வாசகரின் விருப்பம்

ஹாய் ப்ரண்ட்ஸ், எல்லாரும் எபிசோடுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியும். பட் அதுக்கு முன்னாடி, உங்களோட கருத்துகள் சிலவற்றை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய சைட்டில் தற்போதுத்தான், வாசகர்கள் விருப்பப்படி சில அம்சங்களை எல்லாம் சேர்த்தோம். அதெல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இன்னுமே சில சிறப்பு அம்சங்கள் எல்லாம் வரவிருக்கிறது.

ஆனால் அது என்ன என்று தெரியும் முன்பு உங்களிடமிருந்து சில கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எனக்கு தேவையாய் இருக்கிறது.

பல எழுத்தாளர்களும், சைட்டில் எழுத ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களையும் எழுத அனுமதிக்கலாமா? இல்லை என்னுடைய கதைகள் மட்டும் இந்த சைட்டில் இருக்க வேண்டுமா?

பின் வெப்சைட்டிற்கு சில பல விளம்பர ஆதரவாளர்களாருகும், விளம்பரம் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். ஆனால் படிக்கும் போது விளம்பரங்கள் அடிக்கடி வருவது, வாசகர்களாகிய உங்களுக்கு சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.

அதற்காக சில டெஸ்டுகளை எல்லாம் சைட்டில் செய்துப் பார்த்தோம். எனக்கு பெரிதாய் விளம்பரங்கள் சேர்ப்பதில் உடன்பாடு இல்லை. அதனால், பிரதிலிபி மற்றும் பாக்கெட் நாவல் போல், காயின்கள் சேர்க்க நினைத்திருக்கிறேன். ஏனெனில் விளம்பரங்கள் சேர்ப்பது மூலமாய் எனக்கு வருமானம் வரும். ஆனால், வாசகர்களுக்கு அதிருப்தி இருக்கும்.

அதுவும் போக, சப்ஸ்கிரிப்சன் சிஸ்டம் மற்றும் காயின் சிஸ்டம், ஏற்கனவே சேர்க்க நினைத்ததுத்தான். ஆனால் அதோடு சேர்த்து விளம்பரமும் வர வேண்டுமா? இல்லை விளம்பரம் இல்லாமல், வெறும் காயின் மட்டும் சப்ஸ்கிரிப்சன் மட்டுமே வைத்து, அம்சங்களை கொண்டு வரலாமா?

எப்படியும், விளம்பரம் அல்லது, சப்ஸ்கிரிப்சன் இதில் ஒன்றை நிச்சயம் சேர்த்துத்தான் ஆக வேண்டும். வாசகர்களாகிய உங்கள் விருப்பம் என்ன? அதை கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கவும். உங்களுடைய விருப்பங்களும், எண்ணங்களும் நிச்சயம் மதிப்பளிக்கப்படும்.

அதே நேரம் ஒரு எழுத்தாளராய், எழுதுவது என்னுடைய விருப்பம் என்றாலும், சைட்டை தொடர்ந்து Run செய்வதற்கு நிச்சயம் ஒரு income Source தேவை. அதனால், அது என்ன மாதிரியாக இருந்தால், உங்களுக்கு சரியாக இருக்கும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

விளம்பரங்களை சேர்க்கலாமா? இல்லை சப்ஸ்கிரிப்சன் மற்றும் காயின் சிஸ்டமை அறிமுகப்படுத்தலாமா?

காயின் சிஸ்டம் ஆன் செய்தால், நீங்கள் இதுவரை படித்த எபிசோடுகள், லாக் ஆகிவிடுமா? என்று உங்களுக்கு பயம் இருக்கலாம். ஆனால். நீங்கள் ரிஜிஸ்டர் செய்து படித்திருந்தீர்கள் என்றால், நீங்கள் படித்த எபிசோட் லாக் ஆகாது.

நீங்கள் ரிஜிஸ்டர் செய்யாமல் படித்திருந்தால், நிச்சயம் அந்த எபிசோடுகள் லாக் செய்யப்படும். அதனால் இப்போதே ரிஜிஸ்டர் செய்துக் கொள்ளுங்க> அதன் பின் சில completed novels-m விரைவில் பதிவிடப்படவுள்ளது.

அதுவும் போக நீங்கள் நீண்ட காலமாய் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த, அந்த, ஹிஸ்டோரிக் நாவலும் புது பொலிவுடன் இங்கே தொடரப் போகிறது. சப்ஸ்கிரிப்சன் அண்ட் காயின் சிஸ்டம் சைட்டில் ஆன் ஆனவுடன், தினமும் அத்தியாயங்கள் ஒரு நாள் கூட விடாமல் பதிவு செய்யப்படும்.

ஏனெனில் உங்களுடைய காயின் மற்றும் சப்ஸ்கிரிப்சனுக்கு நிச்சயம் மதிப்பு உண்டு. அப்படி நீங்கள் சப்ஸ்கிரிப்சன் செய்தப் பின், ப்ரீமியம் ஸ்டோரிகள், தினமும் அப்டேட் ஆகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக எங்கள் டீமுக்கு கம்ப்ளைட் செய்யலாம்.

எங்களுடைய குழுக்கள், உடனே பரிசீலினை செய்து, அதற்கான தீர்வை உங்களுக்கு வழங்குவார்கள். அதனால், உங்களுடைய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும். உங்கள் கருத்துகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

Author:    1 Sarmi SS
Comments   23

*** வாசகரின் விருப்பம் - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com