ருத்ரா காட்டிய புகைப்படத்தினை பார்த்துக் கொண்டிருந்த தென்றலின் முகம் ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தது.
“போட்டோஸ் எப்படி இருக்கு?” என்று ருத்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போது தான், தென்றலின் முக மாற்றத்தை கவனித்தாள்.
“இந்த போட்டோ” என்று தென்றல் அந்தப் புகைப்படத்தை காமிக்க,
“எந்த போட்டோ?” என்று புரியாமல் ருத்ரா-வும் அந்தப் புகைப்படத்தை பார்த்தாள்.
அதில் இருட்டின் அழகை வெளிக்காட்டும் விதமாக, மின்னல் ஒளியின் பிரகாசத்தில் ஜொலித்த ரோஜாப்பூவை ருத்ரா புகைப்படமாக எடுத்திருந்தாள்.
“என்னடி? ரோஜாப் பூ வைப்பார்த்து பயப்படுற? என்ன இந்த பூ தான், நீ சொன்ன அரக்கனா?” என்று ருத்ரா கிண்டலாக கேட்டாள்.
“அது இல்ல, அந்த பூ பக்கத்துல” என்று தென்றல் கையை நீட்டினாள்.
“பூ பக்கத்துல என்ன இருக்கு?” என்று புரியாமல் ருத்ரா-வும் அந்தப் புகைப்படத்தை பார்த்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
மின்னல் கீற்று அந்த ரோஜா-ப்பூவின் மேல் பட்டு, அதன் முடிவு ஒரு புதரில் முடிந்திருந்தது. அந்தப் புதரின் அருகே, அவள் கனவில் பார்த்த அந்த புகை உருவம் தெள்ளத் தெளிவாக அதில் பதிவாகியிருந்தது.
ஆனால் ருத்ரா-வை பொறுத்தவரை, அது மின்னல் கீற்று. ஆனால், தென்றலுக்கு வியர்த்தே விட்டது.
“ஏய் காலையிலேயே என்னை ஏன் படுத்தி எடுக்குற. போ. இன்னிக்கு நம்ம டூர் கிளம்புறோம் உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்று ருத்ரா கடுப்பாக கேட்டாள்.
அப்போதே “இல்ல ருத்ரா. நான் இந்த டூருக்கு வரல. எனக்கு கொஞ்சம் ஹெட் ஏக்கா இருக்கு” என்று தென்றல் வேகமாக கூறினாள்.
“என்னடி விளையாடுறீயா? நீ இல்லாம, நான் எங்கையாச்சும் போயிருக்கேனா? ஒழுங்கா வா. இப்ப நம்ம போகப்போற பிளேஸ்-ல நிறையா ஹிஸ்டோரிகல் பிளேஸ் இருக்காம். அதையெல்லாம் என் கேமரா-ல சூட் பண்ண, எவ்வளவு ஆர்வமா இருக்கேன் தெரியுமா? நீ என்னன்னா இப்படி சொல்ற?” என்று ருத்ரா வேகமாக கூறினாள்.
“இல்ல.” என்று தென்றல் சொல்ல, சொல்ல அவள் பேச்சை சற்றும் காதில் வாங்காமல். குளியலறைக்குள் தள்ளி விட்டு, “சீக்கிரமா குளிச்சிட்டு வெளிய வா. உனக்கு ஆப்சன்-னே இல்ல. அது போக நீ தான சொல்லுவ. நீ என் கூட இருக்கிறதாலத்தான், அந்த அரக்கன் என்னை எதுவும் செய்யாம போறான்னு. அப்போ நீ என்கூடத்தான இருக்கனும்” என்று ருத்ரா அவள் பாணியிலேயே சம்மதிக்க வைத்தாள்.
அதன் பின் மறுபேச்சு இல்லாமல், தென்றல் குளிக்க சென்றாள். மனதினுள் “எனக்கு ஏன் இந்த கனவு திரும்ப திரும்ப வருது. ருத்ரா-க்கு உண்மையாவே ஆபத்து இருக்குமா? இல்ல அப்படி ஒரு ஆபத்து வந்தா, அது என்னைத் தாண்டி தான், அவகிட்ட போகும்” என்று சொல்லிக் கொண்டாள்.
