நிலா சொல்லியதைக் கேட்ட செம்பாவோ, சிறு கோவத்துடன், “அடீச்சேன்னு வை செவுளு பிஞ்சிடும். என்னத்தடி நீ நினைக்கல. எங்க உன் மன்சாட்சிய தொட்டு சொல்லு. உனக்கு ஆதியண்ணன கட்டிக்கனும்னு ஆச இல்லையா?” என்று கேட்டாள்.
“இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் நகரப் போக, “எங்க? இத உன் ஆதி மாமா மேல சத்தியம் பண்ணி சொல்லு” என்றாள் செம்பா.
அவளும், அழுதுவிடக்கூடாது என்றுதான், மனதை இழுத்துப்பிடிக்க முயற்சிக்கிறாள். ஆனால், அவளுடைய கேள்வி, அவள் உயிர் வரை சென்று கொல்வதை, அவள் எப்படி தாங்குவாள்?
“காலேஜூக்கு லேட்டாகுது. வா போலாம்” என்று நிலா சொல்ல, “ஒரு நாள் காலேஜ் போகலன்னா, எந்த குடியும் முங்கிடாது. நீ சொல்லு. உன் மனசுல ஆச இல்லையா?” என்று கேட்டாள்.
“கிடைக்காதுன்னு தெரிஞ்சும், அது மேல ஆசப்பட்டு என்னாகப் போகுது? உண்மையாவே இல்ல. அவரு, அவருக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கனும். அவரு சந்தோஷமா இருக்கிறத பாத்துட்டு இருந்தாலே போதும்” என்றாள் நிலா.
“உனக்கென்ன பெரிய தியாகின்னு நெனப்பா? அவரு எவ கூடையோ வாழ்றத பாத்துட்டு, நீ உசுரோட இருந்துடுவீயாடி மொதல்ல” என்று ஆதங்கமாய் கேட்டாள் செம்பா.
“என் மாமா சந்தோஷமா இருக்கிறத பாத்து, நான் ஏன் கவலப்படனும். அதுவும் போக, அவருக்கு பிடிச்ச பொண்ணா இல்லாங்கட்டியும் கூட, பிடிக்காத பொண்ணா இல்லாம இருந்தாலே எனக்கு போதும். அதுவே இந்த ஆயுசுக்கும் போதும்” என்று அழுத்தி சொல்லிவிட்டு சென்றிருந்தாள் இளநிலா.
இங்கே செம்பாவால் தான் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவளுக்கே அத்தனை கஷ்டமாய் இருந்தது. அப்படியே அங்கேயே நின்றுவிட்டாள்.
சரியாக அன்னேரம் தான், ஆதியும், வெற்றியும் அந்தப் பக்கமாய் பைக்கில் வந்து கொண்டிருக்க, செம்பா தனியே நிற்கவும், “என்னம்மா தங்கச்சி, இங்க ஏன் நிக்குற” என்றான் ஆதி.
அவனின் குரலில், திடுக்கிட்டு செம்பா திரும்ப, அதற்குள் வெற்றியோ, “அது ஒன்னும் இல்லண்ணே, நீங்க இந்த காக்கா குருவிய எல்லாம் விரட்ட, சோளக்காட்டு பொம்மைய வாங்கி வைக்க சொன்னீகத்தேன்ன. அதுக்காண்டித்தேன் போஸ் கொடுக்க வந்திருப்பாங்களா இருக்கும்” என்று சீண்டினான்.
ஆனால் செம்பாவுக்கோ, வெற்றி சொல்லியதெல்லாம் மூளைக்கு ஏறவே இல்லை. ஆதியின் மீது ஏனோ சிறு ஆதங்கமாய் வந்தது.
அதில் எதுவும் பேசாமல், அங்கிருந்து சென்றுவிட்டாள். இங்கே ஆதியோ, “ச் என்னடா பேச்சு இது? அந்தப்புள்ளைட்ட எதுக்கு உரண்ட இழுத்துக்கிட்டே இருக்க. பாரு கோவிச்சிட்டு போறா” என்றான் ஆதி.
“க்கும் போனா போகட்டும்னே. நீங்க வயலுக்கு வண்டிய விடுங்க. அங்க நம்ம போகாட்டி வேல எதுவும் ஓடாது” என்றான் வெற்றி.
அதில் ஆதியும் பைக்கை வயலுக்கு விட, இங்கே செம்பாவோ, அன்று முழுவதுமே நிலாவிடம் எதையுமே பேசவில்லை.
திரும்பி வரும் போது, கதிரவன் வந்து, நிலாவை அழைத்து செல்ல, செம்பாவோ எதையோ யோசித்தப்படி வீட்டுக்கு சென்றாள்.
