ஒரு தலை ராகம் 💔

“முதல் பார்வையில் மின்னல் ஒன்று,

மனதை அறைந்த விந்தை இதுவா?

அவன் சிரிப்பினில் தொலைந்த இதயம்,

இதுதான் காதலின் தொடக்கமா?

அவள் தோழியின் தோள் சாயும் நிழல்,

அவன் விழிகள் அவளைத் தேடுதே.

என் காதல் மட்டும் கானல் நீரோ,

நெஞ்சுக்குள் புகைந்து வாடுதே.

மறைத்தேன் என் காதல் ரகசியத்தை,

தோழியின் சந்தோஷம் பெரிதென்று.

அவர் இணைந்து சிரிக்கும் போதெல்லாம்,

உள்ளுக்குள் வலிக்கும் ஒரு நொடி இன்று.

அவன் கேட்கிறான் அவள் மனதை,

நான் பொய்யான பதில்கள் உரைக்கிறேன்.

என் காதல் ஒருதலைப் பயணமோ,

கண்ணீரை மட்டும் சுமக்கிறேன்.

அவள் வீட்டின் கட்டளை ஒரு சுவரோ,

அவர் காதல் தடுமாறும் நேரம்.

நான் தோழமையின் கரம் நீட்டுகிறேன்,

என் காதல் சொல்ல ஒரு வார்த்தை ஏது?

கண்ணீரும் மௌனமும் தோழனாக,

என் இதயம் தனிமையில் துடிக்கிறது.

அவர் வாழ்வில் நான் ஒரு நிழலோ,

இதுதான் என் காதலா?” 

- Sarmi SS

Author:    1 Sarmi SS
Comments   2

*** ஒரு தலை ராகம் 💔 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com