⚠️ காப்புரிமை எச்சரிக்கை
என்னுடைய இந்தக் கதை மற்றும் இதில் இடம்பெறும் அனைத்து அத்தியாயங்கள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி முழுமையாக பாதுகாக்கப்பட்டவை.
இந்தக் கதையை முழுமையாகவோ, பகுதியாகவோ நகலெடுக்கவும், காப்பி செய்யவும், மறுபதிப்பு செய்யவும், மாற்றி வெளியிடவும் அல்லது எந்த வடிவிலும் அனுமதியின்றி பயன்படுத்தவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறுபவர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்திரை வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தணிந்திருந்தாலும், வைகாசி வெயில் இன்னும் பூமியை அனலாய் சுட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் கூட, அந்த கிராமத்தில், அந்த வெயில் கூட சற்று ரசிக்கும்படியாய் தான் இருந்தது.
முகூர்த்த நாள் என்பதாலையே, தெருவுக்கு ஒரு கல்யாணம் என்று, வீட்டின் பல வாசல்களில் பந்தல்கள் போடப்பட்டு, அவரவருக்கு பிடித்த பாடலை, அந்த ரேடியோ செட்டில் போட்டி போட்டு ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும், கலர் பொடியின் மகிமையால், பல கோலங்கள், அதற்கு இணையாய் ஜொலித்தது.
“ஏன்க்கா, நீ மட்டும் வந்திருக்க, மாமன்ன கூட்டிட்டு வரலையாக்கும்” என்று அந்த கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் கேட்க, “சொந்தக்காரக அம்புட்டு பேரும், ஒரே நாள்ல விசேசத்த வெச்சா, பின்ன என்னத்த பண்றது?” என்றப்படி சந்தனத்தை எடுத்து நெற்றியில் பூசினார்.
“கடைசி முகூர்த்தம் இல்லையா? அதேன், செரி செரி. உள்ளார போயி, உன் அண்ணிய பாரு. அவத்தேன் உன்ன தேடிட்டு கெடந்தா” என்று சொல்ல, அவரும் உள்ளே சென்றார்.
இப்படியாக, அந்த வீடே பரபரப்பாய் இருக்க, ஐயரோ, “நாழியாயிட்டே இருக்கு. இன்னும் முகூர்த்த நேரம் முடியிறதுக்கு முன்னாடி, சம்பிராதயத்த ஆரம்பிக்கனும், பொண்ண பெத்தவகள வர சொல்லுங்க” என்றார்.
ஆனாலும், யாரும் முன் வராமல் இருக்க, “என்ன? சபையில உங்களத்தேன்ன தேடிட்டு இருக்காக, நீங்க ஆற தேடிட்டு இருக்கீங்க” என்றாள் ஒருவள்.
“என்னடி? பெரிய வூட்டுக்காரக வராம, எந்த கல்யாணம், நம்ம வூருல நடந்திருக்கு. அவீக வந்துடட்டும்” என்றார் அவர்.
“அதுக்குன்னு நல்ல நேரம்” என்று வெளியூர் பெண் ஒருவர் முடிக்கும் முன்னே, “ஆதி தம்பி எப்போ வருதோ, அப்போத்தேன், எங்களுக்கு நல்ல நேராம்” என்று சற்று அழுத்தியே கூறினார்.
அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே ஏதோ சலசலப்பு கேட்க, அனைவரும் உள்ளே சென்றனர்.
அங்கே அந்த மணப்பெண்ணின் முறைப்பையன் நன்றாக குடித்துவிட்டு, “இந்த கல்யாணம் என்னை மீறி எப்புடி நடக்குதுன்னு நானும் பாக்குறேன்” என்று வேஷ்டி அவிழ்ந்து விழுந்தது கூட தெரியாது, அதை கட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அவனின் சேட்டையில், “ஏய்யா ராசு. அதெல்லாம் பஞ்சாயத்துல பேசி முடிச்சாச்சித்தேன்ன, இடத்த காலி பண்ணு” என்று ஒருவர் சொல்ல, “என்ன முடிச்சாச்சு? அவ என் அத்த மவ. அவ மேல எனக்குத்தேன் முழு உரிமையும் இருக்கு. என் அப்பன் செத்துட்டா, என் அத்த மவ மேல எனக்கு இருக்கிற உரிம இல்லன்னு ஆகிடுமா? இப்போ நான் என் அத்த மவ கழுத்துல தாலி கட்டுறேன். என்னை எவென் தடுப்பான்?” என்றான்.
