முத்தமழை – 13

தீரஜைப் பார்த்த பெண்கள், எல்லாம் அவனை நோக்கி வேகமாய் ஓட, இப்போது சிலர் ஜான்வியையும் இடித்து தள்ளியிருந்தனர். அதில், அவள் தடுமாறி, அருகில் நின்றிருந்த நீலவேனியின் மீது சென்று விழுந்தாள்.

அவள் விழவும், நீலாவின் கையில் இருந்த ஜூஸ், அவளுடைய சேலையில் கொட்டியிருந்தது. அதில் அவள் காளியாய் மாறியிருக்க, “ஐயோ சாரிங்க” என்று சொல்ல திரும்பிய ஜான்வியின் விழியில், தீரஜ் விழுந்தான்.

ஒரு பக்கம், நீலா, மறு பக்கம் தீரஜ் என்று அவள் விழியில் தெரிய, அவளின் இதயம் துடிப்பை நிறுத்தியிருந்தது.

ஜான்வி அப்படியே நின்றிருக்க, “யூ ப்ளடி இடியட்” என்று நீலா வேகமாய் அடிக்க கரத்தை ஓங்க, இப்போது அவளின் கரம், ஜான்விக்கு குறுக்கே வந்து நின்ற ஜித்தேஷின் கன்னத்தில் விழுந்திருந்தது.

அப்போதே இவ்வுலகம் வந்த ஜான்வி, மேலும் அதிர்ந்து, “ஐயோ” என்று ஏதோ சொல்லப் போக, இப்போது நீலாவும் கூட ஜித்தேஷ் வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும்.

அவள் கண்ணிலும் மெல்லிய அதிர்ச்சி தெரிய, ஆனால் அதற்குள் ஜித்தேஷ், “என் கூட வா” என்று ஜான்வியின் கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்து சென்றான்.

அதைப் பார்த்த நீலாவுக்கோ, காரணமேயின்றி எரிச்சல் கடகடவென்று கூட, அதற்குள் அருகில் நின்றிருந்தவளோ, “அது உன் அத்தை பையன் தான? கூட இருக்கிறது யாரு?” என்று கேட்டாள்.

“அவன் என் அத்தை பையன் கிடையாது. அவன் எங்க கம்பெனியில வேல பாக்குற ஒருத்தன் அவ்வளவுத்தான்” என்று எரிச்சலாய் சொல்லிய நீலாவுக்கோ, இப்போது ஜான்வியின் மீது கொலைவெறியே வந்தது.

அதில் அங்கிருந்த ட்ரிங்கை எடுத்து கடகடவென்று குடித்தாள். பின் ஒரு வித எரிச்சலுடன் வாஸ்ரூமை நோக்கி அவள் சென்றிருக்க, இங்கே தீரஜோ, அவனை சுற்றி நின்றிருந்த பெண்களைப் பார்த்து எரிச்சலானான்.

“ஜஸ்ட் லீவ் ஆல்” என்று அவன் அவனைத் தொட வந்த பெண்ணை, உதறிவிட்டு நடந்தான்.

அவனின் செயலில், இப்போது நரேந்திரரோ, “இவன் ஏன் இப்படி இருக்கான்?” என்று கேசவ்விடம் கூறினார்.

அங்கே ஜித்தேஷோ, ஜான்வியிடம், “இங்க நீ என்னப் பண்ணிட்டிருக்க?” என்று பதட்டமாய் கேட்டான். அதில் அவளோ, “சாரிங்க. என்னாலத்தான்” என்றவள் அவன் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடத்தைப் பார்த்து கூறினாள்.

அதில் அவனோ, “ச், இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. மொதல்ல நீ இங்க இருந்து கெளம்பி போ” என்றான்.

“ஆனா. நான் இங்க” என்று ஜான்வி சொல்லும் முன்னே, “ஹாய் ஜித்து, ஜான்விய உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கேட்டப்படி அங்கு வந்தான் கேசவ்.

அதில் இப்போது ஜித்தேஷோ, “தெரிஞ்ச பொண்ணு” என்று சொல்ல, “ஓ தெரிஞ்ச பொண்ணா?” என்று கிண்டலாய் கேசவ் கேட்க, அதற்குள், நரேந்திரர், கேசவ்வை அழைத்தார்.