இங்கே அடுத்த ஒரு வாரத்தில், கதிரவனுக்கு, மதுரையில் ஹோண்டா கம்பெனியில் வேலைக்கு சேருவதற்கான அப்பாயின்மெண்ட் லெட்டர் வந்திருந்தது.
அதைப் பார்த்து முருகேசனுக்கு அத்தனை நிம்மதி. ஆனால் கதிரவனுக்குத்தான் அந்த வேலைக்கு செல்ல சுத்தமாய் விருப்பம் இல்லை.
செல்வி, மகனுக்காக, அன்று இளநிலாவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தார்.
இங்கே தாமரையோ, ஆதிரனுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, ஜோசியரிடம் காட்ட நினைத்து அங்கு வந்திருந்தார்.
எதார்த்தமாய் சந்தித்துக் கொண்டவர்களோ, “என்னக்கா, தனியாவா வந்த, யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம்த்தான்ன” என்றார்.
ஏனெனில் இப்போதெல்லாம் தாமரைக்கு, லோ பிபி இருப்பதால், தனியாக எங்கேயும் ஆதிரன் அனுப்புவதில்லை. வீட்டில் வேலைப்பார்க்கும் ராணியுடன் தான் வருவார்.
இன்று அவளும், வேலைக்கு வந்திருக்கவில்லை. அதனால் தனியே வந்திருக்க, “எனக்கு கூட்டிட்டு வர்ற்துக்கு ஆறு இருக்கா? சொந்த தங்கச்சி பக்கத்து வீட்டுல இருக்கேன்னுத்தேன் பேரு. உன்னை கூட வான்னு சொல்ற நெலமையிலையா, நம்ம இருக்கோம்” என்றார்.
செல்விக்கும் அதைக்கேட்டு வருத்தம் தான். நிலாவோ, “என்ன பெரிம்மா? அடுத்த தடம் வர்றப்ப என்னை கூப்டுங்க. நான் கூட வரேன்” என்றாள்.
ஏனெனில், அவளுக்கு நன்றாக தெரியும். அவள் அண்ணன் கூட, தாமரையிடம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்ல மாட்டான்.
அதனால் தான் வாயைத் திறந்தாள். “இனி எனக்குன்னு ஆறு இருக்கா? நீத்தேன் என்னை கடைசி காலத்துல பாத்துக்கிடனும். நீ எங்க போனாலும், என்னையும் கூட கூட்டிட்டு போயிடுத்தா” என்றவருக்கு பேரனின் மீது அத்தனை வருத்தம்.
அதில் செல்வியோ, “ச் இப்போ ஆதி உன்ன என்ன நட்டாத்துலையா விட்டுட்டான். அவென் உன்ன ராணிக்கணக்காத்தேன்ன பாத்துக்கிடுறான்” என்று மருமகனுக்கு சப்போர்ட் செய்தார்.
“ஆமா, அதெல்லாம் அவெனுக்குன்னு ஒருத்தி வர்ற வரைக்கும்த்தேன்ன. அதுக்கு பொறவு, அவீகளா சொல்றதுக்கு முன்னாடி, நம்மளா ஒதுங்கிக்கிடுறதுதான நல்லது” என்றார்.
“ச் என்ன பேசுற நீ? அதெல்லாம், ஆதி அப்படி விட்டுட மாட்டான். வயசாகிடுச்சில்ல உனக்கு. அதேன் இப்புடி லூசுத்தணமா பேசிட்டு இருக்க” என்றார் செல்வி.
“ஆறுடி லூசுத்தனமா பேசுறா. ஏதோ சொந்தத்துல கட்டுனாலாச்சும். பாசத்துக்காண்டி இல்லன்னாலும், ஊருக்காண்டியாச்சும் பாத்துப்பாள்க. இவென் ஏதோ அசலூரிக்காரிய கட்டுவேன்னு சொல்லிட்டு திரியிறான். அவ எங்க என்னை பாத்துக்கப் போறா” என்றார் தாமரை.
“இப்படி பொலம்புறதுக்குத்தேன், இங்க வந்தீயாக்கும்” என்று செல்வி கேட்க, “உன்ன மாதிரிலாம் இரும்பு மனசு எனக்கில்லடியாத்தா. ஒரு வாரமா மனசே செரியில்ல. அதேன் அவன் ஜாதகத்த எடுத்துட்டு வந்து, சாமிக்கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்” என்றார் தாமரை.
அக்காவின் மனம் புரியாமல் எல்லாம் இல்லை. ஆனாலும் இளநிலாவும் இருக்க, அந்த பேச்சை வளர்க்க விரும்பாது, “அதெல்லாம் அவென் மனசுக்கு நல்லா இருப்பான். நீ கண்டத போட்டு யோசிக்காத. வந்து சாமிய கும்பிடு” என்றார் செல்வி.
