⚠️ காப்புரிமை எச்சரிக்கை
என்னுடைய இந்தக் கதை மற்றும் இதில் இடம்பெறும் அனைத்து அத்தியாயங்கள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி முழுமையாக பாதுகாக்கப்பட்டவை.
இந்தக் கதையை முழுமையாகவோ, பகுதியாகவோ நகலெடுக்கவும், காப்பி செய்யவும், மறுபதிப்பு செய்யவும், மாற்றி வெளியிடவும் அல்லது எந்த வடிவிலும் அனுமதியின்றி பயன்படுத்தவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறுபவர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“ஏய் என்னப்பா, இப்படி மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க. சார் வர்றதுக்குள்ள வேலைய முடிங்க. இல்லன்னா, இன்னிக்கு ஷூட்டிங் நடந்த மாதிரித்தான்” என்று ஒருவன் சொல்ல,
“என்ன இது? நேத்து எடுத்த சீன் பேக்கிரவுண்ட்ட இன்னும் மாத்தலையா. போச்சி போச்சி. எங்க அந்த ஆர்ட் டைரக்டர்?” என்று அடுத்தடுத்து சத்தம் வந்து கொண்டிருந்திருந்தது.
அதைப் பார்த்த ஒருவனோ, “ஆமா மச்சி, என்னடா இது. வழக்கமா பத்து மணிக்கு சூட்டிங்னா மதியம் ஒரு மணிக்கு வர்ற ஹீரோயின் கூட, இப்படி எட்டு மணிக்கே ஆஜராகியிருக்காங்க. அப்படி யாரு வர்றா?” என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் சொல்லும் முன்னே, அவனை இன்னொருவன் இழுத்து சென்று வேறு ஒரு வேலையை கொடுத்திருக்க, அந்த KM ஸ்டூடியோவே பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் யாருக்காக இத்தனையும் நடந்துக்கொண்டிருக்கிறதோ, அவனோ, மாலையில் சூரியன் அஸ்தமித்ததும் தெரியாமல், காலையில் உதித்ததும் தெரியாமல், அந்த பஞ்சு மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
அவனை எழுப்பியே தீர வேண்டும் என்பது போல், அந்த கதிரவனும், தன்னுடைய அத்தனை கதிர்களையும், அந்த ஜன்னல் வழியே அவனின் அறைக்குள் அனுப்பினான். ஆனால் அந்த கதிரவனின் கதிர் வீச்சுகளை சற்றும் கண்டுக்கொள்ளாமல், போர்வைக்குள் தன்னை புகுத்திக் கொள்ள முயற்சித்தான்.
அன்னேரம் அவனின் கையில் ஏதோ பஞ்சு போல் ஒன்று தட்டுப்பட, மெல்ல கண்ணை திறந்தான். அப்போதே அவனின் அருகில் படுத்துக்கொண்டிருந்த பெண் அவன் பார்வைக்குள் விழுந்தாள்.
“இவ யாரு? இவ எதுக்கு என் ரூம்ல இருக்கா” என்று எதுவும் புரியாமல், தலை முடியை பிடித்தப்படி, அந்த அறையை சுற்றிப் பார்த்தான்.
அப்போதே இரவு பப்புக்கு சென்றது. வரும் வழியில் இவள் லிப்ட் கேட்டது. அவனும், அவளை அழைத்துக் கொண்டு இங்கு வந்தது என்று வரிசையாய் நினைவுக்கு வந்தது. ஆனால் அதன் பின் நடந்த எதுவும் அவன் நினைவில் இல்லை.
ஆனாலும், அவன் அதை பெரிதாய் எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. ஏனெனில் இது அவனுக்கு மிகவும் பழகிப்போனது என்பதால், அவன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
சில மணி நேர குளியலுக்கு பின், வெளியில் வந்தவன் தன் மேனஜரை அழைத்தான். இவன் அழைப்புக்காகவே காத்திருந்தவன், வேகமாய் ஓடிவந்து அவனிடம் மொபைலையும், அவன் வாட்சையும் நீட்டினான்.
“ம். குட். அதான் உன்ன என்கூட வச்சிருக்கேன்” என்று அவன் தோளில் தட்டியவன், அதை மாட்டிக் கொண்டே “டுடே வாட் பிளான்?” என்றான் தீரேந்திரன்.
தீரா என்று அனைவராலும் கர்வமாய் அழைக்கப்படும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அவன். ஆறடிக்கும் அதிகமான உயரம். கர்வத்தின் தலைவன். தலைக்கனத்திற்கு மற்றொரு பெயர் இருந்தால் அது நிச்சயம் அவனாகத்தான் இருக்கும். பல ரசிகைகளின் கனவுக் கண்ணனும் அவனே.
