இளந்தளிர் – 5

“இப்போ என்ன ஒத்த மோதிரம் தான தொலைஞ்சு போச்சு. அதுக்கு எதுக்கு, இம்புட்டு அழுக. அப்பா உனக்கு, அத விட பெருசா வேற ஒன்னு வாங்கித் தரேன்” என்று மகள் அழுவதை பொறுக்க முடியாது கூறினார் முருகேசன்.

ஆனால் இளநிலாவோ விடாது அழுதுக் கொண்டே இருக்க, கடைசியில் காய்ச்சல் வந்தது தான் மிச்சம். அதனால் அடுத்த நாள் அவள் கல்லூரிக்கு செல்லவில்லை.

இங்கே ஆதியோ, அவளிடம் அந்த மோதிரத்தை கொடுப்பதற்காகவே, பைக்கை எடுத்துக் கொண்டு, அவள் கல்லூரி செல்லும் பேருந்து நிலையத்தில் வந்து நின்றான்.

ஆனால் செம்பா மட்டுமே தனியே வர, ஆதியோ புருவத்தை சுருக்கினான். உண்மையில் அவனுக்கு பாக்க வேண்டிய வேலை எக்கசக்கமாய் கொட்டி கிடந்தது. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு, அதை கொடுக்கத்தான் வந்திருந்தான்.

இங்கே ஆதியைப் பார்த்த செம்பாவோ, “என்ன அண்ணே, இங்குட்டு நிக்குறாக” என்று யோசித்தப்படி, அவனை கடந்து செல்ல முயன்றாள்.

“ஏத்தா தங்கச்சி. செத்த நில்லு” என்று ஆதி அழைக்கவும், தன்னையா அழைத்தான் என்பது போல் சிறு ஆச்சர்யத்துடன், “என்னையவாண்ணே” என்றாள்.

ஏனோ, அவன் தங்கை மதிநிலாவுக்கு பின், அவனை வாய் நெறைய அண்ணா என்று அழைப்பது அவள் தான். அதனாலையே, அவனுக்கு, அவள் மீது ஒரு நல்ல எண்ணம் இருந்தது.

“ம் உன்னையத்தேன். இங்க வா” என்று அவன் திரும்ப அழைக்கவும், “சொல்லுங்கண்ணே” என்றாள்.

“என்ன நீ மட்டும் தனியா போயிட்டு இருக்க” என்று அவன் கேட்க, “அதுக்காண்டி, ஊரையேவாண்ணே கூட்டிட்டு போவ முடியும்” என்று வழக்கமான நக்கலுடன் கேட்டாள்.

பேசியப்பின்னே, யாரிடம் பேசினோம் என்பது புரிய, “இல்லங்கண்ணே. சும்மா லந்துக்காண்டி” என்றாள்.

அதில் மெலிதாய் சிரித்தவனோ, “ம் நீ எல்லாம் நல்லாத்தேன்ன பேசுற. அப்புறம் ஏன் உன் ப்ரண்ட்க்கு மட்டும் வாயே பேச வர மாட்டுது” என்றான்.

அவன் சிரிப்பதை சிறு ஆச்சர்யத்துடன் பார்த்த செம்பாவோ, “ஆறுண்ணே, நிலாவ சொல்றீகளா” என்றாள்.

“இந்த ஊருல, உனக்கு வேற ப்ரண்ட் இருக்காகளா என்ன” என்று ஆதியும் விடாது கேட்க, “அது அவ அப்படித்தேன்னே, அவ கூட வந்தா, என்னையவே பேச வேண்டாம்னுத்தேன் சொல்லுவா. இப்பக்கூட பாருங்க. இன்னிக்கு காலேஜூக்கு கூட அவ வரல. மேடம் ஏன் வரலன்னு கேட்டா, அதுக்கும் நான்த்தேன் அதுக்கும் பேசனும்.” என்றாள்.

