கல்லூரியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க, நிலாவுடைய கவனமும் கொஞ்சமும் இங்கில்லை. அவள் விரல்கள் என்னவோ அது பாட்டுக்கு, எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவள் உதடுகள், அவள் கழுத்தில் கிடந்த டாலரை கடித்துக் கொண்டிருந்தது.
கிட்டதட்ட ஆதிரனைப் பார்த்து, ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்றைய சம்பவத்துக்கு பின், இருவரும் சந்திக்கும் சூழல் அமையவில்லை. அவனுக்கும் காயம் எல்லாம் ஆறியிருக்க, அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
நிலாவோ பொதுவாகவே அந்தப் பக்கம் செல்ல மாட்டாள். அதில் அன்று தந்தை சொல்லியதற்கு பின், தெரியாமல் கூட அந்தப் பக்கம் செல்லவில்லை. ஆனாலும் மனம் என்னமோ, அவனைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தது.
அதுவும் போக, இன்று அவளின் அண்ணன், வீட்டுக்கு வருகிறான். எப்படியும், வந்தவுடனே வியன் ஏதாவது கதிரவனிடம் கூறுவான். அதைக் கேட்டு நிச்சயம் ஆதியிடம் அவளின் அண்ணன் சண்டைக்கு செல்வான். இதை எல்லாம் யோசித்தப்படியே அமர்ந்திருந்தாள்.
“இளநிலா” என்று ஆசிரியர் சத்தமாய் அழைக்க, அது அவளுக்கு ஆதிரனை நினைவுப்படுத்த, திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.
அவரோ ஏதோ ஒரு கேள்வியை அவளிடம் கேட்டிருக்க, சுத்தமாய் அவளுக்கு தெரியவில்லை. பொதுவாய் இப்படி எல்லாம் இருக்க மாட்டாள். பரவாயில்லாமல் படிப்பவள் தான்.
“என்னாச்சு நிலா? உன் கவனம் எங்க இருக்கு?” என்று அவர் கேட்க, அவளின் அருகில் அமர்ந்திருந்த செம்பாவோ, “அவ மாமன் மேலத்தேன் வெச்சிருப்பா” என்று முனுமுனுத்தாள்.
அதில் அதிர்ந்த நிலாவோ செம்பாவை முறைக்க, “இப்போ என்னத்துக்குடி, என்ன பாத்து மொறைக்கிறவ? அங்க மேடம் கேக்குறதுக்கு பதில்ல சொல்லு” என்றாள் செம்பா.
“செம்பா. வாட்ஸ் கோயிங் ஆன்” என்று, இப்போது செம்பாவையும் அவர் எழுப்பி விட, “சாரி மேடம்” என்றாள் செம்பா.
“ரெண்டு பேரும் க்ளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து மீட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அவர் வகுப்பை தொடர, “போச்சா, இப்போ உனக்கு சந்தோஷமா, உக்காரு. உக்கார்ந்து, அந்த பேர முழுசா எழுதி முடிச்சிடு” என்றாள் செம்பா.
அதன் பின்னே அவள் நோட்டில், ஆதிரன் என்று எழுதியதையே கவனித்தாள். அவளுக்கே அதிர்ச்சித்தான். ஏன் எழுதினாள்? எப்படி எழுதினாள்? அவளுக்கே தெரியவில்லை.
அதில் அவசரமாய் அவள் நோட்டை அடுத்த பக்கம் திருப்பிவிட, செம்பாவோ “மனசுக்குள்ள அம்புட்டு ஆசைய வளத்து வெச்சிருக்கா. கேட்டா, இல்ல நொல்லன்னு கத விடுவா” என்று தனக்குள் முனுமுனுத்தாள்.
அதற்குள் ஆசிரியரோ, “சைலன்ஸ்” என்று சொல்ல, “க்கும் இவங்க ஒருத்தவங்க. அதான், ஸ்டாப் ரூம் கூப்டு இஷ்டத்துக்கு திட்டத்தேன்ன போறாங்க. அப்புறம் என்னவாம்” என்று செம்பா முனுமுனுக்க, நிலாவுக்கோ அடுத்து என்னாக போகிறதோ என்ற பதட்டம்.
அதன் பின் வகுப்பு முடிந்ததும், இருவரும் அந்த ஆசிரியரின் முன்னே சென்று நிற்க, அவரோ, “என்னாச்சு நிலா? வீட்டுல எதுவும் ப்ரச்சனையா? நானும் ஒரு வாரமா பாத்துட்டு இருக்கேன். உன் கவனம் கொஞ்சமும் இங்க இருக்கிறது இல்ல” என்றார்.
