இஷாந்த் மதியைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, அந்த நெடியவனோ, செல்லும் அவளையே பார்த்திருந்தான்.
அதைப் பார்த்த அவனின் அருகில் நின்றிருந்தவன், “சார். ஐ திங். யூ லைக் தட் கேர்ள்” என்று சந்தேகமாய் கேட்டான்.
அதில் தன்னை மீட்டிருந்தவன், “பாடர்ன்” என்று அவன் குழப்பமாய் அவனை பார்த்தான். உண்மையில், அவன் மதியரசியை பார்த்ததில், சில நொடிகள் வேறு உலகிற்கு சென்றிருந்தான். அதனால் அவன் சொல்லியது இவன் காதில் தெளிவாய் விழுந்திருக்கவில்லை.
உடனே இவனும், “நத்திங் சார். சால் வி கோ” என்று கேட்டான்.
“ம்” என்று சொல்லிய அந்த நெடியவனும் ஒரு நொடி திரும்பி அவள் சென்ற திசையை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றான்.
அதே நேரம் இங்கே “என்ன சார். வந்த வேகத்துலையே திருப்பி கூப்டு போறீங்க. அப்புறம் எதுக்கு இங்க வரனும்?” என்று ஆட்டோவில் தன் அருகில் அமர்ந்திருந்த இஷாந்தை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் மதியரசி.
“ஏய். கோர்ட் ல மட்டும் உனக்கு வாய் பேசவே வராது. மீதி நேரம் மட்டும் வாய திறந்தா மூடாத. உன்னலாம் எனக்கு அசிஸ்டன்டா வச்சிருக்கேன் பாரு” என்று இஷாந்த் சொல்லவும் அதன் பின் மதி வாயை திறக்கவில்லை.
ஆனால் மனதினுள் அவனை திட்டிக் கொண்டே தான் வந்தாள்.
அங்கே திடீரென, எம்,டி அறைக்குள் வேகமாக நுழைந்த முகிலன், வேந்தனை உள்ளே வர சொல்ல. அவனும் பதட்டமாக கேபினுக்குள் வந்தான்.
“என்ன பாஸ்?” என்று அவன் கேட்கும் முன்னே, “வேந்தன் இங்க என்ன நடக்குது?” என்று சற்று கோவமாய் கேட்டான் முகிலன்.
அதில் வேந்தனுக்கோ தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.
“என்னாச்சி பாஸ்?” என்று சற்று பயத்துடனும் குழப்பத்துடனும் அவன் கேட்டான்.
“அத நான் கேட்கனும் என்னாச்சின்னு. ஆனா நீ என்கிட்ட கேக்குற?” என்று எரிச்சலாய் முகிலன் அவனைப் பார்த்தான்.
அதில் வேந்தன் திருதிருவென்று முழிக்க, அதற்குள். முகிலன் மொபைலுக்கு கால் வந்தது.
அதை எடுத்த முகிலன், “வாட்! ஹவ் இஸ் திஸ் பாசிபிள்? நோ. ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்பிளேனேசன்ஸ்” என்றான்.
இங்கே முகிலன் கத்திக் கொண்டிருந்த அதே நேரம், மித்ரா தன் ஆபிஸில். “முடியாது” என்று அத்தனை அழுத்தி கூறினாள்.
அவள் குரலின் சத்தம், கம்மியாக இருந்தாலும், அந்த வார்த்தையின் கம்பீரம் சற்று அதிகமாகவே இருந்தது.
“இங்க பாருங்க வக்கில். இப்ப நீங்க அந்த பெரியவர் கேஸ் எடுக்கிறதால உங்களுக்கு என்ன லாபம்? அதுவே நீங்க எங்களுக்காக வாதாடுனா, கோடி கோடியா கொட்டி குடுக்கிறோம். அதுமட்டுமில்லாம, எங்க கம்பெனியோட லீகல் அட்வைசரா உங்கள ப்ரோமோட் பண்றோம்” என்று offer மேல் offer கொடுத்து பேசிக் கொண்டிருந்தான் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் மேனஜர்.
“நான் சொன்னது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்ல. நீங்க இப்ப என்னோட டைம வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு எப்பவுமே ஒரு விசயத்த திரும்ப திரும்ப சொல்லி பழக்கமில்லை. கெட் அவுட்” என்றாள் மித்ரா.
“தப்பு பண்றீங்க மேடம். இது மட்டும் எங்க எம்.டிக்கு தெரிஞ்சா, உங்கள ஒரே செகன்ட்ல, நீங்க இப்ப இருக்கிற இந்த இடத்தவிட்டே தூக்கிடுவாரு” என்றான் அவன்.
அன்னேரம் சரியாக “பாருடா. சார். அவ்வளவு பெரிய ஆளோ. தூக்கிடுவாராமே. எங்க தூக்க சொல்லு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள் இருவர்.
காக்கி சட்டையில் அம்சமாக பொருந்தியிருந்த, இன்ஸ்பெக்டர்ஸ் அஷ்வந்த் மற்றும் தஷ்வந்த் எனும் இரட்டையர்கள், (மித்ராவின் இரு உயிர் நண்பர்கள்)
அவர்களை பார்த்ததும், மித்ரா ஒரு சிநேகப் புன்னகையை அவர்களுக்கு கொடுத்தாள்.
