம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவன் அழிந்து பல ஜென்மமாகிவிட்டது. இப்போது இங்கே நிற்பவன், என் நிழலுக்கு கூட சமமாக மாட்டான்” என்று கோவமாக வந்து விழுந்தது மனுவேந்தனின் வார்த்தைகள்.

“ம். அதையும் பாப்போம் மாமன்னா. எம் இளவரசர் வந்துவிட்டார். இனி எமக்கென்ன வேலை? நான் செல்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் மறவாதே. அவள் சாதாரண பிறவியும் இல்லை. அவனின் பிறப்பின் ரகசியமும் அர்ப்பம் இல்லை. வெகு விரைவில் நீர் அதை அறிந்துக் கொள்வீராக.” என்று மீண்டும் அந்த குரல் கேட்டது.

“இல்லை. இல்லை. இல்லை. இதை என்னால் ஏற்க முடியாது. அவன் சாதாரண மானுட பிறவி. அவன் முன்னால் என் சினம் தோற்றுப் போகுமா?” என்று சிவந்த விழியோன் உக்கரமாக கத்தினான்.

“ஹா.. ஹா.. இதற்கு நான் பதிலளித்தாள் நீர் அதை ஏற்பீரோ? இருந்தும் சொல்கிறேன். உம் சினம், அவனால் அல்ல, எம் இளவரசியின் முன் தோற்றுப் போகும். ஏன் நம்ப மறுக்கிறாய்? வேண்டுமானால், இதை சவாலாக கூட ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டுமானால் முடிந்தால், எம் இளவரசியை நெருங்கிப் பார்” என்று அந்த குரல் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தது.

அதே நேரம், ருத்ராவினால், அபிமன்யூ பேசிய வார்த்தைகளை அவ்வளவு இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. செல்லும் அவனின் முதுகை வெறித்துப் பார்த்தாள்.

ஒரு நொடி நின்று பின் திரும்பி “ஹலோ. இங்க ஒரு வழிதான் இருக்கு-ன்னு நினைக்கிறேன். நீயும் வறீயா? இல்ல, உன்னை நீயே பார்த்துக்கிறீயா?” என்று கிண்டலாக கேட்டான் அபிமன்யூ.

வேகமாக எதுவும் பேசாமல், அவன் பின்னே சென்றாள். அந்நேரம். யாரோ அவளை பின்பக்கமாக இழுப்பது போல் ஒரு பிரம்மை தோன்றியது. சட்டென்று திரும்பி பார்க்க, அங்கே ஒரு புகைப்படத்தின் ஆணியில் இவள் ஷால் மாட்டியிருந்தது.

தன் பின்னால் வந்துக் கொண்டிருந்தவளின் கால்தடம் கேட்காததால், அபிமன்யூ-வும் திரும்பி பார்த்தான்.

“ஏய் என்ன? ட்ராயிங்கை இப்படி சைட் அடிச்சிட்டு இருக்க?” என்று சாதாரணமாக கேட்டான் அபிமன்யூ.

உண்மையில் அவனுக்கே தான்தான் இப்படி ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று தான் தோன்றியது.

ஆனால் ருத்ராவோ எதுவும் பேசாமல், அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகள் அந்த ஓவியத்தை விட்டு சிறிதும் நகரவில்லை. 

“ஏய் உன்கிட்ட தான் கேட்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அங்கு அபிமன்யூ வந்தான்.

அவளிடம் எந்த அசைவு வராமல் போக, அபிமன்யூ-வுமே அந்த ஓவியத்தை பார்த்தான். அதைப்பார்த்ததும் அவனாலும் அவன் விழியை அதில் இருந்து விலக்க முடியவில்லை.

அந்த ஓவியத்தின் உள்ளே சில காட்சிகள் ஓட ஆரம்பித்தது. ஆனால் தெளிவாக இல்லாமல் மங்கலாக இருந்தது.

“வேண்டாம் இளவரசி. எம் காதலை சீண்டி, உம்மை நீ வஞ்சித்துக் கொள்ளாதே” என்று ஒருவன், அந்த அழகிய பாவை முன் கோவமாக கூறினான்.

