அசுரன் – 13

அந்த மேனஜர், அபூர்வனைப் பார்க்க, அவனோ இப்போது, “நீங்களா, வேலைய விட்டு போறீங்களா? இல்ல, நாங்களே தூக்கட்டுமா?” என்று கேட்டப்படி மொபைலை கையில் எடுத்தான்.

“இல்ல” என்றவர், நிரூவின் கேபினை நோக்கி செல்லப் போக, “சார். அங்க போனீங்கன்னா, PF பணம்கூட கிடைக்காது. ஆனாலும், உங்களுக்கு அந்தப் பணம் தேவையே இல்லன்னு எனக்கும் தெரியும். ஏன்னா, கமிஷனாவே நெறையா வாங்கிருக்கீங்களே” என்று கிண்டலாய் சொல்லியப்படி, சில புகைப்படத்தை அவரிடம் காட்டினான்.

அதைப் பார்த்து அதிர்ந்த அந்த மேனஜரோ, “இல்ல.. இது” என்று தடுமாறினார். “நீங்களா போயிட்டா, வேலையோட போகும். இல்லன்னா, court வரைக்கும் போ வேண்டியிருக்கும்” என்று படு நக்கலாய் கூறினான் அபூர்வன்.

அதைக் கேட்டதும், மேனஜர் வேறு வழியின்றி, அப்படியே நின்றுவிட்டார்.

நிரூவைப் பொறுத்தவரைக்கும், பெரிதாய் கோவப்பட மாட்டாள். முடிந்த மட்டும் பொறுமையாகத்தான் எல்லாவற்றையும் செய்வாள். அதிலும் அவள் அலுவலகத்தில் வேலை செய்யவெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அத்தனைப் பேருக்கும் பார்த்து பார்த்து, எல்லாம் செய்வாள். ஆனால் தவறு என்று வந்துவிட்டால், அவள் அகராதியில், மன்னிப்பு என்ற வார்த்தைக்கெல்லாம் இடமே கிடையாது.

இதிலும், அபூர்வன் மட்டுமே விதி விலக்கு. நிரூவை விட வயதில் ஒரு வயது சிறியவன். ஆனால், அவளை மனப்பூர்வமாக ஐந்து வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறான்.

அவள் அவனை திட்டாத நாளே கிடையாது. அவனின் திறமைக்கு, அவனே தனியே நிர்வாகமே நடத்திவிடுவான்.

ஆனால், நிரூவின் மீதிருந்த காதல், அதைத்தாண்டிய, அவள் மீதான பாசம், இன்னமும் அவளுடன் தான் இருக்கிறான்.

மற்ற நேரத்தில் எப்படியோ, வேலை என்று வந்துவிட்டால், நிரூ, அபூர்வனை நம்பி எதை வேண்டுமானாலும் செய்துவிடுவாள்.

உண்மையில் பல இடத்தில், அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே, பல விஷயங்களை முடிவெடுத்துவிடுவாள்.

இப்போது கூட, ஒரு டிபார்ட்மெண்ட் மேனஜரையே, அபூர்வன் பேச்சை கேட்டு அனுப்பி விட்டாள். 

இதனால், வேலை பாதிக்குமா? அந்த டிபார்ட்மெண்டில் வேறு ஏதாவது சிக்கல் வருமா? இப்படி எதையும் அவள் யோசிக்க வேண்டிய அவசியமே கிடையாது.

அது அத்தனையையும், அபூர்வன் பார்த்துக் கொள்வான். இப்போது நிரூவோ, வெளிநாட்டு கஸ்டமர் ஒருவருடன் வீடியோ மீட்டிங்கில் இருந்தாள்.

அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, இவளுடைய புருவங்கள் சுருங்கியது.

“இல்ல, நா” என்று அவள் முடிக்கும் முன்னே, அபூர்வன் அவளின் அருகில் வந்தமர்ந்தான்.

அதில் அவர்களும், “ஹாய் அபூர்வன்” என்று சிரித்த முகமாய் அழைக்க, “சாரி, கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்” என்றப்படி, அவனே அவர்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அழித்தான்.

ஏனெனில், கடந்த இரண்டு வாரமாக, நிரூ அலுவலகமே வந்திருக்கவில்லை. அதனால், அவளுக்கு இங்கு என்ன நடந்தது என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை.

