இளந்தளிர் – 3

“ஏண்டி, வர மாட்டேன்னு வாய தொறந்து சொல்ல வேண்டியதுத்தேன்ன” என்று செம்பா, பஸ்ஸில் அமர்ந்திருந்த இளநிலாவின் காதில் கிசுகிசுத்தாள்.

“இல்ல. அது அண்ணன்” என்று இளநிலா தடுமாற, “அப்போ, உன் அண்ணன் சொன்னா, அந்த போலீஸ்காரர கட்டிப்பீயா” என்று கேட்டாள் செம்பா.

அதில் அதிர்ந்த இளநிலாவோ, “என்ன” என்று தன் தோழியைப் பார்க்க, “என்ன? அவரு கண்ணுலையே, அம்புட்டு காதல் தெரியுது. எப்படியும் அடுத்த வருஷம், உன்னை உன் அண்ணன்கிட்ட பொண்ணு கேக்கத்தான் போறாரு. உன் அண்ணனும், பெரிய கர்ணனாட்டாம், உன்ன கட்டி வைக்கிறேன்னு வாக்கு கொடுக்கத்தேன் போறாரு” என்றாள் செம்பா.

அதைக் கேட்டதும், இளநிலாவுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை. ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவள் முக வாட்டத்தை கவனித்த செம்பாவோ, “செரி விடு. இன்னிக்கு என்ன சாப்பாடு கொண்டு வந்த?” என்று பேச்சை மாற்றினாள்.

ஆனாலும் எண்ணம் முழுவதும் செம்பா சொல்லியதிலேயேத்தான் இருந்தது. ஆனாலும் வியனை தன் தந்தைக்கு பெரிதாய் பிடிக்காது என்பதால், நிச்சயம் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.

அதே நேரம், நொடிக்கும் குறைவாய், பார்த்திருந்தாலும், ஆதிரனின் கண்ணில் தெரிந்த அந்த கோவம், அவள் உடலை சிலிர்க்க வைத்தது.

“நான் அவர் கூட போயிருந்தா, என்ன பண்ணிருப்பாரு” என்று தனக்குள் அவள் யோசிக்க, “அவர் என்ன யோசிக்கப் போறாரு? நீ மொதல்ல என்னத்தேன் யோசிச்சிட்டு இருக்க” என்று மனசாட்சி கேள்வி கேட்டது.

அதன் பின்னே தன் சிந்தனை செல்லும் திசை பக்கம் யோசித்தவள், தலையில் தட்டிக் கொண்டாள். 

அதன் பின் ஆதிரனை அந்த ஒரு வாரமும், நிலா பார்த்திருக்கவில்லை. நிலா மட்டும் அல்ல, ஊரில் எவருமே பார்த்திருக்க வாய்ப்பில்லைத்தான். வியாபார விஷயமாய், பெங்களூர் வரை சென்றிருந்தான்.

ஏனெனில், அவனுக்கு அவன் ஊரில் விளையும் பொருட்களை எல்லாம், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் அவனின் கனவு.

அதற்காகத்தான், அல்லும் பகலும் அயராது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்போது கூட, அவர்கள் ஊரில், புதிதாய் அவன் அமைக்கவிருக்கும் பூந்தோட்டத்திற்கு சில தகவல்கள் எல்லாம் தேவையாய் இருக்க, அதற்காகத்தான் வந்திருந்தான்.

வந்த இடத்தில், ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்கள் பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ள, அவனுக்கு நாட்கள் தேவைப்பட்டது. அதனால் ஒரு வாரமாய் அவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

அவன் வீட்டிற்கு வரவில்லை என்று கவலைப்பட, அந்த பெரிய வீட்டில் இப்போதைக்கு அவனுடைய பாட்டி மட்டும் தான் இருந்தார்.

ஏனெனில் அவனுடைய அம்மா ஒரு மாவட்ட கலெக்டர். அப்பா போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிறாள். இருவருக்கும் வடநாட்டில் போஸ்டிங் போட்டிருப்பதால், அவர்களும், அவன் தங்கை மதிநிலாவும் அங்கு தங்கியிருக்கின்றனர்.

