ருத்ரா-வின் கேள்வியில் தென்றலுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“ஏய் என்னாச்சு தென்றல்? இப்ப நான் என்ன கேட்டுட்டேன்-னு இப்படி இருக்க?” என்று ருத்ரா உலுப்பும் போதே நிகழ்காலத்துக்கு வந்தாள் தென்றல்.
“ஆ..ங்.. ஒன்னும் இல்ல. என்ன கேட்ட?” என்று தென்றல் திருப்பி கேட்டாள்.
“போச்சு போ. என்ன கேட்டேனா? அப்போ நான் கேட்டது என்னன்னு கூட தெரியாமத்தான், இப்படி பேயைப் பார்த்த மாதிரி இருந்தியா?” என்று ருத்ரா கிண்டலாக கேட்டாள்.
“இல்ல.. அ..து ஏதோ நியாபகத்துல” என்று தென்றல் உளறினாள்.
“அது இல்லடி. நம்ம கோட்டையில மீட் பண்ணோம்-ல அவங்களை இதுக்கு முன்னாடி நீ பார்த்திருக்கியா? உனக்கு தெரியுமா-ன்னு கேட்டேன்” என்று ருத்ரா மீண்டும் அந்த கேள்வியை கேட்டாள்.
“யாரை? நீ யாரைப் பத்தி கேட்கிற?” என்று தென்றல் கேட்டாள்.
“ஆமா. உன்கிட்ட போயி கேட்டேன் பார்த்தியா? என்னை சொல்லனும்” என்று ருத்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“இல்லடி. அன்னிக்கு நடந்த கலவரத்துல என்ன நடந்திச்சின்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல். இதுல நீ யாரை கேட்கிற?” என்று உண்மையாகவே தென்றல் குழப்பத்துடன் கேட்டாள்.
“ஏய். நம்ம அன்னிக்கு என்ன? பத்து பேரையா பார்த்தோம்? மீட் பண்ணதே ரெண்டு பேரை தான். அதுல ஒருத்தனை எனக்கு தெரியாது. மீதி இருந்தது, ஒருத்தர் தான?” என்று ருத்ரா கேட்டாள்.
அப்போதே அபியை யோசித்துப் பார்த்த தென்றல் “இல்ல எனக்கு அவரை தெரியாது” என்று வேகமாக பதிலளித்தாள்.
“அப்படியா? ஆனா எனக்கு ஏற்கனவே அவரை பார்த்த மாதிரியே இருந்திச்சு. அப்புறம் அன்னிக்கு என்னை ரயில்வே ட்ராக்-ல வச்சி காப்பாத்துனதும் அவர் தான்” என்று ருத்ரா கூறினாள்.
“ஏய் நீ தான் உன்னை யார் காப்பாத்துனாங்கன்னு தெரியாது-ன்னு சொன்னதான?” என்று தென்றல் கேட்டாள்.
“ஆமா. ஆனா என் கேமரா-ல அந்த போட்டோ இருந்திச்சு” என்று ருத்ரா அன்றைய நிகழ்வை விளக்க முயற்சித்தாள்.
சரியாக அந்நேரம், ருத்ரா-வின் மொபைல் அடித்தது.
“யாரு கால் பண்ணிருக்கா?” என்று தென்றல் பேச்சை மாற்றினாள்.
“ஏதாச்சும் கஸ்டமர் கேர் காரன்னா இருக்கும்” என்று ருத்ரா சலிப்பாக சொல்ல,
“ஏய் ஏதாச்சும் முக்கியமான கால்லா இருக்க போகுது” என்று தென்றல் கூறினாள்.
ருத்ரா மொபைலை எடுத்துப் பார்க்க அன்நோன் என்று வந்தது.
அதை அட்டன்ட் செய்து “சொல்லுங்க” என்று கூறினாள்.
“மேம். உங்களோட கேமரா சர்வீஸூக்கு கொடுத்திருக்கீங்க தான? அதை ரெடி பண்ணியாச்சி வந்து வாங்கிக்கோங்க” என்று அந்தப்பக்கம் சொல்லப்பட்டது.
“நானா? கேமரா-வா? அப்படி எதுவும் சர்வீஸ் கொடுக்கலையே” என்று ருத்ரா சொல்ல
“இல்ல மேம். உங்க நம்பர் தான் கொடுத்திருக்காங்க” என்று அந்த கடைக்காரர் சொல்ல
“என்னடா இது? நானே, என் கேமரா-வ மிஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கேன். இவன் என்னன்னா? என் கேமராவை சர்விஸூக்கு கொடுத்திருக்கு-ன்னு சொல்றான்” என்று ருத்ரா யோசித்துக் கொண்டிருந்தாள்.
“மேடம் உங்க நம்பருக்கு, இந்த கேமரா-வோட போட்டோ அனுப்பியிருக்கேன். உங்களோடதா-ன்னு பாருங்க” என்று அந்த பையன் சொல்ல.
ருத்ரா வேகமாக வாட்ஸப்பை ஆன் செய்து பார்த்தாள். ஆம். அது அவள் கேமராவே தான். அவளால் நம்பவே முடியவில்லை.
“ஆமா என் கேமரா தான். ஆனா இதை உங்ககிட்ட கொடுத்தது யாரு?” என்று ருத்ரா ஆச்சர்யமாக கேட்டாள்.
“எங்களுக்கு கொரியர் ல தான் மேடம் வந்திச்சு. அதனால எங்களுக்கு தெரியல” என்று அவர் கூறினார்.
“சரி உங்க ஷாப் அட்ரஸ் சொல்லுங்க. நான் வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்” என்று ருத்ரா சொல்ல, அவரும் அவருடைய அட்ரஸை வாட்சப் செய்தார்.
அதன் பின் ருத்ரா மற்றும் தென்றல், இருவரும் அந்த கடைக்கு சென்றனர்.
“இந்தாங்க மேம் உங்க கேமரா” என்று அந்த கடைக்காரர் நீட்ட, தன் கேமராவை பார்த்த சந்தோஷத்தில், அதை தூக்கி முத்தமிட்டாள்.
“சரி சர்வீஸூக்கு எவ்வளவு ஆச்சு?” என்று ருத்ரா கேட்டாள்.
“இல்ல மேம். பேலன்ஸ் நாங்க தான் கொடுக்கனும்” என்று அவர் மீதி தொகையை எடுத்து ருத்ராவிடம் நீட்டினார்.
“கொரியர்-ல இதோட சேர்த்து அமெளன்ட்-ம் அனுப்பிட்டாங்க” என்று அந்த கடைக்காரர் சொல்ல.
“யாரா இருக்கும்?” என்று ருத்ரா யோசித்துக் கொண்டே, “ஆமா அந்த கொரியர் வந்த அட்ரஸ் இருக்கா?” என்று வேகமாக கேட்டாள்.
“நில்லுங்க மேடம் பார்க்கிறேன்” என்று அவன் தேடிப்பார்த்து ஒரு கவரை நீட்டினான்.
அதில் இருந்த அட்ரஸ் தெளிவாக இல்லை. இருந்தாலும் அதை தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள் ருத்ரா.
“சரி கிளம்புவோமா?” என்று தென்றல் கேட்க,
அதன் பின் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
அதே நேரம் “சார். உங்களைப் பார்க்கிறதுக்காக, எம்.ஆர் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஜி.எம் வெயிட் பண்றாங்க” என்று ஒருவன் கூறினான்.
“இப்ப நான் யாரையும் மீட் பண்ண முடியாது-ன்னு சொல்லிடு” என்று கரராக கூறினான். சித்தார்த்.
“இல்ல சார்.. அ..து” என்று அவன் தயங்கினான்.
“நான் சொன்னது உனக்கு கேட்கலையா? இல்ல புரியலையா? கேட்கல அப்படின்னா, உடனே ஹாஸ்பிடல்-க்கு போங்க. புரியல அப்படின்னா, இந்த வேலைய விட்டே போகலாம்” என்று மிக சாதாரணமாக கூறினான்.
அதன் பின் அடுத்த வார்த்தை பேசாமல், அவன் கேபினில் இருந்து வெளியில் சென்றிருந்தான்.
அந்நேரம் அவன் மொபைலுக்கு அழைப்பு வந்தது. யார் என்று பார்க்காமலே, அந்த மொபைலின் அழைப்பை துண்டித்தான்.
அங்கே கல்லூரியில், ருத்ரா ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு ருத்ரா?” என்று தென்றல் கேட்க
“நம்ம பீச்சுக்கு போவோமா?” என்று கேட்டாள்.
பொதுவாக ருத்ரா எதையும் கேட்கும் ரகமே கிடையாது. போவோமா? என்பது எல்லாம் அவ வாழ்க்கையில் கிடையாது. போறோம். கிளம்பு அப்படின்னு தான் சொல்லுவா.
“ம்” என்று தென்றல் தலையாட்டினாள்.
“ஸ்ப்பா. வாழ்க்கையில முதல் தடவை நான் கூப்டு உடனே சரி சொல்லிருக்க. அப்போ வா. சீக்கிரம் கிளம்புவோம். இல்லன்னா மனசு மாறுனாலும் மாறிடுவ” என்று ருத்ரா சொன்னதோடு இல்லாமல், அவள் கையைப் பிடித்து இழுத்து சென்றாள்.
மாலை நேர இள வெயிலில் கடற்கரை மண்ணில் நடக்க யாருக்குத்தான் பிடிக்காது?
அந்த வேலையைத்தான் ருத்ரா-வும், தென்றலும் செய்துக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் தென்றல் “ஏய் இன்னும் எவ்வளவு தூரம் நடக்கிறது? எனக்கு கால் வலிக்குது. வா உட்காருவோம்” என்று கூப்பிட்டாள்.
“சரி. நீ போ. போயி உட்காரு. நான் கொஞ்ச நேரம், கடல் ல கால் நனைச்சிட்டு வரேன்” என்று ருத்ரா கூறினாள்.
தென்றலும் சற்று தள்ளி அமர்ந்து ருத்ரா விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் இரு சிறுவர்கள் மணல் வீடு கட்டிக் கொண்டிருப்பதை பார்த்ததும், இவளுக்கு விளையாட ஆசை தோன்றியது.
அதனால், இவளும் மனல் கோட்டையை கட்ட ஆரம்பித்தாள்.
அதே நேரம் ருத்ரா, கடலின் ஆழம் வரை சென்று விளையாடிக் கொண்டிருந்தாள்.
இப்படியாக நேரம் ஓட, தென்றல் ருத்ரா-வை சுத்தமாக மறந்து விட்டாள்.
அவள் சாதாரண வீடு என்று ஆரம்பித்து, பின் என்ன நினைத்தாளோ, அந்த மனுவேந்தனின் கோட்டையை தத்ரூபமாக, அவளையும் அறியாமல் கட்ட ஆரம்பித்திருந்தாள்.
“வாவ் தென்றல்.. பாரேன் எவ்வளவு பெரிய அலை” என்று ருத்ரா ஆவலாக சொல்ல, தென்றல் அந்தப்பக்கம் திரும்பவே இல்லை.
இப்படியாக, ருத்ரா கடலின் உள்ளே சென்று கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தென்றல் திரும்பவே இல்லை என்றதும் “இவ என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கரைக்கு செல்ல திரும்பும் நேரம், ஒரு பெரிய அலை, அவளை உள்ளே இழுத்தது.
அதை சற்றும் எதிர்ப்பார்க்காத, ருத்ரா தடுமாறினாள். “தென்றல்” என்று கூப்பிட முயற்சித்தாள். ஆனால் பலன் பூஜ்ஜியம்.
“இனி உம்மை எவராலும், எம்மிடம் இருந்து காக்க இயலாது இளவரசி” என்று அந்த கடலலைகளின் மத்தியில், மின்னிய சிவந்த விழிகள் ஆக்ரோசமாய் கூறியது.
அந்த கடலலை, அவளை மயக்கத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தது.
அவள் தன்னிலை மொத்தமாக இழக்க ஆரம்பித்தாள், கண்முன் ஏதோ ஒரு காட்சி தோன்ற ஆரம்பித்தது.
“என்ன இளவரசி கூறுகிறீர்கள்? உண்மையாவா? நீர் அவரை பார்த்தீரா? எனக்காக பேசினீர்களா?” என்று ஆவலாக ஒரு பெண், அந்த பெண் பாவையிடம் கேட்க.