இப்போது அபூர்வன் அதை சமாளித்ததோடு, அவர்களை கன்வீன்ஸும் செய்திருந்தான்.

அதை எல்லாம் வழக்கம் போல் கவனித்தாலும், சிறு மெச்சுதல் பார்வைகூட அவள் அவனை பார்க்கவில்லை.

ஏனெனில், அவள் சிறிதாய், அவனைப் பார்த்து புன்னகைத்தாலும், அடுத்த நொடியே, இருக்கும் இடத்தை கூட சிந்திக்காது, “ஐ லவ் யூ” என்று சொல்லிவிடுவான்.

அதனாலையே, அவனிடம் மட்டும், நிரூ காட்டும் முகம் முற்றிலும் வேறு. இப்போதும் கூட, அத்தனை இறுக்கமாய் தான் அவனருகில் அமர்ந்திருந்தாள்.

ஆனால் அபூர்வனோ, அவளின் அருகில், அத்தனை இலகுவாய் அமர்ந்திருந்தான். டேபிளுக்கு அடியில் வைத்து, நிரூவுடைய கையை பிடித்தான்.

அதில் அவள் நறுக்கென்று, கிள்ளி வைத்திருக்க, அதைக் கூட முகத்தில் காட்டாமல், எதிரில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“இவனுக்கு, நா ரொம்பத்தா இடம் கொடுத்து வெச்சிருக்கேன்” என்று மனதிற்குள் நிரூ முனுமுனுத்தாள்.

“அவ்ளோ பெருசுலாம் இல்ல மேடம்” என்று இவன் நக்கலாய் சொல்ல, அதில் இன்னுமே அவனை முறைத்தாள்.

அதற்குள் மீட்டிங் முடிந்திருக்க, லேப்டாப்பை மூடிவிட்டு அவள் பக்கம் திரும்பினான் அபூர்வன்.

அடுத்த நொடி, அங்கிருந்து எழுந்தவள், “உன் லிமிட்ட கிராஸ் பண்ணாத. அப்புறம் என்னப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும்” என்று கோவமாய் பொங்கினாள்.

அதில் அபூர்வனோ, “உங்களப்பத்தி தெரிஞ்சதாலத்தா, கைய பிடிச்சேன்” என்றான்.

“பூர்வன்” என்று கோவமாய் அவள் திட்டப் போக, அதற்குள் வேகமாய், “நீங்க tensionல இருந்தீங்க மேடம். ஜஸ்ட் உங்கள cool பண்ணத்தான், கைய பிடிச்சேன். மத்தப்படி, வேற தப்பான எண்ணத்துல எல்லாம், எதுவுமே பண்ணல” என்றான்.

அவன் கண்ணில், நிச்சயம் உண்மைத் தெரிய, இருந்தும், “இதுக்கப்புறம், நீ இப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்ல” என்றாள்.

“ஒகே மேடம்” என்று அபூர்வன் உடனே சம்மதிக்க, நிரூதான் புருவத்தை சுழித்து அவனைப் பார்த்தாள். ஆனால், அவனோ இப்போது சற்று இறுக்கமாய் மாறியிருந்தான்.

அதை உணர்ந்தாலும், நிரூ அதை கண்டுக்கொள்ளவில்லை. இப்போது அல்ல, இந்த ஐந்து வருடமாகவே, அவள் அவனை கண்டுக்கொள்ளாமல் தான் இருக்கிறாள்.

இங்கே அஞ்சலி, அங்கிருந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த சிறுமியோ, “அக்கா, உங்கள பாக்க, பெரிய கார்ல வந்திருக்காங்க” என்றாள்.

உடனே அஞ்சலி, நிரூ என்று நினைத்து வெளியில் வர, அங்கே சாந்தினிதான் நின்றிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன், முதலில் அவளுக்கு நினைவு வரவில்லை. நினைவு வந்ததும், “இவங்க எதுக்கு என்ன பாக்க வந்திருக்காங்க?” என்று தான் யோசித்தாள்.

சாந்தினியைப் பார்த்ததும், அஞ்சலி ஒரு நொடி தயங்கி அப்படியே நின்றாள். அப்போது அவளை நிமிர்ந்துப் பார்த்தவரோ, “வாமா, அங்கேயே ஏன் நிக்கிற” என்றழைத்தார்.