அதைக் கேட்டு அதிர்ந்தவர்களோ, “கல்யாண வூட்டுல வந்து என்னய்யா ப்ரச்சன பண்ணிட்டு இருக்க” என்று ஒருவர் கேட்க, அவனை பிடித்து தள்ளிவிட்டவனோ, “ஆறு ப்ரச்சன பன்றது? உறுத்துள்ள மாமன் நான் இருக்கிறப்ப, என்னை மீறி என் மருமவளுக்கு, வேற ஒருத்தன கட்டி வெச்சிருவீகளா, நீ கட்டு மவனே. சித்தப்பன் நான் பாத்துக்கிறேன்” என்று அவனின் அருகில் இருந்தவரும் குடி போதையில் உளறினார்.
இதை எல்லாம் பார்த்த பெண் வீட்டினருக்கோ, ஐயோ என்றிருந்தது. சுற்றி தட்டி கேட்பவர்களையும் மீறி, அந்த ஒருவன் அந்த மணப்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, வெளியில் நடக்க, நொடியில் கல்யாண வீடு கலவரமானது,
அந்தப் பென்ணோ அழுதப்படியே, “கைய விடு. இடு” என்று உறுவ முயற்சிக்க, கல்யாண மாப்பிள்ளை வந்து அதை தடுக்க முயற்சிக்க, அவனையும் பிடித்து தள்ளிவிட்டான்.
கீழே விழ சென்ற அந்த கல்யாண மாப்பிள்ளையின் கையை ஒரு கரத்தால் பிடித்து நிறுத்தியவன், மறு கரத்தால், அந்த ராசுவின் கன்னத்தில் பளாரென்று அடித்தான்.
வாங்கிய ஒரு அடியில், தலைக்கு ஏறியிருந்த போதை எல்லாம், மொத்தமாய் இறங்கியிருந்தது.
“ஹேய் என் மேலையே கைய வச்சிட்டு, இந்த ஊருல நீ” என்று சொல்லியப்படி அவன் நிமிர்ந்துப் பார்க்க, அங்கே, தன் கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கி ஏற்றிவிட்டபடி, நிமிர்ந்து நின்றிருந்தான் ஆதிரன்.
அந்தப் பெரிய வீட்டின் மூத்த வாரிசு. வயது இருபத்தி ஐந்துதான். ஆனால், அவனது உயரமும், செதுக்கி வைத்தது போன்ற திமிறிய உடற்கட்டும், அந்தப் பக்கவாட்டுத் தோற்றமும் பார்க்கும் எவரையும் ஒரு நொடி ஸ்தம்பிக்க வைக்கும்.
கூர்மையான கண்கள், அடர்ந்த தாடி, முகத்தில் எந்நேரமும் தங்கியிருக்கும் அந்த அலட்சியமான கம்பீரம்... அவன் அழகே ஒரு தனி திமிர்தான். அந்த ஊரில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் அவன் மேல் அப்படி ஒரு பித்து.
அவன் தெருவில் இறங்கி நடந்தால், வாசலில் கோலம் போடும் கைகள் அப்படியே நின்றுவிடும். மாடிப் படியில் நிற்கும் கண்கள் அவன் மேல் நிலைத்துவிடும். அவனின் அந்த மிடுக்கான நடையையும், சட்டைக் காலரைத் தூக்கிவிடும் அழகையும் பார்ப்பதற்கென்றே அந்த ஊர்ப் பெண்கள் தவம் கிடப்பார்கள்.