வெளியில் இருந்த ருத்ரா-வோ மீண்டும் அந்தப் புகைப்படத்தை பார்த்து “என்ன இவ? சும்மா மின்னல் ஒளியை எல்லாம் பார்த்து பயப்படுறா? இவளை இப்படியே விட்டா, சரி வராது. இந்த டூருக்கு போயிட்டு வந்ததும், நல்ல சைக்காலஜிஸ்டா பார்த்து கூப்டு போகனும்” என்று நினைத்துக் கொண்டாள்.
அதன் பின் கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலாப் பயணம் ஆரம்பித்தது. அனைத்து மாணவ, மாணவிகளும் அந்த பயணத்தை ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடினர்.
ஆனால், ருத்ரா-வோ புகைப்படத்தை வைத்து அதையெல்லாம் பதிவேற்றம் செய்துக் கொண்டிருந்தாள். தென்றல். அமைதியாக ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள்.
“தென்றல் இங்கப்பாரு ஸ்மைல் பண்ணு” என்று ருத்ரா சொல்ல, அவள் பக்கம் திரும்பினாள் தென்றல்.
“என்ன ருத்ரா?” என்று தென்றல் சோர்வாக கேட்க திரும்ப, ருத்ரா அதை அப்படியே படம் பிடித்தாள்.
“இப்போ எதுக்கு டி போட்டோ எடுத்த?” என்று தென்றல் சொல்ல, “ஏன்டி. நீயே உன் மூஞ்சைப் பாரு. ஏன் இப்படி துக்கத்துல இருக்கிற மாதிரி இருக்க. அங்க பாரு. எல்லாரும் எவ்வளவு என்ஜாய் பண்றாங்கன்னு. போ. போயி நீயும் என்ஜாய் பண்ணு” என்று ருத்ரா கண்டித்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு அமைதியா இருக்கிறதுதான் பிடிக்கும்” என்று தென்றல் அடம்பிடித்தாள்.
அதற்குள் அவர்களின் வகுப்பு மாணவ, மாணவிகள் “அட என்னப்பா? வாங்க வந்து எங்க கூட ஐயிக்யம் ஆகுங்க” என்று வற்புறுத்தினர்.
அதன் பின், ருத்ரா-வும், தென்றலும் அவர்களுடன் இணைந்து விளையாட ஆரம்பித்தனர்.
இப்படியாக, சென்றுக் கொண்டிருக்கும் போது. திடீரென தென்றலின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. மனம் ஏதோ ஒரு ஆபத்து என்று சொல்லாமல் கூறியது. அவள் கண் முன் ருத்ரா ரத்த வெள்ளத்தில் சரிந்து அவள் மடியில் விழுவது போல், ஏதோ ஒரு பிரம்மை தோன்றியது.
தன் தலையைக் குலுக்கி, அங்கிருந்த சீட்டில் அவள் அமர, ருத்ரா மட்டும் அவர்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள். அதுவும் வாசல் படிக்கு மிக அருகில் நின்று ரகளை செய்துக் கொண்டிருந்தாள்.
சட்டென்று ட்ரைவர் பிரேக் பிடிக்க, ருத்ரா நிலை தடுமாறி கீழே விழ சென்றாள். அதற்குள் அவள் கையைப் பிடித்து தாங்கிய தென்றலுக்கு ஒரு நொடி உயிரே அவள் கையில் இல்லை.
“தேங்க்ஸ் டி” என்று ருத்ரா சாதாரணமாக சொல்லிவிட்டு, “இங்க எதுக்குடா நிறுத்துறாங்க?” என்று கடுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து இறங்கினாள்.
“ஏய். எங்கடி போற?” என்று தென்றல் அவசரமாக அவளை தொடர்ந்து இறங்க முயற்சிக்க, அதற்கு முன், அவளின் வகுப்பு மாணவர்களும் இறங்கினர்.
அப்போதே சற்று நிதானமான தென்றல் மூச்சை விட்டாள்.
அங்கே ஒரு டீக்கடை இருந்தது. ரயிலின் வருகைக்காக, அந்த ரயில்வேய் ஹேட் மூடியிருந்தது. அதனால், அவர்களின் ஆசிரியர்களும், சற்று டீகுடித்து விட்டு செல்வோம் என்று முடிவு செய்திருந்தனர்.