இவன் மட்டும், ஊரை விட்டு செல்ல மனமின்றி, இங்கேயே தங்கிவிட்டான். உண்மையில் அது அவனுடைய அப்பாவின் ஆசை. ஆனால், அன்னையின் வேலையால், அவன் அப்பாவால், ஊரில் இருக்க முடியவில்லை. அதனால், இவன் அவர்களை விட்டுவிட்டு இங்கு இருக்கிறான். அதுவும் போக, தந்தைக்கும் அவனுக்கும், சிறு சுணக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும், எது எப்படி இருந்தாலும், அவனைப் பொறுத்தவரை அனைத்து உறவுகளும் வேண்டும் என்று நினைப்பான். அதனாலையே அவர்களை விட்டு ஒதுங்கி இருக்கிறான்.

இப்படி கிட்ட தட்ட பத்து நாளுக்கு பின், அவர் ஊருக்கு திரும்பியிருக்க, அவன் வந்த பஸ், மதுரை ஸ்டாப்பில் நின்றிருந்தது.

இவனுக்கு, அங்கே பஸ் ஸ்டாப்பில் சில வேலைகள் இருக்க, அவன் அங்கேயே இறங்கி கொண்டான்.

இறங்கிய ஆதி, யாருக்கோ கால் செய்து, “சந்தையில இருக்கீகளா? இல்ல பேக்டரில இருக்கீகளா” என்றான்.

அந்தப் பக்கம் அவர் என்ன சொன்னாரோ, “செரி, எதுனாலும், இன்னிக்கே முடிச்சிடலாம். அவன் கடைக்கு போறேன். நீங்களும் வாங்க” என்று முடித்துவிட்டு, ஸ்டாண்டில் இருந்த தன் பைக்கை எடுத்துக் கொண்டு தெற்கு மாசிவீதிக்கு சென்றான்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், கோவில் வீதி முழுவதும் சற்று நெரிசலாகவே இருக்க, இவனும் பைக்கை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, நிமிர்ந்தான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் அவன் கண்ணில் விழுந்தது. மற்ற கடவுளின் மீதெல்லாம் அவனுக்கு அத்தனை நாட்டம் கிடையாது. ஆனால், மீனாட்சி அம்மன் என்றால், அவனுக்கு அத்தனைப் பிடிக்கும்.

அதில் சிறு புன்னகையுடன் அந்த கோபுரத்தை பார்த்து வணங்கியவனுக்கு, இத்தனை தூரம் வந்துவிட்டு, கோவிலுக்கு செல்லாமல் திரும்ப மனம் வரவில்லை.

அதனால் அவன் அது குறித்து யோசித்து கொண்டிருக்கும் போதே, “வாங்க தம்பி. வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா” என்றார் ஒருவர்.

அவரின் குரலில் கவனம் கலைந்தவன், இப்போது நெற்றியை சுருக்கி அவரைப் பார்த்தான்.

“எல்லாம் அண்ணே சொன்னாரு தம்பி. வாங்க நம்ம கடையில உக்காந்து பேசலாம்” என்றப்படி அவனை அழைத்துக் கொண்டு அவருடைய அலுவலக கடைக்கு சென்றார்.

“இங்கப்பாருங்க. காசுத்தேன் முக்கியம்னா, அத எப்படி வேனும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா எனக்கு தொழில்ல நியாயமும், நேர்மையும் ரொம்ப முக்கியம். இப்படி பொருள்ல கலப்படம் பண்ணி பொழைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அதனால, இதுக்கப்புறம், எங்க வயல்ல இருந்து, உங்க அரிசி மண்டிக்கு, ஒரு நெல்லு கூட வராது” என்று கோவமாய் கூறினான் ஆதி.