ஜெல்லிட்டு வாரிடப்பட்ட தலை முடிகள். கர்ணனுக்கு கவசக்குண்டலம் போல் எப்போதுமே அவன் உடன் இருக்கும் கருப்புக் கண்ணாடி. அவன் விரல் நுனி தன்னைத் தீண்ட தவமிருக்கும், பல நாயகிகள். எங்கு சென்றாலும் பெண்களின் கூட்டம் மட்டுமல்ல, பல போட்டியாளர்களின், ஏக கடுப்புகளும் அவன் பின்னே வந்துக்கொண்டே இருக்கும்.
அதே நேரம் அங்கே மற்றுமொரு சூட்டிங் ஸ்பாட்டில் சிறு பரபரப்புடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனின் முன்னே நின்றிருந்த அஸிஸ்டண்ட் டைரக்டர், சிறு தயக்கத்துடன், “சார். இன்னிக்கும் அந்த ஹீரோயின் வரல சார்” என்றான்.
“ஏன்? அவங்கத்தான இந்த டேட் நமக்கு கொடுத்திருக்காங்க. பின்ன என்னாச்சி?” என்று சற்று அழுத்தம் கூட்டி கேட்டான்.
“இல்ல சார். அது” என்று அவன் சற்று தயங்க, “அவங்க நம்பர்க்கு கால்பண்ணி, இன்னிக்கு வரலன்னா, அவங்க இனிமேல் வரவே வேணாம்னு சொல்லிடு” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
சரியாக அன்னேரம் அவன் மொபைலுக்கு அழைப்பு வந்தது. அதைப் பார்த்ததும், இத்தனை நேரம் படபடப்பாய் இருந்த அவனின் நெற்றி முடிச்சுகள், அப்படியே மறைந்து அவன் முகத்தில் புன்னகை தானாய் பூத்தது.
அந்தப் பக்கம் என்ன சொனனர்களோ, இவன் “என்னாச்சி? அப்படியா. சரி நான் உடனே அங்க வரேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அஸிஸ்டன்ட்டிடம் “இன்னிக்கு சூட்டிங்க கேன்சல் பண்ணிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினான். ஆதித்யவருண்
ஆதித்யா என்று அனைவராலும் அறியப்படும் மிகப்பெரிய இயக்குநர். ஆறடி உயரம். அளவான உடல் வாகு. அதிலும் அத்தனை ஸ்டைலாய், கால் மேல் கால் போட்டு அமர்ந்தப்படி, கையில் இருக்கும் மைக்கில் அவன் சொல்லும் ரெடி, ஸ்டார்ட், ஆக்சன்.. கட் என்ற சில வார்த்தையை கேட்பதற்காகவே காத்திருக்கும் ஹீரோயின்கள் ஒரு பக்கம்.
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த படபிடிப்பு தளத்தில் எப்போதுமே உதட்டின் ஓரம் அழகாய் மின்னும் அவனின் புன்னைகைக்காகவே ஷூட்டிங் பார்க்க வரும், ரசிகைகள் கூட்டம் மறுபக்கம் என, பெண்களுக்கு சட்டென்று பிடித்துப்போகும் ஒருவன் அவன்.
அதே நேரம் கேரவானில் அமர்ந்திருந்தவளிடம் வந்து “மேடம்.. ஷாட் ரெடி” என்றான் அந்த அஸிஸ்டண்ட் டைரக்டர்.
“ம்.. நீங்க போங்க நான் வரேன்” என்று சொல்லியவளின் குரல் மட்டுமே அவன் செவியை எட்டியது.
அவள் விழிகள், அங்கும் இங்கும் நடனம் ஆடிக்கொண்டிருக்க, மைதீட்ட முயற்சித்துக் கொண்டிருந்த அவள் விரல்களும், வளையல்களின் சினுங்கல்களோடு, கவிநயம் தீட்டிக்கொண்டிருந்தது.
அதைக் கலைப்பதற்காகவே, அவள் நெற்றியில் விளையாடிய கற்றை முடிகள் அவள் கண்களில் பட்டும் படாமல் தொட்டு சென்றது. அதை மெல்ல ஒரு விரலால், தன் காதோரம் சொருகிவிட்டு, தன் முன்னே இருந்த அந்த ஆளுயர கண்ணாடியைப் பார்த்தாள்.
அதைப் பார்த்த அவளுக்கு எந்த ஒரு வியப்பும் இல்லை. ஆனால் அந்த கண்ணாடிக்கு மட்டும், இந்நேரம் உணர்வு இருந்திருந்தால், அவள் அழகில் மயங்கி விழுந்திருக்கும்.
பிரம்மன் செய்த சாதனையின் சாராம்சமாய் ஜொலிக்கும் அழகுப் பதுமை. அதிலும் அவள் அணிந்திருந்த அந்த பாவடை தாவணியில், தேவதையென மின்னிக் கொண்டிருந்தாள்.
“மேடம். இந்த காஸ்டியூம்ல சூப்பரா இருக்கீங்க. சும்மாவே அந்த ஹீரோக்கு டயலாக் வராது. இதுல, இப்படி உங்கள பாத்தா, சொல்லவே வேணாம். இன்னிக்கு எத்தனை டேக் போகப்போதோ?” என்று கிண்டலாய் கூறினாள் அவளுடைய அஸிஸ்டெண்ட் தியா.
அதைக் கேட்டு இவள் அழகாய் சிரித்தாளா, இல்லை சிலை வடித்தாளா, என்பதை அவளே சொல்ல வேண்டும்.
அவள் சிரிப்போசைக் கேட்டு, வெற்றுக்கல் கூட வைரக்கல்லாய் மின்னும் வரம் பெறுமோ என்னமோ?
(சரி சரி இப்படி நம்மளே ரொம்ப ஓவரா வர்ணிச்சிட்டு இருந்தா, நம்ம ஹீரோ எப்படி வர்ணிப்பாங்க. அதுலையும் நம்ம வேற ஒன்னுக்கு ரெண்டு ஹீரோ வச்சிருக்கோம். சோ மிச்சத்த அவங்க வந்து வர்ணிப்பாங்க. இப்போ நம்ம கதைக்குள்ள போவோம்)
“சரி தியா. நெக்ஸ்ட் என்ன சீன்?” என்று அந்த அழகு பதுமை மெல்ல வாய் திறந்து கேட்டது.
“உங்களுக்கும், ஹீரோக்கும் குளோஸ் அப் ஷாட் ஒன்னு எடுக்கணுமாம்” என்று தியா சற்று இழுத்தாள்.
“அதான்.நேத்தே எடுத்தாச்சே” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “என்ன டார்லு? அது சரியா வரலன்னு நேத்து நைட் புல்லா ப்ரோடியூசர் சார் ஒரே புலம்பல். அதான், அவர் முன்னாடியே இன்னொன்னு எடுத்திடலாம்னு டைரக்டர் சார் சொன்னாரு” என்றான் அவன்.
அவள், அவனை சற்றும் கண்டுக் கொள்ளவில்லை எனத் தெரிந்தாலும், முகம் முழுவதும் பல்லோடு வழிந்துக் கொண்டிருந்தான் அந்தப் படத்தின் கதாநாயகன்.
“ஓ இதெல்லாம் உன் வேலதானா?” என்று மனதினுள் அவனை சாரமாரியாக திட்டிக்கொண்டிருந்தாள். அந்த படத்தின் நாயகி. இல்லை இல்லை நம் கதையின் நாயகி ஸ்ரீநிதி.
“ஸ்ரீ” என்று அனைவராலும் செல்லமாய் அழைக்கப்படும் என்ற வார்த்தைக்கே அகராதியில் இடமில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். செல்லம் என்ற வார்த்தையின், அர்த்தம் கூட அறியாத பேதை அவள். சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறம் அல்ல அவள். பாலில் கலந்த எழுமிச்சை நிறம். கண்ணில்லாத கவிஞர் கூட, அவள் குரலிலேயே ஆயிரம் கவிதை வகுத்துவிட்டு தான் செல்வார்.
“அழகு” என்ற ஒற்றை வரியில் அவள் அழகை வர்ணிக்க முடியாது என்பதாலோ, என்னவோ, அவள் தன்னை அழகென்று நினைப்பது இல்லை.
ஆனால் அவளை ரசிக்கவே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவள் வீட்டு வாசலில் நாய்குட்டிப் போல சுற்றிக் கொண்டிருக்கின்றனர். காரணம், அவள் ஒரு பிரபல திரைப்பட நடிகை மட்டும் அல்ல, பல இளைஞர்களின் கனவுக் கன்னி.
இல்லை. இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்,
இன்னும், இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்..
நீ என்ன சொல்லப்போகிறாய்?” என்று மொபைலில் ரிங்டோன் சத்தமாய் அடித்துக் கொண்டிருந்தது.
