அசுரன் – 14

“உன் பேரன் அவ கழுத்துல வலுக்கட்டாயமா தாலிய கட்டுவான். அத அந்த சின்னபொண்ணு போட்டுட்டுவேற சுத்தனுமா?” என்று பாட்டியின் மனசாட்சி கேள்வி கேட்டது.

அதில் தன்னை மீட்டுக்கொண்டவர், “என்னமா? உனக்கு சம்மதம்தான?” என்று கேட்டார்.

“சரிங்க மேடம் நீங்க கவலப்படாதீங்க. நான் பாத்துக்கிறேன்” என்றாள் அஞ்சலி.

“உனக்கும், என் பேத்திக்கும் பெரிய வித்தியாசலாம் இல்ல. நீ என்னை பாட்டின்னே கூப்டு” என்றார்.

“இல்ல அது வந்து” என்று ஒரு நொடி தயங்கிய அஞ்சலியோ பின், “இல்லங்க மேடம். நா மேடம்னே கூப்பிடுறேன்” என்றாள்.

அவரும், அவளை கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும், அவள் இப்படி, தள்ளியே இருந்தால், அவர் நினைக்கும் விஷயங்கள் நடக்காதே. அதனால், “இங்க என் வயசுல இருக்கிறவங்க எல்லாரையும், நீ பாட்டினுதான கூப்பிடுற?” என்று கேட்டார்.

“அது வந்து” என்று அஞ்சலி தயங்க, “பாட்டின்னு கூப்டா நா சந்தோஷப்படுவேன். ஆனா உனக்கு விருப்பம் இல்லனா, பரவாயில்ல” என்றார்.

அதில் இப்போதோ அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால், “சரிங்க பாட்டி” என்று சற்று தயங்கிதான் அழைத்தாள்.

ஆனால் அவரோ, இப்போது, அவளை மெல்ல அணைத்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.

அது அவள் அன்னையை அவளுக்கு நினைவுப்படுத்தியது.

அதில் சட்டென்று அவள் கண்களில், நீர் கசிந்துவிட, அவரோ, “என்ன பாட்டினு ஏத்துக்கிட்டதான” என்று கேட்டவர், அவர் கழுத்தில் இருந்த ஒரு chainஐ கழட்டி, அவளுக்கு போட்டுவிட்டார்.

அப்போதே, சுயம் பெற்றவள், “இல்ல, இதெல்லாம்” என்று அவசரமாய் அதை கழட்ட சென்றாள்.

அதற்குள் கையைப் பிடித்து தடுத்தவர், “இத நா உன் சேலரில இருந்து கூட கழிச்சிக்கிறேன். ஆனா வேண்டாம்னு சொல்லாத” என்றார்.

“இல்ல அது எப்டி” என்றவளுக்கு, அதை ஏற்றுக்கொள்ளவெல்லாம் சுத்தமாய் தைரியம் இல்லை.

அதுவும் போக, அடுத்தவர் பொருளுக்கு, எப்போதும் ஆசைப்பட கூடாது என்று அவள் அன்னை அடிக்கடி கூறியிருக்கிறார்.

அது எல்லாவற்றையும் தாண்டி, அவள் கடந்துவந்த பாதை அவளுக்கு இன்னொரு விஷயத்தையும் கத்து கொடுத்திருந்தது.

இந்த உலகத்தில், யாருமே அவர்களுக்கு தேவை இல்லாமல், எதையும் செய்யமாட்டார்கள் என்று. அதனால்தான், அவள் யாருக்கும் கடனாளியாக இருக்ககூடாது என்று நினைத்தாள்.

“எனக்காக போட்டுக்கோ. இது ஒன்னும் அவ்ளோ பெருசு கூட கிடையாது” என்றார். உண்மைதான். பெரிய chain எல்லாம் இல்லைதான். ஆனால் தங்கமாயிற்றே.

அவளுக்காகவேதான் வாங்கி வந்திருப்பார் போலும். டாலரில் “A” என்ற லெட்டர் அழகாய் பொறிக்கப்பட்டிருந்தது.

அதைக் கூட அஞ்சலி கவனித்திருக்கவில்லை. அவள் அதை கழட்டுவதில்தான் குறியாக இருந்தாள்.

“உனக்கு வேல வேணும்னா, நீ இத போட்டுக்கிட்டுதான் ஆகனும்” என்று முடித்துவிட்டார் சாந்தினி.