“பரவாயில்லையே இளவரசருக்கு, பாவை முன் ,கோவம்  கூட வருமோ? நான் கூட, பாடல் மட்டும் தான் வரும் என்றல்லவா நினைத்தேன்” என்ற அந்த பாவையின் குரலில் நக்கல் வழிந்தோடியது.

“போதும் இளவரசி. உங்கள் எள்ளல் பேச்சுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சிறு பெண் என்று பாவிக்கிறேன். இல்லையேல்?” என்று கோவமாக தன் கையில் வைத்திருந்த இசைக்கருவியை தன் பைக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

வேகமாக செல்லும் அவன் முன் தன் இருகைகளையும் காட்டி மறித்து நின்றாள் அந்த பாவை.

“நில்லுங்கள் இளவரசரே. சொல்லின் வேந்தனுக்கு, இப்பாவைக்கு பதிலளிக்க என்ன தயக்கம்? யான் பதில் அல்லவா கேட்டேன்” என்று அவனை வம்பிழுக்கும் நோக்கத்தோடு கேட்டாள்.

“எம் பொறுமையை சோதிக்காதே இளவரசி. அதன் பின் நடக்கும் எதற்கும். எம் மேல் பழி போடாதே” என்று மிரட்டும் தோணியில் அவன் எச்சரித்தான்.

“என்ன இளவரசி இது? நாளை உமக்கு கனவனாகப் போகும் என் தமையன் முன் உமக்கென்ன விளையாட்டு? போதும் நிறுத்திக் கொள்வோம்” என்று அவள் அருகில் நின்ற பெண் கெஞ்சலாக கேட்டாள்.

“கணவன் நாளை தானே. இன்று ஒன்றும் இல்லையே. நீ இதில் தலையிடாதே. இது எமக்கும், உம் தமையனுக்கும் இடையில் உள்ள பழைய கணக்கு” என்று தீர்க்கமாக கூறினாள் அப்பாவை.

“ஓ அப்படியானால், இளவரசிக்கு கணக்கை தீர்க்க வேண்டும் அப்படித்தானே? சரி. தங்கையே. நீ உன்னுடைய மற்ற தோழிகளோடு அரண்மனைக்கு செல். நான், உம் தோழிக்கு கணக்கு வழக்கு காமித்து அழைத்து வருகிறேன்” என்று உத்தரவிட்டான் அவன்.

“தமையனே. அவள்” என்று தோழிக்கு ஆதரவாக வாய் திறந்தாள் அந்தப்பெண்.

“உம்மில் தோன்றும் இச்சிறு சுணக்கம் கூட, உம் தோழியாரின் முகத்தில் படரவில்லையே. காரணம் எந்தன் மீது கொண்ட நேசமோ? இல்லை எந்தன் மேல் கொண்ட நம்பிக்கையோ?” என்று சீண்டலாக கேட்டான் அவன்.

“என்னது நேசமா? அதுவும் உம் தமையன் மீது. இருந்தாலும் உம் தமையனுக்கு பேராசைதான்” என்று சலிப்பாக கூறினாள் அப்பாவை.

“பின், என் மீது இல்லாமல், வேறு எவன் மீது வருமாம் அந்த நேஷம்?” என்று அதே சீண்டலோடு கேட்டான் அவன்.

“எவன் மீதென்ன எவன் மீது? யார் வேண்டுமானாலும் வரும்” என்று அசட்டலாக கூறினாள் அந்தப்  பாவை.

“என்ன பேச்சிது இளவரசி? அதுவும் உம்மை சொந்தம் கொள்ள போகும் இளவரசர் முன்பு இப்படியா பேசுவாய்?” என்று அவளின் மற்ற தோழிகள் அவளை அமைதிப்படுத்த முயற்சித்தனர்.

“சொந்தம் கொள்ள போகும் நபர் தானே. சொந்தம் கொண்டவர் இல்லையே” என்ற அவளின் அடுத்த வார்த்தைகள் அவன் இதழுக்குள் சரணடைந்தது.

அதை சற்றும் எதிர்ப்பார்க்காத, அவளின் மற்ற தோழிகள் சங்கடப்பட்டு கண்ணை மூடினர்.

