காதல் – 12

மதி, அவளுடைய தோழிகளுடன், ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருந்தாள். அப்போது அவளைக் கடந்து அந்த நெடியவன் சென்றிருக்க, கடைசி நொடியில் தான் அவனை கவனித்தாள்.

உடனே இவளும் வேகமாய் அவளின் பின்னே வந்தாள்.

சரியாக அவன் காரில் ஏறப்போக, இவளோ “ஏய் சிகப்பு சட்ட” என்று சத்தமாக கூப்பிட்டாள்.

அவனோ அதைக் கவனிக்காமல் காரில் ஏறப்போக, “சிகப்பு சட்ட நில்லு” என்று ஒடிவந்த வேகத்தில் அவன் மீதே மோதி, மூச்சு வாங்கி நின்றாள் மதி. 

சட்டென்று ஏதோ ஒரு பனிமூட்டம் தன் மீது மோதி விலகியது போல் இருக்க, அவன் குனிந்து பார்த்தான். 

ஏனெனில், அவன் அந்தளவுக்கு வளர்ந்திருந்தானா? இல்லை இவள், வளரவே இல்லையா? என்பது அவர்களுக்கே தெரியும்.

ஆனால் மதியோ, அவன் உயரத்துக்கு நிமிர்ந்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஒரு நொடி, அவனுக்கு புரியவே இல்லை. அதே நேரம், அவள் முறைப்பது கூட அவனுக்கு சற்று சுவாரஸ்யத்தைதான் கொடுத்தது.

அவள் அவனையே முறைத்துக் கொண்டிருக்கவும், “வாட்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

“ஓய் சிகப்பு சட்ட. உனக்கு உண்மையாவே காது கேட்காதா? கூப்டுகிட்டே இருக்கேன். நீ வாட்டுக்கு போயிட்டே இருக்க” என்று அவள் கோவமாய் கடகடவென்று கேட்டாள்.

அதில் அவனோ புரியாமல், “வாட்? டூ யூ கால் மீ? வென்? வேர்?” என்று அவன் கூலரை கழட்டிக் கொண்டு கேட்டான்.

“இங்கப்பாரு. வென்னு வேன்னுன்னு? இப்பத்தான கூப்டேன். சிகப்பு சட்டை நில்லு நில்லு-ன்னு எவ்ளோ கத்துனேன்” என்று வேகமாக அவள் கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு வேகமாக குனிந்து அவன் சட்டைக் கலரை பார்க்க, அவனோ வெள்ளை சட்டை அணிந்திருந்தான்.

“திஸ் இஸ் ரெட் கலர்?” என்று புரியாமல் அவளைப் பார்த்தவன், “ஐ தாட். யூ பெட்டர் டூ விசிட் ஐ கேர் சென்டர்” என்றான்.

“ஹேய் உனக்கு தமிழே தெரியாதா?” என்று இவள் குழப்பமாய் கேட்க, அவனோ கூலரை எடுத்து ஸ்டைலாக மாட்டினான்.

அவனின் செயலில், “பெரிய அஜித்குமாருன்னு நெனப்பு” என்று இவள் முனுமுனுத்தாள்.

அதற்குள், அவனின் புளூடூத் ஹெட்செட்டில் அழைப்பு வந்தது. உடனே அதை அட்டன்ட் செய்து, “யா ஐம் இன் தே ஸ்பாட் ஒன்லி. ஐ ஹேண்டில் இட்” என்றான்.

“ஹேய் சிகப்பு சட்ட. உன்கிட்ட நான் பேசிட்டு இருந்தா, நீ யார்ட்ட பேசிட்டு இருக்க” என்று எரிச்சலாய் கேட்டாள் மதி. 

அதில் அவள் பக்கம் திரும்பி, “ஆக்சிவலி மை நேம் இஸ்  நாட் ஏ சிகப்பு சட்டை. மை நேம்” என்று அவன் பெயரை சொல்ல வருவதற்குள், “ஹலோ இப்ப உன் பேரு, உன் ஊரு தெரிஞ்சி, நான் என்ன உன்னை கல்யாணமா பண்ணப்போறேன்? எனக்கு தேவை என் கம்மல். அத கொடு” என்று அவனிடம் கையை நீட்டினாள்.

“வாட்?” என்று புரியாமல் அந்த நெடியவன் மதியை பார்க்க, “ஏய். நீ தமிழ் நாட்டுலதான இருக்க. உனக்கு தமிழ்-ல பேச வராதா. இல்ல தெரியாதா? எப்ப பாரு வாத்து கோழின்னு சொல்லிட்டு. உன் அளவுக்குலாம் எனக்கு இங்கிலீஸ் வராது. ஐ லாஸ்ட் மை இயர் ரிங்க்ஸ் இன் யுவர் ஷர்ட்டு. இன் தட் கில்லிங் சீன்னு. சோ யூ கிவ் மீ பேக் டூ மை இயரிங்க்ஸு. மை மாம் ஸ்கோல்டு மீ வெரி பேட்லீ. யூ நோ. தட் கம்மல் நோ நோ. தட் இயரிங்க்ஸ், கிப்ட் ப்ரம் மை பாதரு” என்று அவளுடைய கம்மல் பிளாஸ்பேக்கை தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், அவள் சொல்லி முடித்து நிமிர்ந்து பார்க்க, அங்கே அவன் இல்லை. 

அதே நேரம் இங்கே மித்ரா, அந்த பெரியவரின் கேஸுக்கு தேவையானதை, ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தாள். 

சரியாக அவள் கேபினுக்குள் உள்ளே நுழைந்த இருவர், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க வக்கில் மேடம்?” என்று கேட்டனர். 

அதில் யாரென்று நிமிர்ந்து பார்க்க, ஏற்கனவே அவளிடம், இந்த கேஸை எடுக்க வேண்டாம் என்று மிரட்ட வந்த அந்த மேனஜரும், அவனருகில் பார்ப்பதற்கே ரவுடி போல் இன்னொருவனும் நின்று கொண்டிருந்தனர்.

“நான் என்ன பண்ணா, உங்களுக்கென்ன? எதுக்கு வந்தீங்களோ, அத சொல்லிட்டு நீங்க கிளம்பலாம். எனக்கு நெறையா வேல இருக்கு” என்று அசராது கூறினாள் மித்ரா.

“நாங்களும் எங்க வேலையத்தான் மேடம் பார்க்கிறோம். என்று சொல்லிய அந்த மேனஜர் அவளுக்கு எதிராக இருந்த அந்த சீட்டில் அமர, அந்த அடியாளோ, மித்ராவின் அருகில் சென்று நின்றான். 

அப்போதும் சற்றும் அசராது, “நான் எனக்கு பாடிகார்டு வேனும்னு உங்ககிட்ட கேட்டதா, எனக்கு நியாபகம் இல்லையே” என்று மித்ரா தன் வேலையைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

“என்ன மேடம் கிண்டலா? முடிவா என்ன சொல்றீங்க?” என்று அந்த மேனஜர் சற்று கடுப்புடன் கேட்டான்.

“உங்களுக்கு முடிவுதான தெரியனும். இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க. இந்த கேஸோட முடிவ, நீதிபதி சொல்லுவாங்க. நீங்க கேட்டுட்டு வீட்டுக்கு போகலாம்” என்று மித்ரா அசராமல் கூறினாள். 

“மேடம். உங்களுக்கு இன்னும் எங்க பாஸ பத்தி முழுசா தெரியல. அவருக்கு எதிரா உங்களால ஜெயிக்க முடியாது” என்று அந்த மேனஜர் சிறு கோவத்துடன் கூறினான்.

“ஓ அப்படியா, அப்ப சரி. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. என்னால ஜெயிக்க முடியாதுன்னு. அப்புறமும் எதுக்கு நான் உங்க பக்கம் வாதாடனும்னு நினைக்கிறீங்க. வேற நல்ல வக்கிலா பார்த்து வச்சிக்கோங்க” என்று அவள் கூலாக கூறினாள்.

அதில் இன்னும் கடுப்பானவனோ, “மேடம். நீங்க தப்பு பண்றீங்க. இப்பவே நீங்க உங்க முடிவ மாத்திக்கிட்டா நல்லது. இல்லன்னா, இதுதான் நீங்க உங்க வாழ்க்கையில் கடைசியா வாதாடுற கேஸா இருக்கும்” என்று அந்த மேனஜர் மிரட்டினான்.

அதற்குள், “இதுதான் நீங்க கடைசியா பேசுற வார்த்தைன்னு நான் நினைக்கிறேன்” என்ற குரல், வாசலில் கேட்க. மூவரும் நிமிர்ந்துப் பார்த்தனர். 

அங்கே ருத்ர மூர்த்திக்கும் குருவாய், அத்தனை கோவமாய் முகிலன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை நிச்சயம் மித்ரா எதிர்பார்த்திருக்கவில்லை. அதில் அவள் அவனை கேள்வியாய் பார்க்க, அதற்குள் விறுவிறுவென உள்ளே நுழைந்தவன், மித்ராவின் அருகில் நின்றுக்கொண்டிருந்த அந்த முரட்டு உருவத்தை, ஓங்கி குத்தினான். 

அதில், முகிலனின் கையில் இருந்த காயத்தில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. 

அதை சற்றும் கவனிக்காமல், அந்த ரவுடியை மேலும் மேலும் அடிக்க அவனோ மடங்கி தரையில் விழுந்தான். 

அப்படியே, முகிலன் திரும்பி அந்த மேனஜரைப் பார்த்தான். அவருக்கோ பேசிக் கோண்டிருந்த வார்த்தை நாவை தாண்டி வெளியில் வரவில்லை.

இப்போது முகிலனோ, “உன்ன எவன் அனுப்புனான்னு எனக்கு தெரியாது. ஆனா, இன்னொரு தடவ உங்க ரெண்டு பேரையும் இங்க பார்த்தேன். அதுக்கப்புறம் உங்க பாஸுக்கும் சேர்த்து நான்தான் எமனா இருப்பேன்” என்று சொல்லியப்படி, அந்த மேனஜரின் முன்னே இருந்த சேரில் குத்தினான்.

அதில் மிரண்ட அந்த மேனஜரோ, அங்கிருந்து எழுந்துவிட, கீழே கிடந்தவனும், எழுந்து அங்கிருந்து ஓடியிருந்தான்.

அவர்களை விரட்டிவிட்டு, மித்ராவின் பக்கம் முகிலன் திரும்ப, அங்கே அவளோ அவனைத்தான் கொலை வெறியில் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இது கோர்ட்-னு நினைச்சீங்களா, இல்ல பாக்ஸிங் ரோப் னு நினைச்சீங்களா?” என்று மெதுவாக கேட்டாலும், சற்று அழுத்தம் கூட்டி மித்ரா கேட்டாள்.

ஆனால் முகிலனுக்கோ அப்போதும் கூட, அந்த இருவரின் மீதான கோவம் குறைந்திருக்கவில்லை. அது அவன் முகத்திலேயே தெரிந்தது.

“ச் உங்ககிட்டதான பேசிட்டு இருக்கேன். இப்போ எதுக்கு அவங்கள அடிச்சீங்க” என்று கோவமாய் கேட்டாள் மித்ரா.

அதில் இப்போது இன்னும் கோவமாய், அவளருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.

அதில் அவன் காயத்தில், இருந்து சிந்திய ரத்தம், அவள் மேல் தெளிக்க. அப்போதே அவன் கையிலிருந்த காயத்தையும், ரத்தத்தையும் பார்த்தாள் மித்ரா.

அதைப் பார்த்தவளுக்கு அத்தனை அதிர்ச்சி. அடுத்த நொடி சற்றும் யோசிக்காமல், வேகமாக அவன் கையைப்பிடித்து பார்த்தாள்.

அவனோ கரத்தை விலக்க நினைக்க, அதற்குள் அவனை அமரவைத்து, பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அவன் பழைய கட்டை பிரித்து, காயத்தை பார்த்தாள். 

ஏனோ அவனின் காயம் அவளுக்கு வலியைக் கொடுத்தது. மெல்ல அந்த கரத்தை வருடினாள்.

அவனோ, “ஸ்” என்று சொல்ல, அதில் இப்போது இவள் கண்களில் இருந்த கோவமெல்லாம், கண்ணீராய் உருவெடுத்து, வெளியில் வர துடித்தது. 

முடிந்த அளவு அதை கட்டுப்படுத்தி, அவன் காயத்திற்கு மருந்திட்டு, கட்டுபோட்டு விட்டாள்.

முகிலனோ அவள் கையை பிடித்த நொடியிலேயே, தன்னை மறந்திருக்க, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல், அவள் செய்கைக்கு தன் கையைக் கொடுத்தான். 

“ரத்தம் கசிந்ததோ அவனுக்கு,

ஆனால் கண்ணீர் என்னவோ இவளுக்கு! 

காயம் கொண்ட அந்த ஆணின் வேதனையை, 

இந்த பேதை உணர்ந்து, 

உதிரம் சிந்தியவனை தாண்டி, 

கண்ணீர் சிந்தினாள் பாவை.”

என்னதான் முயன்று கட்டுப்படுத்த நினைத்தாலும், அவளையும் மீறி இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கையில் விழுந்திருந்தது.

அவள் கண்ணீர் துளியில் தன்னிலை பெற்றவன், வேகமாக அவளிடமிருந்து தன் கையை உருவினான். 

மறு நொடியே தன்னை சமாளித்த மித்ராவும், அவனை விட்டு தள்ளி நின்றாள். 

இருவருக்கும் சில பல நிமிடங்கள், தங்களை மீட்டுக்கொள்ள தேவைப்பட்டது. 

“எதுக்கு வந்தீங்க?” என்று கேட்க அவளுக்கும் மனமில்லை. “எதற்கு வந்தோம்” என்று சொல்ல அவனுக்கும் துணிவில்லை.

இருவரின் அமைதியையும், அவளின் செல்போன் அழைப்பு கலைத்தது. 

அந்தப் பக்கம் யார் பேசினார்களோ, மித்ராவோ, “இப்ப வந்திருவேன்” என்று அழைப்பில் சொல்லிவிட்டு நிமிர்ந்து முகிலனைப் பார்த்தான். 

அவனுமே ஏதோ யோசனையோடே அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் அந்தப் பார்வை, நிச்சயம் அவளை தடுமாற வைத்தது.

“நா. நா. ன். கிள. ம். பு.றேன்” என்று திக்கி திணறி சொல்லியவள், அவனைக் கடந்து செல்ல முயன்றாள். 

அதற்குள் “ஒ. ஒ.ரு நி. மிஷம்” என்ற முகிலனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. 

ஆனால் அவனின் வார்த்தையில், அவள் திரும்பி அவனைப் பார்க்க, “சாரி. நான் அப்படி பேசியிருக்க கூடாது” என்றான் முகிலன்.

அதில் அவனை ஒரு நொடி சற்று ஆச்சர்யமாய் பார்த்தாள். ஏனெனில் அவனெல்லாம் ஒருவரிடம் மன்னிப்பு கேட்பானா என்ன?

அதைத் தாண்டி அவன் கேட்டிருக்க, இப்போது மித்ராவும், “பரவாயில்ல” என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள். 

“ஒரு நிமிஷம்” என்று முகிலன் மறுபடியும் அவளை கூப்பிட, “என்ன?” என்று அவள் புருவம் உயர்த்தி கேட்டாள். 

அந்த ஒரு நொடியில் அவளுள் மொத்தமாய் விழுந்து எழுந்தான் முகிலன். “ப்பா என்னா கண்ணுடா இது” என்று அவனால் யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை.

அதில் நொடியில் தன்னை மறந்து அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன” என்று இப்போது உதட்டை பிரித்துக் கேட்டாள்.

அதிலேயே சுயம் பெற்றவன், “அ. அது” என்று ஒரு லெட்டரை அவள் கையில் கொடுத்தான்.

அதை அவள் பிரிக்கும் முன் மறுபடியும் அவளுக்கு அழைப்பு வர, இப்போது மித்ராவோ முகிலனைத்தான் பார்த்தாள்.

அதில் அவனும், “ஒன்னும் பிரச்சனையில்ல. நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு, இதப்பாருங்க. பார்த்திட்டு பொறுமையா உங்க முடிவ சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் முகிலன்.

அதில் செல்லும் அவனையே சில நொடிகள் யோசனையாய் நின்று அவள் பார்க்க, அவளின் மனமோ அந்த லெட்டரை மீண்டும் பார்த்தது.

ஆனால் அதற்குள் அவளுக்குமே அடுத்தடுத்த அழைப்பு வர, அந்த லெட்டரை தன் பைலுக்குள் வைத்துவிட்டு வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைந்தாள்.

(அப்படி அந்த லெட்டர்ல என்ன இருக்கும்? சரி அடுத்து என்னாகப் போகுதுன்றத அடுத்தடுத்த அத்தியாயத்துல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்… 

Author:    1 Sarmi SS
Comments   1

*** காதல் – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com