அனைத்து மாணவர்களும் இறங்கி டீக்கடைக்கு செல்ல, ருத்ரா மட்டும், அந்த ரயில்வே ஹேட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வா ருத்ரா. ஏதாச்சும் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கலாம்” என்று தென்றல் கூப்பிட “நீ போ தென்றல். எனக்கும் சேர்த்து ஒரு செவன் அப் வாங்கி வை. நான் இப்ப வந்துடுறேன்” என்று ருத்ரா கூறினாள்.
“எங்கப்போற?” என்று தென்றல் கேட்க, “ம் ரெஸ்ட் ரூம் போறேன் டி. ஏன் அதுக்கும் துணைக்கு வறீயா?” என்று ருத்ரா கிண்டலாக கேட்டாள்.
“சரி, சரி. சீக்கிரம் வந்துடு” என்று தென்றல் சொல்லிவிட்டு, அந்த டீக்கடைக்கு சென்றாள். ஆனால் விழிகளோ, ருத்ரா-வின் மீதுதான் இருந்தது.
அப்போது தென்றலின் அருகில் வந்த அந்த டீக்கடை உரிமையாளரின் மனைவி “என்னம்மா? என்ன வேணும்?” என்று அக்கறையாக கேட்டார்.
அதற்குள் மற்ற மாணவிகளும் அவளை சூழ்ந்து நிற்க, ருத்ரா-வை கவனிக்க தவறினாள்.
அங்கே ருத்ரா-வோ “செம்ம கிளைமேட், பிளேஸ்-ம் சூப்பரா இருக்கே. எந்த ஆங்கிள்-ல கேமரா வச்சி எடுத்தா, ட்ரெயின், ரன்னிங் மூமெண்ட் பெர்பக்டா இருக்கும்?” என்று யோசித்துக் கொண்டே, அந்த ரயில்வே ஹேட்டை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதன் மேல் ஏறிக் குதித்து, உள்ளே நுழைந்தாள்.
அது ஒரு சிறிய கிராமம் என்பதால், அந்த ரயில்வே ஹேட்டின் அருகே யாரும் இல்லை. அது போக ரயில் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதனால், ருத்ராவும் மிக அசால்டாக, அந்த ட்ராக்கில் நடந்துக் கொண்டு, கேமராவை எங்கே வைத்து எடுப்பது என்று வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் பார்த்து மெதுவான தென்றல் காற்று, அவள் முகத்தில் மெல்லமாக வீசியது. அதில் மெல்ல கண்களை மூடி, அதை தனக்குள் உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக் கொண்டாள். அது போக அந்த தென்றல் காற்றின் வழியே வந்த ஏதோ ஒரு காணம், அவள் செவிமடல் புகுந்து அவளை தன்னிலை மறக்க வைத்திருந்தது.
“எதற்கு வந்தோம்? ஏன் வந்தோம்? எங்கு நிற்கிறோம்?” என்று எதுவும் புரியாமல் ஏதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல், விழிமூடி நின்றிருந்தாள் ருத்ரா.
சரியாக அந்நேரம், அவள் நின்றிருந்த ட்ராக் அதிர்ந்து ரயிலின் வரவை அறிவுறுத்தியது. ஆனால் அதை ஏதும் அறியும் மனநிலையில் அவள் இல்லை.
“வந்துவிடு. என்னோடு வந்து விடு. இந்த பூமி வேண்டாம், இந்த காற்று வேண்டாம், ஏன் இந்த உடல் வேண்டாம். உன் உயிரும் உனக்கு வேண்டாம்” என்று அவள் செவிமடல் அருகே கேட்ட குரல் அவள் இதயத்துக்கு மிக அருகில் கேட்டது.
அந்த வசீகரமான குரலில், அவளுக்கு அதி வேகமாக வந்துக் கொண்டிருந்த ரயிலின் சத்தம் கேட்கவில்லை. அவளை நோக்கி அந்த ரயில் அகோரமாக வந்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் தென்றல் ருத்ரா-வின் வருகைக்காக, அங்கே காத்துக் கொண்டிருந்தாள்.
“ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?” என்று தென்றல் தனக்குள் சொல்லிக் கொண்டே, ருத்ரா சென்ற திசை பக்கம் சென்றாள்.