“ஐயோ தம்பி. உங்க தாத்தா காலத்துல இருந்து” என்று அவர் வழக்கம் போல் ஏதோ ஆரம்பிக்க, “இங்கப்பாருங்க, பழக்க வழக்கத்துக்காண்டி, காசுல வேணும்னா செத்த கொறச்சிக்கலாம். ஆனா தரத்துல கொறச்சிக்க முடியாது. வேண்டாம்னா வேண்டாம்த்தேன். அதுக்கு மேல ஏதாச்சும் வம்பு பன்ணீங்கன்னா, பொறவு, போலீஸ்ல மொத்தமா கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன். உங்களுக்கே தெரியும். இதக்கூட, எங்க தாத்தா கூட தொழில் பண்ணவராச்சேன்னுத்தேன், செய்றேன். புரியும்னு நினைக்கிறேன்” என்றவனுக்கு, இந்த வளவள கொழ கொழவெல்லாம் பேச வராது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.

அதனால், இனி அவனிடம் பேச முடியாது என்பது புரிந்து, “சரிங்க தம்பி. நான் நாளைக்கு கணக்கு வழக்க எல்லாம் முடிச்சு, கடைப்பையன்கிட்ட கொடுத்தனுப்புறேன்” என்றிருந்தார்.

“நல்லது” என்று சொல்லிய கதிர், அங்கிருந்து ஒரு வேகத்தில் பைக் வரை வந்துவிட்டான்.

அன்னேரம் கோவில் மணி சத்தமாய் அடிக்க, அப்போதே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவே வந்தது.

அதில், கோவிலை நோக்கி நடந்தவன், உள்ளே சென்று மதுரையே காத்து நிக்கும் மீனாட்சி அம்மனை கையெடுத்து கும்பிட்டு வணங்கினான்.

மீனாட்சியின் உருவத்தை மனதில் பதித்துக் கொண்டு, அவன் திரும்ப, அங்கே அவன் பார்வையில் விழுந்தாள் இளநிலா.

அவளை அங்கே அவன் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும், “இன்னேரத்துல காலேஜ் போகாம, இங்க என்னப் பண்றா?” என்று தனக்குள் ஒரு நொடி யோசித்தவன், அடுத்த நொடி, “செரி ப்ரண்ட்ஸோட வந்திருப்பா” என்று அவனே சொல்லியப்படி, அங்கிருந்து செல்ல முயன்றான்.

அதற்குள்ளாக, “என்னாச்சு நிலா? இந்தா, இத சாப்டு” என்று ஒரு ஆடவன் அவள் கையில் புளியோதரை கொடுத்தான்.

அதில் சட்டென்று நின்ற ஆதிரனோ, புருவத்தை சுருக்க, நிலாவோ, “மாலதி எப்போ வருவா” என்றாள்.

“இப்ப வந்திடுவா. நான் என்ன உன்ன தனியா, பார்க்குக்கா கூப்டு வந்திருக்கேன். இப்புடி பயப்படுற. கோவில்லத்தேன்ன இருக்கோம்” என்றன் அவன்.

அவனின் பேச்சில், இவள் உள்ளம் சற்று பதற, தன் தோழியை மானசீகமாய் திட்டி தீர்த்தாள். பின்னே என்ன? அவள் தான், இவளை வலுக்கட்டாயமாய் அழைத்து வந்திருந்தாள்.

வந்தவள் திடீரென, ஒரு அழைப்பு வரவும், பக்கத்தில் அவள் அக்கா வீடு இருப்பதாய் சொல்லிவிட்டு, அவளைப் பார்த்துவிட்டு உடனே வந்துவிடுவேன் என்று ஓடிவிட்டாள். இவள், அவளின் காதலனுடன் மாட்டிக் கொண்டாள்.

“இல்லண்ணா” என்று நிலா ஏதோ சொல்ல, “ஹேய் அண்ணனா? உனக்கு என்னைப் பாத்தா அண்ணன் மாதிரியா தெரியுது? எனக்குலாம் இவ்ளோ அழகான தங்கச்சி வேண்டாம்பா” என்றான்.