அதில், இவளும் வேறுவழியின்றி அவரிடம் சென்று, “நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேம்மா. நீ எப்படி இருக்க” என்றார்.

“நல்லா இருக்கேன்” என்று சொல்லிவிட்டாள். ஆனால் அதற்கு பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால், விரலை பிசைந்தப்படி, அப்படியே நின்றாள்.

“நாந்தான் நிரூவோட அம்மா” என்று தன்னை அறிமுகப்படுத்தினார். “எனக்கு தெரியும் மேடம்” என்று வேகமாய் கூறினாள் அஞ்சலி.

“சரி. நம்ம கொஞ்சம் அப்படியே நடந்துட்டே பேசலாமா” என்று தோட்டத்தை கண் காட்டினார்.

“ம்” என்று தலையாட்டிய அஞ்சலியும், அவருடன் நடந்தாள். அவரோ, அவளைத்தான் சிறு ஆராய்ச்சியோடு பார்த்தார்.

பார்த்தவுடனே, மனதில் பதிந்து போகும் முகம். இன்னும் கூட சிறுமியின் முகம் மாறாமல்தான் இருந்தது. அவள் குரலே அத்தனை மென்மையாய் தான் வெளிவந்தது.

சற்று அதட்டி பேசக்கூட தெரியாத பெண்ணவள் போல்தான் தெரிந்தாள். மனதில் இருப்பதை பளிச்சென்று காட்டிக்கொடுக்கும் முகம். தெரியாதவர்களிடம் கூட, அழகாய் சிறு புன்னகை காட்டி அறிமுகமாகிறாள். இவளை காயப்படுத்த, எப்படி தன் பேரனுக்கு மனம் வந்தது என்றுதான் அவருக்கு தோன்றியது.

அதே நேரம் அந்த அஞ்சலியை அவருக்கும் பிடிக்கவும் செய்தது. “இவதான் என் பேரனுக்கு மனைவி” என்று முடிவும் செய்துவிட்டார்.

அதனால், இப்போது, “அப்புறம் நிரூ உன்கிட்ட ஏற்கனவே பேசியிருக்கேன்னு சொன்னா. இருந்தாலும், என் பங்குக்கு, நானும் உன்கிட்ட ஒரு தடவ பேசி பாத்துடலாம்னுதா வந்தேன்” என்று பேச்சை ஆரம்பித்தார்.

இதில் அவளிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று சுத்தமாய் அஞ்சலிக்கு புரியவில்லை.

அதுவும் அவர் அழைப்பதாக சொல்லியிருந்தால், அவளே கூட, அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்திருப்பாள். அப்படி இருக்க, இப்படி அவரே அவளைத் தேடி வந்திருப்பது சிறு அச்சத்தைதான் சேர்த்து கொடுத்தது.

“ஒரு வேள, நான் படிக்கனும்னு சொன்னது, இவங்களுக்கு பிடிக்கலையோ? வீட்டு வேலைக்கு வந்தவங்க, அதமட்டும்தா பண்ணனும்னு சொல்ல வந்திருப்பாங்களோ?” என்று தனக்குள்ளே யோசித்தாள் அஞ்சலி.

அதற்குள் சாந்தினியோ, “உனக்கு எங்க வீட்டுக்கு வர சம்மதமா?” என்று கேட்டார்.

அதில், இப்போது நிமிர்ந்து அவரைப் பார்த்தவளோ, “ம்” என்று தலையாட்டினாள்.

“என் பேரன நீ பாத்திருக்கீயாமா? அவன பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?” என்று கேட்டார்.

அதில் அஞ்சலிக்கோ இன்னும் குழப்பம் அதிகமானது. ஏனெனில், அவள் வேலை செய்யப் போவது, அவர்கள் வீட்டில். அப்படி இருக்க, அவருடைய பேரனைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அதனால், “இல்ல. ஆனா நா எல்லா வேலையும் சரியா பண்ணிடுவேன்” என்று வேகமாய் கூறினாள்.