அவன் யாரையாவது தப்பித்தவறி நேராகப் பார்த்துவிட்டால், அந்த ஒரு பார்வைக்காகவே ஒரு வாரம் தூங்காமல் தவிக்கும் இதயங்கள் ஏராளம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த சுட்டு வட்டாரத்துக்கே அவன் தான் "ட்ரீம் பாய்"! ஆனால், அவனோ இதுவரை எந்தப் பெண்ணின் பார்வைக்கும், சிறிதாய் கூட அசைந்து கொடுத்தது இல்லை.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கைநீட்டி வாங்கும் அரசாங்க வேலைக்கு சல்யூட் அடித்து ஒதுக்கிவிட்டு, மண்ணை நம்பி களம் இறங்கியவன். இன்று அவன் பார்ப்பது வெறும் விவசாயம் மட்டுமல்ல... இந்த ஒட்டுமொத்த ஊரின் காவல் அரணே அவன்தான்.
அந்த ஊரில் அவன் பேச்சை மீறி ஒரு புல் கூட அசையாது. ஒரு வார்த்தை சொன்னால், ஊரே எழுந்து நிற்கும். அதற்குப் பின்னால், அவன் அந்த ஊரின் பெரிய வீட்டு பிள்ளை என்பதெல்லாம் காரணமே கிடையாது. அவன் இந்த ஊருக்காக, இழந்த விஷயங்கள் மிக அதிகம்.
அவனின் இழப்புக்கு ஈடுகட்ட, அந்த ஊரையே அடமானம் வைத்தாலும் முடியாது. அதனால்தான், அவன் ஒரு அடி முன்னெடுத்தால், அவனுக்குப் பின்னால் அந்த ஊரே மொத்தமாய் வந்து நிற்கும். இப்போதும் கூட, இந்த திருமணத்திற்கு, ஊர் காரர்கள் அத்தனைப் பேரும் வந்து நிற்பதற்கு, ஆதிரன் தான் காரணம்.
அவனைப் பார்த்ததும், அந்த ராசுவின் முகம் வேப்ப எண்ணெய்யை குடித்தது போல் மிரண்டது.
“உன்கிட்ட நான் என்னல்ல சொன்னேன்” என்று சொல்லிய ஆதிரன், இப்போது அவன் சட்டைக் காலரை கொத்தாய் பிடித்து தூக்கினான்.
“இல்லண்ணே. அது. அது. அந்தப்புள்ள மேல நான் உசுரையே வெச்சிருக்கேன்னே. அதேன்” என்று பயத்தில் அவன் உளற, “அப்புடி அந்தப்புள்ள மேல நெஜமாவே நேசம் வச்சிருந்தேன்னா, இப்போ அந்த புள்ள சந்தோஷத்துக்கு துணையா நின்னுருப்ப. இப்படி தொந்தரவா இருந்திருக்க மாட்ட” என்று அந்த காலரை மேலும் திருகிப் பிடித்தான்.
“ஐயோ அண்ணே, மன்னிச்சிடுண்ணே. இனி இந்த வூட்டு பக்கமே வர மாட்டேன். என்னை விட்டுடுன்னே” என்று சொல்லும் போதே ராசுவுக்கு பயத்தில் வியர்த்தது.
அது மட்டும் கல்யாண வீடாய் இல்லாமல் இருந்திருந்தால், இன்னேரம் அவனுக்கு கிடைத்திருக்கும் தண்டனை நிச்சயம் வேறு விதமாய் இருந்திருக்கும்.
ஆனாலும், கல்யாண வீட்டை மேலும் கலவரப்படுத்த விருப்பப்படாமல், “அந்தப் பொண்ண நீயே கூட்டிட்டு போயி மண மேடையில உக்கார வை” என்று கர்ஜித்தான்.
“செரிண்ணே” என்றவன் அவிழ்ந்த வேஷ்டியை அவசரமாய் தூக்கி கட்டிவிட்டு, அடுத்த நொடி, அந்த கல்யாண வீட்டினராய் மாறியிருந்தான்.