உடனே கேசவோ, “ஜான்வி, நம்ம போலாம்” என்று சொல்ல, அவளுக்கோ இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை. அதற்குள்ளாக, அங்கே வந்த இனியனோ, “ஜித்தேஷ், அங்க உன் ப்ரண்ட் என்னப் பண்றான்னு பாரு” என்றான்.

அதில் ஜித்தேஷுக்கோ இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை. அதில் அவனும் ஜான்வியை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும், இப்போது இனியனோ, கேசவிடம், “இது ஜஸ்ட் பார்மல் இண்ட்ரோ மீட் தான். சோ இப்பவே, நீங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணனும்னு இல்ல. பார்டீய எஞ்சாய் பண்ணுங்க” என்றான்.

“ஒகே சார்” என்று சொல்லிய கேசவும் அங்கிருந்து சென்றுவிட, இப்போது இனியனோ, “ஆர் யூ ஒகே?” என்று கேட்டப்படி தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினான்.

அதில் இப்போது அவள் இனியனைப் பார்க்க, அவனோ, “ரொம்ப ஸ்வெட்டாகியிருக்கு” என்றான்.

“ஆங்” என்றவள் பதட்டமாய் அந்த கர்ஷீப்பை வாங்கி, முகத்தை துடைத்தாள். “ப்ரஷர் எல்லாம் எதுவும் வேண்டாம். உங்களுக்கு இங்க கன்வீனியண்டா இல்லன்னா, நீங்க ரூமுக்கு போங்க. நான் இங்க பாத்துக்கிறேன்” என்றான்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிய ஜான்வி, அவனின் கைக்குட்டையை, அவனிடமே கொடுத்துவிட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள்.

அதற்குள், நரேந்திரர், இனியனைத் தேட, அவனும் அவரோடு சேர்ந்து இன்வெஸ்டருடன் பேச சென்றான். கையில் இருந்த கைக்குட்டையில், அவளின் பொட்டு ஒட்டியிருக்க, அதைப் பார்த்தவன், அப்படியே அதை தன்னுடைய கோர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அங்கே தீரஜ்ஜோ, “இதுக்குத்தான் இங்கெல்லாம் நான் வர மாட்டேன்னு சொன்னேன்” என்று அவன் சொல்ல, அதில் ஜித்தேஷோ, “ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் தான். கெஸ்ட்க்கு ஒரு ஹாய் ஹலோ சொல்லிட்டு கெளம்பிடலாம்” என்றான்.

“இந்த பொண்ணுங்க எல்லாம் என் பக்கத்துல கூட வரக் கூடாது” என்று எச்சரித்துவிட்டு இப்போது நரேந்திரரை நோக்கி சென்றான்.

அவனைப் பார்த்ததும், வந்திருந்த இன்வெஸ்டர், “இவர் தான் உங்க மூத்த சன் இல்லையா?” என்று கேட்டார்.

“ஆமா” என்று அவர் சொல்லும் முன்னே, “ஆக்சிவலி, இந்த கம்பெனியோட ப்ராண்ட் அம்பாஸிடர் நான் தான்” என்று தன் கரத்தை நீட்டினார்.

அதில் அவனின் அப்பா பல்லைக் கடிக்க, அவர்களோ, “நைஸ் டூ மீட் யூ. ஆக்சிவலி, வி ஆர் நாட் தட் மச் இண்ட்ரஸ்டட் இன் ஸ்போர்ட்ஸ். பட். வி ஆர் வெரி ஹாப்பி டூ கனெக்ட் வித் யூ” என்றார்.

அத்ல் இப்போது பிடித்திருந்த அவர் கரத்தை அழுத்திப் பிடித்தவனோ, “ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரஸ்ட் இல்லாம, ஸ்போர்ட்ஸ்ல, இன்வெஸ்ட் பண்ண வந்துட்டீங்க. வாவ். இட்ஸ் ஏ கிரேட் திங்” என்று அத்தனை நக்கலாய் கூறினான்.

அதில் அவர்கள் முகம் மாறப் போக, இனியன் தான், “நம்ம பங்க்சன் ஸ்டார்ட் பண்ணலாம். ஹேவ் ஏ ட்ரிங்” என்று அவர்களோடு சேர்ந்து கிளாஸை கையில் எடுத்தான்.

