ஹாய் ப்ரண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும். நானே பல மாசத்துக்கு அப்புறம் இப்பத்தான் சைட்ல ஸ்டோரி போடவே ஸ்டார்ட் பண்ணேன். இந்த சைட் build பண்றதுக்கு நான் எவ்வளவு வேலை பார்த்திருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதுலையும் ரீடர்ஸுக்கு என்ன மாதிரி site இருந்தா பிடிக்கும்னு பார்த்து பார்த்து பண்ணிருக்கேன்.
எல்லாரும் சொன்னாங்க. சும்மா ஆட் போட்டு அமெளண்ட் எடுத்துக்கோன்னு. ஆனா நான், அப்பக் கூட ரீடர்ஸுக்கு எது கம்பர்டபிள்ளா இருக்கும்னு யோசிச்சுத்தான், அடுத்தடுத்து சைட்ல எல்லாம் டெவலப் பண்ணிட்டு இருக்கேன். அப்படி இருக்கிறப்ப, என் சைட்ட, அப்படியே காப்பி அடிச்சு சில பேர் site பண்ணிட்டு இருக்காங்க.
அவங்க எல்லாருக்கும் தெளிவா நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். என்னோட சைட்ட, நான் லோக்கல் டெவலபர்ஸ்கிட்ட கொடுத்து, பண்ணல. லைசன்ஸ் வாங்குன பெரிய கம்பெனி மூலமா கிரீயேட் பண்ணிருக்கேன். கிரீயேட் பண்றப்பையே, அதோட மாடல் ஸ்ட்ரக்சர் லே-அவுட் எல்லாத்துக்கும் copyright license வாங்கி வெச்சிருக்கேன்.
நீங்க என் சைட் மாதிரி பண்றேன்னு, என்னோட சைட் கண்டன்டையும் சேர்த்து எடுத்து யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க. இது எவ்ளோ பெரிய crimeன்னு உங்களுக்கு தெரியாது அப்படின்னா, உங்க developers கிட்ட போயி கேளுங்க. எந்தெந்த domain எல்லாம் என்னோட பர்மிஷன் இல்லாம, பண்ணிருக்கீங்களோ? அவங்க எல்லாருக்கும் லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும்.
இதுக்கப்புறம் யாராச்சும் என் site layout, model & content copy பண்ணீங்கன்னா, அவங்களுக்கு லீகல்லா என் lawyer கிட்ட இருந்து லெட்டர் வரும். ஈவன் உங்க ஹோஸ்டிங் domain லையும் complaint register பண்ணுவேன். நானும் சரி போனா போகுது, ஜஸ்ட் மாடல் தான் காப்பி பண்றீங்கன்னு பார்த்தா, இப்போ உங்க சேம்பிள்க்கே, என்னோட ஸ்டோரி கண்டண்ட காப்பி பண்ணியிருக்கீங்க.
இன்னும் ஒன் வீக்ல அது எல்லாத்தையும் நீங்களே delete பண்ணலன்னா, கண்டிப்பா அடுத்த step லீகல் ஆக்சன் தான் எடுப்பேன். அன்னேரம் வந்து என்கிட்ட கெஞ்சாதீங்க. தெரியாம பண்ணாத்தான் தப்பு. தெரிஞ்சே உங்க இஷ்டத்துக்கு பண்ணீங்கன்னா, அதுக்கு பேரு Crime.
ரீடர்ஸ், இதுல எனக்கு உங்க சப்போர்ட்-ம் வேணும். நீங்க அந்த மாதிரி site பார்த்தீங்கன்னா, அதோட லிங்க் எனக்கு இன்ஸ்டால ஷேர் பண்ணுங்க. மீதிய எங்க லீகல் டீம் பார்த்துப்பாங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடுறாங்களா? எப்படித்தான் அடுத்தவங்க யோசிச்சு யோசிச்சு பண்ணத, அப்படியே காப்பி பண்ண முடியுதுன்னு தெரியல.
ஆல்ரெடி எங்க சைட் டெவலப்பிங் கம்பெனிக்கிட்டையும் பேசிட்டேன். அவங்களும், லீகல் ஆக்சன் எடுக்க ரெடியா இருக்காங்க. மாடல்ல காப்பி பண்ணாக் கூட மன்னிக்கலாம். டிட்டோ எல்லாத்தையும் காப்பி பண்ணி வெச்சிருக்கீங்க. மனசாட்சியே உங்களுக்கு இல்லையா? வாட்டெவர், இத என்னோட லாஸ்ட் வார்னிங்கா எடுத்துட்டு உடனே டெலிட் பண்ற வழிய பாருங்க.
இல்லன்னா, லீகல்லி மீட் பண்ணலாம். என்கிட்ட எல்லா ப்ரூப் அண்ட் எவிடென்ஸ் இருக்கு. உங்க சைட் இருக்கனுமா? இல்ல வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
Warning illa da idhu — notice.” 💼
0 Comments
No comments yet.