“ஏன் வரல” என்று ஆதி கேட்க, “அதுவாண்ணே” என்று சொல்லும் போதே, “ஏய் சிலுப்பி, இங்க என்னாட்டி நின்னுட்டிருக்க” என்று அவள் தலையிலேயே தட்டினான் சேகர்.

அதில் சீண்டப்பட்டவளோ, “யோவ். இப்புடி, மேல கைய வைக்கிற வேல எல்லாம் வெச்சிக்கிட்ட, பொறவு, மண்டைய அடிச்சு உடைச்சிடுவேன்” என்று சேகரிடம் பாய்ந்தாள்.

“ஹேய், கட்டிக்கப்போறவன்கிட்ட செத்த மருவாத கொடுத்து பேசிப்பழகுடி” என்று அவன் சொல்ல, “ஆறு உன்னைய இப்போ கட்டிக்கப் போறா. நீயா ஏதாச்சும் பகல் கனவு காணாத. இன்னொரு தடம், மண்டையில அடிச்சுப் பாரு. அதுக்கு பொறவு, இந்த செம்பா ஆறுன்னு நீ பாப்ப. கட்டிக்கப் போறாராம்ல. இவர கட்டிக்கத்தேன், இங்க நாங்க காத்து கெடக்கோம் பாரு” என்றவள் வாய் மூடாது பொரிந்து தள்ளினாள்.

“பின்ன. உன் ஆத்தா, என்னை மீறி உன்ன எவனுக்காச்சும் கெட்டி வெச்சிருமா. இல்ல மொறப்பையன் என்னை மீறி, எவனாச்சும், உன் கழுத்துல தாலி கட்டத்தேன் விட்டுடுவேன்னா” என்று மீசையை நீவினான்.

அதுவரையிலுமே ஆதி அமைதியாய் தான் இருந்தான். ஏனெனில், உறவு முறைக்குள், இப்படி கேலி செய்து பேசுவது எல்லாம் அங்கே வழக்கம் தான். ஆனால், இப்போது அவன் மிரட்டுவது போல் பேசவும், “ஓ என்னப் பண்ணிடுவ நீ” என்றப்படி திரும்பினான் ஆதி.

அப்போதே அவனைப் பார்த்த சேகரோ, “அண்ணே, நீங்களா” என்று அவசரமாய் தூக்கி கட்டியிருந்த கைலியை அவசரமாய் இறக்கி விட்டான்.

“படிக்கிற புள்ளைக்கிட்ட, என்னல்ல பேசிட்டு சுத்துற நீ” என்று ஆதி சற்று குரலை உயர்த்த, “இல்லங்கண்ணே. மொறப்பொண்னுன்னு சும்மா பேசிட்டு இருந்தேண்ணே” என்றான்.

“மொறப்பொண்ணுன்னா, அதுக்கு மொற இல்லாம பேசிட்டு சுத்துவீயா நீ? கன்னால பேச்ச எல்லாம், படிக்கிற புள்ளட்ட பேசிட்டிருப்பீயா நீ” என்றான் ஆதி.

“க்கும், இவருக்கும், இவரு மொற பொண்ணுக்கும் ஆகாதுன்னு, அம்புட்டு பேரையும் மொறச்சிட்டு சுத்துறாரு” என்று அவன் தனக்குள் முனுமுனுக்க, “என்னல்ல” என்றான் ஆதி.

“இல்லங்கண்ணே. மன்னிச்சிடுங்கண்ணே. இனி எந்த வம்பும் பண்ண மாட்டேன்னே. மொறப்படி அவீக வூட்டுக்கு போயிட்டு பரிஷம் போட்டுட்டு பேசிக்கிறேண்ணே” என்றான்.

“பரிஷ தட்ட தூக்கிட்டு, வூட்டு பக்கம் ஆறச்சும் வந்தா, பொறவு, நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள் செம்பா.

“புடிக்காத புள்ளட்ட என்னடா பேச்சு” என்று ஆதி மறுபடியும் கேட்க, “ஆள விடுங்கண்ணே” என்று அங்கிருந்து சென்றிருந்தான் சேகர்.