சட்டென்று அவள் முன்னே புகைப்படலம் பரவ, அவளுக்கு எதிரில் இருந்த எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. மனதினுள் ஏதோ ஒருவித அச்சம் பரவியது.
“உனக்கு எத்தனை முறை எச்சரித்தாலும், நீ உன் கொள்கையை விடமாட்டாயா? இது நல்லதுக்கு இல்லை தேவி. தேவையில்லாமல் என் சினத்தை சீண்டாதே. மீண்டும் கூறுகிறேன். வந்த வழியே சென்றுவிடு. இந்த முறை என் வழியில் நிற்காதே” என்று அசரீதி கூறியது.
அதில் தன் காதுகளை இறுக மூடியவள் “ருத்ரா” என்று தன்னால் முடிந்த மட்டும் கத்தினாள்.
ஆனால், அதிவேக ரயிலின் சத்தமே ருத்ராவிற்கு கேட்கவில்லை. அப்படி இருக்க, தென்றலின் குரலா அவள் செவியில் விழப் போகிறது?
“தேவி தயவு செய்து இளவரசியை காப்பாற்றுங்கள். உங்களால் மட்டுமே முடியும். அவன் வலையில் வீழ விடாமல் தடுத்து நிறுத்துங்கள்.” என்று இன்னொரு ஒளிவடிவம் அவளிடம் வேண்டியது.
“இளவரசியாரே, உங்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லையோ? இன்னும் ஏன் விழி திறக்காமல், என் பொறுமையை இழக்க வைக்கிறீர்கள், உங்கள் விழி திறந்து என் விழி பார்க்கும் நொடிக்காக, பல யுகம் காத்துக் கொண்டிருக்கும், என்னை பார்க்க உமக்கு ஆசையில்லையோ?” என்ற வசீகரமான குரல், மீண்டும் அவள் செவியில் ஒலித்தது.
மெதுவாக கண் விழித்த போது, அவள் கண்ணின் முன், அதி வேகமாக வந்துக் கொண்டிருந்த ரயில் தான் தெரிந்தது.
ஒரு நொடி அவளுக்கு என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றாள்.
அந்நேரம் சட்டென்று ஒரு கரம், அவள் கையைப் பிடித்து இழுத்தது. அதில் ருத்ரா அவன் மார்பிலேயே போயி விழுந்தாள். நொடி நேரத்தில் அவளோடு சேர்ந்து பிரண்டு மறுபக்கம் சென்று அவளை விடுவித்தான்.
நொடி நேரத்தில் நடந்த இந்த நிகழ்வால் ருத்ரா இறுக்க கண்ணை மூடிக் கொண்டாள்.
மெதுவாக, அவள் கண்ணை திறந்து பார்க்கும் போது, ஒரு ஆணின் திண்ணிய மார்பில் முகம் புதைத்து நின்றிருந்தாள்.
அவனின் இதயத்துடிப்பு, இவள் இதயத்துடன் கலந்து உரையாடுவது போல், அவனை விட்டு இம்மியளவும் அசையாமல், அவனுடன் ஒன்றி நின்றாள்.
சட்டென்று தீ சுட்டது போல், அவளை உதறி தள்ளிவிட்டு “ஆர் யூ மேட்? ஸ்டுபிட்” என்று பல்லைக் கடித்து சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் சென்றிருந்தான்.
அப்போதே தன்னிலைப் பெற்ற ருத்ரா வேகமாக நிமிர்ந்துப் பார்த்தாள்.
ஆனால், அவனின் பரந்து விரிந்த முதுகு மட்டுமே அவளுக்கு தெரிந்தது.
அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. ஆனால், அவனுடன் அருகில் இருக்கும் போது, ஒரு வித நெருக்கமும், அதே நேரம் ஒரு வித அந்நியத்தன்மையையும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்.
இதுவரை அவள் உணராத, புது வித உணர்வில் மூழ்கி இருந்தவளை, “ருத்ரா” என்ற தென்றலின் சத்தம் நினைவுக்கு கொண்டு வந்தது.
ரயில் கடந்து சென்ற பின் வேகமாக, அவளிடம் ஒடி வந்த தென்றல், அவளை அணைத்து “உனக்கு ஒன்னும் இல்லதான?” என்று அக்கறையாக கேட்டாள்.
