முத்தமழை – 7

“இப்படி திடீர்னு வந்து, ஒரு வாரம் எங்கேயோ போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? உன்னால எப்படி அங்க தனியா சமாளிக்க முடியும்? அதெல்லாம் வேண்டாம்” என்று கூறினார் சாரதா.

“இப்படி சொல்லி சொல்லிதான்மா, அவெள்ள இப்படி ஆக்கி வெச்சிருக்கீங்க” என்று சொல்லியப்படி அங்கு வந்தமர்ந்தாள் தியா.

“இந்த விஷயத்துல நீயோ, உன் அப்பாவோ தலையிடாதீங்க. நான் என் பொண்னுக்கிட்ட பேசிட்டு இருக்கேன். அவ ஒருத்திதான், இந்த வீட்டுல என் பேச்ச கேப்பா. அவளையும் இப்ப உங்க கூட சேர்க்க பாக்குறீங்களா?” என்று கோவமாய் கேட்டார்.

அவரின் கோவத்தில், இப்போது ஜான்வியோ, “ஆபிஸ் மீட்ம்மா. அதான். ராகவ் கூட அங்கத்தான் இருப்பான்” என்றாள்.

இப்போது தியாவோ, “அப்போ இந்த வேலைய அவன் தான் உனக்கு கொடுத்திருக்கான். அப்படித்தான?” என்று சலிப்பாய் கேட்டப்படி இட்லியை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“ராகவ் தம்பியா. அப்போ சரி. ஆனா கவனமா இருக்கனும்” என்று சாரதா சொல்ல, தியாவோ, “அவள் கெடுக்கிறதே இந்த அம்மாதான்” என்று தனக்குள் முனுமுனுத்தாள்.

பின், அவள் அப்பாவிடம், “ஏம்பா, அந்த ராகவ் சரியான ரெட் பிளாக். அம்மாக்கு எப்படித்தான் அவென்ன பிடிச்சிச்சோ. அவனுக்கும், நம்ம ஜானுக்கும்லாம் செட்டாகுப்பா” என்று கூறினாள்.

எப்படியும் அவள் அம்மா, கேட்கமாட்டார் என்று தெரியும். அதனால் தான் தன் மனதில் இருப்பதை தன் தந்தையிடம் கூறினாள்.

“நம்ம ஜானுக்கும் அவென்ன பிடிச்சிருக்குல தியா. அதெல்லாம் அவ சமாளிச்சிப்பா” என்றவர் அப்போதும், தன்னுடைய மொபைலில் வேலையில் தான் இருந்தார்.

அவருக்கு பிஸ்னஸ் தான் எப்போதுமே முதலிடம். அதற்கு பின்னால் தான் குடும்பம் எல்லாம். அதற்காக குடும்பத்தின் மீது பாசம் இல்லையா? என்று கேட்டால், அப்படியும் கிடையாது. அவருக்கு குடும்பத்தை பிடிக்கும் தான். குடும்பத்துக்காக, ஓட ஆரம்பித்தவர் தான். ஆனால், பிஸ்னஸில் மேலே மேலே செல்ல வேண்டும் என்று, குடும்பத்தையே இப்போதெல்லாம் சற்று பின்னுக்கு தள்ளி வைக்க ஆரம்பித்திருந்தார்.

“அவெளுக்கு பிடிச்சிருக்குன்னு உங்ககிட்ட சொன்னாளா?” என்ற தியாவுக்குமே, அவளுடைய கிளைண்டிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, அவள் பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொண்டாள்.

இதன் பின், ஜான்வியை பற்றி அவள் யோசிக்க, அவளுக்கு நேரம் இருக்காது. அந்த வீட்டில் அத்தனைப் பேரைப் பற்றியும் யோசிக்கும் இரண்டு ஜீவன்கள், ஒரு ஜான்வி. மற்றொன்று சாரதா மட்டும் தான்.

சாரதாவாவது, தன் கோவத்தை, ஆதங்கமாக கொட்டுவார். ஆனால் நம் நாயகி ஜானகிக்கோ, அடுத்தவர் மீது தெரியாமல் கூட கோவத்தை காண்பிக்க தெரியாது.

ஒரு வழியாய் வீட்டில் சொல்லிவிட்டாள். ஆனால், அவளுக்கே இப்போது அங்கு செல்ல பெரிதாய் விருப்பம் இல்லைத்தான்.

