ராகவ் அனுப்பியிருந்த மெசேஜ்ஜைப் பார்த்தப்படி, வந்த ஜான்வி தெரியாமல், தீரஜின் மீது மோதியிருந்தாள். அதில் அவன் கையில் இருந்த மொபைல், தவறி விழப் போக, அதற்குள் ஜான்வி, “சாரி சார்” என்றப்படி நிமிர்ந்தாள்.
அதற்குள்ளாக, அவள் கரத்தில் இருந்த மொபைலை வெடுக்கென்று பிடுங்கி தரையில் ஓங்கி அடித்தான். அதை சற்றும் எதிர்பார்க்காதவள், மிரண்டு அவனைப் பார்க்க, அவனோ இன்னும் கோவமாய், “ஹவ் டேர் யூ டூ டச் மீ?” என்று அடிக்கவே கை ஓங்கியிருந்தான்.
அதற்குள் வேகமாய் ஓடி வந்த ஜித்தேஷ், “தீரஜ்” என்று அவனைத் தடுத்துப் பிடித்தான். அதில் இப்போது படக்கென்று அவனிடம் இருந்து விலகி, அவன் கன்னத்தில் அடித்திருந்தான்.
ஏற்கனவே அவனின் செயலில் மிரண்டு நின்றிருந்தவள், இப்போது, அந்த அடி சத்தத்தில், உணர்வுக்கு வந்தாள்.
“ப்ராபரா எதுவுமே பண்ண தெரியாதுன்னு, அப்புறம் எதுக்குடா செய்ற?” என்று மீண்டும் அடிக்க கரத்தை ஓங்க சென்றான். இப்போது சட்டென்று அவன் கரத்தை தடுத்துப் பிடித்திருந்தாள் ஜான்வி.
அதில் ஜித்தேஷே அதிர்ந்து, ஜான்வியைப் பார்க்க, தீரஜோ அப்போதுத்தான் அவளைப் பார்த்தான். சட்டென்று அவளை இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு எட்டிப் பார்க்க, புருவத்தை சுருக்கினான்.
ஆனால் அடுத்த நொடியே, அவள் தன்னை தடுத்துப் பிடித்திருப்பது புரிய, அவனுடைய கோவம் கடகடவென்று கூடியது.
அவன் உடல் இறுகிக் கொண்டிருப்பதை உணர்ந்த ஜித்தேஷோ, ஏதோ பேச வாய் திறக்க, அதற்குள்ளாக, “தப்பு என் மேலதான். அவர அடிக்காதீங்க. ஐயம் சாரி” என்று கெஞ்சலாய் கூறினாள்.
அப்போதே அவனுக்கு, “அவங்க மேல தப்பு இல்ல. நான் தான் தெரியாம சடன் பிரேக் அடிச்சிட்டேன்” என்று இதற்கு முன் ரோட்டில் வைத்து சொல்லிய நிகழ்வு எட்டிப் பார்த்தது.
இப்போது அவள் கரத்தை உதறித் தள்ளியவன், இப்போது, இன்னும் கோவமாய் அவளை நெருங்கப் போக, அதற்குள் இடையில் வந்த ஜித்தேஷ் தான், “ப்ளைட்க்கு டைம் ஆச்சு தீரஜ். அதுவும் போக, நீ இங்க இருக்கிறத பார்த்தா, மீடியா, பப்ளிக் எல்லாம் வந்துடுவாங்க” என்றான்.
அதில் இப்போது அவர்கள் இருவரையும் பார்த்தவன், “யூ சுட் பே பார் திஸ்” என்று அழுத்தி சொல்லிவிட்டு, கையில் இருந்த கருப்பு jacket-ஐ அணிந்தப்படி, அங்கிருந்து சென்றான்.
அவன் சென்ற பின் தான் ஜான்விக்கெல்லாம் மூச்சே வந்தது. இப்போது அவனோ, “சாரி சிஸ். உங்களோட மொபைல்” என்று அவன் அதை எடுக்க, டிஸ்பிளே உடைந்திருந்தது.
“அச்சோ டிஸ்ப்ளே போயிருச்சின்னு நினைக்கிறேன். இதுக்கான பேமெண்ட் நான்” என்று ஜித்தேஷ் சொல்லும் முன்னே, “அச்சோ அதெல்லாம் வேண்டாம்ங்க. என்னாலத்தான் வீணா, அவர் உங்கள அடிச்சிட்டாரு. ரியலி சாரி” என்றாள்.