“அத் அது” என்ற நிலாவுக்கு வார்த்தை வர மறுக்க, அதில் அவரோ, “என்ன செம்பா? சொல்லு உன் ப்ரண்ட் தான” என்றார்.
“சாரி மேடம்” என்று செம்பா அதையே சொல்ல, “ஏதாச்சும் ப்ராபளம்னா சொல்லுங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றேன்” என்றார் அவர்.
“அச்சோ அப்படில்லாம் இல்ல மேடம். சாரி மேடம், இனி அப்படி நடக்காது” என்று நிலா சொல்ல, “சரி சரி. அன்னிக்கே நான் கேட்டேன்னே” என்றவர் பேச்சை ஆரம்பித்தார்.
அதில் செம்பாவோ, “இன்னும் நீ சொல்லலையா” என்று நிலாவின் காதுக்குள் கிசுகிசுக்க, “இல்ல மேடம். அது” என்று திக்கி திணறினாள்.
“ஐ அண்டர்ஸ்டாண்ட் நிலா. ஆக்சிவலி, இதெல்லாம் காலேஜ்ல வச்சி பேசக்கூடாதுத்தான். பட் பொண்னு வீட்ல இருந்து ரொம்ப கம்பிள் பண்ணி கேக்குறாங்க. அதான், உன் அம்மா நம்பர் வேணும்னா கொடு. நான் அவங்ககிட்டையே நேரடியா பேசுறேன்” என்றார்.
“இவ்ளோ பேசுறதுக்கு, நீங்க பேசாம, ஆதி அண்ணாக்கிட்டையே பேசிடலாம் மேடம்” என்று செம்பா சொல்ல, நிலாவோ தோழியை முறைத்தாள்.
“அவன்கிட்ட பேச முடிஞ்சிருந்தா, நான் ஏன், உங்ககிட்ட சொல்லிட்டிருக்கப் போறேன்” என்றார் அவர்.
“அட என்ன மேடம்? உங்க ஸ்டூடண்ட்தான அவரு. அதெல்லாம் உங்க பேச்ச மீற மாட்டாரு. நீங்க பாத்து சொல்ற பொண்ணுக்கு உடனே சரின்னு சொல்லிடுவாரு” என்று கிண்டலாய் கூறினாள் செம்பா.
“டீச்சரா இருந்துட்டு, அவன்கிட்டையே போயி என் அக்கா பொண்ண கட்டிக்கிறீயான்னு எப்படி கேக்கன்னு தெரியல. அதுக்குத்தான் அவங்க அம்மா, அப்பாக்கிட்ட பேசலாம்னு பார்த்தா, அவங்க நம்பரும் கிடைக்கல. சரி, ஆதியோட சொந்தக்காரப்பொண்ணுத்தான நிலாக்கிட்ட கேட்டேன். அவகிட்டையும் இல்லன்னு சொல்லிட்டா” என்றார்.
“க்கும் இருந்தாலும் அவ இல்லன்னுத்தான் மேடம் சொல்லுவா” என்று செம்பா முனுமுனுக்க, நிலாவோ, தோழியின் கால்லை மிதித்தாள்.
“என்ன” என்று அவர் கேட்க, “நான் எங்கம்மாட்ட சொல்றேன் மேடம். அம்மாக்கிட்ட தனியா மொபைல் இல்ல” என்றாள்.
“அப்போ சரி என் நம்பர அவங்ககிட்ட கொடு” என்று அவர் சொல்ல, அதற்கும் தலையை ஆட்டிவிட்டு வந்தாள்.
இங்கே வகுப்புக்கு வந்ததும், “நல்லா தலைய தலைய ஆட்டிட்டு வர்ற? சொல்ல வேண்டியதுதான, உன் மாமன்ன நீதான் கட்டிப்பேன்னு” என்றாள் செம்பா.
“ச் என்னப் பேசுற நீ? அப்படில்லாம் என் மனசுல எதுவும் இல்ல. அதுவும் போக, அவருக்கு என் மேல அப்படி ஒரு எண்ணம்லாம் வரவே வராது” என்றாள்.
“ஏன் வராது? உன் மனசுல இருக்கிறத போய் சொன்னா, வந்துட போகுது” என்று செம்பா சொல்ல, “ச் அதான் என் மனசுல எதுவும் இல்லன்னு சொல்றேன் தான” என்றாள்.