“வாம்மா” என்று அந்தப் பெண்ணின் கையை பட்டும் படாமல் பிடித்து அவனே, மணமேடைக்கு அழைத்து சென்றான்.
இப்போது, தன்பக்கம் நின்றிருந்த கல்யாண மாப்பிள்ளையின் தோளில் கையைப் போட்ட ஆதிரனோ, “நம்ம ஊரு பக்கம், மாப்ள அழப்பு எப்பவுமே செத்த வித்தியாசமாத்தேன் இருக்கும், நீங்க வாங்க” என்று அழைத்து சென்றான்.
அவனைப் பார்த்ததும், அத்தனைப் பேரும் எழுந்து நின்று மரியாதைக் கொடுக்க, அவர்கள் அனைவரையும், கண் ஜாடையிலேயே அமர கூறினான்.
மண மேடையில் இருந்த கல்யாண பெண், கையெடுத்து கும்பிட, அவனோ சிறு புன்னகையுடன், “மனசுக்கு புடிச்ச வாழ்க்க வேணும்னு அடம்பிடிச்சா மட்டும் பத்தாது. ஊரே மெச்சுறதுக்கணக்கா வாழ்ந்து காமிக்கனும்” என்றப்படி தாலியை எடுத்து மாப்பிள்ளையின் கையில் கொடுத்தான்.
அவனுமே, அதை வாங்கி மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட, மங்கல நாதங்கள் சத்தமாய் ஒலித்தது. இவனும் மலர் தூவி அந்த புதுமண ஜோடியை, வாழ்த்திவிட்டு, பொண்ணுக்கு தங்க சங்கிலியும், மாப்பிள்ளைக்கு மோதிரமும் பரிசாய் கொடுத்தான்.
“ஆறு வூட்டு காச எடுத்து ஆறு தர்மம் பண்றதுன்னே தெரியல” என்ற குரல், அவனின் பின்னே எகத்தாளமாய் கேட்டது. அது யாருடைய குரல் என்று தெரிந்துக்கொள்ளக்கூட, அவன் திரும்பவில்லை.
ஏனெனில், அவனுக்கு நன்றாகவே தெரியும், அது யாருடைய குரல் என்று, அதனால், ஆதிரன் அதை கண்டுக் கொள்ளாது, அங்கிருந்து நகரப் போக, “இன்னும் கொஞ்ச நாளுத்தேன், இந்த மால மரியாத எல்லாம். கோர்ட்ல கேஸு மட்டும், எங்க பக்கமா வரட்டும். அதுக்குப் பொறவு, இந்த ஊருல ஆறு கெத்துன்னு காட்டுறேன்” என்று சத்தமாய் குரல் கொடுத்தான் அவன்.
“என்னப்பா கதிரவா. ஆறுட்ட பேசிட்டு இருக்கன்னு புரிஞ்சுத்தேன் பேசுதீயா” என்று பெரியவர் ஒருவர் சத்தம் கொடுக்க, “யோவ் பெருசு. அதேன், பேசிட்டு இருக்கேன்ல, அவென் பேசுறப்பல்லாம், வாய பொத்திட்டு செவனேன்னுத்தேன்ன கெடந்தீரு. இப்பவும் அப்படியே ஓரமா நில்லும். பொறவு, இருக்குற கடுப்புல, பொடனிலையே அடிச்சுப்புடுவேன்” என்றான் கதிரவன். ஆதிரனின் அத்தை மகன்.
அதில், ஆதிரனுடைய தாடை இறுக, அவன் நரம்பெல்லாம் புடைத்தது. அவன் நினைத்தால், சற்று முன் கொடுத்த அடியை விட பலமாய் ஒன்றை அவனுக்கு கொடுத்து விட முடியும்.
ஆனால், அதன் பின்னால், அவனுடைய அத்தனையின் முகம் நினைவுக்கு வர, அமைதிக் காத்தான். அதுவும் போக, துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும் என்பது போல், அவன் பேச்சுக்கு பதில் கொடுக்காது, தன் புல்லட்டில் ஏறி சென்றிருந்தான் ஆதிரன்.