அதை எல்லாம் தீரஜ் அலட்சியமாய் உதறி தள்ளிவிட்டு, இப்போது, நரேந்தரரிடம், “உங்கள மாதிரியே. உங்க இன்வெஸ்டர்ஸும் வேஸ்டா இருக்காங்க டேட்” என்று படு நக்கலாய் கூறினான்.

“தீரஜ்” என்று அவர் முறைக்க, இவனோ, “தீரஜ் வர்மன்” என்று திருத்தியப்படி அங்கிருந்த மது கிளாஸை கையில் எடுத்தான்.

இன்வெஸ்டருடன் வந்திருந்த பெண், “சியர்ஸ்” என்று நீட்ட, அதென்னவோ அவனுக்கு பெண்களைப் பார்த்தாலே அலர்ஜிதான். அதில், இப்போது அருகில் நின்றிருந்தவனுக்கு சியர்ஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதில் அந்தப் பெண் தீரஜைப் பார்க்க, உடனே இனியன் தான் அவளுக்கு சியர்ஸ் கொடுத்தான்.

இப்போது மது கிளாஸோடு தனியே வந்தவனின் பார்வை, அங்கே நின்றிருந்த அத்தனைப் பேரையும் அலட்சியமாய் பார்த்தது. மெல்ல ஒரு சிப் குடித்தவன், ஜித்தேஷை தேட, “ஹாய் தீரஜ்” என்று சொல்லியப்படி ஒருவர் அவனிடம் வந்தார்.

ஜித்தேஷை அங்கே நரேந்திரர் பிடித்து வைத்திருக்க, இப்போது தீரஜோ, அவரை மேலிருந்து கீழாய் பார்த்தான். “ஆக்சிவலி, யு லுக் சோ யங் அண்ட் ஹாண்ட்சம்” என்றார்.

இப்போது நெற்றியை சுருக்கியவனோ, சற்றும் யோசிக்காமல், “ஐயம் நாட்ன் இண்ட்ரஸ்டட் பார் மென்ஸ்” என்றான்.

அதில் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட, “நோ நோ தீரஜ். ஐயம் ஜஸ்ட், என்னோட ப்ராண்ட் பத்தி உங்ககிட்ட” என்று சொல்ல வந்தான்.

உடனே இப்போது அவனோ, “ஐயம் நாட் இண்ட்ரஸ்டட் இன் திஸ் கைண்ட் ஆப் பிஸ்னஸ் டூ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவனுக்கு எரிச்சலாய் வந்தது. அவனுக்கும், இந்த இடத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. 

அங்கே ஜான்வியும் பார்டி ஹாலில் இருந்து தப்பித்து வெளியில் வந்திருந்தாள்.

அத்தனைப் பேரும் உள்ளே இருக்க, இப்போது இவளுக்கோ அப்போதுதான் அவளுடைய மொபைலை தேட வேண்டும் என்ற நினைவே வந்தது.

அங்கே ஒரு கிளாஸை குடித்து முடித்தவன், யாரிடமும் சொல்லாது அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

ஜித்தேஷ், தீரஜை தேடி வெளியில் செல்லும் போது, “ஹேய்” என்று சொல்லியப்படி நீலா அவனின் முன்னே வந்தாள்.

அவளைப் பார்த்ததும், “இங்கப்பாரு. உன்கிட்ட சண்ட போடுற மயிண்ட் செட்ல இப்போ நான் இல்ல. ஓவரா குடிக்காம, ரூமுக்கு போயி தூங்கு” என்று சொல்லிவிட்டு விலகி செல்ல முயன்றான்.

அதில், இப்போது அவளோ, அவன் சட்டையைப் பிடித்து, “என் கண்ணு முன்னாடி உன்னை வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான” என்றாள் நீலவேணி.

அதில் அவனோ, “நான் இங்க தீரஜ் கூட வந்தேன்” என்று சொல்லிவிட்டு நகரப் போக, “யாரு அந்த பொண்ணு” என்றாள்.