இப்போது, ஜெபாவுக்கு மட்டும் ஒரு வாரம் ஆபிஸ் வர மாட்டேன் என்ற தகவலை அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்ததும், “ச். இந்த ராகவ் தான் அவனோட வேலையையும் சேர்த்து அவ தலையில கட்டுறான்னா, இவளும், அவன் சொல்றதுக்குலாம் தலைய தலைய ஆட்டிட்டு இருகக. இவள்ள, அவென்கிட்ட இருந்து எவன் தான் காப்பாத்த போறான்னோ?” என்று சொல்லியப்படி அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அதே நேரம், அங்கே அவனோ, “இப்படி தலைய தலைய ஆட்டிட்டு இருக்காம? மொத எதுக்கு வந்தீயோ அந்த விஷயத்த மட்டும் சொல்லு” என்று வார்த்தையை கடித்து துப்பினான்.

“இல்ல தீரஜ். நம்ம கம்பெனியோட ப்ராண்ட் அம்பாஸிடர் நீ தான். சோ, நீயும் அவங்கள மீட் பண்ன வேண்டியது அவசியம். அதுக்குத்தான் சொல்றேன்” என்று கூறினான் ஜித்தேஷ்.

அவனின் பேச்சில், இப்போது அவனை மேலிருந்து கீழாய் பார்த்தவன், “லாஸ்ட் டைம், அந்த கைய தான உடைச்சேன்?” என்று கேள்வியாய் அவன் கேட்க, அதில் சட்டென்று தன் இரு கரத்தையும் வேகமாய் மறைத்துக் கொண்டான்.

“என்ன? மத்தவங்கள அனுப்புனா, அடிச்சு அனுப்புறேன்னு, உன்னைய அனுப்பி வெச்சிருக்காரா? மொத்தமா, உன் வீட்டுக்கு பெட்டியில அனுப்பிடுவேன்” என்று சொல்லியவன் அங்கிருந்து அவனறைக்கு சென்றிருந்தான்.

“ச்ச, மனுஷனா இவன்? இத்தன பேரு கெஞ்சுறோமே, கொஞ்சமாச்சும் கரையிறானா பாரு. இவென்ன கரைக்கிறதுக்கு, கடவுளே ஒரு வழிய காட்டு” என்று வேண்டிக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

அடுத்தவர்களுக்காக, யோசிப்பது அல்ல. அடுத்தவர்களை நினைப்பது கூட அவனுக்கு பிடிக்காது. இப்போது நேரே ஜிம் அறைக்கு சென்றவன் ட்ரெட்மில்லில் ஓட ஆரம்பிக்க, இப்போது அவனுடைய, ஸ்மார்ட் வாட்ச் கத்தியது.

அதில் புருவத்தை சுருக்கி, அட்டண்ட் செய்து, “சொல்லு” என்று கூறினான். அந்தப் பக்கம் சொன்ன தகவலை கேட்டு, “நியூஸ் உண்மதானா?” என்று கேட்டான்.

மீண்டும் அவன் என்ன சொன்னானோ? “கன்பார்ம் பண்ணியாச்சா?” என்று கேட்டான்.

இப்போது அவன் சொல்லியதைக் கேட்டவனுடைய கோவம் கடகடவென்று கூடியது. “என்ன ட்ரேஸ் பண்றதுக்கு அவங்க யாரு? என்னை யாரு எடுக்கனும்னு நான் தான் டிசைட் பண்ணுவேன். எப்போ, அந்த ஆக்சன் ஸ்டார்ட் ஆகுது?” என்று கேட்டான்.

மறுமுனையில் இருந்தவன் அந்த தகவலை சொல்ல, இப்போது, சட்டென்று ட்ரெட்மில்லில் இருந்து குதித்தவன், “இந்த நியூஸ் எங்கேயும் லீக் ஆக கூடாது” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பின், “ஜித்தேஷ்” என்று அவன் கத்தி அழைக்க, அங்கே அவனின் அப்பா நரேந்திரரோ, “அவன் வந்தாகனும், அதுக்கு நீ என்ன வேனும்னாலும் பண்ணு. இல்லன்னா, இந்த மாசம் உனக்கு சம்பளம் கிடையாது” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதனால் மீண்டும் ஒரு தீரஜிடம் பேசலாம் என்று நினைத்து வந்தவனின் செவியில் அவன் அழைப்பது கேட்க, வேகமாய் அங்கு சென்று, “சொல்லு தீரஜ்” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“என்ன? உன் ஒன் மந்த் சேலரி கட்டாயிருச்சி போல” என்று நக்கலாய் தீரஜ் கேட்க, “உனக்கு என் நெலம கிண்டலா போச்சில்ல. உனக்கு ப்ரண்டா இருக்கிறதுக்கும், உன் அப்பா கம்பெனியில பார்ட்னரா இருக்கிறதுக்குமே, நீங்க ரெண்டு பேரும் எனக்கு கோடி கோடியா கொடுக்கனும். ஆனா ரெண்டு பேரும், போட்டி போட்டு என் சம்பளத்த குறச்சிட்டு இருக்கீங்க” என்று கூறினான்.

“கவலப்படாத. உன்னோட மூனு மந்த சேலரிய, உனக்கு ஒரே வாரத்துக்கு தர்றேன்” என்று தீரஜ் சொல்ல, அதில் சந்தோஷப்பட்டவன், “நிஜமாவா சொல்ற?” என்று கேட்டான்.

“அப்கோர்ஸ், இந்த தீரஜுக்கு பொய் சொல்லி பழக்கம் கிடையாது” என்று நக்கலாய் அவன் சொல்ல, “அப்போ, கண்டிப்பா என்கிட்ட பெருசா ஏதோ செய்ய சொல்லப் போற” என்று சிறு பதட்டத்துடன் கேட்டான்.

அதைப் பார்த்து இன்னும் நக்கலாய் சிரித்தவன், “இதனாலத்தான் நீ என் ப்ரண்டா இருக்க” என்று அவன் தோளில் கைப் போட்டு அழைத்தப்படி, அங்கிருந்த அலுவலக அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றவன், அவனிடம் சொல்லியதைக் கேட்டு, “என்னடா சொல்ற? இதுல சின்னதா ஒரு மிஸ்டேக் வந்தா கூட, உன்னால இந்தியா டீம்ல இருக்க முடியாது” என்றான்.

“ச். நான் இருக்கனுமா? வேண்டாமான்னு முடிவு பண்ண வேண்டியது நானு. சோ, நீ அத பத்தி யோசிக்காத. நான் சொன்னத செய். இத நீ செரியா செய்வன்னா, நான் உன் பாஸ் சொன்ன, அந்த டீல்க்கு ஒகே சொல்றேன்” என்றான்.

சொந்த அப்பாவிடமே டீல் பேசிக் கொண்டிருப்பவனை அவனும் என்ன செய்ய, “சரி” என்று தலையாட்டி வைத்தான்.

இதற்கிடையில், ஜான்வியின் தம்பி அவினாஷோ, “ஐயோ அக்கா, இந்த டிக்கெட் உனக்கு எப்படிக்கா கிடைச்சிச்சு?” என்று ஆச்சர்யமாய் கேட்டான்.

அப்போதே அவளுக்கு அந்த டிக்கெட் பத்திய விஷயமே நினைவுக்கு வந்தது. அவள் அதில் என்ன இருந்தது கூட பாத்திருக்கவில்லை.

“அப்படி என்ன டிக்கெட்?” என்று அவள் கேட்க, “என்ன டிக்கெட்டா? ஐபிஎல்லோட செமிபைனல் டிக்கெட்க்கா. இன்னும் ஆன்லைன்ல கூட வரல. அதுக்குள்ள உனக்கு எப்படி கிடைச்சிச்சு? அதுவும் விஜபி பாஸ்” என்று கேட்டான்.

அப்போதே அதை வாங்கி பார்த்தாள். “அவர் யாருன்னு வேற தெரியல. இத எப்படி திருப்பி கொடுக்கிறது?” என்று கேட்க, “என்ன திருப்பி கொடுக்கப் போறீயா? லூசாக்கா நீ. இதோட வேல்யூ தெரியாம பேசிட்டு இருக்க” என்றான்.

அவளுக்கோ இந்த சினிமா, ஸ்போர்ட்ஸ் இதில் எல்லாம் சின்ன ஆர்வம் கூட கிடையாது. அப்படி இருக்க, உண்மையிலையே அவளுக்கு அந்த டிக்கெட்டைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதற்குள், “டேய், படிக்க வறீயா? இல்லையா?” என்று தியா அழைக்க, அவனும் அங்கிருந்து சென்றிருந்தான்.

இப்போது அந்த டிக்கெட்டை எடுத்து பேக்கில் வைத்தவள், “அகைன் மீட் பண்ணா, இத திருப்பி கொடுத்திடனும். யாருக்காக வாங்குன டிக்கெட்டோ?” என்று தனக்குள்ளே யோசித்தாள்.

அங்கே உண்மையில், அந்த டிக்கெட் சென்று சேர வேண்டியவளோ, ஜித்தேஷின் கழுத்தை நெறிக்காத குறையாய் கத்திக் கொண்டிருந்தாள்.