“ஓடுறான் பாரு பயந்தாங்கோலி” என்று கதிரன் தன் மீசையை நீவ, “கதிரவா, நீ பண்றது செரி கிடையாது. ஊரே உன் மாப்பிள்ளைய தூக்கி வெச்சி கொண்டாடுது. ஆனா நீ இப்புடி நடந்துக்குடுறது செரி இல்ல” என்றார் இன்னொருவர்.
“ஓஹோ. எங்கம்மாவ ஏமாத்தி அம்புட்டு சொத்தயும், ஆட்டய போட நெனச்சவன்த்தேன்ன அவென். அப்போலாம் உங்க நியாயம் தர்மம் எங்க போச்சு” என்று கொந்தளித்தான் கதிரவன்.
“ஏய்யா. அந்த சொத்து, ஆம்பள புள்ள வாரிசுக்குத்தேன் சேரும்” என்று ஒருவர் முடிக்கும் முன்னே, “அப்போ எங்கம்மா, என்ன வேற எவனுக்கோவா பொறந்தாக” என்று அவன் இஷ்டத்துக்கு பேசி முடிக்கும் முன்ன, அவனின் கன்னத்தில் இடியென ஒரு அடி விழுந்தது.
அதில், அவன் கோவமாய் நிமிர, அங்கே, அவனுடைய அன்னை செல்விதான் நின்றிருந்தார்.
“ம்மா” என்று அவன் முடிக்கும் முன்னே, “இன்னும் ஒத்த வார்த்த நீ பேசுன, எனக்கு புள்ளையே இல்லன்னு தலமுழுகிடுவேன்” என்றார்.
“அதான்னே. உங்களுக்கு என்னிக்குமே அவென்த்தேன்ன உசத்தி. உங்க எல்லாத்துக்கும், அவனோட சுயரூபத்த நான் சீக்கிரமே காமிக்கிறேன்” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு, அங்கிருந்து தன்னுடைய பைக்கில் கிளம்பியிருந்தான் கதிரவன்.
“சின்ன வயசுல ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா இருந்தாக, ஆறு கண்ணு பட்டிச்சோ, இப்புடி, ஆயிட்டானுங்க” என்று ஒரு கெழவி ஒப்பாரி வைத்தார்.
அதற்குள், “செரி செரி. அதெல்லாம் இன்னிக்கு அடிச்சாலும் நாளைக்கு சேர்ந்துப்பானுங்க. நீங்க பந்தி பரிமாறுற வேலைய பாருங்க” என்று பேச்சுக்கள் மாறியிருக்க, அனைவரும் சாப்பிட சென்றனர்.
ஆதிரனோ சாப்பிடாமலே சென்றிருக்க, அந்த திருமண வீட்டின் ஓரத்தில், அன்னையின் கையை பிடித்தப்படி, அமர்ந்திருந்த அந்த இளந்தேவதைக்கும், அங்கே சாப்பிட பிடிக்கவில்லைப் போலும்.
அரக்கு நிறத் தாவணியில், சொப்பன உலகத்து தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தவளின் பெயர். இளநிலா. வயது இருபத்தி ஒன்று.
அவள் பெயருக்கு ஏற்றது போல், அந்த இரவின் அமைதியில் பளிச்செனத் தெரியும் பௌர்ணமி நிலவு போல, கொள்ளை அழகு.
பேசும் வார்த்தைகளை விட, அவளது அமைதியான அந்த மீன் விழிகளே எல்லாவற்றையும் பேசிவிடும். அதிலும் சிரிக்காமலே, அவள் கன்னத்தில் விழும் அந்த கன்னக்குழி, அவளை இன்னும் பேரழகியாய் காட்டும்.
அழகு இருக்கும் இடத்தில் திமிர் இருக்கும் என்பார்கள். ஆனால் அவளுக்கோ திமிர் என்றால் என்ன என்றே தெரியாது. அந்த ஆர்ப்பாட்டம் இல்லாத அந்த அழகைப் பார்த்து, அந்த வட்டாரத்து இளவட்டங்கள் அத்தனை பேருக்கும் அவளின் பின்னால் சுற்ற வேண்டும் என்ற ஆசை வரும்.