அதில் மூவருமாய், அந்த அம்மன் முன் நின்று கைக்கூப்பி வேண்டிக் கொண்டனர். மகனுக்காக வேண்ட வந்தவர் தான். ஆனால் தாமரையின் பேச்சில், அவருக்குமே ஆதி மட்டுமே முன் வந்து நிற்க, “ஆதி மனசுக்கு பிடிச்ச பொண்ணுக்கூட அவன் நூறு வருஷம் சந்தோஷமா வாழனும்” என்று வேண்டிக்கொண்டார்.
“நடக்கிறது எதுவும் எனக்கு பிடிக்கல. ஆனாலும் என் பேரனுக்கும், பேத்திக்கும் நல்லத நீத்தேன் பண்ணிக்கொடுக்கனும்” என்று தாமரை வேண்டினார்.
நிலாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தூக்கத்தில் எழுப்பி அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் கூட, அவளின் மாமன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் வேண்டுவாள்.
இப்போதும், “என் மாமா, அவீக மனசுக்கு பிடிச்ச பொண்ண கட்டிட்டு, சந்தோஷமா இருக்கனும். அவீக ஆசைப்பட்ட அத்தனையும் அவீகளுக்கு கிடைக்கனும்” என்று வேண்டிக்கொண்டாள் நிலா.
இதில் யார் ஆசையைத்தான் அவர் நிறைவேற்றுவார்? என்று அவருக்கே தோன்றியிருக்குமோ என்னமோ பொத்தாம் பொதுவாய் கோவில் மணி அடிக்க, மூவரும் கண்ணைத் திறந்தனர்.
அதன் பின், செல்வி, இளநிலாவிடம் ஸ்வீட்ஸை கொடுத்து, “மத்தவங்களுக்கு கொடு. நான் உன் பெரியம்மா கூட போயி, சாமிய பாத்துட்டு வரேன்” என்றார்.
“ம்” என்று தலையாட்டிய இளநிலாவோ, ஸ்வீட் பாக்ஸுடன் தள்ளி செல்ல, செரியாக அன்னேரம் செம்பா, பொன்னியுடன் கோவிலுக்கு வந்திருந்தாள்.
செம்பாவைப் பார்த்ததும், நிலா சிரிக்க, செம்பாவோ கண்டுக்கொள்ளாமல் செல்லப் போக, “செம்பா” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் இளநிலா.
உடனே பொன்னியோ, “செரி செம்பா, நீ உன் சினேகிதிகிட்ட பேசிட்டு இரு. நான் போயி சாமிய கும்பிட்டு வரேன்” என்று முன்னே சென்றாள்.
செம்பாவோ அப்போதும் அமைதியாய் இருக்க, “இப்போ என்னத்துக்கு, நீ ஏன் மேல கோவமா இருக்க” என்று கேட்டாள் இளநிலா.
“கோவமா இருக்குறேன்னா, இருக்குற கடுப்புல. இந்த தேங்காய எடுத்து உன் தலையில உடைச்சிப்புடுவேன்” என்று கோவமாய் கூறினாள் செம்பா.
அதில் இளநிலாவின் முகம் வாடிப்போய்விட, அதில் தன் கோவத்தை தூக்கிப் போட்டவளோ, “இப்போ என்னத்துக்கு, கோவில் வாசல்ல நின்னு ஸ்வீட் கொடுத்துட்டு இருக்கிறவ? உன் மாமாக்கு எதுவும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாகளா?” என்றாள் செம்பா.
“இல்ல அண்ணாக்கு வேல கிடைச்சிருக்கு” என்று இளநிலா சொல்ல, “அதான. உன் மாமனுக்கு கல்யாணம்னா, நீ, ஊர கூட்டி கறி சோரு போட்டுட மாட்ட” என்று வேண்டுமென்றேதான் பேசினாள்.
அதில் நிலாவோ அமைதியாகிவிட, “இப்படியே அமைதியா இருந்து, உன் தலையில நீயே மண்ண அள்ளி போட்டுக்கோ” என்றாள் செம்பா.
ஆதங்கமாய் இருந்தது. மனதையும் சொல்ல மறுக்கிறாள். சரி மனதையாவது மாற்றிக்கொள் என்றால் அதையும் கேட்க மறுக்கிறாள். எங்கே இப்படியே இருந்து அவள் வாழ்க்கையே அவளே அழித்துக் கொள்வாளோ என்று தோழியாய் அவளுக்கு அத்தனை கஷ்டமாய் இருந்தது.