அவன் சென்ற பின்னும், கோவம் குறையாமல் செம்பா நின்றிருக்க, “இப்போ என்னத்துக்கு, நீ இம்புட்டு கோவப்படுற. நெசமாவே உனக்கு அவென்ன பிடிக்கலையா? இல்ல படிக்கிறதுக்காண்டி யோசிக்கிறீயா” என்றான்.

இப்படி எல்லாம் அவனாக, அடுத்தவர் விஷயத்துக்குள் செல்ல மாட்டான். ஆனால் தங்கை என்று இவன் அழைத்துவிட்டான். அவளும் அண்ணா என்று கூப்பிட்டு விட்டாள். 

அதனாலையே கேட்டான். “ஏண்ணா? சொந்தத்துலத்தேன் கல்யாணம் கட்டிக்கனும்னு, ஏதாச்சும் கட்டாயம் இருக்கா என்ன” என்றாள்.

அவனே சொந்தத்தில் வேண்டாம் என்றுத்தானே இருக்கிறான். அதனால் உடனே அவனும், “அப்புடில்லாம் இல்ல. அவீகவீக மனசுக்கு புடிசவகள தாராளமா கல்யாணம் கட்டிக்கலாம். அந்த சேகர் பையன். ஏதாச்சும் ப்ரச்சன பண்ணா சொல்லு. நான் பேசிக்கிறேன்” என்றான்.

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா” என்று செம்பா சொல்ல, ஆதியோ, “செரி, இத உன் ப்ரண்ட்க்கிட்ட” என்று ஆரம்பிக்கும் முன்னே, “நிலாக்கு பயங்கரமான காய்ச்சல். அதேன் அவ காலேஜூக்கு வரல” என்றாள்.

“காச்சலா? நேத்து கூட நல்லாத்தேன்ன இருந்தா” என்று தனக்குள் அவன் யோசிக்க, “ஒத்த மோதிரத்த தொலச்சுப்புட்டேன்னு, நைட்டுலாம் ஒரே அழுக போல, காலையிலையே காச்சல் கண்டுக்கிச்சு” என்று அவன் கேட்காமலே கூறியிருந்தாள் செம்பா.

அதைக் கேட்டவனோ, “மோதிரத்த காணங்காட்டி, அழுது காய்ச்சல இழுத்துவிட்டுக்கிட்டாளா” என்று தனக்குள் முனுமுனுத்தான்.

அதற்குள் பேருந்து வந்திருக்க, “செரிங்கண்ணே, பஸ்ஸு வந்திருச்சு. நான் பொறப்படுறேன்” என்று சொல்லியப்படி சென்று விட்டாள்.

இப்போது இங்கே ஆதியோ, கையில் இருந்த நிலாவின் மோதிரத்தை மீண்டும் பார்த்தான். பின் அதை உள்ளங்கையில் வைத்து, அதன் எடை எவ்வளவு இருக்கும் என்று கையாலையே வெயிட் போட்டு பார்த்தான்.

நன்றாக இருந்தால், இரண்டு கிராம் இருக்கும். இந்த இரண்டு கிராம் மோதிரத்திற்கா, அத்தனை அழுதாள்? என்று மீண்டும் அந்த மோதிரத்தைத்தான் பார்த்தான்.

“பேசாட்டி, பாட்டிட்ட சொல்லி, கொடுக்க சொல்லிடலாம்” என்றப்படி பைக்கில் ஏறி அமர்ந்தான்.

சட்டென்று, “ம்ஹூம், சும்மாவே, அந்த பாட்டி எதையாச்சும் போட்டு உளட்டிக்கிட்டு இருக்கும். இப்போ இத கொண்டு போயி கொடுத்தா, அது எப்படி உன்கிட்ட வந்திச்சுன்னு புதுசா ஏதாச்சும் கற்பன பண்ணிக்கும். நம்மளே கொடுத்திடலாம். ஆனா எப்படி?” என்று தீவிரமாய் யோசித்தான்.