நெஞ்சுக்குள் அவளை ஆராதிக்கத் துடிக்கும் இதயங்கள் ஏராளம். ஆனால், ஆசைப்படலாமே தவிர, அதை ஒரு துளி கூட வெளியில் காட்ட எவனுக்கும் துணிச்சல் கிடையாது.
ஏனென்றால், அவள் ஆதிரனின் சொந்த அத்தை மகள்.
"ஆதிரனின் அத்தப் பொண்ணு" என்ற அந்த ஒற்றை வட்டம், அவளை சுற்றி மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தையே போட்டிருந்தது. அவளது நிழலின் மேல் கூட, அந்த ஊரில் இருக்கும் ஒருவரின் பார்வையும் பட்டுவிடக் கூடாது என்பதில் அந்த ஊரே கவனமாய் இருக்கும்.
அவளைத் தப்பித்தவறி யாராவது தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்தால், அடுத்த நொடி அவன் இந்த மண்ணில் இருக்க மாட்டான் என்பது அந்த ஊருக்கே தெரியும். ஆதிரன் என்ற அந்த ஒற்றைப் பெயரின் பயமும் மரியாதையும், இளநிலாவை ஊரே போற்றிப் பாதுகாக்கும் ஒரு தேவதையாய் வைத்திருந்தது.
இப்போது அந்த தேவதை சாப்பிட மனமின்றி இலையை மூடிவிட்டு மெல்ல எழ, அவளின் காலில் ஏதோ தட்டுப்பட்டது.
அது என்னவென்று குனிந்து அதை எடுத்து பார்க்க, ஆதிரனின் சட்டையில் இருந்து தவறி விழுந்திருந்த, சந்தன நிற பட்டன்.
அவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹாய் நிலா” என்ற ஆடவனின் குரலில் நிமிர்ந்தாள். அங்கே காக்கி உடையில் அம்சமாய் நின்றிருந்தான் வியன். அவன் கண்ணில் அவள் மீதான காதல் அப்பட்டமாய் தெரிந்தது.
அவள் நிழலை தொடவே அனைவரும் தயங்கி நிற்க, இவன் மட்டும் அவளின் மீது எந்த தைரியத்தில் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறான்?
(இளநிலாவின் வாழ்க்கையில், ஆதிரனும், வியனும் இன்னும் என்னெல்லாம் செய்யப் போகிறார்கள்? ஆதிரனுக்கும், கதிரவனுக்கும் இடையில் இருக்கும் பகை, இன்னும் எதையெல்லாம் செய்ய வைக்கப் போகிறது? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம். அதுக்கு முன்னாடி, கதையோட பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
thanurajan1811
aarambame alluthey😍
Karthiga p
adeii kathiru neeya da ipti 🫣
un mapuli da avan 🫠
Keerthi S
Really fantastic first epi athuvum athiran, kathiravan, viyan & nila all r introduction super❤️❤️❤️❤️❤️❤️
athiran life la enna panni vechi irrukara sarmi
deepika saravanan
intresting sis apdiye namma kathir nila jodi yum intro kidutha nalla irukum😁😁😁😁😁
Sarmi SS
July 3, 2026intha story la kathir Nila vara maattaanka . its a fresh story
deepika saravanan
July 4, 2026😔😔😔😔
Malathi Malathi
enna sarmi sis ithu ipdi panni vachi irukenga engalukku keramathu virunthu neraiya iruku nu nenaikuren
Sarmi SS
July 3, 2026kandippa kandipapa 😜😍
Ammu Sathish
சூப்பர் ❤intersting 😊
Sarmi SS
July 3, 2026thank you 😍
Sam Novel reader
wow ..ennadhihdi darlz apdiyae opposite..appa police ippo magan farmer..appan rowdy ippo magan police aa😂😂
Sarmi SS
July 3, 2026expect the unexpected dude 😜😜😜