“என்ன?” என்று கேட்க நினைத்தவன், பின் ஒரு வித எரிச்சலுடன். “உங்க குடும்பத்துக்கு என்னத்தான் பிரச்சன. வேண்டாம்னு ஒதுங்கி போனாலும், திரும்ப திரும்ப வந்து ப்ரச்சன பண்ணிட்டே இருக்கீங்க. அதான் உங்க குடும்ப சொத்துக்கும், எங்க அப்பாக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லி விலகிட்டோம்தான. இன்னும் உங்களுக்கு என்னத்தான் வேணும்” என்றான்.

“ஹே, என்ன? அது எங்க ப்ராபர்டி. அத மொத்தமா கொள்ளையடிக்கத்தான. நீயும், உன் அம்மாவும் பிளான் பண்ணீங்க” என்று இகழ்ச்சியாய் கூறினாள் நீலவேணி.

அதில் அவனுடைய கோவம் கடகடவென்று கூட, “என் அம்மாவ பத்தி பேசாத” என்றான்.

“ஓ ஐயம் சாரி. உன் அம்மா இப்போ உன் அம்மா இல்லல்ல. எக்ஸ் அம்மாதான. அதான் உனக்காக இன்னொரு அப்பாவ பாத்து வெச்சிருக்காங்க போல” என்று நீலவேணி சொல்லி முடிக்கும் முன்னே அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான் ஜித்தேஷ்.

அதே நேரம் இங்கே, ஜான்வியோ, “முதல்ல ராகவ்கிட்ட, இங்க இருந்து நான் கிளம்ப போறேன்னு சொல்லனும்” என்று தனக்குள் புலம்பியப்படி அந்த புல் தரையில் மொபைலை தேடிக் கொண்டிருந்தாள்.

“இத நீ அப்பவே சொல்லிருந்தா, தேவையில்லாம இவ்ளோ பிரச்சனையாகியிருக்குமா?” என்று மனம் கேள்வி கேட்க, “ச் நீ வேற ஏன் என்னை டென்சன் பண்ற. இந்த மொபைல் வேற எங்க விழுந்திச்சுன்னே தெரியலையே’ என்றவள், அந்த நீச்சல்குளத்துக்கு அருகில் வந்தாள்.

அந்த இடமே இருட்டாய் இருக்க, அங்கே பெயருக்கு கூட யாரும் இல்லை.

அதை எல்லாம் கண்டுக்கொள்ளாது அவள் சுற்றி முற்றி தேட அங்கே ஒரு புதரின் ஓரத்தில், அந்த மொபைல் கிடந்தது.

அதைப் பார்த்தவுடனே நிம்மதியானவள், வேகமாய் அதை சென்று அவள் எடுக்கப் போக, இப்போது அந்த மொபைலை மிதித்தப்படி வந்து நின்றான் தீரஜ்.

அதில் அவள் நிமிர்ந்துப் பார்க்க, அங்கே அவனோ, போனில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான்.

“ஐயோ இவரா?” என்றவள் அவசரமாய், அந்த புதருக்கு பின்னே சென்று ஒழிய, இப்போது அவனோ, “எனக்கு எத பத்தியும் கவல கிடையாது. சோ, ரீசன் சொல்லாம முடிக்கனும். இல்லன்னா, அவ்ளோதான்” என்று மேலும் சில ஆங்கில வார்த்தைகளில் திட்டிவிட்டு கால்லை கட் செய்தான்.

“இவர் எப்பவுமே இப்படித்தான் கோவமா இருப்பாரா?” என்று தனக்குள் அவள் கேட்க, அதற்குள், தீரஜுஜ்கோ ஏதோ சத்தம் கேட்டு புதரைப் பார்த்தான்.

அதில் அவள் வாயை மூடிக்கொள்ள, அவனோ புருவத்தை சுழித்துவிட்டு, அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் புதரில் இருந்து வெளியில் வந்தவள், “நல்ல வேள போய்ட்டாரு” என்று வாய் விட்டே சொல்லி முடிக்கும் முன்னே, சட்டென்று அவள் இடையைப் பிடித்து தன் பக்கம் பிடித்திழுத்திருந்தான் தீரஜ்.

(சோலி முடிஞ்சிது. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் இன்னும் ரெண்டு எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   2

*** முத்தமழை – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com