முகிலனும், மித்ராவும் ஒருவருக்கொருவர் முதுகுக்காட்டி நின்றுகொண்டிருந்தனர்.
அந்நேரம் அங்கு வந்த வேந்தன், “தாங்கியூ மேடம். தாங்கியூ சோ மச். ஆக்சுவலா நான் எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல” என்று உணர்ச்சி பொங்கி நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனின் பேச்சில், வேகமாக திரும்பிய முகிலனின் பார்வை, மித்ராவின் அருகில் நின்றுக்கொண்டிருந்த வேந்தன் மேல் தீயாய் பாய்ந்தது.
அப்படியே மித்ராவையும் பார்த்தான். அவனைப் பார்த்தால், அத்தனை முறைத்தவள், அவனிடம் சிறு புன்னகையுடன் நின்றிருந்தாள்.
அதில் வேகமாக இருவருக்கும் இடையில் வந்து, “ஹலோ மிஸ்டர். வேந்தன் அவங்க கேஸ் வின் பண்ணிக் கொடுத்தது எனக்கு. உங்களுக்கு ஒன்னுமில்ல. அப்படி இருக்கிறப்ப இப்ப எதுக்கு, நீங்க அவங்களுக்கு thanks சொல்லிட்டு இருக்கீங்க? போங்க போயி உங்க வேலை எதுவோ, அத மட்டும் பாருங்க” என்று பல்லைக் கடித்தான் முகிலன்.
அவன் பொறுமையாக கூறினாலும், அவன் பார்வை வேந்தனை சுட்டெரித்தது.
அதன் பின் அங்கு நிற்க வேந்தனென்ன மடையனா? வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் சென்றதும், இப்போது அவனைப் பார்த்தப்படியே வேகமாக மித்ரா புறம் சட்டென்று திரும்பினான் முகிலன்.
ஏற்கனவே இடிக்கும் தூரத்தில் நின்றிருக்க, திரும்பிய வேகத்தில் அவள் கையின் மேல் இவன் கை உரசியது.
அந்த நொடி தீப்பெட்டிக்கும், தீக்குச்சிக்கும் இருக்கும் உறவுமுறை போல், சட்டென்று பற்றிக்கொள்ள துடித்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள் மித்ரா.
அவளுக்குத்தான் நெருப்பில் கை வைத்தது போல் இருந்ததோ என்னவோ?
ஏனெனில் முகிலனில் நிலையோ, அதற்கு நேரெதிர்.
அந்த ஒரு நொடி தீண்டல் அவன் உயிர் வரை சென்று, இதுவரை அவன் உணராத எதையோ உணர்த்த முயற்சித்தது.
அதற்கும் மேல் அவளின் நெருக்கம், இவனுக்குள் பூமழை தூவ, அவளுக்கோ பூகம்பத்தை வெடிக்க வைத்தது.
அதனால் வேகமாக அவனை விட்டு விலகி நிற்க மித்ரா முயற்சிக்க. அதற்குள் அவள் உள்ளங்கை, அவன் இரும்புக் கரங்களுக்குள் அழகாய் ஒளிந்து கொண்டது.
அதில் அவள் இதயம் துடிக்கும் சத்தமும், அதன் வேகமும், இவனுக்கு மூச்சு முட்ட வைத்தது.
என்ன உணர்விது என்று நிச்சயம் அவனுக்கே தெரியவில்லை. ஆனால், அவள் உள்ளங்கையை தழுவிய அவனின் கரங்கள் அதை விட மறுத்தது.
இன்னும் கூட, அவளின் கையை இறுக்கி பற்றிக்கொள்ள சொல்லி மனம் துடித்தது.
அவன் மனம் போகும் போக்கை நினைத்து சட்டென்று அவள் கையை விட்டான் முகிலன்.
அவன் கரத்தை விட்டு விலகிய பின் தான், மித்ராவுக்கு சீராக மூச்சே வந்தது. அவளின் இதயம் அத்தனை பலமாய் துடித்திருக்க, இப்போது அவனறியாது நெஞ்சில் கை வைத்திருந்தாள்.
அதற்குள், இங்கே முகிலன் வேகமாக தன் கையில் இருந்த பிளாங் செக்கை அவளிடம் நீட்டி, “இதுக்குத்தான இவ்வளவும். டேக் இட் அன்ட் என்ஜாய்” என்றான்.
அவனின் தொடுதலில், மயங்கியிருந்தவளுகு, அவனின் வார்த்தை நெருப்பள்ளி கொட்டியது.
அவள் அப்படியே இருக்கவும், அந்த செக்கை மீண்டும் அவள் கையில் திணித்தான்.
அவ்வளவுத்தான். அதுவரை ஏதோ ஒரு உலகில் இருந்த மித்ரா, வேகமாக அந்த செக்கை தூக்கி அவன் முகத்தில் எறிந்தாள்.
“காசுக்காக, உங்க பின்னாடி வர்றவுங்களுக்கு, இத என்னோட கிப்டா சொல்லி கொடுத்திருங்க மிஸ்டர். முகிலன். அப்புறம் உங்ககிட்ட பீஸ் வாங்கிதான்! நான் என் லைப்-ப செட்டில் பண்ணனும்னு எந்த அவசியமும் கிடையாது. இந்த கேஸ் நான் எடுத்ததுக்கு காரணம், கண்ணு முன்னாடி, தப்பு பண்ணாம ஒருத்தர் அவமானப்படுறத பார்க்க கஷ்டமா இருந்திச்சி. அதனாலத்தான். அதெல்லாத்தையும் விட என் தொழில் தர்மம்ன்னு ஒன்னு இருக்கு. நூறு குற்றவாளி தண்டிக்கப்படலாம். ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படகூடாது, அந்த காரணம் தான், நான் இந்த வழக்க எடுத்ததுக்கு ஒரே காரணம்.
ஆனா நான் இப்ப வருத்தப்படுறேன். உங்கள மாதிரி பணத்திமிர் பிடிச்ச ஒருத்தருக்காக வாதாடுனத நினச்சா எனக்கே என் மேல கோவம் வருது. குட் பாய். இனிமேல் என் கண்ணு முன்னாடி வந்துடாதீங்க. அப்ப இந்த மாதிரி பொறுமையா பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்” என்று கோவமாய் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றாள் மித்ரா.
செல்லும் அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்திருந்தான் முகிலன். மற்ற நேரமாக இருந்திருந்தால், நிச்சயம் அவளுக்கு பதிலுக்கு பதில் கொடுத்திருப்பான்.
ஆனால் இப்போது தவறு ஏதோ தன் மேல் தான் என்று அவன் மனம், அவனுக்கு எதிராய் அடித்துக் கூறியது.
இருந்தாலும் அதை அவளிடம் ஒத்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு பெரிய மனம் எல்லாம் இல்லை. அதே நேரம் அவளுடன் சரிக்கு சமம் போட்டிபோடவும் மனம் இல்லை.
மனம் சட்டென்று பாரமாக இருப்பது போல் தோன்றியது. அவளைப் பாத்திர மாத்திரத்தில் இருந்து, அவனுக்குள் ஏதோ ஒன்று உடையும் உணர்வு. அது என்னவென்று அவனுக்கும் தெரியவில்லை.
அவள் தூக்கி எறிந்த செக்கைப் பார்த்தவனுக்கு, ஒரு வித கோவமும், ஆதங்கமும் சேர்ந்தே வந்தது.
அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு சென்றவன், அவன் கைக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்தான். ஏனோ கோவமாய் வந்தது.
எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியவன், கடைசியில், கையில் இருக்கும் ஜாடியை வைத்து அந்த ஆள் உயர கண்ணாடியை அடிக்க ஓங்கினான். அதில் அவனின் பிம்பம் தெரிந்தது. அதில் அதையே சில நொடிகள் பார்த்தான்.
“என்ன பாக்கிற? ஏன் நிறுத்திட்ட. அடிச்சு உட. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கு” என்று சிறு கோவத்துடன் அவனின் மனசாட்சி கூறியது.