பின் தன் முன்னே நின்று பேசிக்கொண்டிருந்த அந்த நபரிடம் திரும்பியவள் “உங்களால முடிஞ்சத பண்ணுங்க” என்றாள்.
அவளின் பிடிவாதம் ஒரு பக்கம் என்றாலும், போலீஸ் வேறு இருக்க அந்த மேனஜரும் அங்கிருந்து சென்றான்.
“என்ன மித்ரா? எதுவும் பிராபளமா? அவன் என்ன தூக்கிறது, அந்த கம்பெனி அட்ரஸ் குடு நாங்க தூக்குறோம்” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினர்.
“ம். நீங்க யாரையும் தூக்க வேண்டாம். ஒழுங்கா டைம்-க்கு டூட்டில போயி ஜாயின் பண்ணுங்க. இந்த ஏழு மாசத்துல எனக்காக வம்பு பண்றேன்-னு உங்க மேல பத்து கேஸு வர வேண்டியது. ஏதோ உங்க நல்ல நேரம் ஒருத்தரும் கம்பிளைன்ட் பண்ணல. இல்லன்னா நீங்க இந்த காக்கி ட்ரஸ்ஸே போட்டிருக்க முடியாது” என்று மித்ரா சற்று கோவமாக கூறினாள்.
“அப்படியே கம்பிளைன்ட் பண்ணாதான் என்ன. அதான் எங்களுக்காக வாதாட, என் பிரண்ட் வக்கில் மித்ரா இருக்காங்களே. அப்புறம் ஏன் நாங்க பயப்படனும்?” என்று இருவரும் சிரித்தப்படி கூறினர்.
“ம். ஹலோ, உங்களுக்காக வாதாடுவேன்னு நான் எப்போ சொன்னேன்? நான் நியாயம் யார் பக்கம் இருக்கோ, அவங்க பக்கம் தான் வாதாடுவேன். உங்களுக்காக கூட நான் சட்டத்தை மீற மாட்டேன்” என்று மித்ரா அத்தனை கண்டிப்புடன் கூறினாள்.
“சரி சரி. மிஸ்டர் பர்பக்ட் மித்ரா மேடம். அப்படியே நீங்க எங்கள விஷ் பண்ணா, நாங்க போயி எங்க டூட்டில ஜாயின் பண்ணுவோம்” என்று புன்னகை மாறாமலே இருவரும் கூறினர்.
அதில் சற்று இளக்கத்தை குறைத்தவள், “உங்க ரெண்டு பேருக்கும், ஆல் தி வெரி பெஸ்ட் , உங்க வொர்க்க பெஸ்டா பண்ணுங்க. அடிக்கடி வேல பாக்காம இந்தப்பக்கம் வரக்கூடாது” என்று சிறு மிரட்டலுடன் கூறினாள்.
“சரி சரி மேடம். எப்படியும், இன்ஸ்பெக்டர்க்கு கோர்ட்ல வேல வரும்தான. சோ வேல விசயமா சந்திச்சிட்டு போறோம்” என்றான் அஷ்வந்த்.
அதற்குள் “அதே மாதிரி உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் தேவைப்பட்டா, கண்டிப்பா எங்கள கூப்டனும். சரியா” என்றான் தஷ்வந்த்.
“சரிப்பா. டைம் ஆயிடுச்சி. நீங்க கிளம்புங்க” என்றாள் மித்ரா.
“சரி சரி நாங்க கிளம்புறோம். எதுக்கும் நீயும், பார்த்து பத்திரமா இரு. கொலகாரனும், கொள்ளக்காரனும் சுத்துற இடம்” என்று இருவரும் சொல்லிவிட்டு செல்ல. சரியாக அதே நேரம் இவர்கள் கேபினை கடந்து சென்றனர். இஷாந்தும், மதியரசியும்.
“ச் இப்போ எதுக்கு இந்த சார் இவ்ளோ கோவமா இருக்காருன்னே தெரியலையே” என்று மதி மனதிற்குள் யோசித்தப்படி அவனின் பின்னே சென்றாள்.
அவனோ, “இப்போ நான் எதுக்கு கோவமா இருக்கேன்னு தெரிஞ்சிட்டு நீ என்னப் பன்ணப் போற” என்று கேட்டான் இஷாந்த்.
“ஐய்யய்யோ! மயிண்ட் வாய்ஸ்னு நினைச்சி சத்தமா பேசிட்டேனோ” என்று வாய் விட்டே புலம்பினாள் மதி.
அதில் இன்னும் கடுப்பானவனோ, “உன்கிட்ட நான் சொன்ன வேலை எல்லாம் முடிச்சிட்டீயா? இல்லையா?” என்று கேட்டான்.
அதற்குள் அவர்களுடைய அலுவலகம் வந்திருக்க, “அதெல்லாம் நேத்தே பக்காவா முடிச்சிட்டேன் சார்” என்றாள்.