தங்கவிழியோளின் கண்கள் ஒரு நொடி பட்டாம்பூச்சியாய் துடித்து, அவன் இதழுக்குள் தானாய் புகுத்துக் கொண்டாள்.

இருவரின் இதழ்களும் சங்கமித்த சமயம், அவள் விழிகள் ரெண்டும், பல பரிபாசனங்களை பரிமாறிக் கொண்டிருந்தது. சுற்றி இருந்தோர் யாரும் நினைவில் இல்லாமல், அந்த காட்டில் அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருப்பது போல், ஒரு மாய வலைக்குள் இருந்தனர்.

எவ்வளவு நேரம் அப்படியே கடந்ததோ? “ருத்ரா” என்ற தென்றலின் அழைப்பிலும், “அபி” என்ற கவினின் அழைப்பிலும் இருவரும் நிகழ் உலகிற்கு வந்தனர்.

ஒரு நொடி ஏதோ மாய வலையில் இருந்து அறுபட்டது போல். எங்க இருக்கிறோம்? என்ன நடந்தது? என்று எதுவும் புரியாமல் ஒரு வித அதிர்ச்சி நிலையில் இருவரும் நின்றிருந்தனர்.

இவள் விரல்கள் தானாக தன் உதட்டை வருடியது. சட்டென்று அபி-யைப் பார்க்க, இருவர் உடலுக்குள்ளும், ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு. 

“ஏய் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே” என்று தென்றல் வந்து ருத்ரா-வை கட்டிக் கொண்டாள்.

“எங்கடா போனா? என்ன கையில எல்லாம் அடிப்பட்டிருக்கு?” என்று கவின் அபியிடம் கேட்டான்.

அதற்குள், அர்ஜூன் மற்றும் அகல்யா அங்கு வந்தனர். அப்போதே சுயநினைவுக்கு வந்த ருத்ரா “அடிப்பாவி நான் என்ன காணாமலா போனேன்? அதுக்குள்ள வீட்டுக்கு கால் பண்ணி வர வச்சிட்டியா?” என்று கடுப்பாக கேட்டாள்.

“ஏய் ருத்ரா. இந்த டைம்-ல இப்படித்தான் தனியா வருவியா? அட்லீஸ்ட் தென்றலையாச்சும் கூப்டு வந்திருக்கலாம்-ல” என்று அகல்யா சொல்ல, அபிமன்யூ சட்டென்று அகல்யா-வை பார்த்தான்.

மனதினுள் “ரெண்டாவது பையத்தியம் போல” என்று சொல்லிக் கொண்டான் அபி.

“என்ன ருத்ரா இது?” என்று அர்ஜூன் ஏதோ சொல்ல வரும் முன், அவன் வாயில் கை வைத்து தடுத்து “ஐயா ராஜா. நீயும் ஆரம்பிக்காத. உங்க தொல்லை-லாம் இல்லாம ஒரு ரெண்டு நாள் இருக்கலாம்-னு தான் இந்த இன்டர்ன்சிப்புக்கே வந்தேன். ஏன்டா இங்கையும் வந்து என்னை இம்சை பண்றீங்க?” என்று ருத்ரா புலம்பலாக கேட்டாள்.

“எது நாங்க உனக்கு இம்சையா?” என்று அர்ஜூன் செல்லமாக அவள் காதைப் பிடித்து திருகினான். 

“ஐயோ சாரி அஜ்ஜு” என்று தன் காதில் சிறுபிள்ளை போல் கை வைத்து கேட்டாள் ருத்ரா.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அபிமன்யூ-க்கு காரணமே இல்லாமல், அர்ஜூனை, எறித்து விடும் அளவுக்கு கோவம் வந்தது.

அதற்குள் அகல்யா “எங்கடி போன? நாங்க எல்லாரும் உன்னை இந்த கோட்டை புல்லா தேடுனோம்” என்று கேள்வியாக கேட்டாள்.

“அது தெரியாம கீழ விழுந்துட்டேன். அப்போ இவர்தான் என்னை காப்பாத்துனாரு” என்று ருத்ரா, அபி-யை கை காட்டினாள்.