அதில் இப்போது ஜித்தேஷ் அவளைப் பார்த்தான். சட்டென்று மான்யா நினைவுக்கு வந்தாள்.
“பொண்ணுன்னா இப்படி இருக்கனும். அங்கேயும் தான் இருக்கே. சரியான இராட்சசி” என்று தனக்குள் முனுமுனுத்தான்.
அதற்குள், “ஜித்தேஷ்” என்ற தீரஜின் குரல் கேட்க, “பாத்து போங்க. நான் வரேன்” என்றப்படி வேகமாய் அவனின் பின்னே ஓடினான்.
இங்கே கையில் இருந்த மொபைலைப் பார்த்தவளுக்கோ, மொபைல் இல்லாமல் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியே அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
அதற்குள், அவளுடைய பிளைட்க்கான அறிவிப்பு வந்திருக்க, இப்போது வேறு வழியின்றி, பிளைட்டில் சென்று அமர்ந்தாள்.
“மொபைல் இல்லாம, என்ன பண்ணப் போற?” என்று மனம் கேள்வி கேட்க, “இல்ல, அங்க சரி பண்ணிக்கலாம்” என்று தனக்குத் தானே பதில் சொல்லிக் கொண்டாள்.
அதே நேரம், அதே பிளைட்டில் பிஸ்னஸ் கிளாஸில் அமர்ந்திருந்த தீரஜோ, ஜித்தேஷை அந்த திட்டு திட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் ஜித்தேஷோ, “டேய் போதும்டா. நான் ஒன்னும் உன்னோட பிஏலாம் கிடையாது. நானும் அந்த கம்பெனியில ஒன் ஆப் தி பார்ட்னர் தான். அத ஞாபகத்துல வெச்சிக்கோ” என்றான்.
“அப்போ நீ ஜஸ்ட் பார்ட்னரா மட்டும் நடந்துக்கனும். எதுக்கு தேவையில்லாம எனக்கு கார்டீயன் வேல பாக்குற” என்று கோவமாய் கேட்டான்.
“சரி. சரி தெரியாம சொல்லிட்டேன். இந்த டைம்ல, யாரும் பெருசா இருக்க மாட்டாங்கன்னு நினைச்சிதான். கொஞ்சம் கேர்லெஸா இருந்துட்டேன். ஆனாலும் அந்த பொண்னு பாவம்” என்று ஏதோ சொல்ல வந்தான்.
“ஜஸ்ட் ஸ்டாப்பிட். இந்த தீரஜ்ஜ தொட்டா என்ன நடக்கும்னு காமிக்கிறேன்” என்று கோவமாய் அவன் சொல்ல, “டேய், டேய், அந்த பொண்ணு ஒரு புள்ள பூச்சிடா” என்று பதறியடித்து கூறினான்.
அதில் இப்போது தீரஜோ, ஜித்தேஷைப் பார்த்து, “ரொம்ப இரக்கப்படுறீயே என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“டேய், டேய் நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்லடா. அந்தப் பொண்ன பார்த்தாலே தெரியலையா? ஏதோ பயத்துல உன் கைய பிடிச்சிட்டா. உன் ரேஞ்க்கு, அந்த பொண்ண எல்லாம், லிஸ்ட்ல எடுத்துக்கனுமா என்ன?” என்று கேட்டான்.
அதில் இப்போது அவனுமே, “யுவார் கரெக்ட். பட், இன்னொரு டைம் அவ என் முன்னாடி வந்தான்னா அவ்வளவுத்தான்” என்று கோவமாய் கூறினான்.
“மறுபடியும் உன் முன்னாடி வர்றதுக்கு அவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று இவன் முனுமுனுக்க, “என்ன?” என்று உறுமினான் தீரஜ்.
“இல்லடா. அவ வராம நான் பாத்துக்கிறேன்னு சொன்னேன்” என்று அவனிடம் சமாளித்தவன், இப்போது மனதினுள், “ஐயோ கடவுளே, இந்த அரக்கன் கண்ணுல, படாம நீதான் அந்த பொண்ண காப்பாத்தனும்” என்று வேண்டிக் கொண்டான்.
அதன் பின் ஜித்தேஷிட வேறு சில விஷயங்களை எல்லாம் பேசியவன், “இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படி நின்னுட்டே இருக்கப் போற. போ. போயி உக்காரு” என்று சற்று தள்ளி பின்னே இருந்த சீட்டை கை காட்டினான்.
“இப்பவாச்சும் இவனுக்கு உக்கார சொல்ல மனசு வந்திச்சே. ச்சை, இதெல்லாம் உனக்கு தேவையா ஜித்தேஷ். நீ எங்க, எப்படி இருக்க வேண்டிய ஆளு” என்று புலம்பியப்படி அவனுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.
இங்கே சீட்டில் சாய்ந்து கண்ணை மூடியவனுக்கோ, மீண்டும், அவளின் முகம் தான் நினைவில் வந்து நின்றது. அவள் கெஞ்சலாய் கேட்கும் போது, அவள் கண்களோடு சேர்ந்து, அவள் காதில் அணிந்திருந்த கம்மலும் கதை பேசியிருக்க, இப்போது சட்டென்று கண்ணைத் திறந்தான்.
“ஸ்டுபிட் கேர்ள். அவென்ன அடிச்சத பாத்தும், எவ்ளோ தைரியம் இருந்தா என் கைய மறுபடியும் பிடிச்சிருப்பா?” என்றவனின் கண்களில் எரிமலை வெடித்தது.
அதே நேரம் அங்கே அவளுக்கோ, “ஒருத்தவங்களுக்கு, இப்படியா கோவம் வரும்?” என்று அன்னிட்சையாய் தன் கன்னத்தில் கரத்தை வைத்தாள்.
அப்போதே ஏதோ நினைவு வந்தது போல், “அச்சச்சோ, அந்த டிக்கெட்ட அவங்கதான கொடுத்தாங்க. அத கொடுக்க மறந்துட்டேன்னே” என்றாள்.
“க்கும், அவரோட பாஸ பாத்தல்ல. இன்னேரம் அந்த டிக்கெட்ட காட்டி, அதுக்கும் அவரு, அவர அடிச்சா என்ன பண்ணுவ” என்று மனசாட்சி கேட்க, “இனிமே அவங்க பக்கமே நம்ம போக கூடாது” என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் விதி வலியது அல்லவே. பிளைட், அடுத்த சில பல மணி நேரங்களில் தரையிறங்கியது. காலைப் பொழுதாகியிருக்க, அங்கே சில ரசிகர்கள், அவனுக்கான வரவேற்பு பலகையோடு நின்றிருந்தனர். வழக்கம் போல் எதையும், யாரையும் கண்டுக்கொள்ளாமல். அவன் காரை நோக்கி நடந்தான்.
ஜித்தேஷ் தான், “ட்ராவல் பண்ணதுல. அவர் கொஞ்சம் டயர்டா இருக்காரு. அதான். அவர வெல்கம் பண்ண வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று அந்த பொக்கேவை எல்லாம் வாங்கிக் கொண்டு காருக்கு சென்றான்.
இங்கே, ஜான்வியோ, ஏர்போர்டில் இருந்து வெளியில் வந்தவுடனே, மீண்டும் மொபைலைத்தான் எடுத்துப் பார்த்தாள். “இப்போ எப்படி, காண்டக்ட் பண்றது?” என்று புரியாது விழித்துக் கொண்டிருக்க, அவளைக் கடந்து, தீரஜுடைய கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
கொஞ்சம் விட்டால், அவளையே அடித்து தூக்க சொல்லியிருப்பான். அதில் திடுக்கிட்டு நெஞ்சில் அவள் கை வைக்க, “ஹலோ, நீங்கதான ஜான்வி?” என்று கேட்டப்படி அங்கு வந்தாள் ஷைனிகா.
“ஆமா நீங்க?” என்று ஜான்வி கேட்க, “நானும் உங்கள மாதிரித்தான்” என்று சொல்ல, இவளோ புரியாது என்ன என்று பார்த்தாள்.
“இல்ல, நீங்க போற அதே அட்ரஸுக்குத்தான் நானும் போறேன். உங்க நம்பருக்கு கால் பண்ணேன். லைன் கிடைக்கல” என்றாள்.