அதில் இப்போது வேறு வழியின்றி, “சரி நா போட்டுக்குறேன். ஆனா, இதுக்கான காச, நீங்க வாங்கிக்கோங்க” என்றாள்.

“சரி. உன்னால எப்போ முடியுதோ அப்ப கொடு” என்றார். அதன் பின்தான் தன் கழுத்தில் கிடந்த அந்த chainஐ பார்த்தாள்.

அதில் இருந்த “A” என்ற லெட்டரைப் பார்த்ததும், அதையே குழப்பமாய் பார்த்தாள்.

உடனே அவரோ, “அது என்னோட பேரன் அத்விக்கோடது. அவன் சின்னப்பையனா இருக்கிறப்ப வாங்குனது” என்றார்.

“அத்விக்” என்று அவள் உதடுகள் முணுமுணுக்க, சட்டென்று நினைவு வந்தது போல், “அப்படின்னா, இத நீங்களே” என்று ஆரம்பித்தாள்.

“அது அவன் சின்ன பையனா இருக்கிறப்ப, வாங்குனது. இப்போ அவன் ஒன்னும் சின்னப் பையனும் கிடையாது. இத அவனுக்கு போடவும் முடியாது. சோ இத நீயே போட்டுக்கோ” என்று முடித்து விட்டார்.

அதில், அவள் மனதில் பதிந்தது ஒன்றே ஒன்றுதான். இது அவரின் பேரனுடைய chain. இந்த “A” என்ற எழுத்து, அவனுடையது என்பது மட்டும்தான்.

அதனால், அவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க, இங்கே பாட்டியோ, “அவன் கட்டுன தாலி உன் கழுத்துல இல்லாம இருக்கலாம். ஆனா, சாமி முன்னாடி, அவன் உன் கழுத்துல தாலி கட்டியிருக்கான். அப்போ, அத நா கண்டிப்பா உண்மையாக்கி காட்டுவேன். அதுவரைக்கும், இந்த chain உன் கழுத்துல இருக்கும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

இப்படியாக இங்கு செல்ல, அங்கே நிரூவும், தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.

அன்னேரம் அங்கு வந்த அபூர்வனோ, “வீட்டுக்கு கெளம்பிட்டீங்களா மேடம்?” என்று கேட்டான்.

“ஏதாச்சும் முக்கியமான வேல இருக்கா?” என்று கேட்டப்படி, தன்னுடைய கார் சாவியை தேடினாள்.

“நீங்க ப்ரீனா, நம்ம டின்னர் போகலாம்” என்று சாதாரணமாய் அபூர்வன் சொல்ல, “பூர்வன்” என்று கோவமாய் அவனைப் பார்த்தாள்.

“இல்ல மேடம், இன்னிக்கு நம்ம ஆடிட்டர் பொண்ணோட engagement function இருக்கு. அத சொன்னே மேடம்” என்றான்.

அப்போதே அவளுக்கும் அது புரிய, “அட ஆமால்ல, அத மறந்துட்டேன்” என்று சொல்லிய நிரூவோ நெற்றியை நீவினாள்.

பொதுவாக, அவளுக்கு, இந்த மாதிரியான நிகழ்ச்சிக்கு செல்வதெல்லாம் சுத்தமாய் பிடிக்காது. தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால், யோசிக்காமல் சென்றிருப்பாள்.

ஆனால், இப்போது அவள் அது குறித்து யோசிக்கவே, அதை சரியாய் புரிந்துக் கொண்ட அபூர்வனும், “ஒகே மேடம். உங்க சார்புல நான் போயி attend பண்றேன். அவங்க புரிஞ்சிப்பாங்க” என்றான்.

அதன் பின்னே சற்று அமைதியானவள், “ஒகே பூர்வன். நல்ல presentationஆ பாத்து வாங்கிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு வெளியில் நடந்தாள்.

பின் என்ன நினைத்தாளோ, ஒரு நொடி நின்று, “thanks” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அதற்குள், “thanksலா வேண்டா. ஒரு சின்ன candle light டின்னர் வேணும்னா கூட்டிட்டு போங்க” என்று கூறினான்.

அது அவளுடைய காதில் விழுந்தாலும், அதை காதில் வாங்காமல் தன்னுடைய காருக்கு வந்துவிட்டாள்.