அப்போதே, தென்றல் அபிமன்யூ-வை நிமிர்ந்து பார்த்தாள், அவன் கவின் பக்கமாக திரும்பி நிற்க, “ரொம்ப தேங்க்ஸ் அ..” என்று அவள் சொல்லும் போது தான் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் முகத்தைப் பார்த்ததும், அவளுள் சொல்ல முடியாத ஒரு உணர்வு. வார்த்தை நாவை தாண்டி வரவில்லை. அபிமன்யூ-விற்கும் ஏறக்குறைய அதே நிலைதான். அவன் கண்களில் இருந்து காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தது.

ஆனால் அபிமன்யூ-வை ஒரு கண்கள் மிக ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தது. அது வேற யாரும் இல்லை நம் ருத்ரா தான்.

அபியும், தென்றலும் எதுவும் பேசாமல் அப்படியே நிற்பதை கவனித்த கவின், அபியை கேள்வியாக பார்த்தான்.

“அபி” என்று கவின் உழுக்க, “ஏய் உன் பிரண்ட் தென்றல் ஏன் இப்ப அவனை இப்படி பார்த்துட்டு இருக்கா?” என்று அர்ஜூன் எரிச்சலாக ருத்ரா-வை பார்த்தான்.

அப்போதே தான் அதை விட மோசமாக, அவனை பார்த்துக் கொண்டிருப்பது ருத்ராவிற்கு புரிந்தது.

“நல்லவேளை அஜ்ஜு நம்மளை பார்க்கல. பார்த்திருந்தா மானம் போயிருக்கும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தென்றலின் தோளில் கை வைத்தாள்.

அதில் தன்னிலை பெற்ற தென்றல், அபிமன்யூ-வையும், ருத்ரா-வையும் மாறி மாறி பார்த்தாள்.

“ஏய் எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நீ ஏன் வித்தியாசமா பார்க்குற?” என்று ருத்ரா கிண்டலாக கேட்டாள்.

“சரி ஒகே கிளம்பலாம்” என்று அர்ஜூன் சொல்ல, ருத்ரா கண்களாலே, அவனிடம் விடைபெற்று சென்றாள். 

அவள் கண்ணை விட்டு மறையும் வரை அவளையே பார்த்த அபிமன்யூ-வின் கண்கள் நொடி நேரத்தில் கடுமையை பூசிக் கொண்டது. அவள் தொட்ட அவன் கரத்தை ஓங்கி அங்கிருந்த சோபாவில் குத்தினான். அதில் இரத்தம் அந்த சுவற்றில் தெளித்தது.

சரியாக அந்நேரம் கவின் தன் காரை எடுக்க செல்ல, அவன் கண்களில் இக்காட்சி பதியவில்லை. இருவரும் அக் கோட்டையை விட்டு கிளம்பினர்.

இவர்கள் அனைவரும் அக்கோட்டையை விட்டு சென்றவுடன் அந்த பெரிய இரும்பு கேட் தானாக பூட்டிக் கொண்டது.

இன்று நீ யாரால் தப்பித்து சென்றாயோ? அவனே உன்னை இங்கு மீண்டும் அழைத்து வருவான். நீங்கள் இருவர் மட்டுமல்ல, நீங்கள் அனைவரும் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து, முடிவை தேடுவீர்கள். காலம், உங்களை என் காலடியில் மீண்டும் பனிய வைக்கும்.. வைப்பேன். என்ற சிவந்த விழியோனின் வார்த்தைகள் அந்த கோட்டை எங்கும் எதிரொலித்தது. 

(அப்படி இந்த சிவந்த விழியோனுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? யார்? யாருக்கு சொந்தம்? யார்? யாருடைய எதிரிகள்? யார் யாரின் பகையை தீர்க்க இப்பிறவி வந்து சேர்ந்தார்கள்? என்ற சுவாரசியமான பல கேள்விகளுக்கான விடையை, நீங்கள் அடுத்தடுத்த அத்தியாயத்தில் காணலாம்...)

சாபம் தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   4

*** தாபம் – 8 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com