அன்னேரம், வெற்றியிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, அட்டண்ட் செய்து, “என்னடா” என்றான்.

“அண்ணே, அந்த பொன்னுச்சாமி வீட்டுல ஏதோ பஞ்சாயத்து போல” என்று வார்த்தையை மென்று விழுங்க, “அதேன். அன்னிக்கு பஞ்சாயத்த கூட்டி, எல்லாத்தையும் முடிச்சு விட்டாச்சுத்தேன்ன, இன்னும் அவீனுகளுக்கு என்னவாம்” என்றவனுடைய தாடை கோவத்தில் இறுகியது.

“இல்லங்கண்ணே. பஞ்சாயத்துல பேசிட்டோம், இப்போ, அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து, வூட்டுல ஆள் இல்லாதப்ப, வூட்டுல வந்து ப்ரச்சன பண்ணிட்டிருப்பானுங்க போல” என்றான் வெற்றி.

“இன்னிக்கு அவனுங்க கை கால்ல முறுக்கி விட்டாத்தேன் செரியா வரும். நான் அங்கன போறேன். நீ, நம்ம வக்கீல்ல கூட்டிட்டு வந்து சேரு” என்றப்படி அழைப்பை கட் செய்தான் ஆதிரன்.

இங்கே கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் படுத்திருந்த நிலாவுடைய செவியிலும், பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை காதில் விழத்தான் செய்தது.

“என்னம்மா சத்தமா இருக்கு” என்று பாதி உறக்கத்தில், அவள், அன்னையின் மடியில் படுத்தப்படி கேட்டாள்.

“அந்த பொன்னுச்சாமி போய் சேர்ந்தாலும், சேர்ந்தான். அவென் அண்ணனும், தம்பியும், அந்தப்புள்ளைய போட்டு பாடாத்தேன் படுத்துறானுங்க. என்னத்த சொல்ல. நில்லு ஜன்னல்ல பூட்டுறேன். சத்தம் கேக்காது. நீ ஏதாச்சும் குடிக்கிறீயா” என்றார் செல்வி.

“இல்லம்மா. வாய் ரொம்ப கசப்பா இருக்கு” என்று அவள் உதட்டை சுழிக்க, அதில் மெல்லமாய் மகளின் மேவாயை பிடித்து கொஞ்சியவரோ, “அம்மா சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து தரேன். அத குடிச்சா செரியா போயிடும்” என்றார் செல்வி

“ம்” என்று நிலா தலையாட்ட, இன்னமும், தன் முந்தி சேலையை பிடித்துக் கொண்டு படுப்பவளைப் பார்த்து, கொஞ்சம் கலக்கமும், நெகிழ்ச்சியும் சேர்ந்தேத்தான் வந்தது.

“இன்னும் ரெண்டு வருஷத்துல, இவெள்ள வேற வீட்டுக்கு கட்டிக்கொடுத்து அனுப்பனும். அங்கன போயி, இவெ எப்படித்தேன் இருக்கப் போறாளோ” என்று யோசித்தவருக்கு, ஒரு அன்னையாய் அவருடைய பொறுப்பும், மகளைப் பற்றிய கவலையும் சேர்ந்தே வந்தது.

அந்த யோசனையில், அவர் அடுப்படிக்கு சென்றுவிட, இங்கே கல்லை எடுத்துக் கொண்டு, அந்த எதிர் வீட்டின் மீது எறிய சென்றான் ஒருவன்.

“ஐயோ ஆறாச்சும் வாங்களேன். ஆம்பள இல்லாத வீட்டுல வந்து இப்புடி ப்ரச்சன பண்றானுங்களே” என்று அந்த வீட்டுப்பெண் குரல் கொடுக்க, நிலாவும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

சரியாக அன்னேரம், பைக்கில் இருந்து இறங்கிய ஆதியோ, அந்த கல்லை தூக்கியிருந்தவனின் முதுகிலேயே ஓங்கி எட்டி மிதித்தான்.