இங்கே அபூர்வனோ, “ஒரு நாள் இல்ல ஒரு நாள். உன்ன candle light டின்னர் கூட்டிட்டு போவேன்” என்று நினைத்துக் கொண்டான்.

அதன் பின் சரசரவென்று, இரண்டு நாட்கள் சென்றிருந்தது. சாந்தினி வீட்டை விட்டு கிளம்புவது போல் தெரியவில்லை.

அதில் கடுப்பான அத்விக்கோ, நேசமணியிடம், “இன்னும் அவங்க கிளம்பாம என்னப் பண்ணிட்டு இருக்காங்க?” என்று கேட்டான்.

“அத என்கிட்ட கேட்டா, எனக்கெப்டி தெரியும்” என்று சொல்ல அவனுக்கும் ஆசைதான். ஆனால் அதை சொல்ல முடியாதே.

அதனால், அவன் முழித்துக் கொண்டிருந்தான். அதற்குள், அங்கு வந்த சாந்தினியோ, “நா இனிமே இங்கதா இருப்பேன்” என்றார்.

அவரின் குரலில், இப்போது நிமிர்ந்துப் பார்த்தவனோ, நேசமணியை ஒரு பார்வை பார்த்தான்.

அதில் அவன், “ஒகே சார். நா கெளம்புறேன்” என்றப்படி அங்கிருந்து ஓடியிருந்தான்.

அவன் சென்றதும், “இப்போ இங்க இருந்து நீங்க என்னப் பண்ணப் போறீங்க?” என்று சிறு கடுப்புடன் கேட்டான்.

“இது வீடு மாதிரியா இருக்கு. மொதல்ல, இதுதான் நீ வீட்டுக்கு வர்ற நேரமா?” என்று கடுப்பாய் கேட்டார்.

“இப்போ இதுல உங்களுக்கென்ன ப்ரச்சன?” என்று அதே எரிச்சலோடு கேட்டான் அத்விக்.

“ப்ரச்சனதாண்டா, உன்ன இதுக்கப்புறம் இப்படியே விட முடியாது. நா முடிவு பண்ணிட்டேன். உன் அம்மாகிட்டையும் பேசலாம்னுதா இருக்கேன்” என்றார் சாந்தினி.

“அவங்ககிட்ட என்ன பேசப் போறீங்க?” என்று அத்விக் கேட்க, “உன்னோட கல்யாணத்த பத்திதான்” என்றார்.

“என்ன? என் கல்யாணமா? இப்போ நா கல்யாணம் பண்ணிக்குறேன்னு உங்ககிட்ட சொன்னேனா?” என்று கோவமாய் கத்தினான்.

“இதெல்லாம் சொல்லி பண்ணி வைக்க முடியாது. அந்தந்த வயசுல பண்றதுதான்” என்றார் சாந்தினி.

“அப்படி பண்ணி வைக்கனும்னா, மொதல்ல போயி நிரூக்கு பண்ணி வைங்க. அடுத்து என்கிட்ட வந்து பேசுங்க” என்றான்.

“அவளுக்கு பண்ணி வைக்கத்தா போறேன். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு அப்படியேவா விடுவாங்க” என்று கோவமாய் கேட்டார்.

“தேவயில்லாம, அம்மாவ confuse பண்ணாதீங்க” என்று சிறு கடுப்புடன் கூறினான் அத்விக்.

“நா முடிவு பண்னிட்டேன். இதப்பத்தி உன் அம்மாகிட்டையும், அப்பாகிட்டையும் பேசத்தா போறேன்” என்று முடித்துவிட்டார்.

“இப்போ என்னாயிடுச்சினு. நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?” என்று எரிச்சலாய் கேட்டான்.

“பின்ன, உனக்கு உடம்புக்கு முடியல. ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிருக்காரு. ஆனா அதப்பத்தி கவலையே இல்லாம, உன் இஷ்டத்துக்கு சுத்திட்டு இருக்க. இதுல, நீ சாப்பிடுறீயா தூங்குறீயான்னு, எதுவும் எங்களுக்கு தெரியல. இதுவே உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டா, அவ வந்து உன்ன பாத்துப்பா. நாங்களும் நிம்மதியா இருப்போம்” என்றார்.

அதில் எரிச்சலானவனோ, “இப்போ உங்களுக்கு என்ன? நீங்க இங்க இருக்கனும் அதான. சரி தாராளமா தங்கிக்கோங்க. ஆனா, கல்யாணத்த பத்தி மட்டும் நீங்க அம்மாகிட்ட பேசக் கூடாது” என்றான்.