அப்போதே ராகவ். அவளை அழைத்து செல்ல ஆள் வருவார்கள் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
“இல்ல என் மொபைல்” என்றவள் அதை காமிக்க, “அச்சச்சோ! என்னாச்சு? கீழ போட்டுட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்” என்று அவள் சொல்ல, “சரி விடுங்க. சரி பண்ணிக்கலாம். வாங்க” என்று அவள் அழைக்க, இவளும் அவளுடன் கிளம்பினாள்.
செல்லும் வழி எங்கிலும் அடுத்தடுத்து பல பேனர்களாய் வைக்கப்பட்டிருக்க, “அப்படி இங்க என்ன பங்சன் நடக்கப் போகுது?” என்றாள்.
அப்போதே காதில் இருந்த ஏர்பட்ஸை கழட்டியவள், “என்ன ஜானு?” என்று கேட்க, “இல்ல இங்க என்ன ஈவண்ட்னு கேட்டேன்” என்று கேட்டாள்.
அதில் அவளோ, “அது கூட தெரியாமத்தான் கிளம்பி வந்தீங்களா? பை தி வே நீங்க என்ன டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்றீங்க?” என்று கேட்டாள்.
“நான் கிராபிக்ஸ் டிசைனர்” என்று சொல்ல, “டிசைனரா?” என்றவளுடைய புருவங்கள் கேள்வியாய் அவளைப் பார்த்தது. ஏனெனில், இது கம்பெனி சார்பாக நடக்க கூடிய மீட்டிங். இங்கே பிஏவையோ, அல்லது எம் டி லெவலில் இருப்பவர்களையோதான் அனுப்பி வைப்பார்கள். அப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல், கிராபிக்ஸ் டிசைனரை, எதற்கு அனுப்பி வைத்தார்கள்? என்ற கேள்வித்தான் அவளுக்குள் ஓடியது.
அதற்குள் ஜான்வியோ, “என்னாச்சு?” என்று சிறு தயக்கத்துடன் கேட்க, “ம் நத்திங். இங்க நியூவா ஒரு ஸ்போர்ட் கிளப் ஓபன் பண்ணப் போறாங்க. சோ அதுக்கான ஒபனிங் ஜெர்மனிதான்” என்று விளக்கம் கொடுத்தாள்.
“ஆமா நீங்களும், அங்கதான் வொர்க் பண்றீங்களா?” என்று ஜான்வி கேட்க, அதில் சிரித்தவள், “ஆமா. அங்கத்தான் வொர்க் பண்றேன்” என்றாள். சொல்லும் போதே அவளுடைய மொபைலுக்கு, நரேந்திர வர்மனிடம் இருந்து அழைப்பு வந்தது.
உடனே அட்டண்ட் செய்து, “ஆன் தி வே டேட். நான் என்ன சின்ன பிள்ளையா? இப்படி அர மணி நேரத்துக்கு ஒரு தடவ கால் பண்ணிட்டு இருக்கீங்க” என்று சினுங்கலாய் கூறினாள்.
“உன்னை பிக் பன்ண தனியா கார் அனுப்புறேன்னு சொல்லிருந்தேன்தான. நீ எதுக்கு கேப் பிடிச்சு வரேன்னு சொல்லிருக்க” என்று கோவப்பட்டார் அவர்.
“இதுவும் கார் தான் டேட்” என்று சொல்லியவள் வேறு யாரும் இல்லை. சாட்சாத் தீரஜ் வர்மனின் கடைசி தங்கை, கைனிகா வர்மன் தான்.
(வெளங்கிச்சு. ஏம்மா ஜான்வி? அந்த குடும்பத்துக்கிட்டையே போயி சிக்குறீயே. உனக்கும், அந்த குடும்பத்துக்கும் அப்படி என்ன விட்ட கொற, தொட்ட கொற இருக்கோ தெரியல. சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெணட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமா…
Keerthi S
jaanu unnaku 7 1/2 sani start aachi unna yaaralum ini kaapatha mudiyathu… nalla sikkita
Ramya Iyer
ayyo pavam appa ponnu pulla kitta maati enna sikki tavikka pora teriyala all the best ma samalika
Deepa K
rightu janvi nalla sikkitta poolayae
Sam Novel reader
Analum darlz neengha ovvaruvarukkum supeerahh intro kudukuringha pa