அத்விக்கை சமாளிப்பதற்காக மட்டும் இல்லை. அஞ்சலி யார் என்று தெரிந்தால், நிச்சயம், அத்விக் அவளை வேலைக்கு வைக்கமாட்டான் என்று சாந்தினிக்கும் தெரியும்.
அதனால்தான், அஞ்சலிக்கு பேச்சு வராது என்று சொல்லிவிட்டார். ஆனால், உண்மையில், அது சரியாக வருமா என்று அவருக்கே தெரியவில்லை.
“என்ன மேடம்? இப்படி சொல்லிட்டீங்க. அவங்கத்தான் நல்லா பேசுவாங்களே. அதுலையும் அத்விக் சார்கிட்டையே அவங்க எப்படில்லாம் பேசுனாங்க தெரியுமா?” என்று கேட்டான் நேசமணி.
அதில் அவனை முறைத்த சாந்தினியோ, “இத சொல்றதுக்குத்தான் உன்ன வர சொன்னேன்னா?” என்று சற்று கோவமாய் கேட்டார்.
“இல்ல மேடம். இது மட்டும் சாருக்கு தெரிஞ்சா, அவ்ளோதான். அதுலையும் உங்கள கூட விட்டுடுவாரு. என் நிலமைய யோசிச்சு பாத்தீங்களா மேடம்” என்று அழுகாத குறையாய் கூறினான் நேசமணி.
“இங்கப்பாரு. அத்விக்கிட்ட, நீ மாட்டிக்க கூடாதுன்னா, அதுக்கு அஞ்சலி ஊமையா நடிக்க சம்மதிக்கனும். அத நீதான் பண்ண வைக்கனும்” என்றார் சாந்தினி.
“என்னது? நான் பண்ண வைக்கனுமா? மேடம். இதுக்கு பேசாம எனக்கு ஒரு பாட்டில் விஷயம் வாங்கி கொடுத்துடுங்க. அத குடிச்சிட்டு, இப்படியே நான் செத்துப் போயிடுறேன்” என்றான்.
அதில் அவனின் தலையில் தட்டியவர், “அஞ்சலி விஷயத்த, என்கிட்ட நீ சொல்லிட்டன்னு, நான் உன் சார்கிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?” என்று மிரட்டலாய் கேட்டார்.
“ஐயோ மேடம். ப்ளீஸ். என் வீட்ட நம்பித்தான் நான் இருக்கேன். ஐயோ, இல்ல இல்ல. என்ன நம்பித்தான் என் வீடே இருக்கு” என்றான்.
“இங்கப்பாரு. நான் சொல்ற மாதிரி நீ பண்ணா, உனக்கும், உன் வேலைக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் பொறுப்பு” என்றார் சாந்தினி.
“சரி சொல்லுங்க. நான் இப்போ என்னப் பண்ணனும்” என்று கேட்டான் நேசமணி.
உடனே சாந்தினியும், சில விஷயங்களை எல்லாம், அவனிடம் செய்ய சொல்லி கூறினார்.
அவனும் அதற்கு தலையாட்டிவிட்டு சென்று விட்டான்.
இப்போது சாந்தினியோ, “அப்பாடா, எப்படியோ அத்விக்கையும், அஞ்சலியையும் சமாளிச்சாச்சு. இதுக்கப்புறம் நான் பெத்தத சமாளிக்கனும். அவ இவங்களுக்கு மேல பேசுவாளே” என்று நிரூவை நினைத்து வாய்விட்டே புலம்பினார்.
அங்கே அத்விக்கிற்கோ, அஜய் ஏற்படுத்திய பிரச்சனையால், வீட்டுக்கு வரவே நேரம் கிடைக்கவில்லை. இரவும், பகலும் அலுவலகத்தில் தான் இருந்தான்.
“இதுக்கெல்லாம், அந்த அஜய் தான் காரணம்னு கன்பார்ம் ஆகட்டும். அதுக்கப்புறம், இந்த அத்விக் யாருன்னு அவனுக்கு காமிக்கிறேன்” என்று எரிச்சலாய் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
திடீரென அவன் கட்டிக் கொண்டிருக்கும், அவனுடைய புது ப்ராஜக்டிற்கான அப்ரூவல் கேன்சல் ஆகியிருந்தது. அதை நம்பி, அவன் பல கோடியை அதில் முதலீடும் செய்துவிட்டான். இப்போது பாதியில், அதை நிறுத்தினால், அதனால், கம்பெனிக்கும், அவன் கம்பெனி இன்வெஸ்டருக்கும் பெரிய அளவில் நஷ்டம் வந்துவிடும்.