“ஏய். பொறுமை. பொறுமை. ஏன் இவ்வளவு அவசரம்? அவன் என்ன கந்தர்வ கண்ணனா? அவனை நாம் பார்க்க வரமா வாங்க வேண்டும்? நீ ஏன் இப்படி எப்போது பார்த்தாலும், அவனின் புகழை பாடிக் கொண்டிருக்கிறாய்?” என்று சற்று எரிச்சலாகவே பதிலளித்தாள்.
“என்ன இளவரசியாரே இப்படி கூறி விட்டீர்கள். அவரைக் காண, நம் நாட்டு பெண்கள் மட்டும் இல்ல, அயல் நாட்டு இளவரசிகள் கூட தவம் கிடைக்கிறார்கள். அப்படி இருக்க, நீங்கள் என்னவென்றால், இப்படி அவரை பார்த்த ஆர்வம் சிறிதும் இன்றி இப்படி பேசுகிறீர்கள்” என்று அந்தப் பெண் பக்கம் பக்கமாய் பேசினாள்.
“போதும் போதும். உம் கனவு கண்ணனின் அறிமுகம். இதைக் கேட்டு கேட்டு, என் காது புளித்து போய் விட்டது. ஆனால் நீர் சொல்லும் அளவுக்கு அவன் ஒன்றும் வீரனனாகவோ? இல்லை அழகனாகவோ என் விழியில் படவில்லை” என்று இளவரசி கூறினாள்.
“போங்கள் இளவரசி. அவரை அழகன் என்று சொல்லாவிட்டால், உங்களுக்கு ரசிப்பு தன்மை-யே இல்லை என்று சொல்வேன். அவரின் ஓர்விழிப்பார்வை தன் மேல் விழுமா? என்று தேவலோக மங்கைகளே வரம் கேட்பார்கள்” என்று அந்தப் பெண் விடாமல் கூறினாள்.
“என்ன? என் ரசிப்பு தன்மையையே குறை சொல்கிறாயா நீ?” என்று இளவரசி கோவமாக கேட்டாள்.
“ஐயோ பிழை செய்து விட்டேன். என்னை மன்னியும் இளவரசி. நான் போய் அப்படி எல்லாம் பிதற்றுவேனா? நான் சொல்ல வந்தது என்னவென்றால், உண்மையில் அவர் ஒரு பேரழகன் இளவரசி. ஆனால் உங்கள் கண்களுக்கு அப்படி தோன்றவில்லை என்றால்? ஒரு வேளை நீங்கள் இன்று கண்டது அவராக இருக்க முடியாது. என்று தான் சொல்ல வந்தேன்” என்று சமாளித்தாள் அந்த பேதைப் பெண்.
“ம் இருந்தாலும் உமக்கு, அந்த காந்தர்வ கள்ளன் மீது இவ்வளவு ஈடுபாடு கூடாது மல்லி” என்று சலிப்பாக கூறினாள் இளவரசி.
“எனக்கு இருந்து என்னாகப் போகுது இளவரசி. எம் தகுதிக்கெல்லாம், அவர் நாமத்தை கூட ஜெபிக்க இயலாது. ஏதோ உங்கள் பணிப்பெண்ணாக இருக்கும் ஒரே காரணத்தால், அவரை தூரத்தில் இருந்தாவது ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அவ்வளவுத்தான் என் ஆசை” என்று அந்தப்பெண் ஒரு ஏக்கப் பெருமூச்சோடு கூறினாள்.
“ம் சரி. சரி. உன் கனவு நாயகனை விட்டு விட்டு, எமக்கு பசிக்கு ஏதாவது எடுத்து வர முடியுமா?” என்று இளவரசி கிண்டலாக கேட்டார்.
“மன்னியும் இளவரசி. இப்போதே எடுத்து வருகிறேன்” என்று அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்போது தான், அவளுக்கு காலையில் அவனை சந்தித்த நிகழ்வு வந்தது.
அந்த பிரமாண்ட கோட்டையின் உச்சியில், இருந்த அவனின் அறையில், திராட்சை கொத்தை மொத்தமாக பிடித்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது, எங்கோ துள்ளி ஓடும் மானின் மிரட்சி சத்தமும், அவள் பின்னே ஓடும் வெண்பிஞ்சு பாதங்களின், கொலுசோசை சத்தமும், மிக தின்னமாக அவன் செவியில் விழுந்தது.
சட்டென்று அங்கிருந்து எழுந்தவன், அங்கிருந்த ஜன்னல் வழியே, கீழே தோட்டத்தை பார்த்தான். எல்லாம் சரியாக இருப்பது போல் தான் தெரிந்தது. இருந்தும் புதரின் அருகே ஏதோ ஒரு அசைவு தெரிவது போல் இருந்தது. வேகமாக, தன் ஆயுதமான வில்லை தோளில் போட்டுக் கொண்டு அங்கு விரைந்தான்.
அவனின் வேகநடையை வைத்தே, அவனின் மற்ற வீரர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.
ஒரு நொடி நின்று பின் திரும்பி “இப்போது எதற்கு நீங்கள் எல்லாம் எம்மை பின் தொடர்ந்து வருகிறீர்கள் என்று நான் தெரிந்துக் கொள்ளலாமா?” என்று கேள்வியாக கேட்டாலும், மிக தெளிவாக கேட்டான்.
“இல்ல இளவரசரே. அது. நீங்கள். சென்றீர்கள்.. அதான்” என்று அவனின் படைத் தளபதி மற்றும் ஆசான நண்பருமானவன் கூறினான்.
“அதாவது. நான் சென்றால், நீங்கள் வருவீர்கள், நான் நின்றால் நீங்கள் நிற்பீர்கள். அப்படியானால் சுயமாய் நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் அப்படித்தானே?” என்று அவன் கேட்டான்.
அதைக்கேட்டதும் அனைவரும் அமைதியாக நின்றனர்.
“செல்லுங்கள். இன்னும் இங்கு ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? நான் சிறிது நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வருகிறேன்” என்று கூறினான் அவன்.
அதைக்கேட்டதும், அவனின் நண்பன் “நானாவது உன்னுடன் வரலாமா? இல்லை” என்று தயக்கமாக கேட்டான்.
“ம். இதை நீ இப்போது என் தோழனாக கேட்கிறாயா? இல்லை, இந்நாட்டின் படைத் தளபதியாக கேட்கிறாயா?” என்று இளவரசனும் சரிக்கு சமமாக கேட்டான்.
“நீங்கள் இளவரசராக எம்மை அழைத்தால், நான் படைத் தளபதியாக வருவேன். இல்லை நீங்கள் என் நண்பனாக அழைத்தால், உயிர் காக்கும் தோழனாக வருவேன்” என்று கூறினான்.
“ம் பராவாயில்லை. உயிர் காக்கும் அளவுக்கு நான் புலி வேட்டைக்கெல்லாம் செல்லவில்லை. சாதாரண மான்வேட்டை தான். அதனால் வெறும் தோழனாக வந்தால் போதும்” என்று சொல்லிவிட்டு, அவன் முன் சென்றான்.
அங்கே.. தோட்டத்துக்கு சென்றதும், சட்டென்று, அவன், ஓரிடத்தில் ஒளிந்துக் கொண்டான். அவன் செவியை தீட்டினான். அதில் மானின் ஓட்டம் தெளிவாக கேட்டது. அதை நோக்கி குறி வைத்தான்.
அவன் கரங்கள், அம்மானை குறி வைக்கும் நொடி, அவன் கரங்களுக்குள், மற்றுமொரு கரம் வந்து அதை தடுத்தது.
வேகமாக நிமிர்ந்து அவன் பார்க்க, அப்படியே நின்றான். அவனின் வில்லில் இருந்து, தானாக, அம்பு அந்த மானின் மீது பாய சென்றது.
(குறிவைத்தது மானுக்கா? இல்லை யாருக்கு? இந்த கரத்திற்கு உரிமையானவனா? இல்ல சொந்தம் கொள்ள தயங்குபவனா? அடுத்து என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். இந்த கதையைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும்...)
சாபம் தீருமா?..
Keerthi S
super
Rajaa Jaman
ருத்ராக்கு என்னாச்சு
Ramya Iyer
ore marmamaaga ulladhu