“வேலதான? என்ன வேல கொடுத்தாலும் பாப்பீயா?” என்று கேட்டவனின் பார்வை அஞ்சலியின் மேனியை கண்டமேனிக்கு பார்த்தது. அதில் அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
கோவம் மூக்கு நுனி வரை வந்திருக்க, ஆனால் அதைத் தாண்டிய பயம்தான் அவளை, எதிர்த்து பேச விடாது தடுத்தது.
மானிட உலகில் மங்கையராய் பிறப்பதே பாவம். இதில். அழகிய மங்கையாய் பிறந்தால், அதை விட பாவம்.
அதிலும் அவளுக்கென்று யாரும் இல்லை என்றால், சொல்லவே வேண்டாம். இது எல்லாவற்றையும் தாண்டி, ஏழ்மை, பசி, இது இரண்டும் இளமையில் கொடுமையோ கொடுமை.
இப்போது கூட அவளுக்கு அத்தனை பசி. சூடாக சுடும் பஜ்ஜியின் வாசனை அவளை இன்னும் நிலைக்குலைய வைத்தது.
காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை. இப்போது இவன் பேச்சு, அவளை இன்னும் கலங்கடித்தது.
“ஹோட்டல்ல, சுத்தம் பண்ற வேல, சர்வ் பண்ற மாதிரியான வேல இருந்தா சொல்லுங்க நா பாக்குறேன்” என்றாள்.
அவனிடம் தன்மானம் பார்த்து எழுந்து விடத்தான் நினைக்கிறாள். ஆனால் அவளுக்கென்று ஒரு வேலை வேண்டுமே. அதனால் கண்ணீரை அடக்கி, அவனிடமே வேலை கேட்டு நின்றாள்.
“சுத்தம் பண்ற வேல என்ன? உனக்கு கல்லால்ல உக்காருற வேலையவே வாங்கி கொடுக்கிறேன். தங்குறதுக்கு கூட என் வீட்டு பக்கமே ஒரு வீடு காலியாதான் இருக்கு. நீ கவலப்படாத. உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்” என்று சொல்லியப்படி, அவளுடைய கையை தழுவினான்.
இவள் சட்டென்று உறுவிக்கொள்ள பார்க்க, அவனோ விடாது “ஆனா, நீ மட்டும் கொஞ்சம், என்ன அனுசரிச்சு நடந்துக்கிட்டன்னா போதும்” என்றவனின் கரம் இப்போது அவள் தோள்பட்டையை தொட, பட்டென்று அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
பயத்தில் தான் தள்ளியிருந்தாள். உடல் தூக்கிப் போட்டது. தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வந்து விட்டது.
“இல்ல! வேண்டாம்… நான் போறேன்” என்று அங்கிருந்து வெளியில் ஓடி வந்து விட்டாள்.
மூச்சு வாங்கியப்படி வெளியில் ஓடி வந்தவள், நடு ரோட்டில் நிற்பதை கூட உணராது, அப்படியே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள்.
அன்னேரம் மின்னல் வேகத்தில். கார் ஒன்று வந்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்தும் கூட அவள் நகரவில்லை.
ஏனோ, இப்படி தினம் தினம் அவமானப்பட்டு சாவதற்கு, மொத்தமாய் செத்துவிடலாம் என்று நினைத்துவிட்டாளோ என்னவோ?
“ஏம்மா பொண்ணு. கார் வருது பாரு. ஓரமா போ” என்று அருகில் டீக்கடையில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் குரல் கொடுத்தார்.
ஆனால் அவளோ ஆடாமல் அசையாமல், அப்படியே அந்த நடுரோட்டில் நின்றாள்.
அடுத்த நொடி, அந்த மின்னல் வேகத்தில் வந்த கார் அவளை அப்படியே அடித்து தூக்கியிருந்தது.
அவள் அணிந்திருந்த லைட் பிங் சுடிதார், இப்போது முழுதும் ரத்தமாய் மாறியிருந்தது.
சிறிது அடி சென்று அந்த கார் நிற்க, அந்த காரில் இருந்து இறங்கினான் அத்விக் அதிரூபன்.
காரில் இருந்து இறங்கிய அத்விக்கோ, இப்போது அந்த காரில் சாய்ந்து நின்றபடி, மொபைலில் யாருக்கோ கால் செய்தான்.