“அடப்பாவி, இந்த லூசுக்குன்னு வாங்குனதையா, அந்தப் பொண்ணுக்கு கொடுத்த” என்று மனதிற்குள் ஜித்தேஷ், தீரஜை திட்டிக் கொண்டிருந்தான்.

“ஜித்தேஷ். உன்கிட்டதான பேசிட்டு இருக்கேன்” என்று மான்யா கத்த, அப்போதே யோசனைக் கலைந்தவன், “யூ டோண்ட் வொரி மேடம். உங்களுக்கு ரெண்டு என்ன? நாலு டிக்கெட் நான் அரேஞ் பண்ணிக் கொடுக்கிறேன். எனக்கு ஒரு ஆப் அண்ட் ஹவர் மட்டும் டைம் கொடுங்க” என்று அவளிடம் கெஞ்சினான்.

“கெட்லாஸ்ட்” என்று அவள் கோவமாய் கத்த, இவன் நெஞ்சில் கையை வைத்தப்படி அங்கிருந்து தன்னுடைய காருக்கு வந்தான்.

“ச்சீ. குடும்பமாடா இது. ஒருத்தன் என்னென்னா, பேச போனாலே கைய உடைக்கிறான். இன்னொருத்தர் என்னென்னா, பேச போகலன்னா, சம்பளத்த கட் பண்றாரு. இவ என்னென்னா, என்ன நடந்திச்சுன்னு சொல்ல கூட விடாம இந்த கத்து கத்துறா. ஆனாலும் தீரஜ். யாரு உனக்கு கொடுத்த சாபமோ, இந்த லூச உன் தலையில கட்ட அத்தன பேரும் பிளான் பண்னிட்டு இருக்கானுங்க. இந்த பிசாசுக்கிட்ட இருந்து, உன்ன, அந்த கடவுள் தான் காப்பாத்தனும்” என்று சொல்லிக் கொண்டான் ஜித்தேஷ்.

அடுத்த நாள் காலையில், ஜான்வி கிளம்பி ஏற்போர்டுக்கு வந்திருந்தாள். தனியே செல்வது எல்லாம் அவள் அகராதியிலேயே கிடையாது. பயமா? என்று கேட்டால் அதுவும் கிடையாது. ஆனால் அவள் அப்படி சென்றதில்லை.

இப்போது கூட, அவள் பத்திரமாக வந்துவிட்டாளா? என்று கைலாஷும், ஜெபாவும்தான் கால் செய்து கேட்டனர்.

அவளை இங்கே தனியே அனுப்பி வைத்த ராகவோ, அவளுக்கு ஒரு கால் கூட செய்திருக்கவில்லை. அவனும் உடன் வருவதாக சொன்னதால் தான் கிளம்பினாள்.

இப்போது அவனோ வெகு சாதாரணமாய், “நீ முன்னாடி போ. என்னோட வொர்க் முடிஞ்சதும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். நீ அங்க மீட் பண்ண வேண்டியவங்களோட கார்ட்” என்று அதை வாட்சப்பில் அனுப்பி விட்டு, உறங்கியிருந்தான்.

அதைப் பார்த்த ஜான்விக்கோ, இப்போது சிறு பதட்டம். இருந்தும், அவனிடம் மறுக்கவோ, இல்லை நீயும் வந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவோ அவளுக்கு தெரியாது.

அதனாலையே, தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு, ஏர்போர்டுக்குள் நுழைந்தாள். விடியகாலை என்பதால், அங்கு பெரிதாய் கூட்டம் எதுவும் இல்லை.

இருந்தும் தன்னுடைய போர்டிங் பாஸைப் பார்த்தப்படி அவள் நடக்க, இப்போது எதிரில் வந்துக் கொண்டிருந்தவனை கவனிக்காது, அவனின் மீதே சென்று மோதினாள்.

இவள் சட்டென்று மோதவும், அவன் கரத்தில் இருந்த மொபைல் தவறி விழப் போக, அதை இறுக்கிப் பிடித்தான்.

இவளோ, “சாரி சார்” என்று சொல்லியப்படி நிமிர, அதற்குள், அவள் கரத்தில் இருந்த மொபைலை வெடுக்கென்று பிடுங்கி தரையில் தூர வீசியிருந்தான் தீரஜ் வர்மன்.

(ஸப்பா. இம்புட்டு கோவம்லாம் ஆகாது. இப்போ அந்த புள்ள போன் இல்லாம என்னப் பண்ணும்? சரி அடுத்து என்னாகப் போது? இந்த சந்திப்பு இதோட முடியுமா? இல்ல கண்ட்னீயூ ஆகுமான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெணட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா…

Author:    1 Sarmi SS
Comments   6

*** முத்தமழை – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com