அன்னேரம் அங்கு வந்த மாலதியோ, “ஹேய் என்னப்பா? என்னை விட்டுட்டு தனியா மாநாடு போட்டிருக்கீங்க” என்றாள்.
ஆனால் இளநிலாவோ மாலதியைப் பார்த்ததும், பேசாமல் இருக்க, “ஹேய் நிலா. இன்னும் கோவமா இருக்கீயா நீ. அதான் சொன்னேன்னே நிலா. அக்கா வீட்டுக்கு போனப்ப, அவ என்னை பிடிச்சு வச்சிட்டா. அதனாலத்தான் உடனே வர முடியல. அதுவும் போக அவனும் கூட இருக்கான்னுத்தான், வரல” என்றாள்.
“உன் ஆள, என் ப்ரண்ட்க்கிட்ட, விட்டுட்டு, நீ உன் அக்கா வீட்டுக்கு போயிடுவீயா” என்று செம்பா இப்போது கோவப்பட, “ஹேய் அவன் ப்ரண்ட்லியாத்தான் ஏதோ பேசியிருப்பான் போல. அதுக்குள்ள இவ அண்ணன் வருவாருன்னு, அவனுக்கு தெரியாதுல்ல” என்றாள்.
“அண்ணனா” என்று செம்பா கேட்க, சட்டென்று அன்று ஆதிரன் கேட்ட, “நான் உனக்கு அண்ணனா” என்றது நினைவுக்கு வந்தது.
அதில் வேகமாய், “என் மாமா” என்று இளநிலா சொல்ல, “என்ன” என்றாள் மாலதி.
“அத் அது இல்ல. அது என் மாமா பையன்” என்று இளநிலா சொல்ல, “ஓஹோ. அப்போ கட்டிக்க போற பையன்னா” என்று சீண்டலாய் கேட்டாள் மாலதி.
“அப்படில்லாம் இல்ல” என்று நிலா சொல்ல, “பின்ன வேற எப்படி? ஊர் பக்கம்லாம். இப்படி ரிலேட்டிவிஸுக்குள்ளத்தான்ன மேரேஜ் பண்ணிப்பாங்க” என்றாள் மாலதி.
“அப்படில்லாம் ஒன்னும் கிடையாது. நீயா ஏதாச்சும் சொல்லாத” என்று சொல்லிவிட்டு நிலா சென்றுவிட, மாலதியோ, “என்னாச்சு இவளுக்கு? இவளுக்கு இப்படி எல்லாம் கோவப்பட தெரியுமா என்ன” என்றாள்.
“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உண்மையாவே நீ அவென்ன லவ் பண்றீயா?” என்று கேட்டாள்.
“ஏன் இப்படி கேக்குற” என்று மாலதி கேட்க, “அவன் பேச்சும், பார்வையும் சுத்தமா சரியில்ல. நான் சொல்லக்கூடாதுத்தான். ஆனாலும் சொல்றேன். அவன் நிலாக்கிட்ட கொஞ்சம் அத்துமீறித்தான் நடந்துக்கிடுறான்” என்றாள் செம்பா.
“ஹேய் அவன் அப்படிப்பட்டவன்லாம் இல்ல” என்று மாலதி முடிக்கும் முன்னே, “இதுக்கப்புறம், நிலாவ கூட்டிட்டு போகாத. இது மட்டும் அவ மாமாக்கு தெரிஞ்சிச்சின்னு வை. அடுத்து உன் ஆளு கை, கால் இல்லாமத்தான் சுத்தனும்” என்று சொல்லிவிட்டு சென்றாள் செம்பா.
“என்ன இவ? இப்படி சொல்லிட்டு போறா. அவன்கிட்ட கேட்டதுக்கு ஏதோ தங்கச்சி மாதிரிததன்ன பேசுறேன்னு சொன்னான்” என்று மாலதியும் புலம்பியப்படி வகுப்புக்கு சென்றாள்.
இங்கே ஆதியோ, அன்று, ஊர் விஷயமாக, வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தான். கூடவே வெற்றியும் வந்திருக்க, அவனிடம் தான் எதையோ பேசிக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும், பியூன் வந்து, “அண்ணே, இன்னிக்கு ஆகுற மாதிரி தெரியல்ண்ணே. இன்னொரு நாள் வந்தீங்கன்னா, நம்ம என்னென்னு பாத்து முடிச்சிடலாம்” என்றான்.