ஆனாலும், இப்படி அவளை கஷ்டப்படுத்தி பார்க்கவும் முடியவில்லை. அதில், “என்ன? அதிசயமா தனியாலாம் கோவிலுக்கு வந்திருக்க” என்று கேட்டாள்.
“இல்ல அம்மாக்கூடத்தேன் வந்தேன். அவீக பெரியம்மா கூட சாமிய பாக்கப் போயிருக்காங்க” என்றாள் நிலா.
“எதுக்கு உன் மாமனுக்கு எந்த வரன் நல்லா இருக்குன்னு பாக்குறதுக்கா” என்ற செம்பாவோ சுற்றி சுற்றி அதிலேயே வந்து நிற்க, “செம்பா. அத விடேன். என் மாமா நல்லா இருந்தா போதும்” என்றாள்.
“உனக்கு உன் மாமா நல்லா இருந்தா போதும். ஆனா எனக்கு என் ப்ரண்டும் நல்லா இருக்கனும். நான் சொல்றத கேளு. உன் மனசுல இருக்கிறத எல்லாம் அப்படியே அழிச்சிட்டு, நீ உனக்கான ஒருத்தர” என்று முடிக்கும் முன்னே, இளநிலாவின் உதடுகள் “மாமா” என்று முனுமுனுத்தது.
“என்னடி மாமா? அதேன் அவரு வேற ஒருத்திய நெனச்சிட்டு இருக்காருல்ல. இன்னமும் உனக்கு என்ன மாமா” என்று செம்பா கேட்க, இளநிலாவோ செம்பாவின் பின்னே பார்த்தாள்.
அதன் பின்னே அவளும் கவனிக்க, அங்கே ஆதிதான் வந்துக் கொண்டிருந்தான். “அடியாத்தி. இவீக எதுக்குடி கோவிலுக்கு வந்தாக, நான் பேசுன எதையும் கேட்டிருப்பாகளோ. நான் வேற ஓவரா பேசிட்டேன்னே” என்றவளுக்கு ஆதியை பார்த்தவுடன் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
நிலாவுக்கோ சொல்லவே வேண்டாம். அவன் கேட்கவில்லை என்றெல்லாம் தெரியும். ஆனாலும் அவனின் முன்னே செல்ல வேண்டும் என்றாலே பயம் தான்.
அதனால் அவளோ, திரும்பி நடக்கப் போக, “இளநிலா” என்று சத்தமாய் அழைத்தான் ஆதிரன்.
அதென்னவோ, அவன் அழைத்தால், இவள் கால்கள் இவள் பேச்சை மதிப்பதே கிடையாது. அவன் கேட்ட அடுத்த நொடி, இவள் விறுவிறுவென்று அவனின் முன்னே சென்று நின்றாள்.
“பாட்டிய பாத்தீயா? இங்க வந்தாங்களா” என்று அவன் சுற்றிப் பார்த்தப்படி கேட்டான்.
ஏனெனில் அவன் வீட்டுக்கு சென்றிருக்க, தாமரை தனியே கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்லவும், மனம் கேட்காமல், அவரை தேடி வந்திருந்தான்.
இங்கே இவளும், “ம்” என்று சொல்ல, அதன் பின்னே சற்று அமைதியானவன், “வர்றப்ப, அவீக கூட வந்துடு” என்றப்படி திரும்பினான்.
அதன் பின்னே இவள் இழுத்து வச்ச மூச்சை விட, அதற்குள் திரும்பியவனோ, அவள் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்த ஸ்வீட்டை எடுத்தான். அவன் எடுக்கும் போது, அவனின் விரல்கள், மெலிதாய் அவள் கரத்தை உரசியிருக்க, சரியாக அன்னேரம் கோவில் மணி அடித்தது.
(அப்புறம் என்னப்பா சாமியே சொல்லிடுச்சி. ஆனா நீங்க ரெண்டு பேரும் என் பேச்ச கேக்க மாட்டுறீங்க? சரி அடுத்து என்னாகப் போவுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூடச் ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
sami sollurathu kanna sarmi nee sollanum 🤣🤣🤣🤭
Karthiga p
nila thendral epti mamanave ninachu kalyanam patikittangalo athe mari thaan kutti nila vum ava mamana ninachu kadasila avaniye kalyanam kattipa 🤗😍
Malathi Malathi
senba Good friend ❤️❤️❤️
Roshini Siva
sister pls rendu pera serthu vechidunga
Ammu Sathish
சூப்பர்
Arockia Ammu
nila yarunsonnalum avanai kalyanam pannikkatha innoru ponna aasai pattavan unakku venam ambuttu than solluvan purinjuko