அவள் தோழியின் காதலன். ஆனால் இவளிடம் வழிந்துக் கொண்டிருந்தான். அவளுக்கோ, அங்கிருந்து செல்லலாம் என்று நினைத்தால், அதற்கும் பயம்.

இப்போது, யாராவது வந்து தன்னை காக்க மாட்டார்களா? என்பது போல் சுற்றி முற்றி பார்த்தாள்.

அன்னேரம் அவள் முதுகுக்கு பின்னே, “இங்க என்ன பண்றவ?” என்ற ஆதிரனின் குரல் கேட்டது.

அவனின் குரலில், அவளின் முதுகுத்தடம் ஜில்லிட, திடுக்கிட்டு திரும்பினாள். ஆனால் அவளின் உயரத்துக்கு, அவன் நெஞ்சு வரைத்தான் அவளால் பார்க்க முடிந்தது.

ஏனெனில், அவன் அத்தனை பக்கத்தில் நின்றிருக்க, இவளுக்கோ உடல் நடுங்கியது.

அங்கே அவள் தோழியின் காதலனுக்கோ, திடீரென இப்படி ஆஜாகுபாவனாய், ஒருவன் அவனை முறைத்தப்படி வந்து நிற்கவும் திக்கென்றிருந்தது.

அவனின் ஒரு அடிக்கு அவன் தாங்குவானா? என்பதே சந்தேகம் தான். “நிலா. என் ப்ரண்ட். நாங்க கோவிலுக்கு வந்தோம்” என்றான்.

அதில் ஆதிரனோ, “இவன் உன் ப்ரண்டா” என்று அவளிடம் கேட்க, அவனைப் பார்க்காமலே, வேகமாய் இல்லை என்று தலையாட்டினாள்.

“ஹேய் நிலா. நம்ம எல்லாம் ஒரே காலேஜ் தான” என்று பதறிப் போய் கேட்க, ஆதிரனோ, “ஒரே காலேஜா?” என்று அவளிடம் தான் கேட்டான்.

“ம்” என்று அவள் மெல்ல தலையாட்ட, “அவன் கூடத்தான் வந்தீயா” என்று கேட்க, “ம்ஹூம்” என்று வேகமாய் மறுத்தாள்.

“அப்புறம்” என்று ஆதி கேட்க “ப்ரண்ட். பரண்ட்” என்றவளுக்கு வாத்தை வர மறுக்க, இப்போது ஆதியோ அவனைப் பார்த்தான்.

ஏனோ அவன் பார்வையை பார்க்கவே அவனுக்கு அத்தனை நடுக்கம். அவனுக்கு ஆரம்பத்திலேயே நிலாவின் மீது ஒரு கண் இருந்தது. அவனுக்கு மட்டும் அல்ல, அந்த கல்லூரியில் நிறைய பேருக்கு அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தது.

ஆனாலும் அவள் யாரிடமும் பேச மாட்டாள். மாலதி அவள் தோழி என்பதால், அவளுடன் அவன் பழக ஆரம்பித்ததே, இவளிடம் பேசுவதற்காகத்தான். இன்று அந்த சந்தர்ப்பத்தை தான் உபயோகப்படுத்த நினைத்தான்.

ஆனால் இப்படி, ஒருவன் வந்து நிற்பான் என்று சத்தியமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஒரு வேள நிலாவோட அண்ணனா இருப்பாரோ” என்று அவன் யோசிக்கும் முன்னே, “காலேஜ் நேரத்துல, நீ இங்க இருக்கன்னு, உன் அண்ணனுக்கு தெரியுமா” என்று கேட்டான்.

“ம்” என்று அவள் மெல்லமாய் தலையாட்ட, அவனின் கோவம் சற்று தணிந்தது. ஏனெனில், அவளின் அண்ணனிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறாள் என்பதில் ஒருவித நிம்மதி.

“இவன் யாரு” என்று கேட்க வந்தவன், பின், “கெளம்புவோமா” என்றான்.