அதைக் கேட்டவரோ, “அங்க நீ வேல பாக்கனும் அப்படின்னா, அதுக்கு மொதல்ல நீ என் பேரனப்பத்தி தெரிஞ்சிக்கனும். ஏன்னா, அவன் பர்மிஷன் இல்லாம, அங்க யாரையும், அவன் அலோ பண்ணமாட்டான்” என்றார்.

அதில் அஞ்சலிக்கோ, இப்போது கிடைத்த வேலை சென்றுவிடுமோ என்ற பயம். அது அவள் முகத்திலேயே தெரிந்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கும் அது புரிய, அவள் கையை மெல்ல பற்றினார்.

“என் பேரனுக்கு, நீன்னு இல்ல. நாங்க அங்க தங்கனும்னு சொன்னாக்கூட பிடிக்காது. ஏன்னா, அவனுக்கு தனியா இருக்கத்தான் பிடிக்கும். அதுலையும் அவன் இருக்குற இடம் எப்பவுமே அமைதியா இருக்கனும்னு நினைப்பான். யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசுனாக்கூட அவனுக்கு பிடிக்காது. அதுலையும், அவன்கூடவே ஒருத்தர் இருக்குறதும் அவனுக்கு பிடிக்காது. சட்டுனு கோவம் வந்துடும். அவனுக்கு பிடிக்காத விஷயத்த, ஒருத்தர் செஞ்சிட்டா, யாரு என்னென்னுகூட பாக்க மாட்டான்” என்றார்.

இதை எல்லாம் கேட்ட அஞ்சலிக்கோ, அவரின் பேரன் சற்று வித்தியாசமாகத்தான் தெரிந்தான்.

ஏனெனில் உறவுகள் தன்னை சுற்றி இல்லாதவர்களுக்குத்தானே அதன் அருமை தெரியும். அப்படி அஞ்சலிக்கோ, தனிமை என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம்.

அவளை சற்று நேரம் தனியாக விட்டால், எதை எதையோ யோசித்து, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வாள்.

அவளுக்கு தனிமை என்ற விஷயம் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அவளுக்கு இந்த வாழ்க்கை கொடுத்தது அந்த தனிமையைத்தான்.

அப்படி இருக்க, அங்கே அவரின் பேரனோ, அத்தனை உறவுகள், அவனுடன் இருக்க ஆசைப்பட்டும், தனியாய் இருக்கிறான் என்பதை கேட்க, இவளுக்கு விசித்திரமாகத்தான் இருந்தது.

ஆனாலும் அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவர் சொல்லியதை எல்லாம் கவனித்தாள்.

“ஆனா அதுக்காக நீ பயப்படாத. நானும் அங்கதா இருப்பேன். அவன் உன்ன கஷ்டப்படுத்த, கண்டிப்பா நான் அலோ பண்ணமாட்டேன். ஆனா, எனக்காக நீ அவன நல்லப்படியா பாத்துக்கனும்” என்றார்.

இப்போது அஞ்சலிக்கோ மீண்டும் குழப்பம். “நா, எப்படி அவர?” என்று மீண்டும் குழம்பி போய் அவரைப் பார்த்தாள்.

“இல்ல. அவனுக்கு தேவையான விஷயத்த எல்லாம், நீதான் இனிமே கூட இருந்து பாத்துக்கனும்” என்றார்.

“நானா?” என்று அஞ்சலி சிறு அதிர்ச்சியுடன் கேட்க, “அவன் கரெக்ட் டைமுக்கு சாப்பிடுறானா? இல்லையா? அப்படின்ற மாதிரிதான்” என்றார்.

“ஓ” என்று சொல்லிய அஞ்சலியோ, அவரின் பேரனை ஒரு வளர்ந்த குழந்தையாய் தான் யோசித்தாள்.

ஆனால் பாவம் அவளுக்கு தெரியாதே. அவன் தான், தனக்கு தாலி கட்டி, அத்தனை மோசமாய் பேசியது என்று.

இப்போது சாந்தினியின் பார்வையோ அவள் கழுத்தை அன்னிட்சையாய் வருடியது.

அவள் கழுத்தில், அத்விக் கட்டிய தாலி இல்லாமல் போக, ஜோசியர் சொல்லியது வேறு நினைவுக்கு வந்தது.

(இனி சாந்தினி எப்படி இருவரையும் சேர்த்து வைக்கப் போகிறார்? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   1

*** அசுரன் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com