அத்தனைப் பேரும், அவன் என்னவோ, ஆம்புலன்ஸுக்கு அழைக்கிறான் என்று பார்க்க,
நேசமணியும் கூட ஒரு நொடி அப்படிதான் நினைத்தான்.
ஆனால் அத்விக்கோ, “Just Two minutes time. அதுக்குள்ள, அதுல நீங்க sign பண்ணலன்னா, உங்களோட இந்த Jewelry Shop மொத்தமா காணாம போயிருக்கும்” என்றான்.
அதற்கு அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ? இங்கே இவனோ, “எனக்கு என் வேல முடியனும். அதுக்கு நா எந்த லிமிட்க்கு வேணும்னாலும் போவே” என்று சொல்லியப்படி அழைப்பை கட் செய்தான்.
“அதான பாத்தேன். இவராவது, இன்னொரு பொண்ணுக்காக கவலப்படுறதாவது” என்று மனதிற்குள் புலம்பிய நேசமணியோ, ஆம்புலன்ஸுக்கு call செய்ய முயன்றான்.
அதற்குள், “மணி, யாஷி எங்க வந்துட்டு இருக்கான்னு கேளு” என்று அத்விக் சத்தம் கொடுத்தான்.
அதற்குள்ளாக, “ஏம்பா, ரோட்டுல நின்ன பொண்ண, நீங்க பாட்டுக்கு அடிச்சு போட்டுட்டு, உங்களுக்குள்ள பேசிட்டு நிக்குறீங்க” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.
“அந்த பொண்ணுக்கு மொதல்ல உசுரு இருக்கான்னு பாருங்கப்பா” என்று அடுத்து ஒருவர் கூச்சலிட்டார்.
இப்படியாக, அடுத்தடுத்து நின்றிருந்தவர்கள் பேச, அத்விக்கோ அப்போதுதான், அஞ்சலியின் பக்கம் பார்வையை திருப்பினான்.
அவன் பார்வையில். அவள் முகம் தெரியவில்லை. அவனுடைய கார் தான் அவள் மேல் மோதியிருந்தது. ஆனால் அது பற்றிய சிறு கவலை கூட அவன் முகத்தில் தெரியவில்லை.
அவனைப் பொறுத்தவரை, கார் வருவது தெரிந்தும், ரோட்டில் நின்றது, அவள் தவறு. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்?
அதனால், அதை காதில் வாங்காது, அவன் அந்த Jewelry Shop-க்குள் நுழைய சென்றான்.
அதற்குள் அவனை மறித்தப்படி வந்து நின்றான் ஒருவன். பார்க்கவே ஏதோ லோக்கல் அடியாள் போல் தெரிந்தான்.
“என்னப்பா? எங்க ஏரியாக்குள்ள வந்து, நீ ஒரு பொண்ண அடிச்சு கொண்ணுட்டு, உன் வேலைய பாக்க போவீயா? அத பாத்துட்டு நாங்க சும்மா இருப்போம்னு நெனச்சீயா” என்று மீசையை நீவினான்.
அதில் அத்விக்கின் பார்வையோ, அவனை மேலிருந்து கீழாக அளந்தது. அவனின் நோக்கம் என்ன என்று புரிந்துக் கொண்டவனின் முகத்திலோ ஏளனப்புன்னகை உதித்தது.
“ஐயோ கடவுளே. இன்னிக்கு எந்த நேரத்துல இவர் பேசவே மாட்டாரான்னு யோசிச்சேன்னோ, இப்போ இப்படி, அடுத்தடுத்து அவர எல்லாரும் பேச வைக்கிறாங்களே. இவர் பேசுனாலே ப்ரச்சனதான” என்று மனதிற்குள் புலம்பினான் நேசமணி.
“என்னோட வழிய விட்டு, தள்ளி நில்லு” என்று அத்விக் அத்தனை அழுத்தமாய் கூறினான்.
அவனின் குரலை விட, அவன் பார்வையில் அத்தனை அழுத்தம் தெரிந்தது.
அதில், எதிரில் நின்றிருந்தவனோ, “என்ன? மொதல்ல அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் பாத்து செட்டில் பண்ணிட்டு போ” என்று அவன், அத்விக்கின் நெஞ்சில் கை வைத்தான்.
அவ்வளவுத்தான் அடுத்த நொடி, அவன் சென்று எதிரில் இருந்த சுவற்றில் மோதி தரையில் விழுந்தான்.