அவன் மிதித்த மிதியில், கல்லோடு சேர்ந்து அவனும் தரையில் சென்று விழுந்தான். ஆதியைப் பார்த்ததும், சுற்றி வேடிக்கைப் பார்த்திருந்தவர்கள் எல்லாம் மரியாதையாய் எழுந்து நின்றனர்.

“ஊருல இம்புட்டு பேரு இருக்கீங்கத்தேன்ன, இப்புடி வந்து ப்ரச்சன பண்ணிட்டு நிக்குறானுங்க, நீங்களாம் என்னப்பண்ணிட்டு இருக்கீங்க” என்றவன், தன் கை சட்டையை மடக்கி விட்டப்படி கேட்டான்.

“அவீக குடும்ப சண்டையில நம்ம எப்படி தம்பி. அதேன்” என்று ஒருவர் சொல்ல, “குடும்ப சண்டன்னா, அத வீட்டோட வெச்சிக்கனும். இப்புடி ரோட்டுக்கு வந்தா யாரு வேனும்னாலும் தட்டிக் கேக்கலாம்” என்ற ஆதியோ, வம்பு செய்துக் கொண்டிருந்த இன்னொருவனின் கன்னத்திலேயே பளாரென்று அடித்தான்.

அதற்குள் கீழே விழுந்துக் கிடந்தவன் தட்டு தடுமாறி எழுந்து, “இங்கப்பாருங்க. இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது. இங்க என் தம்பி வூடு. இது எங்களுக்கு சேர வேண்டியது” என்றான்.

“எதுல்ல உங்களுக்கு சேர வேண்டியது? இது ஒன்னும், உங்க அப்பன்னோ, இல்ல ஆத்தாளோ சம்பாதிச்சு வெச்ச சொத்து கிடையாது, அவீக புருஷன் சம்பாதிச்சது. அதுல அவீக இருக்குறதுல, உங்களுக்கு என்னல்ல எரியுது?” என்று கோவமாய் கேட்டான் ஆதிரன்.

“எங்க அண்ணன்ன கொன்னதே அவத்தேன். அவளாலத்தேன்” என்று மற்றொருவன் பேசி முடிக்கும் முன்னே, அவனின் கன்னத்தில் பளாரென்று அடித்தான் ஆதி.

“அண்ணின்னா அம்மாக்கு சமம்ல. அவீகள போயி மருவாத இல்லாம பேசுற. உறவுக்கு மருவாத இல்லன்னாலும், வயசுக்குனாலும் மருவாத கொடுக்க வேண்டாம்” என்று மீண்டும், அவனின் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தான்.

“என்ன? ஊர் பெரிய வூட்டு பையன்னா, ஆறு வூட்டுலனாலும், நாட்டாம பண்ணிடுவீகளோ? எங்களுக்கும் ஆளு இருக்கு. நாங்க போலீஸுக்கு போவோம்” என்று அந்த அண்ணன் காரன் சீறினான்.

சரியாக அன்னேரம், கதிரவனும், வியனும் அங்கு வந்திருக்க, “நீங்க எதுக்குல்ல போவனும். அடுத்தவக சொத்த ஆட்டைய போடுறது எப்படின்னு, இவனுக்கு சொல்லீயா கொடுக்கனும்” என்றான் கதிரவன்.

அவனுடைய பேச்சில், ஆதிரனுடைய கோவம் கடகடவென்று கொடுக்க, “ஒத்த கம்ப்ளைண்ட் கொடு கணேசா. என் மாப்ள, இப்பவே இவென்ன தரதரன்னு அடிச்சு இழுத்துட்டு போவான். என்ன மாப்ள. நீ செய்வத்தேன்ன” என்று வியனின் தோளில் கையைப் போட்டப்படி கேட்டான் கதிரவன்.

அதைக் கேட்ட நிலாவுடைய கண்கள் கலங்க, ஆதிரனோ, கோவமாய், கதிரவனின் பக்கம் திரும்பினான்.

(ரைட்டு. அடுத்து என்னாகப் போவுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   4

*** இளந்தளிர் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com