அதில், அவனுடைய கோவம் கூட, “இப்படியே இன்னும் எத்தன நாளைக்கு, உங்க ஆபிஸர் எங்கள பாக்காம ஓட போறாரு” என்று மீசையை நீவினான்.
“இல்லங்கண்ணே. அடுத்த வாட்டி கண்டிப்பா முடிச்சிடலாம்னு” என்று அவன் முடிக்கும் முன்னே, “இங்கப்பாரு. இங்க வந்து நிக்கிறவங்க அம்புட்டு பேருக்கும் வேற வேல இல்லன்னு நெனச்சிட்டு இருக்கீயா? இங்க யாரும், பிச்ச கேட்டு வந்து நிக்கல. அவங்களுக்கு சேர வேண்டிய நிவாரணத்தொகைய கேட்டு வந்திருக்காங்க. நானும் பாத்துட்டே இருக்கேன். மூனு மாசமா, அவங்கள அலைய விட்டுட்டே இருக்காராம். இன்னிக்கு நான் அவர பாத்தே ஆகனும். எம்புட்டு நேரம் ஆனாலும் பரவாயில்ல” என்றான் ஆதிரன்.
அதில் அந்த பியூனோ, அவனை மறுக்க முடியாது, மீண்டும் உள்ளே சென்றான். “என்னண்ணே, இவனுங்க இப்படி பண்ணிட்டிருக்கானுங்க” என்றான் வெற்றி.
“காசு கொடுத்து வேலையில வந்து உக்கார்ந்திருக்கானுங்கள்ல. அதான் மண்ணுல இறங்கி வேல பாக்குற விவசாயியோட வலி தெரியல. இன்னிக்கு அவருக்கு வலின்னா என்னென்னு புரிய வச்சிடுவோம்” என்றவன், அடுத்த நொடி அவர்கள் தொகுதி எம் எல் ஏக்குத்தான் கால் செய்தான்.
பொதுவாக அவன் அவனுடைய பெயரையோ, இல்லை அவர்கள் அம்மா, அப்பா பெயரையோ உபயோகப்படுத்த மாட்டான். ஆனால் ஊர் என்று வந்துவிட்டால், அவ்வளவுத்தான் எதிரில் நிற்பவன் யார் என்று கூட பார்க்க மாட்டான்.
இவனின் அழைப்பைப் பார்த்த எம் எல் ஏவோ வேகமாய் அட்டண்ட் செய்து, “சொல்லுங்க தம்பி. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காகளா” என்று கேட்டார்.
“எங்க வீட்டுல இருக்கிறது எல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு அடுத்த வாட்டி எம் எல் ஏவா இருக்கனும்ன்ற ஆச இல்ல போலையே” என்று மீசையை நீவினான்.
அவருக்குத்தான் தெரியுமே. சுட்டு வட்டாரத்தில், அவன் சொல்வதை மீறி வேறு யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள் என்று.
“ஐயோ என்ன தம்பி இப்புடி சொல்லிட்டீங்க. இப்பக்கூட, நம்ம ஊருக்கு இன்னும் நாலு பஸ் சேத்து விட சொல்லி பேசிட்டுத்தேன் வரேன்” என்றார் அவர்.
“நான் இங்க தாலுக் ஆபிஸ்ல இருக்கேன். இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல நீங்க இங்க இருக்கனும்” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்திருந்தான்.
அங்கே அந்த வாட்டாட்சியரோ, “என்னய்யா நீ? அவென் என்ன அம்புட்டு பெரிய ஆளா? அவீக அம்மாத்தேன்ன கலெக்டரு. இவன் ஒன்னும் இல்லையே. அவென் சொன்னா, உடனே நாங்க அந்த வேலைய முடிக்கனுமோ? போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வர சொல்லு” என்று சாதாரணமாய் கூறினார்.
“இல்ல சார். ஆதியண்ணே” என்று அவன் முடிக்கும் முன்னே, “யோவ். நீ இங்க வேல பாக்கனுமா? வேண்டாமா? போய் போயி அனுப்பு” என்று அசராது அவர் சொல்லிவிட, “நில்லுய்யா. உனக்கு இன்னும் அவர் ஆறுன்னு தெரியல. அதேன் இப்புடி பண்ணிட்டு இருக்கீங்க” என்று புலம்பியப்படி அவனும் வெளியில் சென்றான்.