அதில் அத்தனைப் பேரும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அத்விக் அத்தனை சூடாய் நின்றிருந்தான்.
“Don’t touch me, bloody idiot” என்று சொல்லியவன், அணிந்திருந்த கோட்டை ஸ்டைலாக கழட்டி உதறினான்.
வாங்கிய அடியில், வாயில் இருந்து அவனுக்கு ரத்தம் கொட்டியது. அதில் மற்ற பேர் எல்லாம் தள்ளி சென்றனர்.
“கேவலம் இந்த காசுக்காகத்தான, இந்த Drama” என்று சொல்லிய அத்விக், திரும்பி நேசமணியை ஒரு பார்வை பார்த்தான்.
உடனே வேகமாய் காரில் இருந்த சூட்கேஸை எடுத்து வந்து, அத்விக்கிடம் நீட்டினான்.
அதில் இருந்து சில கட்டு பணத்தை எடுத்தவன்,
“இத, என் தங்கச்சி பிறந்த நாளுக்கு, ஒருத்திக்கு பிச்ச போட்டதா நெனச்சிக்கிறேன்” என்று சொல்லியப்படி, தரையில் அரை மயக்கத்தில் கிடந்த அஞ்சலியின் மீதே தூக்கி போட்டான்.
பின், அந்த பெரிய Jewelry கடைக்குள் விறுவிறுவென்று நுழைந்தான். அவனின் பின்னே நேசமணியும் சென்றுவிட்டான்.
இங்கே, அரை மயக்கத்தில் இருந்தாலும், அத்விக்கின் பேச்சு அவளுடைய செவியில் அப்பட்டமாய் கேட்டது.
அதில் அந்த நிலையிலும், தன்னுடைய நிலமையை நினைத்து கண்ணீர் வழிந்தது.
அவனின் மீது கோவப்பட எதுவுமே இல்லை. ஏனெனில். சாக வேண்டும் என்று நினைத்துதானே, அங்கே அவள் நின்றாள்.
இப்போது அவளுக்கோ, இப்படி எல்லாம் வாழ்வதற்கு பதில், செத்துவிடலாம் என்று தோன்றியது.
அவன் பணத்தை அள்ளி வீசியிருக்க, இப்போது சுற்றி இருந்தவர்கள் அனைவரும், அடிப்பட்டு கிடந்தவளை விட்டு விட்டு, அந்த பணத்தை அள்ள ஆரம்பித்தனர்.
இங்கே அஞ்சலிக்கோ கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு தப்ப ஆரம்பித்தது. அவள் முழுதாய் மயக்கத்திற்கு செல்லும் முன், அங்கே இன்னொரு கார் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து இறங்கினாள், அத்விக் அதிரூபனின் தங்கை, யாஷிகா. பதினாறு வயது இளந்தேவதை. காற்று கூட, பலமாய் அவள் மீது வீசியிருக்காதோ என்னவோ, அத்தனை மென்மை அவளிடம்.
அவள் இறங்கிய அடுத்த நொடியே, அவளின் இரு பக்கமும், ஆத்ரேயனும், ஆர்யனும் வேகமாய் வந்து நின்றார்கள்.
அத்விக்குடைய சித்தப்பா மகன்கள் இருவரும். யாஷிகாவுடைய பாதுகாவலர்கள் என்று கூட சொல்லலாம்.
ரத்த காயத்துடன் இருந்த அஞ்சலியைப் பார்த்ததும், “அச்சோ, அவங்களுக்கு என்னாச்சு” என்று ஓடி சென்று அஞ்சலியின் கையை பிடித்தாள் யாஷிகா.
“யாஷி” என்று சொல்லியப்படி, ஆத்ரேயனும், ஆர்யனும் அவளின் பின்னே ஓடினர்.
சுற்றி இருந்தவர்கள் எல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ஆத்ரேயனுக்கோ சிறு எரிச்சல்.
“ச்ச இவங்களாம் மனுஷங்கதானா” என்று சொல்லியவன் வேகமாய் அஞ்சலியின் காயத்தை பரிசோதித்தான்.
அவன் இப்போது தான் மருத்துவகல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய அப்பாவும், மருத்துவர் என்பதால், இவனுக்கு சில அடிப்படை மருத்துவம் தெரியும்.
“உடனே இவங்கள ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணனும்” என்றான் ஆத்ரேயன்.