அவன் அப்படித்தான் சொல்வான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில், அவனுடைய அம்மாவை மீறி, அவனால் மறுத்து பேச முடியாது.

அதனால்தான், சாந்தினியும் அப்படி பேசினார்.

உண்மையில், இப்போது அத்விக் திருமணத்தை பற்றி பேசினால், அவனின் அம்மாவே, “இப்ப எதுக்கு அவசரம்? மொதல்ல நிரூக்கு பண்ணலாம்” என்று தான் கூறுவாள்.

ஆனால் அத்விக்கிற்கோ அன்னை சொல்லிய பின் மறுக்க முடியாதே என்ற பதட்டம்.

“நா இங்க இருந்து மட்டும், என்ன பண்ணிட முடியும்? என்னால, உன் ரூமுக்கும் ஆபிஸுக்கும் அலைய முடியுமா? இல்ல. நீ வர்ற வரைக்கும் முழிச்சிருந்து, உன்ன பாத்துக்கத்தா முடியுமா?” என்றார்.

அதில் அவனுக்கோ கோவம் வந்தது. “இப்போ உங்கள யாரு, கஷ்டப்பட்டு இங்க இருந்து என்ன பாத்துக்க சொன்னா. அதெல்லாம் என்ன பாத்துக்க எனக்கு தெரியும்” என்றான்.

“அதத்தான் நானும் ரெண்டு நாளா பாக்குறேனே” என்றார்.

“இப்போ என்னதான் சொல்ல வறீங்க” என்று அத்விக் எரிச்சலாய் கேட்க, “உன்ன பாத்துக்குறதுக்கு, ஒருத்தர ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்.

“என்ன?” என்று புரியாமல் அத்விக் பார்க்க, “உன்கூட இருந்து, உன்ன கவனிச்சிக்க, ஒரு ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றார்.

“நா என்ன சின்ன பிள்ளையா?” என்று அத்விக் எரிச்சலாய் கேட்க, “அப்போ கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவன் வாயை மூடினார்.

அதில் எக்கச்சக்க கடுப்பானவனோ, “இங்கப்பாருங்க. எனக்கு, என்கிட்ட ஒருத்தர் கூட நின்னு பேசுனாலே பிடிக்காது. அப்படி இருக்கிறப்ப, என் கூடவே இருந்து ஒருத்தர் தொனதொனன்னு பேசுனா, அவ்ளோதான்” என்றான்.

அவன் முகத்தில் தெரிந்த எரிச்சலில், “எனக்குத்தா உன்னப்பத்தி தெரியுமே. அதனாலத்தான். அதுக்கும் ப்ரச்சன இல்லாத மாதிரி ஒருத்தர பாத்திருக்கேன்.” என்றார்.

அதில் அத்விக்கோ குழப்பமாய், “என்ன பாத்திருக்கீங்க?” என்று கேட்டான்.

“உனக்கு, உன்கிட்ட வந்து யாரும் பேசக்கூடாது அதான” என்று சாந்தினி கேட்டார்.

“ஆமா” என்று அத்விக் எரிச்சலாய் சொல்ல, “யாரும் பேச மாட்டாங்க. குறிப்பா, அந்த person பேசவே மாட்டாங்க” என்றார்.

“பேசாம இருக்குறதுக்கு, அவங்க என்ன ஊமையா?” என்று எரிச்சலாய் அத்விக் கேட்டான்.

“ஆமா. ஊமைதான்” என்று பட்டென்று சொல்லிவிட்டார்.

அதில் இப்போது சட்டென்று அத்விக்கிற்கு வார்த்தைகள் வர மறுத்தது.

அவன் அமைதியாகிவிட, இப்போது சாந்தினியோ, “ஊமைன்னா உனக்கு ப்ரச்சன இல்லதான” என்று கேட்டார்.

“என்னமோ பண்ணுங்க” என்று அத்விக்கும் எரிச்சலாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

ஆனால், வரப் போவது ஒரு பெண். அதுவும், அவன் தாலி கட்டிய பெண் என்று தெரிந்தால், அத்விக் என்ன செய்வான்? முதலில் ஊமையாக நடிக்க அஞ்சலி சம்மதிப்பாளா? இல்லை நிரூதான் அனுமதிப்பாளா?

(அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   1

*** அசுரன் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com