இந்த சில வருடத்தில், இந்தளவுக்கு, அத்விக் கவனக்குறைவாய் இருந்ததே கிடையாது. அதனால், இப்போது முழுமூச்சாய் அதை சரி செய்ய முயற்சித்தான்.
இத்தனையையும் செய்த அஜயோ, அங்கே அத்தனை கூலாய் அம்ர்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனின் அருகில் நின்றிருந்த அவனுடைய PA, “சார், இன்னிக்கான schedule” என்று ஒரு பைலை காட்டினாள்.
அதை வாங்கி, மேஜையில் தூர வீசியவன், அவள் கையைப் பிடித்து, இழுத்து தன் மடியில் அமர்த்தியிருந்தான். இத்தனைக்கும் அவனின் எதிரில், அவனின் தந்தை வயதில் இருக்கும், இன்னொருவரும் இருந்தார்.
அதை எல்லாம் அஜய் கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் மடியில் கிடந்தவளிடம், “கேரம் விளையாடுவீயா?” என்று கேட்டான்.
“எஸ் சார்” என்று சொல்லியவளோ, விலகவெல்லாம் நினைக்கவில்லை. ஏனெனில். அவனுக்கு எப்போதுமே, விலகும் பொருட்களின் மீதுதான் ஈர்ப்பு அதிகம்.
இப்போது அவளுக்கு, பணம் தேவை. இந்த வேலையை விட்டுவிட்டால், அதன் பின் அவளால் வேறு எங்கும் சேர முடியாது.
அதனால், மானம் மரியாதையை எப்போதோ விட்டிருந்தாள்.
“அப்போ என்னை ஜெயிச்சு காமிக்கிறீயா” என்று கேட்டவனின் விரல்க்ள், அவளுடைய ஆழிலை வயிற்றை வருடியது.
“உங்களையா?” என்று சிறு அதிர்ச்சியை அவள் கண் காமிக்க, அதில், இப்போது எதிரில் விளையாடிக் கொண்டிருந்தவரிடம், “இவ உங்களுக்கு வேணுமா?” என்று நேரடியாய் கேட்டான்.
ஏனெனில், வந்ததில், இருந்தே அவருடைய பார்வை, அவனின் பிஏ மீது இருப்பதை அவனும் கவனித்துக் கொண்டுத்தான் இருந்தான்.
“என்ன அஜய்?” என்று புரிந்தும் புரியாதது போல் கேட்டார் அந்த பெரிய மனிதர்.
“இதெல்லாம் ஒன்னும் தப்பு கிடையாது ஹர்ஷா. வேனும்னா எடுத்துக்கோங்க” என்று இப்போது அவன் மடியில் இருந்தவளை, அப்படியே ஒரு சுற்று சுற்றி அவரின் பக்கம் தள்ளினான்.
நிச்சயம், அந்த வயதானவரின் நெருக்கம், அவளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். ஆனாலும் முகத்தில் காட்டாது, அவரைப் பார்த்தும் சிரிக்க வேண்டிய நிலையில் தான் அந்தப் பெண் இருந்தாள்.
அந்தப் பெரியவரோ, தன் மகள் வயதிருக்கும் அந்தப் பெண்ணை, எச்சில் ஊற பார்த்தார்.
அதில், இப்போது அஜயோ, “எனக்கு வேண்டியத நீங்கப் பண்ணா, இந்த மாதிரி ப்ரஷா நெறையா அனுபவிக்கலாம்” என்று வலையை வீசினான்.
அந்த மீன் தான் ஏற்கனவே தூண்டிலில் சிக்கியிருந்ததே. அதனால், மடியில் கிடந்தவளின் வெற்று தோளை தடவியப்படியே, “நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் அஜய்” என்றார்.
“அப்புறம் என்ன? இதுல சைன் பண்ணிடுங்க. நாளைக்கே எங்க சைட்ல இருந்து வேலைய ஆரம்பிச்சிடுவாங்க” என்று சொல்லியப்படி இருக்கையில் இருந்து எழுந்தான்.
அவன் எழவும், இப்போது அவனின் பிஏவும் எழ முயற்சிக்க, அவனோ, “நீ சார, பத்திரமா பாத்துக்கோ. வர்றப்போ சைன் வாங்கிட்டு வந்துடு” என்று அசராது சொல்லிவிட்டு, அந்த கெஸ்டவுசில் இருந்து கிளம்பியிருந்தான்.
அவன் சென்றதும், இப்போது அந்த பிஏவும், அவளுக்கு கொடுத்த வேலையை அரைமனதாய் செய்ய தயாராகியிருந்தாள்.
காருக்கு வந்த அஜயோ, அடுத்து அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குள்ளே யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தான்.
இப்படியாக அடுத்த இரண்டு நாள் சென்றிருந்தது. நிரூவுக்கு மும்பையில் மீட்டிங் ஒன்று இருந்ததால், அவள் அங்கு சென்றிருந்தாள்.
ஆனாலும் செல்லும் முன், அஞ்சலியிடம், “உனக்கு அங்க வேல பாக்க பிடிக்கலன்னா, நீ திரும்ப இங்க வந்துடலாம். உனக்கு பிடிச்ச வேல கிடைக்கிற வரைக்கும், நீ இங்கேயே தங்கிக்கலாம்” என்று சொல்லிவிட்டு தான் கிளம்பினாள்.
ஆனால் அஞ்சலிக்கோ, அந்த வேலை பிடிக்கும், பிடிக்காது என்பதெல்லாம் அவள் லிஸ்டிலேயே கிடையாது.
அவளுக்கு அந்த வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான். அதிலும் சாந்தினி பேசிவிட்டு சென்றப் பின், அவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்றுதான்.
அவருடைய பேரனுக்கு, எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
அந்த நினைவுடன் தான் அன்று, அத்விக்குடைய வீட்டுக்கு கிளம்பினாள் அஞ்சலி.
செல்லும் வழியில் இருந்த விநாயகர் கோவிலில் ஒரு நொடி நின்று, “இந்த வேலையாச்சும் எனக்கு நிலைக்கனும். அங்க என்னால அவங்களுக்கோ, இல்ல அவங்களால எனக்கோ எந்த பிரச்சனையும் வரக் கூடாது” என்று வேண்டிக் கொண்டாள்.
ஏனெனில், இதுவரை அவள் எந்த வேலையிலும், ஒரு மாதத்துக்கு மேல் நீடித்ததே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனை, எப்படியாவது வந்துவிடும்.
அதிலும், நிச்சயம் அவள் மீதெல்லாம் எந்த தவறும் இருக்காது. ஆனாலும் பழி விழுவது என்னவோ இவள் மேலாகத்தான் இருக்கும்.
அதை எல்லாம் யோசித்தப்படித்தான், சாந்தினி கொடுத்த அட்ரஸுக்கு சென்றாள்.
அங்கே சாந்தினியோ நேசமணியை திட்டு திட்டு என்று திட்டிக் கொண்டிருந்தார்.
“உன்னதான, அஞ்சலிய கூட்டிட்டு வர சொன்னே” என்று சாந்தினி கோவமாய் கேட்டார்.
“இல்ல மேடம். அதுக்குள்ள சார் வேற ஒரு வேல கொடுத்தாரு. சரி அத முடிச்சிட்டு அப்படியே, வர்றப்ப, அவங்கள கூட்டிட்டு வரலாம்னு யோசிச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே அவங்க அங்க இருந்து கிளம்பிட்டாங்க” என்றான் மணீ.
“உன்கிட்ட போய், ஒரு வேலைய கொடுத்தேன் பாரு. என்ன சொல்லனும்” என்று அவனை திட்டினார்.
அதே நேரம் அங்கே, அந்த பெரிய வீட்டைப் பார்த்து அதிந்து நின்றிருந்தாள் அஞ்சலி.
அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் என்று அஞ்சலிக்கும் தெரியும். ஆனாலும் இத்தனை பெரிய பங்களாவை அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
அது அவள் முகத்திலேயே தெரிந்தது.
“இங்கேயா வர சொன்னாங்க” என்று சற்று குழம்பியப்படி மீண்டும் கையில் இருந்த அந்த அட்ரஸைப் பார்த்தாள்.
அதற்குள் வாட்ச்மேனோ, “யாருமா நீ? இங்க என்னப் பண்ணிட்டிருக்க” என்று கேட்டான்.
“இல்ல அது நான். இங்க” என்ற அஞ்சலி ஏதோ சொல்லும் முன்னே, “இங்கலாம், இப்படி வந்து நிக்க கூடாது. கெளம்பு கெளம்பு” என்றான்.
ஏனெனில், அவள் அணிந்திருந்த சாதாரண உடையைப் பார்த்தவன், ஏதோ உதவி கேட்டு வந்திருப்பாள் என்று தான் நினைத்தான்.