“ஏய். ஐயம் ஒகே-யா” என்று சொல்லியவளின் நினைவில் அப்போதே ஏதோ ஒன்று நினைவுக்கு வர “ஒரு நிமிஷம்” என்று ருத்ரா வேகமாக சொல்லிவிட்டு, அவள் கையில் வைத்திருந்த கேமரா-வை தேடினாள்.
அது ஒரு கல்லின் மறுபுறம் விழுந்து கிடந்தது. வேகமாக தென்றலை விலக்கி அந்த கேமராவை சென்று எடுத்தாள்.
அதைப்பார்த்து இன்னும் கடுப்பான தென்றல் “உனக்கு எல்லாத்துலையும் விளையாட்டுதானா ருத்ரா?” என்று உச்சகட்ட கோவத்தில் கத்தினாள்.
இதுவரை தென்றலின் இத்தகைய கோவத்தை பார்க்காத ருத்ரா, “ஏய். சாரிடா. ஒரு டிபரன்ட் வியூ-ல போட்டோ எடுக்கனும்-னு நினைச்சேன் அதான்” என்று விளக்கம் கொடுத்தாள்.
“கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடி. ஒரு செகன்ட் உனக்கு ஏதாச்சு ஆயிருந்தா என்னாகுறது?” என்று தென்றல் கோவமாக கத்தினாள்.
“சரி. சரி கூல் மச்சி. அதான் ஒன்னும் ஆகலத்தான? விடு. சரி வா. செவன் அப் கூலிங் போயிட போகுது” என்று ருத்ரா கூலாக சொல்ல, அதைக்கேட்ட தென்றலுக்கு தான் பதட்டம் குறைந்தப்பாடில்லை.
தன் கேமராவை சரிபார்த்த ருத்ரா, கடைசியாக எடுத்த புகைப்படத்தைப் பார்த்தாள். அதில், அவள் ஒருவன் மார்பில் விழும் போது, அவளையும் அறியாமல், அந்த புகைப்படக்கருவி புகைப்படம் எடுத்திருந்தது.
ஆனால், அதிலும் அவனின் முகம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் மார்பில் “ஆ” என்றது போல் ஏதோ ஒரு மச்சம் இருந்தது.
“என்ன? மச்சமா? ஒரு வேளை டாட்டூவா இருக்குமோ?” என்று ருத்ரா வெகு தீவிரமாக யோசித்தாள்.
அவளைப் பார்த்து முறைத்த தென்றல் “இன்னும் எதுக்கு அந்த கேமராவ வச்சிட்டு இருக்க. முதல்ல கொடு” என்று அவள் பறித்தாள்.
அப்போது, அதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது. அதில் ருத்ரா-வின் அருகில், ஏதோ ஒரு சிவப்பு நிற உருவம் நிற்பது போல் பதிவாகியிருந்தது.
அதைப்பார்த்ததும். தென்றலுக்கு உயிர் தூக்கி வாறிப் போட்டது.
“ஏய் கொடு” என்று ருத்ரா அவள் கையில் இருந்து வாங்கும் போது, அது கை தவறி டெலிட் ஆனது.
“சிட். டெலிட் ஆயிருச்சி” என்று ருத்ரா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தென்றலை அழைத்துக் கொண்டு தங்கள் பஸ்ஸிற்கு சென்றாள்.
இருவரின் மனதிலும் ஏதோ ஒரு குழப்பம் இருந்தது. ஒருவளுக்கு அவன் யார்? என்ற குழப்பம், இன்னொருவளுக்கோ, “அவன் வந்துவிட்டானோ?” என்ற குழப்பம்.
இவர்களின் குழப்பத்தை. இவர்கள் செல்லப் போகும் அந்த இடம் தீர்த்து வைக்குமா என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம்.
சாபம் தீருமா?..
Anbu Anbu
என்னப்பா ரொம்ப பயமா இருக்கு பேய் கதையா?
Sam Novel reader
writer sis inimel naan ungala sarmi darlz nu koopudren.. intersting 😍😍cant wait for next episode
Keerthi S
super❤️❤️❤️❤️ who???
Ramya Iyer
ஸ்வரசியம் ஆக இருக்கிறது
Ayesha Shahul
interesting 😍 👌🏻👌🏻👌🏻
Deepa K
super