“முடிச்சிட்டேன்னு மட்டும் சொல்லு. பக்காவா இருக்கா இல்லையான்னு நான் சொல்றேன்” என்று எரிச்சலாய் கூறினான் இஷாந்த்.
“கன்பார்ம். இவர யாரோ என்னமோ சொல்லிருக்காங்க. இல்லன்னா, இவ்ளோ சூடா இருக்க மாட்டாரே” என்று மீண்டும் அவனைப் பற்றிய சிந்தனையில் அப்படியே நின்றான்.
அதில் இப்போது அவனோ, “ஹே மதி” என்று கத்த, அதில் மீண்டும் இவ்வுலகம் வந்தவள், “சார் நீங்க ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது. சோ நான் போய் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரேன்” என்றாள்.
“எதுக்கு? இத சாக்கு சொல்லி, அந்த மித்ராவோட ஆபிஸ் ஜன்னல் வழியா நின்னு வேடிக்க பாக்கப் போற” என்றான்.
“ஐயோ கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டாரே” என்று இவள் புலம்ப, அவனோ, “நீ எங்கேயும் போக வேண்டாம். ஒழுங்கா, இங்க உக்கார்ந்து நான் சொல்ற வேலைய பாரு” என்று அவளிடம் ஒரு கேஸ் பைலைக் கொடுத்தான்.
அங்கே அலுவலகத்தில் இருந்த முகிலனோ, “எனக்கு தெரியாது. நான் சொன்ன வேலை முடியனும், அவ்வளவுத்தான்” என்று சொல்லி போனை வைத்தான்.
அவன் முகத்தில் அத்தனை எரிச்சல். அந்த கடுப்பில் அவன் நிமிர்ந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த, வேந்தனைப் பார்த்து. “வாட், சொல்லுங்க மிஸ்டர் வேந்தன்” என்று திருப்பியும் கேள்வியாய் கேட்க ஆரம்பித்தான்.
“ஐயோ என்ன நடந்திச்சின்னு வேற தெரியலையே. இவரு எத கேட்கிறாருன்னும் புரியல. இத இவர்கிட்டயே திருப்பி கேட்டா. ஒன்னு, என் வேலை போகும், இல்லன்னா நானே போயிடுவேன். இப்ப என்ன பண்றது” என்று புரியாமல் அவன் பாவம் போல் முகிலனை பார்த்தான்
மறுபடியும் முகிலனின் போன் அடித்தது. அதை முதலில் கட் செய்தவன், மறுபடியும் வரவும், அதை அட்டண்ட் செய்து “எனக்கு ஒரு விசயத்த திரும்ப திரும்ப சொல்றது பிடிக்காது. அட் தே சேம் டைம். என்னையும் திரும்ப திரும்ப சொல்ல வைக்கிறதும் எனக்கு பிடிக்காது,. காட் இட். என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. நான் சொன்னது நடக்கனும், அது யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல” என்று சொல்லிவிட்டு மறுபடியும், வேந்தனை முகிலன் பார்த்தான்.
“ஐயோ முன்னாடி பார்த்ததை விட இப்ப ரொம்ப டெரரா பார்க்குறாரே” என்று வேந்தன் மனதினுள் புலம்ப முகிலோ சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.
அதில் வேந்தன் எச்சிலை கூட்டி விழுங்க, அவனோ அவனைப் பார்த்தப்படியே லைட்டரை தேடினான்.
உடனே வேகமாக வேந்தன் லைட்டரை எடுத்து அவனிடம் நீட்ட. அவனோ அதை வாங்கி, வேகமாக பற்ற வைக்க முயன்றான்.
ஆனால் சட்டென்று ஒரு மின்னல் கீற்று மனதினுள் பாய்ந்தது.
அவன் விரல் நுனியில் இருந்த அந்த லைட்டருக்கும், உதட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிகரெட்டிற்கும் இருந்த, அந்த ஒரு இஞ்ச் இடைவெளியை அவனால் குறைக்க முடியவில்லை.
இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக, அவனால் அதை செய்ய முடியவில்லை. மின்னலென சில நினைவுகள், அவனுடைய மனதை ஆட்கொண்டது.
அதில் வேகமாக வாயில் இருந்த சிகரெட்டை தூக்கி, குப்பைத்தொட்டியில் போட்டவன், கையில் இருந்த லைட்டரை ஆன் செய்து ஆப் செய்து அந்த தீயை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனதினுள் அதை விட அணைக்க முடியாத செந்தீச்சுடர், எரிந்துக் கொண்டிருந்தது.
என் நெஞ்சில் விழுந்த ‘மழைச் சாரலாய்’ நீ வரும் வரை,
என் கண்ணில் விழுந்த ‘மண் துகளாய்’
என் உயிரை, உறுத்திக் கொண்டேயிருக்கும்,
உன் நினைவுகள்.
(முகிலனின் வெறுப்பிற்கு யார் காரணம்? மித்ராவின் மறுப்பிற்கு என்ன காரணம்? இந்த இரு துருவங்களின் சந்திப்பினால் வரும் மின்னல் கீற்றுகளின் சினுங்கல்களை, வரும் அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி, இந்த எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தொடரும்…
Keerthi S
nice