“ம்” என்று அவள் அதற்கும் தலையாட்ட, இப்போது ஆதியோ, எதிரில் நின்றிருந்தவனிடம், “அவ எங்க வீட்டு பொண்ணு. ஏதாச்சும் வம்பு பண்ற ஐடியா இருந்திச்சின்னா, இப்பவே மறந்துடு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் தோணியில் அழுத்தி சொல்லிவிட்டு நிலாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இவளும், அவன் இழுத்த இழுப்புக்கு செல்ல, கூட்ட நெரிசலில், அவள் அவனை ஒட்டி நடக்க வேண்டிய நிலை. ஆனால் அவனுக்கோ மெல்லிய கோவம் இருக்கவே செய்தது. அதனாலையே அவன் வேகமாய் நடக்க, இவளுக்கோ, அவன் சட்டையில் ஒட்டியிருந்த ஜவ்வாதின் வாசம், நாசியை துளைத்தது.

“இது மாமா பர்பியம் ஸ்மெல் இல்லையே” என்று தனக்குள் நிலா யோசிக்க, “அவர் பர்பியூம் ஸ்மெல் எதுன்றது வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்கீயா நீ” என்று மனசாட்சி அவளை வாரியது.

அவள் அந்த யோசனையிலேயே அவனின் பின்னே செல்ல, பைக் வந்ததும் சட்டதும் நின்றான்.

அதில் அவன் முதுகில் மோதி அவள் நின்றிருக்க, அவள் நெற்றியில் இருந்த குங்குமம், அவன் சட்டையில் ஒட்டிக் கொண்டது.

அதை இருவருமே கவனித்திருக்கவில்லை. “பைக்ல வறீயா? இல்ல, ஆட்டோ வர சொல்லவா” என்றவனின் பார்வை, அவள் மீது படவே இல்லை என்பது வேறு கதை.

நிலாவோ, அமைதியாகவே இருக்க, “உங்கண்ணன்ன வர சொல்றீயா” என்று குரலை உயர்த்தினான்.

“இல்ல. அண்ணா, அது” என்று அவள் தடுமாற, “நான் உனக்கு அண்ணனா” என்று கேட்டான்.

அதில் சட்டென்று அவள் நிமிர, அதற்குள் அவன் மொபைலுக்கு அழைப்பு வந்திருக்க, அவன் அதில் கவனம் பதித்தான்.

இங்கே நிலாவின் உதடுகளோ, “மாமா” என்று அந்த வார்த்தைக்கு வலித்துவிடுமோ என்பது போல் மெல்ல உரைத்தாள்.

நிச்சயம் அங்கிருந்த கூட்டத்தில், அவன் செவியில் அது விழுந்திருக்க வாய்ப்பே இல்லை.

அதனால், மொபைலில் சற்று காரசாரமாய் பேசியவன், “அவீக கையெழுத்து போடலன்னா விடுங்க. ப்ரச்சனையாச்சின்னா பாத்துக்கிறேன். நீங்க அவென்ன மொதல்ல விடுங்க” என்றான்.

அவன் பேச்சே, உத்தரவிடுவது போல் தான் இருக்கும். இப்போதும், அப்படி ஒரு தோணியில் தான் பேசிக் கொண்டிருந்தான்.

நிலாவோ, அவனைத்தான் சிறு ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அப்போதே, அவளுக்கு அது நினைவு வந்திருக்க, அவனின் கையைப் பிடித்தாள்.

“என்ன” என்று அவன் கேட்க, “ஹாப்பி பர்த்டே” என்று சொல்லியவள், அவனை குனிய சொல்லி, அவன் நெற்றியில் குங்குமத்தை பூசிவிட்டாள். அதில் அவனோ, அவளைப் பார்க்க, அதற்குள், நிலாவுக்கு அவள் அண்ணன் கதிரவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

(அதான கொஞ்ச நேரம் கரைச்சல்ல கூட்டாம இருக்க மாட்டாங்களே. சரி அடுத்து என்ன நடக்கப் போவுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   3

*** இளந்தளிர் – 3 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com