இந்த உலகம் எப்போதும், அணிந்திருக்கும் உடையை வைத்துத்தானே மனிதர்களையே எடைப்போடுகிறார்கள்.
“இல்ல. இங்க வேலைக்கு” என்று அஞ்சலி ஏதோ சொல்ல முயன்றாள். “வேலையா? இங்கேயா? அதெல்லாம் எந்த வேலையும் இல்ல. எங்க முதலாளி வர்றதுக்குள்ள ஒழுங்கா போயிடு” என்று அடிக்காத குறையாய் விரட்டினான்.
ஏனெனில், அத்விக்கிற்கு, அந்த வீட்டிற்கு யார் வந்தாலும் பிடிக்காது. அதிலும் இந்த மாதிரியான பெண்களை எல்லாம், பார்த்தாலே அவனுக்கு ஆகாது.
அத்தனை தகுதிப் பார்ப்பான். வீட்டில் வேலைப் பார்ப்பவர்கள் கூட, மினுக்காய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம். அந்தளவுக்கு சம்பளமும் கொடுப்பான்.
இங்கே சாந்தினியோ, “வெளிய யாரோ வந்திருக்காங்கப் போல. யாருன்னு பாரு” என்று குரல் கொடுத்தார்.
அதன் பின்னே நேசமணி வெளியில் வந்துப் பார்க்க, இங்கே அஞ்சலியோ, வேறு வழியின்றி அங்கிருந்து செல்ல முயன்றாள்.
அதைப் பார்த்தவனோ, “ஐயோ!. மேடம். நில்லுங்க” என்று சொல்லியப்படி வேகமாய் ஓடி வந்தான் நேசமணி.
அவனின் மேடம் என்ற அழைப்பில், அஞ்சலியும் வேகமாய் திரும்பி பின்னே பார்த்தாள். அங்கே யாரும் இருக்கவில்லை.
அதற்குள், “உங்கள கூப்டத்தான் மேடம் ஆசிரமத்துக்கு வந்தேன். ஆனா அதுக்குள்ள நீங்க அங்க இருந்து கெளம்பிட்டீங்க. உள்ள வாங்க மேடம்” என்றான் நேசமணி.
“என்னையவா” என்று மீண்டும் ஒரு முறை அஞ்சலி தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முயற்சித்தாள்.
ஏனெனில், இத்தகைய மரியாதையான வரவேற்பை எல்லாம், இதற்கு முன் அவள் அனுபவித்ததே கிடையாது. சற்று முன் வாட்ச்மேன், அத்தனை மோசமாய் பேசியதைக் கூட அவளால் ஏற்க முடிந்தது.
ஆனால், நேசமணியின், இந்த மரியாதைத்தான் அவளை திடுக்கிட வைத்தது.
அதில் அவளோ, அப்படியே நிற்க, “உங்களுக்காகத்தான், பெரிய மேடம் அப்போ இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. உள்ள வாங்க மேடம்” என்றான்.
நேசமணி அத்தனை மரியாதைக் கொடுத்து பேசவும், வாட்ச்மேனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதற்குள் அவனே ஓடி வந்து, ஹேட்டை எல்லாம் நன்றாய் திறந்துவிட்டான். அவனின் செயலில், அஞ்சலி இப்போது அந்த வாட்ச்மேனைப் பார்க்க, “சாரி மேடம். நீங்க யாருன்னு தெரியாம, என்னமோ பேசிட்டேன். நீங்க உள்ள போங்க மேடம்” என்று சல்யூட் வேறு அடித்தார்.
“இல்ல நான் இங்க, வேலைக்குத்தான்” என்று அஞ்சலி ஏதோ பேச முயற்சிக்க, “எதுவா இருந்தாலும், உள்ள போய் பேசலாம் மேடம். இங்க வேண்டாம்” என்றான் நேசமணி.
அந்தக் குரலில் இருந்த அழுத்தமே, அஞ்சலியை அமைதியாக்கியிருந்தது.
(இனி அஞ்சலியுடைய வாழ்க்கை என்னவாகப் போகிறது? அத்விக் அஞ்சலியைப் பார்த்தால் கண்டுப்பிடிப்பானா? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் அடுத்த எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. இல்லன்னா ஹெல்ப்லைன் வாட்சப் நம்பர் +916374401933 நம்பருக்கு வாட்சப் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேவதை வருவாள்…
Keerthi S
semma