அதில் ஓங்கிய கரத்தை அப்படியே கீழே இறக்கினான். அதற்குள் அவனின் மனசாட்சியோ, “ஏன்டா நீ இப்படி இருக்க? நீ இப்படியே பண்ணிட்டு இரு. அப்புறம் கடைசியா நீ மட்டும் தனியாதான் நிக்கப்போற”” என்று எச்சரித்தது.
அதைக் கேட்டு, சத்தமாய் சிரித்தான். நிச்சயம் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி எல்லாம் இல்லை.
“இப்பவே நான் தனியாத்தான நிக்கிறேன்” என்று முகிலன் சிறு விரக்தியுடன் கூறினான்.
“ஆமா. உன்னால என்னிக்குமே அடுத்தவுங்க மனச புரிஞ்சிக்கவே முடியாது. உனக்கு உதவி பண்றவுங்களுக்கு கூட உன்னால சந்தோஷத்த கொடுக்க முடியாது. நீ ஒரு செல்பிஷ். திமிரு பிடிச்சவன்” என்று அந்த பிம்பம் அவனை தாறுமாறாய் திட்டியது.
அதில், “நோ. நோ. நோ” என்று வேகமாக தன் கையில் வைத்திருந்த ஜாடியை தூக்கி அந்த கண்ணாடியில் எறிந்தான்.
அது சுக்குநூறாக உடைந்தது, அந்த உடைந்த துண்டுகளில் தெரிந்த அவனின் பிம்பம் அவனைப் பார்த்து இன்னும் நக்கலாய் சிரித்தது.
அதில் இவனோ “சிரிக்காதன்னு சொல்லுறேன்ல?” என்று வேகமாக அந்த கண்ணாடித்துண்டுகளை, ஓங்கி குத்த, அவன் கையெங்கும் ரத்தம் சொட்டியது.
அதைப் பார்த்து அந்த பிம்பம், “எத்தனை நாள், இப்படி எத்தனைப்பேர கஷ்டப்படுத்தியிருப்ப, அப்படியிருக்கிறப்ப, இவள காயப்படுத்துனதுக்கு மட்டும், உனக்கு ஏன், உன் மேலையே இவ்வளவு கோவம் வரணும்?. யோசி” என்று சொல்லிவிட்டு அந்த பிம்பம் அப்படியே மறைந்தது.
கையில் ரத்தம் ஒரு பக்கம், அவனின் கோவம் ஒரு பக்கம், நாள் முழுவதுமான அலைச்சல் மறுபக்கம் என்று அப்படியே தரையிலேயே படுத்து உறங்கிப்போனான்.
அதே நேரம் அங்கே வேகமாக வீட்டிற்கு வந்த மித்ரா, “அம்மா. எனக்கு சாப்பாடு வேணாம். நான் அங்கேயே சாப்டேன்” என, சொல்லிவிட்டு, விறுவிறுவென அவள் அறைக்குள் சென்றாள்.
அங்கிருத கபோர்டை திறந்து, சில பொருட்களை எடுத்து கோவமாய் கட்டிலில் வீசினாள்.
“உனக்கு இதெல்லாம் தேவையா?” என்று ஒரு மனம் இவளை கேள்வி கேட்டது.
அதற்குள் இன்னொரு மனமோ, “என்ன நினச்சிக்கிட்டு இருக்கான் அவன்? மனசுல பெரிய இவன்-னு நினப்பு, பெருசா, செக்கை எடுத்து நீட்டுறான். அந்த காசுக்காகத்தான் நான் வாதாடுனேனா? என்னப்பத்தி எப்படி இவ்ளோ கேவலமா, அவனால யோசிக்க முடிஞ்சிச்சி? அவனுக்கு ஹெல்ப் பண்ண போனா, ஒரு தேங்க்ஸ் சொல்லாட்டியும் பராவாயில்ல, இப்படி அவமானப்படுத்துறான்” என்று தன் போக்குக்கு அவனைத் திட்டியது.