“வாங்க அப்போ நம்ம கார்லையே கூட்டிட்டு போகலாம்” என்றாள் யாஷிகா.
“இல்ல. நீங்க ரெண்டு பேரும் கடைக்குள்ள போங்க. நான் இவங்கள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்” என்றன் ஆத்ரேயன்.
ஏனெனில், அத்விக்கை பற்றி, ஆத்ரேயனுக்கு நன்றாக தெரியும். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்காது.
“இல்ல ப்ரோ. நானும்” என்று யாழினி சொல்ல முயன்றாள்.
“இல்ல. ரேய்யன் சொல்றதுதா சரி. நம்ம உள்ள போலாம்” என்று ஆர்யன், யாஷிகாவை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.
ரேயன், அஞ்சலியை தங்களுடைய மருத்துவமணைக்கு அழைத்து சென்றான்.
இங்கே உள்ளே அத்விக்கோ, தன் தங்கைக்காக, அந்த கடையில் இருந்த அத்தனை விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்து வர சொல்லியிருந்தான்.
“அண்ணா” என்று யாஷிகா அழைக்கவும், அவள் பக்கம் திரும்பினான்.
அவள் உடையில் ரத்த கறையை பார்த்ததும், “அச்சோ யாஷி. என்னாச்சு உனக்கு” என்று அவளிடம் ஒடி சென்றான்.
சற்று முன், ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் அவன் கண் முன்னே கிடந்தாள். அதை அத்தனை உதாசீனம் செய்தவன், இப்போது தங்கைக்கு என்றதும், அவன் முகத்தில் அத்தனைப் பதட்டம்.
“ஐயோ! அண்ணா. எனக்குலாம் ஒன்னும் இல்ல. அங்க வெளியதான் ஒரு அக்காக்கு. பாவம். அவ்ளோ ரத்தம்” என்று சிறுமியாய் உதடு குவித்து கூறினாள்.
அதை கேட்டவனுக்கோ, அத்தனை எரிச்சல். “யாஷிமா. அடுத்தவங்கள பத்தி, நமக்கு என்ன? உனக்கு ஒன்னும் இல்லதான” என்று அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான்.
“உங்க பாடிகார்ட்ஸ மீறி, எனக்கு என்னாகிட போகுது” என்று கேட்டு அழகாய் சிரித்தாள் யாஷிகா.
பார்க்க, அப்படியே அத்விக்கின் அம்மா சாத்விகா போல் இருப்பாள். தங்கையின் சிரிப்பை, அத்தனை ரசித்துப் பார்த்தான்.
பின், “சரி வா. வந்து உனக்கு பிடிச்சத வந்து வாங்கிக்கோ” என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.
“எதுக்குணா, இவ்ளோ?” என்று யாஷிகா, கேட்ட எதையும் கண்டுக்கொள்ளாமல், கடையில் இருந்த அத்தனை நகைகளையும், அவளுக்கு போட்டு விட்டு அழகு பார்த்தான்.
அவன் இளக்கம் காட்டும் ஒரு இடமென்றால், அது அவனின் தங்கையிடம் மட்டும் தான்.
“அண்ணா, எல்லாமே யாஷிக்குதானா? எனக்கு இல்லையா?” என்று ஆர்யன் சீண்டலாய் கேட்டான்.
அதில், இப்போது அத்விக்கோ, “third revision-ல, சார் எடுத்த mark எவ்ளோ?” என்று புருவம் உயர்த்தினான். அவ்வளவுதான். அடுத்த நொடி கப் சிப் என்று வாயை மூடிக்கொண்டான்.
அதைப் பார்த்து யாஷிகாவோ, “இது உனக்கு தேவையா” என்று ஆர்யனை கேலி செய்தாள்.
இப்படியாக இங்கு செல்ல, அடுத்த நாள் காலை கண் முழித்த அஞ்சலியோ, அத்தனை பெரிய மருத்துவமனையில் தன்னை அனுமதித்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்தாள்.
(அஞ்சலியின் பதட்டத்திற்கு என்ன காரணம்? அத்விக் அஞ்சலி யார் என்று அறிவானா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேவதை வருவாள்…
Keerthi S
summa solla kudathu appadi hey parents maari irrukaranga
Ramya Iyer
vika ak vaarisu illaiya adan avargala polave irukanga avanga pasanga 😍