மொபைல் ரிங்டோனின் சத்தம் கூட கேட்காத அளவுக்கு, அவள் அழகில் மெய் மறந்து நின்றுக் கொண்டிருந்தான் ஆதித்யா.
அந்த ரிங்டோன் சத்தம் கேட்டு திரும்பியவளும், அவனை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும்.
அதனால் முதலில், ஒரு நொடி திகைத்து, பின் சாதாரணமாய், “என்ன ஆதி? உங்கப் பட சூட்டிங் இங்க எதுவும் நடக்குதா என்ன. இல்ல நான் அட்ரஸ் மாத்தி வந்துட்டேனா?” என்று கேட்டாள் ஶ்ரீநிதி
கேட்டவளின் குரலில் சற்று நக்கல் இருந்ததோ, என்னவோ, ஆனால் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் காதல் கரை புரண்டோடியது.
அதை சிறு குழந்தைக்கூட கண்டுப்பிடித்துவிடும். ஆனால் அவளுக்கு தான் அது தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவளைக் காணும் அத்தனை ஆண்மகனின் கண்களிலும் இதையேத் தானே அவள் பார்க்கிறாள். அப்படியிருக்க, இவனின் உயிர் காதல் மட்டும் அவளுக்கு தனியே தெரியுமா என்ன?
அதற்குள் அவனின் மோனநிலையை கலைப்பது போல், “என்ன டைரக்டர் சார், எங்க ஹீரோக்கே டப் கொடுக்கிற அளவுக்கு, எங்க மேடம்ம இப்படி பார்க்குறீங்க?” என்றாள் தியா.
அப்போதே இவ்வுலகம் வந்தவன், அவளை முறைத்துவிட்டு, ஸ்ரீ்நிதி யிடம் திரும்பி,
“மேடம் தான் அட்ரஸ் மறந்தாக்கூட, நான் இருக்கிற இடம் பக்கம் வரமாட்டீங்களே. அதான் நானே உங்க அட்ரஸ் கண்டுப்பிடிச்சு வர வேண்டியதா போச்சு” என்றான் ஆதி.
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்னே “மேம்.. ஷாட்” என்று ஒருவன் வந்து அழைத்தான்.
அன்னேரம் தான் ஆதியை கவனித்த புரோடியூசர் அங்கு வந்து.. “வாவ்.. வாட் ஏ பிளெசன்ட் சர்ப்ரைஸ் ஆதி. என்ன இங்க?” என்றார்.
“நத்திங் சார். சும்மா சைட் பார்க்கிறதுக்காக வந்தேன்” என்று ஆதி சொல்ல,
“சைட் பார்க்கிறதுக்கா? பார்த்தா ஏதோ சைட் அடிக்க வந்த மாதிரில தெரியுது?” என்று நக்கலாய் கூறினாள் தியா. அதில் அவளை முறைத்தவனோ, ப்ரோடியூசரிடம் “என்ன சார்? நான் உங்க சூட்டிங் பார்க்கலாம் வரக்கூடாதா?” என்று கிண்டலாய் கேட்டான்.
“என்ன ஆதி இப்படி கேட்டுட்டீங்க? இப்ப நான் ஒரு புரோடியூசரா இந்த அளவுக்கு நிக்கிறதுக்கு காரணம் நீங்கத்தான். உங்க திறமைத்தான்” என்று புரோடியூசர் ஒரு சென்டிமென்ட் படம் ஓட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அங்கே கே.எம் ஸ்டூடியோவில் மிகப்பெரிய ரகளையே நடந்துக்கொண்டிருந்தது.
(இப்போ அங்க என்ன நடந்திச்சுன்னு தெரியலையே? சரி, இந்த மூனு பேரும், இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறாங்கன்னு, அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த கதையோட ஸ்டார்ட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லிடுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
good interesting three characters very different super sarmi
Ramya Iyer
semma interesting ah pogum pola vaazhthukal sis 💖
Nityaa Devi
👌👌👌👌👌😍😍😍😍😍😍
Anitha Satheesh
super sis nice beginning
Monisha M
4 yrs back I read this story in your pocket fm page account but unfortunately u discontinued this one that time I really felt sad… now I exacted and eagerly waiting for next episode… update daily atleast 2 episode 🤪🤗
Gowri Babu
oru Herokkea nakku thallum idhula rendu romba amarkalama irukka poguthu sister story nalla varuvatharkku vazhthukkal vazhga valamudan 🔥🔥🔥🔥💐💐💐💐
Rathi meena
nice trying sister
Ammu Sathish
nice