கடைசியில், “இங்கப்பாரு மித்ரா. இனிமேல், அவன் மூஞ்சியில கூட நீ முழிக்க கூடாது” என்று முடிவெடுத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
அவளுக்குமே அத்தனை அலைச்சல், உடல் சோர்வைக்காட்ட அப்படியே கட்டிலில் படுத்தால். ஆனாலும் உறக்கம் வர மறுத்தது. அதில் மேலும் சில நொடிகள் உறக்கமில்லாமல், புரண்டு புரண்டு படுத்தாள்.
ஒரு கட்டத்தில், மீண்டும் எழுந்தமர்ந்தவள், வீசிய பொருட்களை எல்லாம் எடுத்து கபோர்டில் வைத்து பூட்டிவிட்டு, வழக்கம் போல் தலையனையைக் கட்டிக்கொண்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் முகிலன் எழுந்து பார்க்கும் போது அவன் கைக்கு மருந்திட்டு கட்டு போட்டிருந்தது. அவன் உடைத்த பொருட்களுக்கு பதில், வேறு பொருட்கள் அங்கே வழக்கம் போல் இருந்தது.
அத்துடன், அவனின் கைகட்டில், அவன் அன்னையின் கண்ணீர் தடங்களும் தெளிவாக தெரிந்தது.
அதைப் பார்த்து அவனுக்கு பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை. இது அவர்கள் வீட்டில் நடக்கும் வழமையான ஒன்று தான்.
அதனால் குளித்து முடித்து கிளம்பி ஆபிஸ் சென்றவன், அன்றாட வேலைகளை கவனிக்க முயன்றான்.
ஆனால் அவன் மனம் முழுவதும் அந்த கருப்பு அங்கி அணிந்திருந்த தேவதையிடம் தான் இருந்தது.
ஏனோ அவளைப் பார்க்காமல், அவனால் எதுவுமே செய்ய முடியாதது போல் தோன்றியது.
அதனால் முதன் முதலாக அவன் மதி சொல்வதை விட்டு விட்டு, மனம் சொல்வதை கேட்டு அவளை பார்க்க நினைத்து கிளம்பினான்.
அதே நேரம் இங்கே மதியரசியோ, அவளின் தோழிகளோடு, ஐஸ்கிரீம் பார்லரில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி, உங்க மித்ரா மேடம் கேஸ்ல ஜெயிச்சிட்டாங்கன்னு, ட்ரீட்டா?” என்று ஒருவள் கேட்க. அதற்கு மற்றொருவள். “அதுக்கு இருக்காது. மே பி, அவளோட டீரிம் பாய மீட் பண்ணிருப்பா?” என்றாள்.
உடனே வேகமாய் இன்னொருத்தி “யாரு அந்த இஷாந்த் சாரா? எனக்கு அப்பவே தெரியும்” என்றாள்.
“அடச்சீ. வாய மூடுங்க,. ஐயோ பாவம். வேலைக்கு ஜாயின் பண்ணதுல இருந்து ட்ரீட் கேட்கிறீங்களே. கொடுப்போம்-னு கூப்டு வந்தா, உங்க வாயிக்கு வந்தத உளறிக்கிட்டு இருக்கீங்க” என்று மதி, சொல்லிக்கொண்டிருக்கும் போதே. இவர்கள் டேபிளைக் கடந்து, அந்த நெடியவன் சென்றான்.
முதலில் கவனிக்காதவள். அவன் வாசலை கடந்து செல்லும் போதுதான் அவனைக் கவனித்தாள்.
“ஹேய் இது அந்த சிகப்பு சட்டதான” என்று தனக்குள் யோசித்தவள் அடுத்த நொடி “காய்ஸ். ஒரு நிமிஷம். நான் வந்துடுறேன்” என்று வேகமாக அந்த நெடியவனை தொடர்ந்து ஓடினாள்.
(இன்றாவது அந்த நெடியவன் யார் என்று அவள் அறிவாளா? அவனும் இவளை பார்ப்பானா? அங்கே முகிலன் மித்ராவை சந்திப்பானா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தொடரும்…
Keerthi S
yaaru thanya nee?