இங்கே ஆதி சொல்லியது போல் அடுத்த அரை மணி நேரத்தில், அங்கு வந்த எம் எல் ஏவோ, “அட என்ன தம்பி? நீங்க எதுக்கு இம்புட்டு தூரம் வந்துட்டு. என்ன வேலன்னு சொன்னா, என் பசங்ககிட்ட சொல்லி முடிச்சிருக்க போறேன்” என்றார்.
அதில் அவரை முறைத்தவனோ, அங்கே சற்று தூரம் தள்ளி, ஒரு பத்து விவசாயிகள் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்தவன், “ஒரு வாரமா, இவீக அம்புட்டு பேரும் உங்க கட்சி ஆபிஸ் வாசல்லத்தேன்ன இருந்தாங்க. அப்போ தெரியலையா? என்ன ப்ரச்சனன்னு” என்று கையில் இருந்த காப்பை முறுக்கினான்.
அதில் அவரோ, “இல்ல தம்பி அது” என்று அவர் தடுமாற, “இங்கப்பாருங்க, உங்களுக்கு வோட்டு போட்டு, சட்டசபைக்கு அனுப்பி வச்சது அவீகத்தேன். இப்புடி நீங்க அவீகளா, ரோட்டுலத்தேன் உக்கார வைப்பீங்கன்னா, அடுத்த தடவ ஓட்டுன்னு, எங்க ஊரு பக்கம் வந்து நிக்க கூடாது. இவீகள்ள ஒருத்தர உமக்கு எதிரா நிக்க வெச்சி. ஜெயிக்க வைப்பேன். பாக்குறீகளா” என்று மீசையை நீவினான் ஆதிரன்.
அவனின் அந்த பார்வையே சொல்லியது அவன் அதை செய்து காட்டுவான் என்று. அதனால் பதறியவரோ, “ஐயோ தம்பி. இப்பவே, நான் எல்லாத்தையும் முடிக்க சொல்றேன் தம்பி. நீங்க வீட்டுக்கு போங்க. நீங்க போறதுக்கு முன்னாடி, பட்டால இருந்து, செக் வரைக்கும் அம்புட்டையும் அவீக கையில இருக்கிற மாதிரி பண்ணிடுறேன்” என்றான்.
“முடிஞ்சிருக்கனும், இல்லன்னா” என்றவன் வெற்றியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆதி அங்கிருந்து கிளம்பினான். சரியாக அன்னேரம் தான் நிலா, கல்லூரி முடிந்து, செம்பா மற்றும் மாலதியுடன் வெளியில் வந்தாள்.
வந்தவள், எதையோ பார்த்தப்படி க்ராஸ் செய்ய, இங்கே கடுப்பாய் வந்த ஆதியோ, எதிரில் கவனிக்காது பைக்கை ஓட்டியிருக்க, கடைசி நொடியில், அவளைப் பார்த்தவன், சடன் ப்ரேக் அடித்து நிறுத்த, அதற்குள் பயத்தில், மயங்கி விழுந்திருந்தாள் இளநிலா.
(க்கும் போச்சா? ரைட்டு அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
yen ma nila ipovey ivolo mayakam pota na future la athi mrg panni nee pregnant aagi evolo mayakam poda vendi irruku 🤭🤭🤭🤭
Karthiga p
adeiye nila nee enna thaan ninachuttu irruka 🤦🏻♀
Keerthi Keerthi
semma sister ♥
Arockia Ammu
enakku ennamo kathir nila 2.o version mathiri irukku mam priya charector mathiri intha professor akka ponnu kondu vanthu sikkal aaki vidathenga unga ella story um different ah irukkun ithu mattum ore mathiri pora mathiri irukku athula thamarai misunderstanding ithula murugesan viyan replicate pandi Kathiresan replicate senthil now this new charectors sorry don’t mistake me what i felt i sharing with you otherwise ur writing skill and way of moving story flow always ultimate 👏❤
Sarmi SS
July 13, 2026இந்த ஸ்டோரி different a இருக்கும்னு நான் எப்போ சிஸ் சொன்னேன்? இது கம்ப்ளீட்டா nila kathir 2.O version than. so same feel, same vibe varathaan maximum chance irukku. different concept venumna, neenka vera stories dan padikkanum. acutually kathir nila is my fav. so. apdithan pokum...
Malathi Malathi
emma nila nee ipdi ellathukum mayakkam pottu viluntha epdi ma kathir ❤ nila paiyana summava
deepika saravanan
இந்தப் பிள்ளை என்ன பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுகுது